மெய்நிகர் அழகியே
அத்தியாயம் 12
“என்னடா இது இந்த ஊரு இப்படி குளிருது? நான் இப்படியே உறைஞ்சு போயிடுவேன் போலயே? கல்ப்பு அப்பவே சொல்லுச்சு.. நீ பண்ற சேட்டைக்கு வசமா எவன்கிட்டயாவது மாவட்டம் போறேன்னு.. நான் கேட்டேனா? இப்படி ஊர் பேர் தெரியாத இடத்துல தான் நான் சாகணும்னு எழுதிருக்கு போல.. அந்த மைதா மாவு மட்டும் என் கைல கிடைக்கட்டும்.. அப்புறம் இருக்கு அவனுக்கு.. அப்பாஆஆஆ.. என்னமா குளிருது?” என்று புலம்பியபடியே தன் உள்ளங்கையை உரசி அதை தன் முகத்தில் வைத்தவள், வாயில் வைத்து ஊதினாள்.
“அய்யோ.. வயிறு வேற பசிக்குதே?! கோபத்துல எதுவுமே சாப்பிட எடுத்துக்காம வந்துட்டேனே.. இந்நேரம் அந்த மைதா மாவு.. அப்பாடா பீடை ஒன்னு ஒழிஞ்சதுன்னு சந்தோஷத்துல சரக்கடிச்சு.. மட்டையாகிருக்கும்.. நான் தான் இப்படி நாய் மாதிரி தெரு தெருவா சுத்துறேன்..” என்று புலம்பியவளின் கால் இடறி விட, “அவுச்..” என்று கத்தியவாறே தரையில் அமர்ந்தவளுக்கு காலை அசைக்கக்கூட முடியவில்லை.
“போச்சா.. சோழ முத்தான் போச்சா?! இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத அளவுக்கு கால் பிசகி இருக்கு.. ராமா.. இப்ப நான் எப்படி எந்திரிச்சு.. நடப்பேன்.. நான் எங்க போவேன்..” என்று புலம்பியவளின் தோளில் ஒரு கை விழ, யாரென்று திரும்பிப் பார்த்தவளின் முன்னே நின்றிருந்தான் பிரபஞ்சன்.
“மக்கு.. மக்கு.. பெரிய இவளாட்டும் கிளம்பி வந்துட்டா.. ஒரு ஜெர்கின் எடுக்கல.. ஸு போடல.. ஸ்காஃப் கட்டல.. இப்படியா.. மழைல நனைஞ்ச கோழி கொஞ்சா நிப்ப?! பெரிசா நம்ம ஊருன்ற நினைப்புலயே இருக்குறது..” என்றவன் அவளை தன் கையில் ஏந்திக் கொண்டான்.
“பார்க்க தான் வெயிட்டே இல்லாத மாதிரி தெரியுற.. ஆனா செம வெயிட்டு டி நீ..”
“அவ்ளோ கஷ்டமா இருந்தா.. எதுக்கு தூக்கணும்? என்னைய கீழ இறக்கி விடுங்க.. இறக்கி விடுங்கன்னு சொல்றேன்ல..” என்று சிணுங்கியவளைப் பார்த்த போலீஸ்காரர் ஒருவர், அவர்களை நோக்கி வந்து பிரபஞ்சனை சந்தேகமாக பார்க்க, அவரது பார்வையிலேயே அவர் மனதுக்குள் நினைப்பதை புரிந்து கொண்ட பிரபஞ்சனோ,
“நோ.. நோ.. ஆஃபிசர்.. இவ என்னோட பொண்டாட்டி தான்.. கால்ல சின்னதா பிராக்சர்.. அதான் தூக்கிட்டுப் போறேன்..” என்று ஆங்கிலத்தில் உரைக்க, பிரபஞ்சனுக்கு வழிவிட்டு நின்றாலும், அவன் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவர்களை பின்தொடர்ந்து வந்தார். லக்ஷாவை அவளது அறைக்குள் விட்டுவிட்டு வெளியே வந்தவனின் எதிரே நின்றிருந்தார் அந்த போலீஸ்காரர்.
“நீங்க ரெண்டு பேரும் உண்மையிலேயே புருஷன் பொண்டாட்டினா.. எதுக்காக தனித்தனியா தங்குறீங்க?” என்றவர் ஆங்கிலத்தில் கேட்க,
“டாக்டரை கூட்டிட்டு வரப் போறேன்..” என்று பிரபஞ்சன் சமாளிக்க முயல,
“ரிசப்ஷனுக்கு ஃபோன் பண்ணா.. அவங்களே டாக்டரை ரூம்க்கு அனுப்பி வைப்பாங்க.. நான் ரிசப்ஷன்ல சொல்லிட்டு போறேன்..” என்றவர் அவனை சந்தேகமாக பார்த்துக் கொண்டே செல்ல, மீண்டும் லக்ஷாவின் அறைக்குள் நுழைந்தான் பிரபஞ்சன். பிரபஞ்சன் உள்ளே நுழைந்ததைப் பார்த்த லக்ஷா சட்டென போர்வையை எடுத்து தன் மீது போர்த்திக் கொண்டவள்,
“ஹேய்.. இப்ப எதுக்கு உள்ள வந்தீங்க? எப்படி உள்ள வந்தீங்க? இந்த ரூம் ஆட்டோமேட்டிக் லாக்குன்னு தானே டைரக்டர் சொன்னாரு?!” என்று கட்டிலில் நின்று கொண்டே பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்த பிரபஞ்சனுக்கு, அவளை மேலும் வம்பிழுக்க தோன்றவே, சட்டென மெத்தையில் குதித்தவன்,
“ஏன் நான் உன்னைய ஏதாவது பண்ணிடுவேன்னு பயமா? இப்படி ஒதுங்குற? நீ தான் வீராத வீரி.. சூராத சூரியாச்சே..” என்று கூறியபடியே அவளருகே நெருங்க,
“எனக்கு கால்ல ப்ராக்சர் ஆகிருக்கு.. இல்லன்னா?” என்றவளின் கையைப் பிடித்து இழுத்து தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தவன்,
“இல்லன்னா.. ஜாக்கிசான் தங்கச்சியா மாறி.. ஏர்லயே பறந்து பறந்து அடிச்சிருப்பியோ? வெறும் சுளுக்குக்கு என்ன சீனு?” என்றவன் அவளை இறுக்கி அணைக்க,
“வேணாம் தள்ளிப்போங்க..” என்றவள் அவனை விலக்க, அவளது கையையும் நெற்றியையும் தொட்டு பார்த்தவன்,
“ஹேய்.. என்ன இப்படி சுடுது? அனலா கொதிக்குது.. ஃபீவர் அடிக்குது டி..” என்று பதறியவாறே அவளது கழுத்தின் அடியில் கை வைத்து பார்த்தவனின் கையை தட்டிவிட்டவள்,
“எனக்கு என்ன ஆனாலும் உங்களுக்கு என்ன? நான் எப்படி போனா உங்களுக்கு என்ன? உங்களுக்கு தான் என் மேல எந்த ஃபீலிங்கும் இல்லைல.. நீங்க உங்க வேலையைப் பார்த்துட்டு போங்க..” என்றவள் போர்வையை இழுத்து தலை வரை போர்த்தி கொண்டு படுத்து விட்டாள். ஹோட்டல் மேனேஜரிடம் மருத்துவரின் நம்பரை வாங்கி, அவரை தொடர்பு கொண்டு வரவழைத்தான். மருத்துவர் வந்து மருந்தளித்துவிட்டு செல்ல, லக்ஷாவின் அருகே அமர்ந்தவன், நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவளின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். அவளது நெற்றியை மறைத்தவாறு விழுந்திருந்த முடியை ஒதுக்கிவிட்டவன், மெல்ல குனிந்து, அவளது நெற்றியில் முத்தமிட்டவனின் கண்முன்னே முதன்முதலாக அவளைப் பார்த்த தினம் ஞாபகத்துக்கு வந்தது. லக்ஷாவின் காலேஜ் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தவனின் கண்ணில் சாந்தமே உருவாக, அமைதி ஒளிர்ந்த முகத்துடனும் மென்புன்னகையுமாக சிறு பட்டாம்பூச்சியென சுற்றித்திரிந்தவளை பார்த்ததும் தன் மனதை அவளிடம் பறிகொடுத்துவிட்டான். அவளைப் பற்றி ஏகலைவனிடம் விசாரிக்க, தன் மனதுக்குள் திட்டம் ஒன்றை வகுத்தவர், சிறிதும் தாமதிக்காது அவளையே திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தார். ஏகலைவனின் திட்டம் தெரியாத பிரபஞ்சன், ஏதோ ஒரு முகம் தெரியாத பெண்ணென நினைத்து மணமகள் அறைக்கு செல்ல, அங்கே தன் மனம் கவர்ந்தவளை பார்த்ததும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இருப்பினும் அவளிடம் சிறிது விளையாடிப்பார்க்க நினைத்தவன், அவளென தெரியாது ஏற்பாடு செய்திருந்த விவாகரத்து பத்திரத்தில் அவளது கையெழுத்தை வாங்கினான். அவள் செய்யும் ஒவ்வொரு செயலையும் உள்ளுக்குள் ரசித்தவனின் கண்முன்னே நடந்த அத்தனை நிகழ்வுகளும் வந்து போயின. கட்டிலுக்கு அருகில் இருந்த மேஜையில் குளிர்ந்த நீரை வைத்து, அதில் துணியை நனைத்தவன், லக்ஷாவின் நெற்றியை மெல்ல துடைத்தான். அதில் மெல்ல கண் விழிப்பு வந்த லக்ஷா, தன் எதிரே அமர்ந்திருந்த பிரபஞ்சனை அரைமயக்கத்தில் பார்த்தாள். அவள் தன்னை பார்ப்பது தெரிந்தும், எதுவும் பேசாது நனைந்த துணியை கொண்டு, அவளது கையை துடைத்துக் கொண்டிருந்தான். மீண்டும் அவளை கழுத்தின் அடியில் கை வைத்து பார்த்தவன்,
“அப்பாடா.. ஃபீவர் இல்ல.. கொஞ்ச நேரத்துல என்னமா பயமுறுத்திட்ட தெரியுமா? வெளில என்ன குளிர் தெரியுமா? மைனஸ் டிகிரில போயிடுருக்கு.. இதுல எதுவுமே போடாம.. ஜான்சி ராணி மாதிரி வெளிய போயாச்சு..” என்றவன் அவளது கழுத்தில் துணி வைத்து துடைப்பதற்காக அவள் அணிந்திருந்த டாப் பட்டன் மேல் வைக்க,
“ஹேய்.. என்ன பண்றீங்க?” என்று பதறி எழ முயன்றவளை தடுத்த பிரபஞ்சன்,
“இப்ப எதுக்கு பதர்ற? டாக்டர் என் ஹவர்க்கு ஒரு தடவை தண்ணி வைச்சு உடம்பை துடைக்க சொன்னாரு.. அதைத் தான் பண்றேன்.. ம்ம்.. சீக்கிரம் மேல இருக்குற ரெண்டு பட்டனை மட்டும் சீக்கிரம் கழட்டு.. ஆமா நீ எதுக்கு இப்ப வேகமா எந்திரிச்ச?” என்றவாறே துடைப்பதற்காக துணியை நீரில் நனைத்து எடுக்க,
“ஆமா.. அப்படியே சொல்லிட்டாலும்.. புரிஞ்சுட கிரிஞ்சுட போகுது..” என்றவள் முணுபுணுத்தவாறே, தனது டாப்பின் பட்டன்களை கழட்ட,
“ம்ம்ம்.. கழுத்தை மேல தூக்கி பாரு..” என்றவன் கழுத்தில் துடைத்தவாறே, மேலும் கீழே இறங்க,
“போதும்.. போதும்.. அதுக்கு மேல துடைக்க வேணாம்..” என்றவள் முகத்தை திருப்ப,
“ஹேய் என்ன விளையாடுறியா? கையிடுக்குல..இடுப்புக்கு கீழ எல்லாம் துடைக்க சொன்னாரு.. நீ உன்னோட ட்ரெஸ்ஸை எல்லாம் கலட்டிட்டு போர்வையை மூடிட்டு படு.. நான் கண்ணை மூடிட்டு துடைச்சு எடுத்துர்றேன்..” என்றபடியே தன் வேலையில் கண்ணாயிருக்க,
“ரோபோ.. ரோபோ.. ஷங்கர் சார் கையில மட்டும் இவன் கிடைச்சுருந்தன்னா? இவனையே வைச்சே.. டூப்போடாம படம் எடுத்துருப்பாரு..” என்று முணங்கிக் கொண்டே இருந்தவள்,
“அவ்வளவு தான்.. துடைச்சது போதும்.. எந்திரிச்சு போங்க.. எரிச்சலை கிளப்பாம.. எனக்கு தூக்கம் வருது..” என்றவள் மெல்ல திரும்பிப் படுக்க முயல,
“எங்க? அந்த போலீஸ்காரன் தான் மோப்பம் பிடிச்சுட்டு வெளியேவே வெயிட் பண்ணிட்டுருக்கான்.. இப்ப மட்டும் தான் வெளியேப் போனா.. நீ அந்த பொண்ணோட புருஷனில்ல.. அப்படி என்கிட்ட பொய் சொல்லிருக்கேன்னு சொல்லி உள்ள தூக்கி வைச்சுடுவான்.. போலீஸ் ஸ்டேஷன் போறது ஒன்னும் பெரிய விஷயமில்ல.. ஆனால் அது ட்ரெண்டிங் நியூஸா மாறிடுமேன்னு தான் யோசிக்குறேன்..” என்றவாறே அவளை தன்புறம் திருப்பியவனை கூர்மையாக பார்த்த லக்ஷா,
“அப்போ, தனது அசிஸ்டெண்ட்டுடன் ஒரே அறையில் தங்கிய ஆக்டர் பிரபஞ்சன்.. இருவருக்கும் என்ன உறவோ?ன்னு நாளைக்கு காலைல நியூஸ் ட்ரெண்டிங் ஆகுமே?! அது மட்டும் பரவாயில்லயா?” என்றவள் கூற, அவளை கூர்மையாக பார்த்தவன்,
“நீ என்னோட வொய்ஃப்.. இது நம்ம யூனிட்ல இருக்குற எல்லாருக்குமே தெரியும்.. அதை இந்த உலகத்துக்கே சொல்லணும்னாலும் நான் சொல்வேன்..” என்றவன் கூற, “அதுவும் ஒரு வருஷத்துக்கு மட்டும்.. இல்லையா?” என்றவளின் இடையில் துணியை அழுத்தித் துடைக்க, கூக்கச்சத்தில் தனது கீழ் இதழை மடக்கி கடித்தவளின் பேச்சு அதோடு தடைபட்டு போனது.
அரை மயக்கத்தில் இருந்தவள், “ஜடம்.. ஜடம்.. ஒன்னுமே தோணாது..” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவள்,
“இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது லவர் இருந்துருக்காங்களா?” என்று கேட்க,
“ம்ஹும்.. நிறைய பேர் ப்ரப்போஸ் பண்ணாங்க.. பட் நான் தான் ஒத்துக்கல..” என்றவன் தன் கடமையில் கண்ணாயிருந்தான். அவன் கொடுக்கும் சுகவதை தாங்காதவள்,
“நீ மெடிக்கல் செக்கப் எல்லாம் போவீங்களா?” என்று கேட்க, “ஓ.. இயர்லி ஒன்ஸ்.. போவேன்..” என்றவாறே அவளது இடையைத் தாண்டி கீழே பயணித்தவன், துணியை நீரில் நனைத்து மீண்டும் துடைக்க ஆரம்பித்தான்.
“என்ன சொல்வாங்க?”
“ம்ம்.. எல்லாமே நார்மல்னு சொல்வாங்க..”
“நெக்ஸ்ட் டைம் அந்த ஹாஸ்பிடல் போகாதீங்க..”
“எதுக்கு? அது வேர்ல்லயே ஃபேமஸ் ஹாஸ்பிடல்.. தெரியுமா?”
“வேர்ல் ஃபேமஸ்ஸா இருந்தாலும்.. சுத்த வேஸ்ட்.. முக்கியமான ஒன்னை டெஸ்ட் பண்ணாம விட்டுருக்ககாங்க..”
“என்னது?”
“அதான் உங்களுக்கு அது வேலை செய்யுமான்னு டெஸ்ட் பட்டிருக்க மாட்டாங்க..” என்றவள் அவனது கையை தட்டிவிட்டு கட்டிலில் இருந்து கீழே இறங்க முயல,
“வாட்?” என்று அதிர்ந்தவன், அவள் கூற வருவது புரிந்துவிடவே, ஒரே இழுவையில் அவளை மெத்தையில் தள்ளியவன், அவளது இருபுறமும் காலை மடக்கி, அவள் எழாத முடியாதவாறு அமர்ந்து கொண்டான்.
“இப்ப என்ன சொன்ன? திருப்பி சொல்லு..” என்றவன் கேட்க,
“முடியாது..” என்றவள் தன் முகத்தை திருப்ப, அவளது முகத்தருகே குனிந்தவன், அவளது முகத்தை திருப்பி கண்களை நேராக பார்த்து,
“இன்னைக்கு வேலை செய்யுதா? இல்லைன்னு நீ பார்க்கத்தான் போற..” என்றவனை விலக்கி முயன்றவளை அடக்கி தனது அணைப்பிற்குள் கொண்டு வந்தவன், அவளது இதழ்களை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான். ஒரு வருடத்திற்கு பிறகு அவளை விட்டு பிரியும் எண்ணம் அவனுக்கு சிறிதும் இல்லை. இருப்பினும் அவளது மனதினை அறிந்து கொள்வதற்காகவே இத்தனை நாட்கள் பொறுமை காத்து வந்திருந்தவன், இன்று அவளது வாய் மொழியாகவே, அவளும் தன்னை விரும்புவதாக அறிந்து கொண்டான். இருப்பினும் கனிந்த கனியை தடியால் அடித்து கீழ் விழ வைத்து சாப்பிடுவதில் இருக்கும் சுவையை விட தானாக கனிந்து, தானாக கையில் வந்து விழும் கனியின் சுவை அபாரமானது. அவளாக வாய்விட்டு கூறிய மொழியில் சிலிர்த்தெழுந்தவன், கரும்பு காட்டுக்குள் நுழைந்து யானையாக அவளை சூறையாடினான். அவளது கழுத்தில் பதிந்த அவனது பற்தடங்கள் கூறின அவனது வேகத்தை.. இடையே அழுத்திய அவனது கையின் ரேகைகள், அவளது உடலோடு அச்சிடப்பட்டது. இதழ்களோடு இதழ் புரிந்த போரில் உதடுகள் தடித்து சிவந்து போயின. இத்தனை வருடங்களாய் பூண்டிருந்த பிரம்மச்சாரி விரதத்தை லக்ஷாவின் மீது கொண்ட காதலினால் கலைந்தான். அவளை அடக்கியாள நினைத்து இணைந்தவன், அவளது அணைப்பில் அடங்கிப் போனான். அவன் கொடுத்த அழுத்தத்தின் வலி தாங்காது, பூவைப் போன்ற மெல்லிய உடலமைப்பைக் கொண்ட மங்கை துவண்டு போக, அவளது வெட்கையை தனது முத்தத்தால் தணித்து, மங்கையவளுக்கு உயிரூட்டினான். ஒரு முறை இரு முறையல்ல.. பல முறை பெண்ணவளின் பொக்கிஷத்தை கொள்ளையடித்தவன், அவளது கலைந்து களைத்துப் போன தோற்றத்தைக் கண்டு, அவள் மீதான தனது மோகத்திற்கு தற்காலிகமாக விடுதலை அளித்தான். இவள் என்னவள்.. இவள் எனக்கானவள்.. இவளை நான் யாருக்கும் தரமாட்டேன்.. அந்த எமனே வந்தாலும், விட்டுத்தரமாட்டேன்.. என்பது போல் அவளை பின்னோடு இறுக்கி அணைத்து, அவனது முகத்தை அவளது கழுத்து வளைவில் புதைத்து, அவளது பெண்மையின் வாசத்தை சுவாசித்துக் கொண்டே உறங்கி இருந்தான் பிரபஞ்சன். தன்னருகே இருக்கும் சொர்க்கம் இன்னும் சில நாட்களில் தன்னை விட்டு விலகி செல்ல இருக்கிறது என்பதை முன்பே அறிந்திருந்தால், இன்னும் இறுக்கி அணைத்திருப்பானோ?
