ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்.... ஆகினேன் காதலா

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

2

ஆ…கா..  ஆ. கா…

ஜியா ஜானவி ❤️

ஆதித்யன் தன்‌ ஆயிரம் கரங்கள் கொண்டு தன் ஆசை காதலியை தழுவ காத்திருந்த இளங்காலை பொழுது…

நம் நாயகன் ஆதித்திய நிலவனோ தன் மாமன் மகளை தன்னவளாக்க தன் அறையில் தயாராகி கொண்டிருந்தான்!!

பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அருள் வந்து அவனை பார்த்து விட்டு, பார்த்து விட்டு சென்றார். இவனும் “என்னப்பா??” என்று முதல்முறை கேட்க.. அவரோ ஆழ்ந்து அவனை நோக்குபவர், அவன் முகத்தில் அவர் தேடுவது காணாமல், “ஒன்றுமில்லை நிலவா!” என்று சென்று விடுவார். 

அடுத்தடுத்து இரண்டு மூன்று முறை இப்படியே நடந்து கொண்டிருக்க.. அடுத்த முறை வந்தவரை பார்த்து “ப்பாஆஆ..!!” என்று வழக்கம் போல மேற்பார்வை பார்த்து கீழுதடு கடித்து இவன் முறைக்க… “ஒன்னும் இல்ல நிலவா.. ஒன்னும் இல்ல!! உனக்கு எதுவும் வேணுமானு கேட்க தான் வந்தேன். உன் பிரெண்ட்ஸ் கூட யாரையும் தான் நீ பக்கத்துல சேர்த்துக்கலையே…” என்றதும் அவன் முறைக்க.. “சும்மா.. சும்மா‌‌.. என்னை முறைக்காதே டா! உண்மைய தானே சொன்னேன்.. உங்க தாத்தா மாதிரி யாரையும் கிட்ட அண்டவிட்டுடுடாத! போடா…” என்று அவனை திட்டுவது போல நைசாக நழுவி விட்டார் மனுஷன்.

தந்தை எதுக்காக அவனை அப்படி பார்த்து பார்த்து சென்றார் என்று அவனுக்கும் தெரியும். ஆனாலும் அதைப்பற்றி அவரும் பேச மாட்டார். இவனும் பேச விடமாட்டான். மீண்டும் சிகையை கோதிக் கொண்டான், “கோதி கோதியே வாரிய முடி கலைந்து விட்டது.. எல்லாம் இவரால்!!” என்று தந்தையை கடிந்தப்படி கலைந்த சிகையை வாரிக் கொண்டிருந்தவன் கண்கள் தன் எதிரில் இருக்கும் அவனின் ஃபோனை தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. 

நேற்று இரவு தந்தைக்காக என்று காரணம் கற்பித்துக் கொண்டு அவன் ஃபோன் செய்த அந்த எண்!! அவனை அவ்வப்போது இம்சித்துக் கொண்டே இருந்தது!! வெறும் எண்ணாக இருந்தால் ஏனிந்த இம்சை இவனிடம்? அப்படி என்றால் அது வெறும் எண் மட்டும் இல்லையோ!!??

“இம்சை… இம்சை!! இருந்தாலும் இம்சை.. இல்லைன்னாலும் இம்சை!!” என்று வருங்காலத்தில் அவனின் இச்சையை ஏற்ற போவது அந்த இம்சை தான் என்று அறியாமல் அவன் தன் போல திட்டிக் கொண்டிருந்தான்!!

‘நான் அனுப்பிய கல்யாண பத்திரிக்கை போய் சேர்ந்திருக்குமா? அதை பார்த்திருப்பார்களா? பார்த்ததும் என்ன நினைத்து இருப்பார்கள்? வருவார்களா இந்த திருமணத்திற்கு? அப்படியே வந்தாலும் முழு மனதாக எங்களை ஆசீர்வதிப்பார்களா?’ என்று ஏக குழப்பங்கள்!! அநேக கேள்விகள்!!

‘வந்தால் வரட்டும் வராவிட்டால் போகட்டும்!! எனக்கென வந்தது? ஏதோ கடமைக்கு என்று பத்திரிகை வைத்தாயிற்று.. இனி அவர்களது கையில் தான் மற்றது? இத்தனை வருடங்களில் எவ்வளவு தான் நாமாக தாங்கி பிடித்து தடுக்கில் விடுவது? இனி இஷ்டம் என்றால்.. உறவு வேண்டும் என்றால்.. அவர்களே வரட்டும்!! இனி என்னிடம் இருந்து எந்த ஒரு அடியும் அவர்களை நோக்கி இருக்காது!! இருக்கவே இருக்காது!!” என்று முடிவு எடுத்தவன் அறியவில்லை.. அவனின் மொத்த வாழ்க்கையும் அவளை நோக்கித்தான் என்று!!

மாப்பிள்ளையாகப்பட்ட ஆதித்திய நிலவனை அழைப்பதற்காக மைத்துன முறையில் இருந்து இரண்டு இளைஞர்கள் வர, அவர்களோடு பேசிய படியே மேடைக்கு அருகே வந்து நின்று கொண்டான். கவனம் மேடையில் நடப்பவற்றில் இருந்தாலும், அவனது கண்கள் மண்டபத்தின் கூட்டத்தை அடிக்கு ஒரு முறை அலசி விட்டு வந்தது.

அவன் மனமோ அவர்களின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால் அறிவு ‘போதும்.. போதும்!! எதிர்பார்த்து ஏமாந்து போகாதே நிலவா!’ என்று கடிந்துரைத்துக் கொண்டிருந்தது.

சட்டென்று அவனது கண்கள் கூர்மை பெற… மண்டப வாயிலை பார்த்தான். அது அவர்கள்தான்!! மெல்லிய சலசலப்பு எழுந்து அடங்கி, அவர்களின் வரவை உணர்த்தியது அனைவருக்கும்!!

அச்சோ வந்துவிட்டார்களா?

அப்பாடி! வந்துவிட்டார்களா!!

இனி தான் சுவாரசியமே!!

இனி என்னென்ன பிரச்சனைகளோ??

என்று.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் அவர்களை எதிர் கொண்டனர். வந்தவர்களோ அமைதியாக முன்னிருக்கையில் அமரும் முன், ஆதிசங்கரனை நோக்கி கைகூப்பி வணக்கம் வைக்க… அவரோ பொதுவான தலை அசைப்பை கூட கொடுக்காமல் வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தார். 

காலை மண்டபத்திலே பரிசம் போட்டு அதன் பின் கோவிலில் கல்யாணம் என்று பேசி இருந்தார்கள். பிற்பகல் மூகூர்த்தம் என்பதால் நேர அவகாசம் இருக்க.. பரிச வேலைகள் நடக்க, இருபக்க மாமன் மைத்துன பங்காளி அங்காளி பெரியப்பா சித்தப்பா முறை உறவினர்கள் வந்து அமர்ந்தனர். நடுநாயகமாக ஆதிசங்கரன் அமர்ந்தார். முதலில் இருந்த ஆனந்தம் இப்போது இல்லை. பேரனின் கல்யாணம் என்ற இலக்கம் இல்லை. பெரும் இறுக்கமாய் இருந்தார் ஆதிசங்கரன்!!

பெண்ணுக்கு தாய் மாமா அருள் என்பதாலும் ஆதியின் தாய் மாமா சத்யேந்திரன் தற்போது உயிருடன் இல்லாததாலும் ஒன்றுவிட்ட மாமன்களை வைத்தே தட்டை மாற்றி அதன் பின் பரிசம் போடலாம் என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

இரு பக்கமும் மாமன்களாக இருவர் அமர, சம்பிரதாயங்கள் ஆராம்பிக்கப்பட்டன. 

மங்கை ஏதோ எடுக்க அறையில் இருந்து மேடைக்கு வந்தவர் எதர்ச்சையாக முதல் வரிசையில் அமர்ந்தவர்களை பார்த்து.. ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி, பின் இயல்புக்கு மாறினாலும், அவர் முகத்தில் ஒரு கர்வம் கலந்த பெருமிதம் வழியத்தான் செய்தது.

“பார்… என் மகனின் கல்யாணத்தை பார்!! 

எப்படி தடபுடாலாக.. ஊரையே கூட்டி விமர்சையாக!! 

பத்து பட்டியும் கேட்கும் நாத மேள தாளங்கள்..

பத்து வகை விஞ்சனங்களோடு கூடிய உணவு… 

பவுசு காட்டும் பளபளக்கும் பட்டாடை சூழ் உறவினர்கள்..

பல் முளைக்காத பிள்ளை முதல் பல் விழுந்த கிழவி வரை வியந்து பார்க்குமாறு மன்மதனை போன்ற என் மகன்.. அவனின் சரிபாதியாக 

என் அழகு மருமகள்!!

பாரு… நன்றாக பாரு!’ என்று‌ நிமட நேரத்தில் மங்கையின் கண்கள் எதிரில் இருந்தவரிடம் பல கதைகளை பேசின. அவற்றை எல்லாம் முகம்‌ மாறா அகம் நிறைந்த சின்ன புன்னகையால் எதிர்க்கொண்டார் சுபத்ரா!!

அவரின் இயல்பே அது தான்! அவரின் ட்ரேட் மார்க் புன்னகை!!

எத்துணை பெரிய இன்னல்களையும் துரோகத்தையும் வலிகளையும் எதிர் கொண்டவரின் அந்த புன்னகை மட்டும் என்றுமே வற்றியதில்லை! ஜீவநதி போல.. அது தான் அவரை சூழ்ந்தவர்களுக்கு ஜீவன்!!

மங்கை அவரின் புன்னகையைக் கண்டு திரும்பி தன் தந்தையை பார்க்க.. அவரோ கண் மூடி ‘அமைதியாக இரு! முகத்தில் எதையும் காட்டாதே!’ என்பது போல கண்களாலே பேச.. சரி என்றுவாறு தான் எடுக்க வந்த பொருளை எடுத்துக் கொண்டு மீண்டும் மணமகள் அறைக்குள் நுழைந்தார்.

இவற்றையெல்லாம் அமைதியாக பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான் ஆதித்திய நிலவன்!

அவனின் அம்மா கண்கள் சொன்ன கதையும் புரிந்தது. அதற்கு பதில் அமைதியாக புன்னகைத்த சுபத்ராவையும் புரிந்தது. இடையிடையே அருள் சுபத்ராவிடம் சென்று பேசுவதும் வருவதுமாக இருந்தார். அருளனந்தன் சுபத்திராவிடம் பேசும் போது ஆதிசங்கரனின் முகமோ விருப்பமின்மையை காட்டியது. கோபத்தை தத்தெடுத்தது!!

ஆனால் மாப்பிள்ளையாக போய்விட்டாரே!! நேரடியாக சொல்ல முடியாது‌. அதிலும் பல வருடங்களாக அவர் கண்ட கனவு நினைவாக போகும் இந்த நேரத்தில் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று அமைதியாக இருந்தார்.

“அவ வந்துட்டா அண்ணி!” என்றதும் ஏகம்மைக்கு அந்த அவள் யார் என்று புரிய.. “அண்ணி..!!” என்று கலக்கத்துடன் மங்கையின் கையை பற்றிக் கொண்டார் ஏகம்மை. வெளிப்படையாவே அத்தனை நடுக்கம் அதில்.

“நீங்க ஏன் அண்ணி பயந்து சாகுறிங்க? இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாம் நல்லாபடியா முடிஞ்சிடும்! அதற்கு பிறகு அவளுக்கு இங்க ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது! நீங்க தைரியமா இருங்க அண்ணி!” என்றதும் இவர்கள் மெதுவாக பேசிக் கொண்டது எதுவும் அருகில் இருந்த பெண்களுக்கு காதில் விழவில்லை. மைத்ரேயியும் ஆகர்ஷனாவும் தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டனர்.

“யாரு சுபத்ராவா? நல்லா இருக்கியா தாயி? என்ன தாயி ஒரே முட்டா இந்த பக்கமே வராம போயிட்டே??” என்று ஆதங்கமாக அதே சமயம் ஆதரவாக அவரின் கையை பற்றி கேட்ட அந்த பெரிய ஆத்தாவை எங்கனம் புறக்கணிக்க முடியும் அவரால்.

“நல்லா இருக்கேன்” என்று அவர் பொதுப்படையாக பேசி மையமாக தலையசைத்து வைத்தார். உறவு முறை சொல்லி அழைக்கவில்லை. பழுத்த பழம் அவருக்கு புரியாத என்ன? சிரித்துக் கொண்டார். அடுத்து அவரது கூர் பார்வையோ அவர் அருகில் அமர்ந்திருந்த அழகியமேதினியாள் மீது தான் படிந்தது.

“யாரு? உம் பொண்ணா? நம்ம அழகியா? பேருக்கு ஏத்த மாதிரி எம்புட்டு அழகா இருக்கா!!” என்று கூறியதும், அந்த அழகி என்ற வார்த்தையில் அதுவரை ஃபோனில் மூஞ்சி பூக்கில் தன் மூஞ்சியை புதைத்துக் கொண்டு இருந்தவள், விழி நிமிர்த்தி எதிரே இருக்கும் அந்த வயதான பெண்மணியை பார்த்து சினேகமாக சிரித்தாள்.

“பாரு சுபா.. சிரிப்பு கூட உன்னாட்டமே இருக்கு! நீ அதிர்ந்து பேசி கூட நான் பார்த்தது கிடையாது. அதே மாதிரி தான் உன் பொண்ணையும் வளர்த்து வச்சிருக்க.. அழகு குணத்தோடு எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ?” என்று ஒரு கண்ணால் மேடையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அந்த வயதான பெண்மணி சற்று தள்ளி இன்னொரு குடும்பத்துடன் தன் வம்பு பேச்சை ஆரம்பித்தது. “ஏலே.. ராசு நல்லா இருக்கியா? குடிப்பழக்கத்த எல்லாம் விட்டுபுட்டியா இல்லையா?” என்று அவர் அங்கு பேசுவது இங்கே இவர்கள் காதில் விழ, “கிரேஸி… நாணி!!” என்று அன்னையிடம் சொல்லி சிரித்துக் கொண்டவள் மீண்டும் தன் மொபைலை நோண்ட…

“எனஃப் இனியா! ஒரு ஃபங்ஷனுக்கு வந்திருக்கோம்! அங்க என்ன ஈவென்ட்ஸ்லாம் நடக்குதுனு பார்க்கலாம் தானே! எப்பவும் சேட்டிங் தானா? அதான் அவ்வளவு நேரம் பேசிறிங்க தானே ஃபோனில்? தென் வாட்?!” என்று சராசரி அம்மாவாக சுபத்ரா மகளைக் கடந்து கொள்ள, “ம்மா….!!” என்ற சலுகையோடு கன்று குட்டி குரலாய் கொஞ்சியது அவளது குரல்!

“நான் வரவே மாட்டேன் சொன்னேன்! நீங்க தான் கம்பெல் பண்ணி கூட்டிட்டு வந்தீங்க.. இங்கு வந்து அதை பண்ணு, இதை பண்ணுனு சொல்ல மாட்டேன் வேற சொன்னீங்க! ஆனா.. எப்பவும் நீங்க சொல்றது ஒன்னு செய்றது ஒன்னா இருக்கு!! ஐ ஹேட் தட்!!” என்றாள்.

ஆனால் அதன் பின் ஃபோனை நோண்டவில்லை. அதுதான் இனியா!! அம்மா சொன்னால் தனது பிடித்தமின்மையை பதிவிட்டாலும் அவர் சொன்னதை செய்து விடுவாள். பின் அங்கே நடக்கும் நிகழ்வுகளையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் ஆராய ஆரம்பித்தாள்.

நடை உடை பாவனை என்று அந்த ஊரில் பெண்கள் ஆண்கள் சிறுவர் சிறுமியர்கள் என்று நோட்டமிட்டாள். பின் அனைவரது உடல் மொழியையும் அவ்வப்போது அவர்கள் வாய்மொழியும் கேட்டு பலமுறை சிரித்தாலும், சில முறை அதிர்ந்தாலும், வெகு சுவாரசியமாக அவற்றை வேடிக்கை பார்த்தாள்.

சுபத்ராவாக யாரிடமும் சென்று பேசவில்லை. தன்னை நோக்கி வந்து பேசுபவர்களை தவிர்க்கவும் இல்லை. அனைவரிடமும் அதே புன்னகை முகம் தான்!! அதே சமயம் மகளையும் இவர்களிடம் பேசு என்று அவர் கட்டாயப்படுத்தவில்லை. ஆனாலும் பேச தூண்டிவிட்டார். மகளாக கேட்டால் அவர்களது பெயரை சொல்லி என்ன உறவு முறை என்பதை விளக்குவார் மகளிடம்.

“ம்மா எனக்கு இன்னும்  அந்த ரிலேஷன்.. பெயர்.. எல்லாம் குழப்புதுமா.. ஐ வில் லேர்ன் லேட்லி!”

இன்று கண்களை சுருக்கி கேட்கும் மகளிடம் மறுக்க முடியாமல், “இனி அடுத்த முறை இங்கே நாம வருவோம்மா என்று தெரியாது இனியா! அதனால இப்போ வந்திருக்கிற டைம்ல எல்லாரையும் பார்த்து ஒரு ஹாய்.. ஒரு பாய்.. சொல்றதில்ல உனக்கு என்ன குறைஞ்சது? மனிதர்களை மெஷினில் தேடாதே! அதில் உணர்வுகளும் உரிமைகளும் கிடைக்காது! வெறும் எமோஜிகளும் வார்த்தைகளும் மட்டுமே கிடைக்கும்! 

அவை உறவாகாது!!” என்று குரலை உயர்த்தாது, அழுத்தமாக உரைக்கும் அன்னையை கண்டவள், அதே அழுத்த பார்வையுடன்  பதில் பார்வை பார்த்தாள்!!

“அப்படி என்ன‌ செய்து விட்டன இந்த உறவுகள் உங்களுக்கு? உணர்வுகளை கொன்று உரிமையை தான்‌ பறித்தன! அதுக்கு இந்த மாதிரி வெற்று வார்த்தைகளானாலும் நோகடிக்காத ஃபேக் ரிலேஷன் பெட்டர்!!” என்று தோளை குலுக்கியவள் அதற்கு பின் அந்த மேடையை‌ விட்டு கண்களை எடுக்கவில்லை!

அதற்கு பதில் கொடுக்க முடியாமல் அமைதியாக இருந்தார் சுபத்ரா.

மேடையில் சம்பிரதாயங்கள் தொடங்கின. தாய்மாமன்‌ முறையில் இருந்தவர்கள் தங்களுக்குள் மரியாதைகளை செய்து கொண்டனர். பின் அருள் மங்கை தம்பதியர் ஒரு தாம்பாளத்தை அவர்கள் பக்கம் இருந்த தாய் மாமனிடம் கொடுக்க.. அந்தப் பக்கம் ஆதிசங்கரன் ஒரு தாம்பாளத்தை அவர்கள் பக்கம் இருந்த தாய் மாமனிடம் கொடுக்க.. இருவரும் அத்தாம்பாளங்களை தங்கள் துணைவியரோடு மாற்றிக் கொண்டனர்.

“அப்பாடி!! பாதி கிணற்றே தாண்டியாகி விட்டோம்!!” என்று பெரு மூச்சு வெளியில் வந்தது ஆதிசங்கரனுக்கு!! பரிச புடவையை வாங்கிக்கொண்டு மங்கை உள்ளே சென்றார்.

“பெண்ணை அழைத்து வாங்க!” என்று அந்த பெரிய‌ ஆத்தாவின் கணவர் கருப்பையா சத்தமாக கூற, மைத்ரேயி அழைத்து வந்து அந்த மேடையின் ஒரு பக்கத்தில் அமர வைக்கப்பட்டாள். 

ஆதி உடையை மாற்றிக் கொள்ளவில்லை. தாத்தா பார்த்ததற்கு “எப்படியும் இன்னொரு தரம் மாத்தனும் தாத்தா. இதுவே போதும்” என்றான். 

மாமன்‌ முறை உள்ளவர், “என்ன மாப்பிள்ளை இப்படி சொல்றிங்க” என்றதும், “பொண்ணுங்களுக்கு தான் விதவிதமா கலர் கலரா எடுத்திருக்கீங்க! எனக்கு இதே வேஷ்டி சட்டை தானே! அதை போட்டு இருந்தா என்ன? இதை போட்டு இருந்தா என்ன? அந்த ஃபோட்டோகாரனும் அப்போதிலிருந்து வளச்சி வளச்சி அங்க தான் எடுக்கிறான்! வேட்டி மாத்துறதும் மாத்தாததும் தெரியவா போகுது?” என்றதும் சபையில் உள்ளவர்கள் சிரித்துக் கொண்டனர்.

“ஆனாலும்.. உன் மாமன் வீட்டு சீர் இல்லையா? மாத்திட்டு வா பேராண்டி!!” என்று கருப்பையா சொல்ல, ம்ப்ச் அலுத்துக் கொண்டு சென்றான்.

உள்ளே சென்றவன், “வேட்டியை மாத்தனுமா?” என்று யோசிக்க, டிங் என்று அவன் மொபைலில் சத்தம், “வாழ்த்துக்கள்.. உங்க கல்யாணத்துக்கு!” என்று மொட்டையாக யார் என்று கூறாமல் வந்து குதித்தது மெசேஜ்!!

நெற்றி சுருங்க யாரென்று யோசித்தவன், யாரென்று புரிய ஒற்றை புருவம் உயர்த்தி “வாழ்த்துக்கு நன்றி! உனக்கும்..!” என்று பதிலளித்தான். பின் வேஷ்டியை மாற்றாமல் வெளியே சென்றான். அவன் சொன்ன மாதிரி யாரும் அதை கண்டுக் கொள்ளவில்லை.

அந்நேரம் மங்கை சுபத்ராவிடம் பேசிவிட்டு மேடை ஏறினார். என்ன என்று பார்த்த மகனிடம், “மேல கூப்பிட்டேன்! வரமாட்டேன்னு சொல்லிட்டா.. ஆசையா தானே கூப்பிட்டேன், வந்தாதாம் என்னவாம்? அம்புட்டும் திமிரு உடம்பு பூரா.. திமிரு எடுத்தவ!” என்று மகனிடம் குறை கூறிவிட்டு, “இந்தா வந்திட்டேன் அத்தாச்சி.. ” என்று ஏகம்மையை நோக்கி சென்றார். மங்கையின் ஒன்று விட்ட அத்தை பெண் தான் ஏகம்மை என்பதால் சிறுவயது பழக்கமான “அத்தாச்சி” அவ்வப்போது எட்டி பார்க்கும் அவர் பேச்சில்!

அன்னை சென்றவுடன் சுபத்ராவை தான் பார்த்தான் ஆதி. அவரது கண்கள் கலங்கி இருக்க.. இமைகள் கண்ணீருக்கு அணையாய் இருக்க.. முயன்று முறுவலித்தார் ஆதியை பார்த்து! அருகில் இருந்தவளோ அவனை வெட்டி வீழ்த்தினாள் பார்வையால்!! 

அத்துணை கோபம் என்பதை விட, அத்துணை ரௌத்திரம் அந்த கண்களில்!! அடுத்த கணம் மேடையில் இருந்த மைத்ரேயியை பார்த்து இவனையும் பார்த்து ஒரு ஏளன முறுவல்!! 

அலட்சியமான பார்வை!!

சுழித்த இதழ்களில் அத்தனை சீண்டல்!!

இவன் வழக்கமான தன் கீழுதட்டை கடித்து மேற்பார்வை பார்த்து அவளை முறைக்க.. 

அவள் இதழ்கள் மெல்ல அசைந்தது, கூர்ந்து நோக்கியவனுக்கு அவ்வார்த்தை பிடிபடவில்லை! 

மீண்டும் அவன் ஒரு முறைப்பை அவளிடம் பார்சல் அனுப்ப.. அவளோ அதை இதழால் வெட்டி வீழ்த்தி திருப்பி அனுப்பினாள்!!

அவளை கூர்ந்து பார்த்தப்படி அங்கே

மேடையில் அமர்ந்தான். கருப்பையா அவனை பார்த்து “பேராண்டி… இன்னைக்கு உனக்கு தான் கல்யாணம்!”

“அதை தெரியாமலா வந்திருக்கிறீரு?”

“எனக்கு தெரிஞ்சு என்ன? உனக்கு தெரிஞ்ச சரி!” 

“தெரிஞ்சதனால் தானே மாப்பிள்ளை கோலத்தில் இருக்கேன்!!”

“ஆனா.. பார்வை எப்படி தெரியலையே?”

“ஏனாம்? எப்படி தெரியுதாம்?”

இவ்வளவு பேச்சுவார்த்தைகளுக்கும் கருப்பையா இவனை பார்த்து இருக்க.. இவனோ அவளையே தான் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தான்.

“கட்டுப்பாடு வேணும்ல பார்வையில.. பேராண்டி!!” என்று எச்சரிக்கை விடுக்க..

“அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல புடிச்சு கட்டிப்புடுவாங்களே!! அதுக்கப்புறம் ஃபுல் கட்டுப்பாடு தான். அதுவரைக்கும் இருக்கட்டுமே..” என்றான் அவனும் சலிக்காமல்..

“அது மட்டுமல்ல . பாக்குற உரிமை எனக்கு இல்லையா என்ன?” என்று இப்போது மட்டும் அவரை திரும்பி பார்த்தான்.

எப்படி இல்லை என்று சொல்வார்?

“அதுக்கு என்ன அப்பு? நல்லாவே இருக்கே.. உரிம!”

“அப்போ உரிம இருக்கு! இது நீங்க ஞாபகத்துல வைச்சுக்குங்க! உரிம இருக்குல?” என்று அவரை பார்த்து கேட்க.. அவரும் எதற்கு என்று‌ புரியாமல் எல்லா பக்கமும் தலையை ஆட்டி வைத்தார்!

“அப்போ.. இன்னும் கொஞ்சம் நல்லா பாத்துக்கவா?” என்றவனின் குறும்பில் வாயடைத்து திரும்பி விட்டார் கருப்பையா. ஆனால் அவர் மனதில் ‘பயபுள்ள ஏதோ திட்டத்தோடு தான் இருக்கு!’ என்று யோசனையாகவே இருந்தார். அவ்வப்போது மேடையில் இருந்த அவனையும்.. மேடையில் கீழ் இருந்த அவளையுமே பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தார்.

அதற்குள் ஆதிசங்கரன் “என்ன அண்ணி..  பேரன் கூட பேச்சு பலமா இருக்கு?” என்றதும், “ஒன்னும் இல்ல தம்பி.. சும்மா தான்!” என்று சமாளித்தார்.

 

“சரி.. சரி.. முகூர்த்தத்துக்கு நேரம் ஆச்சு! அடுத்த வேலையை பாருங்க” என்று அவரை ஊக்க.. பெரிய மனிதராய் அவரும் “சரி சரி.. பரிசத்துக்கு நகை போடணும்! நாத்தனார் இல்லன்னா மாமியார் கிட்ட கொடுத்து போட சொல்லுங்க” என்றார்.

அதையும் கண்டும் காணாமல் தான் அமர்ந்திருந்தான் ஆதித்யநிலவன். ஆனால் மங்கை என்ன நினைத்தாரோ இல்லை மகனின் உரிமையை மருமகளிடம் நிலைநாட்ட எண்ணினாரோ “இல்ல.. என் பிள்ளையே போடுவான்! நல்ல ஏழு பவுன்ல இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி டிசைனா தாலி செயினாவே எடுத்து இருக்கேன். பரிசத்துக்கு அதுவே மருமகளுக்கு போடட்டும்” என்று சபையில் வைத்து மகனிடம் வந்து கொடுத்தார்.

“இந்த காலத்தில் எல்லாம் முன்ன மாதிரியே சாத்திர சம்பிரதாயத்தை பண்றோம்! எங்க காலத்துல பரிசம் போடும்போது மாப்பிள்ளை வரதே கிடையாது. இப்போ எல்லாம் நாகரீகம்னு பேசுறாங்க” என்று சபையோரிடம் அங்கலாய்த்தார் கருப்பையா.

“அதற்குள் மங்கை நல்ல முகூர்த்த நேரம் தானே ஐயரே?” என்று  அங்கிருந்து ஐயரிடம் கேட்க..

“இன்னும் ஒன்ற மணி நேரத்திற்கு நல்ல முகூர்த்த நேரம் தான்! இது முடிச்சோம்னா கோவிலுக்கு போய்  மத்த சாங்கியங்களை பார்த்து தாலி கட்டி இங்கு கூட்டிட்டு வந்துரலாம்” என்றார்.

“தம்பி போய் மருவப் பொண்ணு கழுத்துல போடு!” என்றதும், ஒரு புன்னகையோடு அதை வாங்கியவன் கண்களில் யாரும் விளங்கா இயலாத ஒரு மின்னல்!!

எழுந்து நின்றவன் மெல்ல மேடை ஓரம் அமர்ந்திருந்த மைத்ரேயி நோக்கி சென்றான். அப்பொழுது அவன் சட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்த ஒன்றை யாரும் அறியாமல் அதில்  கோர்த்தான். 

மைத்ரேயியை நெருங்கும் முன் அதை முடித்தவன், சட்டென்று மேடையில் இருந்து ஒரே குதி இரண்டே எட்டில் அழகியமேதினியாளை நெருங்கியவன், அவளின் இடது புஜத்தை பற்றி எழுப்பி, தன் கையில் மங்கை கொடுத்த செயினில் அவன் மாட்டிருந்த தாலியை அவள் கழுத்தில் அணுவித்தான். எல்லோரும்  அதிர்ச்சியில் இருக்க.. அதே நேரம் அருள் சந்தோஷதோடு “கெட்டிமேளம்.. கெட்டிமேளம்!!” என்று உரக்க கூற.. எதற்கு சொல்கிறார்கள் என்று புரியாமலேயே மேள வாத்தியம் விண்ணை பிளக்க இனிதே முடிவுற்றது ஆதித்யநிலவன் அழகிய மேதினியாள் திருமணம்!!

முதலில் அதிர்ச்சி கலைந்த ஆதிசங்கரன் “ஆதி… உன் மாமன் பொண்ணு கூட தான் உனக்கு இன்னைக்கு கல்யாணம் நாங்க நிச்சயம் பண்ணி இருந்தோம்” என்று கர்ஜிக்க…

“நானும் என் மாமன் பொண்ணு கழுத்துல தான் தாலியை கட்டினேன் தாத்தா!!” என்றான் அழுத்தமாக!!

ஆசை பெருகும்…

 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *