16 -இதயம் இதயம் இடறியதே

This entry is part 23 of 25 in the series 16 -இதயம் இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

             38 : இதயம்❤️
புத்தம் புதிய  தாலி தன் கழுத்தில் தொங்க இதோ அவர்கள் இருவரும் விமானத்தில். அவன் கைக்குள் தன் கையை இணைத்து அவன்  தோளில் சாய்ந்து கொண்டாள் அவன் ரதி.
லைட் பேபி பிங்க் அனார்கலி உடையில் இருந்தால்  பாரதி
லைட்  கிரீம்  ஃபுல் ஹேண்ட் செக்குடு ஷர்ட்  வித் பிளாக் ஜீனில் இருந்தான் முகிலன்.
அவனும் தன் காதல் மனைவியின் இதழை கேப் கிடைக்கும்போதெல்லாம் ஒற்றி ஒற்றி எடுத்தான்.
அவள் முறைக்க முறைக்க இடுப்பை பிடித்துக் கிள்ளுவதும், அவள் கன்னத்தைப் பிடித்துக் கடிப்பதுமாய்… சில்மிஷம் பண்ணிக் கொண்டே வந்தான்.
மாமா என்ன இது என்று அவள் சிணுங்க, நீ எனக்கு பண்ணுடி நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன் என்று காதல் வசனம்  அவளிடம்  பேச, அவன் விமானத்திலேயே அவளுக்கு காதல் பாடம் எடுத்துக் கொண்டிருந்தான். 
சரி சரி முறைக்காதடி  என்று அவளின் வழுவழுப்பான இடுப்பில் கை பதித்து தன் விரலால் அங்கே கோலம் போட்டபடியே இருக்க இவளோ  தன்  சீட்டில் நெளிந்தபடியே வந்து கொண்டிருந்தாள். 
ஒவ்வொரு அணுவிலும் அவன் அவன் பெயரை எழுதிக் கொண்டிருந்தான் அந்தக் காதல் இளவரசன் மெல்ல மெல்ல ஊசிபோல் அவன் காதல் அவளை குத்த குத்த அவன்  சேஷ்டைகள் நின்றபாடில்லை.
ஒருவழியாக விமானம் தரையிறங்க…. அவளோ அவனை ஒட்டிக்கொண்டு நடந்தாள் அவனோ பொறுப்புள்ள கணவனாய் லக்கேஜ்ஜை  எல்லாம் எடுத்துக்கொண்டு அவர்களின் வரவுக்காக காத்து இருந்தவரிடம் ஒப்படைத்துவிட்டு 
தன் காதல் மனைவியை கூட்டிக் கொண்டு காரில் பறந்தான் 
தாங்கள் தங்கவிருந்த நட்சத்திர விடுதிக்கு.
ஹனிமூன் தம்பதியர்களின் சொர்க்கம் என்று சொல்லப்படும் சுவிட்சர்லாந்தில் இருந்தார்கள் முகிலனும்  பாரதியும்.
இருவரும் பயண களைப்பு தீர குளியலறை சென்று வெந்நீர் குளியல் போட்டு வந்தார்கள்.
எல்லோ டாப்பும் பிளாக் ஸ்கர்ட்டும்  உடுத்திக் கொண்டு தன்னுடைய உடை இருக்கும் பெட்டியை திறந்தவளுக்கு   ஒரே அதிர்ச்சி. 
குளித்து விட்டு ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு ஈரத்தலையோடு அவள் முன்னே அவன் வந்து  நிற்க….
அவள்  அருகில் வந்து  தன்  தலையில் இருந்த நீரை அவள் முகத்தில் பட்டு தெறிக்கும்படி செய்தான். 
அப்படியே  அவன் அவள்  இடுப்பில் தன் ஈரக்  கை கொடுத்து அதன் வழவழப்பில் லயித்து… அங்கே அவன்  தன்  விரல் சேஷ்டையை  செய்தபடி இருக்க…. வேண்டாம் விடு  மாமா? 
நீ வேண்டாம் வேண்டாம் சொன்னா எனக்கு வேணும் வேணும் போல இருக்குடி…. என அவன்  மூச்சுமுட்ட முட்ட அவளை அணைத்தபடி… அவள் கழுத்து வளையில் தன் முகம் புதைத்து அவள் செவிமடலில்  உரசி… நீர் திவலைகளுடன்  காட்சியளித்த அவள்  கழுத்துப்பகுதியில் 
எல்லாம் தன் குட்டி குட்டி முத்தத்தை மீசை முடி குத்த குத்த முரட்டுத்தனமாய் பதித்த படியே இருக்க…
அவனின் இத்தகைய செயலால் அவளின்  உயிர் கால் ரோமங்கள் எல்லாம் உயிர் பெற்று எழ…
விமானத்தில் காதல் பாடத்தை பாதியிலேயே விட்டுட்டேன் டி   அதை தொடரலாமா  என்றான் அவள் அணைப்பில் இன்னும் கிறங்கிப் போனவனாய் 
இந்த கன்னம்  நான்  அருகில் வந்தாவே  ஆப்பிள் மாதிரி சிவப்பா ஆயிடுதே அதை நான்  கடிச்சி  சாப்பிட வா என்றபடி கடித்தான் கிறக்கமாய்.
மார்கழி மாதத்து பனி மாதிரி தேனூறும் உன்  இதழ்களை சுவைக்க வா?… என்று அதன் தேன்  சுவையை சுவைத்தபடி இருந்தான்.
ஏதேது ரொம்ப  ரசனைக்காரனா கவிதை  எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்ட?… 
ம்ம்ம்ம்… விடு  மாமா… ம்ம்ம் ஹும்…  உன்னை அழுக்காக் காமா விடமாட்டேன் என்றான் காதல் செய்யும் ஆர்வத்தில்…
அவள் நெளிய நெளிய அவளை  ரசித்தபடியே அவளை அள்ளிப் பருகிக் கொண்டிருந்தான் முகிலன்.
கட்டில் அறையில் ஒரு முத்தச்  சண்டை  நடந்துகொண்டிருந்தது.
கட்டிலில் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டு
ஏன்டா இதுதான் நீ டிரஸ் எடுத்து வச்ச லட்சணமா….?? 
ஏன் பேபி??… ம்ம்ம்ம்  எல்லாமே நெட்  கிலோத்தா  நெட்டடா இருக்கு…மினி  ஸ்கர்ட், மினி ஷார்ட்ஸ்… இதெல்லாம் உன் வேலை தானே..
அவன் இதைக் கேட்டு சிரிக்க…
இதை போட்டுக்கிட்டு நான் எப்படி வெளியே போவது என்றால்.
வெளியில போறதுக்கு வேறு ஒரு பெட்டியில் வச்சி  இருக்கேன்டி  இதையெல்லாம் மாமா கூட நீ இருக்கும்போது போட்டுக்க.. 
உன்னை என்று அவள் அவனை அடிக்க. அவனோ  அவளிடம் இருந்து தப்பிப்பது போல அவளுக்கு ஆட்டம் காண்பிக்க…. 
அவனை பிடிக்க முடியாமல் ஓடி ஓடி  அவள் களைத்து  சோர்ந்து போய் நிற்க அப்படியே வந்து அவளை அவள்  இடுப்பில் கை கொடுத்து தன் மார்போடுகட்டி  க்கொண்டான்.
அப்பரெண்ட்லிசாவே  இருக்கியே டி… நீ புருவம் உயர்த்தி  ஒரே ஒரு கண்ணடிச்சா மாமா சரண்டர் ஆகி இருப்பேன் இல்ல.
ஏய் பொண்டாட்டி…. என அவளை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டு கட்டிலில்  கிடத்தினான். 
நேத்து கொஞ்சம் தாண்டி மேக்ஸ் கிளாஸ் எடுத்தேன் மீதியை இன்னைக்கு  கண்டினியூ பண்ணலாம் என்று சொல்ல.
அய்யாசாமி தெரியாம சொல்லிட்டேன், எனக்கு  கொஞ்சநஞ்சம் தெரியற  மேக்சும் மறந்து போயிடும் போல…என தன்  இருகரம் குவித்து அவனிடம் கெஞ்ச
புத்தம் புதிய வெண்பட்டு ரோஜா போல் அவள் முகம் ஜொலிக்க ஜொலிக்க அதை கண்டவன்  அவள்  முகம் நோக்கி  குனிய.
அப்படியே அவளைக் கட்டிக் கொண்டான்.
மாமா என்ன இது காலையிலேயே என்றால்.. சரி வேண்டாமா என்று அவன் அவளை விட்டு விலகிப் போக அவளோ அவனை அப்படியே அணைத்துக் கொண்டாள்.
அவனைத் தன் மார்பில் இட்டுக்கொண்டாள் பெண். அவனும் அவளுமாக அங்கே ஒரு காதல் கச்சேரி காலையிலேயே அரங்கேறியது..
மாலை வரை இருவரும் அந்த அசதியில்  உறங்கிக் கொண்டிருக்க.
மெல்ல கண்விழித்தவன்…அவன் மார்பை இறுக  கட்டிக்கொண்டு  ஒரு குழந்தையைப் போல் அவள் உறங்க கண்டு.. அவளையே ஆசையாய் பார்த்து இருந்தான் சிறிது நேரம். அவள் நெற்றியில் தன்  இதழை ஒற்றி எடுத்தான்.
மெல்ல  குளியலறை நுழைந்து குளித்துவிட்டு  வயிற்றுப்பசியை போக்கிக் கொள்ள உணவை ஆர்டர் செய்தான்
மதியம் எதுவும் உண்ணாமல் படுத்திருக்கும் அவளை எழுப்பி தானே தன் கையால் அவளுக்கு ஊட்டி விட்டான்.
ரதிமா… அம்முசெல்லம்  போடா போய் குளிச்சிட்டு வாடா வெளியே போலாம்.அவள் சோம்பல் முறித்தவலாய்  குளியலறை சென்று குளித்துவிட்டு வந்தாள். 
   ஆல்  டைம்  அவளுக்கு 
ஃபேவரைட் சுடிதார் தான். அவனுக்கு சேலை பிடிக்கும் என்பதால்… ஸ்கை ப்ளூ வித்  க்ரீன்   கலந்த அந்த பருத்தி காட்டன் புடவையை உடுத்திக் கொண்டாள்.
அவர்கள் வந்து இருந்தது  சுவிட்சர்லாந்தில் இயற்கை எழில் சூழ்ந்த பனி பொழியும் அந்த அழகிய ஏரிக்கு. 
படகு வழியே  சவாரி செய்தார்கள்.. தன் தோள்களில் சாய்ந்துகொண்டு தன் கையை கட்டிக்கொண்டு குழந்தை போல் தன்னை ஒட்டிக்கொண்டு இருக்கும் அவளை காதல் மீதூர பார்த்தான்.
அந்த ஏரியில் பயணித்து அவர்கள் சென்றது ஒரு குட்டி தீவு போன்ற ஒரு இடம். அங்கே நிலா வெளிச்சத்தில் இரவு விருந்தை ஏற்பாட்டை செய்திருந்தான். 
அவனை அப்படியே கட்டிக்கொண்டு அவன் இதழ்களில் முத்தம் வைத்துக் கொண்டே இருந்தால் அவள் அப்போது…. “ஏன்டா  கண்ணம்மா என்ன ஆச்சு ஏன் கண்கலங்கறீங்க  என்றான்.
பாரதியும் மூக்கை உறிஞ்சியபடி   அவன் தோளை  கட்டிக்கொண்டு அவனுக்கு முத்தம் வைத்தபடியே இருக்க…
இப்ப சொல்ல போறியா இல்லையா ரதி  என்றான்  அவள் கலங்குவது பிடிக்காமல்.
எனக்குனு யாருமே இல்லனு நான்  நெனச்சுட்டு இருந்தேன்  இந்த உலகத்துல. எனக்கு  எல்லாமுமாய் நீ இருக்கியேடா.. எனக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யற எனக்கு பிடிக்குமானு கேட்டு கேட்டு செய்யற …. உன் அன்புக்கு முன்னாடி நான்.
அப்படியே அந்த ஸ்கை ப்ளூ  நிற சேலையில்  எடுப்பாய்  அழகாய் தெரிந்த அந்த மஞ்சள் வண்ண இடுப்புப் பகுதியை தன் கைகொண்டு 
அணைத்துக்கொண்டு அதுக் காக… கண்கலங்குவியா…?? 
முகிலன் உடைய பொண்டாட்டி எப்பவும் கண்கலங்க கூடாது புரிஞ்சுதா? 
அப்படியே அவன் முன் அவள் தன்  கை இரண்டையும் நீட்ட அவளை அப்படியே தன் முரட்டு கைகளில் ஏந்திக் கொண்டான் பூவைப்போல்..
குட்டித் தீவின் மணற்பரப்பில் அவள் மடியில் படுத்துக்கொண்டு…அவள்  கழுத்தைக் கட்டிக்கொண்டு நீ எனக்கே எனக்காக பிறந்த வடி….ரதிமா. 
உன் காதல் கிடைக்காதோனு  எப்படி எல்லாம் தவிச்சேன் தெரியுமா ரதி  அந்த நாட்கள் எல்லாம் ரொம்ப வலி மிகுந்த நாட்கள்…
அப்போது அவன் கண்கலங்க அவன் வலியை எல்லாம் முத்தம் என்ற மருந்தால் ஒத்தி எடுத்தாள்.
இரவு இவ்வளவு அழகாக இருக்கும் என்று அவன் அருகில் இருக்கும் போது அவள் கண்டு கொண்டாள்.
மறக்கவொண்ணாத இரவாய் மனதில் என்றும் ரீங்காரமிடும் ஏகாந்த இரவாய்… மண்ணில் அவளுக்கான சொர்க்கத்தை அவள் கணவன் கொண்டு வந்து நிறுத்தினான்.
அவன்  அன்பில் கரைந்து குழை ந்து தெளிந்து எழுந்தாள்  ரதி. 
அவனோடான அவளின் திருமண பந்தம்…. அவளுக்கு  அவன் எத்தகையவன் என்பதை புரிய வைத்திருந்தது இந்த ஒரு சில நாட்களிலேயே
அவள்  கண்ணசைவில் சிறு  சுணக்கம் கண்டால் கூட அவன் துடித்துப் போனான்.
இதோ அவளின் மென்பட்டு பாதங்களை அவன் தரையில் நடக்க விடவே இல்லை…
காதல் இதுதானா என்று  கற்றுத் தேர்ந்து அந்த முரடனிடம் அவள் தோற்றுக் கொண்டே வந்தாள். 
அவர்கள் இப்போது அவர்களின்  சொர்க்கபுரியான  அறையில் இருந்தார்கள்.
முதலிரவு அறையில் மல்லிகைப் பூக்களால் அலங்காரம் என்றால் இங்கே முழுக்க முழுக்க பன்னீர் ரோஜாக்களாலும் சிவப்பு வண்ண ரோஜாக்களாலும் அறை  முழுவதும்  அலங்கரிக்கப் பட்டிருந்தன.
வாசனை மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு இருந்தன.
காதலை அடையாளப்படுத்தும் குட்டி குட்டி ஹார்டின் பலூன்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.
அறைக்கு வந்தவன் அப்படியே அவளைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு கட்டிலில் கிடத்தினான்.
முழுவதும் ரோஜா வண்ண பூக்களால் நிரம்பி வழிந்த கட்டிலில் அவனும் அவளுமாய்.. 
அவனை  அப்படியே இறுக்கி அணைத்துக் கொண்டாள்
அவள்  அணைப்பு  அவனுக்குள் உயிர்வரை இறங்க…. மெல்ல  அவள் முகத்தை நிமிர்த்தினான்.
அந்த முகத்தில்  வெட்கமும் மகிழ்ச்சியையும் தவிர வேறொன்றுமில்லை.
ஆர் யூ பில் ஹேப்பி வித் மி…..? அவள் தன் சேலைக்கு விடைகொடுத்து அவன்  சட்டைக்குள் புகுந்து கொண்டு அவனை இறுக்கி அணைத்தாள்..
அவள் அணைப்பு தந்த சுகம்  வார்த்தைகளில் வடிக்க முடியாத பேரின்பம்
அவளோ  வார்த்தையால் அவனுக்கு பதில் சொல்லாமல்  அவள் முகம் கொண்டு அவன் கன்னத்தை உரசி….அவன்  இதழை  தன் இதழால்  மூட…அவனோ அந்த தேன்  முத்தத்தில் மூழ்கிக் கொண்டே இருந்தான். அவன் விரல்கள் அவள் மேனி எங்கும் ஊர்வலம் நடத்த.
ரதியின் உடலில் இருந்து தோன்றிய பிரத்தியேக வாசனை அவனை வா வா என்று இழுக்க வெண்ணெய்யைக் குழைத்து செய்த அவள் இடுப்பில் தன் கை வைத்து அழுத்தி அவள்  முகத்தில் தன் முரட்டு ஊர்வலத்தை நடத்தினான். 
மோகம் என்னும் தீ இருவரையும் ஆட்கொள்ள இலக்கண இலக்கியங்கள் அங்கே மறந்துபோய்…. மோகமும் காதலும் ஆட்சி செய்தன.
அவன் காதல் கரை புரண்டு ஓட இருவரும் ஒருவராகி   ஆசைகொண்டு… அவனுக்காக மட்டுமே அவள் பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷங்கள் எல்லாம் அவனுக்காக மட்டுமே 
விருந்து வைக்கப்பட்டன.
மெல்ல மெல்ல அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார்கள். அவன் முரட்டுத்தனமும் அவள் மென்மையும் தாம்பத்திய பாடத்தின் முகவரி படித்து வெட்கம் விலக்கி ஆசைகொண்டு அதிலும் கற்றுத் தேர்ந்து வெற்றி கொடி நாட்டினார்கள். 
ஐந்து வருடங்கள் கடந்து. அன்றொருநாள்
அப்பா இங்க சீக்கிரம் வாங்கப்பா…. இந்த மம்மி ரொம்ப மோசம்… எப்ப பாரு உன் சட்டையை தான் போட்டுக்கறா?  
தன்னுடைய ஆசை மகள் அமிர்தவர்ஷினி அமிர்தா முகிலனை  கட்டிக்கொண்டாள்.
ரதிக்கு முகிலன் மேல் கொள்ளைப் பிரியம் அல்லவா எப்போதும் அவன் சட்டையைப் போட்டுக் கொண்டுதான் இரவு தூங்குவாள்.
இந்த சின்னப் வாண்டு விவரம் தெரியாத வரை ஒன்றும் சொல்லவில்லை.
பாரதியை விட முகிலன் மீது அதிக அன்பு கொண்டிருந்தால்  அமிர்தா. அமிர்தத்தைப் போன்று  மழை பொழியக் கூடியவள்  என்று ஆசை ஆசையாய்  முகிலன் வைத்த பெயர்.
தன் அப்பாவின் சட்டையை  தன் 
அம்மா  போட்டு இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை..
பட்டு தங்கம் அம்மா  டயர்டா தூங்கிட்டு இருக்கறா இல்ல சோ  அவளை  டிஸ்டர்ப் பண்ண கூடாது ஓகே வா.
மகளின் சிணுங்கள்  சத்தம்கேட்டு மெல்ல கண் விழித்தாள் பாரதி. கண்விழித்தபோது குட்மார்னிங் பட்டு செல்லம் என்றாள்.
  நீ  லேசி மம்மி நானும் டாடியும்  எவ்வளவு சீக்கிரமா  எழுந்திட்டோம்  தெரியுமா? என்னை  அம்முமா  குளிக்க வச்சு டிரஸெல்லாம்   போட்டு விட்டுட்டாங்க தெரியுமா?? 
மணி காலை   9  ஆகுது  நீ இப்பதான் எழுந்து இருக்கே? 
எழுந்தவள்  அப்படியே முகிலனின்  மடியில் தலை வைத்து மீண்டும் படுத்துக் கொள்ள.
எத்தன வாட்டி சொல்றேன் மம்மி  உனக்கு நீ  டாடி  மடியில் தலை வைச்சி படுக்காதேனு  நீ  கேட்கவே மாட்டேங்குற மம்மி…? 
ஆரம்பிச்சுட்டாயா  ஆரம்பிச்சிட் டா   என்று பாரதி,  என் புருஷன் மடியில் படுக்க நான் உன்கிட்ட அனுமதி கேட்கணுமா என்று மீண்டும் அவன்  மடியில்  மேலும் 
ஒட்டிக்கொண்டு படுத்துக் கொள்ள.
டாடி  டாடி என்று அந்த பிஞ்சு குழந்தை முகிலன்  கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் வைக்க. அம்மு என்று அவன்  தன் கண்களால்  பாரதியிடம் இறைஞ்ச  
இரு  இரு….. உன்னை  எல்லாத்துக்கும் சேர்த்து நைட் பட்டினி போடறேன் என்றால்.
ரதிமா  நீ போய் முதல குளிச்சிட்டு வாடி நேரம் ஆச்சு என்றான்.. 
தன் கைகளை நீட்டி நெட்டு  முறித்து  மெல்ல  எழுந்து குளியலறை சென்று குளித்துவிட்டு வந்தாள். 
மஞ்சளும்  மெரூனும்  கலந்த அந்தக் பருத்திப் புடவையை அணிந்திருந்தாள். தலையை  தளர்வாய் பின்னி
போட்டிருந்தாள்.
இப்போது மீண்டும் அவள் தாய்மை அடைந்திருந்ததால் பாத்துடி என்றான்  அவள் அடி எடுத்து வைக்கும் போது பயந்தவனாய் பாசத்தோடு முகிலன்.
குழந்தை சுமப்பதால் அவள் முகமும் கன்னமும்…. மேலும் செழுமை பூசி மஞ்சள் பூசி இன்னும் அழகாய் ஜொலித்தாள்..தன்  மேலிட்ட வயிற்றை  சேலையால் மறைத்து….
அவள் நடந்து வரும்போது முகிலன் கண்களாலேயே அவளை  ஆசையாய் பார்த்தான்
அவன் பார்வை உரசினாலேயே  அவளுக்குள்  ஆயிரம் மின்மினிப் பூச்சிகள் பறக்கும்…. இப்போது அவன் பார்வை அவள் இதழில் படிந்தபடியே இருக்க மெல்ல அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள்.
தட்டில் இட்லி மட்டன் குழம்பு ஊற்றி… சாப்பிடலாம்  வாடி என்று அவளுக்கு ஊட்டி விட…
என்ன டாடி நீ எப்ப பாத்தாலும் மம்மிக்கு ஊட்டிவிடற இவ்வளவு பெரிய மனுஷியா வளர்ந்துட்டாங்க இல்ல அவங்களே  சாப்பிடு வாங்க வாங்க என்கூட விளையாட என்று அமர்தா  அழைக்க.
குட்டிம்மா அம்மா  வயிற்றில் குட்டி பாப்பா இருக்குல்ல… பாப்பாவுக்கு பசிக்கும் இல்லடா  செல்லம் அம்மா  சரியாவே சாப்பிட மாட்டா பேட் கேர்ள் அப்பா அவளை மிரட்டி உருட்டி சாப்பிட வைக்கணும் இல்ல தங்கம்…
பாப்பா இல்லப்பா தம்பி…. சரி சரி தம்பி தான்… அவள் முகிலனின் மடியில் உட்கார்ந்து கொண்டு அவன்ஒரு  கையை தன் கையில் பிணைத்துக்கொண்டு, தன் மகள் பார்க்காதபோது முகிலன்  கன்னத்தை கடித்து வைத்தாள்.
ஏய்  நீ  என்  டாடி   மடியில் உட்கார கூடாது எழுந்திரு நான்தான் உட்காரனும் நான் மட்டும் தான்
உட்காரனும்….
அம்மாவுக்கு சாப்பாடு ஓட்டிவிட்டுட்டு  பாப்பாவை டாடி  என்  மடியில் உட்கார வைச்சிக்கறேன் ஓகேவா….
அதெல்லாம் இல்லை இப்பவே  நான் உட்காரனும் 
பாரதியை இப்படி தாஜா பண்ணி சாப்பிட வைத்தால் தான் உண்டு இல்லை என்றால் சாப்பிடுவதற்கு அவ்வளவு அடம் பண்ணுவாள். 
அமிர்தா குட்டி  தம்பிக்கு இன்னைக்கு முத்தம் வைக்கலையே சீக்கிரம் முத்தம் வைங்க பார்ப்போம். அம்மா சாப்பிட்டது பாப்பாவுக்கு   வந்துருச்சானு  பாருங்க? 
அவள் பாரதியின் வயிற்றில் குட்டி குட்டி முத்தங்களாக வைக்க அப்படியே உடல் சிலிர்த்துப் போனாள் பாரதி.
அப்பா குட்டி தம்பி அசையறான்ப்பா அசையறான்ப் பா   என்று அவள் துள்ளி துள்ளி குதிக்க…..
அமிர்தா குட்டி கண்ண மூடுங்களேன்  அவளுக்கு அப்பா ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கறேன். என அவன் பாரதியின் கன்னத்தை கடித்து வைத்தான் ஆசையாய்.
கணவனின் ஆசை அன்பு தெரிந்து அவன் இடுப்பை கட்டிக் கொண்டு அவன்  தோளில் சாய்ந்து கொண்டாள். அந்த இட்லி சாப்பிட வைப்பதற்குள் அவனுக்கு போதும் போதும் என்றானது 
கொஞ்ச நேரம் அமிர்தாவை பிரிந்து இருக்க முடியாமல்  அவர்களின்  அம்முமா பாட்டி  ஜெகதாம்பாள்  உள்ளே வர அப்போது பார்த்து பாரதி முகிலன் இதழில்  லிப் லாக் கிஸ் கொடுத்துக்கொண்டிருந்தாள்.  
ஹேய்  அம்மும்மா என்று  ஜெகதாம்பாளை பார்த்ததும் ஓடிச்சென்று அவர்களை கட்டிக்கொண்டால் அமிர்தா. 
ஏண்டி பாரதி  இன்னமும் நீ திருந்தவே இல்லையா காலையிலேயே உங்க காதல் ரொமான்சை ஆரம்பிச்சிட்டீங்களா?? 
ஏய் பாட்டி உன்னை  என்று
முகிலன் சண்டைக்கு வர
ஏண்டி பாரதி என் பேரனை   நீ ரொம்ப தாணடி  படுத்தி எடுக்கறே. அங்கங்க புருஷன் சாப்பிட்டால்தான் பொண்டாட்டி சாப்பிடுவா இங்கே எல்லாம் அப்படியே உல்டாவா இருக்கு பாரு உனக்கு ஊட்டி முடிச்சிட்டு…. ஆற அமர.. என் பேரன் சாப்பிடுறான்.. 
இப்படி சொன்ன  தன் பாட்டியை முகிலன் முறைக்க….
அடியே  பேராண்டி உன் பொஞ்சாதியை நான்   ஒன்னுமே  சொல்லலைலே …. உங்களுக்கு 60 வயசு ஆனாலும் நான் கதவை தட்டிட்டு தான் உள்ளே  வரணும் போல, என்று தன் பேரனை  கிண்டல் செய்துவிட்டு பாரதியை பார்த்து தன் கழுத்தை  சுளுக்கி கொண்டு  ஜெகதாம்பாள் செல்ல…
ஏன் மாமா இப்படி பண்றீங்க பாருங்க இப்போ பாட்டி…. என்று அவள்  குழந்தை போல் முகத்தை வைத்துக்கொள்ள. 
என்ன பண்னேன் என்று  மீண்டும் அவன்  அவள் இதழை சிறைப்பிடித்தான். 
ஐயோ என் குட்டி தங்கத்துக்கு முத்தம் வைக்க மறந்துட்டேன் என்று அவள் சேலை விலக்கி  தன் மழலைச் செல்வங்களுக்கு முத்தம் வைத்தபடியே இருக்க இங்கே பாரதியோ தன் கணவனின் அன்பில் நெகிழ்ந்தாள். 
உங்களை  எத்தனவாட்டி சொல்லிருக்கேன் நேரத்தோடு சாப்பிடுங்கனு கேக்கவே  மாட்ட றீங்க  மாமா  நான் உங்க கூட டூ மாமா?? 
நீயும் குழந்தையும் சாப்பிடாமல் இருக்கும்போது என்னால் மட்டும் எப்படி சாப்பிட முடியும் புரிஞ்சுக்கோ டி…..ரதி . 
சரி மாமா நீ சாப்பாடு எடுத்துகி ட்டு வா நான் உனக்கு ஊட்டி விடறேன் என்றால்.  நீ உன்  உடம்பை  ஸ்டைன் பண்ணாத பாரதி நான் சாப்பிட்டு வரேன் என்றான்.
அதுவும்? நீ இப்போ  சுமக்கிறது ஒத்த உயிர் இல்ல ரெண்டு உயிர் புரிஞ்சுதா?? 
சாப்பாடு ஊட்டி முடித்ததும் கடைசியாக அவர்கள் இருவருக்குள்ளும் இதழ் முத்தம் தான்…அது  கொஞ்சம் நேரம் நீண்டு கொண்டே செல்லும் இங்கிலீஷ் முத்தம் போல்..
அமிர்தாவை எப்போதும் தூங்க வைப்பது முகிலன் வேலைதான். அவளைத் தன் மார்பில் போட்டுக் கொண்டு குட்டி குட்டி  கதை சொல்லித் தூங்க வைப்பான்  ஒவ்வொருநாளும் முகிலன்.
முன்பெல்லாம் அவர்களுடன் அமிர்தா படுப்பாள்.ஆனால் இப்போது பாரதி இரண்டு குழந்தைகளை சுமப்பதால். பெரும்பாலும் அவர்களின் அம்மு ம்மா பாட்டியுடன் தான் அமிர்தா உறங்குவாள். 
முகிலன் அவளை கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனும் அவளும் அந்த கட்டிலில் இருக்க அவன் தன் குழந்தைக்கு ஆசை ஆசையாக மென்  முத்தங்களை வைத்துக் கொண்டே வரவர…. மாமா கிட்ட வா மாமா என்றால்.
நீ  என்னை இப்படி எல்லாம்  தாங்கு தாங்கு என தாங்கும்போது உன் மேல எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு  மாமா… இப்போ குழந்தை உண்டானதில் இருந்து உன்னை நான் ரொம்ப பட்டினி போடறேனா…? 
அவள்  குழந்தை சுமப்பதால் அவளுக்கு வலிக்காத வண்ணம் அவளை மென்மையை கட்டிக்கொண்டு.. அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.
எனக்கு நீயும் நம்ம குழந்தையும் தான் முக்கியம் ரதி  வேறு எதுவும் இல்லை என்றான் காதலாய்.
தெரியும் மாமா என்று அவன் முகத்தோடு தன் முகத்தை உரசி அவன் கன்னத்தை கடித்து அவனை அப்படியே கட்டிக்கொண்டாள். 
அவனுக்கு இந்த சின்ன சின்ன சந்தோசங்களை கொடுத்துக் கொண்டுதான் இருந்தாள் அவன்  ரதி. 
என் ஆசையை விட உன் உடம்பு முக்கியம்டி   எனக்கு என்றான்.
அவன் ரதியோ  கேட்கமாட்டால். 
அவன் முகத்தை தன் மார்பில் இட்டுக்கொண்டு அவனின் சின்ன சின்ன ஆசைகளை பூர்த்தி செய்வாள்.
அவன் தலையை வருடிக் கொடுத்து அவன் கழுத்தில் முகம் புதைத்து….. சின்ன சின்ன சீண்டல்களும் சின்ன சின்ன காதலுமாய் அழகாய் நகரும் அவர்களின் இரவுப்பொழுது காதலாய்.
இரண்டு குழந்தைகளை சுமப்பதால் அவள் கால் இரண்டும் வீங்கி போய் நீர் கட்டி இருக்கும் ஒவ்வொரு நாளும் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பான் அவள் கால்களுக்கு
அம்மா இல்லாத குறையை எல்லாம் அவன் இந்த ஐந்து வருடங்களில் அவளை தாங்கு தாங்கு என்று தாங்கி நிறைவு செய்து இருந்தான்.
காதல் இழையோட  முதல் நாள் திருமண பந்தத்தில் இணைந்த திலிருந்து…. முகிலன்  தன்னிடம் காட்டிய அன்பு எல்லை இல்லாதது.
எத்தகைய வேலையாக இருந்தாலும் இரவு டான்  என்று ஒன்பது மணிக்கு வந்து விடுவான் முகிலன். 
ஐடி பில்டில்  உயர்ந்த பதவியில்
சிஇஓ  வாக இருந்தான். அவளுக்கு இந்த குழந்தை உண்டானதிலிருந்து  பெரும்பாலும் அவன் வீட்டில் இருந்தப்படியே தான்  வேலை பார்த்துக் கொண்டிருந்தான் . 
அவன் ஒரே  ஒரு ப்ராஜெக்ட் முடித்துக் கொடுத்தாலே  அவனுக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டும்.. அதைப் பற்றியெல்லாம் அவன் அலட்டிக் கொள்ளவே மாட்டான்.
அவனுக்கு அவன் குடும்பம் முக்கியம் அதிலும் தன் ரதியை உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.
அடுத்து அவள் தாய்மை அடைந்தது சந்தோஷமே ஆனால்
  இரண்டு குழந்தைகள் என்று தெரிந்த பிறகு அவள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்று வேண்டாம் என்று மறுத்தான்.
பாரதி தான் பிடிவாதமாக இருந்து விட்டால்..
அவளை அவன்  ஒரு வேலையும் செய்ய விடுவதில்லை அமிர்தவர்ஷினியை  பார்த்துக் கொள்வது முழுவதும் முகிலன் தான்..
அதனால்தான் என்னவோ அமிர்தாவுக்கு முகிலன் மேல் தான் மிகுந்த பாசம்.
தன் அம்மாவைக் கூட தன் தந்தையிடம் நெருங்க விட மாட்டாள்.அவளுக்கு எப்போதும் தன் அப்பா வேண்டும்.அப்பா அப்பா என்று அவன் கழுத்தை கட்டிக்கொண்டே  சுற்றி  திரிவாள்.
அதிக பொசசிவ்னஸ்… அப்படித்தான் ஒருநாள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி முத்தம் கொடுத்துக் கொண்டிருக்க அப்போது பார்த்து அங்கே  வந்துவிட்டால் அமிர்தா.
ஏய்  நீ  டாடியை  என்ன பண்ற 
என்று கிட்டே வந்து தன் அம்மாவின் சேலையை பிடித்து இழுக்க…. அப்போதுதான்  இருவரும் இயல்புக்கு வந்தார்கள்.
பாரதி திருதிருவென முழிக்க முகிலன் தான் சமாளித்தவனாய்..
அப்பா  கண்ணில் தூசு விழுந்தி டுச்சிடா அதை அம்மா எடுத்து விடுறா  அவ்வளவுதான் என்றான்.
உனக்கு மேக்ஸ் மட்டும் வீக் யில்லடி ஆல் சப்ஜெக்ட் 
வீக் என்றான்  அவளை பார்த்து கண்ணடித்து.
ஹலோ மிஸ்டர் முகிலன் சார்  நைட் என்கிட்ட தான் வரணும் கொஞ்சம் அடக்கி வாசிங்க.
நான் தான் மேக்ஸ் அண்ட் கெமிஸ்ட்ரியில்   புலி ஆச்சே சோ  வெற்றிவாகை எப்பவும் ஐயாவுக்குத்தான் என்று அவன்  தன் சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொள்ள.
அதுமட்டுமா தன் மகள் பார்க்காதபோது  இதழ் 
குவித்து முத்தம் வைத்தான் அவளுக்கு.
அதில் மெர்சல் ஆனால் அவன் ரதி. 
ரதியின் சின்ன முகவாட்டம் கூட தாங்க மாட்டான்.
வலி எதாவது  இருக்கா அம்மு? 
பாரதிக்கு இப்போது ஒன்பது மாசம் அடுத்த மாசம் டியூ  டேட் கொடுத்திருந்தார்கள்.
அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா என்று அவன்  மடியில் வந்து படுத்துக் கொண்டாள்.
அவன் கழுத்தில் கைகொடுத்து அவன் முகத்தை தன் முகத்தருகே கொண்டுவந்து அவன் முடி கோதி…. அவன் மூக்கோடு தன் மூக்கை உரசி இதழ் முத்தம் கொடுத்தாள்.
இருவருமாக அந்த இதழ் முத்தத்தில்  திளைத்திருக்க அவளுக்கு வயிற்றில் லேசாக  வலி வர அம்மா என்று  அலறினாள்.
அவள் முகம் வாட கண்டு என்னடா ரதிமா என்ன பண்ணுது என்று… அவன் அவளுக்காய் துடித்துப் போனான், பதறினான்.
டாக்டர் சொன்னாங்கனு இதோ  எட்டு மாசமா என்கிட்டயே வராம இருக்க அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை மாமா என்று அவன் முகத்தோடு தன் முகத்தை உரச…? 
இது பாரு  ரதி…. உன்னை கட்டி புடிச்சிட்டு படுத்திருந்தாவே  எனக்கு போதும் நீயே ஏதாவது தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காத என்றான் அவள்  
தனக்காகத்தான் வருந்துகிறாள் என்று தெரிந்து.
நாளைக்கு காலையில் ஹாஸ்பிடல் செக்கப் போகணும் சரியா..? 
ம்ம்ம்ம்ம் பாரதியைப் பொறுத்தவரை அவன் அவளுக்கு தாயுமானவன்.தாய் இருந்திருந்  தால் கூட இப்படி எல்லாம் செய்து இருப்பார்களா என்று தெரியாது ஆனால் அவளுக்கு எல்லாமுமாய் இருந்துதவன் செய்கிறான்.
அவனும் அவளுமாய்  இந்த 5 வருடத்தில் உள்ளம் பூரித்த வலாய் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் ரதி. 
அவனுக்கு வேலை சென்னையில் என்பதால் கல்யாணம் ஆனதிலிருந்து சென்னையிலும் மதுரையிலும் ஆக மாற்றி மாற்றி தான் இருக்கிறார்கள். ஆனால் இப்போது இந்த குழந்தை உருவானதிலிருந்து அவர்கள் சென்னையில் தான் இருக்கிறார்கள்.
இரண்டு குழந்தைகளை சுமக்கின்ற தாயாய் அவளின்  உடல்நிலை கருதி அவளை இந்த முறை மதுரையில் காண்பிக்காமல் சென்னையில் உள்ள  பிஎம்எம் பாலா மல்ஹோத்ரா மல்டி நேஷனல் மருத்துவமனையில்தான் காண்பிக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் பாரதி அங்கே செக்கப்புக்கு செல்லும்போது பாலா அங்கே இருப்பதில்லை.
இவர்களின் 5 வருட  திருமண வாழ்க்கையை புரட்டிப் போடப்போகும் அந்த சம்பவம் அங்கே  நடக்கப் போவது தெரியாமல் நாளை இருவரும் அந்த மருத்துவமனைக்கு செக்கப்புக்கு போகபோகிறார்கள் விதி வலியது.
இடறிய இதயம் என்ன ஆகும்?? 
தொடரும்….
என்றும் அன்புடன் உங்கள் 
ஸ்ரீலதா

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *