உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

உயிரை உயிரால் கோர்க்கவா

30 உயிரை உயிரால் கோர்க்க வா
சிவாவோ ஒருவாரம் கழித்து ஜோஷிதாவுக்கு போன் செய்தவன் “ஜோஷி எப்ப காலேஜ் வர நீ.. உன்னை அர்ஜுன் கண்ணால பார்த்தாதான் அவனுக்கு உன்மேல உள்ள காதல் வெளியே வந்து உன்கிட்ட பேசுவான்.. நீ நாளைக்கே காலேஜ் கிளம்பி வாம்மா” என்றான் அக்கறையாக..
“வரேன் அண்ணா” என்று விட்டேத்தியாக சொல்லி போனை வைத்தவள்  மனதில் என்னை பார்த்தா மட்டும் பேசிடுவாரோ என்ன? நானும் இப்ப அவர் மேல கோபமாத்தான் இருக்கேன்.. நாளைக்கு உங்களை பார்க்க வரேன்.. என்னை வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிடுவாரோ  என்றெல்லாம் யோசித் பார்த்தவள்  கணவனை பார்க்கப்போகிறோம் என்ற சந்தோசத்தில் இருந்தாள்.
அடுத்தநாள் காலையில் காலேஜ் புறப்பட்டவளுக்கு அத்தனை சந்தோசம்.. ஆனால் அவள் கண்களில் கருவளையம் வந்திருந்தது.. கணவனை பிரிந்திருக்கும் பெண்களுக்கு பசலை நோய் வருமாம்மே.. அந்த பசலை நோய் ஜோஷிதாவையும் தாக்கியிருந்து.. தனது ஸ்கூட்டியில் தான் காலேஜ்க்கு போவதாய் இருந்தாள்.. லதா பாட்டியோ பேத்தி பொண்ணு நீ பஸ்ல போயேன் காலேஜ்கு என்றார் அவள் கர்ப்பமாயிருகப்பதை கவனத்தில் வைத்து சொல்ல..
“சரிங்க பாட்டி” என்று காலேஜக்கு பஸ்ஸிலேயே சென்றாள்.. காலேஜ் முன் பஸ்ஸிலிருந்து இறங்கியவள் பேக்கை மாட்டிக்கொண்டு காலேஜ்குள் வர.. சரியாக அர்ஜுனும் காரில் காலேஜ் உள்ளே நுழைந்தவன் ஜோஷிதாவை பார்த்துவிட்டான்.. என்ன இவ ஒழுங்கா சாப்பிடுறால இல்லையா.. இளைச்சுப் போன மாதிரி இருக்கா என்று அவளை கடிந்து கொண்டு காரை காலேஜ் உள்ளே விட்டான்.
ஜோஷிதா சிவாவின் அறைக்குச் சென்று கையெழுத்துப் போட்டுக்கொண்டிருக்க.. சிவாவும் மோகனும் அங்கே வந்தனர்.. சிவா அவனது சீட்டில் போய் உட்கார்ந்தவன் “இப்போ உடம்பு எப்படியிருக்கு ஜோஷி” என்று அவள் நலன் விசாரிக்க.. விசாரிக்க வேண்டியவனோ இவ எதுக்கு காலேஜ்க்கு வந்தா.. நான் என் கண்ணுலயே படவேண்டாம்னு சொல்லியிருந்தேனே என்று பேசியவன் விறுவிறுவென சிவாவின் அறைக்குச் வந்துகொண்டிருந்தான்.
“இப்போ ஓ.கே சார் எனக்கு செகண்ட்ஹவர் கிளாஸ்.. நான் கிளம்புறேன்” என்றவள்  திரும்பி “சார் அவர்கிட்ட நான் கன்சீவ்வா இருக்கறதை நீங்க ரெண்டு பேரும் சொல்ல வேண்டாம் நான் சொல்லிக்குறேன்” என்று சொல்ல..
“உன் இஷ்டம்மா ஆனா எங்களுக்கு தெரியும்னு அப்புறம் அவனுக்கு தெரிஞ்சா அய்யனார் போல ஆடிடுவான்” என்றான் சிவா.. மோகனும் “ஆமா ஜோஷி அவன் கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியாது.. நீ அவன்கிட்ட எப்படியாவது உண்மையை சொல்லித்தான் ஆகணும்” என்று சொல்லிக்கொண்டிருக்க..
“என்கிட்ட யாரும் எதுவும் சொல்லவும் வேண்டாம் பேசவும் வேண்டாம் மோகன்” என்றவன் கடைசியில் மோகன் பேசிய வார்த்தையை மட்டும் கேட்டுக்கொண்டவன் அவனாக ஒன்றை நினைத்துக்கொண்டு உள்ளே வந்தவன்.. “என்கிட்ட இந்த மேடம் லீவுன்னு எனக்கு ஒரு மெசேஜ் கூட போடலை என்றவன்.. அதனால என் டிபார்ட்மெண்ல இருக்க இவங்களுக்கு தகுதி இல்ல” என்றான் அதி கோபத்தில்..
ஜோஷிதாவோ அடுத்தவர்கள் முன்னால் தன்னை பேசியதை பொறுத்துக்கொள்ளாமல் சிவாவின் முன்னால் போய் கண்ணீருடன் நின்றவள், “சார் நான் ஹெச்ஓடி சாருக்கு போன் போட்டேன் அவர்தான் எடுக்கவில்லை” போன் கால் லிஸ்டை காண்பித்தாள்.
சிவாவோ இரண்டு பேருக்கம் நடுவில் மாட்டிக்கொண்டு விழித்தான்.. மோகனோ “அர்ஜுன் நீ என்னடா இப்படி பேசுற” என்று அவனை முறைத்துப் பார்க்க..
“உனக்கு எக்ஸாம் செஷன் போட்டிருக்கேன் நீ அங்க போய் பாரு.. இங்க நின்னு வெட்டியா பேசமா” என்று மோகனிடம் எகிறி விழ..
எப்படியோ போ உன் பிடிவாதத்துனால நீ தான் பின்னால கஷ்டப்படப்போற.. நான் சொன்னாலும் கேட்க மாட்டே” என்று பேசிவிட்டு மோகனும் கிளம்பியிருந்தான்.”
சிவாவோ.. “அர்ஜுன், ஜோஷி என்கிட்ட ஒருவாரம் லீவு கேட்டு வாங்கினாங்க நான்தான் அவங்களுக்கு லீவுக்கு ஓ.கே சொன்னேன்” என்றான் மெதுவாய்..
“ஓ அப்படியா அப்ப எந்த ரிப்போர்ட் ஆனாலும் இந்த மேடம் உங்ககிட்டயே ஒப்படைக்கட்டும், பேசட்டும் என்கிட்ட வந்து பேச வேணாம்” என்று சினத்துடன் பேசியவன் வெளியே சென்றுவிட்டான்.
சிவாவோ “அவன் கோபம் தணிஞ்சா சரியாகிவிடுவான்மா.. நீ கவலைப்படாத” என்று சொல்வதை தவிர வேற ஒன்றும் செய்ய முடியவில்லை சிவாவால்.
இரண்டு மாதமும் இதே நிலை நீடிக்க.. டிபார்ட்மெண்டில் ஜோஷிதா இருந்தால் உள்ளே செல்ல மாட்டான்.. வெளியே ரவுண்ட்ஸ் என்று சுற்றிக்கொண்டிருப்பான்.. இப்போது அர்ஜுன் தான் காலேஜ் எம்.டி என்று அரசல் புரசலாக தெரிய ஒரு மீட்டிங் போட்டு சில காரணங்களால் தான் நான் இந்த காலேஜ் எம்டினு சொல்லலை.. உங்க கூட ப்ரண்ட்லியா இருக்கத்தான் நானும் ஒரு ஸ்டாப்போல இருந்தேன்.. இப்பவும் நீங்க என்கிட்ட எந்த ப்ராப்ளம்னாலும் பிராங்கா பேசுங்க என்று மீட்டிங்கை முடிந்திருந்தான் அர்ஜுன்.. ஜோஷிதாவோ அந்த மாத செக்கப்பிற்கு தனியாகவே சென்று வந்தாள்.. அவளுக்கு அழுகையாக வரும் தான் செய்த தவறுக்கு தண்டனையாக எண்ணிக்கொண்டாள்.. அர்ஜுன் மீது கோபமாகததான் இருந்தாள் ஜோஷிதா.
நளினியோ இத்தனை நாள் லீவில் இருந்துவிட்டு கையில் பத்திரிக்கையுடன் வந்தவள் ஜோஷிதாவிடம் பத்திரிக்கையை கொடுத்து ஜோஷி “அடுத்த வாரம் எனக்கு கல்யாணம்டி வந்துடு” என்றாள் சந்தோசமாக.
“கன்கிராட்ஸ் நளினி” என்று அவளுக்கு கைக்கொடுத்து, “மாப்பிள்ளை என்ன பண்ணுறாரு” என்று பத்திரிக்கையை திறந்து பார்த்துக்கொண்டே கேட்டாள்.
“மாப்பிள்ளை ஸ்டேட் பேங்க் மேனேஜர்டி” என்றாள் சந்தோசமாக..
“மேரேஜ் முடிஞ்சு வேலைக்கு வருவதான”
“இல்ல ஜோஷி நான் இப்ப ரீலிவ் லெட்டர் கொடுக்கத்தான் வந்திருக்கேன்” என்றவள்..
“நீ நம்ம ஹெச்ஓடி சாரையே கல்யாணம் பண்ணிட்ட.. செம ஆளு தான் அவரு” என்று பேசிக்கொண்டிருந்தவள் “நான் ப்ரின்சிபாலை பார்க்க போகணும்” என கிளம்பிவிட்டாள்..
31 உயிரை உயிரால் கோர்க்க வா
பரிமளாவோ “பவன் மட்டும் போதுமா அவன் கூட விளையாட ஒரு குழந்தை வந்தா நல்லா இருக்கும்” என்றார் மருமகள் மனதில் என்ன இருக்கென்று பேசி பார்த்தார் அனிதாவிடம்..
அனிதாவுக்கு கண்ணீர் வந்து விட்டது.. ஆனால் முகத்தை திருப்பி கண்ணீரை துடைத்துக்கொண்டவள்.. “இல்ல அத்தை கொஞ்ச நாள் போகட்டும்னு இருக்கோம் மத்தபடி எதுவுமில்லை” என்றாள் சிறு புன்னகையுடன்.
“சரிமா நான் சொல்ல வேண்டிய கடமை எனக்கிருக்கு அதான் சொன்னேன்.. அவன் வரட்டும் அவன் கிட்டயும் சொல்லிடறேன்.. எனக்கும் வயசாகிடுச்சு அடுத்த வருசமே குழந்தை வந்துட்டா நானும் வளர்த்துவிட்டு நிம்மதியா கண்ணை மூடுவேன்” என்றார் மருமகளின் மனதை கரைத்துக்கொண்டு ..
“சரிங்கத்தை பவன் எழுந்திருப்பான் அவனுக்கு கஞ்சி வைக்கறேன்” என்று எழுந்து சமையல்கட்டுக்குள் சென்றாள்.
மோகன் காலேஜிலிருந்து வந்ததும் வீட்டைச் சுற்றி நோட்டமிட்டான் மனைவியை தேடி.. பரிமளாவோ, அவன் பார்வையை உணர்ந்து “அனிதா பக்கத்துல இருக்க கோவிலுக்கு பவனை எடுத்துட்டு போயிருக்காடா, உனக்கு காபி போடட்டுமா” என்றார் .
“போடுங்கம்மா தலையும் வலிக்குதுதான் காபி குடிச்சா நல்லாயிருக்கும்” என்றவன் அவனது அறைக்குச் சென்று முகம் கழுவி வந்தவன் வாசற்கதவையே பார்த்திருந்தான்.
பரிமளாவோ காபி கொண்டு வந்து கொடுத்தவர் “மோகன் பவன் கூட விளையாட இன்னொரு குழந்தை இருந்தா நல்லாயிருக்கும் .. கல்யாணமாகி நாலு மாசம் ஆகப்போகுது ஏன் இன்னும் தள்ளி போடுறீங்க” என்றார் பொறுமையாக..
“அப்படியில்லமா அனிதா உங்ககிட்ட ஏதாவது சொன்னாலா” என்றான் காபியை குடித்துக்கொண்டே சற்று காட்டமாக..
“ம்மா பவன் மட்டும் போதும்னு இருக்கேன்.. இன்னொரு குழந்தை வந்தா இப்ப பவன் மேல பாசமா இருக்கா.. அனிதா அவ குழந்தை வந்ததும் மாறமாட்டானு” என்ன நிச்சயம் என்று கேள்வியாக பரிமளாவை பார்த்தான்.
பரிமளாவோ “டேய் நம்ம அனிதா நல்ல பொண்ணு” என்று மருமகளுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தார்.
“எல்லாம் அவ குழந்தை வரவரைக்கும் அப்படித்தான் இருப்பா.. குழந்தை வந்ததும் மனசு மாறிடுவாங்கம்மா.. இப்போதைக்கு இந்த பிரச்சனையை விடுங்க” என்று சலிப்பாக சொன்னவன் காபியை குடித்து முடித்து அறைக்குள் சென்றவனுக்கு, அனிதா அம்மாகிட்ட ஏதோ சொல்லியிருக்கா அதான் அம்மா கேட்குறாங்க என்று அவனாக ஒன்றை நினைத்துவிட்டு அனிதாவின் மேல் கோபத்துடன் இருந்தான் மோகன்.
அனிதா கோவிலிருந்து வர நேரமாகிவிட பொறுத்துப்பார்த்தவன்.. “ம்மா நான் போய் அனிதாவை கூட்டிட்டு வரேனென்று” பைக்கை எடுத்துக்கொண்டு சென்றான்.. பவனை தோளில் போட்டுக்கொண்டு கையில் கூடையுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள்..
அனிதாவின் பக்கம் பைக்கை நிறுத்தியவன் “இந்த நேரத்துக்கு ஒரு ஆட்டோ பிடிச்சு வரமாட்டியா” என்றான் கடுப்பாக.
“நடந்து வர தூரம்தான ஆட்டோவுக்கு எதுக்கு வீண் காசு” என்று அவள் பேச..
அவனுக்கு சுர்ரென்று கோவம் வந்தது.. “இந்த ஏரியாவை பத்தி உனக்குத் தெரியுமா” என்றான் கோபமாக.. இவர் என்ன இத்தனை கோபமா இருக்காரு என்று நினைத்தவள்.. “சாரிங்க அடுத்த டைம் இது போல தனியா வரமாட்டேன்” என்றாள் அவரசமாக..
“சரி வண்டியில ஏறு” என்று அவள் கையிலிருந்த கூடையை வாங்கிக்கொள்ள பவனை தூக்கிக்கொண்டு வண்டியில் ஏறினாள் அனிதா.
வீட்டிற்குப் போய் சாப்பிட்டு முடித்து விட்டு வழக்கம் போல அவள் சமையல்கட்டில் வேலைகளை முடித்துவரும் வரை காத்திருந்தவன் அவள் பால் டம்ளருடன் உள்ளே வந்தவள் அவன் கையில் பாலைக் கொடுக்க வாங்கிக் குடித்து விட்டு “உட்காரு” என்றான் அழுத்தமாக..
“அம்மாகிட்ட குழந்தையை பத்தி பேசினியா” என்றான் ஒரு முறைப்போடு..
“அத்தைதான் பவன் கூட விளையாட ஒரு குழந்தை இருந்தா நல்லாயிருக்கும்.. நீ என்ன பண்றனு கேட்டாங்கா” என்றாள் மெதுவாக.
“அப்படி சொல்லாம நாங்க சந்தோசமாகத்தான் இருக்கோம் அத்தை.. இன்னும் குழந்தை வரலைனு சொல்லியிருக்கணும்” என்றதும் அனிதாவுக்கு கோபம் வந்தது.
“ஏன் அப்படி சொல்லணும்.. நான் பொய்யெல்லாம் பேசமாட்டேன்.. இப்ப சொல்றேன் என் வயித்துல ஒரு குழந்தை வேணும்.. நானும் எல்லா பொண்ணுங்க போல குழந்தை பெத்துக்கணும்.. என் வயிறும் பௌர்ணமி நிலவு போல வளர்ந்து வரணும்னு எனக்கும் ஆசை இருக்காதா” என்று அவள் மனதில் உள்ளதையெல்லாம் இன்று அப்படியே கொட்டிவிட்டாள்.
மோகனோ அனிதாவுக்கு இவ்வளவு பேச வருமா என்று ஒருநிமிசம் பிரமித்துதான் போனான்.. அவளின் ஆசைகளை புரிந்து கொள்ளாமல் போய்ட்டேனா என்று யோசித்தவன், அடுத்த நிமிசமே “உனக்குனு ஒரு குழந்தை வந்துட்டா என் பையனை நீ இதே போல பார்த்துப்பியா” என்று தேய்ந்து போன ரெக்கார்டு போல அன்றைக்கு கேட்ட கேள்வியையே திரும்பவும் கேட்டான்.
“என்னங்க பவனை நான் நம்ம பையனாத்தான் நினைக்குறேன்.. இப்ப நீங்கதான் பவனை என் பையனு சொல்றீங்க” என்றவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
“என்ன நீ, நான் எது சொன்னாலும் குதர்க்கமா பேசுற.. எப்ப பார்த்தாலும் கண்ணுல டேம்மை திறந்து விடுற.. நான் எதுவும் தப்பா சொல்லவில்லை.. நம்மளை போல இருக்க எல்லா குடும்பத்துலயும் நடக்கறதை சொன்னேன்” என்றவன் குளியலறைக்குள் சென்றுவிட்டான்.. அவள் அழுததும் அவனுக்கு தாங்கவில்லை.. ஆனாலும் இன்னொரு குழந்தை வந்தா என்று ஆயிரம் முறை யோசித்தான் மோகன்.
அனிதாவோ இனி என்பக்கம் வரட்டும் தொட விட்டேனா பாரு என்றவள் சேலையை மாற்றாமல் பவனுடன் போய் படுத்துக்கொண்டாள்.. இத்தனை நாளாய் கீழே ஒரு மெத்தையை விரித்து போட்டு இருவரும் படுத்துக்கொள்வர்.. அவனுடன் கூடல் முடித்ததும் குளித்து விட்டு பவனின் அருகே படுத்துக்கொள்வாள் அனிதா.. ஆனால் இன்றைக்கோ மெத்தையை மட்டும் விரித்து வைத்துவிட்டு பவன் பக்கம் வந்து படுத்துக்கொண்டாள்.
குளியலறையிலிருந்து வெளியே வந்த மோகனோ மெத்தையை பார்க்க வெறுமனே இருக்க..கட்டிலை எட்டிப்பார்க்க பவனை அணைத்துக்கொண்டு கண்ணை மூடிப்படுத்திருந்தாள்.. மோகனுக்கு அவளுடன் இணையாமல் தூக்கம் வராதே.. கொஞ்ச நேரமாகினும் அவளை அணைத்தப்படி படுத்திருந்தால் அவனுக்கு தூக்கம் வந்துவிடும்.. இன்றோ அவள் கட்டிலில் படுத்ததும் ஓ மேடத்துக்கு கோவம் வந்துடுச்சோ என்றவன், கட்டிலுக்கு வந்து அவளை அப்படியே தூக்க.. “விடுங்க.. விடுங்க” என்னை என்று அவனின் கையிலிருந்து திமிறினாள் அனிதா.
அனிதாவின் அதரத்தை தன் அதரத்தால் அதக்கியிருந்தான் மோகன்.. அவளால் சத்தம் போட முடியவில்லை.. மெத்தையில் படுக்க வைத்தவன் அவளை கொள்ளையடிக்கத் துவங்கினான்.. எச்சரிக்கையாத்தான்.. ஆனாலும் அவனின் தேடல் அதிகமாகத்தான் இருந்தது.. அன்று அவளை விடியும் வேளை வரை தூங்கவிடவில்லை.. பவன் சிணுங்க அவளை படுக்க சொல்லியவன் அவனே எழுந்து வந்து பவனுக்கு பால் காட்டிவிட்டு வந்து அவளை அணைத்தவன் விடியும்வரை விடவேயில்லை.. அவனது தேடல் சேவல் கூவிய போதுதான் முடிந்தது.. ஆனால் அவனுக்கே தெரியாமல் அவனது வித்து அவளது கருப்பையில் சேர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *