மெய்நிகர் அழகியே
அத்தியாயம் 18
“பிரபா.. வாப்பா.. வா.. வா.. நானே உன்னைய பார்க்கணும்னு இருந்தேன்.. ஆனா நீயே வந்துட்ட.. இப்படி வந்து உட்காரு..” என்ற மரகதம், சோர்வாக வீட்டுக்கு வந்த பிரபஞ்சனின் கையைப் பிடித்து இழுத்தவர், அவனை தன்னருகே அமர்த்திக் கொண்டார்.
“இங்கப்பாரேன்.. இந்த பொண்ணு.. யூஎஸ் மல்டி மில்லியனரோட ஒரே பொண்ணு.. நம்ம இந்திய கலாச்சாரத்துல வளர்ந்த பொண்ணு.. பிடிச்சிருக்கா?” என்று ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டியவர்,
“அப்புறம் இந்த பொண்ணு.. சொந்தமா மல்டி நேஷனல் கம்பெனி வைச்சு நடத்துறா.. ரொம்ப திறமைசாலி..” என்றவர், தொடர்ந்து பலப்பெண்களின் புகைப்படங்களை அவன் முன்னே கடைபரப்பி வைத்திருந்தார். அப்புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தவன்,
“இந்த ஃபோட்டாஸ் எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைச்சது?” என்று கேட்க,
“உன் மாமா தான் கொண்டு வந்து கொடுத்தார்..” என்றவர் வெள்ளந்தியாக பதிலளிக்க,
“மாமாவா? ஆமா.. எங்க அவர்? இப்ப எல்லாம் என் கண்ணுலபடுவதே இல்ல?” என்று சுற்றும் முற்றும் பார்க்க,
“அதுவா? உன் வாழ்க்கை இப்படியாகிடுச்சேன்னு மனசு ரொம்ப வருத்தப்பட்டாருப்பா.. அதான் பழனிக்கு காவடி தூக்க சொல்லி அனுப்பி வைச்சுருக்கேன்..” என்ற மரகதத்தை பாவமாக பார்த்தவன், தனது கைபேசியை எடுத்தான். அதனைப் பார்த்த மரகதம்,
“யாருக்கு ஃபோன் பண்றப்பா?” என்று கேட்க,
“ஹும்.. பழனி முருகனுக்கு.. அவர்கிட்ட ஒரு சின்ன டீலிங் இருக்கு.. அதான்..” என்றவன் பதிலளிக்க,
“போ பிரபா.. கடவுள் விஷயத்துல இப்படி எல்லாம் கிண்டல் பண்ணாதப்பா..” என்றவர் அங்கிருந்து எழுந்து சென்றார். இங்கே பிரபஞ்சனின் அழைப்பை பார்த்ததும், கண்டிப்பாக விவாகரத்து நோட்டீஸை பற்றி தான் கேட்கப் போகிறான் என்பதை முதலிலேயே உணர்ந்திருந்த ஏகலைவனோ, பிரபஞ்சனின் அழைப்பை துண்டித்து விடவே, “யோவ் மாமா.. நீ மட்டும் என் கண்ல படு. அப்புறம் இருக்கு உனக்கு..” என்று முணுமுணுத்துக் கொண்டவரின் காதில் லக்ஷா கூறியதே விழுந்து கொண்டிருந்தது.
‘நீ பொய் சொல்ற டி.. எந்த பொண்ணும் லவ் இல்லாம.. அப்படி எல்லாம் நடந்துக்க மாட்டா.. நீ யாரை வேணா அசிங்கப்படுத்தியிருக்கலாம்.. ஆனா நம்ம புனிதமான உறவை எப்படி அசிங்கப்படுத்தலாம்? இதுக்கு உன்னை கதறவிடுறேன்டி..’ என்று எண்ணியவனின் முன்னால் இருந்த பெண்களின் புகைப்படங்களை எடுத்து பார்க்கலானான். அதில் இருந்து ஒரு பெண்ணை தேர்வு செய்தவன்,
“ஐம் கம்மிங் பேபி..” என்றவனின் உதடுகளில் வெற்றிப்புன்னகை ஒன்று உதித்தது.
***************************************************
“மிஸ் லக்ஷா.. உங்கக்கிட்ட எவ்ளோ பெரிய கேஸை கொடுத்திருக்கேன்?! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இப்படி கை காலை உடைச்சுகிட்டேன்னு வந்து நிக்குறீங்க? இதை நான் உங்கக்கிட்ட எதிர்பார்க்கல..”
“சார்.. ஆல் மோஸ்ட்.. நாம அக்யூஸ்ட்டை நெருங்கிட்டோம்..”
“எப்படி?”
“சார்.. அந்த பொண்ணு காணாம போன நேரம் சிசிடிவி கேமராவில் பதிவான ஃபோட்டேஜ்.. அப்போ அங்க இருந்து போன் காரில் இருந்து வெளியே வந்து விழுந்த பேப்பர்.. அதுல ஏதோ வண்டி நம்பர் எழுதியிருந்துச்சு.. அதை ஃபாலோ பண்ணிட்டு போனப்போ.. அங்க கிடைச்ச ஃபோன்.. அதுல இருந்து ஒரே நம்பருக்கு தொடர்ந்து கால் பண்ணி பேசிருக்காங்க.. அந்த நம்பரை ட்ரேஸ் பண்ணிட்டுருக்கோம் சார்.. சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவோம்..”
“சீக்கிரம்னா எப்போ? நீங்க வேற மெடிக்கல் லீவ்ல இருக்கீங்க..”
“நான் மெடிக்கல் லீவ்ல இருந்தாலும்.. அண்டர்கவர் ஆப்ரேஷன்ல தான் இருக்கேன் சார்.. நான் சந்தேகப்படும் இடம் பெரிய கை சார்.. அதான் ஸ்ட்ராங்கான எவிடென்ஸ்காக வெயிட் பண்ணிட்டுருக்கேன்..”
“இன்னும் என் வீக்ல இந்த கேஸ் முடிஞ்சாகணும்.. பொண்ணோட அப்பா பெரிய இடம்.. பொண்ணு காணாம போய், பணத்தை கொடுத்து திருப்பிக் கூட்டிட்டு வந்ததைப் பத்தி வெளிய சொல்ல வேண்டாம்னு கேட்டுக்கிட்டார்.. பொம்பளபுள்ள சம்பந்தப்பட்ட விஷயம்.. சோ, விஷயம் வெளிய தெரியாம ஹேண்டில் பண்ணுங்க.. அதுக்காக தான் இந்த தேவை உங்கக்கிட்ட கொடுத்துருக்கேன்..”
“ஷ்யர்.. சார்.. கண்டிப்பா இன்னும் என் வீக்ல குற்றவாளிகளை கூண்டோடு பிடிச்சுடுவோம்..”
“குட்..” என்ற ஐ ஜிக்கு சல்யூட் அடித்த லக்ஷா, கையில் மாட்டியிருந்த ஊன்றுகோலின் உதவியுடன் நடந்து வெளியே வந்தவள், தனது காரினை திறக்க முயல, அவள் முன்னே வந்து நின்றிருந்தான் பிரபஞ்சன்.
“பேபி.. பார்த்து ஒரு வாரமாச்சு.. எப்படி இருக்கீங்க?” என்று சிரித்துக் கொண்டே கேட்டவனை வெறுமையாக பார்த்தாள் லக்ஷா.
“ஹலோ.. பேபி.. உங்களைத்தான்.. நாளைக்கு உங்க அக்காக்கு கல்யாணம்னு கேள்விபட்டேன்.. என்னோட வாழ்த்துக்கள அவங்களுக்கு சொல்லிடுங்க..” என்றவன் முகத்தை கூர்மையாக ஆராய்ந்தவள், அவனுடைய முகத்தில் எந்த ஒரு உணர்வையும் அறிய முடியாது, தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.
“என்ன மேடம்.. உங்களை மதிச்சு பேசிட்டுருக்கேன்.. ஆனா நீங்க என்னன்னா.. முகத்தை அந்தப்பக்கமா திருப்பிக்குறீங்களே?! அட இங்கப்பாருங்க மேடம்.. நான் உங்களை தொந்தரவு பண்றதுக்காக வரல.. நான் உங்களுக்கு அனுப்புன டிவொர்ஸ் நோட்டீஸ்ல சைன் பண்ணி கொடுத்துட்டீங்கன்னா.. நான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வசதியா இருக்கும்..”
