உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

19 உயிரை உயிரால் கோர்க்க வா
மோகன்  அனிதா கல்யாணத்திற்கு நெருங்கிய சொந்தங்கள் மட்டும் வந்திருந்தனர்.. கோவில் மண்டபத்திலேயே சாப்பாடு ரெடி பண்ணியிருந்தனர்.. சிவாவும் அர்ஜுனும் வந்திருந்தவர்களுக்கு பஃபே முறையில் சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தனர்..
பவன், அனிதா மடியில் பாதி உறக்கத்தில் இருந்தான்.. பால் ஆத்தி கொண்டு வந்த பரிமளாவோ “அதுக்குள்ள தூங்கிட்டானா இங்க கொடு அனிதா அவனுக்கு நான் பாலை காட்டுறேன்.. நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்று பரிமளா பவனை தூக்க முயற்சிக்க தூக்கம் கலைந்த பவனோ “பாத்தி நான் அம்மா மதியில படுத்து பால் குதிக்கிறேன்” என்று அடம்பிடித்து அழுதான்.
“சரி செல்லம் அம்மாவே பால் கொடுக்குறேன்.. நீங்க அழக்கூடாது” என்று பவனை சமாதானம் செய்த அனிதவோ பரிமளாவின் கையிலிருந்த பால் பாட்டிலை வாங்கி முந்தானையால் பால் பாட்டிலை மூடிக்கொண்டு பாலை பவனுக்கு காட்ட கண்ணை கொட்டக்கொட்ட விழித்துக்கொண்டு பாலை குடித்துக்கொண்டிருந்தது.. மோகனோ பவனை ஆச்சரியத்துடன் பார்த்திருந்தான்.. தன்னையும் பரிமளாவையும் தவிர யார் பால் காட்டினாலும் குடிக்காதவன் இப்போது அனிதா மடியில் படுத்துக்கொண்டு குடிக்கிறானென்றால் என்ன காரணம் என்று யோசித்தவன் அனிதாவை அம்மா என்று சொல்லிக்கொடுத்ததில் பவனின் மனம் தாய் பாசத்திற்கு எவ்வளவு ஏங்கியிருப்பான் என்று எண்ணி மோகனுக்கு கண்ணில் கண்ணீர் கோர்த்துவிட்டது.. பவன் பாலை குடித்து முடித்து அப்படியே தூங்கிவிட்டான்..” பவன் தூங்கிட்டான்மா என்கிட்ட கொடு நான் அவனை மடியில படுக்க வைச்சுக்குறேன்” என்று பரிமளா பவனை தூக்கப் போக..
“அத்தை அவன் பாதி தூக்கத்துல இருக்கான் எழுந்தானா அழுவான் நானே மடியில வச்சுக்குறேன்.. நீங்க போய் சாப்பிட்டு வாங்க” என்றாள் அனிதா.. ஏனோ பவனை பார்த்ததிலிருந்து அனிதாவுக்கு பிடித்துப்போனது.. அவனை எந்நேரமும் தன் கையிலேயே வைத்திருக்க ஆசைப்பட்டாள்.. “சரிம்மா நான் சாப்பிட்டு வரேன்” என்ற பரிமளாவிற்கு பவனை பற்றிய கவலையெல்லாம் பறந்து போய் நிம்மதியாக சாப்பிடச் சென்றார்.
மோகன் தன்னிடம் ஏதாவது பேசுவானா என்று நொடிக்கொருதரம் மோகனை பார்த்துக்கொண்டிருந்தாள் அனிதா.. மோகனோ நேற்று வரை தன் மகன் தன்னை விட்டுப் பிரியாதிருந்தவன் இன்று தாய் என்று வந்தவுடன் தன்னைக்கூட மறந்து விட்டு அவளது மடியில் சொகுசாய் படுத்துக்கொண்டு உறங்குகிறானே என்று ஆச்சரியத்துடன் பவனைத்தான் பார்த்திருந்தான்..
அனிதாவோ அவர் குழந்தையை வச்சிருக்க நினைக்கறாரோ.. என்ன மனசுல நினைக்குறாருனு தெரியலையே.. நம்மகிட்ட ஒரு வார்த்தை பேசினா குறைஞ்சு போயிருவாரா என்ன என்று கூட நினைத்தாள் அனிதா.
அனிதா மனதில் நினைத்தது மோகனின் மனதிற்கு எட்டியதோ என்னவோ “ரொம்ப நேரமா பவனை மடியில வச்சிருக்க.. என்கிட்ட கொடு.. அவன் என் மடியில இருந்தா அழமாட்டான்” என்று வாய் திறந்து பேசினான்.
அடேயப்பா என்கிட்ட பேசிட்டாருப்பா என்று மனதில் சந்தோசப்பட்ட அனிதா.. “இல்ல பரவாலைங்க நான் பவனை வச்சிக்குறேன் சிரமமில்லை” என்றாள் மெலிதாய் இதழ்விரித்து.
தூரத்தில் சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்த சிவாவும் அர்ஜுனும் மோகன், அனிதாவிடம் பேசுவதை பார்த்தவர்கள் “சீனியர் நம்ம மோகன் அனிதா கிட்ட என்னமோ பேசுறான் இனியாவது அனிதாகூட சந்தோசமாய் வாழ்ந்தா சரிதான்” என்று சாப்பாடு பரிமாறி முடித்து அவர்கள் மனைவிக்காக சாப்பிடாமல் காத்திருந்தனர் இருவரும்.. வெளியே மோகனின் காருக்கு ரோஸ் வைத்து அலங்கரித்து முடித்தவர்கள் சாப்பிடும் இடத்திற்கு வந்தனர் மல்லிகாவும் ஜோஷிதாவும்..
சிவாவோ தட்டில் சாப்பாடு போட்டு மல்லிகாவிடம் கொடுக்க “நீங்களும் சாப்பிடுங்க சேர்ந்தே சாப்பிடலாம்” என்று சொல்லிவிட்டு தட்டில் நால்வரும் சாப்பாடு போட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.. ஜோஷிதாவோ “மாப்பிள்ளையும் பொண்ணும் இன்னும் சாப்பிடலையே அர்ஜுன்” என்று மோகனையும் அனிதாவையும் பார்த்து கேட்டாள்.
“மோகனும் அனிதாவும் தனிமையில இருந்தா பேசிப்பாங்கனுதான் அவங்க ரெண்டு பேரையும் சாப்பிட கூப்பிடலை ஜோ.. ஆனா அவங்க ரெண்டு பேரும் அதிகமா பேசவேயில்லை.. இந்த ஊமைக்கோட்டான் வாய் திறந்து பேசினா முத்து உதிர்ந்துவிடும் போல.. நாம சாப்பிட்டு தட்டுல போட்டு கொண்டு போவோம்” என்று சலிப்பாக பேசினான் அர்ஜுன்.
சாப்பிட்டு முடித்து ஒரே தட்டில் பொங்கல் பூரி பிரியாணி குலோஜாமுனை வைத்து மோகன் இருக்கும் இடத்திற்கு சென்றனர்.. அர்ஜுனோ மோகனிடம் சாப்பாடு தட்டை கொடுத்தான்.. என்ன ஒரு தட்டுல போட்டு வந்திருக்காங்க என்று அனிதாவோ பம்பியவள் நால்வரையும் பார்த்து சிரித்தாள்.
மோகனோ “அர்ஜுன் ஒருதட்டு மட்டும் கொண்டு வந்திருக்க.. அனிதாவுக்கு சாப்பாடு கொண்டு வரலையா” என்று மெதுவாக கேட்டான்.
“மச்சான் அனிதா பவனை வைச்சிருக்காங்கள்ள.. நீ அவங்களுக்கு ஊட்டிவிடு மச்சான்.. அதான் ஒரு தட்டுல போட்டுக் கொண்டு வந்தேன்” என்று கண்ணைச்சிமிட்டினான் அர்ஜுன்..
அர்ஜுனின் பிளான் தெரிந்த மோகன் அவனை முறைத்துப்பார்க்க.. “சரிடா நாங்க கிளம்புறோம் நீயாச்சு உன் பொண்டாட்டியாச்சு.. ஒரு போட்டோக்கூட எடுக்காம கிளம்புறோம்” என்றான் சலிப்பாக அர்ஜுன்.
“இப்ப என்னடா நான் இப்ப அனிதாவுக்கு சாப்பாடு ஊட்டிவிடணும் அவ்ளோதான.. அதுக்குள்ள கிளம்புறீங்கனா எனக்கு கோபம் வரும்” என்ற மோகன் குலோப்ஜாமுனை எடுத்து அனிதாவின் வாயருகே கொண்டு சென்றவனுக்கு கைகளில் லேசாக நடுக்கம் வந்தது.. சிவாவும் அர்ஜுனும் கண்ஜாடை காட்டிக்கொண்டு சிரித்தனர்.. நால்வர் மட்டும்தான் நின்றிருந்தனர்.. இதில் அனிதாவுக்குத்தான் சங்கடமாக இருந்தது..
சிவாவோ “என்னடா உன்னை ஊட்டிவிடச் சொன்னா உன் கை நடுங்குது” என்று கிண்டல் பண்ணினான்.
“இல்லையே என் கை நடுங்கலையே” என்று பேசி சமாளித்த மோகன் இப்போது நடுக்கம் இல்லாமல் ஊட்டினான் அனிதாவுக்கு.. மோகன் தடுமாறுவதை கண்ட அனிதா “எனக்கு போதும்ங்க” என்றாள் மெல்லிய குரலில்.. மோகனுக்கும் அப்பாடா என்றிருந்தது.. மோகனும் சாப்பிட்டு முடித்தான்.. போட்டோகிராபர் சாப்பிட்டு வந்தனர்.. தாலி கட்டும் போது மட்டும் போட்டோ எடுத்திருந்தனர்.. அதன்பிறகு மோகன் போட்டோ வேண்டாம் அப்புறம் எடுத்துக்கலாம் என்றிருந்தான்.. இப்போது பவனை, பரிமளா தூக்கிக் கொண்டார்.. மோகனையும் அனிதாவையும் சேர்ந்து நிற்கச் சொல்ல.. இருவரும் தள்ளியே நின்றனர்..
ஜோஷிதாவோ அனிதாவின் பக்கம் வந்து அனிதாவை “மோகன் சார் பக்கம் நெருங்கி நில்லுங்க” என்று அனிதாவை மோகன் பக்கம் நிற்க வைத்தாள்.
அனிதாவுக்கோ வெட்கமாக இருந்தது.. மோகனுக்கோ மனதில் கூச்சம் இருந்தாலும் வெளிக்காட்டாமல் அனிதாவுடன் நெருங்கி நின்றான்.. போட்டோகிராபர் இருவரையும் போஸ் கொடுக்க சொல்ல “சேர்ந்து இருந்தாப்போல போட்டோ எடுங்க போதும்” என்று சொல்லிவிட்டான் மோகன்.
முத்துவுக்கோ மகளையும் மருமகனையும் சேர்ந்து வைத்து பார்த்தவருக்கு மனம் நிறைந்து போனது.. “அப்போ வீட்டுக்கு கிளம்பலாமா நல்ல நேரம் முடியறதுக்குள்ளார மாப்பிள்ளை வீட்டுக்குப் போகணும்” என்று பரபரத்தார் முத்து.
மோகனும் அனிதாவும் காரில் ஏறினர்.. “நாங்க கிளம்புறோம் மோகன்.. இன்னிக்கு காலேஜ்ல முக்கியமான மீட்டிங் வைச்சிருக்கேன்.. பில்டிங் கட்ட ஆளுங்க வராங்க நானும் சீனியரும் கிளம்புறோம் வாழ்த்துக்கள் மச்சான்” என்று கட்டிக்கொண்டான் அர்ஜுன்..
சிவாவும் மோகனிடம் “டேய் பழைய லைப்பை நினைச்சிட்டு அனிதாக்கிட்ட நடந்துக்காத.. அவகிட்ட மனசுவிட்டு பேசிடு” என்று மோகனுக்கு மீண்டும் அட்வைஸ் மழை பொழிந்தான் சிவா.. தலையை மட்டும் ஆட்டினான் மோகன்.. மோகனின் காரில் பரிமளா பவனுடன் ஏறிக்கொண்டார். முத்துவோ தங்களது காரில் ஏறிக்கொண்டார்.
அர்ஜுனோ “சீனியர் அம்மா நேத்து பாத்ரூம்ல வழுக்கி கீழ விழுந்துட்டாங்க.. லேசான அடிதான் ..நான் வீட்டுக்கு போய்ட்டு அம்மா எப்படியிருக்காங்கனு பார்த்துட்டு காலேஜ் வந்துடறேன் என்றதும்.
“ஓ அப்படியா என்கிட்ட சொல்லவே இல்லையே அர்ஜுன்” என்று குறைபட்டுக்கொண்டான் சிவா.
“நேத்துதான் உங்களுக்கு மேரேஜ் ஆச்சு உங்களை டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னுதான் சொல்லலை” என்றான் தயங்கியபடி அர்ஜுன்..
“இன்னிக்கு புது பில்டிங் கட்ட ஆளுங்க வராங்க அர்ஜுன்.. நீ அம்மாவை பார்த்துட்டு வந்துடு நான் அதுவரை மேனேஜ் பண்ணுறேன்” என்றவன் மல்லிகாவுடன் காலேஜிற்கு சென்றான் சிவா.
அர்ஜுனும் ஜோஷிதாவும் வீட்டுக்குச் சென்றனர்.
மோகனின் வீட்டில் கார் நின்றதும் பவனை அனிதாவிடம் கொடுத்துவிட்டு காரிலிருந்து இறங்கியவர் ஆரத்தி கரைக்க வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
மோகனோ முதலில் இறங்கி பவனை அனிதாவிடமிருந்து வாங்க பவனோ அனிதாவின் மார்பில் உரசும் தாலி செயினை இறுக்கிப்பிடித்திருந்தான்.
அனிதாவோ தடுமாற “பொறுமையா இரு நான் அவனை தூக்குறேன்” என்று கூறியவன் பவனின் கையை மெதுவாக தாலி செயினிலிருந்து கையை எடுக்க பவனோ தாலிச்செயினை இறுக்கிப்பிடித்திருந்தான். அவனது கைகள் அவளது மென் அங்கத்தில் பட அவளுக்குள் கூச்சம் நெட்டித்தள்ளி உடலை நெளித்தாள்.. அவளது கண்களை பார்த்தவாறே பவனின் கையை பிரித்து எடுத்து முடிக்க பெரும்மூச்சு விட்டாள்  அனிதா.
“தாலி செயினை உள்ளே எடுத்துப்போடு” என்று சொல்லியவன் பவனை தூக்கிக்கொண்டு வாசலில் முன்னே போய் நின்றான்.. மோகன் சென்றதும் தான் அனிதாவுக்கு மூச்சே விடமுடிந்தது.. அவனது நெருக்கம் அவளை நிலைகுலையச்செய்தது.. காரிலிருந்து இறங்கி மோகனுடன் சேர்ந்து நின்றாள்.
பரிமளா ஆரத்தி தட்டுடன் வந்தவர் மூவருக்கும் சேர்ந்தே ஆரத்தி எடுத்து முடித்து “உள்ள போங்க” என்று ஆரத்தியை வெளியே ஊற்றி வந்தவர்.. பவனை வாங்கிக்கொண்டு அனிதாவை விளக்கேற்றச் சொன்னார்.. விளக்கேற்றி முடிக்க இருவருக்கும் பால் பழம் கொடுத்துவிட “அம்மா நான் பவனை கட்டிலில் படுக்க வைக்குறேன்” என்று தனது அறைக்குள் சென்றான் மோகன்.. அவனுக்குத் தான் என்ன மனநிலையில் தான் இருக்கிறோம் என்றே புரியவில்லை.. ஆனால் அவன் மனம் இன்று நிம்மதியாய் இருந்தது.. அனிதாவை தன் அறைக்கு கூட்டிச்சென்று குளிக்கவைத்து அவள் ரெடியானதும் சமையல்கட்டுக்குச் சென்று பால்காய்ச்ச சொன்னார்.. பரிமளா சொன்னதை செய்யும் பொம்மை போல ஒவ்வொன்றையும் செய்துகொண்டிருந்தாள்.. முத்து வீட்டுக்கு வந்தவரோ “அம்மாடி நான் கிளம்புறேன்… நாளைக்கு மறுவீடு வந்திடுங்க.. மாப்பிள்ளை எங்க அவர்கிட்ட சொல்லிட்டு கிளம்பணும்” என்றார் முத்து.
