உயிரை உயிரால் கோர்க்கவா
32. உயிரை உயிரால் கோர்க்க வா
அடுத்த வந்த நாட்கள் வேகமாக சென்றது.. கௌரியிடம் அர்ஜுன் சரியாக பேசுவதில்லை.. அர்ஜுன், தன்னிடம் பேசுவதில்லை என்று மனம் வெதும்பியே போனார் கௌரி.. அர்ஜுனிடம் பேச முயன்றால் “என்ன வேணும்னு சொல்லுங்கம்மா” என்பான், சாப்பாடு போட்டால் சாப்பிட்டுச் சென்றுவிடுவான்.. அன்று காலேஜிலிருந்து தாமதமாக வர.. தூங்காமல் விழித்திருந்த கௌரியோ “என்னப்பா இதுதான் வீட்டுக்கு வர டைமா” என்று சற்று கோபமாக கேட்டார்.
“என்னால ஜோ இல்லாத வீட்டுல இருக்க முடியலம்மா.. நான் உங்க மடியில படுத்துக்கறேனே” என்றவன் அவர் பக்கம் உட்கார்ந்தவன் மடியில் படுத்துக்கொண்டு, “ஏன்மா நீங்க ஜோஷிதாவை போக வீட்டீங்க.. இதே உங்கப் பொண்ணா இருந்தா இப்படி ராத்திரி நேரத்துல வீட்டை விட்டு அனுப்புவீங்களா.. துர்கா அத்தை மேல கோவம் இருந்தாலும் நீங்க அவளை ரொம்ப ஓவராத்தான் பேசீட்டீங்கம்மா.. எனக்கு மனசு வலிக்குது அவளை விட்டு பிரிஞ்சிருக்கறது.. ப்ளீஸ்ம்மா அவ மறுபடியும் இந்த வீட்டுக்கு வந்தா அவளை எதுவும் சொல்லிடாதீங்க.. உங்களை கையெடுத்து கெஞ்சி கேட்டுக்குறேன்” என்றான் கண்ணீருடன்..
கெளரிக்கோ ஆத்திரமாக வந்தது ஜோஷிதாமேல்.. என் பையனை எப்படி மயக்கி வச்சிருக்கா பாரு.. அவ மேல பைத்தியம் பிடிக்காத குறை ஒண்ணுதான்.. நல்லவேளை அவமேல கோவமா இருக்கான்.. என்று எண்ணியவர் “அவளாத்தான் போனா அர்ஜுன் நான் ஒண்ணும் அனுப்பலை.. அவ உன்கிட்ட உண்மையை மறைச்சிருக்கா அவளை மன்னிச்சு ஏத்துக்கப்போறீயா.. நான் வேண்டாம்னு சொல்லலை, என்று அவன் மனதில் இன்னும் என்ன இருக்கு அதற்கு தகுத்தாற் போல காயை நகர்த்திப்பேசலாம்” என்று கேட்டார்.
“அவளை என்னால எப்பவும் வெறுக்க முடியாதும்மா.. இப்போதைக்கு கூட்டிட்டு வரதா இல்ல.. என்றவன் நீங்க போய் ஜோஷிதாவை கூப்பிட்டு வரீங்களாம்மா” என்று அவர் மடியிலிருந்து எழுந்தவன் கண்கள் கலங்கி கேட்டான்.
கெளரிக்கோ மனது வலித்தது.. தன் மகனுக்காக அவளிடம் இறங்கிப்போய்விடலாமா என்று கூட தோன்றியது.. ஆனால் அவரின் நஞ்சு மனசு அப்போதும் நல்லதை நினைக்கவில்லை.. “நான் போய் கூப்பிடனுமா அர்ஜுன்.. அவ அன்னைக்கு நான் இங்கிருந்து போக மாட்டேனு சொல்லியிருக்கணும்.. அவ பக்கம் இருக்க நியாயத்தை எடுத்து உன்கிட்ட சொல்லியிருக்கணும் அதை விட்டுட்டு நீ முகத்துல முழிக்க வேண்டாம்னு சொன்னா அவளும் உன்னைப் பார்க்கமா இருந்துடுவாளா என்ன? எனக்குனு ஒரு கௌரவம் இருக்கு அர்ஜுன், அதைவிட்டு நான் யார் காலிலும் விழமாட்டேன்” என்று வீம்பாக பேசியவர் எழுந்து அவரது அறைக்குச் சென்றுவிட்டார்.. அறைக்குள் சென்றவருக்கு நான் போய் அந்த ராங்கிகாரியை கூட்டிட்டு வரணுமா அது இந்த ஜென்மத்துல நடக்காது என்றவர் கட்டிலில் படுத்துக்கொண்டார்.
மல்லிகாவுக்கு அன்று வளைகாப்பு நடக்கவிருக்க ஜோஷிதாவையும் வரச்சொல்லியிருந்தாள் மல்லிகா.. ஆனால் லதாபாட்டியோ மாசமாய் இருக்கும்போது இன்னொரு வளைகாப்பிற்கு போகக்கூடாதென சொல்ல ஜோஷிதா மல்லிகாவிற்கு போன் செய்து “மல்லி மேம் நான் வளைகாப்பிற்கு வரக்கூடாதாம்” என்றாள் கவலையாக..
“சரி வளைகாப்பு முடிஞ்சதும் என்னைப் பார்க்க வா ஜோஷி எனக்கும் உன்னை பார்க்கணும்போல இருக்கு.. உனக்கு வாமிட் வருதா” என்றாள் சிரித்தபடி..
“ஆமா மேம் என்னால முடியல.. காலேஜ்க்கு கூட போக வேணாம்னு இருக்கேன்.. ஆனா அர்ஜுனை என்னால பார்க்கமா இருக்க முடியலை.. அதான் கஷ்டப்பட்டு போறேன்” என்றவளுக்கு குரல் உடைந்துதான் வந்தது.. அவளுக்கு அழுகை வந்துவிட்டது.
“அழாத ஜோஷி, சீக்கிரம் அர்ஜுன் உன்னை புரிஞ்சுப்பான் என்றவர் ஈவ்னிங் பார்க்கலாம்” என்று போனை வைத்துவிட்டாள் மல்லிகா.
வளைகாப்பிற்கு மோகன் அனிதாவுடன் வந்திருந்தான்.. பவனை பரிமளாவிடம் விட்டு விட்டு வந்திருந்தனர்.. சிவாவையும் மல்லிகாவையும் சேர்ந்து உட்காரவைத்து நலுங்கு ஆரம்பிக்க.. இன்னும் அர்ஜுன் வரவில்லையென்று வாசலையே பார்த்திருந்தான் சிவா.
அர்ஜுனோ, ஜோஷிதா இல்லாமல் தான் மட்டும் தனியே போக மனமில்லாமல் வளைகாப்பிற்கு கிளம்பியவன் அப்படியே உட்கார்ந்திருந்தான்.. என்ன நினைத்தானோ தெரியவில்லை கார் கீயை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவன் காரில் சிவா வீட்டிற்கு சென்றுவிட்டான்.
விமலா முதலில் மருமகளுக்கு நலுங்கு வைக்க மைதிலி இன்றும் வரவில்லை வளைகாப்பிற்கு.. சிவாவுக்கு கோபம்தான் என்ன செய்வது அவளது கணவன் அவளைப் போக அனுமதித்திருக்க மாட்டேன் என்று அமைதியாக விட்டுவிட்டான்.
விமலா நலுங்கு வைத்ததும் புஷ்பா நலுங்கு வைத்துவிட்டு நகர.. விமலாவோ “அம்மாடி அனிதா நீ மல்லிகாவுக்கு வளையல் போடுமா, அடுத்த மாசமே நீயும் மாசமாகிடுவ” என்று சிரித்தபடி சொல்ல அனிதாவுக்கு பக்கென்றிருந்தது..
அனிதா மோகனை பார்க்க.. மோகனோ “போய் போடு” என்றான் கண்ணால் ஜாடை காண்பித்து.. விமலா சொன்னது போலவே அவள் மாசமாக இருக்கப் போகிறாள் என்பது அனிதாவுக்கு தெரியாமல் போனது.
அனிதாவும் மல்லிகாவுக்கு வளையல் போட்டு விட்டு நலுங்கு வைத்தாள்.. ஆனால் அவளுக்கு தனக்கும் இதுபோல வளைகாப்பு நடக்குமா என்று நினைத்தவளுக்கு அழுகை வந்துவிட்டது.. கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு மோகன் பக்கம் வந்து நின்றாள்.
அர்ஜுன் வளைகாப்பு முடிந்து வந்தவன் ஜோஷிதாவை தேடினான்.. “இதான் வர நேரமாடா” என்று அர்ஜுனிடம் கோபமாக கேட்டான் சிவா.
அர்ஜுன் வரும் கொஞ்சம் நேரம் முன்னதான் மோகன் வீட்டுக்கு கிளம்பியிருந்தான்.
“கொஞ்சம் தூங்கிட்டேன் சீனியர்” என்றவன்.. “ஏன் என் டிபார்ட்மெண்ட்லயிருந்து யாரும் வரலையா” என்று கடுப்பாக கேட்டான்.
அர்ஜுன் ஜோஷிதாவைத்தான் கேட்கிறான் என்று தெரிந்தவன் “ஏன் அர்ஜுன் மோகன் இப்பதான் கிளம்பினான்.. நீ யாரை கேட்கிற” என்று தெரியாமல் கேட்பது போல கேட்டான்.
மேடிட்ட வயிற்றை பிடித்துக்கொண்ட வந்த மல்லிகாவோ.. “வா அர்ஜுன் என்றவள் ஜோஷிதா ஈவ்னிங் என்னை பார்க்க வரதா சொல்லியிருந்தா அவளுக்கு உடம்பு சரியில்லையாம் சிவா” என்றாள் அர்ஜுனை பார்த்துக்கொண்டே..
“ஏன் என்னாச்சு” என்று பதறி கேட்டான்.. ஜோஷிதாமேல் கோபமாக இருப்பதை மறந்து..
சிவாவும் மல்லிகாவும் சிரித்துக்கொண்டனர்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் இருவருக்கும் சண்டை வரப்போவது தெரியாமல்
“தலைவலிக்குது சொன்னா அர்ஜுன்.. நீ அவ மேல அஃபெக்சென்னா இருக்க அர்ஜுன் அவளை மன்னிச்சு ஏத்துக்கோயன்” என்றாள் பரிதவிப்பாக மல்லிகா.
“சாரி மேம்.. என்னால இப்போதைக்கு ஜோஷிதாவை ஏத்துக்கறதா இல்லை என்றவன் “சீனியர் நான் கிளம்புறேன்” என்று கிளம்பியிருந்தான்.
ஜோஷிதா காலேஜ்க்கு லீவு போட்டு விட்டாள்.. காலையிலிருந்து வாந்தி வந்து கொண்டேயிருக்க அவளால் எழும்பவே முடியவில்லை..
மல்லிகாவை அவளது பிறந்த வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போக ரெடியாகி நிற்க.. “அத்தை மல்லிகா இங்கயே இருக்கட்டுமே” என்றான் மல்லிகாவை அனுப்ப மனமின்றி..
“மாப்பிள்ளை வளைகாப்பு முடிச்சு தாய் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறதுதான் சம்பிரதாயம்.. ரெண்டு நாள் கழிச்சு வேணா நீங்க கூட்டிட்டு வரலாம்” என்றார் வடிவேல்.
“அப்பா நான் அங்கதான் குழந்தை பிறக்கும் வரை இருப்பேன்.. ஏன் குழந்தைக்கு மூணுமாசம் ஆகும்வரை நம்ம வீட்லதான் இருப்பேன்” என்றாள் சிவாவை பார்த்துக்கொண்டே, வேண்டுமென்றே இதுதான் சமயம் சிவாவை தனிமையில் இருக்கவிட்டு அவனுக்கு தண்டனை கொடுக்கலாம் என்று நினைத்துவிட்டாள்.. அவள் மறந்துவிட்டாள் சிவாவை பிரிந்திருந்தால் அவள் தான் தண்டனை அனுபவிப்பாளென்று அவளுக்கு யார் சொல்வது.
சிவாவோ “ஓ.கே அங்கிள் எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை” என்றான் மல்லிகாவை முறைத்துக்கொண்டு.
விமலாவோ மல்லிகாவின் கையை பிடித்துக்கொண்டு “மல்லி நான் ஏதாவது பேசியிருந்தா என்னை மன்னிச்சிருமா.. நீ ஒரு நாளு நாள் அம்மாவீட்ல இருந்துட்டு நம்ம வீட்டுக்கு வந்துடேன்” என்று மல்லிகாவிடம் கெஞ்சுதலாக கேட்டேவிட்டார்.. இப்போது தான் நிதர்சனத்தை புரிந்திருந்தார்..மருமகளை தாஜா செய்தால்தான் தன் கடைசி காலம் நன்றாக போகுமென்று தெரிந்து கொண்டவர் மல்லிகாவிடம் அனுசரணையாக கேட்டார்.
“அத்தை குழந்தை பிறந்தபிறகு மூணுமாசம் கழித்து உங்கப் பேரனை உங்ககிட்டவே கொடுத்து வளர்க்குறேன்.. ஆனா இப்ப நான் அம்மா வீட்டுக்கு போனேனா குழந்தை பிறந்து மூணுமாசம் கழிச்சுதான் வருவேன்” என்று கராராக சொல்லியவள் சிவாவை பார்த்து “போய்ட்டு வரேன்” என்று அவன் பக்கம் போக..
“வா போகலாம்” என்று வெளியே சென்று காரில் ஏறினான்..
மல்லிகாவை வீட்டில் கொண்டு போய் விட்டவன் வீட்டுக்குள் கூட வராமல் “எனக்கு காலேஜில் வேலையிருக்கு” என்று கூறியவன் வடிவேலுவிடம் “எதுனாலும் போன் பண்ணுங்க மாமா” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.. மல்லிகாவிற்கு அவன் இருக்கும் வரை எதுவும் தெரியவில்லை.. சிவா தன்னை பார்க்காமல் சென்றுவிட்டான் என்று தெரிந்ததும் அவளுக்குள் நெருடல் வரத்துவங்கியது.. நாம தப்பு பண்ணுகிறோமோ என்று பரிதவித்துப்போனாள்.
மாலையானது மல்லிகாவை வந்து பார்த்துச்சென்றாள் ஜோஷிதா.. காலேஜ்க்கு லீவு போட்டிருந்தாள்..
காலேஜ்க்கு மோகன் மட்டும் சென்றிருக்க ஜோஷிதாவின் க்ளாஸையும் அவனே எடுக்க வேண்டியதாய் இருந்தது..
ரவுண்ட்ஸ் முடிந்து வந்த அர்ஜுனோ ஜோஷிதாவுக்கு போன் பண்ணி என்னாச்சு உடம்புக்குனு கேட்கலாம்னு கூட தோன்றியது.. அவன் கோபம் கண்ணை மறைத்தது.. அதே நேரம் கிளாஸ் முடித்து வந்த மோகனிடம் “ஏன் இன்னிக்கு ஜோஷிதா வரலை உடம்புக்கு சரியில்லைனு அடிக்கடி லீவு போடுறாங்க.. அவங்கனால முடியலைனா பெர்மனென்ட்டா வீட்ல இருக்க வேண்டியதுதானே.. நாமளும் வேற ஆள் எடுத்துக்கலாம்.. வாட்ன்டேட்னு பேப்பர்ல ஆட் கொடுக்க ஏற்பாடு செய் மோகன்” என்றான் ஜோஷிதாவை பார்க்கமுடியவில்லை என்ற கடுப்பில்..
மோகனோ “ஆமா நம்ம டிப்பார்ட்மெண்டுக்கு ஆள் கண்டிப்பா வேணும்.. இனி ஜோஷிதாவும் வரமுடியாதுனு நினைக்குறேன்” என்றவன் நாக்கை கடித்துக் கொண்டு திரும்பி நின்றான்.
“ஏன் வரமாட்டாளாம்” என்றான் புருவம் சுருக்கி வேகமான குரலில்..
“அ.அது வந்து நாளைக்கு ஜோஷி வந்தா நீயே கேட்டுக்கோ” என்றவன் அவனது டேபிளில் போய் உட்கார்ந்து கொண்டான்.
“எல்லாரும் அவ பக்கமே நில்லுங்க” என்று பல்லைக்கடித்தவன் “நாளைக்கு அவ வரட்டும்” என்று டேபிளை தட்டி விட்டு எழுந்து சென்றான்.
கிட்ட தட்ட பில்டிங் இரண்டாவது தளமும் முடியும் தருவாயில் இருந்தது.
சிவாவோ அன்றிரவு மல்லிகாவை பார்க்க போகவில்லை.. சிவா வருவான் என்று காத்திருந்த மல்லிகா சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டாள்.. குழந்தைக்காக சாப்பிட்டவள் போனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.. சிவாவோ நான் உன் கூட பேசமாட்டேன்டி.. நீயா என்னை வந்து கூட்டிட்டு போங்கனு சொல்லும் வரை பேசமாட்டேன் என்றிருந்தான்.. ஆனால் புஷ்பாவிடம் மல்லிகா எப்படியிருக்கா என்று போன் செய்து கேட்டுக்கொண்டான்.
அடுத்த நாள் ஜோஷிதா கல்லூரிக்குள் வந்தாள்.. வயிறு வேறு கொஞ்சம் பெரிதாக தோன்றியது.. சேலையை மறைத்து வைத்துக்கொண்டு நடந்தாள்.. அர்ஜுனோ அன்று முன்னமே வந்து காத்திருந்தான் அவளுக்காக.
ஜோஷிதா சிவா அறையில் கையெழுத்து போட்டு விட்டு டிப்பார்ட்மெண்டுக்குள் போக.. “வாங்க மேடம் லீவுனா எனக்கு ஒரு மேசேஜ் போட முடியாதா” என்று காட்டமாக பேசினான்.
ஜோஷிதாவிற்கு காலையிலிருந்து வாந்தி எடுத்து எடுத்து மயக்கமாகவே இருந்தது.. இப்போதும் ஜுஸ் மட்டுமே குடித்துவிட்டு வந்தாள்.. அதுவும் வரும் வழியே வாந்தி வந்துவிட சிவாவிடம் லாங் லீவ் வேணும் என்று கேட்கவே வந்திருந்தாள். ஆனால் அர்ஜுனோ அவளின் நிலைமை புரியாமல் அவளை நிற்க வைத்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான்.
“சார் எனக்கு உடம்பு சரியில்லை அதான் வரலை.. சிவா சாருக்கு மேசேஜ் போட்டேன்.. நீங்க உங்களுக்கு போன் மேசேஜ் எதுவும் போட வேண்டாம்னு சொல்லியிருக்கீங்க” என்றாள் தயங்கியவாறு.. அவளால் நிற்க முடியவில்லை.
அவளின் தடுமாற்றத்தை கண்டவன் “உட்காருங்க” என்று தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொடுத்தான்.. ஜோஷிதாவை இன்றைக்குத்தான் நேரில் பார்க்கிறான்.. தாய்மையில் அவளது முகம் பிரகாசமாய் மினுமினுத்தது.. பார்த்துக்கொண்டேயிருந்தான்.. அவளுக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.. கண்ணில் மட்டும் கருவளையம் வந்திருந்தது.. உடம்பு மட்டும் மெலிந்திருந்தது.. சரியா சாப்பிட கூட மாட்டாளா என்று அவளை கடிந்துகொண்டிருந்தான்.. தண்ணீர் பாட்டிலை வாங்கியவள் அப்படியே மயங்கிச் சரிந்தாள்..
அர்ஜுனுக்கு உயிரே போனது போல இருந்தது.. “ஜோ” என்று கதறியபடி அவளை தூக்கிக்கொண்டு காருக்கு ஓடினான்.. மோகன்… அர்ஜுன், ஜோஷிதாவை தூக்கிக்கொண்டு வருவதைக் கண்டவன் அவனும் வேகமாய் அர்ஜுன் பக்கம் சென்றவன் “என்னாச்சு அர்ஜுன் ஜோஷிக்கு” என்றான் பதட்டத்துடன்..
“என்னனு தெரியலைடா நான் நேத்து ஏன் வரலைனு கேட்டேன்.. மயங்கிட்டா” என்றதும் அவனுக்கு என்ன மயக்கம்னு தெரியும் ஆனால் ஜோஷிதாவே சொல்லட்டும் என்றிருந்தான்.
“கார் கீயை கொடு அர்ஜுன் நீ பதட்டமா இருக்க நான் காரை ஓட்டுறேன் என்றவன் கார் கீயை அர்ஜுனிடமிருந்து வாங்கி காரை ஓட்டினான்..
ஜோஷிதா செக்கப் சென்ற ஹாஸ்பிட்டலுக்கே சென்றனர்.. மோகன் வெளியே நின்றிருந்தான்.. ஜோஷிதாவை செக் பண்ணிய டாக்டரோ “இவங்க கன்சீவ்வா இருக்க நேரத்துல இப்படி சாப்பிடாம இருக்கலாமா.. நீங்க கவனிக்கமாட்டிங்களா” என்று அர்ஜுனை சத்தம் போட்டார்.
“வாட் கன்சீவ்வா இருக்காளா” என்று அதிர்ச்சியாய் கேட்டான் அர்ஜுன்..
33. உயிரை உயிரால் கோர்க்க வா
“டாக்டாரோ “ஏன் உங்க வொய்ப் கன்சீவ்வா இருக்கறது உங்களுக்கு தெரியாதா? ஹஸ்பண்ட் வொய்ப்க்குள்ளா ப்ராளமா.. இந்தக் காலத்து பசங்க எல்லாம் இப்படித்தான் இருக்கீங்க. என்ன கோபம் இருந்தாலும் வொய்ப்பை தனியா தவிக்கவிடலாமா.. அவங்க போன முறை செக்கப் வந்த போது தனியாத்தான் வந்தாங்க.. நானும் ஏதோ வேலையா இருப்பீங்கனு இருந்தேன்.. நீங்க இனி இப்படி கேர்லஸ்ஸா இருக்காதீங்க தம்பி” என்று மூத்த பெண்மணியாய் பேசினார்.. அர்ஜுனுக்கு சந்தோசம் ஒருபக்கம் இருந்தாலும் தன் வாரிசு வளர்வதை மறைத்துவிட்டாளே என்ற கோபமும் சேர்ந்துகொண்டது.. கொஞ்ச நேரத்தில் ஜோஷிதாவுக்கு மயக்கம் தெளிந்ததும் “நீங்க கம்ப்ளீட்டா ரெஸ்ட் எடுக்கணும்.. எந்த வேலையும் செய்யக் கூடாது.. யூட்ரஸ் ரொம்ப வீக்கா இருக்கு தம்பி உங்க வொய்ப்ப நீங்க ஜாக்கிரதையா பார்த்துக்கணும்” என்றார் அர்ஜுனிடமும்.
“ஓ.கே டாக்டர்” என இறுக்கமாக குரலில் கூறியவன் ஜோஷிதாவை கண்டிக்கும் பார்வை பார்த்தான்.
ஜோஷிதாவோ என்ன முறைக்குறாரு.. தப்பெல்லாம் அவரு பண்ணிட்டு என்னை முறைச்சு பார்க்குறாரு.. ஏதாவது பேசட்டும் அப்புறம் நான் மனுசியாவே இருக்கமாட்டேன் என்று பொருமிக்கொண்டு நின்றிருந்தாள்.
டாக்டர் மாத்திரைகள் எழுதிக்கொடுக்க வாங்கிக்கொண்டு வெளியே செல்ல மோகன் பதட்டத்துடன் நின்றிருந்தான்.. ஜோஷிதாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்றும் அதைவிட ஜோஷி கன்சீவ்வா இருப்பது தெரிந்தும் தான் அர்ஜுனிடம் மறைத்துவிட்டது தெரிந்திருக்கும்.. இப்போ என்மேல் கோபமாய் பாயப்போறோனோ என்று கொஞ்சம் பயத்துடன் நின்றிருந்தான் மோகன்.
மோகனோ “அர்ஜுன்” என்று அவன் தோளில் கை வைக்க..
“ஜோ கன்சீவ்வா இருக்கறது உனக்கும் சீனியருக்கும் தெரிந்தும் எனக்கும் சொல்லாம இருந்திருங்கீங்க.. நீங்களெல்லாம் எனக்கு ப்ரண்டா” என்று முறைத்துப்பார்த்தவன் “என் கூட பேசாதடா” என்றான் சீற்றத்துடன்..
“மோகன் சாரை எதுக்குப் பேசறீங்க.. நான் தான் உங்ககிட்ட உண்மையை சொல்லவேண்டாம்னு சொன்னேன்.. அவங்க மேல எதுக்கு எகுறறீங்க” என்றாள் கோபத்துடன்..
“மோகன் இவளை டென்சன் ஆக வேண்டாம்னு சொல்லு.. குழந்தைக்கு ஏதும் ஆகிடும்”
“ஆக குழந்தைக்கு ஏதும் ஆகிடும்னுதான் கவலை.. நான் எக்கேடா போனா கவலையில்லை உங்களுக்கு.. இதுதான் நேரம்” என்று ஹாஸ்பிட்டல் என்றும் கூட பார்க்காமல் சண்டைப்போட்டாள் ஜோஷிதா.
“ஆண்டவா இவங்க நடுவுல நான் மாட்டிக்கிட்டேனே.. எப்பவும் சிவா சார்தான் மாட்டுவாரு.. இன்னிக்கு நான் வாலன்ட்ரியா மாட்டிட்டேன்” என்று நொந்து போன மோகனோ
“அர்ஜுன் இது ஹாஸ்பிட்டல் உங்க சண்டையை வீட்டுக்குப் போய் வச்சுக்குங்க” என்றான் சன்னமான குரலில்..
“இவளை என்கூட கிளம்பி வரச்சொல்லு” என்று விறுவிறுவென ஹாஸ்பிட்டலுக்கு வெளியே சென்றான்.
ஜோஷிதாவோ “மோகன் சார், நான் அவர் கூட போகமாட்டேன்.. நான் பாட்டி வீட்டுக்குத்தான் போவேன்” என்றாள் முறுக்கிக்கொண்டு..
“ஜோஷி பிடிவாதம் பண்ணாத.. அவன் கோபம் உனக்கு தெரியும்தானே” என்றான் பொறுமையாக..
“இல்ல அண்ணா அவர் என் வயித்துல வளர பிள்ளைக்காகத்தான் என்னை வரச்சொல்லுறாரு.. என் மேல அக்கறையா வரச்சொல்லலை” என்றாள் வீம்பாக..
“சரி ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.. நான் ஏதும் சொல்ல முடியாது.. உன்புருசன் கேட்க மாட்டான் நான் வீட்டுக்கு போறேன்” என்று கிளம்பியவன் சிவாவுக்கு போன் போட்டு சொல்ல “ரொம்ப நல்லது அவனுக்கு உண்மை தெரிஞ்சுடுச்சுல்ல.. இனி அவன் ஜோஷிதாவை பார்த்துப்பான் நீ கிளம்பி வீட்டுக்கு போய்டு” என்றான்.
“சரி சிவா” என்று மோகனும் கிளம்பிவிட்டான்.
ஜோஷிதாவோ அர்ஜுன் காருக்கு போகாமல் ஆட்டோ ஸ்டேண்ட் பக்கம் போக.. இவளுக்கு உடம்பு முழுக்க கொழுப்பு.. ஆட்டோவுல போறாளா அவ உடம்பு இருக்க கன்டீசன்ல என்று பல்லைக்கடித்தவன் அவள் முன்னே காரை நிறுத்தி “இப்ப ஏறலைனா தூக்கி கார்ல உட்கார வைப்பேன்” என்றதும் அர்ஜுனை முறைத்துவிட்டு காரில் ஏறாவிட்டால் சொன்னதை செய்வானென்று காரில் ஏறிவிட்டாள்.
ஏறியதும் “நான் உங்க வீட்டுக்கு வரலை ப்ளீஸ் எனக்கு அங்க வர பிடிக்கலை.. பாட்டி வீட்டுக்குப் போன நான் நிம்மதியா இருப்பேன்.. குழந்தைக்கும் அதுதான் நல்லது” என்றாள் ரோட்டை பார்த்தபடி..
அர்ஜுனோ ஜோஷிதாவை திரும்பி முறைத்தவன் அவளிடம் சண்டை போட வேண்டாமென்று காரை லதாபாட்டி வீட்டுக்கு விட்டான். அவனிடம் அமைதி.. அவள் மேலிருந்த அத்தனை கோபமும் மறந்து போனானே.. அதே நேரம் அவள் மணிவயிற்றை தடவி பார்க்க வேண்டுமென்று அவனுக்கு ஆசையாய் தோன்றியது.. வீடு வந்ததும் ஜோஷிதா காரிலிருந்து இறங்கியவள் வீட்டுக்குள் சென்றுவிட்டாள்..
திமிர் திமிர் இவளுக்கு.. கொழுப்பு பிடிச்சவ என்று அவளை திட்டிவிட்டு மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றான் கொஞ்சம் தயங்கியபடி.. அத்தை இந்த வீட்டில்தான் இருந்திருக்காங்க எனக்கு இத்தனை நாளாய் தெரியாம போச்சு.. என்று வருத்தப்பட்டுக்கொண்டு வீட்டுக்குள் செல்ல அப்போதுதான் வேலையெல்லாம் முடிந்து சோபாவில் உட்கார்ந்திருந்தார் லதாபாட்டி.
ஜோஷிதாவை பார்த்தவர் “என்னாச்சு பேத்திபொண்ணு நேரமே வந்துட்ட உடம்பு சரியில்லையா” என்று அவளை கேட்டுக்கொண்டிருக்க.. “உங்க பேரன் வந்திருக்காங்க.. அவர் கிட்ட என் பேத்தியை எதுக்கு தனியா அனுப்புனீங்கன்னு கேளுங்க” என்று அவளது அறைக்குள் சென்றுவிட்டாள்.
அர்ஜுனோ இவளுக்கு உடம்பு முழுக்க திமிர்தான் என்றவன் லதாபாட்டியின் பக்கம் வந்து உட்கார்ந்து “பாட்டி என்னை மன்னிச்சிடுங்க.. ஜோஷிதா கன்சீவ்வா இருக்கானு எனக்கு தெரியாமா போச்சு.. இவ என்கிட்ட மறைச்சிருக்கா தப்புதான் நான் இவ பேசறதை காதுகொடுத்து கேட்கலைதான்.. ஏன் ஒரு மேசேஜ் போட்டிருக்கலாம்தானே.. நான் அப்பா ஆனதை மூணுமாசம் கழிச்சுதான் தெரிஞ்சுக்கணுமா” என்றான் ஆற்றாமையாய்.
அர்ஜுன் இவ்வளவு சீக்கிரம் இறங்கி வருவான் என்று எதிர்பார்க்கவில்லை லதாபாட்டி..
“தம்பி நடந்தது நடந்துருச்சு.. இனிமே அதைபத்தி பேசாம சேர்ந்து வாழறதை பாருங்க” என்றார் அர்ஜுனின் கையை பிடித்துக்கொண்டு..
“நான் எப்பவும் அவளை விட்டு விலகமாட்டேன் பாட்டி.. எனக்கு அவ மேல கோபமே தவிர அவளை விட்டு நிரந்தரமா பிரியமாட்டேன் என்றவன் அவளை பார்த்துக்கோங்க பாட்டி நான் கிளம்புறேன்.. அவ சாப்பிடறதுக்கு மட்டும் வெளியே வரட்டும்.. எந்த வேலையும் செய்ய கூடாதுனு டாக்டர் சொல்லியிருக்காங்க.. அவ இனிமே வேலைக்கும் வரவேண்டாம்.. குழந்தை பிறந்த பிறகு பார்த்துக்கலாம் என்றவன் நான் கிளம்புறேன் பாட்டி” என்று சொல்லி விட்டு ஜோஷிதாவின் அறையை பார்த்தவன், இப்போதைக்கு அவளை போய் பார்த்தால் ஏதாவது அவள் மனம் சங்கடப்படும்படி பேசிவிடுவேன் அது அவ குழந்தைக்கு ஏதும் பாதிப்பு வருமென்று அமைதியாகச் சென்றான்.
ஜோஷிதாவோ ஜன்னலில் நின்று அர்ஜுன் காரில் ஏறுவதை பார்த்துக்கொண்டிருந்தாள்.. அர்ஜுன் மேல நிமிர்ந்து பார்க்க ஸ்கீரினை இழுத்து மூடிக்கொண்டாள்.. அவள் செயல் அவனுக்கு இதழ்கடையோரம் புன்னகையை வரவைத்தது.. தலையை கோதிக்கொண்டு காரை எடுத்துச் சென்றவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அர்ஜுன் வீட்டுக்குள் போனவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.. கௌரி அறையிலிருந்து டாக்டர் வெளியே வந்தார்.. பாண்டியும் வெளியே வந்தார்.. “மாமா எப்ப வந்தீங்க அம்மா எங்கே” என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் போக.. கௌரி கைகால் வராமல் படுத்திருந்தார்.
பாண்டி ஊரிலிருந்து வந்திருந்தவர் ஜோஷிதாவை கேட்க.. “அவங்க எங்க இங்க இருக்கா அவளை வீட்டைவிட்டு அனுப்பி வைச்சிருக்கேன்” என்று ஆணவமாக சிரித்துக்கொண்டிருந்தார்..
பாண்டியோ “நீ இன்னும் திருந்தவில்லையா கௌரி.. நான் அர்ஜுன்கிட்ட உண்மையெல்லாம் சொல்லப்போறேன்” என்றவர் வாசற்படியை கூட தாண்டவில்லை,
“பாண்டி அண்ணா அர்ஜுன்கிட்ட சொல்ல வேண்டாம்” என்றவருக்கு வாயும் கோணி கையும் காலும் இழுத்துக்கொண்டது.
“அம்மா” என்று அர்ஜீன் பதறி கௌரியிடம் போக அவர் கண்ணில் கண்ணீர் வந்துகொண்டிருந்தது.. இந்த நிலைமைக்கு பிறகும் அவர் திருந்தவில்லையென்றால் கௌரி மனித பிறவியே இல்லையே.
“அம்மா என்னாச்சு” என்றான் கண்ணில் கண்ணீருடன்.. பாண்டி டாக்டரை அனுப்பிவிட்டு வந்தவர்.. கௌரி, துர்காவை வீட்டை விட்டு அனுப்பியதையெல்லாம் ஒன்றுவிடாமல் கூறினார். கௌரியோ அர்ஜுனிடம் கண்களால் மன்னிப்பு கேட்டார்.. அர்ஜுனுக்கு கோபம் இருந்தாலும் கௌரி இருந்த நிலையில் அவரை எதுவும் அவனால் சொல்லமுடியவில்லை.. ஜோஷிதாவை கௌரிதான் அனுப்பியிருக்கா என்று பாண்டி சொல்லிவிட்டார்.. அர்ஜுனுக்கு உயிரே போனது போலிருந்தது.. அச்சோ அவரசப்பட்டேனே என் கண்மணியை நான் போய் பார்க்காமல் விட்டேனே அவள் பேச வந்ததை கேட்காமல் விட்டேனே என்று துடித்துப்போய்விட்டான்..
மகன் துடிப்பதை கண்ட கௌரியோ ஜோஷிதாவை கூட்டிக்கொண்டு வரும்படி ஜாடை காண்பித்தார்.. “அம்மா நீங்க அவளுக்கு பெரிய பாவம் செய்திட்டீங்க.. அவள, நீங்க வீட்டை விட்டு அனுப்பும் போது கன்சீவ்வா இருந்திருக்கா தெரியுமா” என்றான் ஆற்றாமையாக..
கௌரி அப்படியா என்று சந்தோசமாக தலையை ஆட்டினார்.. அவரால் பேச முடியவில்லை கண்ணால் பேசினார் அர்ஜுனிடம்.
“நான் ஜோஷிதாவை கூட்டிட்டு வரேன்” என்று கிளம்பியிருநதான் அப்போதே..
அர்ஜுன் கார் சத்தம் கேட்டு அறையில் படுத்திருந்தவள் கண்விழித்துப்பார்த்து எழுந்து உட்கார அர்ஜுன் வேகமாய் வந்தவன் அவளது அறைக்குச் சென்று “லட்டு என்னை மன்னிச்சுக்கோடி” என்று ஜோஷிதாவை கட்டிக்கொண்டான்.
ஜோஷிதாவுக்கோ இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை.. “அர்ஜுன் என்னாச்சு ஏன் இந்த பதட்டம்” என்று அவனது முகத்தை தாங்கிக் கொண்டு கேட்டாள்.
“லட்டு நான் நீ பேசவந்ததை கேட்டிருக்கணும்டி.. நானா உன்னை தப்பா நினைச்சுட்டேன் என்றவன் அவளது காலை பிடித்துக்கொண்டு என்னை மன்னிச்சுட்டேனு சொல்லுடி” என்றான் கண்கள் கலங்க..
“அர்ஜுன் உங்களைப் போல ஹஸ்பண்ட் கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கணும்.. நானும் உங்ககிட்ட உண்மையை சொல்லியிருக்கணும்.. அதனாலதான இந்தப் பிரச்சனையும் வந்தது என்று நீங்க தான் என்னை மன்னிக்கணும்” என்று இருவரும் மாறி மாறி மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.
இருவரும் வெகுநாட்கள் கழித்து கட்டிக்கொண்டிருந்தனர்.. அர்ஜுனின் முதுகை தடவிக்கொண்டிருந்தாள்.. பாட்டி இருவரும் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டு பதட்டப்பட்டு வந்தவர் இருவரும் இருந்த நிலையை பார்த்து சந்தோசப்பட்டு ஹாலில் போய் அவர்களாக வரட்டும் என்று உட்கார்ந்தார்..
ந”ம்ம வீட்டுக்கு போலாம்டி என்னால ஒரு நொடி கூட உன்னை விட்டுப் பிரிஞ்சிருக்க முடியாதடி.. என் தலையில நாலு கொட்டு வைத்து நான் கன்சீவ்வா இருக்கேன் சொல்லி இருக்கணும் ஜோ என கவலையாக கூறியவனின் குரலில் பிசிறி தட்டியது.
“அர்ஜுன் கௌரி அத்தை என்னை வர விடமாட்டாங்க” என்றாள் விசும்பலுடன்..
“ஜோ அம்மாவுக்கு பக்கவாதம் வந்துருச்சு.. இப்ப அவங்கதான் உன்னை அழைச்சிட்டு வரச்சொன்னாங்க” என்றான் சோகமாக..
“என்னது அத்தைக்கு பக்கவாதமா” என்று அதிர்ந்து கேட்க..
“ஏய் ரொம்ப டென்சன் ஆகாதா.. அவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தா சரியாகிடுவாங்க என்றவன் இப்ப நீயும் , பாட்டியும் நம்ம வீட்டுக்கு வாங்க” என்றான் பொறுமையாக..
“இப்பவே நாம போலாம்ங்க அத்தை பாவம்” என்றாள் பரிதவித்துப்போய்..
அர்ஜுனுக்கு ஜோஷிதாமேல் இருந்த அன்பு காதல் இன்னமும் கூடியது.. அவளை திட்டி அனுப்பி வைத்த அம்மா மீதே ஜோக்கு எத்தனை பாசம் என்று வியந்துதான் போனான்.
லதாபாட்டியிடம் கௌரியின் நிலைமையை கூற.. அவரோ “அச்சோ இப்போ எப்படியிருக்கா நான் கௌரியை பார்க்கணும்” என்று பறந்தார் லதாபாட்டி.
“ச்சே இவங்களெல்லாம் எத்தனை நல்ல குணம் கொண்டவங்களா இருக்காங்க.. நாம அசட்டுத்தனமா இருந்திருக்கோம்” என்று தன்மீது வருத்தப்பட்டவன் லதாபாட்டியையும் ஜோஷிதாவையும் கூட்டிச்சென்றான்.
ஜோஷிதாவை பார்த்த கௌரியை “துர்காவுக்கும் உனக்கும் நான் செய்த பாவம்தான் எனக்கு இப்படியொரு நிலை வந்துவிட்டது” என்று கண்ணால் பேசினார்.
“அத்தை உங்களுக்கு சரியாகிடும் நீங்க உங்க பேரன்கூட விளையாடப்போறீங்க” என்றாள் அந்த நேரத்திலும் சந்தோசமாக அவரிடம் பேசினாள் அவர் செய்த செயலை மறந்து போனாள் ஜோஷிதா.
லதாபாட்டியும் ஜோஷிதாவும் அர்ஜுன் வீட்டிலேயே இருந்தனர்.. அர்ஜுன் கௌரிக்கு பிசியோதெரபிஸ்ட் வைத்துவிட்டான்.. மாதங்கள் ஓடியது..
சிவாவோ மல்லிகாவை போய் பார்த்துவிட்டு வருவான்.. இப்போது குழந்தை பிறக்கும் நாள் நெருங்க சிவா அங்கேயே தங்கிவிட்டான்.. மல்லிகா சிவாவிடம் பேசினாள் அவள் கேட்பதற்கும் மட்டுமே பதில் சொன்னான் சிவா.
அன்றிரவு தூங்கிக்கொண்டிருந்த மல்லிகாவிற்கு வலி வர.. “சிவா எனக்கு இடுப்பு வலிக்கு என்னால முடியல” என்றதும் “கொஞ்சம் பொறுத்துக்கோடி” என்றவன் எழுந்து போய் புஷ்பாவை கூட்டிட்டு வந்தான்..
“மாப்பிள்ளை மல்லியை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடலாம்” என்று அவரும் குழந்தைக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்ப வடிவேலுவும் எழுந்துவிட்டார்.
மல்லிகா கதறியதும் சிவாவுக்கு காரை ஓட்டவே முடியவில்லை.. திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே காரை ஓட்டினான்.
ஹாஸ்பிட்டல் வந்ததும் ஸ்டக்சரில் படுக்க வைத்து லேபர் வார்டு கொண்டு போக சிவாவின் கையை பிடித்துக்கொண்டு “சிவா எனக்கு ஏதாவது ஆகிடும்னு பயமாயிருக்கு, நீயும் உள்ளே வா” என்றதும் டாக்டர் அனுமதியோடு உள்ளே சென்றான்..
மல்லிகாவிற்கு குழந்தை பிறக்க சிரமமாய் இருக்க.. “டாக்டரோ கொஞ்சம் முயற்சி பண்ணச்சொல்லுங்க சார்” என்று சிவாவிடம் கூற.
சிவாவோ “மல்லி ப்ளீஸ் உன்னால முடியும்” என்று அவளது நெற்றியில் முத்தம் கொடுக்க.
பலத்தை திரட்டி மூச்சை இழுத்துவிட சிவாவின் மகன் பூமியில் பிறந்தான்.
மல்லிகா மயக்கமடைய சிவாவோ ரொம்பவே பயந்துவிட்டான்..
“சாதாரண மயக்கம்தான் இன்னும் கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிடும்.. இந்தாங்க உங்கப் பையன்” என்று சிவாவின் மகனை கையில் கொடுத்தார் டாக்டர்.
கைகள் நடுங்க வாங்கியவனுக்கு அத்தனை ஆனந்தம்.. குழந்தையோ வாயில் விரலை வைத்து சப்பிக்கொண்டிருந்தது.. குழந்தையை சுத்தம் செய்ய நர்ஸ் வாங்கிக்கொண்டு “சார் வெளியே இருங்க பேசண்டை வார்டுக்கு மாத்தினதும் வந்து பாருங்க” என்று சொல்ல சிவா வெளியே சென்றுவிட்டான்.
34. உயிரை உயிரால் கோர்க்க வா
சிவாவோ வெளியே வந்ததும் அர்ஜுனுக்கும் போன் போட்டுச்சொல்ல “கன்கிராட்ஸ் சீனீயர்.. ஜோஷியை செக்கப் பண்ண கூட்டிட்டு வரேன் வந்து பார்க்குறேன் சீனியரோட ஜுனியரை” என்றான் சிரித்துக்கொண்டே..
மோகனுக்கு போன் போட்டுச் சொல்ல “இப்பவே கிளம்பி வரேன் சிவா என்றவன் அனிதா சிவாக்கு பையன் பிறந்திருக்கான் போய் பார்த்துட்டு வந்திருவோம்” என்று ஆர்ப்பரிப்பாக சொல்ல..
அனிதாவுக்கோ இந்த மாசம் நாள் தள்ளிப்போயிருந்தது எப்படி என்று குழம்பிக்கொண்டிருந்தாள்.. மோகன்தான் கணக்கு வழக்கில்லாமல் அனிதாவுடன் இணைவது.. எப்படியோ அனிதாவும் கன்சீவ் ஆகிவிட்டாள்.. ரெண்டு நாளாக குமட்டிக்கொண்டேயிருந்தது.. பரிமளாவிடம் சொல்ல அவரோ அனிதாவை கட்டிக்கொண்டு உச்சி முகுந்தார்..
“அத்தை அவர்கிட்ட சொல்ல பயமாயிருக்கு.. குழந்தையை வேண்டாம்னு சொல்லிடுவாரோ” என்று பயந்து நடுங்கினாள்.
“அதெல்லாம் ஒண்ணும் சொல்லமாட்டான்.. நீ அவன்கிட்ட தைரியமா பேசி ஹாஸ்பிட்டல் போய்ட்டு வா, அவன் ஏதாச்சும் பேசினா நான் பேசிக்கிறேன்” என்று சொல்லியிருந்தார்..
இன்றைக்கு மோகனாகவே ஹாஸ்பிட்டல் போக கூப்பிட அங்கே போய் பார்த்துக்கலாம் என்று சந்தோசப்பட்டவள், பவனையும் புறப்பட வைக்க பரிமளாவோ “நீங்க போய்ட்டு வாங்க.. பவனை இப்போ நீ தூக்கிட்டு அலைய வேண்டாம்” என்று சொல்லிவிட பவனை தூக்கிக்கொண்டு தோட்டத்திற்கு விளையாட்டு காண்பிக்க சென்றுவிட்டார் பரிமளா.
மோகனும் அனிதாவும் ஹாஸ்பிட்டலுக்கு போக மல்லிகாவையும் குழந்தையையும் வார்டுக்கு கொண்டு வந்திருந்தனர்.. “குழந்தையை பார்த்துவிட்டு குழந்தை உன்னைய உரிச்சு வைச்சிருக்கான்டா” என்று கிண்டலடித்து பேசினான் மோகன்.. அர்ஜுனும் ஜோஷிதாவும் வந்து விட அந்த இடமே கலகலப்பானது.. அங்கே வந்த நர்ஸோ “சார் இவ்ளோ பேர் கூட்டம் போடாதீங்க” என்றதும்
“சீனியர் ஜோவை செக்கப் காட்டிட்டு நாங்க கிளம்புறோம்” என்றதும்
“ஓ.கே சரி” என்றான் சிவா.
மோகன் அனிதாவுடன் கிளம்பி வெளியே வர.. அனிதா, மோகனுக்கு இப்படி பேசி சிரிக்க கூடத் தெரியுமா என்று ஆச்சரியப்பட்டு பார்த்தவளுக்கு ஏனோ கண்ணை கட்டிக்கொண்டு வர.. அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
“அனி என்னாச்சு” என்று பதறிய மோகனோ அவளை டாக்டரிடம் காண்பிக்க.. “இவங்க கர்ப்பமா இருக்காங்க” என்றதும் மோகனுக்கு முகமேயில்லை.. ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை. எப்படி நாமதான் ஜாக்கிரதையா இருந்தோமே என்று யோசித்தவன் அன்றைய தினத்தை நியாபகத்தில் கொண்டு வந்தவன் பெரும்மூச்சுடன் “இப்போ கரு எப்படி இருக்கு டாக்டர்” என்று கேட்க.
“ரொம்ப ஆரோக்கியமா இருக்கு” என்றவுடன் அவனுக்கு வாய் வரை வந்துவிட்டது.. இந்தக் குழந்தை வேண்டாமென்று.. அனிதாவோ எனக்கு இந்தக் குழந்தை வேணும் என்று கண்களால் மோகனிடம் கெஞ்சினாள்.. என்ன நினைத்தானே தெரியவில்லை.. “தேங்க்ஸ் அடுத்த முறை எப்போ செக்கப் வரணும்” என்றான் புன்னகையுடன்.
அனிதாவுக்கு காண்பது கனவா நனவா என்றிருந்தது.. கையை கிள்ளிப்பார்த்துக்கொண்டாள்.. அடுத்த மாசம் வரும் தேதியை டாக்டர் கூற மாத்திரையை வாங்கிக்கொண்டு கிளம்பினர்.
காரில் போகும்போதும் “என்னங்க இந்தக் குழந்தை” என்று அவள் கண்கலங்க..
காரை ஓரமாக நிறுத்திய மோகன் அவளை அணைத்துக்கொண்டு “இந்தக் குழந்தையை பெத்துக்கலாம்டி.. எனக்கும் பெண் குழந்தை வேணும்.. அதுவும் உன்னைப் போல” என்றான் கண்கள் கலங்கி..
“என்னங்க நீங்க இப்படி சொல்வீங்கனு நினைக்கல ரொம்ப சந்தோசம்ங்க” என்றவள் மோகன் முகம் முழுவதும் முத்தமிட்டாள்.. அடுத்து முத்தமிடுவது மோகனின் முறையாயிற்கு..வெளியே கார் ஹாரன் சத்தம் கேட்டு பிரிந்தனர்.
முத்துவுக்கு போன் போட்டு “நீங்க தாத்தா ஆகப்போறீங்க” என்றதும் அவருக்கோ தலைகால் புரியவில்லை.. இப்பவே கிளம்பி வரேன் என்று தோட்டத்தில் இருந்த காய்கறியெல்லாம் பறித்து போடச் சொல்லி வண்டியில் ஏத்திக்கொண்டு புறப்பட்டு வந்தார் முத்து.
அனிதா வீட்டுக்கு வந்ததும் பவனை தூக்க.. “நீ இனி பவனை தூக்க வேண்டாமென்று, பவனை மோகனே தூக்கிக்கொண்டு அம்மா வயித்துக்குள்ள பாப்பா இருக்கு இனி அம்மா மேல ஏறக்கூடாது” என்றான் கண்ணைச் சிமிட்டி மோகன்.
பவனோ “அப்தியாப்பா பாப்பா எப்போ வதும் நான் பாப்பாகூத விளையாடுவேன்” என்றது மழலைமொழியில்..
இன்னும் பத்து மாசத்துல வந்துடும் நீ அப்புறம் விளையாடலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
முத்துவோ சந்தோசத்தில் வந்தவர் மகளை கட்டிக்கொண்டு உச்சி முகந்தார்.. பேத்திக்கு இப்பவே மூணு பவுனில் சங்கலியுடன் வந்திருந்தார்.. பவனுக்கும் மைனர் செயினும் செய்து வந்திருந்தார்.. பவனும் என் பேரன்தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் முத்து.
அன்றிரவு பவனை தூங்க வைத்த அனிதாவோ கீழே மெத்தையில் படுத்திருந்த மோகனின் மார்பில் சாய்ந்து கொண்டு, நீங்க எனக்கு ஹஸ்பன்டா கிடைக்க கொடுத்துச் வச்சிருக்கணும்ங்க என்றாள் அவன் கன்னத்தில் எக்கி முத்தம் கொடுத்து.
“ஹனி நீ கிடைக்கத்தான் நான் தவம் பண்ணியிருக்கும்டி” என்றான் அவள் இதழில் முத்தமிட்டு.. மோகனின் வாழ்வில் சந்தோசத்தை கொடுத்து அவனின் வாழ்வை முழுமை பெறச்செய்தாள் அனிதா.. அதன் பிறகு அங்கே பேச்சுக்கு இடமில்லாமல் போக அனிதாவை தனக்குள் பொத்தி வைத்துக்கொண்டான் மோகன்.
மல்லிகா அடுத்த நாள் ஹாஸ்பிட்டலிலிருந்து கிளம்ப.. மைதிலியும் லஷ்மியும் ஹாஸ்பிட்டலுக்கு வந்தனர் குழந்தையைப் பார்க்க.. சிவா டாக்டரை பார்க்கச் சென்றிருந்தான்..
லஷ்மியோ, “அக்கா நான் உங்ககிட்ட பேசணும்” என்றதும் சொல்லுங்க என்றாள் குழந்தைக்கு பசியாத்தியவள் தொட்டிலில் போட்டுக்கொண்டு..
“சிவா உங்களை வேண்டாம்னு சொன்னது எங்க குடும்பத்தாலதான்.. இப்பக்கூட நான் உங்ககிட்ட உண்மையை சொல்லாமல் போனா தப்பாகிடும்” என்றதும் மல்லிகா “மேல சொல்லுங்க” என்றாள்.
“என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லி சிவாவை வற்புறுத்தினாரு எங்கண்ணா.. ஆனா சிவா உங்களை லவ் பண்ணுறேன்னு சொல்லி என்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்ல, விமலா அத்தைதான் அவங்க இறந்து போயிடுவேன்னு சிவாவை மிரட்டித்தான் எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாங்க..ஆனா நான் லவ் பண்ணினவரோட போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அதற்கும் சிவா தான் உதவி செய்தாரு. சிவா போல நல்ல மனுசனை பார்க்க முடியாதுக்கா” என்று மனம் உருகி சொல்ல.. மல்லிகாவிற்கு தான் தப்பு பண்ணிவிட்டோம் என்று மருகிப்போனாள்.
அதற்குள் சிவா வந்துவிட “வாங்க லஷ்மி எப்படியிருக்கீங்க” என்றான் சிவா.
“நல்லாயிருக்கோம்ங்க” என்றவள் பக்கம் இருந்த மைதிலி யிடம் “அண்ணி கிளம்பலாமா” என்றதும் மைதிலியோ சிவா அவளுக்கு கொடுத்திருந்த காசில் தங்கத்தில் ஒரு பவுன் செயினை செய்து வந்திருந்தவள் சிவாவிடம் கொடுத்து “அண்ணா பேர் வைக்கும்போது என்னால வரமுடியுமோ தெரியாது இப்பவே என் மருமகனுக்கு கொடுக்கிறேன்” என்றதும் சந்தோசமாக வாங்கிக்கொண்டான் மைதிலி முகம் வாடக்கூடாதென.
மல்லிகாவை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போக “என்னங்க நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்றாள் மெதுவாக..
சிவாவிற்கோ அத்தனை சந்தோசம் மல்லிகாவின் பேச்சால்.. புஷ்பாவோ , “மல்லிகா குழந்தையை முதலில் அம்மா வீட்டுக்கு தான் போணும் சம்பிரதாயம்” என்றார்.
“அம்மா சம்பிரதாயம் எல்லாம் நாம உருவாக்கறதுதான்.. நான் எங்க வீட்டுக்கு கிளம்புறேன்.. நீங்க வேணா எங்க வீட்டுல வந்து இருங்க” என்றாள் முகம் முழுக்க சந்தோசத்துடன்..
வடிவேலுவோ புஷ்பாவை கண்களால் அடக்கினார்..
விமலாவிடம் போன் பண்ணிச் சொல்ல அவரோ ஆரத்தி கரைத்து காத்துக்கொண்டிருந்தார் பேரனுக்காக.
கார் நின்றதும் சிவா மல்லிகா குழந்தையுடன் நிற்க மூவருக்கும் ஆரத்தி எடுத்தார் விமலா.
வீட்டுக்குள் சென்றதும் விமலாவோ அனைவருக்கும் காபி போடச் சென்றுவிட்டார்.. சிவாவோ குழந்தைக்கு அறையில் தொட்டிலை செட் பண்ணிவிட்டு திரும்ப.. குழந்தையுடன் அறைக்குள் வந்தவள் “நான் பேசணும் சிவா” என்றவள் குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு “சிவா “ என்று அவன் தோளில் சாய்ந்தாள்.
“நைட் பேசுவோம் மல்லி.. குழந்தை கூட இரு.. உனக்கு காபி எடுத்துட்டு வரேன்” என்று தலையில் முட்டி வெளியே சென்றான்..
வடிவேலு காபி குடித்து முடித்து “மாப்பிள்ளை நான் கிளம்புறேன் எனக்கு வேலையிருக்கு.. புஷ்பா ஒரு மாசம் இங்க இருந்து பார்த்துக்கட்டும்.. சம்பந்தி ஒருத்தர் மட்டும் இருந்தா வீட்டு வேலையும் செய்துட்டு மல்லியையும் குழந்தையையும் பார்த்துக்க சிரமமா” இருக்கும் என்றார்.
“ம்ம் தேங்க்ஸ் மாமா” என்றான் சிவா.
“இதுல எதுக்கு மாப்பிள்ளை தேங்க்ஸ் என் பொண்ணுதான் எங்க வீட்டுக்கு வரலைனு சொல்றாளே.. என் பொண்ணு இஷ்டப்படி நாங்க இங்க இருந்துதான் பார்த்துக்கணும்” என்றார் மனம் நெகிழ்ந்து..
“கவலைப்படாம போங்க சம்பந்தி என் மருமகளை நான் பார்த்துக்குறேன்” என்றார் விமலா.. வடிவேலுவும் நிம்மதியுடன் சென்றார்.
சமையல்கட்டில் வேலைகளை புஷ்பாதான் செய்தார்.. வீர பேச்சு பேசிய விமலாவோ பேரனை தூக்கி வைத்துக்கொண்டு நேரத்தைக் கழித்தார்.
அன்றிரவு சாப்பிட்டு படுக்க புஷ்பா, மல்லியிடம் “மாப்பிள்ளைகிட்டயிருந்து தள்ளியே இரு” என்று சொல்லியவர் ஹாலில்தான் படுத்துக்கொண்டார்.
விமலாவும் புஷ்பாவுடன் ஹாலிலேயே படுத்துக்கொண்டவர் “அம்மாடி மல்லி குழந்தை அழுதா ஒரு சத்தம் போடு நான் வந்துடறேன்” என்று குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார்.
குழந்தைக்கு பசியாத்திவிட்டு தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு திரும்ப சிவா குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தவன் “குழந்தை யாரு போல இருக்கான் மல்லி” என்றவன் குழந்தையின் நெற்றியில் முத்தம் கொடுக்கப் போக.
“சிவா தூங்குற குழந்தைக்கு முத்தம் கொடுக்கக் கூடாதுனு சொல்வாங்க” என்று சொல்ல..
“உனக்கு இதெல்லாம் யார் சொல்லிக்கொடுத்தா பாட்டி போல பேசுற” என்று சிரித்தான் தன் கோபம் மறந்து.. அவன் ஆசைபட்டதெல்லாம் மல்லிகா தன்னுடன் இருக்கவேண்டும் என்பது மட்டுமே.. அதுவும் இப்போது குழந்தையும் தன் அறையில் இருக்கிறது என்று இரட்டை மகிழ்ச்சி.
“நேத்து ஹாஸ்பிட்டல நான் தம்பிக்கு முத்தம் கொடுக்கப் போனப்ப அம்மாதான் எனக்கு சொன்னாங்க நான் உங்களுக்கு சொல்லுறேன்” என்றாள் கண்ணைச்சிமிட்டி..
“சரி குழந்தையை கொடு நான் தொட்டிலில் வைக்குறேன்” என்றதும் “நீங்க பார்த்து தூக்கணும்” என்று மெதுவாய் குழந்தையை அவன் கையில் கொடுக்க தந்தை கையில் வடிவாக இருந்து கொண்டான் சிவா மகன். சிவா அழுங்காமல் தொட்டிலில் வைத்து விட்டு “என்னமோ என்கிட்ட பேசணும்னு சொன்ன” என்றான் புருவம் தூக்கி..
“நீங்க ஏன் என்கிட்ட மறைச்சீங்க சிவா..என் மேல உங்களுக்கு அவ்வளவு காதலா” என்றாள் கலங்கிய கண்களுடன்..
“என்னடி மல்லி பேசுற எனக்கு ஒண்ணும் புரியல” என்றான் நெற்றியை தேய்த்துக்கொண்டு..
“நீங்க என்கிட்ட பிரேக்கப் சொன்னீங்கள்ள.. எதனால பிரேக்கப்னு எத்தனை முறை கேட்டேன்.. என்கிட்ட அப்பவே உண்மையை சொல்லியிருந்தா நான் உங்களை விடாம விமலா அத்தைகிட்ட வந்து மன்றாடி கேட்டு உங்களை கல்யாணம் பண்ணியிருப்பேன்” என்றாள் அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு கண்ணீர் விட்டபடி.
“நான் உன் மனசை காயப்படுத்துற போல பேசினா நீயும் என் மேல கோபப்பட்டு வெறுத்துடுவேனு தான் நானும் பிரேக்கப்னு சொன்னேன்டி.. ஆனா நீ என்னை வெறுக்காம இருந்த பாரு என் உசிரு உன்னோட உசிரோடு கோர்க்கணும்னு இருந்திருக்குடி” என்று அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் சிவா..
“ இந்த நிமிசம் நான் ரொம்ப சந்தோசமாய் இருக்கேன் சிவா” என்றவள் சிவாவை அணைத்துக்கொண்டாள். “நானும்தாண்டி” என்று அவள் இதழில் பட்டும் படாமலும் முத்தம் கொடுத்தான்.
சிவா ,மல்லி குழந்தைக்கு அபிமன்யு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்..
அர்ஜுன் ஜோஷிதாவிற்கு வளைகாப்பை ஊரைகூட்டி தடபுடலாக செய்தான்.. ஒன்பதாம் மாதம் தான்டி வளைகாப்பு வைத்தனர்.. கௌரிக்கு பிஸியோதெரபி கொடுத்து மெதுவாய் ஸ்டிக் வைத்து நடக்க ஆரம்பித்திருந்தார்.. லதாபாட்டி ஜோஷிதாவிற்கு உதவியாய் இருந்தார். கௌரிக்கும் உதவியாய் இருந்தார் வீட்டு வேலைகளை அலுமேலு செய்து கொடுக்க ஆரம்பித்தார்..
வளைகாப்பு முடிந்து அர்ஜுன் மடியில் படுத்திருந்தவளுக்கு அடிவயிற்றில் சுர்ரென்று வலி வர.. “அர்ஜுன் இடுப்பு வலிக்குது” என்றாள்..
“இப்பவே ஹாஸ்பிட்டல் போலாமா இரு பாட்டியை கூட்டிட்டு வரேன்” என்று பதறி அவளை மெல்ல தூக்க
“இன்னும் நல்லா வலி வரட்டும் போலாம் அர்ஜுன்” என்று மெல்ல எழும்பி உட்கார்ந்தவள் “அர்ஜுன் என்மேல இன்னும் உங்களுக்கு கோவம் இருக்கா.”
“ உன்மேல எனக்கு கோபமே வராது இனிமேல்.. நீ என்னோட செல்ல அத்தை பொண்ணு” என்று அவளது கன்னத்தை லேசாய் கடித்தான்..
“அத்தை பொண்ணுகிறதாலதான் என்னைப் பிடிக்குதா” என்று இதழ் பிதுக்கினாள்.
“அச்சோ என்னோட லட்டுவை எப்பவும் பிடிக்கும்” என்று கன்னம் கிள்ளி முத்தம் வைத்தான்.
“ஆஆ அர்ஜுன் இடுப்பு வலிக்குது” என்றதும்
“பாட்டிஇஇ அலமேலு அக்கா” என்று குரல்கொடுக்க..
லதாபாட்டியும், அலமேலுவும் பதறி உள்ளே போக.. கௌரிக்கு தன்னால் வேகமாக நடந்து அங்கே போகவும் முடியாது ஜோஷிதாவை பார்த்துக்கவும் முடியாது.. குழந்தையை கூட தூக்கி கொஞ்ச முடியாது என்று வருத்தப்பட்டு மெதுவாய் அறைக்குள் ஸ்டிக்கை பிடித்த படி நடந்து சென்றார் கௌரி.
ஜோஷிதா அழுவதை பார்த்த லதாபாட்டியோ “அர்ஜுன் தம்பி ஜோஷிக்கு பிரசவ வலி வந்துருச்சு நாம ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடலாம்” என்று பரபரக்க..
“அலமேலுக்கா அம்மாகூட இருங்க நான் பாட்டியை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு கிளம்புறேன்” என ஜோஷிதாவை தூக்கினான்
கௌரியோ “ஜோஷிதா அழாத உனக்கு சுகப்பிரசவம் சீக்கிரம் ஆயிடும்” என்றார் முதன் முறையாக மருமகளிடம் ஆதரவாக பேசினார்.
ஜோஷிதாவோ அந்த வலியிலும் “சரிங்க அத்தை” என்றாள் கண்ணீருடன்.
அர்ஜுன் லதாபாட்டியுடன் ஜோஷிதாவை ஹாஸ்பிட்டல் கூட்டிச்சென்றான்.. கௌரி சொன்னது போலவே ஜோஷிதாவை ரொம்ப படுத்தாமல் அர்ஜுனின் மகள் பிறந்திருந்தாள்.
குழந்தையை வெளியில் எடுத்து வந்து கொடுக்க “அர்ஜுன் வாங்குப்பா” என்றார் லதாபாட்டி.
“பாட்டி எனக்கு குழந்தையை எடுக்கத்தெரியாது நீங்க வாங்குங்க” என்றான் தடுமாற்றக்குரலுடன்..
“நான் எப்படி குழந்தையை பிடிக்கறதுனு சொல்றேன்” என்று குழந்தையை பிடிப்பதை சொல்லிக்கொடுக்க..
குழந்தையை அழகாக வாங்கிக்கொண்டான் அர்ஜுன்.. குழந்தையோ அப்படியே ஜோஷிதாவை உரித்து வைத்திருந்தது.. அவளது கன்னம் போல கொழுக்மொழுக்கென்று இருந்தது.. ஆசையாக பட்டும் படாமலும் முத்தம் வைத்தான் குழந்தையின் கன்னத்தில்.
கொஞ்ச நேரத்தில் ஜோஷிதாவை நார்மல் வார்ட்டுக்கு மாத்திவிட குழந்தைக்கு பசியாற்ற சொல்ல பாட்டி உதவி செய்தார் ஜோஷிதாவுக்கு. மூன்றாவது நாளில் வீட்டுக்கு வந்துவிட கௌரிக்கு குழந்தையை பார்க்க ஆசையாய் வந்தது.. ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் குழந்தையுடன் ஜோஷிதா வர.. கௌரியோ “பேத்தியை என் மடியில கொஞ்சம் நேரம் வைய்யேன் ஜோஷி” என்றார் ஆசையாய்..
குழந்தையை கௌரியின் மடியில் வைக்க குழந்தை கௌரியின் மடியை ஈரமாக்கினாள்.. “அடடே என் பேத்திபொண்ணு என் மடியை ஈரமாக்கிட்டாள்” என்று சிரித்தார் கௌரி.. ஜோஷிதாவோ என்னோட அத்தைக்கு சிரிச்சுக்கூட பேச தெரியுமா என்று ஆச்சரியமாக பார்த்தாள்.. குழந்தை பசிக்கு அழ “ஜோஷிதா குழந்தைக்கு பசியாத்துமா” என்றார் கௌரி பாசமான குரலில்.. அர்ஜுனுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது..
அன்றிரவு மெத்தையில் குழந்தைக்கு பாலை கொடுத்துவிட்டு முதுகில் போட்டு தட்டிக்கொடுத்து மெத்தையில் படுக்க வைக்க.. அர்ஜுன் கௌரிக்கு மாத்திரை எடுத்து கொடுத்துவிட்டு அறைக்குள் வந்து கதவை மூடியவன் “பாப்பா தூங்கிட்டாளா ஜோ” என்று குழந்தையின் பக்கம் வந்தவன் “உன்னைப் போலவே உரிச்சி பிரிந்திருக்காடி” என்று குழந்தையை ஆசையாக பார்த்தான்..
“அப்படியா குழந்தை உங்களைப் போலவே இருக்குங்க” என்று சிரித்தாள் ஜோஷிதா..
“ஏய் லட்டு இந்தப் பாப்பா சின்ன லட்டு போலவே இருக்காடி” என்று அவள் இதழில் முத்தம் வைத்தான்.
“அர்ஜுன் எனக்கு உங்களை போலவே பையன் வேணும்” என்றவள் அர்ஜுனின் நெஞ்சில் சாய்ந்தாள்..
“அதுக்கு இன்னும் மூணுமாசம் வெயிட் பண்ணனும்டி.. இப்ப உனக்கு பச்சை உடம்பு” என்றான் கிண்டலாக..
“நானும் இன்னும் மூணுமாசம் கழிச்சுதான் சொல்லுறேன்” என்றாள் அவன் தோளில் இடித்தபடி.
“பாப்பாக்கு ஒரு வருசம் போகட்டும்டி.. ஒரு பையன் என்ன இந்த வீடு முழுக்க பசங்களா பெத்துப்போடுவோம்”. என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்..
“ரொம்ப தேங்க்ஸ் எனக்கு அழகான குடும்பத்தை கொடுத்திருக்க.. தப்பு பண்ணின அம்மாவ மன்னிச்சு ஏத்துக்கிட்ட ..நான் உன்கிட்ட எத்தனை கோபமா நடந்து மாசமாய் இருக்கிற பெண்ணை வீட்டை விட்டு போகிற நிலைமைக்கு ஆளாக்கிட்டேன்.. ஆனா நீ அதெல்லாம் மறந்து நான் மன்னிப்பு கேட்டதும் நீ என்னை மன்னிச்சு ஏத்துகிட்ட பாரு நீ கிடைக்க நான் புண்ணியம் பண்ணியிருக்கும்டி” என்றான் உயிர் உருக.
“அர்ஜுன் நான் உங்க மேல கடல் அளவு ஆசை வச்சிருக்கேன்.. உங்க உயிரு என் உயிருக்குள்ள கோர்த்து கிடக்கு” என்றவள் அவனின் மடியில் படுத்துக்கொண்டாள்..
“இந்த நிமிசம் நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்டி” என்றான் அர்ஜுன் ஜோஷிதா கன்னத்தில் முத்தமிட்டு
அர்ஜுன், ஜோஷிதா குழந்தைக்கு ஆத்விகா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்..
மோகன் அனிதாவுக்கு மகள் பூமிகா பிறந்திருந்தாள்.. அனிதாவுக்கு பவன்தான் எப்பவும் செல்லம்.. பூமிகாவோ பவனின் செல்ல தங்கை .. பவனும் பூமிகாவும் இரு கண்களை போல பார்த்து கொண்டான் மோகன்.. அனிதாவை இன்னும் அதிகமாக காதல் செய்துகொண்டிருக்கிறான் மோகன்.
அர்ஜுன் சிவா மோகன் மூன்று ஆண்களின் வாழ்க்கையிலும் மல்லிகா, ஜோஷிதா அனிதா மூன்று பெண்களும் வசந்தத்தை கொண்டு வந்திருந்தனர்.. கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போவதே இக்கதையின் கருத்து.. மூவரும் அவரவர் மனைவியுடன் சந்தோசமாய் குடும்பமாக வாழ்ந்தனர்.
நன்றி வணக்கம் ..
வாழ்க வளமுடன் ..
அடுத்த கதையுடன் விரைவில் சந்திப்போம்..
நாளை இரவு வரை கதை இருக்கும் பிரண்ட்ஸ் கதை எப்படி இருந்துச்சுனு சொல்லுங்க கதைக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்ட பிரண்ட்ஸ் அனைவர்க்கும் கோடி நன்றிகள் ..