“அது.. அது.. தொலைஞ்சு போச்சு..”
“தொலைஞ்சு போச்சா? இல்ல.. தொலைச்சுட்டீங்களா மேடம்?”
“ஏதோ ஒன்னு.. உங்களுக்கு எது விருப்பமோ அதையே நினைச்சுக்குங்க.. ஆனா இப்ப என்கிட்ட டிவொர்ஸ் நோட்டீஸ் இல்ல.. போதுமா?”
“உங்கக்கிட்ட இல்லைன்னா என்ன மேடம்? நான் தான் இன்னொரு காப்பி எடுத்துட்டு வந்துருக்கேனே?” என்றவன் தனது கையில் வைத்திருந்த டிவொர்ஸ் நோட்டீஸ் பேப்பரை அவள் காட்டி பேனாவையும் கொடுத்து கையெழுத்திடச் சொல்ல.. மறுக்க முடியாது, நடுங்கும் கையால் அப்பேனாவை பற்றி, பேப்பரையும் வாங்கினாள். ஒரு பொருள் நம் கைக்குள் இருக்கும் வரை அதனுடைய அவசியம் புரிவதில்லை. அதே பொருள் நம்மை விட்டு சொல்லும் போது தான், அப்பொருள் நமக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பது புரியும். அவனை பரிதாபமாக பார்த்தவாறே, காரின் மேல் வைத்து கையெழுத்து போட்டு கொடுத்தவளிடம் இருந்து, அப்பேரை பிடுங்கியவன்,
“ம்ம்ம்.. ஓகே மேடம்.. இதுவரைக்கும் நீங்களும் நானும் ஹஸ்பெண்ட் அண்ட் வொய்ப்.. ஆனா இனிமே நாம ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ்.. சோ..” என்றவன் தனது காரின் புறமாக திரும்பி,
“டார்லிங்.. கம் அவுட்..” என்று சத்தம் கொடுக்க, அதனுள் இருந்து அழகிய பதுமை போல் இறங்கினாள் ஒரு பெண். அவளை நோக்கி கை நீட்டியவன்,
“ஷி இஸ் இலியானா.. மை ஃபியான்சி.. நேத்து தான் என்கேஜ்மெண்ட்டாச்சு.. இன்னும் நம்ம ரெண்டு பேருக்கும் டிவொர்ஸ் ஆகலைல.. சோ சீக்ரெட்டா வைச்சுருக்கோம்.. இனிமே உன் அக்காவுக்காக என்கூட சேர்ந்து வாழணும்குற தியாகத்தை நீ பண்ண வேணாம்.. உனக்கும் கூட நாளைக் என்கேஜ்மெண்ட்டுன்னு கேள்விபட்டேன்.. குட் லக்.. இந்த மேரேஜ் லைஃப்பாவது உனக்கு பிடிச்ச மாதிரி அமைய வாழ்த்துகள்..” என்றவன் லக்ஷாவின் கையைப் பற்றி வாழ்த்துக் கூறிவிட்டு, தன் அருகே தங்கசிலையாய் சுடிதார் அணிந்து நின்றிருந்த பெண்ணின் தோளில் கையிட்டவன்,
“ஓகே பேப்.. நாம கிளம்புவோம்.. இன்னைக்கு ஷுட் முடிஞ்சதும் பீச் ஹவுஸ் போலாம்..” என்று அப்பெண்ணிடம் பேசியபடியே அங்கிருந்து செல்ல, அவன் பேசியவை யாவும் லக்ஷாவின் காதில் தெளிவாக விழுந்திருந்தன. பிள்ளையாரை பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தான் வாய் தவறி விட்ட வார்த்தைகள், அதே வீரியம் தாங்காது, தன்னை வந்து தாக்கும் என்பதை அறிய லக்ஷா, கண்கள் கலங்க நின்றிருந்தாள். அவள் பேசிய வார்த்தைகளுக்காக பிரபஞ்சனிடம் மன்னிப்பை யாசிப்பாளா? அப்படி அவள் யாசித்தாலும் அவன் அவளை மன்னித்து ஏற்றுக்கொள்வானா?