“அவர் ரூம்ல இருக்காருப்பா.. நான் போய் கூட்டிட்டு வரேன்” என்று அறைக்குள் வர.. மோகன் கட்டிலில் கண்ணை மூடி சாய்ந்திருந்தான்.
“எ.என்னங்க” என்று அனிதாவின் குரல் கேட்டு கண்ணைத் திறந்த மோகன் “என்ன சொல்லு” என்றான் அமைதியாக..
“அ.அப்பா ஊருக்கு கிளம்புறாங்க உங்ககிட்ட சொல்லிட்டு கிளம்பணுமாம்” என்றாள் சேலை முந்தானையை திருகிக்கொண்டே..
“ம்ம் வரேன்.. நீ முன்னாடி போ” என்று பவனுக்கு இருபக்கமும் தலையணையை முட்டுக்கொடுத்து விட்டு அனிதாவின் பின்னால் சென்றான்.
ஹாலில் நின்றிருந்த முத்து மோகனை பார்த்ததும் “மாப்பிள்ளை நான் கிளம்புறேன்.. நாளைக்கு மறுவீடு வந்திடுங்க” என்றார் புன்னகையுடன்.
“வரோம் மாமா.. ஆனா நான் ரெண்டுநாள்தான் காலேஜ்க்கு லீவு போட்டிருக்கேன்.. மறுவீடு வந்ததும் அன்றைக்கே கிளம்பிடுவேன்.. நீங்க தப்பா நினைக்கக் கூடாது” என்றான் தெளிவாக.
முத்துவுக்கு ஒருநாள் கூட மாப்பிள்ளை இருக்கவில்லையென்று மனம் சங்கடப்பட்டாலும் மோகன் காலேஜ் போகணும் என்றதும் “நீங்க விருந்து சாப்பிட்டு கிளம்பிடுங்க மாப்பிள்ளை” என்றார் மனம் நிறைவாக..
முத்து ஊருக்கு கிளம்ப அனிதாவுக்கு கண்ணில் கண்ணீர் வந்தது.. “அப்பாஆஆ” என்று முத்துவை கட்டிக்கொண்டு அழுக ஆரம்பித்தாள்.. பக்கம் நின்ற பரிமளாவிடம் கண்ணைக்காட்டினான் மோகன்..
பரிமளாவோ “அம்மாடி அழாதா அப்பா மனசு சங்கடப்படும்ல” என்றதும் கண்ணீரை துடைத்துக்கொண்டு “போய்ட்டு வாங்கப்பா” என்றாள் சிறு விசும்பலுடன்..
முத்துவோ “தங்கச்சி என் பொண்ணை பார்த்துக்கோங்க” என்று பரிமளவிடம் கூறியவர் அனிதாவின் நெற்றியில் முத்தமிட்டு “மாப்பிள்ளை மனுசு கோணாம நடந்துக்கணும்” என்று சொல்லிவிட்டு கிளம்பியிருந்தார்.
முத்து சென்றதும் அறைக்குள் சென்ற அனிதாஅமைதியாக கண்ணீர்விட்டாள்.. மோகனோ அறைக்குள் வந்தவன் “நாளைக்கு உங்க வீட்டுக்குப் போனா ஒருவாரம் இருந்துட்டு வேணா வா.. ரொம்ப அழுகாத கண்ணெல்லாம் வீங்கிப் போச்சு” என்று அவளிடம் முதன் முறையாக கனிவாக பேசினான் மோகன்.
அனிதாவுக்கு காலையிலிருந்து தன்னிடம் ஒருவார்த்தை பாசமாக பேசமாட்டானா என்று ஏங்கியவளுக்கு “அழாத” என்று சொன்னதும் அனிதாவுக்கு மனம் குளிர்ந்துவிட்டது.. கண்ணீரை துடைத்துக்கொண்டு “நான் அழலைங்க” என்றாள்.
“டயர்டா இருக்க கொஞ்ச நேரம் நீ தூங்கி ரெஸ்ட் எடு.. நான் வெளியே போய்ட்டு வந்துடறேன்.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவன் குளியலறைக்குள் சென்று குளித்துவிட்டு டிசர்ட் பேண்ட்டுக்கு மாறியவன் அறையை விட்டு வெளியே சென்றான்.
ஹாலில் மதிய சமையலுக்கு காய் கட் பண்ணிக்கொண்டிருந்த பரிமளாவோ “மோகன் எங்க கிளம்புற வீட்டில இரு” என்றார்..
“கொஞ்சம் வெளியில வேலையிருக்கு சீக்கிரம் வந்துடறேன்” என்று பைக் கீயை எடுத்துக்கொண்டு சென்றான்.
அனிதாவுக்கு மோகன் ரெண்டு வார்த்தை தன்னிடம் பேசியதும் அவள் மனம் இறக்கை கட்டிப்பறந்தது.. அவளுக்கும் டயர்டா இருக்க பவன் பக்கத்தில் படுத்தவுடன் கண்ணயர்ந்தாள்.. சமையலை முடித்து வந்த பரிமளா மோகனின் அறைக்குள் வந்து பார்க்க பவனை அணைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள் அனிதா.. ரொம்ப நாளுக்குப்பிறகு நிம்மதியாக உறங்குகிறாள்.
20 உயிரை உயிரால் கோர்க்க வா
அனிதா, பவனை அணைத்துக்கொண்டு உறங்குவதை கண்ட பரிமளாவுக்கோ  ஆனந்தக்கண்ணீர் வந்துவிட்டது.. பாவி பச்சக்குழந்தைய விட்டு போய்ட்டா.. இப்ப பவனுக்கு தாய்ப்பாசம் கிடைச்சிருச்சு இனி பேரனை பற்றி கவலைப்படவேண்டியதில்லை என்று மனம் நிறைந்து போய் ஹாலுக்குச் சென்றவர் சோபாவில் அமர்ந்து கண்ணைமூடினார்.
லதாவை வீட்டில் கொண்டு போய் விட்டுட்டு “பாட்டி நான் வரேன் பத்திரமா இருங்க நைட் போன் போடுறேன்” என்று அவரின் கன்னத்தில் முத்தம் கொடுத்து கிளம்பினாள் ஜோஷிதா..
கௌரிக்கு கால் வலி குறைந்ததும் அவரால் சும்மா இருக்க முடியவில்லை காலை ஊனி நடந்து பார்க்க நடக்க முடிந்தது.. அலமேலுவோ சமையல்கட்டில் வேலையாக இருந்தாள்.. கௌரி கட்டிலில் படுத்திருப்பாரென்று நினைத்துவிட்டு வேலையை செய்து கொண்டிருக்க கௌரி மெதுவாக நடந்து ஹாலுக்கு வந்தவர் சோபாவில் உட்கார்ந்தார்.. வெறும் சுளுக்குதான் அதனால் அவரால் நடக்க முடிந்தது.. அர்ஜுனும் ஜோஷிதாவும் வீட்டுக்குள் வந்ததும் கௌரி ஹாலில் உட்கார்ந்திருந்ததை பார்த்து சந்தோசப்பட்டான்.. கௌரியின் பக்கம் வந்து அமர்ந்த அர்ஜுனோ “ம்மா உங்களால நடக்க முடியுதா.. கால் வலி குறைஞ்சிடுச்சா” என்று அக்கறையாக அவரது கையை பிடித்துக்கொண்டு கேட்டான்.
கௌரி என்ன பதில் சொல்லப்போகிறாரென்று அவரது முகத்தையே பார்த்திருந்தாள் ஜோஷிதா… “ஹா இப்ப கொஞ்சம் வலி குறைஞ்சுதான் இருக்கு அர்ஜுன்.. ஆனா நான் நடந்து வந்தேனா இப்போ கால் வலிக்குது” என்று முகத்தில் வலி இருப்பது போல வைத்துக்கொண்டார்.
நல்லா நடிக்குறீங்க அத்தை.. என்று புருவம் தூக்கிப்பார்த்த ஜோஷிதாவோ “அப்போ ஹாஸ்பிட்டல் போலாமா அத்தை ஒரு எக்ஸ்ரே இல்ல.. எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப்பார்த்தா எலும்பு ப்ராக்சர் ஆகியிருந்தாகூட தெரிஞ்சு போய்டும்” என்று கவலைப்பட்டு பேசுவது போல கௌரியின் பக்கம் வந்து உட்கார்ந்தாள்.
“இல்ல எனக்கு வெறும் சுளுக்குதான்டி நீ சும்மா இரு” என்று ஜோஷிதாவிடம் கடுப்பாக  பேசினார் கௌரி.
“ஜோ நீ போய் டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு காலேஜ்க்கு ரெடியாகு” என்று ஜோஷிதாவை கௌரியிடமிருந்து தப்பிக்க வைத்தான் அர்ஜுன்.
ஜோஷிதா சென்றதும் “அம்மா கால் பெயின் இருந்தா சொல்லுங்க.. பின்னாடி காலையே எடுக்கற நிலைமை வந்துடும்” என்று அர்ஜுன் கௌரியை பயமுறுத்தி கேட்க.
“அச்சோ அர்ஜுன் நான் வேணா நடந்து காட்டட்டுமா” வலி குறைஞ்சு போச்சுப்பா  என்று கௌரி எழும்ப பார்க்க.
“வேணா வேணா நீங்க ரெஸ்ட் எடுங்க.. நம்ம காலேஜ்ல இன்னிக்கு புது பில்டிங் கட்ட ஆரம்பிக்கறோம்மா.. நான் காலேஜ் கிளம்பறேன்” என்றதும்..
கௌரிக்கோ அர்ஜுன் கூறியதை கேட்டு சந்தோசப்பட்டவர் “இதுக்குதான் நான் ஆசைப்பட்டேன் அர்ஜுன்.. நீ நம்ம காலேஜை இன்னும் முன்னுக்கு கொண்டு வந்து விடுவேன்னு  நம்பிக்கையும் இருக்கு எனக்கு” என்றவர் அர்ஜுன் நெற்றியில் முத்தம் கொடுத்து “உன்னோட அத்தை துர்கா” என்று பேச ஆரம்பிக்க ஜோஷிதாவும் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
“அம்மா அவங்களை பத்தி இப்போ பேச வேண்டாம்” என்றவன் விறுவிறுவென அறைக்குள் சென்று சட்டையை மட்டும் மாற்றிவிட்டு வெளியே வந்தவன் “ஜோ கிளம்பலாம்” என்று கார் கீயை எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டான் அர்ஜுன்
“பார்த்தியாடி என் பிள்ளை உன்னோட அம்மா பெயரை கேட்டவுடன் எப்படி எரிஞ்சு விழறானு..இப்பக்கூட நீ துர்கா பொண்ணுனு அவன்கிட்ட சொன்னா அடுத்த நிமிஷம் இந்த வீட்டை விட்டு உன்னை அர்ஜுனே கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிடுவான்” என்று ஏளனமாக சிரித்தார் கௌரி, ஜோஷிதாவை பார்த்து.
“ரொம்ப சிரிக்காதீங்க அத்தை.. நீங்க எங்கம்மாவை எப்படி வீட்டை விட்டு அனுப்புனீங்கனு விவரத்தை எனக்கு நம்பகமான ஒருத்தர் என்கிட்ட சொல்லிட்டாரு.. அர்ஜுன்கிட்ட நானும் உங்களைப் பத்தின உண்மையை சொல்வேன் அப்போ அர்ஜுன் யாரை வீட்டை விட்டு அனுப்புறாருனு பார்க்குறேன்” என்று இதழை சுளித்துக்கொண்டு வெளியே போனாள்..
“ரொம்பத் திமிருக்காரியாதான் இருக்கா.. துர்க்காவை வீட்டைவிட்டு போகச் சொன்னது நாமதான்.. அது  பாண்டி அண்ணனுக்கு மட்டுமே தெரியும்.. பாண்டி அண்ணன்கிட்ட பேசியிருப்பாளோ இந்த ராங்கிங்காரி ஜோஷிதா.  ஹா எது வந்தாலும் சாமாளிப்போம்.. ஆனா இந்த ஜோஷிதாவை எப்படியாவது வீட்டைவிட்டு அனுப்பியாகணும்” என்று திட்டம் போட ஆரம்பித்தார் கௌரி.
காரில் ஏறிய அர்ஜுனோ துர்காவின் நியாபகமாகவே இருந்தான்.. அத்தை.. அத்தை.. என்று எப்படி அவங்களை நான் சுத்தி வந்தேன்.. என்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லல.. அவங்க லைப்தான் பெரிசுனு என்னை விட்டு போய்ட்டாங்க என்று கோபம் இன்னமும் அர்ஜுனுக்கு இருந்தது.. துர்கா ஜோசப்பை மதம் மாறி திருமணம் செய்துவிட்டாங்க என்ற கோபம் அவனுக்கு எள்ளவும் இல்லை.. அவனிடம் தன் காதலை பற்றி சொல்லாமல் தன்னை தவிக்க விட்டு போய்ட்டாங்க என்ற கோபமே.. துர்கா இறந்தது இன்னமும் அவனுக்கு தெரியாது.. தெரிந்து போகும்போது துடித்துத்தான் போவான்.. ஆனால் அப்போது அவனை விட்டு ஜோஷிதா போயிருப்பாள் என்பதை அறியாமல் கோபப்பட்டுக்கொண்டிருக்கான் அர்ஜுன்.
அர்ஜுனின் முகத்தில் கோபத்தைக் கண்ட ஜோஷிதாவுக்கு அவனிடம் பேசவே பயமாக இருந்தது.. “அ..அர்ஜுன் துர்கா அத்தை” என்று ஆரம்பிக்கும் முன்பே கையை காட்டி பேசவேண்டாம் என்று சொன்னவன் காரை வேகமாக ஓட்டினான்.. காலேஜ் வந்ததும் இறங்கியவன் “நீ டிபார்ட்மெண்ட் போ ஜோ..நான் சிவா சார் ரூமுக்கு போய்ட்டு வரேன்” என்று அவளிடம் சரியாக பேசாமல் சென்றான்.
துர்காவை பற்றி பேச வாயெடுத்தற்கே அவளிடம் பேசாமல் இருப்பவன் துர்கா பொண்ணு தான்தானென்று தெரிந்தால் என்னவாகும் என்று இப்பவே ஜோஷிதாவுக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கியது.. எப்படியும் ஒரு நாள் தெரிந்துதான் ஆகணும்.. அதுக்குள்ள நான் யாருங்குற விபரத்தை அர்ஜுனிடம் கூறிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டே டிபார்ட்மெண்ட் சென்றாள்.
சிவா அறைக்குப் போக அங்கே சிவா சீட்டில் இல்லை சிவாவுக்கு போன் போட்டான் அர்ஜுன்..
“அர்ஜுன் பில்டிங் கட்டுற இடத்துக்கு வாயேன்” என்றான் சிவா..
அர்ஜுனும் பில்டிங் கட்டும் இடத்திற்கு செல்ல சிவாவை பூமி பூஜை போடச்சொல்லிக்கொண்டிருந்தார் கட்டிட மேஸ்திரி.. சிவாவோ அர்ஜுன் சரியான நேரத்திற்கு வந்திருக்க நீதான் பூமி பூஜை போடணும்” என்று அவனிடம் பூஜை தட்டை கொடுக்க
“சீனியர் எல்லாரும் என்னைத்தான் பார்க்குறாங்க” என்று காதை தேய்த்துக்கொண்டே மெதுவாக பேசியவன்..நீங்களே செங்கலை எடுத்து வச்சிடுங்க நான் ஓரமா நிக்குறேன்”
“நோ அர்ஜுன் நான் இதை செய்யமாட்டேன்” என்று உறுதியாக நின்றான் சிவா.
“சீனியர் ரொம்ப பண்ணுறீங்க என்றவன் அவனாக செங்கலை எடுத்து வைத்து பூமிப்பூஜை போட்டு முடித்து விட்டு மேஸ்திரியிடம் பில்டிங் முடிய எத்தனை மாசம் ஆகுமென்று கேட்டுக்கொண்டிருந்தவன்.. எனக்கு அடுத்த செமஸ்டர் ஆரம்பிக்கறதுக்குள்ள பில்டிங் வேணும்” என்று மேஸ்திரியிடம் வினவிக்கொண்டிருந்தான்.
“அவரோ அப்போ காசு கொஞ்சம் கூடுதலா ஆகும் சார்” என்றார்..
“காசை பத்தி கவலைப்படாதீங்க.. பத்து ஆளுங்களை எக்ஸ்ட்ரா சேர்த்து பில்டிங்கை சீக்கிரம் முடிச்சு கொடுங்க அமெண்ட் ஏதும் வேணும்னா சிவா சாரை கேளுங்க அவர் தருவாரு” என்று தன்னுடன் கூடவே நடந்து வரும் சிவாவை கைகாட்ட.. மேஸ்திரி “அப்போ நீங்க யாரு சார்” என்று அர்ஜுனிடம் கேட்க..
சிவாவோ “இந்த காலேஜ் எம்.டி யாருகிட்டயும் சொல்லாதீங்க” என்றான் அவசரமாக..
அர்ஜுன் சிவாவை  முறைத்துப் பார்க்க..
“இவருக்கு மட்டுமாவது தெரியட்டுமே அர்ஜுன் நம்ம மேஸ்திரி கந்தசாமி யார்கிட்டயும் சொல்லமாட்டாரு” என்றான் சிவா.
“சீனியர் நான் தான் இந்த காலேஜ் எம்டினு சொல்லிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை.. நான் தான் எம்டினு தெரிஞ்சா என்கிட்ட ப்ரியா பழகி பேச மாட்டாங்க.. ஸ்டாப்ஸ் என்ன நினைக்கிறாங்கனு தெரிஞ்சாதான் என்னால இந்த காலேஜ்க்கு நிறைய செய்ய முடியும்.. ஒருநாள் கண்டிப்பா நான்தான் இந்த காலேஜ் எம்டினு சொல்லுறேன்” என்றான் அர்ஜுன்.
“சரி அர்ஜுன் ரொம்ப நீளமா லெக்சர் எடுக்கறப்பா.. இனி யாருக்கிட்டயும் நீதான் எம்டினு நான் சொல்லமாட்டேன்” என்று கண்ணடித்தான் சிவா.. சிவாவிடம் பேசியதில் அவனது கோபம் கட்டுக்குள் வந்திருந்தது.
இருவரும் பேசிக்கொண்டே சிவாவின் அறைக்குப் போக.. “என்ன சீனியர் உங்க முகம் பளீச்சினு இருக்கு.. கண்ணுவேற சிவந்து கிடக்கு எல்லாம் ஓ.கேவா” என்று ஒரு மார்க்கமாக கேட்டான் அர்ஜீன்.
சிவாவுக்கு வெட்கம் வந்து பின்னந்தலையை கோதிக்கொண்டவன் “எல்லாம் ஆச்சு அர்ஜுன்” என்று வெட்கப்பட்டுக்கொண்டே பேசினான்.
அதேநேரம் டிபார்ட்மெண்ட்டுக்கு போனாள் ஜோஷிதா.. அங்கே மல்லிகா அவரது கிளாஸ் முடிந்திருக்க மேஜையில் தலைவைத்து தூக்கிக்கொண்டிருந்தாள்.
“மல்லி மேம்” என்று கூப்பிட்டாள் ஜோஷிதா.. மல்லிகாவோ நேற்று நடந்த கூடலில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.
ஓ. நேத்து நமக்குத்தான் பர்ஸ்ட் நைட் நடக்கலை.. மேம்க்கு நடந்திருச்சுபோல என்று எண்ணியவள் மல்லிகா தூங்கட்டும் என்று அவளது கிளாஸ் அடுத்து இருக்க நோட்ஸ் எடுக்கத்துவங்கினாள்.
சிறிது நேரத்தில் கண்விழித்த மல்லிகாவோ எழுந்து பார்க்க நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தாள் ஜோஷிதா.
“ஜோஷி எப்போ வந்த என்னை எழுப்பியிருக்கலாம்ல”
“மேம் நான் உங்களை எழுப்பிப்பார்த்தேன்.. நீங்க அசந்து தூங்கிகிட்டிருந்தீங்க.. அதான் என் கிளாஸ்க்கு நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தேன்.. நைட் ரொம்ப நேரம் தூங்கலையா” என்றாள் குறுச்சிரிப்புடன்..
“ஏய் நீ ரொம்ப பேசுற” என்று வெட்கச்சிரிப்புடன் எழுந்தவள் அறையின் வாஷ்பேஷனில் முகம் கழுவி வந்தார்..
“மதியம் லன்ச் ஆர்டர் பண்ணிடலாமா” என்று பேசிக்கொண்டிருந்தனர் இருவரும்..
அர்ஜுன், ஜோஷிதாவுக்கு போன் போட்டான்.. “ஜோ மதியம் லன்ச் ஆர்டர் செய்திருக்கேன் நீயும், மல்லி மேடமும் சிவா சார் ரூமுக்கு வந்துடுங்க” என்று இயல்பாக பேசி போனை வைத்தான்.
“மேம் லன்ச்க்கு நம்ம ரெண்டு பேரையும் சிவா சார் ரூமுக்கு வரச்சொல்லியிருக்காரு அர்ஜுன்.. நான் என்னோட கிளாஸ்க்கு போய்ட்டு வந்துடறேன்” என்று எழுந்தவள்
“மேம் இனிதான் உங்களுக்கு கிளாஸ் இல்லையே தூங்குங்க அப்பதான் இன்னிக்கும் முழுச்சிருக்க முடியும்” என்று மல்லிகாவை கிண்டலடித்துவிட்டு சென்றாள்.
“நீ இங்க தான வரணும் அப்புறம் இருக்கு வா உன்னை பேசிக்குறேன்” என்று போலியாக மிரட்டினார் ஜோஷிதாவை மல்லிகா.
ஜோஷிதா கிளாஸ் முடித்து வந்ததும் “என்ன ஜோஷி உன் முகத்துல நேத்து நைட் எதுவும் நடந்தது போல தெரியலையே.. அர்ஜுன் இருக்கும் வேகத்துக்கு நீ காலேஜ் இன்னிக்கு வருவாயினு சந்தேகமாயிருந்துச்சு.. ஆனா, நீ வந்துட்டியே ஏன்” என்று சந்தேகப்பட்டு கேட்டார் மல்லிகா, ஜோஷிதாவிடம்.
“அது ஏன் கேட்கறீங்க மேம்.. என்னோட மாமியார் இருக்காங்களே அவங்க செம வில்லியா இருக்காங்க” என்று கௌரி கீழே விழுந்ததை கூற..
“அர்ஜுன் அம்மா இப்படிகூட நடந்துப்பாங்களா” என்று ஆச்சரியமாக கேட்டாள் மல்லிகா..
தான் யார் என்ற விபரத்தை மல்லிகாவிடம் கூறினாள் ஜோஷிதா..
“சீக்கிரம் நீ அர்ஜுனுக்கு அத்தை பொண்ணுனு சொல்லிடு ஜோஷி.. இல்லைனா அர்ஜுனோட கோபத்துக்கு நீ ஆளாகணும்” என்று அவளுக்கு அட்வைஸ் பண்ண.. சிவா, மல்லிகாவுக்கு போன் செய்து “சாப்பிட வாங்க” என்று கூப்பிட்டதும் இருவரும் சாப்பிட சென்றனர்.
மல்லிகா.. சிவா, அர்ஜுன், ஜோஷிதா மூவருக்கும் பரிமாறிவிட்டு தானும் சாப்பிட உட்கார்ந்தாள்.. “மல்லி மேம் பில்டிங் வேலை ஆரம்பிச்சாச்சு.. நம்ம டிபார்ட்மெண்ட்டுக்கு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் மத்த டிபார்ட்மெண்ட்க்கு என்ன தேவையோ எல்லாம் ஆர்டர் போடச்சொல்லிடுங்க” என்றான் சாப்பிட்டுக்கொண்டே..
“ம்ம் சொல்லிடறேன் அர்ஜுன்” என்றாள் மல்லி..
“சீனியர் நீங்களும் மல்லி மேமும் ஹனிமூன் போகலையா” என்றதும் சிவாவுக்கு பொறை ஏறியது.. தண்ணீர் பாட்டிலை எடுத்து சிவா பக்கம் வைத்தாள் மல்லிகா.. “நாங்க ஹனிமூன் எங்கேயும் போகலை அர்ஜுன்” என்றான் மல்லிகாவை பார்த்துக்கொண்டே சிவா.
அர்ஜுனோ சூழ்நிலையை புரிந்துகொண்டவன் அமைதியாக இருந்தான்.. நால்வரும் சாப்பிட்டு முடிக்க.. சிவாவோ “நான், ரவுன்ட்ஸ் போய்ட்டு வந்துடறேன்” என்று கிளம்பியிருந்தான்..
“மல்லி மேம் எனக்கு ஒரு கிளாஸ் போடுங்க நானும் கிளாஸ் எடுத்து ரொம்ப நாள் ஆச்சு” என்றான் அர்ஜுன் .
“மதியம் மோகன் கிளாஸ் இருக்கு.. வேணா அந்த கிளாஸ்க்கு போங்க அர்ஜுன்” என்றாள் ஜோஷிதா..
“ஓ நான் கிளாஸ் எடுக்கறேன்” என்றதும் மதியம் மோகன் கிளாஸுக்க அர்ஜுன் சென்றதும் தன்னை உங்க புது ஹெச்ஓடி.. என்று அறிமுகப்படுத்திக்கொண்டு முதல் நாளே நான் கிளாஸ் எடுக்க விரும்பல.. உங்களைப் பத்தின ஒரு சின்ன இன்ரோ கொடுங்க என்றதும் மாணவர்கள் சந்தோசமாக தங்களை பத்தின இன்ட்ரோ கொடுக்க.. குட் என்றவன் பாடத்தை விட்டு மாணவர்களுக்கு ஜென்ரல் நாலேஜ் பத்தின கேள்விகளை கேட்டு அவர்களின் படிப்பு திறன் எப்படியிருக்கு என்று பார்த்துக்கொண்டிருந்தான்.. ஓரிரு மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் அர்ஜுன் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறியிருந்தனர்.. கிளாஸ் முடிய அடுத்த வகுப்பில் பார்க்கலாம் என்று கிளம்பியிருந்தான். மாணவர்கள் புது ஹெச்ஓடி சூப்பர்ல என்று பேசிக்கொண்டனர்.
மாலையானதும் சிவாவும் அர்ஜீனும் பில்டிங்கை போய் பார்த்துக்கொண்டிருந்தனர்.. மல்லிகாவை வீட்டுக்கு கேப் பிடித்து போகச்சொல்லியிருந்தான்.
ஜோஷிதா மட்டும் டிபார்ட்மெண்டில் ஸ்டூடன்ஸ் எக்ஸாம் பேப்பர்ஸில் கரெக்சன் பண்ணிக்கொண்டிருந்தாள்.
21 உயிரை உயிரால் கோர்க்க வா
“அர்ஜுன் அம்மாவுக்கு இப்போ பரவாலையா நான் அம்மாவை பார்க்க வரேன்” என்று சிவா கூறியதும்
“அம்மா நல்லாயிருக்காங்க சீனியர்.. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க மல்லிமேமோட இன்னொரு நாள் வாங்க உங்களுக்கும் விருந்து வைக்கணும்ல” என்றான் சிரிப்புடன்..
“சரி நான் கிளம்புறேன் நம்ம மோகனுக்கு போட்டு பேசிடு அவன் இன்னிக்கு நைட் அந்த பொண்ணுக்கிட்ட ஏதாவது ஏடா கூடாமா பேசப்போறான்” என்றான் சிவா, அர்ஜுனிடம்..
“நான் பேசுறேன் சீனியர் நீங்க கிளம்புங்க” என்று கூறியவன் ஜோஷிதாவை கூடிக்கொண்டு போக டிபார்ட்மெண்ட்டுக்கு வர ஆறு மணிக்கு மேல் ஆனது..
“ஜோஷிதாவோ இன்னுமா வராரு போன் பண்ணலாம்  என்று போனை எடுக்க.. “இதோ வந்துட்டேன் லட்டு போகலாம்” என்று அவள் கையை பிடித்தான்.. அவளும் கோபமாக இருக்கவில்லை.. “போகலாம் அர்ஜுன் சார் ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க போல” என்றாள் அவனுடன் சேர்ந்து நடந்துகொண்டே..
“என்ன லட்டு தெரியாதது போல கேட்குற.. இன்னிக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் நடக்கப்போகுதுல்ல.. அதான் நான் ஹேப்பியா இருக்கேன் இன்னிக்கு தூக்கம் எல்லாம் உனக்கு கிடையாது லட்டு”. என்றவன் சுற்றி பார்த்துவிட்டு யாரும் இல்லையென்றதும் அவளது கன்னத்தில் முத்தமிட்டு விலகினான்.
“அச்சோ அர்ஜுன் நாம வெளியில இருக்கோம்” என்று வெட்கட்கத்துடன் சிணுங்கினாள்..
உன்னை அப்படியே யாரும் இல்லாத இடத்திற்கு தூக்கிட்டு போயிடணும்னு இருக்கு லட்டு” என்றவன் காரை ஓபன் செய்து இருவரும் ஏறியதும் காரில் ஏசியை போட்டு லாக் செய்து ஜோஷிதாவின் இதழையும் லாக்செய்தான் தன் இதழுடன்.. அவளது கைகள் தானாக அவனது சிகைக்குள் நுழைந்து கொண்டது.. இருவரும் முத்தப்போர் புரிந்தனர்.. நீண்ட நெடிய முத்தம்.. நொடிகள் நிமிடங்கள் ஆனது.. முத்தமிட்டுக்கொண்டே அவனது கைகள் அவளது இடையில் விளையாட சற்று மேல அபாய வளைவுகளையும் விரல்கொண்டு விளையாடியவன் அவள் மூச்சுக்கு ஏங்க.. சிறிது நேரம் அவளது இதழை விட்டுப் பிரிய அவனது கைகள் வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருந்தது.. “அர்ஜுன் நாம காருக்குள்ள இருக்கோம் உங்க கையை எடுங்களேன்”என்று அவன் கையை தட்டிவிட்டாள்.. “சோ சாப்ட்” என்று அவள் காதோரம் அந்தரங்கம் பேச..
“சீ போங்க அர்ஜுன் காஜிய பேசுறீங்க” என்றாள் நாணத்துடன்.
கௌரிக்கு போன் செய்து “கால் வலி இருக்கா” என்று கேட்டுக்கொண்டவன்.. ம்மா நாங்க வெளியில சாப்பிட்டு வரோம் அலமேலு அக்காவை சமைச்சு கொடுக்கச்சொல்லிடுங்க என்று போனை வைத்திருந்தான்.
“ஏன் அர்ஜுன் வீட்டுக்கு போயிருந்தா நான் அத்தைக்கு சமைச்சிருப்பேன்ல ஏன் நாம வெளியில சாப்பிடணும்” என்று கேட்டாள் ஜோஷிதா.
“இன்னிக்கு நமக்கு ஸ்பெஷல் நாள்டி.. இந்த நாளை நாம மறக்கக்கூடாது” என்றவன் காரை பைவ் ஸ்டார் ஹோட்டல் முன்பு நிறுத்தினான்.. “எதுக்கு அர்ஜுன் வீண் செலவு” என்று ஜோஷிதா சலிப்பாக சொல்ல..
“பேசமா வாடி லட்டு” என்றவன் ஹோட்டல் உள்ளே கைக்கோர்த்து அழைத்துச்சென்றான்.. கேன்டில் லைட் டின்னருக்கு புக் செய்திருந்தான்.. அந்த அறையில் அனைத்து டேபிள்களிலும் யாரும் அமரவில்லை.. ஜோஷிதாவோ அர்ஜுனுடன் இருக்கும் நிமிடங்களை சந்தோசமாக எண்ணிக்கொண்டிருந்தாள்… இருவரும் டேபிளிலில் உட்கார “பிடிச்சிருக்கா லட்டு கேண்டில் லைட் டின்னர்” என்றான் கண்ணைச்சிமிட்டி.
“ம்ம் பிடிச்சிருக்கு அர்ஜுன் என்றவள் நான் உங்ககிட்ட பேசணுமே” என்றாள்.
“நீ இப்ப எதுவும் பேச வேணாம் சாப்பிடறோம்.. வீட்டுக்கு போறோம்.. ம்ம் ம்ம் மஜா மஜா தான்” என்று அவளது இதழில் பட்டும் படாமலும் முத்தம் கொடுத்தான்.
“இது பப்ளிக்” என்று அர்ஜுனை செல்லமாக முறைத்தாள் ஜோஷிதா.
பேரர், அர்ஜுன் ஆர்டர் செய்த உணவுகளை கொண்டு வர.. இவ்ளோ வெரைட்டீஸா என்று கண்ணை விரித்துப்பார்த்தாள்.. அவளுக்கு பிடித்த பிஸ்பிரை, மட்டன் சுக்கா, பட்டர் சிக்கன் ,தந்தூரி சிக்கன், கார்லிக்  சிக்கன்,பிரான்ஸ்,சிக்கன் மஞ்சுரியன் என்று வகைவகையாய் இருக்க.. இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து வீட்டுக்குச் சென்றனர்.
அலமேலு சமைத்து வைக்க சாப்பிட்டு முடித்த கௌரியோ இன்னமா வராங்க ரெண்டுபேரும் என்று சலித்துக்கொண்டவர் அலமேலு காலை அமுக்கி விட “அர்ஜுன் வந்தா என்னை எழும்பி விடு அலமேலு” என அப்படியே உறங்கியிருந்தார் கௌரி.
வீட்டுக்கு வந்த அர்ஜுனும் ஜோஷிதாவும் கௌரியை பார்க்க போக கௌரி அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார்..
“அலமேலு அக்கா.. அம்மா சாப்பிட்டாங்களா”
“ம்ம் சாப்பிட்டாங்க தம்பி நீங்க வந்தா எழும்பிவிடச் சொன்னாங்க” என்றதும்..
“வேண்டாம்ங்கா அம்மா தூங்கட்டும்.. நான் காலையில வந்து பார்க்குறேன்.. இடையில ஏதாவதுனா போன் பண்ணுங்க” என்று அர்ஜுனும் ஜோஷிதாவும் அறைக்குச் சென்றனர்.
அர்ஜுன் முன்னே சென்றவன் “லட்டு குளிச்சிட்டு வரேன்” என்று ஜோஷிதாவின் கன்னம் தட்டிச்சென்றான்.
பவன் கண்விழித்து பார்த்தவன் “ம்மா ம்மா” என்று அனிதாவின் கன்னம் தொட்டு எழுப்பினான்.. அனிதா கண்விழித்துப்பார்த்தவள் “அடடே என் செல்லம் எழுந்தாச்சா” என்று பவனை தூக்கிக்கொண்டு குளியலறை சென்றவள் பவனை குளிக்க வைத்து தானும் முகம் கழுவி வெளியே ஹாலுக்கு வந்தாள்.
மோகன் டிவி பார்த்துக்கொண்டிருந்தான்… “ப்பா ப்பா” என்று கையை நீட்டி கூப்பிட்டான் பவன்.
பவனின் சத்தம் கேட்டு வந்த பரிமளாவோ வாங்க சாப்பிடலாம் என்றதும் மோகனும் டிவியை அணைத்துவிட்டு சாப்பிட வந்தான்.. பவன் கையை நீட்டி மோகனை தூக்கச் சொல்ல பவனை தூக்கி மடியில் வைத்துக்கொண்டான்.. பரிமளா சாப்பாட்டை மோகனுக்கும் அனிதாவுக்கும் பரிமாற “அத்தை நீங்களும் உட்காருங்க சாப்பிடலாம்” என்றாள் மெதுவாக பரிமளாவை..
“நான் மாத்திரை போடணும்மா நான் முன்னமே சாப்பிட்டேன்.. நீங்க ரெண்டுபேரும்தான் சாப்பிடணும்” என்று பேசிக்கொண்டே பரிமாற மோகனோ பவனுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தான்.. பவன் சமத்து என்று மனதில் எண்ணிக்கொண்டு சாப்பிட்டாள் அனிதா.
அனிதா சாப்பிட்டு முடிக்க “அம்மாடி பக்கத்துல இருக்க அம்மன் கோவிலுக்கு ரெண்டு பேரும் போய்ட்டு வந்துருங்க” என்றதும் அனிதா, மோகனை பார்த்தாள்.
“வீட்லயே சாமி கும்பிட்டுக்கலாம்” என்றவன் பவனை, அனிதாவிடம் கொடுத்துவிட்டு கைகழுவச் சென்றான்.
“அனிதா அவன் கொஞ்சம் அப்படித்தான் நீ எதையும் மனசுல போட்டுக்காத” என்றார் பரிமளா..
“நான் எதையும் நினைக்கல அத்தை நான் வீட்டுலயே சாமி கும்பிட்டுக்குறோம்” என்றாள்.
மாலையானது குளித்துவிட்டு வந்த அனிதா பூஜையறையிலே பூ போட்டு சாமி கும்பிட்டாள்.. பவன் ஓடிவந்து அவளது புடவை தலைப்பை பிடித்திழுக்க அவனை தூக்கி அவனது குட்டி நெற்றியில் திருநீறு வைத்துவிட்டாள்.. “ம்மா அப்பாக்கு” என்று திருநீறை தொட்டு காட்டியது.. அதே நேரம் பவன் பின்னாடியே வந்த மோகனோ பூஜையறைக்குள் வர.. “ம்மா ப்பாக்கு” என்று திருநீறு மோகனுக்கு வைத்துவிடச் சொல்ல.. அவளோ மோகனை சங்கோஜமாக பார்க்க.. “வச்சுவிடு” என்றான் மெதுவாக. திருநீறை எடுத்து கைகள் நடுங்க மோகனின் நெற்றியில் வைத்துவிட்டாள்..
அவளது நடுக்கத்தைக் கண்டவன் வெளியே போக.. “எ.. என்னங்க ஒருநிமிசம்” என்றதும் திரும்பி நின்று என்ன என்ற ரீதியில் பார்க்க குங்குமச் சிமிழை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.. ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன் குங்குமத்தை எடுத்து அவளது உச்சி வகுட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
இரவு பவனுக்கு மொட்டைமாடியில் நிலாவைக் காட்டி இட்லியை ஊட்டி விட்டுக்கொண்டிருந்தாள்.. கையில் மல்லிக்கை பூவுடன் மாடிக்கு வந்த பரிமளாவோ “அனிதா இன்னிக்கு உங்களுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.. உங்க விருப்பம்படி நடந்துக்குக்கோ” என்றவர் கையில் கொண்டு வந்திருந்த மல்லிக்கைபூவை தலையில் வைத்துவிட்டு.. “பவன் இன்னிக்கு நைட் என்கூட இருக்கட்டும்மா” என்றவர் பவனை தூக்கிக்கொண்டு போக.. அனிதா பின்னாடியே வர அமைதியாக இருந்த பவன் அவள் மோகன் அறைக்குள் போவதைக் கண்டு “பாத்தி ம்மாட்ட” என்று சிணுங்க அனிதா ஓடிவந்து பவனை தூக்கிக்கொண்டு “அத்தை பவன் என்கூடவே இருக்கட்டும்” என்று தூக்கிச்சென்று பவனிடம் கதை சொல்லிக்கொண்டேயிருக்க பவனோ தூங்கிவிட்டான்..
பவனை பரிமளா எடுத்துச்செல்கிறேன் என்றதும் அனிதாவுக்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டது. அதுவும் மோகனுடன் தனிமையில் இருப்பதா என்று.. அவளுக்கு காய்ச்சலே வந்துவிடும் போலிருந்தது.. நல்லவேளை பவன் தன்னிடம் வரேன் என்று அழுக தூக்கி வந்துவிட்டோம் என்று கொஞ்சம் சந்தோசப்பட்டுக்கொண்டாள்.. நம்மகிட்ட அத்தை முதல் ராத்திரி பத்தி சொன்னது போல மோகன் கிட்டயும் சொல்லியிருப்பாங்கள்ள.. மோகன் என்கிட்ட தனியா பேசணும்னு சொல்லியிருக்காரு என்ன பேசப்போறாரோ தெரியலையே என்று பதட்டத்துடன் அமர்ந்திருந்தவள் ரொம்ப நேரம் மோகனுக்காக காத்திருந்தவள் கண்ணை மூடி அமர்ந்துகொண்டாள்.
அர்ஜுனோ குளித்துவிட்டு வர.. ஜோஷிதாவும் குளிக்கச் சென்று விட்டு வர.. அர்ஜுன் ரூம் முழுக்க லேவண்டர் ரூம் ப்ரே அடித்து வைத்து வாசம் வர வைத்திருந்தான்.. ஜோஷிதாவோ குளித்துவிட்டு டவலுடன் வெளியே வந்தவள் டிரஸிங் அறைக்குள் போக “ஏய் நீ டிரஸ் போட்டு என்ன பண்ண போற” என்று டவலோடு அவளை தூக்கிவந்தவன் கட்டிலில் அப்படியே கிடத்தி அவளோடு சரிந்தான்.. ஜோஷிதாவோ “நைட்டியாவது போட்டுக்குறேன்” என்று சிணுங்க.. “நைட்டிக்கெல்லாம் இப்போதைக்கு வேலையில்லை லட்டு” என்று அவளது முகவடிவை விரல் கொண்டு அளந்தான்.. அவனது விரல் அவளது இதழ் அருகே வர.. விரலை கடித்துவைத்தாள் பெண்ணவள்.. “ஏய்இஇ” என்று அவளது இதழை விரலால் பிடித்தவன் அப்படியே தன் இதழோடு கவ்விக்கொண்டான்.. இதழும் இதழும் சண்டை போட்டது.. அவனது நாவு கொண்டு அவளது இதழை திறந்தவன் உமிழ்நீரை அமுதாக அருந்தினான்.. அவனது கைகளோ பூவையின் மேனியை ஆராதிக்க துவங்கியது.. அவளது இதழ்கள் பெண்ணவளின் இதழை விட்டு கழுத்துக்கு வந்து மீசையால் கூசினான்.. அவளோ திரும்பிப்படுக்க அவளது மார்போடு கட்டியிருந்த டவல் அவிழ்ந்து விழ அவனுக்கு இன்னும் வசதியாகிப்போனது.. அவளது செழுமைகள் அவனது கண்ணுக்கு விருந்தாக எச்சில் விழுங்கிக்கொண்டவன் அங்கங்களை கண்களால் கபளீகரம் செய்தான்.. அவளோ அவன் கண்களை தன் கைகள் கொண்டு மூட அவளது கையை விலக்கிவிட்டவன் அவளது செழுமைகளில் அவனது இதழ்கள் செய்த மாயத்தில் அவனது முதுகில் காயம் செய்தாள் விரல் நகம் கொண்டு.. மலர் கொங்கைகளில் மன்னவன் இதழ்படுத்தும் பாட்டில் பெண்ணவளின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கத்தொடங்கியது.. அர்ஜுன் தலை கொங்கைகள் மீதே இருக்க அவன் தலையை நகர்த்தியவள் இதழ் கடித்துக்கொண்டு பார்க்க அவனோ அவளுக்குள் மூழ்கத்துடித்துக்கொண்டிருந்தான்.. அவள் இதழில் மீண்டும் போர்த்தொடுத்தவன் நாபிதடாகத்தில் நாவால் சுற்றி கோலமிட்டான்.. பெண்ணவளுக்கோ அவன் கொடுக்கும் சுக வேதனைகள் தாங்க முடியாமல் அர்ஜுன் முடியல என்று வாய்விட்டு அலற.. “சாரி லட்டு” என்றவன் அவளிடம் கண்ணைசுருக்கி சம்மதம் கேட்க.. அவளும் சம்மதம் சொல்ல அவளுக்குள் மெதுவாய் நுழைந்துகொண்டான் அர்ஜுன்.. அவள் வலியில் கண்ணீர் பெருக.. அவளது இதழில் முத்தமிட்டு முத்தமிட்டு மங்கையை தன்வசப்படுத்தி அவளுக்குள் நுழைந்து வெற்றிக்கொடியும் நாட்டினான் அர்ஜுன்.. கூடல் முடிந்து அவளை தன்மேல் போட்டுக்கொண்டவனோ “என்னடி ரொம்ப படுத்திட்டேனா” என்று இன்னொரு கூடலுக்கு அடித்தளம் போட்டான்.. அவளோ அவனிடம் விளையாண்டு பார்க்க “ஆமா அர்ஜுன்” என்றாள் மெல்லிய குரலில்.
“அச்சோ ஆயில் ஏதும் போட்டுவிடட்டுமா” என்றான் பரிதவித்து..
“ஹேய் அர்ஜுன் சும்மா சொன்னேன்டா” என்று அவர் மார்பில் முகத்தை ஒளித்து வைக்க.
“ஹேய் லட்டு அப்போ நான் உன்னை எடுத்துக்குவேன்” என்று விடியும் வரை அவளை தூங்கவிடவில்லை அர்ஜுன்.
பரிமளாவோ மோகனுக்காக காத்திருந்து பார்த்துவிட்டு அறைக்குள் சென்று தூங்கியிருந்தார்.
வெகுநேரம் கழித்து வந்த மோகனோ தன்னிடமிருந்த சாவியை வைத்து கதவை திறந்து வீட்டுக்குள் சென்று பார்க்க லைட் அணைத்து இருட்டாக இருந்தது.. வெளியே போகும்போதே சாப்பிட்டு போயிருந்தான்.. ஆனால் அனிதாவோ தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தாள்.. பேசணும் என்று சொல்லிவிட்டான் மோகன்.. ஆனால் அவளிடம் பேச தைரியம் வரவில்லை அவனுக்கு.. மெதுவாய் தன் அறைக்கதவை திறந்தான் மோகன்.. கதவு திறந்த சத்தத்தில் கண்விழித்தவள் மோகனை பார்த்து எழுந்து நின்றாள்.
சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டிவிட்டு திரும்ப அவள் அறையை விட்டு சமையல்கட்டுக்குச் சென்று பாலை டம்ளரில் எடுத்து வந்தாள் மோகனுக்காக.
பவனோ காலை பரப்பிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான்.. அவனது தலையை வருடிவிட்டு நெற்றியில் முத்தம் கொடுத்தான் மோகன்..
“ம்க்கும்” என்று தொண்டையை கணைத்தாள் அனிதா.. மோகன் திரும்பி பார்க்க  “பால் கொண்டு வந்திருக்கேன்” என்றாள் மெல்லிய குரலில்
எதுவும் பேசாமல் பாலை வாங்கிக்குடித்து டம்ளரை டேபிளில் வைத்துவிட்டு  கதவை லாக் செய்தான் மோகன்.
 
 
 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *