பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

15 
பாண்டியன் தோள் வளர் பைங்கிளி
ஜியா ஜானவி 💞
தன் கழுத்தில் கத்தியை வைத்து கண்களை உருட்டி தன்னை மிரட்டும் அந்த ஐந்தடி அழகு சிலை மீது அவனுக்கு ஈர்ப்பு வரவில்லை… மாறாக எரிச்சல் தான் வந்தது. காரணம் நட்பே.. 
இதுவே வேறு பெண் என்றால் தன்னை கத்தி முனையில் காதல் சொல்லும் அழகு களஞ்சியத்தை அள்ளி கொண்டு கந்தர்வ மணம் புரிய துணிந்து இருக்கும் கட்டிளம் காளை அவன்.. ஆனால் அவன் கண்களுக்கு அவள் நண்பனின் தங்கையாக மட்டுமே தெரிய.. அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிர்ச்சியோடு அவளையே பார்த்து நின்று இருந்தான்.
“சொல்லு டா கோடாலி மூக்கா.. ஏன் தோத்து போன?”
” என்னது கோடாலி மூக்கனா?!!
“ஆமாம்.. உன் மூக்கு முன்னாடி பார்க்க அப்படி தான் இருக்கு.. ம்ப்ச் இப்போ அதுவா பிரச்சனை?” என்று அவள் சலித்து கொள்ள…
“அதுவும் தான்” என்று அவன் விடைத்து நின்றான்..
அவன் விடைக்க.. இவள் முறைக்க.. தன் கத்தியை அவன் கழுத்தில் சற்று அழுத்தி வைத்து, “நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு.. உன் இஸ்டத்துக்கு எல்லாம் பதில் சொல்லாத” என்று அவள் தன் புருவங்களால் அவனை  கொக்கி போட்டு இழுக்க… அக்கொக்கியில் மாட்டி அவளுடன் செல்ல விழைந்த மனத்தை, நொடியில் தடுத்தாட் கொண்டு அவளை சலனமில்லா பார்வை பார்த்தான்.
அவனின் சலனமில்லா பார்வையை பார்த்து மனதில் சிறுவலி உண்டானாலும், அதையெல்லாம் ச்சூ ச்சூ என்று விரட்டி விட்டு “இவனை எல்லாம் அன்பா குலஞ்சி பேசினா வழிக்கு வரமாட்டான்.. இப்படி அடிதடி தான் கரெக்ட்..” என்று கணநேரத்தில் கணக்குப் போட்டவள், அவனை இன்னும் சற்று நெருங்கி அவன் கண்களை ஆழ்ந்த பார்த்து..
“நீ சலனமில்லாம பார்வை பார்த்தாலும் சரி, இல்லை இவ தான் என் சம்சாரமும் பார்த்தாலும் சரி.. என் பார்வை எப்பொழுதும் இப்படித்தான் காதலோட இருக்கும். உன்னால என்ன மாத்த முடியாது.. முடிஞ்சா நீ மாறிவிடு இல்லைன்னா..” என்று அவள் இழுக்க..
வேற ஏதோ சொல்ல போகிறாள் என்ற நப்பாசையில் அவனும் இல்லைன்னா என்று இழுக்க…
“வெரி சிம்பிள்.. நான் உன்னை மாத்திடுவேன்”
“இங்க பாரு சும்மா எங்க அண்ணன் பின்னால ஊர் சுத்திக்கிட்டு, சண்டை இழுத்துவிட்டு இப்படியே சண்டியர் கணக்கா சுத்திகிட்டே இருக்காத… சீக்கிரமாவே என்னைய  கல்யாணம் பண்ணிக்கணும்.. என்னைய வச்சு  குடும்பம் நடத்தனும்.. ஒழுங்கா பொழப்ப பாக்குற வழியை பாரு” என்று அவள் கூற..
அடிப்பாவி  இவ சண்டைக்காரி மாதிரி பேசிகிட்டு, நம்மல சண்டியருனு சொல்றாளே என்று வாயை பிளந்தவன், வெளியில் தன் கெத்தை விடாமல்..
“உன்னைய எப்போ கட்டிகிறேனு சொன்னேன்.. உனக்கு என்ன வந்தது..  நான் இப்படித்தான் ஊற சுத்துவேன்.. இன்னும் போற வர்றவனோட ஓரண்டைய இழுப்பேன்.. என் நண்பன் கூடத்தான் சுத்துவேன்.. போடி” என்றவன்.. “அப்புறம்
நீ நல்ல பழமா.. சண்டை போடாத..  உனக்கு அடங்கியவனா.. ஒரு நல்ல வேலையில இருக்கிறவனா பார்த்து கல்யாணம் கட்டிக்கோ.. போ.. போ..காத்து வரட்டும்” என்று அவள் கழுத்தில் இருந்த கத்தியை அசால்ட்டாக தட்டி விட்டு அவன் நகர…
அவன் கையை பிடித்து தன் கையோடு சேர்த்தவள் “ஐயோ யாராவது வாங்களேன்..இவன் என் கைய புடிச்சி இழுக்கிறான்.. என்ன காப்பாத்துங்க யாராவது வாங்களேன்” என்று அவள் கத்த…
நடுங்கித் தான் போனான் சதீஷ். ‘நாம எப்போ இவ கையப் பிடிச்சு இழுத்தோம்.. அதைவிட எங்க தள்ளிக் கொண்டு வந்தோம்னு ஓப்பாரி வைக்கிறா? எல்லாத்தையும் செஞ்சுது இவ.. இப்போ என்னாடான்னா  நாம செஞ்ச மாதிரி ஊர கூட்டுறாளே.. ஒருவேளை எல்லாரும் வந்துட்டாங்கனா? ஐயோ அதிலே மச்சான் பாண்டியன் இந்த நிலையில என்னை பார்த்தான் என்ன நினைப்பான்? என்று தன் நண்பனுக்காக பயந்தவன் உடனே அவள் செயலில் கோபம் கொண்டு அவள் வாயை தன் கையை  வைத்து அடைத்து..
“ஏண்டி இப்படி கத்தி தொலைக்கிற? ஊர்ல உள்ள அம்புட்டு பேரும் இங்கன தான் சுத்திகிட்டு இருக்காங்க.. மொத்த பிஸ்ல ஒத்த பீசு பார்த்தா கூட நாளை காலையில ஆலமரத்தடியில் பஞ்சாயத்து கூடிடுவானுங்க… கத்தி தொலையாத நான் இப்ப கையில எடுக்கப் போறேன்” என்று மெல்ல தன் கையை அவள் வாயில் இருந்து எடுத்தான்..
“நானும் அதுக்கு தானே ஆசைப்பட்டேன் மச்சான். ஒத்த பீஸூ பார்த்தா கூட நாளைக்கு பஞ்சாயத்து தான் அப்புறம் கல்யாணம் தான்.. அப்புறம் நமக்கு..” என்று அவள் அதுவரை இருந்த கோபத்தை விட்டு வெட்கத்தை தத்து எடுத்து தன் வலது கால் பெருவிரலை கொண்டு கீழே கோலம் போட.. அவளின்  வெக்கத்தை பார்த்தவன் தன் தலையில் அடித்துக் கொண்டான்.
“இங்கே பாரு நீயு நண்பனோட தங்கச்சி அவ்ளோதான் உனக்கும் எனக்கும் இருக்கிற உறவு அதை தாண்டி எதுவும் கிடையாது.. எனக்கு என் நண்பன் முக்கியம். இதனால அவனுக்கு எனக்கும் ஒரு சின்ன விரிசல் வரது கூட நான் விரும்ப மாட்டேன்” என்று ஆழ்ந்த குரலில் அவன் கூற…
அப்படியே நீ பஞ்சாயத்து வச்சு என்னைய கட்டாயப்படுத்தி கட்டிகிடலாம்னு கனவு கானாதே.. நடக்கவே  நடக்காது.. இங்க நின்னு இந்த சில்லூண்டி தனம் பண்ணாம ஒழுங்கா வீடு போய்ச் சேரு” என்றவன் அவள் கையை பிடித்து தள்ளிவிட்டு, தண்ணீர் தொட்டியை நோக்கிச் சென்றான். அவளோ அவனைப் பார்த்து வசீகர சிரிப்பு ஒன்று உதிர்த்தவள்..
“எக்கோடாலி மூக்கா.. நீ எனக்கே எனக்கு தான்.. ஐ லவ் யூ மச்சான்” என்று இங்கிருந்தே பறக்கும் முத்தத்தை அவனுக்கு விட்டு கையில் இருந்த சிறு கத்தியை மடக்கி தன் இடுப்பில் செருகிக் கொண்டு எட்டு போட்டு நடந்தாள் தன் தோழிகள் இருக்கும் இடத்தை நோக்கி..
அவள் சாவதானமாக சென்றுவிட அங்கே தண்ணீர் தொட்டியில் கைகழுவ கொண்டிருந்தவன் மனநிலையை சொல்லவென்னா குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தது..
பின் தன் நண்பர்களோடு வந்த கலந்து கொண்டவன் அமைதியாகவே இருக்க அவன் அமைதியை பார்த்த அருண், “என்னடா தண்ணீ தொட்டிக்கு தானே போன, பேய்  அடிச்ச மாதிரி வந்து உட்கார்ந்து இருக்க” என்று கேட்க…
“பேய் இல்லடா ஜெகன்மோகினி அடிச்சிடுச்சு” என்றான் கீழே தரையை பார்த்தவாறு…
“டேய் பேய கூட ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம்டா.. ஆனா அந்த ஜெகன்மோகினி இருக்கே அது ஆம்பளய தான்.. அதுவும் கன்னி பையனா பார்த்து தொரத்தும்” என்று அவன் கூற…
“ஏண்டா ஏன் ?” என்று தன் கண்களில் பயத்தையும் ஆர்வத்தையும் காட்டியவாறு முருகன் கேட்க…
“ஆமாண்டா.. பேயு நம்மல அடிச்சு காலி பண்ண மட்டும்தான் செய்யும். ஆனா இந்த ஜெகன்மோகினி இருக்கு பாரு.. அது கந்தர்வ பொண்ணாட்டும் உரு மாறி நம்மளையே டேஸ்ட் பண்ணிட்டு போய்டும்” என்று அருண் விளக்கம் கொடுக்க..
முகத்தில் அசட்டு சிரிப்பை காட்டி “ஜெகன்மோகினி பாக்க அழகா இருக்குமாடா?” என்று கேட்டான் முருகன்.
நால்வரும் சேர்ந்து அவனை முறைக்க..
“டேய் இவனே காஞ்ச மாடு கரும்பு தோட்டத்தில.. வாழை தோப்புக்குள்ளே போறவன். இவன் கிட்ட போய் ஜெகன்மோகினி பத்தி பேசுற”  என்று பாண்டியன் நக்கல் அடித்தான்.
“பார்த்துடா ஜெகன்மோகினி கைல கத்தியோட தாண்டா வரும்” என்று ஏதோ நினைவில் சதீஷ் வாயை விட..
“அப்போ எதோ எந்த ஜெகன்மோகினியோ கத்திய காட்டி அவனை பயமுறுத்தி இருக்கு. அதுலதான் பய பேய் அடிச்ச மாதிரி ஒக்காந்து இருக்கான்” என்றான் பாண்டியன்.
என்ன சொல்வது என்று புரியாமல் தலையை ஆமாமில்லை என்று எல்லா பக்கமும் சேர்த்து ஆட்டி வைத்தான் சதீஷ்..
“டேய் ஏதாவது எக்குதப்பா பொண்ண கைய கைய புடிச்சு இழுத்தியா டா? அதான் தன் கையில் வைத்திருந்த உன்னைய நோக்கி காமிச்சுடிச்சா?” என்று அருண் அவசரமாக வினவ..
“இல்லடா அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா சொன்னேன்” என்று சமாளித்தான் சதீஷ்..
“இப்போ உள்ள பொண்ணுங்க எல்லாம் கையில் சிறு கத்தியோ இல்லை மடக்கு கத்தியோ வச்சுக்கிறது நல்லது.. அப்பதான் ஒரு ஆபத்துங்கு போது அதை வெச்சு எதிராளியை நாலு எடத்துல நச்சுனு வெட்டுனா.. அவனும் ஓடிடுவான் இந்த பொண்ணுங்களும் தப்பிச்சிடும்.. அன்னைக்கு என் பேரட் கூட கையில் அது மாதிரி தான் ஏதோ வச்சிருந்து அவன அங்கங்க உடம்பெல்லாம் கீரி வைத்திருந்தா.. நான் கூட என் அக்கா தங்கச்சி இரண்டு பேருக்கு அது மாதிரி ஒன்னும் கொடுத்து வைச்சிருக்கேன்” என்று கூறியவனின் முகம் சட்டென குழப்பத்தில் ஆழ, அவன் திரும்பி சதீஷை ஆராய்ச்சியாக பார்க்க அவனோ பாண்டியனின் நேர்கொண்டு பார்க்க இயலாமல் கீழே குனிந்து கொண்டான்.
“டேய் இந்த பேச்சை விடுங்கடா.. வீட்டுக்கு போலாம் எல்லாரும்” என்று கிரி கூற
 “இந்த கொசு தொல்லை தாங்கலடா!! இதை மருந்து அடிச்சு ப்ர்ஸ்ட் கொல்லுங்கடா” என்று அருண் கூறினான்.
“போங்கடா தடி பயலுகளா!! ” என்று கத்தி விட்டு ஓட,  “அடிடா அவன” என்று அருணும் முருகனும் அவனை விரட்ட அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் பாண்டியன். ஆனால் சதீஷ் பெரும் குழப்பத்தில்.. அதை பார்த்தாலும் பார்க்காதவாறு பாண்டியன் “வாடா வீட்டுக்கு போகலாம்” என்று கூறியவாறு அவரவர்கள் தத்தம் வீட்டை நோக்கி சென்றனர்.
மூன்று நாள் திருவிழாவும் அமைதியாகவும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நடந்து முடிய நான்காம் நாள் மஞ்சத்தண்ணி விளையாட்டு..
பொதுவாக திருவிழா நாட்களில் பெரும் கிருமிகள் பரவும் அபாயமும்.. கண்ட இடத்தில் மனிதர்கள் புழங்குவதால் அவர்களுக்கு நோய் வரும் அபாயமும் அதிகம். அதற்காகத்தான் அந்நாளில் கண்டுபிடித்தது மஞ்சத்தண்ணி விளையாட்டு..
திருவிழா முடிந்த மறுநாள் பெரும்பாலும் திருவிழாக்களில் அதிகம் பங்கு பெறுவது இளந்தாரிகள்‌. அதனால் அவர்களைக் கொண்டே ஒவ்வொரு வீட்டு வாயிலில் பெரிய அண்டாக்களில் மஞ்சள் போட்டு கரைத்த தண்ணீரை வைத்து அதில் வேப்பிலையையும் உருவி போட்டு இருப்பார்கள். இவை இரண்டுமே வீரியம் கொண்டு நுண்கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்ட ஆன்ட்டிபயாட்டிக்..
இதனால் பெரும்பாலான நோய்கள் பரவுவது அக்காலத்தில் தடுக்கப்பட்டது.
அக்கால நம் முன்னோர்கள் வாழ்வியலோடு இணைந்து அறிவியலையும் இணைத்து அதற்கு ஏற்ப வாழ்ந்தமையால் நீண்ட நாட்கள் வலிமையுடனும், இளமையுடனும் நோய்நொடியின்றி வாழ்ந்தனர். தற்போது அவ்வழக்கம் எல்லாம் மறைந்து போக நாமும் அவற்றையெல்லாம் தவிர்த்து மருந்துகள் பின்னாடி ஓடிக்கொண்டிருக்கிறோம்..
காலையிலேயே மஞ்சத்தண்ணி விழா களை கட்டியது. பெண்கள் மாமா மச்சான் அத்தான் உறவு முறை உள்ள பையன்கள் மீது மஞ்சத் தண்ணீர் ஊற்றுவது தான் பெரும்பாலும் வழக்கம்.. அதே போல ஆண்களும் தங்களுக்கு பிடித்த பெண்கள் மீதும் தங்கள் நண்பர்கள் மாமன் மச்சான் உறவு உள்ள மற்ற ஆண்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.
உற்சாகத்துடன் பாண்டியனும் நண்பர்களும் தங்கள் கைகளில் ஆங்காங்கே உள்ள பெரும் அண்டாக்களில் உள்ள மஞ்சத்தண்ணி கொண்டு மற்றவர்கள் மீது ஊற்றிக் கொண்டே செல்ல.. 
ஒரு திருப்பத்தில் அனைவரும் எதிர் வந்த கும்பலில் இருந்து தப்பிக்க ஓடி ஓடி வளைந்து நெழிந்து தெருக்களிலும் சந்து பொந்துகளிலும் ஓடி கொண்டே இருக்க.. திரும்பி பார்க்கும்போது சதீஷ் மட்டும் தனித்து இருந்தான்.
” எங்கடா போனீங்க என்னை மட்டும் தனியாக விட்டுடு” என்று அவன் சுற்றுமுற்றும் பார்க்க.. திடீரென அவன் மேல் மஞ்சத் தண்ணீர் ஊற்றப்பட்டதில் திகைத்துப் போய் திரும்பி பார்க்க கண்களில் காதல் வழிய.. கைகளில் மஞ்சத்தண்ணி வழிய அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அம்பை..
அவன் பயந்து போய் சுற்றுமுற்றும் திரும்பிப் பார்க்க “அதெல்லாம் யாரும் இல்ல. நல்லா செக் பண்ணிட்டு தான் ஊத்துனேன்” என்று அவனின் செய்கையை பார்த்து இவள் கூற..
அவன் ஆத்திரம் மிகுதியில் “உன்னை.. உன்னை..”  என்று அவள் அருகில் வர..
“என்னை.. என்னை.. அப்புறம்.. “என்று அவளும் அவன் முன்னே சென்று இடிப்பது போல நிற்க.. “போடி” என்று அவள் தோளில் கைவைத்து அவன் தள்ள.. கண்மூடி திறக்கும் நேரத்தில் அவன் கழுத்தை வளைத்து பட்டும்படாமலும் இதழ் ஒற்றி முடித்திருந்தாள் அம்பை..
இப்ப என்ன நடந்துச்சு என்று அவன் புரியாமல் விழிக்க அவனின் பார்வையை படித்தவள், “வேணும்னா இன்னொரு டெமோ செஞ்சு காட்டவா மச்சான்” என்று அவன் தோளில் தன் தோளை கொண்டு உரசியவாறே கேட்க… 
தண்ணீரில் தீ பற்றிக்கொள்ளுமா என்ன?இங்கே இரு உடம்புகளிலும் தண்ணீரால் நனைந்து இருக்க… தேகம் சூடாவது போல் உணர்ந்தான் சதீஷ். இது சரியில்லை என்று தன் தலையை ஒரு முறை ஆட்டி சிலுப்பியவன் போடி என்று அவளை தள்ளிவிட்டு ஓடி மறைந்தான்.
அவன் வேகமாக ஓடுவதைப் பார்த்து கலகலத்து சிரித்தாள் அம்பை.
வேண்டுமென்றே மற்ற நண்பர்களை தவிர்த்து சந்து பொந்தில் எல்லாம் ஓடிய பாண்டியன் ஒரு திருப்பத்தில் நின்றான். எல்லாம் அவன் காதல் பைங்கிளி இல்லையில்லை இப்பொழுது மனைவி அல்லவா? தான் தாலி கட்டிய பைங்கிளி அன்னக்கிளியை காணவே…
மூன்று நாள் திருவிழா முடிந்து இன்று தான் வேலைக்கு செல்வதற்காக தன் வண்டியில் வந்து கொண்டிருந்தாள் அன்னக்கிளி. அவள் இந்த வழியே வரக்கூடும் என்று எதிர்பார்த்தே அங்கே நின்று கொண்டிருந்தான் பாண்டியன். அவள் வண்டி ஓட்டிக்கொண்டே வர சட்டென்று அவள் முன்னால் வந்து நின்று நிற்க..  பயத்தில் வண்டியை ப்ரேக் போட்டு நிறுத்தி அதிர்ச்சியில் ஏறி இறங்கிய மார்பை தன் கை கொண்டு அழுந்த பிடித்தவாறு நிமிர்ந்து பார்க்க.. பாண்டியன் தன் காந்தமென ஈர்க்கும் அவன் கண்களில் காதலை நிரப்பிக் கொண்டு, தன்னவளை வசியம் செய்யவே கிறக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான். 
அவள் அடுத்து என்னவென்று சுதாரிக்கும் முன் தன் கையில் இருந்த மஞ்சள் தண்ணீரை அவள் மீது ஊற்றியவன் “பேரட் மாமனுக்கு நீ ஊத்தலையா?” என்று திரும்ப கேட்க.. 
அவளுக்கு கோபம் தலைக்கு ஏறியது, இப்படி மஞ்சத்தண்ணி ஊத்தியது, அதுவும் வேலைக்கு செல்லும் போது.. வந்த கோபத்தில் “அறிவும் இருக்காடா உனக்கு? ஹாஸ்பிடல் போயிட்டு இருக்கேன்.. இப்படி யூனிபார்ம் ட்ரஸ்ல ஊத்தி வைச்சு இருக்கியே.. உன்னைய?” என்றவள் வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அவனை அடிக்க துரத்தினாள்…
“வாடி என் பொண்டாட்டி” என்று மனதுக்குள் நினைத்தவாறே அவள் கையில் சிக்காமல் அடுத்த சந்தில் நுழைந்து ஓடினான். அவள் துரத்த இவன் ஓட என்று சிறிது நேரம் அவளுக்கு ஆட்டம் காட்ட… தன் மேல் தண்ணீர் ஊற்றியவனை விட கூடாது என்று கோபத்தில் சுற்று முற்றும் பார்த்தவள் பக்கத்தில் ஒரு வீட்டு அண்டாவில் இருந்த மஞ்சள் தண்ணியை எடுத்து பாண்டியன் அசந்த நேரம் பார்த்து அவன் மீது ஊற்றினாள்.
இப்போதுதான் ஜென்ம சாபல்யம் அடைந்து மாதிரி அப்படி ஒரு சந்தோஷம் அவன் முகத்தில்.. அடுத்த நிமிடம் “அப்பாடி மிஷின் கம்ளீடட் டி பேரட்.. இனி நீ ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்” என்று கூற..
அப்போதுதான் அவள் உணர்ந்தாள்.. இவன் வேண்டும் என்று நம்மை கோபத்தைக் கிளறி இவன் மீது மஞ்ச தண்ணீரை ஊற்ற வைத்திருக்கிறான் என்று.. நேற்றிருந்த இனிய மனநிலை மாறி அடுத்து தன் கையில் வைத்திருந்த சொம்பை அவனை நோக்கி எறிய…. அதை சரியாக கேட்ச் பிடித்தவன், “ஆனாலும் உனக்கு மாமா மேல இம்புட்டு பாசமா ஆகாதுடி”  என்று கூற.. அவளின் கோபத்தை எல்லாம் அவன் சட்டை செய்யாமல் இருப்பதை பார்த்து தன் கை கொண்டு முடியுமட்டும் அவன் நெஞ்சில் குத்தினாள்.
நேற்று வாங்கிய அடிக்கு மசாஜ் செய்வது போலவே இருந்தது அவனுக்கு.. அவளின் வலை கரங்களை தன் வன் கரங்கள் கொண்டு பிடித்தவன்.. தூக்கி ஏற்றிய கொண்டை.. மருத்துவமனைக்கு செல்ல வேண்டி அவள் அணிந்திருந்த காலர் வைத்து ஜாக்கெட் மற்றும் புடவை மஞ்சள் தண்ணீரில் நனைந்து அவள் உடலோடு ஒட்டி இருக்க.. கோபத்தில் துடித்த அவள் அதரங்களில் தண்ணீர் நனைந்து பன்னீரில் குளித்த ரோஜா என அவன் கண்களுக்கு தெரிய.. மேலும் அவள் முகமெங்கும் ஆங்காங்கே தண்ணீர் திவளைகள் வெயிலில் பட்டு வைரமென ஜொலிக்க.. அவளுக்கு அது ஒரு தனி அழகை தந்தது. அதற்கு மேல் பொறுக்க இல்லாதவனாய் அவள் முகத்தில் ஜொலித்த வைர கற்களை தன் உதடுகளால் விழுங்கிக் கொண்டிருந்தான் சுற்றுப்புற மறந்து..
அன்னக்கிளியின் காதல் கொண்ட மனது அவனின் இச்செயலை ஆதரித்தாலும் நட்ட நடுத்தெருவில் வெட்டவெளியில் இவன் செய்யும் இந்த செயல் அவளுக்கு ஒப்பானதாக இல்லாமல் அவனை தள்ளிவிட.. அதையெல்லாம் சட்டை செய்யாமல் அவளை அருகில் இருந்த ஒரு குறு சந்து சுவற்றில் சாய்த்து மெல்லமெல்ல தன் தாகத்தை தனித்து கொண்டு இருந்தான் அவள் முகத்தில் இருந்த தண்ணீரை பருகி..
அவனின் உதடுகள் அவளின் பிறை  நெற்றி.. கூர் மூக்கு.. பளிங்கு கன்னங்கள் ரோஜா உதடுகள் என கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ந்து கடைசியில் அவள் சிவப்புக்கல் மூக்குத்தியில் வந்து இளைப்பாறியது.. பின்பு அவள் இதழில் அழுத்தமாக தன் அன்பை எழுதிவிட்டு அவளை விட முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, அன்னக்கிளியே அவன் மார்பில் கை தள்ளிவிட்டு ஓட, “ஏய் நில்லுடி” என்றவனிடம்.. “என் முஞ்சிலேயே முழிக்காதே போடா” என்று அவனை திட்டிக்கொண்டே ஓடினாள் தன் வண்டியை நோக்கி…
நாளை இதே நேரம் தன்னவன் முகத்தை காண மருத்துவமனை வாசலில் தவம் கிடப்போம் என்பதை அறியாமல்..
வருவோம்ல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *