மெய்நிகர் அழகியே
அத்தியாயம் 3
“உன் அக்காவோட க்ளோஸ் ப்ரெண்ட் பேர் கீதா தானே?”
“ஆமா.. உங்களுக்கு எப்படி தெரியும்?”
“நேத்து நீ வந்து போன மறுநிமிஷமே.. அவளைப் பத்தின எல்லா விஷயத்தையும் கலெக்ட் பண்ணிட்டேன்..”
“அப்போ அவளை யார் கடத்திட்டு போயிருப்பான்னு தெரியுமா?”
“பிரபஞ்சன்..”
“வாட்? யார் அது?”
“ஐதராபாத் சிட்டியோட மான்ஸ்டர்.. தி கிங் மேக்கர்..”
“அவனுக்கும் அக்காக்கும் என்ன சம்பந்தம்?”
“அதான் எனக்கும் குழப்பமா இருக்கு.. அங்க போய் விசாரிச்சாத்தான் உண்மையென்னன்னு தெரியும்..” என்றவன் கூற, தன் புருவங்களை சுருக்கி யோசித்தவள்,
“அந்த ஏரியால சிசிடிவி கேமரா இருக்கும்ல..” என்று கூற,
“ம்ம்.. இருக்கலாம்.. அப்படி இருந்தா அதை வைச்சு அவ எதுவரைக்கும் யார் கூட போனன்னு கண்டுபிடிச்சுடலாம்..” என்றவனை பார்த்து சிரித்தவள், அதன் பின்னர் வழக்கம் போல் லயாவைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டாள். அவள் லயாவைப் பற்றி பேசும் பேச்சில் லயத்திருந்தான் சக்திவேல்.
இரு நாட்களுக்கு பிறகு..
“மாமா.. இது தான் அக்காவோட ஹாஸ்டல்..”
“ம்ம்ம்..” என்றவாறே அவ்விடத்தை சுற்றி கண்களால் அளவிட்டவனின் கண்ணில் விழுந்தது அந்த சிசிடிவி கேமரா.
“லக்ஷா.. அங்க பாரு சிசிடிவி கேமரா..”
“ஆமா மாமா..”
“உன் அக்கா.. இந்த வழியா வந்து.. இப்படி தான் போயிருக்கணும்.. ஏன்னா இந்த வழியா போன முட்டு சந்து..”
“ஆமா.. மாமா.. அந்த கேமரவை செக் பண்ணி பார்க்கலாம்..” என்றவள் சக்திவேலை பின்தொடர்ந்து செல்ல, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த ஏரியாவில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தவனின் கண்ணில் பட்டது அந்த கருப்பு நிற கார்.
“மாமா.. அந்த வாட்ச்மேன் சொன்ன நேரத்தோட இந்த கார்.. அங்க வந்து நின்ன நேரம் ஒத்துப்போகுது..” என்றவாறே சற்று நேரத்திற்கு பிறகான வீடியோ காட்சிகளை ஓட விடவே, அதில் மஞ்சள் நிற சுடிதாரில் வெள்ளை நிற துப்பட்டா அணிந்த லயா அந்த காரில் ஏறுவது போல் பதிவாகியிருந்தது.
“அப்போ லயாவை யாரும் கடத்தல.. அவளாத் தான் இந்த கார்ல.. ஏறி போயிருக்குறா.. நீ.. உன் அக்கா யாரையும் லவ் பண்ணலன்னு சொன்ன?! இப்போ அவ யாரோட கார்லயோ ஏறி போயிருக்குறா? என்னைய என்ன கேனையன்னு நினைச்சியா?”
“மாமா.. வார்த்தைய விடாதீங்க.. விட்டா அள்ள முடியாது.. என் அக்காவா போயிருக்க மாட்டா.. இந்த அளவுக்கு அவ தைரியமா போயிருக்கானா? இதுல ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கு மாமா.. கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரிப்பதே மெய்..”
“இதுக்கு மேல என்னத்த விசாரிக்க?”
“அக்காவோட ப்ரெண்ட் கீதா சொன்னாளே.. அடிக்கடி அவளை ஒருத்தன் வந்து பார்த்தான்னு.. அவனை விசாரிச்சா ஏதாவது க்ளூ கிடைக்கலாம்..”
“யாரு? உன் அக்காவோட ப்ரொபசரையா சொல்ற?”
“ம்ம்ம்.. அவனையே தான்..” என்றவர்கள், லயாவின் ப்ரொபசர் அலெக்ஸை பார்க்க அவனது வீட்டைத் தேடி சென்றனர். அவனது வீட்டு வாசலில் வந்து நின்ற லக்ஷாவை பார்த்த அலெக்ஸ்,
“லயா நீயா? நீ எப்படி இங்க? அதுக்குள்ள அவங்கக்கிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டியா?” என்று கேட்க, அவளுக்கு பின்னால் நின்றிருந்த சக்திவேல், ஓங்கி அறைய விட, அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றான்.
“எங்கடா ஓடுற? உண்மைய சொல்லு.. லயாவை என்ன பண்ண? யாருக்கு டா மாமா வேலை பார்த்த?” என்று கேட்டவனை சரமாரியாக அடித்தவனின் அடி தாங்காது, உண்மை அனைத்தும் கூறிவிட, அதனை கேட்ட இருவரும் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.
“வாட்? விடிஞ்சா லயாவுக்கு கல்யாணமா? அதுவும் அந்த பிரபஞ்சன் கூடவா? நோ..” என்று கத்திய லக்ஷா, சக்திவேலிடம்,
“மாமா.. அக்கா பாவம்.. இந்த கட்டாய கல்யாணத்தை எப்போதுவது காப்பத்தணும்.. ப்ளீஸ் மாமா..” என்று கெஞ்ச,
“அவ உனக்கு அக்கான்னா.. எனக்கு பொண்டாட்டி.. அவளை எப்படி காப்பத்தணும்னு எனக்கு தெரியும்..” என்றவன் லயா இருக்கும் இடம் நோக்கி விரைந்தான்.
*****************************************************
“என்ன உன் தம்பி கல்யாணத்துக்கு ரெடியாகிட்டானா?”
“இல்லங்க.. இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லி, அவனோட ரூம்குள்ள போனவன்.. இன்னும் வெளியே வரவேயில்ல..”
“ஓஹோ?! அப்ப துரை கல்யாணம் பண்ணிக்க மாட்டாராமா?!” என்று ஆக்ரோஷமாக கத்திய காலிங்கராயன், பிரபஞ்சனின் அறையை நோக்கி நடக்கத் தொடங்க, அவரது காலில் விழுந்து தடுத்தார் மரகதம்.
“வேண்டாங்க.. அவனை எதுவும் பண்ணிடாதீங்க.. எனக்கு இருக்குற ஒரே சொந்தம் அவன் தாங்க.. அவன் இஷ்டம் போல வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டமே?! எதுக்காக அவனை இப்படி சித்திரவதை பண்றீங்க?!” என்று கதறிய மரகதத்தை எட்டி தள்ளினார் காலிங்கராயன். அவர் தள்ளியதில் அருகில் இருந்த தூணில் போய் மோதியவரின் தலையில் அடிபட்டு ரத்தம் வழிய, மரகதத்தின் அலறல் கேட்டு அங்கு ஓடி வந்தான் பிரபஞ்சன். இந்த பிரபஞ்சத்தின் ஒரே ஆணழகனோ?! என்று கன்னிப் பெண்களின் மனதில் எண்ணம் தோன்றச் செய்பவன். பிரபல தொழிலதிபர் நாகேந்திர ராவ் ரெட்டியின் ஒரே செல்ல மகன். பல கோடி மில்லியன் சொத்தின் ஒரே வாரிசு. அவனது உயிருக்கு ஆபத்திருக்கும் காரணத்தினால் வெளியுலகம் தெரியாது வளர்த்திருந்தார். தங்கக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் கிளியானான். நாகேஸ்வர ராவ் ரெட்டியின் அண்ணன் மகள் தான் மரகதம். சிறு வயதிலேயே அவளது தாய் தந்தை இறந்து விடவே, தான் பெற்றப் பெண்ணை போல் வளர்த்தார். தனக்கு பிறகு தன் அருமை மகனிடம் பாசங்காட்டும் மரகதத்தை தன்னிடம் விசுவாசமாக வேலை பார்த்த தனது பிஏ ஏகலைவனுக்கு திருமணமும் செய்து வைத்தார். மரகதத்தை திருமணம் செய்யும் வரையில் விசுவாசமானவராக நடித்தவர், அதன் பின்னர் தனது சூழ்ச்சியை மெல்ல தொடங்கினார். நாகேஸ்வர ராவ் ரெட்டியின் சாப்பாட்டில் மெல்ல பரவும் விஷத்தை கலந்தார். உலகம் தெரியாத பிரஞ்சனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவது போல் கூறி, அவனை தனது கைக்குள் போட்டுக் கொண்டார். வெளியுலகத்திற்கு பிரபஞ்சன், அண்டர் கிரவுண்ட் டானாகவும் மான்ஸ்டராகவும் தெரியுமாறு செய்தார். தன் பெயரில் இத்தனையும் நடக்கின்றது, என்பதை அறியாதவனுக்கு திருமண ஏற்பாட்டினை தொடங்கினார் மரகதம். என்ன தான் வெளிநாட்டில் மேற்படிப்பெல்லாம் பிரபஞ்சன் படித்திருந்தாலும், மற்றவர்களை எதிர்க்கும் துணிவில்லாமல் இருந்தான். ஆதலால், படித்த தைரியமாக யாரையும் எதிர்க்க துணியும் பெண்ணை அவனுக்கு கட்டி வைக்க நினைத்தார் மரகதம். அவரின் திட்டத்தை அறிந்து கொண்ட ஏகலைவன், மரகதத்தின் எண்ணத்திற்கு நேர் மாறாக, ஒரு பயந்தாங்கொள்ளி பெண்ணை பிரபஞ்சனுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார். தற்செயலாக ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் லயாவை ஒரு பொது நிகழ்ச்சியில் பார்த்தார். எதனைப் பார்த்தாலும் பயந்து, தயங்கி நடந்தவளை பிரபஞ்சனுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார். ஆதலால் அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி கொண்டிருந்த அலெக்ஸை தன் கைக்குள் போட்டுக் கொண்டு, லயாவை ஹாஸ்டலை விட்டு வெளியே வர வைத்தார். பின்னர், அவளை ஓரிடத்தில் அடைத்து வைத்து, விடிந்தால் அவளுடன் பிரபஞ்சனுக்கு திருமணம் என்ற நிலையை உருவாக்கினார். தான் திருமணம் செய்து கொள்ள பெண் தைரியசாலியாய் இருக்க வேண்டுமென விரும்பினான். ஆனால், ஏகலைவன் பார்த்த பெண்ணாண லயா மிகவும் பயந்த சுபாவமானவள் என்பதை தனது வேலையாட்கள் மூலமாக அறிந்து கொண்டவன், அவள் எவ்வாறு இங்கு வந்தாள் என்பதை அறிந்து கொள்ள தவறிவிட்டான். லயாவை கடத்தியதை ரகசியமாக வைத்திருந்தார் ஏகலைவன். காலம் முழுவதும் அவனுக்கு வெளி உலகத்தை காட்டாது, அவரது கைக்குள் வைத்திருக்க எண்ணினார். பிரஞ்சனின் மதிப்பில்லா எண்ணற்ற சொத்துக்கள் அவ்வாறு எண்ண வைத்தது. தன் சகோதரி அழும் சத்தம் கேட்டு வெளியே வந்த பிரபஞ்சன்,
“அக்காஆஆஆ..” என்றவாறே அவளை தூக்கியவன்,
“மாமாஆஆஆ வாட்ஸ் திஸ் நான்சென்ஸ்?! இப்போ எதுக்கு அக்காவை அடிச்சீங்க?! இது கிரிமினல் அஃபன்ஸ் தெரியுமா? அக்கா.. நீ வாக்கா.. வந்து இந்தாளு மேல ஒரு கம்ப்ளைண்ட் மட்டும் கொடு.. மத்ததை நான் பார்த்துக்குறேன்..” என்று ஏகலைவனைப் பார்த்தவாறே கூற, மரகதத்தின் முன்னே மண்டியிட்டு அமர்ந்த ஏகலைவன்,
“அய்யோ.. மாப்ள.. நான் போயி உங்க அக்காவை அடிப்பேனா? நடந்து வரும் போது, அவளா தடுக்கி விழுந்துட்டா?” என்று பதறியவாறே கூறியவர், மரகதத்தை பார்த்து,
“என்னம்மா வேடிக்கை பார்க்குற? உண்மைய சொல்லு.. மாப்ள கோபப்படுறாருல..” என்று மரகதத்திற்கு மட்டும் புரியும் பாஷையில் மிரட்ட, அதனைப் புரிந்து கொண்ட மரகதம்,
“ஆஆஆ ஆமா.. பிரபா.. நானாஆஆஆ தான் கீழ தடுக்கி விழுந்துட்டேன்.. இதுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..” என்றவாறே மெல்ல எழுந்து கொண்டவரின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று மருந்திட்ட பிரபஞ்சனை பாசத்தோடு பார்த்த மரகதம்,
“மாமா.. சொல்ற பொண்ணை ஒரு தடவை போய் பாரு.. அப்பவும் உனக்கு அவளைப் பிடிக்கலைன்னா.. இந்த கல்யாணத்தை நிறுத்திடு..” என்று கூற, அவரது நெற்றியில் பிளாஸ்திரி ஒட்டியவாறே,
“அவருக்காக இல்ல.. உன் மேல இருக்குற நம்பிக்கைல இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குறேன்.. பட்.. ஒன் கண்டிஷன்..” என்றவனை கூர்மையாக பார்த்தார் ஏகலைவன்.
“என்னது?”
“இந்த மேரேஜோட வேலிடிட்டி ஒன் இயர் மட்டுந்தான்.. அதுக்கு அப்புறம் அவக்கூட வாழ எனக்கு புடிஞ்சுருந்தா மட்டும் மேரேஜை கண்டினியூ பண்ணுவேன்.. இதுக்கு அந்த பொண்ணு ஒத்துக்கிட்டா.. நாளைக்கு கல்யாணம்.. இல்லேன்னா கேன்சல்..”
“இல்ல.. இல்ல.. மாப்ள.. நீங்க என்ன சொல்றீங்களோ.. அப்படி நடக்கும்.. நீங்க இந்த கல்யாணத்தைப் பண்ணி உங்கப்பாவோட கடைசி ஆசையை நிறைவேத்தினாப் போதும்.. அவரோட ஆத்மா சாந்தி அடைஞ்சுரும்..”
“பட் கண்டிஷனை க்ளியரா சொல்லிருங்க.. அக்கா மருந்து போட்டுருக்கேன்.. தண்ணி படாம பார்த்துக்கோ..” என்றவாறே தன் அறைக்குள் சென்றவனை சிரித்தவாறு பார்த்திருந்தார் மரகதம்; அதே நேரம் பொறாமையோடு பார்த்திருந்தார் ஏகலைவன். நடக்கப் போகும் சம்பவங்களினால் தன் வாழ்க்கையே மாறப் போகின்றது என்பதை அறியாத லக்ஷாவோ தன் சகோதரியை தேடி அலைந்து கொண்டிருந்தாள். மேடு பள்ளம் நிறைந்தது தான் உலகம். அதுபோல இன்ப துன்பம் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. இதில் யாருடைய வாழ்க்கை இன்பத்தாலும் யாருடைய வாழ்க்கை துன்பத்தாலும் நிறையப் போகின்றதோ?
