பாண்டியன் தோள் வளர் பைங்கிளி
4
பாண்டியன் தோள் வளர் பைங்கிளி
ஜியா ஜானவி💞
பாண்டியனும் அவன் சகாக்களும், அன்னக்கிளி வீட்டின் பின்புறம் வந்து நின்றனர். வர மாட்டேன் என்று அழுது புரண்ட கிரியையும் விடாமல் குண்டு கட்டாக தூக்கி வந்து இருந்தனர்.
“டேய் ஒரு குடும்பஸ்தன் பாவம் உங்களை சும்மா விடதுடா ” என்று அவன் புலம்ப.. அதை எல்லாம் தூர தள்ளி, அவனை அள்ளி கொண்டு, ” ஃபர்ஸ்ட் குடும்பஸ்தன் ஆகுறோம் நாங்க.. அப்புறம் பாவம் பார்க்கலாம் ” என்று சதிஷ் சொல்ல..
“அடுத்தவனையும் குடும்பஸ்தன் ஆக்க தான் பா வந்து இருக்கோம்.. உனக்கு வந்த போது இனிச்சது.. இப்போ கசக்குதா” என்று அருண் கேட்க..
“ஏன் டா.. இப்போ தானே டா எனக்கு கல்யாணம் ஆச்சு.. ” என்று கிரி பரிதாபமாக கூற..
“அதே தான்.. ஒவ்வொருத்தனும் குடும்பஸ்தன் ஆக நீ கொஞ்சம் தியாகம் செய்து தான் ஆகனும் ” என்று முருகன் சொல்ல..
“இதுக்கு மேல என்ன தியாகம் செய்ய.. புத்தம் புது பொண்டாட்டி அங்க இருக்க.. உங்க கூட வந்து கும்மு இருட்டுல இந்த புதர் பின்னாடி ஒளிஞ்சு இருக்கேனே அதுவே பெரிய தியாகம் தான் ” என்று அவன் புலம்ப…
“குவாட்ருக்கு ஆசை பட்ட நாய் எல்லாம் பேச கூடாது.. அவன் வாயை முடுங்கடா” என்று பாண்டியன் கர்ஜிக்க.. அனைவரும் ஸ்ஸ் என்று ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சொல்ல… அதுவே பெரும் சத்தமாக கேட்க, “அடேய்களா.. உங்க சத்துல நிச பாம்பு வந்திட போகுது டா “என்று பாண்டியன் எரிச்சலில் கத்த…
பாம்பு என்று ஒற்றை சொல்லில் அனைவரும் வாரி சுருட்டி அவன் மேலே விழ.. மீண்டும் ஒரு களேபரம் அங்கே..
ஒருவழியாக அனைவரையும் சதிஷ் தான் அமைதிப்படுத்தி.. ” மச்சி எப்படி போக போற அன்னக்கிளி வீட்டுக்குள்ள ” என்று கேட்க..
“அது என்ன அலிபாபா குகையா மந்திரம் போட்டு திறக்க.. எல்லாம் ஓட்டைப் பிரித்து தான் உள்ள குதிக்கனும் “என்று அவன் அசால்ட்டாக கூற…
“அப்போ எல்லரும் இங்கனவே வெயிட் பண்ணுங்க.. எங்க வீட்டுல ஏணி இருக்கு.. போய் எடுத்துட்டு வரேன்” என்று நழுவ போன கிரியை கை பிடித்து முருகன் இழுக்க, அனைவரும் சேர்ந்து “ஏய் நீ யாருன்னு எங்களுக்கு தெரியும்.. நாங்க யாருன்னு உனக்கு தெரியும் ஹே ஹே” என்று சிரிக்க… மாட்டி கொண்டதில் பேய் முழி முழித்தான் கிரி.
அவனை கீழ போடுடா என்று பாண்டியன் கூற.. அவனை கீழ போட்டு வெற்றி புன்னகை பூத்த முருகனை “சூப்பர் டா” என்ற பாண்டியன்.. “டேய் அவனை அவனுக்கு மேல போட்டு அமுக்கு டா அருணு “என்க.. அவனோ பக்க பக்க சிரிப்புடன் அவனை கிரிக்கு மேல போட்டு அமுக்க.. “பலே அருணா..” என்றவன் சதிஷ்யிடம் கண்ணை காட்ட.. அவன் அருணை அவர்கள் மேல போட.. அடுத்து பாண்டியன் பேச எத்தனைக்கும் முன், “இரு அடுத்து நான் தானே.. நானே போறேன் ” என்றவன் அவர்கள் மேல் விழுந்தான்.
” அப்படியே கொஞ்ச கொஞ்சமா மேல எழுந்திருங்கடா ” என்று பாண்டியன் கட்டளைக்கு அடிபணிந்து ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமே மேல எழும்ப.. அவர்கள் மீது பாண்டியன் ஏறி நின்றான். “அடேய் எனக்கு இப்போ தான் டா கல்யாணம் ஆகி இருக்கு. எதா இருந்தாலும் பார்த்து இதமா பதமா பண்ணுகடா ” என்று கிரி தன் வாழ்க்கை நினைத்து புலம்ப…
“நீயாவுது கல்யாணம் பண்ணி ஒரு சிலதை பார்த்த கன்னி கழிந்த பையன் டா.. ஆனா நான் ” என்று முருகன் புலம்ப..
“அப்போ.. கமலாவ கரும்பு காட்டுக்குள்ள கூட்டி போய் கபடி விளையான்டியா ” என்று அருன் கேட்க..
“அதானே.. நீயும் நானும் தான் டா.. அக்மார்க் கன்னி பசங்க ” என்று சதிஷ் கூற..
“இப்போ நீங்க எல்லாம் வாய் மூட்ல.. எல்லோருக்கும் இங்கனவே வசாக்டோமி தான் ” என்றான் பாண்டியன்.
“அது யாரு டா.. வாசு ஓட பொம்மி.. நான் பார்த்து இல்லையே ” என்று முருகன் சொல்ல..
” எதுக்கு அவளை வாழை தோப்புக்கு கூப்பிட்டு போகவா ” என்று அருண் வார..
“அடேய் அவன் நமக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வேன் சொல்றான் டா ” என்று சதிஷ் அலற..
“வாய் மூடுங்கடா… அவன் செய்தாலும் செய்துடுவான்.. அவன் ஆளு வேற நர்ஸூ” என்று அனைவரும் கப் சிப்..
மெல்ல சுவர் ஏறியவன், ஓட்டை பிரித்து உள்ளே பார்க்க அங்கே அறை மெத்தையில் அவள் படுத்திருக்க..
மெதுவா இறங்கி அவள் அருகில் அமர்ந்து, பேரட் பேரட் என்றான்.
அவளோ ஆழ்ந்த தூக்கத்தில், அவன் தன் மனதை அவளிடம் திறக்க எண்ணி..
“ஏண்டி என்ன பார்த்து அப்படியொரு வார்த்தை சொன்ன? சொல்லு டி.. நான் யாரு தெரியுமா எப்பேர்பட்ட வம்சம் தெரியுமா.. என்ன பார்த்து வெட்டி ஆபீஸர்னு சொல்லிடியேடி.. ஏண்டி சொன்ன சொல்லுடி அடியே அன்னக்கிளி”
“என் உடம்புல தெம்பு இல்லையாடி.. உன்னைய வச்சு என்னால காப்பாத்த முடியாதா.. காசு என்னடி காசு. நான் இப்போ வேலைக்கு போனா கூட, லட்ச லட்சமாக சம்பாதிக்க முடியும் தெரியுமா.. என்னக்கு உன்னைய பார்த்தேனோ அன்னையிலிருந்து பித்து பிடித்து போய் உன் பின்னாடியே சுத்திகிட்டு நிற்கிறேன்… என்னடி பண்ணி வச்சிருக்க என்னய.. தில்லா.. திமிரா.. கெத்தா சுத்திகிட்டு இருந்த ஒரு அக்மார்க் பையன.. பேரட் பேரட்டுனு உன் பின்னாலே கிளியை பிடிக்கிற வேடன் மாதிரி சுத்த வச்சிடியேடி இது நியாயமாடி அடுக்குமாடி.. அப்பவும் சுற்றி வந்த என்னை திரும்பி பார்த்தியாடி நீ.. அப்படிப்பட்ட என்ன பாத்து நீ என்னய பார்த்து என்ன வார்த்தை சொன்ன சொல்லுடி ” என்று அவளைப் போட்டு உலுக்க…
“என்னடி பேரட்.. காத்தடிச்சா பறக்குற காத்தாடி மாதிரி இருந்த நீ.. எப்படி இப்படி திம்சுகட்ட ஆன”
“அது அந்த பிரஷர் ஒன்னு வந்திச்சு இல்லையா.. அப்போ உடம்பு கொஞ்சம் ஊதிப்போச்சு ” என்று பதில் கூற..
“என்னது உனக்கு பிரஸர் வந்திருச்சா? எப்போதும் நான் கொடுக்குற பிரஷர் உனக்குள்ளே இறங்கிடுச்சு போல ” என்று அவன் பரிதாபப்பட..
“ஆமா.. அந்த பாழா போன சுகரு வந்தப்ப, இந்த பிரஸரும் கூட வந்து ஒட்டிக்கிச்சு” என்று அவள் கூற…
“என்னது சுகரும் இருக்கா.. ஐயோ பேரட்.. பேரட்.. ஊருக்கெல்லாம் சேவை செஞ்சு இப்படி நோயாளியா ஆகிட்டியே பேரட்.. கவலப்படாத பேரட் உன்னைய என் கண்ணுக்குள்ள வச்சு நான் பாத்துக்குறேன் ” என்று அவன் கூற…
“உன் கண்ணுக்குள்ள இத்தாதண்டி உடம்பை வச்சிக்க முடியுமா பேராண்டி?” என்று அந்த அவள் அவராக மாறி , ராசாத்தி எழுந்து அமர…
“அம்மாச்சி ” என்று அலறினான் அவன்..
“ஏன்டா தண்ணி போட்டா கண்ணு தான் தெரியாது , பேசற குரல் குமரி யாரு கிழவி யாருன்னு கண்டுபிடிக்க முடியாதா? குமரி பேச்சுக்கும் கிழவி பேச்சுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியலையே பேராண்டி.. நாளைக்கு நீ எப்படி குடும்பம் நடத்த போற… ” என்று அவனை பார்த்து தன் தாடையில் கை வைத்து சந்தேகம் கேட்க..
“ஐயையோ அம்மாச்சி.. இது உன் பேத்திகிட்ட சொல்லிடாத ” என்று அவன் கெஞ்ச..
“நீ என்னைய கொஞ்சுனேயே அதையுமா?
“நான் உன்னை கொஞ்சுனேனா?? அது எப்போ நடந்தது ” என்று அவன் குழம்ப..
“இப்பதான் பேராண்டி.. பேரட் பேரட் னு கொஞ்சினியே” என்று அவர் வெட்கப்பட..
“ஐயோ ஆள விடு அம்மாச்சி ” என்று பதறி எழுந்து, அவன் திரும்பும் அருகில் இருந்த ஜன்னலில் ஏறி ஓட்டு மேடையேறி கீழே நின்ற தன் நண்பர்கள் மீது குதித்தான் பாண்டியன்.
“ஏண்டா இப்படி குதிச்சிட்டு வர ” என்று அனைவரும் கேட்க..
“டேய்.. பேத்தினு நினைச்சு அம்மாச்சிய எழுப்பிட்டேன் டா ” என்று பாண்டியன் கூற.. ” என்னது அம்மாச்சியவா ??” என்ற அம்புட்டு பேரும் ஆப்செண்ட் ஆகினர்.
அவசரமாக ஓடினர் நண்பர்கள் அனைவரும், ஆளுக்கொரு பக்கமாக ஓடி மறைய, பாண்டியன் மப்பில் அங்கே இங்கே என்று அதே இடத்தில் சுற்றி கொண்டிருக்க..
விழுகிற.. ஓடுற சத்தம் கேட்டு வெளியே வந்த அன்னக்கிளி மீது , ஓடி மோதி விழுந்தான் பாண்டியன்.
அவன் காதல் பைங்கிளி அன்னக்கிளியின் மேலே தான் படுத்திருப்பது தெரியாமல்.. ” ஏண்டி என்ன பார்த்து அந்த வார்த்தை சொன்ன.. அப்படி சொன்னவ ஏன் என் மேல ஜம்பமாம நீட்டி படுத்துயிருக்கிறவ.. எழுந்திருடி ” என்று கூற..
அவளோ, ” டேய் சமரா.. ஏன்டா குடிச்சிட்டு வந்து கலாட்டா பண்ணுறீயா.. தடிமாடு மாதிரி நீ தான்டா என் மேல படுத்து இருக்க.. நீ எழுந்திரு ” என்று கோபமாக கத்தினாள்.
“யாருகிட்ட கத விடுற.. அய்யா குடிச்சாலும் படு க்ளீயர்.. ஸ்டேடி.. இதுவரை எந்த பொண்ணும் என்னை டச்சிங் பண்ணத்தில்ல.. நானும் யாரையும் டச்சிங் பண்ணத்தில்ல.. என்ன தான் நான் உன்னைய லவ்விங் பண்ணாலும்.. உன் அனுமதி இல்லாம உன்ன கன்னத்தை கூட தொட மாட்டேன் ” என்று அவள் மீது ஒய்யாரமாக படுத்து கொண்டு, இரு கைகளால் அவள் கன்னத்தை பிடித்து கொண்டே பேசியவனை பார்க்க பார்க்க அவளுக்கு பற்றி கொண்டு வந்தது.
“என்னடா குடிச்சிட்டு வந்து ஒரண்டைய இழுக்கிறீயா?” என்று அவள் பல்லை கடித்து கொண்டு கேட்க..
“நான் இன்னைக்கு தண்ணீ அடிச்சேன்னா.. அது உன்னால தான்டி.. என்னைக்கு குடிக்கிற கபோதிகளுக்கு எல்லாம் நீ மருந்து கொடுக்க ஆரம்பிச்சியோ.. அப்போ விட்டவன் டி குடிய நானு.. என்னைய போய் குடிக்க வைச்சிட்டியேடி ” என்று திரும்பவும் ஆரம்பித்தவன்.. அவளை இறுக்கி அணைத்துக் கொள்ள.. “விடுடா.. அய்யனாரு மாதிரி உடம்பை வச்சிக்கிட்டு என் மேல உருளுறியே நான் தாங்குவேனா..” என்று அவள் மூச்சு வாங்க..
“தாங்கி பழகிக்கோ பேரட்.. பின்னால கஷ்டமில்லாமல் இருக்கும்ல” என்று அவன் கிறக்கமாக கூற…
“என்ன.. கொழுப்பு கூடிப் போச்சா உனக்கு.. அடேய் எழுந்திரு டா.. நிசமா மூச்சு முட்டுது ” என்க.
சட்டென்று அவன் கீழே சென்று அவளை தன் மீது போட்டு சுற்றி தன் கையை பிணைத்து கொள்ள.. அவளால் எள்ளளவும் நகரமுடியவில்லை..
“மலைப்பாம்பு மாதிரி வளைச்சு புடிச்சு வைச்சுருக்க டா சமரா… விடு விடு ” என்று அவள் கத்த..
அவனோ அதை எல்லாம் காதில் வாங்காமல் கோபத்தில் வெடுக்கென பேசும் அவள் அந்தரங்களையே ஆசைக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.
“கத்தாதேடி.. யாராச்சும் வந்திடு வாங்க” என்று அவன் அவளை அமைதிப்படுத்த..
“வரட்டும் வரட்டும் வந்து உன் மண்டைய பொலக்கட்டும் “என்று அவள் கூற..
“இந்த பாண்டியன் மண்டய பொலக்கர தைரியம் யாருக்கு இருக்கு ஆலிவேலில.. அப்படியே வந்தாலும் நம்ம இருக்கிற நிலையில பஞ்சாயத்து தான் கூட்டுவாக..அடுத்து டும் டும் தான் “என்று அவன் கெத்தாக சொல்ல…
“என்னது உன்னைய வா.. கனவுல கூட நடக்காது ” என்று அவள் வீம்பு பேச..
“கனவுல என்ன.. நிசத்துல நடத்தி காட்டுறேன்டி என் பேரட்டு “என்று அவனும் வம்பு வழக்க..
“நீ அதுக்கு வெட்டி ஆபிஸர் வேலய தியாகம் பண்ணணும்.. அந்த எடுபட்ட பயல்களோட சங்காத்தியத்த விடவேணும்… இந்த கலர் கலர் சட்டையை மாத்த வேணும்.. வம்பு சண்டைக்கு போற உன் குணத்த தூக்கி போட வேணும்.. கண்ட பயலுகளோட சண்டியர் பண்ணறத விடவேணும்.. உன் மூஞ்சுல உள்ள புதர் காடு எல்லாம் உழுவ வேணும்.. உன் திடலுக்கு பெரிய கும்பிடு போட வேணும்… அவள் பாட்டுக்கு சொல்லி கொண்டே செல்ல…
“அடியே… நிறுத்துடி.. சொல்லுற உனக்கே மூச்சு வாங்குது.. செய்ய சொல்லுற எனக்கு.. அப்ப்ப்பா… “என்று அவன் சடைத்து கொள்ள…
“நானும் வேணும்னா இத்தனை வேணுமையும் நீ செய்ய வேணும் ” என்று அவள் கூற..
” அதுக்கு பதில் இவ்வளோ பேசுற உன் வாயை.. ‘என்றவன், அவள் என்னவென்று உணரும் முன், நெடு நாள் ஆசை கொண்ட அவள் செங்காந்தள் பூவை ஒத்த இதழ்களை தன் முரட்டு இதழ் கொண்டு அடைத்திருந்தான்.. அவள் திமிறி விடுபட முயல.. அவளால் தன் இதழ்களை பிரிக்க முடியாமல் சோர்ந்து தான் போனாள்..
அவன் குடிந்திருந்ததால் வந்த நெடியும் சேர்ந்து கொள்ள, அவளுக்கு மூச்சு விட முடியாமல் தவிக்க.. தன் கை கொண்டு அவனை பிரித்தெடுக்க முயல.. அதுவும் விழலுக்கு இரைத்த நீர் போலானது. தன் நீண்ட விரல்களை கொண்டு அவனுக்கு வலிக்க அடிக்க.. அதுவா அவனுக்கு வலிக்கும்.. ஏதோ ஒத்தடம் போல அதை அனுபவித்தான் சுகமாய். தான் மூர்ச்சையாகி விட தான் போகிறோம் என்று அவள் நினைத்த நேரத்தில் அவளை விடுவித்தவன்.. சரெலென்று திரும்பி அவளை கீழே தள்ளி, மேலே வந்தவன்..
” இங்க பாரு பேரட்.. இந்த உலகத்தில எத வேணா விட்டு கொடுப்பான் இந்த பாண்டியன்.. எதுக்காகவும் உன்னைய விட்டு கொடுக்க மாட்டேன்.. இப்போ மாமனுக்கு ரொமான்ஸ் மூடி வரல… அதான் சின்னதா ஒரேயொரு கிஸ்ஸிங் மட்டும் அடிச்சேன்… நீ நம்ம லவ்விங் ஒத்துகிட்ட பிறகு பாரு.. அய்யா ரொமான்ஸ.. பர்பாமன்ஸ்ஸ ” என்று கூறியவன் போனால் போகட்டும் என்று அவள் மீது இருந்து எழுந்து அமர..
“என்னது.. சின்ன கிஸ்ஸா.. இதுவாடா.. கொஞ்சம் நேரத்தில நானு மயக்கம் போட்டு இருப்பேன்.. ஏன்டா கருவாயா என் வாய இப்படி கடிச்சி வைச்சுயிருக்க ” என்று வலிக்க வலிக்க அவனை அடிக்க.. அவ்வளவு தானா என்பதை போல பார்த்தவன்.. பின் அவளது இதழ்களை தன் விரல்கள் கொண்டு பிடித்து ஆழ்ந்து நோக்கியவன், “இல்லையே பேரட்.. சின்னது தான்.. சரி சரி சவுண்ட் விடாம மாமன நினைச்சிக்கிட்டே போய் தூங்கு ” என்றவன் தள்ளாடி கொண்டே நடந்து செல்ல…
“அடேய்.. சமரா.. கருவாயா.. இதுக்கு எல்லாம் சேர்த்து உனக்கு இருக்குடா” என்று கறுவி கொண்டே வீட்டிற்குள் சென்றாள் அன்னக்கிளி.
அவள் சொல்லி சென்றதை போல, அடுத்த இரு நாட்களில் அவளை பெண் பார்க்க சீர்காழியில் இருந்து மாப்பிள்ளை வீட்டார் வருவதாக பாண்டியனிடம் சொல்லப்பட்டது.. சொல்லியது வேறு யாரும் இல்லை.. பாண்டியனின் காதல் பைங்கிளி.. அன்னக்கிளியே தான்…
வருவோம்ல…
