உயிரை உயிரால் கோர்க்கவா
சிவாவும், மல்லிகாவும் வீட்டுக்கு வந்தனர்.. வீட்டுக்குள் நுழையும் வரை சிவா மல்லிகாவின் கையை விடவில்லை கோர்த்து பிடித்திருந்தான்.. ஹாலில் மைதிலி குழந்தையுடன் உட்கார்ந்திருந்தாள்.. அவளது கணவன் ரவி வரவில்லை.. அவனுக்கு தன் தங்கை லஷ்மியை திருமணம் செய்யவில்லை என்ற வருத்தம் அவனுக்கு இருக்க தான் வராமல் நீ மட்டும் போயிட்டு வா என்று மைதிலியை அனுப்பி வைத்திருந்தான்..
மைதிலியை பார்த்ததும் மல்லிகா சிவாவின் கையை விடுவித்துக்கொண்டாள்.. “வா மைதிலி பாப்பாவுக்கு உடம்பு சரியாகிடுச்சா” என்று குழந்தையின் நெற்றியை தொட்டு பார்த்தான் சிவா.
குழந்தை திவ்யா, “மாமா எனக்கு காய்ச்சல் இல்ல” என்று கண்ணைச்சிமிட்டியது..
மைதிலியோ “அண்ணா உன் தங்கச்சி சூழ்நிலையை புரிச்சுக்கோ” என்றவள் மல்லிகாவை பார்த்து கடமைக்காக சிரித்தாள்.
மல்லிகாவுக்கோ என்ன பேசுவது என்று தெரியாமல் கையை பிசைந்துகொண்டிருந்தவள் பேக்கிலிருந்து சாக்லேட்டை எடுத்துக் குழந்தைக்கு கொடுத்தாள்..
சமையல் கட்டிலிருந்து வந்த விமலாவோ “குழந்தைக்கு காய்ச்சல்னுதான் கல்யாணத்துக்கு வரலை நீ சாக்லேட் கொடுக்கிறியே மல்லிகா” என்றார் சற்று வெடுப்பான குரலில்.
இப்போதுதான் திவ்யா தனக்கு காய்ச்சல் இல்லை என்று சொல்லியது.. இது தெரியாத விமலாவோ மல்லிகாவின் மனதை காயப்படுத்த எண்ணி பேசினார்..
“மா திவ்யாவுக்கு காய்ச்சல் இல்லைனு இப்பத்தான் திவ்யாவே சொல்லிட்டா.. நீ என்னம்மா புதுசா பேசுற” என்று சிவா விமலாவிடம் கடுப்பாக கேட்டான்.
“அ.அது குழந்தைக்கு என்ன தெரியும்.. டாக்டர்கிட்ட இப்போ கூட்டிட்டுப் போறேனு மைதிலி என்கிட்ட சொன்னாடா” என்று சமாளித்துப்பேசி மல்லிகாவை பார்க்க..
அவளோ சிவாவை பார்த்தவள் குழந்தையை பார்க்க.. “அத்தை எனக்கு காய்ச்சல் இல்லை.. காய்ச்சல்னா தொண்டை வலிக்கும்.. எனக்கு வலிக்கல நீங்க சாக்லேட் கொடுங்க நான் சாப்பிடுறேன்” என்று கையை நீட்டியது..
“இந்தாடா செல்லம்” என்று சாக்லேட்டை திவ்யாவின் கையில் கொடுத்து குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு விமலாவை பார்த்து முறைப்புடன் சென்றுவிட்டாள்.
விமலாவோ “இப்ப என்னடா உன் பொண்டாட்டி என்னை முறைச்சிட்டு போறா” என்றார் தன்மீது தப்பில்லை என்பது போல..
“ம்மா இப்பவும் சொல்லிட்டேன் நீ தப்பு செய்துட்டு நின்னா நான் உனக்கு சப்போட்டுக்கு வரமாட்டேன்.. என் பெண்டாட்டியையும் அதட்டி பேசமாட்டேன் பார்த்துக்கோ.. நீ என்னை பெண்டாட்டிதாசனு சொன்னாலும் நான் கவலைப்படமாட்டேன்.. அவகிட்ட முகத்தை காட்டாம நல்லவிதமா இருந்தா அவளே உனக்கு வேண்டியதை செய்வாம்மா” என்றவன் மைதிலியிடம் “செலவுக்கு பணம் இந்தாம்மா” என்று பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து கொடுக்க.. மைதிலியோ “வேண்டாம்ணா என்கிட்ட இருக்கு” என்று மறுக்க..
விமலாவோ “ஏண்டி வேணாங்குற அண்ணன் கொடுக்கும்போது வாங்கிக்கோ.. இப்போ உன் அண்ணி வேற வந்திட்டா மறுபடியும் அவ கொடுக்க விடுவாளோ தெரியாது” என்று குதர்க்கமாக பேசினார் விமலா..
டிரஸ் சேன்ஞ் பண்ணிவிட்டு வெளியே வந்த மல்லிகாவுக்கு விமலா பேசியது அவள் காதில் விழுந்தது.. என்ன இவங்க இப்படியிருக்காங்க.. இவங்களை எப்படி சமாளிக்க போறேனோ தெரியலை என்று புலம்பியவள் அறைக்குள் சென்றுவிட்டாள்.
“ம்மா உனக்கு வயசாக வயசாக புத்தி பேதலிச்சு போச்சு… மைதிலி இந்த அண்ணன் உனக்கு எப்பவும் செய்ய வேண்டிய சீர் செய்துட்டேயிருப்பேன்.. என் பொண்டாட்டியே சொன்னாலும் நான் உனக்கு பணம் கொடுக்காமல் இருக்கமாட்டேன்” என்றவன் பணத்தை மைதிலியின் கையில் கொடுத்துவிட்டு திவ்யாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு மைதிலி அவள் வீட்டுக்குச் செல்ல கேப் புக் செய்து விட்டு அறைக்குள் சென்றான் சிவா.
“ஏன்மா நீ அண்ணி கிட்ட நல்லவிதமா நடந்துக்கோ.. அவங்களை பார்த்தா நல்ல விதமாதான் தெரியுதும்மா.. நீ உன்னோட வீராப்பை ஓரம் தள்ளிவைச்சு கொஞ்சம அண்ணியை அனுசரிச்சு போமா” என்றாள் மைதிலி.
“அடி போடி பைத்தியக்காரி என் மகன் கை நிறைய சம்பாதிக்குறான்.. நான் காலாட்டி சாப்பிடுவேன்.. என்னை யாரும் அதிகாரம் பண்ணமுடியாது.. பர்ஸ்ட் அவளை வேலைக்கு போகவேண்டாம்னு சொல்லப்போறேன்” என்றார் ஜம்பமாக விமலா.
“எப்படியோ போம்மா உன்கிட்ட மனுசி பேசமுடியாது” என்று சிவா புக் பண்ணிய கேப் வர.. “நான் கிளம்புறேன்மா” என்று திவ்யாவுடன் கிளம்பிவிட்டாள் மைதிலி.
மல்லிகாவோ, “சிவா நைட்டுக்கு என்ன சமைக்கட்டும் எப்படியும் உங்கம்மா நைட்டுக்கு சமைச்சிருக்க மாட்டாங்கனு எனக்கு தோணுது” என்றாள் வந்த முதல் நாளே விமலாவை பற்றி தெரிந்து கொண்டாள் மல்லிகா.
“இன்னிக்கு நீ சமைக்க வேணாம்.. நான் புட் ஆர்டர் பண்ணிட்டேன்.. நீ இன்னிக்கு ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று அவளை நெருங்கி வந்தான்.
“ஏன் சிவா இன்னிக்கு மட்டும்தான் எனக்கு ரெஸ்ட்.. நாளையிலிருந்து நான்தான் எல்லாம் வேலையும் செய்யணும்ல” என்றாள் தலைமுடியை கொண்டை போட்டுக்கொண்டு..
“அச்சோ என்ன இவ இன்னும் கோபமா இருக்கா போலயே.. இன்னிக்கு நாம எதுவும் பேசவே கூடாதுப்பா.. பட்டினி போட்டிருவா போல.. பலநாள் காத்திருந்து பழைய சோறு கூட கிடைக்காமல் போயிடும் போலயே” என்று மனதில் புலம்பியவன்..
“ஏய் என்ன பேசற நம்ம வீட்டு வேலைய யார் செய்வா நாமதான் செய்யணும்.. உன்னால முடியலையா சொல்லு நானும் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன்” என்றான் மல்லிகாவின் விரலுக்கு சொடக்கெடுத்து.
மல்லிகாவுக்கு அவன் தன்னை தாஜா செய்வது அவளுக்கு புரிந்துவிட்டது.. இவரை இன்னிக்கு காயப்போடக்கூடாது பாவம் என்றெண்ணியவள் சரி ப்ரஸ்ஸப் ஆகிட்டு வந்துடறேன்” என்றதும் “நானும் ப்ரஸ்ஸப் ஆகணும் ரெண்டும் ப்ரஸ் ஆகலாமா” என்று அவளை இடுப்போடு சேர்த்து அணைக்க..
“டேய் பிரின்சிபால் கொஞ்ச நேரம் உன் சேட்டையை நிறுத்தி வையு நான் பர்ஸ்ட் பிரஸ் ஆகிட்டு நம்ம வயித்தை கொஞ்ச கவனிச்சிட்டு அப்புறம் எல்லாம்” என்று கண்ணைச்சிமிட்டினாள்.
“ரொம்ப நேரம் வெயிட் பண்ண முடியாதுடி” என்றான் மோகக் குரலில்.
மல்லிகா ப்ரஸ்ஸப் ஆகி வந்த தலை வாரி மல்லிகை பூவை வைத்துக்கொண்டாள் சிவாவும் ப்ரஸ்ஸப் ஆகி வர.. சிவா புக் பண்ணிய புட் வந்துவிட “முதல்நாளே கடை சாப்பாடா” என்று முகம் சுளித்தார் விமலா.
“உங்களுக்கு கடை புட் வேண்டாம்னா என்ன வேணும்னு சொல்லுங்கத்தை நான் சமைச்சு தரேன்” என்றாள் பொறுமையாக மல்லிகா.
பிரியாணி வாசம் விமலாவின் மூக்கை துளைக்க “இன்னைக்கொருநாள் அட்ஜஸ் பண்ணி சாப்பிட்டுக்குறேன்” என்று பிரியாணி பார்சலை கையில் எடுத்துக்கொண்டு “காலையில நேரமே எழுந்து காபி போட்டு வை நான் பூஜை முடிச்சு வந்து காபி குடிக்கணும்” என்றார் அதிகாரமாக..
“ம்ம்” என்று தலையசைத்தாள் மல்லிகா
சிவாவோ விமலாவை பார்த்து பல்லைக்கடித்தான்.. அவரோ எங்கோயோ காத்தடிக்குது என்றபடி அறைக்குள் சென்றுவிட்டார்.
மல்லிகாவோ டைனிங் டேபிளில் உணவை எடுத்து பரிமாறிக்கொண்டிருந்தாள்.. விமலா பேசியதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை மல்லிகா.. அவள் இதெல்லாம் எதிர்பார்த்துத்தானே வந்திருந்தாள்.
“மல்லி அம்மா பேசுறது பெரிசா எடுத்துக்காத” என்றான் தயக்கமாக..
“இல்ல சிவா நான் எதையும் பெருசா எடுத்துக்கலை.. நீங்க பர்ஸ்ட் சாப்பிடுங்க” என்று அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.. சிவாவுக்குத்தான் மனதே கேட்கவில்லை.. வந்த முதல் நாளே விமலா, மல்லிகாவை சீண்டியது வருத்தமாயிருந்தது.. இருவரும் சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை மல்லிகா கழுவி வைக்க சிவா அவளுக்கு உதவி செய்தான்..
பாலை காய்ச்சி டம்ளரில் எடுத்துக்கொண்டு மல்லிகா வர முன்னால் அறைக்குள் சென்ற சிவாவோ அவள் உள்ளே வந்தவுடன் கதவை லாக்செய்து அவளின் கையிலிருந்த பால் டம்ளரை வாங்கி டேபிளிலில் வைத்துவிட்டு திரும்ப மல்லிகாவோ கூச்சத்தில் தலையை குனிந்து கொண்டாள்..
அவள் தலையில் வைத்திருந்த மல்லிக்கை பூ வாசம் அவன் நாசியில் ஏற ஆழ்ந்த மூச்செடுத்தவன் அவளை பின் புறமாக மெதுவாய் கட்டியணைத்தான்.. நிலத்தில் காலை ஊன்றி நின்றாள்.. அவன் அணைப்பு இன்னும் இறுக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள்..
“சிவா பர்ஸ்ட் பாலைக் குடிக்கணும்” என்றாள் மெதுவாக உதடு கடித்து…
“ம்ம் குடிக்கலாம்” என்றான் அவளது கழுத்து வளைவில் உதடுகளால் ஒத்தடம் கொடுத்து..
“சிவா ப்ளீஸ் பால்” என்று அவன் செய்யும் சில்சிமிஷங்களை பொறுத்துக்கொள்ளாமல் தேகத்தை நெளித்து பேசினாள்.
பெண்ணவளை தன்புறம் திருப்பி அவளது முகத்தை காண முப்பதுக்கு மேல் வயதிருக்கும் என்று சொல்ல முடியாது மல்லிகாவை.. அவளது கன்னமோ பன் போல உப்பியிருக்கும்.. அவளது கண்களோ சிவாவை பார்த்தாள் ஆயிரம் கதை பேசும்.. ஆனால் அதெல்லாம் காலேஜ் படிக்கும்போது.. எப்போ ப்ரேக்கப் என்றானோ பெண்ணவளின் கண்களில் அந்த கதைகள் காணாமல் போனது.. இன்று சிவா அவள் கண்ணில் வெட்கத்தைக் கொண்டு வந்துவிட்டான்.. ஏன் சிவா என்னை வேண்டாம்னு சொன்னே என்ற வருத்தம் இப்போதும் இருக்கு அதை இந்த நொடிப்பொழுது மறந்துவிட்டாள் அவள்.. மறக்க வைத்துவிட்டான் அவன்.
மல்லிகாவை விட்டு மெல்ல பிரிந்தவன் பாலை எடுத்து ஒரு மிடறு குடித்து அவளுக்கு கொடுக்க வெட்கத்துடன் வாங்கிக்குடித்தாள்.. பாலைக்குடித்ததும் அவளை அணைத்தபடி கட்டிலுக்கு சென்று அமர வைத்தவன் பக்கம் இருந்த ஸ்வீட் பாக்ஸை திறந்து ஹல்வாவை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட போதும் “நீங்களும் சாப்பிடுங்க” என்று அவள் ஹல்வாவை எடுக்கப் போக.. “எனக்கு உன்கிட்ட இருக்க ஹல்வாதான் வேணும்” என்று அவள் கையில் இருந்த ஸ்வீட் பாக்ஸை வைத்தவன் அவளது இதழில் இருந்த ஹல்வாவை தன் வாய்க்கு வரச்செய்திருந்தான்.. அவளது இதழில் ஹல்வாவை விட இனிப்பு இருந்ததோ என்னவோ இதழை சுவைத்துக்கொண்டிருந்தான்.. அவளுக்கோ மூச்சு திணற ஒரு நொடி அவளை விட்டுப் பிரிந்தவன் மீண்டும் கவ்விக்கொண்டான்.. அப்படியே அவளது கண்களை காண அவளோ கண்மூடி சொருகியிருந்தாள் அவன் கொடுக்கும் தேன் முத்தத்தில்.
நைட் லாம்பை அணைத்தவன் மெல்ல மல்லிகாவையும் கட்டிலில் சரிய வைத்து அவளுடன் அணைத்தவாறே நெருங்கிப்படுத்தான்.. மல்லிகாவுக்கு பயத்தில் தேகம் கொஞ்சம் நடுங்க “என்னடி என்மேல உனக்கு பயமாடி” என்றவன் அவளது நெற்றியில் மென் முத்தம் பதித்தான்..
“கொஞ்சுண்டு பயமா இருக்கு” என்று பட்டாம்பூச்சி சிறகடிப்பது போல இமைகளை பட படக்க வைத்தாள் பெண்ணவள்.
“அப்படியா அப்போ பயத்தை போகிடட்டுமா” என்றான் அவளது காதுமடலில் நாவால் கோலமிட்டு..
அவளுக்கோ வெட்கம் வந்து திரும்பி படுக்க அவனது கைகள் எக்குத்தப்பாய் அவளது பூமெத்தையில் பட்டு விட அவளுக்கோ உடல் சிலிர்ந்து அடங்கியது.. அவளது முகம் பக்கம் தாவி வந்தவன் அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்து “உனக்கு சம்மதம்தானேடி” என்று அவளை தன் நெஞ்சில் அள்ளிப்போட்டு கேட்டான்..
“ம்ம் சம்மதம் இல்லாமதான் உங்களை இவ்ளோ தூரம் தொட விடறேனா” என்றாள் அவன் கன்னத்தில் முத்தம்கொடுத்து.
“அப்படியா அப்போ ஆரம்பிப்போமா” என்றான் அவளது இதழில் மெதுவாய் முத்தம் கொடுத்து.
“ம்ம்” என்று வெட்கத்துடன் தலையை ஆட்ட..
அவளது இதழை சிறிது நேரம் கொய்ந்தவன், அவளது கழுத்துக்கு மெல்ல தாவி அங்கே சில சில்மிஷங்கள் செய்து அவளது கழுத்துக்கு கீழ் அவனது கரங்கள் அவளது ஆடைகளுக்கு விலக்கு தர கண்ணை மூடிக்கொண்டவள் மெல்ல கைகளால் மாராப்பு வைக்க.. அவளது கையை விலக்கிவிட்டவன் அவளது மென்மைகளில் தஞ்சம் புகுந்தான்.. முழு ஆடைகளுக்கும் விடுதலை கொடுக்க புத்தம் புது ரோஜாவாய் பூத்து வாசம் தந்தாள் பெண்ணவள்.. இரட்டை ரோஜாவில் தேன் எடுக்கும் வண்டாய் மாறினான்.. அவளுக்கோ தேகத்தில் உள்ள நரம்புகள் எல்லாம் பூ பூக்கத்துவங்கியது.. அவன் கைகள் செய்யும் வேலையில்.. அப்பப்பா பெண்ணவளை ஆயிரம் முறை சிணுங்க வைத்தான் ஆண்மகன்.. அவளது சிணுங்களை இரசித்த வண்ணம் அவளை ஆராதிக்கத் தொடங்கினான்..
அவனது கைகளும் இதழ்களும் அவளது பொன் தேகத்தில் நந்தை போல மெதுவாய் ஊர்ந்து அவளுக்கு சோதனையை கொடுத்தது.. நாபிபுள்ளியில் இதழ்கள் கொண்டு அர்சித்தான்.. ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பெண்ணவளின் அடிவயிற்றில் பூக்க வைத்தான்.. பெண்ணவளை கொள்ளையடிக்க அவளது கண்களை பார்த்து சம்மதம் கேட்க.. “ம்ம்” என்று கண்ணை மூடி சம்மதம் தெரிவிக்க அவளது பெண்மையை கொள்ளையடிக்கத் துவங்கினான்.. பெண்ணவளோ தலையணையை இறுக பற்றிக்கொண்டாள் அவனது வேகத்தை தாங்கமுடியாது.. அவளது கண்ணில் கண்ணீர் வந்துவிட தனது செயலை நிறுத்தியவன் அவளது கண்ணீரைத் துடைத்து விட்டு அவள் இதழில் முத்தமிட்டு முத்தமிட்டு அவளை இளக செய்து பெண்ணவளுக்குள் முத்தெடுத்தான்.. விடியும் வரை பெண்ணவளை தூங்கவேவிடவில்லை..
“டேய் போதும்டா விடியப்போகுது மோகன் சார் கல்யாணத்துக்கு போகணும்” என அவன் கைகளுக்கு சிறைப்பட்டு கொண்டிருந்தவள் மெல்ல விலக பார்த்தாள்
“கொஞ்சம் லேட்டாய் போன மோகன் கோவிசிக்கமாட்டான்டி” என்று மீண்டும் ஒரு கூடலை நடத்தியே அவளை விட்டான்.. அவளது கண்சொருகலை கண்டவன் மெல்ல அவளை விட்டுப் பிரிந்தான்.
