ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்.... ஆகினேன் காதலா

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

4

ஆ‌.கா… ஆ.கா…

ஜியா ஜானவி ❤️

மணமக்கள் இருவரும் அலங்கரிக்கப்பட்ட புது காரில் சென்று கொண்டிருந்தார்கள்.

அக்கார் மகனின் திருமணத்துக்கு அருள் வாங்கி வைத்த கார். அவரே சொல்லி இருவரையும் தானே அமர வைத்தார். அதனால் தயக்கமின்றி அமர்ந்தாள் அழகி! 

அருகில் புது மனைவி!

இருந்தாலும் தூரத்தில்..!!

இருவர் தோளும் உரசியும் உரசாமல்!

பட்டும் பட்டும் பட்டுக் கொள்ள.‌.. இவர்களோ பட்டுக்கொள்ளாத நிலை!! 

அவனுக்கு அவள் புதியவள் அல்ல. மாமன் மகளே!! 

ஆனாலும் அவளை அறியாதவன். மெல்ல அவளை பார்த்தான் ஆதி. அவளின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. தாலி கட்டும் போது காட்டிய அதிர்ச்சி அதன் பின் இல்லை. இவளே அவனின் அன்னைக்கு அதிர்ச்சி வைத்தியம் பார்த்தவள் ஆயிற்றே!! தனிமை கிடைக்கும் போது பேசிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தான்.

கழுத்தில் புதுமஞ்சள் தாலி இல்லை..

மணமிக்க மண மாலை இல்லை..

மங்கலமான மஞ்சள் குங்குமம் இல்லை‌‌..

வழுவழுக்கும் புது பட்டும் இல்லை.. 

முகமோ வெட்கத்தில் சிவக்கவில்லை..

செல்ல சீண்டல் இல்லை..

மறைமுக கொஞ்சல் இல்லை‌‌..

சீ என்ற பெண்ணின் சிணுங்கல் இல்லை..

மீசைக்குள் மறைக்கும் வெட்கம் ஆணிடம் இல்லை..

ஆனாலும் அவள் புது பெண் தான்!! அவன் புது மணமகன் தான்!!

 கல்யாணம்தான் அவசர கோலம்  அதற்காக வந்தவர்களை அப்படியேவா விட முடியும்?

மண்டபத்தில் இருந்தவர்களை சாப்பிட அழைத்து போகும் செயலை அருள் அவரின் அங்காளி பங்காளியிடம் கொடுத்து விட்டு, மனைவி தங்கையிடம் வந்தார்.

அவரின் தங்கை ஏகம்மையிடம் பேச்சு வார்த்தையை சுருக்கி வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால்… இந்நிலையில் தன் ஆதரவு தேவை என்பதை உணர்ந்து “ஏகா…” என்று அழைக்க.. வெகு வருடங்கள் கழித்து அண்ணின் அழைப்பு! அதுவும் அவரின் அன்பான அழைப்பு!!

கண்கள் கலங்க பார்த்தவரை வா என்று அருள் கை நீட்டி அழைக்க.. வெடித்து கிளம்பிய அழுகையோடு அண்ணனிடம் சரணடைந்தார். 

“இதை நீ பல வருடங்கள் முன்பே செய்திருக்கனும் ஏகா…” என்று கண்டிக்க தவறவில்லை.

“தப்பு தான்!! தப்பு தான்!! என்னை மன்னிச்சிடு அண்ணே!”  அன்று கேட்காத மன்னிப்பை இன்று கேட்டார்.

“இப்ப வந்து கேட்டு என்ன லாபம்? நடந்தது மாறிடவா போகுது? கிளம்பு வீட்டுக்கு போகலாம்” என்று தங்கையை தாங்கி பிடித்தவர், வெறித்த பார்வை பார்த்திருந்த மைத்ரேயிடம் சென்று “என்ன இருந்தாலும் ஆதி கடைசி நேரத்தில் இப்படி பண்ணி இருக்க கூடாதும்மா அவனுக்காக நாம் மன்னிப்பு கேட்டுகிறேன்” என்றதும் அவரை புரியாமல் விளங்காமல் பார்த்தவள் ஒன்றும் கூறாமல் அமைதியாக நிற்க, ஆகர்ஷனா தான் கோபத்தில் கொந்தளித்தாள்.

“அப்பா.. என்ன இது? எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை இங்க நடந்தது. அதெப்படி பா நீங்க அக்சப்ட் பண்ணிக்கிறீங்க? என்ன நடக்குது இங்க? அண்ணன் ஏன் இப்படி செய்தான்?” என்று பல நாட்களாக வெளியூர் ஹாஸ்டலில் தங்கி படித்தவளுக்கு குடும்பத்தின் குழப்பங்கள் தெரியவில்லை. ஆனால் மைத்ரேயிக்கு சில முக்கிய நிகழ்வு தவிர மற்றது தெரிய அமைதியோடு அவர் பின்னே சென்றாள்.

மனைவியையும் மாமனாரையும் இவர் திரும்பியும் பார்க்கவே இல்லை. வருகிறாயா என்றும் கேட்கவில்லை. மற்றபடி பெண்களை அவரது காரில் ஏற்றியவர், அங்கிருந்தவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து “வந்தவங்கள ஒழுங்கா கவனிச்சு அனுப்புங்க சித்தப்பா! எந்த குறையும் இருக்கக்கூடாது. முக்கியமாக தாம்பாளம் சாப்பாடு எல்லாம் சரியா கொடுத்திருக்கனும்” என்றார். வேலையாட்களிடம் மண்டபத்தை சுத்தம் செய்யும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சென்றார்.

தள்ளி தள்ளி சென்றவளின் கைகளை பிடித்து இறுக்கமாக தன் அருகில் நெருக்கமாக வைத்துக் கொண்டான் ஆதி.

இங்கே குடும்பத்தை கவனித்தாலும் முன்னரே பெரிய ஆத்தாவையும் இன்னும் சொந்தகார பெண்களையும்  மணமக்களை வரவேற்க வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார் அருள்.

“என் கண்ணே நிறைஞ்சிருக்கு!! ஜோடி பொருத்தம் அம்புட்டு அம்சமா இருக்கு. நூறு வருஷம் வாழனும் ஐயா.. நீ தீர்க்க சுமங்கலியா இருக்கணும் தாயி!!” என்று ஆலம் கரைத்து உள்ளே வந்தவர்களை ஆசீர்வதித்தார் பெரிய ஆத்தா தன் கணவன் கருப்பையாவுடன் நின்று!!

வீட்டுக்குள் நுழைந்த ஏகம்மை மைத்ரேயி ஆகர்ஷனா நடுநாயகமாக வீட்டில் அமர வைக்கப்பட்டிருந்த மணமக்களை பார்த்து தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டனர்.

கதவடைத்தும் அத்தனை அழுகை மைத்ரேயிடம், ஆதி மீது அவன் சொன்ன மாதிரி மைத்ரேயிக்கு நேசமோ காதலோ கிடையாது. அத்தை மகன் என்கிற அன்பு மட்டுமே! ஊரில் அவனுக்கு இருக்கிற பவுசு மரியாதை அவனது ஆளுமை.. கூடவே அவனை திருமணம் செய்து கொண்டால் இதே வீட்டிலேயே இருக்கலாம் என்று எண்ணம். அதுதான் இந்த திருமணத்திற்கு அவள் ஒத்துக்கொள்ள காரணம். 

ஆனாலும் இன்று ஏமாற்றப்பட்டதை அவளால் தாங்க முடியவில்லை. உலைக்களமாக எரிந்தது மனது.

“என்ன இருந்தாலும் உன் அண்ணன் இப்படி செய்து இருக்க கூடாது ஷனா!” என்று அழுதவளை தேற்றும் வழி தெரியாது நின்றிருந்தாள் ஆகர்ஷனா.. மைத்ரேயி அழுவதை பார்க்க பார்க்க அவளது மொத்த கோபமும் அண்ணனை விட அவன் கட்டி வந்த புது மனைவியிடமே தஞ்சம் கொண்டது வஞ்சமென!!

கோபம் புத்தியை மழுக்க, “நீங்க கவலைப்படாதீங்க அத்தாச்சி!! எப்படியாவது உங்களை நான் என் அண்ணன் கூட சேர்த்து வைக்கிறேன்!! அப்புறம்… அவளை ஓட ஓட விரட்டல…!” என்று சூளுரைத்துக் கொண்டவளுக்கு தெரியவில்லை, மங்கையை விட ஆட்டிப்படைக்கும் வல்லமை கொண்டவள் அழகி என்று!! என்று இவள் வாயை கொடுத்து வாங்கி கட்டப் போகிறாள் தெரியவில்லை…

இப்படியாக இவர்கள் மூவரும் அந்த அறையிலே தஞ்சம் கொண்டு, தங்கள் வஞ்சத்தை தீர்க்க நேரம் பார்த்திருந்தனர்.  

ஹாலில் அமர்ந்திருந்த அழகிக்கு அந்த வீட்டில் இருக்கவே சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அன்னையின் முகத்திற்காக அமைதியாக இருந்தாள். அம்மா இந்த வீட்டிற்கு வர மாட்டார் என்பது அவளுக்கு நன்றாக தெரியும். அவரிடம் பேச வேண்டும் போல் இருந்தது. அப்போதுதான் தன் செல் போன் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தவள், அருகில் அமர்ந்திருந்தவனிடம் கேட்கலாம் இல்லை. அவன் சட்டை பையில் இருந்த போனை சட்டென்று எடுத்தவள், ஆதி அதிர்ச்சியோடு பார்ப்பதை பார்க்காத வண்ணம் அன்னைக்கு அழைத்தாள்.

“ம்மா.. எப்பம்மா இங்க வர? இல்ல என்னை எப்போ கூட்டிட்டு போவ? எனக்கு இருக்கவே பிடிக்கல!! இட்ஸ் டிஸ்கஸ்டிங் மா!” என்று மெல்லிய குரல் தான் ஆனால் தெளிவாக கேட்டது ஆதிக்கு.

“உனக்கே தெரியும் இல்ல இனியா.. நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன்னு. கொஞ்சம் வெயிட் பண்ணுமா இங்க இருக்கிற நம்ம தாத்தா வீட்டை சுத்தம் பண்ண சொல்லி இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல ரெடியாயிடும். அதுக்கப்புறம் நீங்க நல்ல நேரம் பார்த்து இங்க வரலாம் மறுவீட்டுக்கு” என்றார்.

“என்னமோ கல்யாணம் எல்லா சாங்கியம் சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து நடந்த மாதிரி மறு வீட்டுக்கு கூப்பிடுறேன் சொல்றீங்க? இதுல நல்ல நேரம் வேற!!” என்று கடுப்படித்தாள் அன்னையிடம்.

இதுவரையும் ஒற்றை வார்த்தை கூட பேசவில்லை அன்னையிடம் அழகி. அங்கே மங்கையை கிழித்து தோரணம் கட்டியவள் அமைதியாக இருப்பதைக் கண்டு திருமணத்தை ஏற்றுக் கொண்டாள் மகள் என்று நினைத்தாலும், அவளின் அமைதி ஏனோ மனதை பிசைந்தது அவருக்கு. அந்த அமைதி புயலுக்கு பின்னான அமைதி என்று தெரியும் அல்லவா?? தாய் அறியாத சூழா!!

பெருமூச்சை இழுத்து விட்டவர், “அங்க இருந்துகிட்டு நீ இந்த மாதிரி பேசக்கூடாது இனியா! எதா இருந்தாலும் என்னிடம் பேசு! புரியுதா?”  என்றார் கண்டிப்போடு.

சட்டென்று போனை கட் செய்த அழகி எப்படி எடுத்தாளோ அதே மாதிரி அதனை ஆதியின் பாக்கெட்டில் வைத்தாள். க்ளுக் என்ற சிரிப்பு சத்தத்தில் இவள் சுற்றும் முற்றும் பார்க்க.. அவளை சுற்றி இருந்த அக்கிராமத்து வெள்ளந்தி மூத்த பெண்கள் வெட்கச் சிரிப்போடு அவளை தான் குறுகுறுவென்று பார்த்தார்கள். புது பெண் எவ்வித கூச்சமின்றி கண்வனிடம் உரிமையாய் தொட்டு பேசுகிறாளே என்ற வெட்கம் அவர்களுக்கு!! 

“இவங்க ஏன் இப்படி பாக்குறாங்க?” என்று புரியாமல் அழகி விழிக்க.. புரிந்த ஆதியோ முகத்தில் சிரிப்பை காட்டாமல் மீசைக்குள் ஒழித்தவன், இடது விரல்களால் மீசை நுனியை முறுக்கிக் கொண்டான்.

புது பெண்ணாய் இருக்கும் போது வெட்கப்பட்டு பேசாமல் இருப்பதும்.. 

பின் புருஷனை பேசி பேசியே கும்மாங்குத்து குத்துவதும் பெண்களின் கல்யாண பரிமாண வளர்ச்சிகளில் ஒன்றல்லவா? ஈஈஈ…

அதன்பின் அருளனந்தன் மணமக்களை மறு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். சிறுவயதில் பார்த்த தாய் வழி தாத்தா வீட்டை விழி அகலாமல் பார்த்தவள் “ரொம்ப நல்லா இருக்குமா வீடு! அப்படியே ட்ரடிஸ்னலா!” என்றாள் அழகி.

மீண்டும் இங்கேயும் ஒருமுறை பால் பழம் கொடுக்க வைத்தார் சுபத்ரா, மற்ற சுமங்கலி பெண்களை வைத்தே. அதில் அதிருப்தி மகளிடம்.

ஒருவாறு மதிய விருந்து இங்கே சுபத்ரா வீட்டில் முடிய இருவரையும் அழைத்து சில விஷயங்கள் பேச வேண்டும் என்றார்.

ஆதியை பார்த்த சுபத்ரா “என்ன நெனச்சு நீங்க இந்த தாலியை என் பொண்ணு காலத்தில போட்டீங்கன்னு எனக்கு தெரியல தம்பி! ஆனா ஒரு நிறைவான வாழ்க்கையை என்னால் தான் வாழ முடியல.. ஆனா என் பொண்ணும் கண்டிப்பா வாழனும்!! சந்தோஷமா.. மன நிறைவா!! எனக்கு இடையில் ஏற்பட்ட எந்தவித இடைஞ்சல்களும்…” என்று அருளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தார், அது எந்த இடைஞ்சல் என்று மற்ற ஆண்கள் இருவருக்கும் புரிந்தது. “அது மாதிரி எதுவும் என் பெண்ணின் வாழ்க்கையில் வரக்கூடாது!! அப்போ அமைதியாய் போன மாதிரி இப்பவும் நான் அமைதியா போவேனு சொல்ல முடியாது!! அப்பவும் என் பொண்ணுக்காக தான் அமைதியா போனேன்.. இப்போ அவ வாழ்க்கையில் திரும்ப ஏதாவதுனா சும்மா விட்டடுட்டு இருக்க மாட்டேன்!!” என்றதும் அழுத்தமான சிரிப்பு ஆதியிடம்!!

“உங்க பொண்ணு அப்படி பார்த்துப்பேன்.. இப்படி வச்சுப்பேன்.. இப்படி கைல தாங்குவேன்.. என்று வாய் வார்த்தையால எவ்வளவு வேணா சொல்லலாம்!! ஆனால் அதெல்லாம் வார்த்தைகள் மட்டுமே!! என்னை பொருத்த வரைக்கும் செயல்.. அதுதான் காட்டும்!! கூடிய சீக்கிரம் நீங்களே பார்ப்பீங்க!! இப்போ என் கல்யாணத்தை நானே தீர்மானித்த மாதிரி என் வாழ்க்கையையும் அதாவது நாங்க வாழ போற வாழ்க்கையையும் நாங்க தான் தீர்மானிக்க போறோம்!! இதில் இடையில் யாரும் இல்லை!!” என்றான் அதே அழுத்தத்துடன் தெளிவாக சுபத்ராவை பார்த்து.

அந்த அழுத்தம் பார்வை எல்லாம் அவளின் மாமனாரை பார்த்தது போல இருந்தது சுபத்ராவிற்கு. சத்யேந்திரன் ஆளுமை மிக்க அழகானவர் தான். ஆனால்.. அவரிடம் ஒரு மென்மை இருக்கும். இவன் பார்வைக்கு மென்மையாக தெரிந்தாலும் அப்படி இல்லை என்று அவனது கண்களிலும் மிடுக்கிலும் அவனின் வார்த்தைகளிலும் புரிந்து கொண்டார்.

திரும்பி அருளை பார்த்து “அண்ணன் சம்பிரதாயம் இதெல்லாம் இங்கே என்னன்னு எனக்கு தெரியல! நானுமே இங்க வந்து ரொம்ப வருஷம் ஆச்சு இல்லையா? இப்ப நாங்க இருக்குறது பெங்களூர்! அங்கு கொஞ்சம் சொந்தக்காரவங்க நண்பர்கள் எல்லாம் இருக்காங்க. அவங்களுக்காக ஒரு சின்ன ரிசப்ஷன் மாதிரி அங்கேயும் வைக்கலாம்னு ஆசைப்படுறேன். உங்களுக்கு தோது பார்த்துட்டு எனக்கு சொல்லுங்க.. பாப்பா டிரஸ் எல்லாம் நாங்க வந்து கார்லயே இருக்கு. இன்னைக்கு பங்க்ஷன் முடிச்சிட்டு நைட்டே கிளம்புற மாதிரி தான் எங்க ஐடியா. அவளுக்கு தேவையானது நான் பெங்களூர் போயிட்டு அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

“நீ கவலைப்படாதிங்க அத்த.. உங்க பொண்ணுக்கு தேவையானதை வாங்கி கொடுக்கும் அளவுக்கு நானும் நல்லாவே சம்பாதிக்கிறேன். அங்கு வரும்போது அவ யூஸ் பண்ண தேவைப்படும்!!” திரும்பி ஆதியை நக்கலாக ஒரு பார்வை பார்த்தாள் இனியா!!

“நான் இன்னைக்கு நைட்டு கிளம்பலாம் என்று பார்க்கிறேன்!” என்றதும் அதுவரை அழுத்தமாக அமைதியாக நின்று இருந்து அழகியின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி என பொழிய ஆரம்பிக்க.. “ம்மா…” என்றாள் மீண்டும் அதே பசுவை தேடும் கன்னுக்குட்டி குரலில்..

“இனியா…!!” என்று அழைத்து அவளது கைகளை இறுக்க பற்றிக் கொண்ட சுபத்ராவின் கண்களும் கலங்கியது.

அம்மாவுக்கும் மகளுக்கும் தனிமை கொடுத்து மற்றவர்கள் அங்கிருந்து செல்ல… *”உனக்கு தனியா எதுவும் சொல்ல வேண்டியது இல்லை இனியா! நீ பொறுப்பான பொண்ணு!! இத்தனை வருடங்களா நான் உன்னை பார்த்துக்கிட்டேன் சொல்றதை விட.. நீ தான் உன்னை பார்த்து கிட்டே, நான் வேலைக்கு போன சமயத்தில்.. இங்கேயும் உன்னை நீ தான் பார்த்துக்கணும். கணவன் என்ற ஸ்தானத்தில் அவர் இருந்தாலும், எல்லாத்துக்கும் அவரையே சார்ந்திருக்க கூடாது இனியா. இது அம்மாவின் வாழ்வியல் பாடம் உனக்கு!!

அன்பாக அந்நியோனியமாக வாழ்வது வேறு! ஒட்டுண்ணியாய் வாழ்வது வேறு!! இரண்டுக்குள்ள வித்தியாசத்தை தெரிந்துக் கொள்! அதிகமாக நான் உனக்கு அறிவுரை சொல்ல போவதில்லை!! டேக் கேர்!!” என்று மகளிடம் கூறிவிட்டு அவள் சிறிது நேரம் ஓய்வெடுக்க சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே வந்தவர் வெளிவாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்து ஆதியையுயும் அருளையும் கண்டு அவரிடம் சென்றார்.

“நீங்க ரெஸ்ட் எடுங்க தம்பி” என்று சுபத்ரா கூற, ஆதிக்கும் அழகியிடம் பேச வேண்டி இருந்தது. பொதுவான தலையசைப்போடு அழகி இருந்த அறைக்கு சென்றான்.

“அழகி…” என்று அழைக்க, அப்போது தான் குளியலறையில் இருந்து வந்தாள்.

“உட்கார்!!” என்றவன் கட்டிலில் அமர்ந்தான், அவள் அமருவாள் என்ற எதிர்பார்ப்புடன்!!

அவளோ ஒரு சேரை இழுத்துப் போட்டு அவனை விட்டு சில அடிகள் தூரமாய் தள்ளி உட்கார்ந்தவள் அவனை தான் பார்த்திருந்தாள்.

அவளை பார்த்தவனின் இதழில் உறைந்த புன்னகை!!

 ‘இவளிடம் எப்படி ஆரம்பிப்பது?’ என்றவன் யோசனை பார்வையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆராய்ச்சியாக மாற, பின்பு ஆளை விழுங்கும் பார்வையாக மாறியது!!

புடவை இடைவெளியில் தெரிந்த அவளது பொன்னிற இடை சற்று பளீச்சென்று தெரிந்தது அவன் கண்களுக்கு. பளபளப்பான இடுப்பின் மெல்லிய மடிப்பு அவனின் உணர்ச்சியை ஏற்றியது

அதன் வழவழப்பை ஆராயச் சொன்னது. அவன் பார்ப்பதை அவளும் பார்த்தாள். அவன் லேசான தயக்கத்துடன் புன்னகைத்தான். அவளோ முறைத்தாள்.

“என்ன.. என்னை சைட்டிக்கறிங்களா?”  என்று நாக்கை கன்னச் சுவற்றில் சுழற்றியபடி கேட்டாள்.

“ஏன்? அடிக்கனும்னு எதிர்பார்க்கிறியா? ” என்று பதில் கேள்வி கேட்டு, அவள் திணறுவதை ரசனையோடு பார்த்தவன், “அடிச்சா தப்பா?” என்று அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் இரு பக்கங்களையும் தன்  கைகளால் பற்றினான். 

அருகில்… மிக அருகில்.. அவனது முகம்!!

மூச்சும் மூச்சும் முத்தமிட்டு கொண்டன!!

அவள் கண்களுக்குள் பார்த்தான் ஆதி! அவள் கண்கள் அவனை ஆழமாக விழுங்கின..! அவள் பார்வையில் அசர வைக்கும் மின்சாரம் பாயவில்லை. ஆனால் அவனை மயக்கும் போதை தெரிந்தது!! அவளின் கோபமான விடைத்த மூக்கில் இருந்து புறப்பட்ட.. சூடான மூச்சுக்காற்று.. அவன் கன்னத்தில் மோதி.. அவனது கன்னக்குழியில் விழுந்து.. அவனை சிலிர்க்க வைத்தது. அவனது அருகாமையில் அழகியின் உதடுகள் மெல்லிய நடுக்கத்தில் துடிக்க.. அவளின் நடுங்கும் உதடுகள் மேல் அவன் பார்வை விழுந்தது. ரசனையாய் கொஞ்சமே கொஞ்சம் தாபமாய்!!

அவளுக்கு எப்படியோ அவனுக்குள் உணர்வுகள் எட்டு திக்கும் நரம்புகளில் படர்ந்து பாய்ந்து சென்றது. அவளை ஆள.. அவளால் ஆள!!

ஒற்றை விரல் கொண்டு அவளது நெற்றியில் புரண்ட முடியை விலக்கியவன், அவள் முகத்தில் இருந்து விலகவில்லை.. விரலை!!

கூர் மூக்கில் பயணித்து, மெல்ல கனிந்த இதழ்களை வருடியது.

முதன்முறையாக ஆண் மகனின் உரிமையான அழுத்தமான தீண்டல்!! அவளை தடுமாற வைக்க.. அவனை உணர்வு குவியலில் தள்ளியது!!

புத்தம் புதிய மலரில் வீசும் மணமாய்… 

மெல்லிய மடலின் மென்மையாய்…

சிறிது சிறிதாக பொழிந்து கொண்டிருக்கும் பனித்துகளின் குளிரச்சியாய்..

அவளது உள் மலரை சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது அவனது தொடுகைகள்!! அவளை ஆட்கொண்ட அப்புதிய உணர்வு !!

நரம்பு மண்டலங்களில் படர்ந்து.. 

புது இரத்தம் பாய்ச்சி.. 

அவளை சிறு துகளாக மாற்றி மிதக்க வைத்துக் கொண்டிருந்தது புரியாத.. பெயர் சொல்லத் தெரியாத இவ்வணர்வு!!

ஆனால் அந்த உணர்வை புரிந்து கொள்ளும் நிலையில் அவள் இல்லை.. ஏன் அவன் இருக்க விடவே இல்லை!! அவனின் இறுகிய அணைப்பு மட்டுமே அப்பொழுது அவளை வன்மையாய் அவனுள் இழுத்துக் கொண்டு இருந்தது. 

அவளை எப்போது எழுப்பினான்.. அணைத்தான் என்று அவள் அறியாள்!! ஆனால்.. இறுகிய அணைப்பில் இளகிக் கொண்டிருந்தாள்.

அதனோடு கூட, அவள் உடம்பில் எழுந்த மெல்லிய நடுக்கம், மெலிதான படபடப்பு, பதட்டம் என  எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவன்!!

மூச்சும் மூச்சும் அழுத்தமாக முத்தமிட்டுக் கொள்ள..

மூக்கும் மூக்கும் பட்டும் படாமல்

முத்தமிட்டுக் கொள்ள..

மெல்ல மெல்ல.. அவனது இதழ்கள் அவள் இதழ்களை கவ்வும் தூரத்தில்!!

ஆசைகள் பெருகும்…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *