பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

17
பாண்டியன் தோள் வளர் பைங்கிளி
ஜியா ஜானவி 💞
அன்னக்கிளி அழுத வண்ணம் அமர்ந்திருந்தாள் ஆற்றுவார் இன்றி.. வெளியே வந்த மருத்துவரைப் பார்த்து விரைந்து அவரிடம் சென்றாள்.
“டாக்டர் அவருக்கு என்ன ஆச்சு?” என்று வார்த்தைகள் தொண்டை குழியை விட்டு அவஸ்தையுடன் வெளிவர..
“கழுத்து கிட்ட பலமான வெட்டு சிஸ்டர்.. இனி பேசுறது கொஞ்சம் கஷ்டம் தான். உயிருக்கு ஆபத்து இல்லை.. ஆனால் ரத்தப்போக்கு நிறைய இருக்கிறதால கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கலாம்” என்று விட்டு அவர் சென்றுவிட..
அவளின் சமரனுக்கு பேச்சு வருவது கஷ்டமா? நினைக்கவே மனம் கனத்தது. வாய்க்கு ஆயிரம் முறை பேரட்.. பேரட் என்று கூறுபவன்.. அன்னறைய நாளுக்கு பின், இப்போதெல்லாம் நொடிக்கு ஒரு முறை பார்க்கும் போதெல்லாம் பொண்டாட்டி என்கிற வார்த்தை அதிகம். இனி அதையெல்லாம் தன் காதால் கேட்க முடியாதா? என்று மனம் வலியில் துடிக்க.. கண்களில் குளம் கட்ட.. கால் எட்டு வைக்க முடியாமல் தன்னவனை காண உள்ளே சென்றாள் அன்னக்கிளி..
அங்கே உடலில் பல கட்டுகளுடன் கைகளில் பல மருத்துவ கருவிகள் பொருத்தி இருக்க ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தான் பாண்டியன்..
ஐ சி யூவின் உள்ளே அதற்கு வேண்டிய பாதுகாப்பு கையுறைகள் அணிந்து உள்ளே சென்றவள், தன் நடுங்கும் கரங்கள் கொண்டு அவன் மேனியை தடவ.. ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தவனுக்கோ அது சற்றும் உணரவே இல்லை.
அவன் விழித்திருந்தால் விழி கலங்க விட்டு இருப்பானோ பெண்ணவளை..
பதறி துடிக்கத் தான் விட்டு இருப்பானோ தன் பத்தினியை.. ஆனாலும் தீமையிலும் நன்மை என அவனின் இக்காயங்களால், தன்மனம் எனும் கூட்டை விட்டு வெளியே வந்தாள் பாண்டியனின் அன்னக்கிளி..
பின் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு அன்றைய அவளின் பணியை அவன் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கே கேட்டு வாங்கியவள் அவனையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
அதற்குள் மருத்துவரின் அனுமதி வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்த முத்தையா மற்றும் ராமதாஸ் தங்களின் குல வாரிசின் இந்நிலை கண்டு கண்களில் கண்ணீர் மல்கியது அவர்களுக்கு..
நோயாளிகளை பார்க்க இருவருக்கு  மட்டுமே அனுமதி என்ற நிலையில் இவர்கள் பார்த்து சென்றவுடன், அடுத்து கண்ணதாசனும் வசந்தமும் வர, வசந்தா கட்டுகளோடு இருக்கும் தன் மகனை பார்க்க பார்க்க அவருக்கு  அக்கட்டுகள் ஏதோ ஏதோ நினைவை ஏற்படுத்த வெடித்துக் கொண்டு வந்தது அழுகை..
அன்னக்கிளி சென்று அவரிடம் “ஐசியூல சத்தம் போட்டும் அழ கூடாது..  நீங்க வாங்க வெளியில் போகலாம். அவருக்கு ஒன்னும் இல்லை” என்று அவரிடம் பக்குவமாக பேச “அவனுக்கு ஒன்னும் இல்ல தானே.. அன்னம் நல்லா ஆயிடுவான் தானே” என்று கேட்ட வார்த்தைகளேயே  அவளிடமும் திரும்பத் திரும்ப கேட்க.. மனதில் இருந்த துக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, “அத்.. அவருக்கு ஒன்னும் ஆகாது” அத்தை என்று கூற வந்தவள், அவ்வார்த்தையை மறைத்து அவருக்கு ஆறுதல் கொடுத்தபடி வெளியில் அழைத்து வந்தாள்.
அடுத்து வந்த அமிர்தமும் ஜோதியும் கண்கள் கலங்க பாண்டியனை பார்க்க.. அமிர்தமும் வாய்விட்டு “எப்போ பாத்தாலும் என் பேரனை திட்டிகிட்டே இருந்தாளுங்க.. இப்ப பாரு நல்லா இருந்தவன் இப்படி வந்து படுத்துக் கிடக்கிறானே” என்று அன்னக்கிளியின் அம்மாவை ஜாடையாக பேசிக்கொண்டே செல்ல..
ஐ சி யில் வந்து சத்தம் போட்டு பேசுகிறார்களே என்று செவிலியராக அன்னக்கிளிக்கு கோபம் வந்தது அமிர்தம் பேச பேச இன்னும் கோபம் ஏற..  “அப்பத்தா இப்பிடி சத்தம் போட்டு பேசக்கூடாது.. வெளியில போங்க இப்போ பாத்துட்டு.. அதுக்கப்புறம் இவரை வார்டுக்கு மாத்திடுவாங்க.. அங்க பக்கத்துல உட்கார்ந்து ராகம் பாடுங்க” என்று கூற அவரோ “அதெல்லாம் முடியாது நான் இங்கனதான் இருப்பேன்.. என் பேராண்டி பக்கத்துல தான் இருப்பேன்” என்று அவளுடன் பிடிவாதம் பிடித்தார்..
“அதான் நான் இருக்கேன்ல நான் பாத்துக்குறேன்..  நீங்க வாங்க வெளியே போகலாம்” என்று அவள் தன்மையாகவே சொல்ல  “நீ யாருடி அவனை பார்த்துக்க? அவன் பொண்டாட்டியா பக்கத்தில் இருந்து பாத்துக்க? அதெல்லாம் முடியாது நான் தான் இருந்து பாத்துப்பேன்” என்று அவர் அழுத்தமாகவே அங்கேயே அமர்ந்து விட்டார்.
இவளோ இவ்வளவு பொறுமையாக பேச அந்த பொறுமைக்கு எல்லாம் அவர் டாட்டா பை சொல்லி அவளுக்கு இன்னும் கடுப்பை ஏற்றிக்கொண்டு அமர்ந்திருந்தார் அமிர்தம்.
அதற்குமேல் போகமாட்டார்கள் எனப்புரிந்து, “ஆமா நான் அவன் பொண்டாட்டி தான்.. அதான் நான் இருக்கேன்ல.. அப்புறம் எதுக்கு நீங்க எல்லாம்.. போங்க போங்க.. வெளியில” என்று அதிகாரமாக அவள் கூற ஜோதி அதிர்ந்து பார்க்க.. அமிர்தமோ தன் மேவாயில் கை வைத்த அவளை பார்த்து “என்னடி சொன்ன? நீ என் பேராண்டிக்கு பொண்டாட்டியா? என்று கேட்க அப்போது தான் கோபத்தில் தான் வாய் விட்டதை உணர்ந்தாள்..
“பின்ன சும்மா பொண்டாட்டியா? பொண்டாட்டியா? கேட்டா அப்படி தான் சொல்ல முடியும். அவர் பேசண்ட்டு.. நான் செவிலியர் பாத்துக்கலாம். நீங்க என்ன பாத்துக்க முடியும்? அவருக்கு திடீர்னு பல்சு ஏறிச்சுனா செக் பண்ண தெரியுமா? மருந்து கொடுக்க தெரியுமா? ..   இதெல்லாம் நீங்க செய்வீங்களா?  எதும் தெரியாதுல்ல.. சும்மா இங்கன உக்காந்து பேசிட்டு இருக்காம ஒழுங்கா வெளியில நடைய கட்டுங்க..”  என்று அவள் அதிகாரமாக பேசி மூச்சு வாங்கினாள்.
தன் மருமகளிடம் அவளை காட்டி “பாரு இப்பவே நம்மல இப்படி ‌பேசறா? இவ வீட்டுக்கு வந்தா நம்மை எல்லாம் ஓரங்கட்டி உட்கார வைச்சிடுவா போல”என்று பொருமினார்.
“மொதல்ல என் பேராண்டிக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்று அவளை முறைத்து பார்த்துக் கொண்டே கூற, அதில் அவளது கோபம் இன்னும் ஏற அவரை தீர்க்கமாக பார்த்து தன் கையை நீட்டி வாசல் பக்கத்தை காட்டினாள்.
வாசலுக்கு வந்த அமிர்தம்
 தன் போல அன்னக்கிளியை நல்ல நல்ல வார்த்தைகளால்  திட்டிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தார். 
அப்போது முத்தையா அருகில் வர,
“ஏனுய்யா என் பேராண்டி அவனுக்கு புடிச்ச மாதிரி இருந்திருப்பான்ல.. அவன ஊருக்குள்ள தான் வச்சிப்பேன்.. கூடவே தான் வசிப்பேனு  சொல்லி இந்த நிலைமைக்கு கொண்டு வர வச்சிட்டீங்களே.. வேரறுந்த கொடி போல கிடக்கிறானே என் பேரன் பாத்தீங்களா… இன்னும் என்ன  என்ன ஆகப்போகுதோ உங்களால என் பேரனுக்கு?  அவனுக்கு ஏதாவது ஆகட்டும் உங்களுக்கு இருக்கு” என்று தன் கணவனைப் பார்த்து சகட்டு மேனிக்கு திட்டி கொண்டே தன் முந்தானையால் மூக்கை சிந்தி கொண்டு ஓரமாக அமர்ந்தார் அமிர்தம். இரு மருமகளும் அவர் அருகில் அமர, அண்ணனை பார்த்து விட்டு வந்த அம்பையோ அழுகையோடு தன் பெரியப்பாவை அணைத்து கொண்டாள்.
 முத்தையா தன்னால் தானோ பேரனுக்கு இப்படி என்று மனதளவில் நொறுங்கினார்.
பின் பாண்டியன் அருகில் தன் இருக்கையை போட்டு அமர்ந்து அவனை பார்த்த வண்ணமே கண்கள் கலங்க அவன் உடலை தன் கரம் கொண்டு மெல்ல தடவி கொண்டிருந்தாள் அன்னக்கிளி..
அன்று முழுவதும் ஐசியூவில் தொடர் கண்காணிப்பில் இருந்த பாண்டியன், மறுநாள் மருத்துவர் அவனை தக்கவாறு பரிசோதித்து அதன் பிறகு சாதாரணமான அறைக்கு மாலை போல மாற்றினார்.
நண்பர்களும் அவனை வந்து பார்த்து கண்களில் நீர் வழிய அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தனர்.
அதற்கிடையில் யாரேனும் ஒருவர் மட்டுமே இரவில் தங்க கொள்ள வேண்டும் என அறிவுறுத்த பெண்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்த ராமதாஸ் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி அவனுடன் இரவு தங்கிக் கொண்டார்.
ஆனால் வலி காரணமாக பெரும்பாலும் அன்று முழுவதும் பாண்டியன் தூக்க மாத்திரையின் வீரியத்தில் உறங்கிக் கொண்டே இருந்தான்.
இரவு பாண்டியனை பார்த்துக் கொள்வதற்காகவே, அன்று இரவு நேர பணியை கேட்டு வாங்கி இருந்தாள் அன்னக்கிளி.
அவனுக்கு தேவையான மாத்திரைகள் மருந்துகள் அனைத்தையும் கொடுத்து விட்டு.. அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்வதாக ராமதாஸிடம் கூறிவிட்டு அவன் அறையிலிருந்து வெளியேறிவிட்டாள்.
பின் நெடு நேரம் கழித்து ராமதாஸ் உறங்கி விட்டார் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு பாண்டியனின் அறைக்குள் நுழைந்து அவன் அருகே இருக்கையை போட்டு அமர்ந்து கொண்டாள்.
விரல்களால் அவன் காயங்களை தொட்டு தடவியவாறு கண்களில் வழியும் கண்ணீரை புறங்கையால் துடைத்து கொண்டிருந்தாள்… 
“பெரிய டாக்டர் என்ன என்னமோ சொல்றாங்க சமரா.. எனக்கு பயமா இருக்கு. திரும்பவும் நீ எப்போ என்னைய பேரட் பேரட்னு  கூப்பிடுவ சமரா?”
“உன் குரல நான் இனிமேல் கேட்கவே முடியாதா டா? நீ கூப்பிடும் போதெல்லாம் போடானு விரட்டி விட்டுட்டேன் நானு, இப்போ நீ கூப்பிட  வேணும்னு கெஞ்சுறேன் டா..நான் என்ன பண்ண?”
“மேகம் மறைத்த சூரியன் போல் உன்‌ மேல காதல் மனசுக்குள்ள இருந்திச்சு  போல.. இவ்வளவு நாளா தெரியலையேடா? இந்த கோலத்தில பார்த்தவுடனே அது வெளியே வருது… நீ எப்படி இருந்தாலும் பரவாயில்ல.. நீ பேசினாலும் சரி..  பேசிலைனாலும் சரி.. நீ என்னோட சமரன் தான்.. எனக்கு மட்டும் தான்” என்று அவன் காயங்களில்  படாதவாறு மெல்ல அணைத்தவாறே படுத்து இருந்தாள்.
இரவு நேரப் பணி காரணமாக வெகு நேரம் முழித்து இருப்பவள் தான். ஆனால் இன்று ஏனோ தன் மனதில் உள்ள அனைத்தையும் அவனிடம் கொட்டி விட்டதாலும், மன அழுத்தத்தினாலும் அவன் மீது மெல்ல துயில் கொண்டிருந்தாள் பெண்ணவள்..
திடீரென்று விழிப்பு வர தன் கண்ணை திறந்து பார்க்கும் போது அன்னக்கிளி  பாண்டியனின் வலதுகை தோள் வளைவில் இருக்க.. “ம்ப்ச் தூக்கத்தில் தெரியாம வந்து இப்படி விழுந்து தூங்கியிருக்கேனே.. பாவம் வலிக்கும் அவனுக்கு”  என்று தனக்குள்ளே பேசிக் கொண்டு மெல்ல தன் தலையை தூக்கி அவனைப் பார்த்தாள். ஆனால் அவன் கைகளை விட்டு சிறிதும் அசைத்தாள் இல்லை.
அவன் முகத்தையே அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்தாள். மெல்ல தன் கை கொண்டு அவன் மீசை தாடி ரோமங்களை வருடி “இதை ஏன் இப்படி காடு மாதிரி மண்டி போட்டு வெச்சிருக்க..
ஃபர்ஸ்ட் இதை பார்க்க கரடிக்குட்டி மாதிரியே இருக்கு உன் மூஞ்சி..
உன் மூஞ்ச முழுசாவே பார்க்க முடியாம பாதி முகத்தை இதுதான் மறைச்சு வச்சு இருக்கு… ஒழுங்கா கல்யாணத்துக்கு முன்னால இதெல்லாம் வெட்டிட்டு வரல.. மவனே அங்க மணமேடைல உக்காந்து இதெல்லாம் பிடிச்சு நானே பிச்சி பிச்சி எடுத்திடுவேன்… 
அதுமில்லாம பொசுக்கு பொசுக்குன்னு உதட்டை புடிச்சி கடிக்கும் போது, தாடை கன்னத்தில எல்லாம் குத்துடா” என்று தன் போல தன் மனதில் உள்ளவைகள் எல்லாம், கொஞ்சும் குரலால் அவன் முகத்தை பார்த்து பேசிக் கொண்டிருந்தாள் அன்னக்கிளி.
பாண்டியனோ தூக்க மாத்திரையின் வீரியத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
மறுநாள் காலை விடிந்து, பரிசோதிக்க மருத்துவர் வரும் பொழுது கூடவே தன்னவனின் நலம் காண அவர் பின்னாலேயே வந்தாள் அன்னக்கிளி.
அவனை டாக்டர் பரிசோதித்து கொண்டிருக்க கண்களாலேயே அவனின் உடல் காயத்தை இவள் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
“அப்புறம் பாண்டியன் இப்போ எப்படி இருக்கீங்க? வலி எல்லாம் உங்களுக்கு குறைய மாத்திரை கொடுத்திருக்கு.. பரவாயில்லையா?” என்று ஒவ்வொரு காயத்தையும் பரிசோதித்த மருத்துவர் வினவ…
பாண்டியன் கண்களோ அன்னக்கிளியை விட்டு கிஞ்சித்தும் நகரவே இல்லை. அவளை பார்த்துக்கொண்டே மெல்ல தன் வாயை திறந்து “இப்போ பரவால்ல டாக்டர் வலி மட்டுபட்டு இருக்கு” என்று கூறினான்.
அதைக் கேட்டு அதிர்ந்தாள் அன்னக்கிளி. அவனுக்கு கழுத்தில் ஆழமான வெட்டு, பேச்சு வராது என்று சொன்னார். இவன் எப்படி இப்படி பேசுகிறான் என்று அதிர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், தன்னவன் பேசிவிட்டான் என்ற மகிழ்ச்சி ஒருபுறமாக.. வெம்மையும் குளிர்ச்சியுமாக ஒன்றாக அனுபவிக்கும் அந்த தருணத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்.
அதற்குப்பின் மருத்துவர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் அன்னக்கிளியே பார்த்துக்கொண்டே பதில் கூறிக் கொண்டிருந்தான் பாண்டியன்.
“பாண்டியன், இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க ஹாஸ்பிடல்ல அட்மிஷனில் இருக்கணும். காயங்கள் ஆற வரைக்கும் நீங்க இருந்தா அதுக்கு தேவையான ஆன்டிபயாடிக் மருந்து ஊசிகள் இங்க போடுவாங்க.. இட்ஸ் மஸ்ட்.. ஒரு வாரம் கழிச்சு நீங்க வீட்டுக்கு போலாம். அதுக்கப்புறம் தையல் பிரிக்கும் போது நீங்க வந்தா போதும். உடம்ப பாத்துக்கோங்க.. எது வேணும்னாலும் இல்ல வலிச்சாலும் உடனே சிஸ்டர் கிட்ட இன்பார்ம் பண்ணுங்க” என்று விட்டு அவர் நகர்ந்து சென்றார்.
அவர் சென்றதும் சிறுது நேரம் பாண்டியனை இவள் முறைத்துக் கொண்டு நிற்க.. அவன் என்ன என்று புரியாமல் விழிக்க.. தன் கண்களில் கனலை கக்கியவாறு டாக்டர் பின்னே விரைந்து விட்டாள் அன்னக்கிளி…
“இவ எதுக்கு இப்போ நம்மல முறைச்சிட்டு போறா? நாம என்ன பண்ணோம்? என்று புரியாமல் குழம்பித் தவித்தான் பாண்டியன்..
டாக்டர் பின்னோடு வந்தவள் அவரை நிறுத்தி “டாக்டர் இவருக்கு கழுத்துல ஆழ வெட்டு பேச முடியாதுன்னு சொன்னீங்க.. ஆனா அவரு நல்லா பேசுறாரு” என்று கேட்க… அதுவரை தன் மனதில் இருந்த அவனால் பேச முடியவில்லை என்ற அழுத்தம் மீண்டும் பின்னாடி எதுவும் அவனுக்கு பிரச்சினை வந்து விடக் கூடாது என்ற பரிதவிப்பும் சேர்ந்து அதற்கான விளக்கத்தை அவரிடம் கேட்டாள் அன்னக்கிளி… 
“வாட் இஸ் அன்னம்? நான் எப்போ அவருக்கு  பேச்சு வராதுன்னு  சொன்னேன்? நீங்க  எப்போதும் கான்சியஸா தானே இருப்பீங்க.. இன்னிக்கு என்ன ஆச்சு உங்களுக்கு?”
இப்பொழுது குழம்பி தவித்து முழிப்பது அன்னக்கிளி முறை ஆயிற்று..
“என்ன டாக்டர் நேத்தி நீங்கதான் சொன்னீங்க? நான் கேட்டேனே!” என்று அவள் இழுக்க…
“ஓ மைகாட் அன்னம்.. நான் சொன்னது இவருக்கு இல்லை.. இவரோடு அடிப்பட்டு இன்னொருத்தர் வந்திருந்தாரே.. அவருக்கு.. வயசு கூட கிட்டத்தட்ட ஒரு ஐம்பதுக்கு மேலிருக்கும். அவருக்கு தான் சொன்னேன் நான்” விளக்கம் கொடுத்தார்.
“பீ கான்சியஸ் அன்னம்” என்று அவளுக்கு கொட்டு வைக்கவும் அவர் தவறவில்லை…
இப்போது தான் அவளுக்கு பிரஸிடெண்டு ஞாபகமே வந்தது. “ஆமாமில்ல.. நேத்து அவருக்கும் அடிப்பட்டு கொண்டு வந்தாங்கல்ல…  நாம சமரனை நினைச்சுகிட்டே அவரை பத்தி எதுவுமே கேட்கலையே” என்று அப்போதுதான் அவளுக்கு உரைக்க.. தன் தலையில் தானே குட்டிக்கொண்டு நாக்கை மெல்ல கடித்து கொண்டாள்.
அதற்குப்பின் விரைந்து பிரசிடெண்ட் அனுமதிக்கபட்டிருக்கும் பகுதிக்கு சென்று பார்க்க, அவரது குடும்பம் வெளியில் இருக்க இன்னும் ஐசியூவில் தான் இருந்தார் பிரசிடெண்ட்.
அவர்களிடம் மெல்ல தலையை ஆட்டியவாறு உள்ளே சென்று, அங்கே இருந்த மற்றொரு செவிலியரிடம் அவரின் உடல்நிலையை பற்றி தெரிந்து கொண்டவள், வெளியில் வந்து அவரின் மனைவி மற்றும் அவரின் பதின்ம வயது மகனிடம் பேசினாள்.
“அக்கா கவலைப்படாதீங்க.. நான் பிரஸிடெண்ட் ரிப்போர்ட் பார்த்திட்டேன். ஒன்னும் இல்ல.. சீக்கிரமே எல்லாம் சரியாயிடும்‌. கொஞ்சம் ரத்த போக்கு அதிக இருக்கிறதாலதான் இன்னும் மயக்கத்திலே இருக்காங்க.. கூடிய சீக்கிரம் வார்ட்டுக்கு மாத்திடுவாங்க..  இங்கதான் இருந்தேன் காலைல இருந்து. டியூட்டி முடிஞ்சு வீட்டுக்கு போறேன். இன்னிக்கு நைட் டுயூட்டி நான் இங்கதான். நான் பார்த்துக்குறேன். நீங்க கவலை படாதீங்க..” என்று அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றாள்.
காலை இவள் தன் பணி முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் அவளிடம் விசாரித்தார் ராசாத்தி “என் பேரனுகாகும்.. அந்த ப்ரெசிடெண்ட்க்கும் இப்போ எப்படி இருக்கு உடம்பு? ஒன்னும் பிரச்சினை இல்லைல”  என்று உண்மையான அக்கறையுடன் கேட்க..
“பிரசிடெண்ட்க்குதான் கொஞ்சம் மோசமான வெட்டு அம்மாச்சி.. நிறைய ரத்தம் போயிருக்கு.. கழுத்தில் தவிர வேறு பல இடங்களிலும் நல்லா வெட்டு. பேச முடியுமா என்கிறது அவரு கண்ணு முழிச்சா தான் சொல்ல முடியும்னு டாக்டர் சொல்றாங்க”
“அப்போ என் பேராண்டிக்கு.. அவன் நல்லா இருக்கான் தானே?” என்று கண்களில் பயத்தை தேக்கி அவர் கேட்க..
“இருக்காரு.. இருக்காரு.. நல்லா இருக்காரு. அவருக்கும் நாலஞ்சு இடத்துல வெட்டு. தையல் போட்டு இருக்காங்க அவரு இளவட்டம்.. அதனால இப்ப கொஞ்சம் பரவாயில்லை..” என்று அசட்டையாக கூறியவாறு உள்ளே சென்றாள்.
அவள் அறியாத ஒன்று இதுவரை பாண்டியனை அவன் என்று ஒருமையில் அழைத்தவள் இன்றுதான் மரியாதை விகுதியாக  அவர் இவர் என்று அழைத்து இருந்தாள்..
ஏற்கனவே அவர்களைப் பற்றி கலங்கி இருந்ததால் இதை ராசாத்தியும் கவனிக்கவில்லை. அவன் மீது கொண்ட காதலால் தான் மரியாதை விகுதிக்கு மாற்றி அழைத்தியிருக்கிறோம் என்று அவளும் உணரவில்லை…
இனியேனும் மனம் திறந்து தன் காதலை பாண்டியனிடம் பகிர்வாளா இந்த பைங்கிளி ???
வருவோம்ல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *