உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

அர்ஜுன் வீட்டில் காரை நிறுத்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பொண்ணு வேகமாய் ஓடிவந்தாள் காரின் அருகே.. அர்ஜுன் காரிலிருந்து இறங்க “தம்பி பெரியம்மா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்க நம்ம அலமேலு அக்கா தான் நீவிக்கிட்டிருங்காங்க” என்றதும் வீட்டுக்குள் வேகமாய் ஓடினான் அர்ஜுன்.
ஜோஷிதாவோ ஒரு வேளை நம்ம மாமியார் நடிப்பாங்களோ.. இருந்தாலும் இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் வீட்டுக்குள் சென்று கௌரியின் அறைக்குள் போக அர்ஜுன் கௌரியின் பக்கம் வந்து உட்கார்ந்திருந்தவன் “ஏங்கம்மா பாத்ரூம்க்குள்ள பார்த்து போகக்கூடாதா.. இப்ப பாருங்க உங்களுக்குத்தான் கஷ்டம்” என்று கவலைப்பட்டு பேசினான்..
சுளுக்கு எடுக்கும் அலமேலுவோ “தம்பி அம்மாவுக்கு பெரிய அடியெல்லாம் இல்ல இதோ இப்போ இந்த சுளுக்கை எடுக்குறேன் பாருங்க” என்று ஒரு காலை அழுந்த நீவி விட “அம்மாஆஆ” என்று கௌரி கத்த.. அர்ஜுன், கௌரியின் தலையை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்..
அத்தை உண்மையாலும் விழுந்துட்டாங்க போல என்று பதட்டம் கொண்ட ஜோஷிதாவோ கௌரியின் கையை ஆதரவாக பிடித்துக்கொள்ள.. அவளது கையை மெதுவாக விலக்கி விட்ட கௌரி, ஜோஷிதாவை முறைத்துப்பார்த்தார்.. மாமியாருக்கு, திமிர பாரேன் என் கையை தட்டி விடுது பாவம் பார்த்து வந்து கையை பிடிச்சா கையை விலக்கிவிடுது.. நாளைக்கு இன்னொரு காலையும் உடைச்சி விடுறேன் பாரு என்று மெதுவாய் உதடசைத்தாள்.. அர்ஜுனோ கௌரிக்கு அடிப்பட்டு விட்டதென கவலையில் இருந்தவன் இவர்கள் சம்பாஷனைகளை கவனிக்கவில்லை.. கௌரிக்கு கொஞ்சம் வலி குறைந்திருந்தது.. வேண்டுமென்றே விழவில்லை கௌரி.. குளித்து விட்டு வெளியே வர சோப்புநீர் பட்டு கால் வழுக்கிவிட்டது..
சுளுக்கு எடுத்த அலமேலுவோ “கௌரியம்மா இந்த எண்ணெயை மூணு நாளைக்கு போடுங்க சரியாய் போய்டும்” என்றார்.
“அம்மா ஹாஸ்பிட்டல் போகலாம் இந்த எண்ணெய் எல்லாம் போட்டா சரியாகாது” என்று அச்சத்துடன் கூறினான்.
“இல்ல அர்ஜுன் இப்போ வலி குறைச்சிருக்கு.. ஹாஸ்பிட்டல் போனா ஆப்ரேசன் பண்ணணும்னு பணத்தை புடுங்கிடுவாங்க சும்மா சுளுக்கு போலத்தான் இருக்கு.. ரெண்டு நாள் எண்ணெய் போட்டா சரியாய் போகும்.. இதோ மருமக வந்துட்டால என் பக்கத்துல இருந்து பார்த்துக்குவா … பார்த்துக்குவதானே ஜோஷிதா” என்றார் ராகம் போல இழுத்து.
“ஹான் அதைவிட எனக்கு வேற வேலை இல்லை அத்தை என்றவள்.. நான் போய் டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு வந்துடறேன்” என்ற அறைக்கு போனாள் ஜோஷிதா.
அலமேலுவும் நாளைக்கு வரேன் என்று சென்றுவிட அர்ஜுன் கௌரியின் காலை லேசாக தொட்டுப்பார்த்தான்.. சற்று வீங்கித்தான் இருந்தது.. “ம்மா ஹாஸ்பிட்டல் போலாம்னு சொன்னா கேட்கமாட்டிங்களா கால் வீக்கமா இருக்கு” என்று கௌரியை கடிந்து கொண்டான்.
டிரஸ் சேன்ஞ் பண்ணி விட்டு வந்த ஜோஷிதாவோ “கால் நீவிவிட்டா இப்படித்தான் வீங்கினது போல இருக்கும் அர்ஜுன்.. நீங்க போய் டிரெஸ் சேஞ் பண்ணிட்டு வாங்க நான் அத்தை பக்கத்துல இருக்கேன்” என்று கௌரியின் காலடியில் வந்து உட்கார்ந்துகொண்டாள் ஜோஷிதா.
அர்ஜுன் அறையை விட்டு சென்றதும் “அத்தை நிஜமாவே கீழ விழுந்துட்டிங்களா” என்று காலை அழுத்தினாள்.
“ஆஆ அம்மா அடியே கையை எடுடி கால் வலிக்குது.. நீ இங்கிருந்து எழுந்து போ உன்னை பார்த்தாலே எனக்கு கால் வலிக்கும்” என்றார் முகத்தை உர்ரென்று வைத்து.
“அதெப்படி அத்தை என்னை பார்த்தாலே உங்களுக்கு வலிக்கும்” என்று கிண்டலாக கேட்டு “நீங்க வேணும்னுதான பாத்ரூமிலிருந்து விழுந்தீங்க எங்களுக்கு பர்ஸ்ட்நைட் நடக்கக் கூடாது அதான உங்க எண்ணம்” என்று கண்ணை சுருக்கி கோபமாய் கேட்டாள்.
“ஆமாடி நான் வேணும்னுதான் விழுந்தேன்.. உன்னை, என் பையன் கூட அவ்வளவு சீக்கிரம் வாழ விடுவேனா.. உங்கம்மாவையே கட்டம் கட்டி வெளியே அனுப்பினவடி நான்.. நீயெல்லாம் எனக்கு சுண்டைக்காய் போல” என்றார் எள்ளலாக கௌரி.
“மாமியாரே எங்கம்மாவை போல என்னை எடை போடாதீங்க எண்ணி பத்து மாசத்துல நான் உங்க மடியில பேரனை பெத்துப்போடுறேன்” என்றாள் சொடுக்கு போட்டு..
“பார்க்கலாம்டி” என்றார் சவாலாக கௌரி..
அர்ஜுன் அறைக்குள் வர இருவரும் அமைதியாக இருந்தனர்.. “ஜோ நைட்டுக்கு ஏதாவது சிம்பிளா சமையேன் அம்மாவுக்கு ஹோட்டல் புட் ஏதுக்காது” என்றான் நெற்றியை தடவிக் கொண்டு..
“ம்ம் சமைக்குறேன் அர்ஜுன்” என்று சமையல் கட்டுக்கு சென்றவள் சேலையை தூக்கி சொருகிக்கொண்டு தக்காளி சட்னிக்கு ரெடி பண்ணிக்கொண்டிருந்தாள்.. கௌரிக்கு விக்கல் எடுக்க தண்ணீர் பாட்டிலை எடுத்து கௌரியிடம் கொடுக்க தண்ணீரை குடித்து விட்டு “அர்ஜுன் டயர்டா இருக்கு நான் கொஞ்ச நேரம் கண்ணை தூங்குறேன்” என்றதும் கௌரி படுப்பதற்கு உதவி செய்தான் அர்ஜுன்.. அவர் கண்ணை மூடும் வரை அங்கே இருந்தவன் சிறிது நேரத்தில் ஜோஷிதாவை சமைக்க சொல்லிட்டோம் அவளுக்கு சமைக்க தெரியுமா என்ன மோ என்று சமையல் கட்டில் எட்டிப்பார்த்தான்.. மிக்ஸியில் சட்னி அரைத்துக்கொண்டிருந்தாள்..
“ஹலோ மேடம் வந்த முதல் நாளே உன்னை சமைக்க வச்சிட்டேனா?” என்று அவள் பின்னே நெருங்கி நின்றான்.
“நம்ம வீட்ல சமைக்க முதல் நாள் என்ன இரண்டாம் நாள் என்ன.. எனக்கு சமைக்க நல்லா வரும் அர்ஜுன்.. கவலைப்படாதீங்க” என்று சட்னியை பாத்திரத்தில் ஊற்றிவிட்டு பிரிட்ஜிலிருந்து மாவை எடுத்து வெளியே வைத்தாள்.
“ஹேய் நமக்கு இன்னிக்கு பர்ஸ்ட் நைட் நடக்கலைனு உனக்கு வருத்தமாயிருக்கா.. அம்மா இப்படி கீழ விழுவாங்கனு நினைக்கலடி” என்று அவளை தன்புறம் இழுத்து அணைத்தான்.
“ப்ச் அர்ஜுன் நான் எதுவும் நினைக்கலை.. இன்னிக்கு நடக்கலைனா எப்பவும் நடக்காமலா போகப்போகுது.. எனக்கு என் அர்ஜுன் பக்கம் இருந்தாலே போதும்” என்று அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள்.
ஜோஷிதாவின் நெற்றியில் முத்தம் கொடுக்க அவளோ நிமிர்ந்து அவன் முகம் பார்க்க.. “இப்படி கண்ணுல வசியம் வச்சு பார்க்காதடி அப்படியே கிஸ் அடிக்க தோணுது” என்று அவள் நெற்றியில் முட்டினான்.
“முத்தம் கொடுக்க தோணுச்சுண்ணா கொடுங்க யார் வேண்டாம்னு சொல்றாங்க” என்றாள் நாக்கை கடித்து..
“ஹா அப்போ முத்தம் கொடுத்திரலாம்” என்று அவளது முகத்தை கைகளில் ஏந்தி அவளது வெல்வெட் இதழில் முத்தமிடத்துவங்கினான்.. ஆழ்ந்த இதழ் முத்தமிட பெண்ணவளோ ஆண்மகனை அணைத்துக்கொண்டாள்.. அவனுக்கு இன்னும் வசதியை கூட்ட இதழ் முத்தம் நீண்டு கொண்டே போனது.. அவன் கொடுக்கும் முத்தத்தில் துவண்டு போக அவளது இடையை தன்னோடு சேர்ந்து அழுந்தப்பற்றிக்கொண்டவன் கைகள் அவளது கொடி இடையை அழுந்தப்பிசைய ஆரம்பித்தது.. அவளுக்கோ சமையல்கட்டில் நின்றிருக்கிறோம் என்ற உணர்வு மேலோங்க அர்ஜுனை விலக்க முயற்சிக்க விலக்க முடியாமல் தோற்றுத்தான் போனாள் ஜோஷிதா.. அவனாக விலகினால் தான் என்று விட்டுவிட்டாள்.. அவனோ அமிர்த கலசத்தில் உள்ள அமுதம் முழுவதும் குடித்துவிட்டுத்தான் விலகுவேன் என்ற ரீதியில் பெண்ணவளை முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.. முடிவில் அவன் கொடுக்கும் முத்தத்திற்கு பதில் முத்தம் இவளும் கொடுக்க ஆரம்பித்தாள்.. அவனது கைகள் இடுப்பிலிருந்து மேலே சென்று அவளது மென்மைகளை கைகள் கொண்டு சோதிக்க பெண்ணவள் துவண்டு போய் விட்டாள்.. கௌரி இருமும் சத்தம் கேட்டு சுயம் வந்தனர் இருவரும்.. அர்ஜீனை பார்க்கவே பெண்ணவளுக்கு வெட்கம் வந்தது.
“தண்ணீர் எடுக்க வந்துட்டு என்னை இந்த பாடு படுத்தியாச்சு” என்று தன் தடித்து போன இதழை பிதுக்கி காண்பித்தாள்.
“அச்சோ சாரி லட்டு நான் வேணா அதுக்கு மருந்து போடட்டுமா” என்று மீண்டும் அவள் முகம் நோக்கி குனிந்தான்.
“அச்சோ இப்போ மருந்து வேண்டாம் நான் அத்தைக்கு தோசை வார்த்து எடுத்துட்டு வரேன்.. அத்தையை போய் பாருங்க” என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து அர்ஜுன் கையில் கொடுத்தாள் ஜோஷிதா.
தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டவன் அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்த பிறகே வெளியே சென்றான்.
ஹெச்ஓடி ரொம்ப மோசம்ப்பா என்று தோளைக்குலுக்கிக்கொண்டு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து தோசை வார்க்க ஆரம்பித்தாள்.. தோசை வார்த்து தட்டில் போட்டு சட்னி ஊற்றி கௌரியின் அறைக்குச் சென்றாள்.
கௌரி கண்விழிந்திருந்தார்.. “அத்தை தோசை கொண்டு வந்திருக்கேன் எழுந்து சாப்பிடுங்க” என்று தட்டை டேபிள் மீது வைத்தாள்.
கௌரியோ இவள் செய்த தோசையை நான் சாப்பிடணுமா எல்லாம் என் தலையெழுத்து என்று சலித்துக்கொண்டவர் மெல்ல எழும்ப ஜோஷிதா கௌரியை தூக்கப் போக.. வேண்டாம் என்று கை நீட்டி தடுத்தார்.. அப்போது ரெஸ்ட்ரூம் சென்றிருந்த அர்ஜுன் குளியலறையிலிருந்து வெளியே வந்தவன் கௌரியின் செயலை பார்த்து கௌரி எழும்பி உட்கார உதவி செய்தான்.. தோசை இருந்த தட்டை எடுத்து கௌரியிடம் கொடுக்க சட்னியை தொட்டு சாப்பிட்டவர் “என்ன சட்னியில ஒரு உப்பும் இல்லை மண்ணும் இல்லை.. என்ன சட்னி அரைச்சிருக்க” என்று எரிந்து விழுந்தார் ஜோஷிதாவிடம் கௌரி.
“நான் சட்னியில உப்பு பார்த்துத்தான் போட்டேன்.. ஒருவேளை உங்களுக்கு கீழ விழுந்தததுல நாக்குல டேஸ்ட் குறைஞ்சு போயிருக்குமோ” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டாள்.
“ஏதோ பசிக்கு சாப்பிடுறேன்” என்று தோசை சாப்பிட.. அர்ஜுன், ஜோஷிதாவை பார்க்க..
“நான் சரியாத்தான் போட்டிருக்கேன்” என்றாள்.
“இருங்க நான் பார்க்குறேன்” என்று அர்ஜுன் கௌரியின் தட்டில் இருந்த தோசையை சாப்பிட்டு பார்க்க எல்லாம் சரியாகத்தான் இருந்தது.. இப்போது கௌரிக்கு உடம்பு சரியில்லை அவரை எதுவும் பேச முடியாதுதென பெரும்மூச்சு விட்டு  “ம்மா நாளைக்கு உங்களை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போய் புல் செக்கப் பண்ணிடலாம்” என்றான் நிதானமாக..
சாப்பிட்டு முடித்த கௌரியோ “ஏன் அர்ஜுன் என் உடம்புக்கு என்ன நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றார் ஜோஷிதாவை பார்த்துக்கொண்டே. இவள் அர்ஜுனிடம் தன்னைப் பற்றி ஏதாவது சொல்லியிருப்பாளென்று..
“ம்மா சும்மா ஜென்ட்ரல் செக்கப்தான் என்றவன் ஜோ எனக்கு தோசை ரெடியா இருக்கா”
“ஹான் டைனிங் டேபிளில் ஹாட்பாக்ஸ்ல வைச்சிருக்கேன்” என்றாள் மெலிதாய் புன்னகைத்து..
அர்ஜுன் சாப்பிட்டு வந்ததும் ஜோஷிதா போய் சாப்பிட்டு முடித்து சமையலறையை ஒதுங்க வைத்து பால் காய்ச்சி டம்ளரில் ஊத்தி எடுத்து வந்து கௌரியிடம் கொடுக்க வேண்டாம் என்று சொல்ல முடியாமல் பாலை வாங்கிக் குடித்தார் கௌரி.. பால் டம்ளரை கழுவி வைத்துவிட்டு “அத்தை ஏதாவது வேணுமா சொல்லுங்க” என்று சோபாவில் அமர்ந்தாள்.
அர்ஜுன் போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.
“ஏய் நீ போய் அர்ஜுன் ரூம்ல தூங்கு.. எனக்கு துணையா அர்ஜுன் என் ரூம்ல இருந்துப்பான்” என்று முகத்தை தூக்கி வைத்து பேசினார்.
“நீங்க நினைச்சது நடந்துருச்சு இப்ப சந்தோசம் தான” என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன் ஜோஷிதா.
அர்ஜுன் போன் பேசி முடித்து அறைக்குள் வந்தவன் “ஜோ நான் ஹால்ல தான் படுத்திருக்கேன் ஏதும்னா கூப்பிடு நீ சோபாவில படுத்துக்கோ நாளைக்கு வேணா இந்த ரூம்ல ஒரு கட்டில் போட்டிரலாம்” என்றான் அர்ஜுன்.
கௌரியோ “நாளைக்கு அலமேலுவை துணைக்கு வச்சிக்குறேன்.. நீங்க புதுசா கல்யாணமானங்க.. நீங்க பிரிஞ்சு படுக்க வேண்டாம்ப்பா” என்று நல்லவர் நாடகம் ஆடினார்.
அடி ஆத்தி உலக மகா நடிப்புடா சாமி என்று வாய் மேல் கை வைத்தாள் ஜோஷிதா.
“எப்புடி” என்று புருவம் உயர்த்தினார் கௌரி.
அர்ஜுனுக்கு, மோகன் போன் போட..
“சொல்லு மோகன்”
“மச்சான் சிவாவுக்கு போன் போட்டேன் எடுக்கல.. நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்.. எனக்கு கொஞ்சம் படபடப்பா இருக்குடா… எனக்கு முந்தின வாழ்க்கையில நடந்தது இப்போ இந்தக் கல்யாணமே வேண்டாம்னு தோணுது” என்றான் மோகன்..
“அடிச்சு பல்லை பேத்திருவேன்.. நாளைக்கு காலையில கல்யாணத்தை வச்சிகிட்டு என்ன பைத்தியக்காரன் போல பேசிக்கிட்டிருக்க” என்று கோபத்துடன் பேசினான் அர்ஜுன்.
“நீ நாளைக்கு காலையில சீக்கிரம் வந்துடேன்” என்றான் படபபடப்புடன் மோகன்..
 அர்ஜுன் கௌரியை பற்றி சொல்லவில்லை.. “சரிடா நாங்க வந்துடறோம்” என்று போனை வைத்துவிட்டான்.
“யாருங்க போன்ல”
“நம்ம மோகன் தான் கல்யாணத்துக்கு நேரமே வரச்சொல்லுறான்.. அவன் பழைய லைப் பத்தி யோசிச்சு இப்ப கொஞ்சம் நெர்வஸ் ஆகிட்டான் போல” என்று வருத்தமாகச் சொல்ல..
“எனக்கு மோகன் சார் லைப் பத்தி முழுசா தெரியாது.. அவர் ரொம்ப சைலண்டா இருப்பாரு.. என்கிட்ட கூட கிளாஸ் பத்தின டீட்டெய்ல்ஸ் கேட்பாரு அவ்ளோதான்” என்றாள்..
“அம்மா நான் காலையில மோகன் கல்யாணத்துக்கு போனதும் கொஞ்ச நேரத்துல வந்துடறோம்..  அலமேலு அக்காவை வந்து இருக்க சொல்லிடறேன்.. வேணா ஜோஷிதாவ உங்க கூட இருக்கச்சொல்லட்டுமா” என்றான் மெதுவாக..
“உன் பொண்டாட்டி இருக்க வேண்டாம்.. இன்னிக்குத்தான கல்யாணம் ஆச்சு.. ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு சேர்ந்து போயிட்டு வாங்க.. அலமேலுக்கு நான் போன் போட்டு வரச்சொல்லிக்கிறேன்” என்றார் கௌரி.
அட எங்க ரெண்டுபேரையும் சேர்ந்து போகச் சொல்றாங்களே என்று சந்தேகத்துடன் பார்த்தாள்.
எல்லாம் என் பையன்கிட்ட நல்லபேரு வாங்க வேண்டாமா அதுக்குத்தான் என்று கௌரி மனதில் சிரித்துக்கொண்டார்.. அலமேலுவுக்கு போன் போட்டு காலையில வீட்டுக்கு வந்துடு என்று சொல்லிவிட்டு, “நான் தூங்குறேன் அர்ஜுன் நீங்களும் தூங்குங்க.. கல்யாணத்துக்கு போகணும்ல” என்று சொல்லியவர் கண்ணை மூடிப் படுத்துக்கொண்டார்.
“அர்ஜுன் எனக்கு தூக்கம் வரலை கொஞ்ச நேரம் பேசிகிட்டிருப்போமா” என்றாள் ஜோஷிதா.
கௌரியை பார்க்க அவர் தூங்கி விட்டது தெரிந்து “ம்ம் சரி வா ஹால்ல உட்காருவோம்” என்று கௌரியின் அறைக்கதவை திறந்து வைத்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தனர்.. ஜோஷிதாவின் கையை எடுத்து முத்தம் கொடுத்தவன்.. “மோகன் எவ்ளோ ஜாலியான ஆளு தெரியுமா.. ஆனா அவனுக்கு மூணு வருசம் முன்னதான் கல்யாணம் ஆச்சு.. அரேன்ஞ் மேரேஜ்தான்.. ஆனா அந்தப்  பொண்ணுக்கு அவனை பிடிக்காம இருந்திருக்கு.. மோகன் ஆரம்பத்தில எங்ககிட்ட உண்மையை சொல்லலை.. நாள் போக போக அவன் முகம் வாட்டமா இருக்க நாங்க கண்டுபிடிச்சு கேட்க அவன் உண்மையை சொன்னான்..  மோகன்  முதல் வொய்ப் வேற யாரையோ லவ் பண்ணியிருக்கா.. அதனால, என்கிட்ட சரியா பேச மாட்டிங்கிறானு சொன்னான்.. நாங்களும் கொஞ்சநாள் வெயிட் பண்ணுடானு சொன்னோம் .. அவங்களுக்குப் பிடிச்சது போல நடந்துக்கோ.. பேசி புரியவைனு சொன்னோம்.. மோகனும் அந்தப் பொண்ணுகிட்ட பேசி கொஞ்ச நாளில் சரிசெய்து வாழ ஆரம்பிச்சாங்க.. ஆனா பவன் பிறந்ததும் அந்தப் பொண்ணு லவ் பண்ண பையன் வந்ததும் அவன் கூட போயிருச்சு மோகன் உடைஞ்சு போய்ட்டான்.. இப்போ இந்தப் பொண்ணும் முதல் வொய்ப் போல இருந்துட்டா என்ன பண்ணறது ரொம்ப கவலைப்படறான் போல.. நாளைக்கு நீ அந்த பொண்ணுகிட்ட பேச்சு கொடுத்து மோகனை பத்தி எடுத்து சொல்லு ஜோ.. மோகன் பாவம்” என்றான் அர்ஜுன்..
“மோகன் சார்க்கு இந்த லைப் நல்லா அமையும்னு எனக்கு தோணுது அர்ஜுன்”
“நல்லா அமைஞ்சா சரி என்றவன் நீ தூங்குடா” என்றான் அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்து..
அர்ஜுனின் தோளில் சாய்ந்திருந்தவள் அப்படியே கண்ணை மூடித்தூங்கினாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *