மெய்நிகர் அழகியே

This entry is part 10 of 20 in the series மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

மெய்நிகர் அழகியே

அத்தியாயம் 11

“சாட் ஓகே.. ஆக்ஷ்ன்..” என்று டைரக்டர் கூற, கோவிலில் வைத்து நர்மதாவின் கழுத்தில் தாலி கட்டிய பிரபஞ்சன், அவளது கையைப் பிடித்து இழுத்துச் சென்றான். அவன் தாலிக்கட்டுவதை பார்த்துக் கொண்டிருந்த லக்ஷாவிற்கோ உள்ளுக்குள் சுருக்கென்று இருந்தது. 

‘லக்ஷா.. இது வெறும் செட்டிங் தான்.. எதுவுமே உண்மையில்லை.. இன்னும் கொஞ்ச நாள்ல இவனை விட்டுட்டு போகப் போற.. அதுனால வேற எதைப் பத்தியும் நினைக்கக்கூடாது..’ என்று தனக்குள் அவள் எவ்வளவு முணுமுணுத்தாலும், அவளது நெஞ்சின் வலி கண்ணில் தெரிந்தது. 

“ஷாட் ஓகே..” என்று டைரக்டர் கூறிய அடுத்த நிமிடம் நர்மதாவின் கையை விட்டு விட்டான் பிரபஞ்சன். கேரவன் அருகில் நின்றிருந்த லக்ஷாவின் இடையில் கையிட்டு அப்படியே இழுத்துக் கொண்டு சென்றவன்,

“இங்க சாக்லேட் ரொம்ப நல்லாருக்குமாம்.. வா.. அந்த ஷாப்புக்கு போலாம்..” என்று கூற,

“எனக்கு ஒன்னும் வேணாம்.. விடுங்க என்னை..” என்று அவனை மறுத்துக் கொண்டிருந்தவனை சிறிதும் மதிக்காது, தன் போக்கிற்கு அவளை இழுத்துக் கொண்டு சென்றான் பிரபஞ்சன்.  

“இங்க சாக்லேட் தான் ஃபேமஸ்.. இதை ட்ரை பண்ணி பாரு..” என்றவன் அவளது வாயில் சாக்லெட்டை வைக்க, வேண்டா வெறுப்பாக வாயில் வைத்தவள், அதன் சுவையில் “ம்ம்ம்..” என்று தன்னை மறந்து லயித்திருக்க, சட்டென எக்கியவன், அவளது கழுத்தை வளைத்துப் பிடித்து இதழோடு இதழ் வைத்தான். அவளது இதழுக்குள் இருந்த சாக்லேட்டை தன் இதழுக்கு இடம் மாற்றியவன், 

“ம்ம்ம்ம்ம்.. வெரி ஸ்வீட்.. இல்ல?” என்று கூற, முதலில் வெட்கத்தில் அந்திவானமாக சிவந்தவளின் நினைவில் சற்று நேரத்திற்கு முன் கோயிலில் நர்மதாவின்  கழுத்தில் தாலி கட்டியது தோன்ற, கோபத்தில் முகம் சிவந்தாள். 

“இனிமே இப்படி என்னைய கிஸ் பண்ணக்கூடாது.. இதையும் அக்ரிமெண்ட்ல சேர்த்துக்கோங்க..” என்றவள் அங்கிருந்து கிளம்பி செல்ல, 

“ஏய்.. லக்ஷா.. பேபி.. பேபி..” என்ற பிரபஞ்சன் அவளது பின்னே செல்லும் நேரம்,

“சார்.. டைரக்டர் ஷாட் ரெடின்னு சொல்ல சொன்னாரு.. ப்ளீஸ் சார்..” என்று இணை இயக்குநர் கெஞ்ச, சற்று தூரத்தில் கோபமாக நின்றிருந்த லக்ஷாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“ம்ஹூம்.. வாங்க போலாம்..” என்றவன் அடுத்த கட்ட காட்சிக்கு தயாரானான். 

‘இந்த பொம்மை கல்யாணம் பண்ணி.. பண்ணித்தான்.. எது ரியல்? எது ரீல்னு தெரியாம போச்சு போலருக்கு..’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தவளை தூரத்தில் இருந்து யாரோ குறுகுறுவென பார்த்துக் கொண்டிருப்பது போல் உணர, சட்டென திரும்பி பார்த்தாள். யாரோ ஒருவன் தன் முகத்தை மறைத்தபடி நின்றிருந்தான். அவனது முகம் மறைக்கப்பட்டிருந்தாலும், அவனது வலது கையில் இரு பாம்புகள் பின்னிப் பிணைந்து இருப்பதைப் போல் வரைந்திருந்த டாட்டூ மறைக்கப்படாமல் இருக்க, அதனைப் பார்த்தவளுக்கு சட்டென அன்று நடந்தது ஞாபகம் வந்தது. அன்று ஷுட்டிங் ஸ்பாட்டில் பிரபஞ்சனை தாக்கியது இவன் தான் என்பதை அறிந்து கொண்டவள், அவனருகே செல்ல, அவள் தன்னை நோக்கி வருவதை கண்டவன், மெல்ல அங்கிருந்து நகரத் தொடங்க, லக்ஷா தனது வேகத்தை அதிகப்படுத்தினாள். அவளது நடையின் வேகம் கூடுவதை கவனித்தவன், ஓடத் தொடங்க, லக்ஷாவும் ஓடும் அவனை பின் தொடர்ந்து ஓடினாள். காற்றை விட வேகமாக ஓடியவன், குறுக்கே வந்த ட்ரக்கை கவனிக்காது, அதன் மீது மோதினான். மோதிய வேகத்தில் கீழே விழுந்தவனின் உயிர் அப்போதே பிரிந்து சென்றிருந்தது. 

“ச்சே.. இவ்வளவு தூரம் வந்தும் இவனை உயிரோட பிடிக்க முடியலையே?!” என்று முணுமுணுத்தவளின் கண்ணில் பட்டது அவன் வைத்திருந்த கைப்பேசி. அதனை எடுத்துக் கொண்டவள், அங்கிருந்து சற்று தள்ளி வந்தாள். 

“இதுல இருந்து எப்படி லாக்கை எடுக்குது?” என்று முணுமுணுத்தவளின் கையோ, ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு என்று நம்பரை அழுத்த, சட்டென கைப்பேசி உயிர்பெற்றது. 

“அடபாவி.. உள்ளூர்ல இருந்து வெளிநாடு வரைக்கும்.. இதைத்தான் பாஸ்வேர்ட்டா வைச்சுருக்கீங்க..” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே, கைப்பேசியிற்குள் நுழைந்தவன், அவனுடன் யார் யாரெல்லாம் பேசியிருக்கின்றனர் என ஆராய்ந்தாள். அதில் ஒரு இந்திய நம்பரை மட்டும் தொடர்ந்து தொடர்பு கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து கொண்டவள், அந்நம்பரை அழைக்கவென அழுத்திருந்தாள். ஒரு ரிங்கிலேயே அவனது நம்பர் எடுக்கப்பட, தன் காதுகளை தீட்டிக் கொண்டு, எதிர்முனையில் இருந்து பேசுபவரின் வார்த்தைகளை கவனிக்க தயாரானாள் லக்ஷா.

“இடியட்.. இடியட்.. எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. நீயா எனக்கு போன் பண்ணாதேன்னு.. ஒரு வொர்க் கொடுத்தா.. முழுசா முடிக்குறதேயில்ல.. பணம் மட்டும் கோடி கோடியா வாங்கியிருக்க.. ஆனா செயல்ல ஜுரோ.. இப்ப எதுக்கு போன் பண்ண? அவனை முடிச்சுட்டியா? பழியை அவ மேல தூக்கிப் போட்டுட்டியா? ஹலோ.. ஹலோ.. ஆண்டனி.. ஆண்டனி.. ஹலோ.. நீ யாரு? ஆண்டனி எங்க? அவன் கைல போனை கொடு..” என்றுரைத்த குரலை அடையாளம் கண்டு கொண்ட லக்ஷா,

“ஹேய்.. ஹேய்.. பாட்ஷா.. மாணிக் பாட்ஷா.. கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான்.. ஆனா கைவிட்டுடுவான்.. நல்லவங்களை நிறைய சோதிப்பான்.. ஆனா கைவிடமாட்டான்.. அதுமாதிரி இந்த ஆண்டனிய கைவிட்டுட்டான்.. ஆனா பிரபஞ்சனை கைவிடாம காத்திட்டான்.. இது எப்படி இருக்கு ஏகலைவன் சார்?!” என்றவள் பேச,

“ஓ.. தெரிஞ்சுடுச்சா? சரி விடு.. நானும் எத்தனை நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது? அது ரொம்ப ஃபோர்.. நீ ஒருத்தியாவது கண்டுபிடிச்சியே?! ஒத்துக்குறேன்.. உனக்கும் கொஞ்சம் மூளையிருக்கு..” என்றார் ஏகலைவன். 

“இப்போவே உன்னையப் பத்தி அவர்கிட்ட சொல்லி..” என்று அவள் கூறி முடிப்பதற்குள்,

“ஹஹஹஹஹ.. ஹஹஹஹஹ.. உன்னையே ரொம்ப புத்திசாலின்னு நினைச்சேனே லயா.. ஹஹஹஹஹ.. ஆனா நீ இவ்ளோ முட்டாளா இருப்பேன்னு.. நான் நினைச்சுக்கூட பார்க்கல.. போ.. போய்.. சொல்லு.. உங்க மாமா தான் உங்களை இந்த முறை மட்டுமில்ல.. இதுக்கு முன்னாடி பலமுறை கொல்ல ட்ரைப் பண்ணாருன்னு.. போய் சொல்லு..” என்றவர் கூற,

“சொல்லத்தான் போறேன்.. நீ பேசுன எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணிட்டேன்.. இதைப் போட்டு காண்பிச்சு.. உன் முகத்திரையை கிழிக்குறேன்..” என்று லக்ஷா ஆக்ரோஷமாக கூற,

“ஓ.. பேஷா.. போய் சொல்லு.. போ.. போய் சொல்லிப்பாரு.. அப்போ தான் தெரியும்.. இந்த ஏகலைவனுக்கு எந்தளவுக்கு செல்வாக்கு இருக்குன்னு..” என்று ஏகலைவன் சவால் விட,

“சொல்றேன்.. சொல்லத்தான் போறேன்.. அவரா உன்னைய கழுத்தை பிடிச்சு வெளியே தள்ள வைக்குறேன்.. இதை செஞ்சு காட்டல.. என் பேரு லக்ஷாயில்ல..” என்று லக்ஷாவும் சபதமிட,

“உண்மை தான்.. உன் பேர் லயா தானே?! அப்புறம் அதை எதுக்கு மாத்தி சொல்ற?! உன்னால முடிஞ்சதை செஞ்சுக்கோ..” என்று சிரித்தவாறே ஏகலைவன் இணைப்பை துண்டிக்க, கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, பிரபஞ்சனைத் தேடிச் சென்றாள்  லக்ஷா. ஷுட்டிங் ஸ்பாட்டில் நர்மதாவோடு ஜோடி சேர்ந்து டூயட் பாடிக் கொண்டிருந்தவனைப்  பார்த்ததும் காதில் புகை வராத குறையாக அப்படியே நின்றுவிட்டாள். 

“சார்.. மேம்.. ஒரு டர்னிங் பண்ணி வந்ததும், அப்படியே இறுக்கி அணைச்சு உதட்டுல கிஸ் பண்றீங்க..” என்று பிரபஞ்சனைப் பார்த்து டைரக்டர் கூறிவிட்டு, நர்மதாவின் புறம் திரும்பி,

“மேம்.. நீங்க அப்படியே சாரோட கையிலயே பென் பண்றீங்க.‌. சார் உங்களை பேலன்ஸ் பண்ணி பிடிச்சுக்குவாரு..” என்று கூறிவிட்டு,

“ஓகே.. ஓகே.. ஷாட் ரெடி.. ஆக்ஷன்..” என்றவர் கத்த, பிரஞ்சனை நோக்கி ஓடி வர,  தன்னருகே எதையோ தேடிய லக்ஷா, அருகில் இருந்த பூந்தொட்டியை தூக்கி, நர்மதா ஓடி வரும்  பாதையில் எறிந்தாள். தன் முன்னே ஏதோ பொத்தென்று விழுந்து உடைந்ததை கவனித்த நர்மதா, ஓடி வரும் வேகத்தை குறைக்க முடியாது, பூந்தொட்டியில் கால் வைத்து வழுக்கி விழுந்தாள். 

“ஆஆஆஆஆஆஆ.. அம்மாஆஆஆஆஆ..” என்ற நர்மதாவின் குரலைக் கேட்டு அனைவரும் அவளருகே ஓடி வர, ஏதுமறியாத பச்சப்பிள்ளை போல்‌ எட்டி பார்த்தாள் லக்ஷா. அனைவரும் காட்சியில் மூழ்கியிருக்க, லக்ஷா செய்த எதுவும் அவர்களது கருத்தில் பதியவில்லை. ஆனால் பிரபஞ்சனின் கண்ணில் அவள் செய்த அனைத்தும் பட்டுவிட்டது. யூனிட்டில் இருக்கும் அனைவரும் பதறி போய் நர்மதாவை தூக்கிக் கொண்டிருக்க, லக்ஷாவின் கண்ணில் மட்டும் சிரிப்பு லயித்திருந்தது. 

“எப்பா.. இவ சரியான கேடி..  எப்படி ஒன்னுமே தெரியாத பச்சப்புள்ள மாதிரி முகத்தை வைச்சுருக்கா?” என்று தன் மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டே, நர்மதாவை தூக்குவதற்காக அருகே சென்றவனின் கையை பிடித்துக் கொண்ட லக்ஷா,

“வாங்க.. வாங்க.. சீக்கிரம் வாங்க..” என்று சத்தமாக கூறியவள், பிரபஞ்சனைப் பார்த்து,

“அச்சோ தள்ளுங்க சாரே.. தள்ளுங்க.. தள்ளுங்க.. ஆம்புலன்ஸ்ல இருந்து தூக்க வர்றாங்க..” என்ற லக்ஷா, இறுதி வரை பிரபஞ்சனை நர்மதாவின் அருகே செல்ல விடாது, தடுத்திருந்தாள். அவளது சேட்டைகள் அனைத்தையும் சிரித்துக் கொண்டே பார்த்திருந்தவன், நர்மதாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கையோடு, லக்ஷாவிடம் திரும்பியவன், 

“உன் சேட்டைக்கு அளவே இல்லாம போச்சு.. வா என்கூட..” என்று அவளது கையைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றான் பிரபஞ்சன். 

“விடுங்க.. விடுங்க.. விடுங்ங்ங்ககஅஅஅன்னு சொல்றேன்ல..”

“வாலு.. வாலு.. எதுக்கு இப்போ அவ காலை உடைச்ச?”

“ம்ம்ம்.. உங்க மண்டைய உடைச்சுருக்கணும்.. முடியல.. அதான் அவ காலை உடைச்சேன்..”

“ஏய்.. இது வெறும் ஆக்டிங் தான் டி.. எதுக்கு இப்படி க்ரூடா நடந்துக்குற?”

“அப்போ.. நானும் இதே மாதிரி ஒருத்தரை கட்டிப் பிடிச்சு கிஸ்ஸடிக்குறேன்.. நீங்க அப்படியே வேடிக்கை பார்த்துட்டு நிற்பீங்களா?”

“ம்ம்.. எனக்கு எதுவும் இந்த மாதிரி க்ரூடா பண்ணணும்னு தோணாது.. நீ வேணா ட்ரை பண்ணி பாரு..”

“ஓகே.. அப்போ நான் யார்கூட வேணா.. எப்படி வேணா பழகலாம்.. அதை பார்த்தா உங்களுக்கு கோபமே வராது.. அப்படித்தானே?”

“ஆமா.. இதெல்லாம் சினி ஃபீல்டுல சகஜம்.. நீ தான் ஓவர் ரியாக்ட் பண்ற..”

 “அப்போ.. நான் தான் ஓவர் ரியாக்ட் பண்றேன் இல்ல?!”

“ஆமா..”

“போயாங்.. உனக்கு போயி நல்லது பண்ணணும்னு வந்தேன் பாரு.. என்னைய சொல்லணும்.. நான் போறேன்.. என்னைய தேடி என் பின்னாடி வந்த.. அவ்வளவு தான்.. போயா.. போ.. உனக்கெல்லாம் வாய்க்கா வரப்புல தேன்மொழி கனிமொழின்னு எவளாவது கிடைப்பா.. அவளைத் தேடி போய் லவ் பண்ணு.. உனக்கெல்லாம் நான் செட்டாக மாட்டேன்..” என்ற லக்ஷா கோபத்தோடு வெளியே செல்ல,

“என்னது இவ என்னையா லவ் பண்றாளா? அப்படித்தான சொன்னா? இல்ல என் காதுல தான் வேற மாதிரி விழுந்துச்சா?” என்று திகைத்துப் போய் முணுமுணுத்தவன், “பேபி..” என்று நிமிர்ந்து பார்க்க, அவனது பேபி அதற்குள் வெளியே சென்றிருந்தாள். குளிருக்கு அணியும் எந்த பாதுகாப்பு உடையும் அணியாது கோபத்தோடு அங்கிருந்து சென்றிருக்கிறாள் என்பதை தாமதமாக உணர்ந்த பிரபஞ்சன் தானும் அவளைத் தேடி ஓடினான். வெளியே சென்ற லக்ஷாவிற்கு காத்திருக்கும் ஆபத்தென்ன? லக்ஷா காப்பாயாக பிரபஞ்சன்? 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *