ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்.... ஆகினேன் காதலா

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

12..

ஆ.கா. ஆ.கா…
ஜியா ஜானவி ❤️
“ஏன்னா அவர் தான் என் அப்பா!! அவர்தானே?” என்று அழுத்தமாக மங்கையை பார்த்து அவன் கேட்ட தொணியில் ஆதிசங்கரன் கூட திகைத்துப் பார்த்தார் பேரனை… மங்கை பதில் சொல்ல முடியாமல் திருத்திரு என்று விழித்துக் கொண்டு எச்சில் விழுங்கியவாறு மகனை பார்த்தார்.
“சொல்லுங்க!! அவர் தானே அப்பா? அப்போ அவர்கிட்ட பேசுனதுல என்ன தப்பு கண்டுபிடிச்சீங்க.. நீங்க? உங்களுக்கு வேணா உங்க அப்பா பெருசா இருக்கலாம்! குடும்பத்துக்கு பெரியவர் என்று தாத்தா இருக்கலாம்! ஆனா நம்ம குடும்பம்னு வந்தா.. என்னோட மாமியார் வீடுல்ல அவர் கிட்ட தான பேசுவாங்க! ஏன்னா நான் அவரோட பிள்ளை” என்று இந்த வார்த்தையை ஆதிசங்கரனை பார்த்து அழுத்தமாக உரைத்தான் ஆதி.
“டேய்!! என்னடா பேச்சு பேசுற? ஏண்டா இப்படி எல்லாம் பிரிச்சு பேசுற?” என்றார் பதறிப் போனவர், அப்பாவையும் மகனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே மங்கை. 
ஏகம்மைக்கு ஆதியின் இந்த வார்த்தைகள் எல்லாம் புதிய கோணமாய் இருக்க.. சற்றே பயத்துடன் தான் நின்று இருந்தார். ஷனாவுக்கும் மைத்திக்கும் ‘எதற்காக இந்த சின்ன விஷயத்தை இவன் பெரிதுபடுத்துகிறான்?’ என்றுதான் தோன்றியது. ஆனால் ஏனென்று புரிந்த அழகி கணவனை ஆச்சரியமாக பார்த்தாள்.
“அவர் பெரியவர் தான் குடும்பத்துக்கு. ஏன் ஊருக்கு கூட!! இல்லைன்னு யார் சொன்னா? ஆனாலும் என் சம்பந்தப்பட்ட முடிவை என் அப்பா எடுக்கிறதுல என்ன தப்பு இருக்கு? அதுவும் இல்லாம சுபத்ரா அத்த ஏன் அவர்கிட்ட பேசணும்? அவரா அவங்களுக்கு சம்பந்தி? என் அப்பா தானே சம்மந்தி! அப்ப அவர்கிட்ட பேசுறதுல என்ன நீங்க தப்பு கண்டுபிடிச்சீங்க?” என்று மீண்டும் இவன் வார்த்தைகளால் கொக்கி போட.. மங்கையோ என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் “அவளுக்கு தான் ஒன்னும் தெரியாது! சடங்கு சம்பிரதாயம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கிறது…” என்று அவர் ஆரம்பிக்க.. “ஏன் உங்களுக்கு தெரியுமா?” என்று இம்முறை கேட்டது அழகி!! ‘
‘போச்சுடா இவ வேற உள்ள வந்துட்டாளா?’ என்று மங்கை அலுத்துக் கொண்டார்.
“ஏய்!! இது எனக்கும் என் பிள்ளைக்கும் தனிப்பட்ட பேச்சு! இதுல ஏன் நீ குறுக்க வர?” என்றதும் “நீங்க உங்க பிள்ளை கிட்ட இவ்ளோ நேரம் பேசும் போது நான் ஒத்த வார்த்தை பேசினேனா? இல்ல தானே எங்க அம்மாவை நீங்கள் இழுக்க போய் தான் நான் இதுல உள்ள வந்தேன். எங்க அம்மாவுக்கு பெரியவங்களுக்கு மரியாதை தெரியுமா? சடங்கு தெரியுமா? சம்பளம் தான் தெரியுமானு கேட்டீங்க இல்ல? உங்களுக்கு தெரியுமா.. இதுவரைக்கும் அண்ணினு அவங்களை மரியாதையா கூப்பிட்டு இருக்கீங்களா? அவங்களை விடுங்க.. நீங்க உங்க புருஷனுக்கு முதல்ல மரியாதை கொடுத்து இருக்கீங்களா? சொல்லுங்க!!” என்று அவள் போட்டு உடைக்க.. அவர் அதிர்ந்து அருளனந்தனை பார்த்தார். அவர் கண்களோ மகனையும் மருமகளையும் தான் அதிக பாசத்தோடு பார்த்திருந்தது.
மனைவி தன்னை பார்க்கிறாள் என்று திரும்பி அவரை பார்த்த அருள் முகத்தில் என்ன இருந்தது? திடுக்கிட்டு போனார் மங்கை.
“உங்களுக்கு உங்க அப்பா பெருசா இருக்கலாம் மா? அதுக்காக என் அப்பாவை நீங்கள் இத்தனை நாள் என்ன மரியாதை கொடுத்தீங்க? சொல்லுங்க!! வீட்டோட மாப்பிள்ளை இருக்காங்கன்னா? அவரா வந்தாரா? தாத்தா கேட்டு தானே அவர் வந்தாரு! ஆனா அதற்கான மரியாதை இதுவரைக்கும் நீங்க கொடுக்கல ஏன் அவர் தங்கை கல்யாணத்துக்கும்.. அவருடைய மகன் கல்யாணத்துக்கும் அவர் கிட்ட அபிப்ராயம் கேட்டீங்களா? இல்லையே!! நீங்களா முடிவு எடுத்து நீங்களா செஞ்சீங்க.. இனி அப்படி இருக்காது!! என் சம்பந்தப்பட்டதை என் மாமியார் வீட்டுல என் அப்பா கிட்ட தான் பேசுவாங்க.. இதுல உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கா தாத்தா?” என்று நேரடியாக கேட்டான் ஆதிசங்கரனிடம்.
எப்படி சொல்வார் எனக்கு ஆட்சியபனை உண்டு என்று!! ஏனென்றால் இதே கேள்வியை அன்று அருள் கேட்ட போது.. “என் மகனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்! அவனை பெத்தவன் நான்!!” என்று அதிகாரமாக உரைத்து அவரது வாய் அடைத்ததை போல்.. இன்று பேரனிடம் சொல்ல முடியாது அல்லவா? அதுவும் அதே அதிகாரத்தோடு பேரன் நேருக்கு நேர நிற்கையில்… எல்லாம் தளர்ந்து போய் தான் போட்டதே திரும்ப வரும் பொழுது அதை எதிர்கொள்ள தான் வேண்டியிருந்தது அவருக்கு. 
அதனால் “இல்லையப்பா!! நீ சொன்னது சரிதான்! உன்னை பொறுத்தவரை உன் குடும்ப சம்மந்தி உன் அப்பாகிட்ட பேசுவது தான் சரி! அதுவும் இல்லாமல் அந்த பெண் என்னிடம் பேசுவதை நானே விரும்ப மாட்டேன்” என்றதும் இப்பொழுது நேரடியாக அழகி அவரை முறைத்தாள்.
“நான் சொல்வதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்களா இல்லையா எனக்கு தெரியவில்லை தாத்தா!! என் அப்பாவுக்கு அவங்க சம்பந்தினா நீங்க யார்?” என்றதும் பல பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொன்னவரால் இதற்கு பேச முடியாமல் வாயடைத்துப் போனார்.
“அப்போ இந்த பிரச்சனை இதோட முடிந்தது. நீங்க ரெண்டு நாளா வரேன் தகவல் சொல்லுங்க அப்பா! என்னென்ன வேலைனு கொஞ்சம் பாத்துட்டு சொல்றேன். அன்னைக்கு எல்லாரும் கிளம்பலாம்” என்றதும் ‘நான் வரலை!’ என்று மங்கை வாய் எடுக்கும் முன்னமே அதை சொல்லி இருந்தாள் ஷனா.
திரும்பி அன்னையை ஒரு பார்வை பார்த்தவன் நின்று நிதானமாக தங்கையை பார்த்து “உன் அண்ணனா நான் கடைசி வரைக்கும் வரணும்னா.. என்னோட எல்லா விஷேசத்திலும் நீ இருக்கணும்! இல்லைன்னா…” என்று தோளை குலுக்கி கொண்டவன் அன்னையிடம் ‘அவளையும் உங்கள மாதிரி மாத்திடாதீங்க!’ பார்வை பார்த்து விட்டு செல்ல… அதை சொல்ல முடியாது அமைதியாக இருந்த ஏகம்மையும் மைத்தியையும் அருள் பார்த்தவர் “அதேத்தான் ஏகா உனக்கும்! என் பையன் சொன்னது தான்! எப்பவும் உன் அத்தாச்சி மட்டுமே உனக்கு பின்னாடி வால் பிடித்து வந்து கொண்டிருக்க மாட்டா.. நாளை பின்னால் உன் பொண்ணுக்கும் கல்யாணம் ஆகணும். சம்பந்தி உறவு முறை எல்லாம் வரும். அப்பவும் இப்படி முறுக்கிக்கிட்டே இருப்பீங்களா? பார்த்து நடந்துக்கோங்க!! உங்க பழக்கம் தான் உங்க பொண்ணுங்களுக்கும் வரும்!!” என்று இருவரையும் பார்த்து சொல்ல.. சிரிப்பு அடக்கி கொண்ட அழகியோ மாமாவை பார்த்து அர்த்தமாக சிரித்துவிட்டு அவளும் கணவனோடு சென்றுவிட்டாள்.
அறைக்குள் நுழைந்த மனைவியை கண்டு கொள்ளாமல் பால்கனியில் நின்று தோட்டத்தை வெறித்துக் கொண்டிருக்க.. ‘பூமி மாத்தி சுத்துதா? ரூம்குள்ள நுழைஞ்சாலே பாய்ந்து பயந்து பிடித்துக் கொள்வார்! இன்று என்ன அமைதியாக இருக்கிறார்!’ என்ற யோசனையோடு அவன் பின்னாடி சென்றவள், அவன் பார்வை சென்ற இடத்தை பார்த்ததும் அன்றைய நாள் நினைவில் வர.. அப்பொழுதுதான் அவளுக்கு அந்த ஞாபகம் வந்தது.
“அச்சச்சோ!!” என்றாள் சத்தமாக!! என்ன என்று இவன் திரும்பி பார்க்க “அன்னிக்கு அங்கு தானே… நாம… அதையெல்லாம் எடுத்து போட்டுட்டீங்களா?” என்று கிசுகிசுப்பாக அவனை நெருங்கி கேட்டாள்.
“எதை?” என்று அவன் விஷமமாக மீசையை நீவிக் கொண்டு அவளை பார்த்து கேட்க…
 “ம்ம்… அப்புறம் அப்படியே சொல்லிடுவேன்! சொல்லிடவா?” என்று நாக்கை கன்னங்குழியில் சுழட்டியவாறு அவள் கேட்க..
“கேளேன்? சொல்லேன்? உன்னால் முடிந்தால்….!!” அவள் வெட்கப்பட்டு கொண்டு சொல்ல மாட்டாள் என்ற தைரியத்தில் ஆதி நின்ற இடத்தில் இருந்து முன்னால் குனிந்து அவள் காதோரம் கிசுகிசுக்க…
“ஏன் முடியாதா?” என்றவள், அதுவரை உச்சி ஸ்தானில் பேசிக் கொண்டிருந்தவள் மெதுவாக “அன்னைக்கு நீங்க உடைத்த என் கண்ணாடி வளையல்கள்… நீங்க பிய்த்துப் போட்ட பூக்கள்.. அப்புறம்.. அப்புறம்…” என்று தடுமாறியவள் அடுத்த வார்த்தையை சொல்ல முடியாமல் விழிகளை சுழற்றி அவன் முகம் பார்ப்பதை தவிர்த்தாள். 
எப்போது அவன் அருகில் வந்தான் என்று தெரியாமல் “அப்புறம்..??” என்றான் அவளை விட மெல்லிய ஹஸ்கி வாய்ஸில்.. “அப்புறம்… ஏன் அது உங்களுக்கு தெரியாதா? என்னமோ போங்க! ஆனா நான் சொல்ல மாட்டேன்!” என்றவள் அவர்கள் அறைக்குள்ளே வந்து விட்டாள்.
ஆனாலும் அவளுக்கு அவன் அதனை எல்லாம் என்ன செய்தான் என்று தெரிய வேண்டி இருக்க.. “ஏங்க…!!” என்றதும் அவனும் காது கேட்காத மாதிரி அவளைப் பார்த்த வண்ணம் தான் நின்று இருந்தான் பால்கனி பக்க சுவற்றில் சாய்ந்த வண்ணம்!! ஆனால் பதிலளிக்கவில்லை. பார்வை மட்டுமே!! அதுவும் அவளின் உள்ளே ஊடுருவம் பார்வை!
தோட்டத்தில் வந்த சிலு சிலு காற்று அவன் அலை கேசத்தை கலைத்து விட.. முன்னொச்சியில் பிரண்டு விளையாடிய அவன் கேசங்களும்.. வெள்ளை கையில்லா பனியனில் உருண்டு திரண்ட அவனது புஜங்களை இருக்க முன்னாள் கட்டி இருக்க.. அதில் அவனது வௌவ்வன தேக்கு மர வலுவான தேகமும்… அங்கே இங்கே தெரிந்த அவன் நெஞ்சு முடிகளும்.. வெள்ளை வேட்டியும்.. கூர் விழிகளால் காதல் செய்து கொண்டு உதட்டில் மென் புன்னகையோடு நின்று கொண்டிருக்கும்.. அவனை கண் கொட்டாமல் பார்த்து இருந்தாள் அழகி. 
அதுவும் இப்பொழுது அவன் கண்களில் காதல் ஏற ஏற.. இவள் கண்களுக்கு அவன் அத்தனை கவர்ச்சியாய் அழகனாய் தெரிந்தான்!! அவன் மீது விழும் நிலவொளியில் அந்த நிலவன் தான் அவன்!! ஒருவேளை கந்தர்வனோ என்னும் அளவிற்கு அவனின் ஆண்மையின் வசீகரம் பெண்ணவளின் இளமையை துளைத்து சென்றது!! உருகி நிற்கச் சொன்னது!!
கோதையவளின் மனது அவனது வசீகரத்தில் வசீகரிக்கப்பட்டவளாய் மயங்கி நின்றிருந்தவளை.. அவன் தன் இரு கரம் விரித்து கண்களால் வாவென்று அழைக்க.. இரண்டு அடி எடுத்து வைத்து விட்டாள் அத்தனையும் மறந்து!! தன்னையும் மறந்து!!
பின்பு இடவலமாக தலையாட்டிக் கொண்டு ‘மாட்டேன்.. வேண்டாம்..’ என்ன விதமான உதட்டை மட்டும் அசைத்து அவள் பின்னால் நகர.. அவனும் நீட்டிய கையை மடக்காமல் மீண்டும் கண்களை மட்டும் மூடி திறந்து ‘வா டி!’ என்று மென்மையாய் இதழ் அசைத்து கூப்பிட… 
அந்த மெல்லிய உதட்டு அசைவு கூட அவளுக்கு பெரும் அவஸ்தையா இருக்க.. நடுங்கிய கால்களை நிலைப்படுத்த முடியாமல் நின்றிருந்தாள் மாது!! அவளையும் மீறி அவளது மொத்த உடலும் ஏன் மனமுமே அவனிடமே சொல்லி இழுக்கப்பட.. ஈர்க்கப்பட.. எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடியும் இந்நிலையில் என்று அறியாதவள் சென்று கட்டிலில் திரும்பி குப்புற படுத்துக்கொண்டாள்.
“அப்பப்பா… கண்ணாலா கொல்றானே! இதுக்கு இவன் நான் ரூம் உள்ளே நுழைந்ததுமே என்னை ஸ்வாகா பண்ணி இருக்கலாம்!” என்று வேக வேகமாக மூச்சுகள் வெம்மையோடு வெளியேற.. அதை அத்தனையும் மெத்தையில் படுத்து கட்டுப்படுத்தியவாறு கண்களை இறுக்க மூடி இருந்தவள் மேல்.. ஆணின் வாசம் அவனின் ஸ்பரிசம்!!
அவளை பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் பின்பக்கமாக படுத்திருந்தவன் அவளது காது மடலை கவ்வி “எத்தனை நாள் என்னிடம் வராமல் இப்படி தவிக்க விடுவாயடி பிஜிலி!” என்று ஆழ் குரலில் கேட்க.. அதிலோ அவளின் பெண்மை உருகி கரைந்து போனது.
அவளையும் அறியாமல் “அத்தூ…!!” என்றாள் மயங்கிய வெளிவராத குரலில்!
ஆனால்.. அவளை கண்டுக் கொண்ட மாயவனோ.. “ஏன் டி இவ்வளோ நாளா கூப்பிடல… பிஜிலி!” என்று கரகரத்த குரலில் அவளை ஆக்ரோஷித்தான்.
“இனி நீயா வராம.. நானா உன்கிட்ட நெருங்க மாட்டேன்!” என்றவனின் உதடுகள் அவை காதில் குசுகுசுத்து.. பட்டு கன்னத்தில் உராய்ந்து.. கழுத்தின் வழியே பயணித்து.. பின் கழுத்துக்கு வந்து அங்கே அழுத்தமாக காதல் கதை பேசியது!! வெண் முதுகு பரப்பில் அழுத்தமாக தன் தடயங்களை பதித்து விட்டே விலகியது!!
“போனா போங்க.. உங்களுக்கு அவ்வளவு இருக்கும்போது எனக்கு இருக்காதா? நானும் வரமாட்டேன் போயா!” என்று சத்தமாக முணுமுணுத்து போட்டு திரும்பி படுத்து கொண்டாள் அழகி. அவளை விட்டு பிடிக்கும் நோக்கத்தோடு ஆதியும் தன் சிரிப்பை மீசைக்கு அடியில் மறைத்துக் கொண்டு உறங்கிப் போனான்.
13
மறுநாள் ஆதி தந்தையை தேடி வயலுக்குச் செல்ல.. அங்கே அவர் இல்லை. அங்கு இருந்தோரிடம் விசாரிக்க “சின்ன ஐயா.. பெரியவரு கிழக்காலே வீட்டுக்கு போய் இருக்காங்கன்னு நினைக்கிறேன். வந்ததுல இருந்து கொஞ்சம் கூட சொரத்தையே இல்ல முகத்துல.. நான் வீட்டுக்கு போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு போனாரு!!” என்றதும் தந்தை எங்கே எந்த வீட்டுக்கு சென்று இருப்பார் என்று அறிந்த ஆதி வேகமாக அந்த வழியே சென்றான்.
அவர்கள் வயலில் இருந்து சிறு தூரத்தில் பரந்து விரிந்த தோப்பின் மத்தியில் இருந்தது ஓர் அழகிய ஓட்டு வீடு!! நடுத்தரமான வீடு!! சுற்றிலும் வேலி அமைத்து இருக்க.. பல நாட்களாக பூட்டப்பட்டு கிடந்தது. அந்த வீட்டின் எதிரே இருந்த முள்ளாலான படலை பிடித்தவாறு அந்த வீட்டையே இமைக்காமல் பார்த்திருந்தார் அருள்.
தந்தையே அந்த கோலத்தில் பார்த்தவுடன் மனதுக்கு வலித்தது ஆதிக்கு. அவர் அருகே சென்றவன், அவர் தோள் மீது கை வைத்து “அப்பா…!!” என்று அழைக்க… மகனை திரும்பி பார்த்தவரின் கண்களில் அத்தனை வலிகள்.. நிராசைகள்!! கலங்கி பார்த்தார் மகனை!!
அப்பாவை அந்த கலங்கிய கண்களோடு கண்டவனுக்கு மனம் வலிக்க “கவலைப்படாதீங்க பா! நான் இருக்கேன் தானே.. கண்டிப்பா மீட்டிடுவோம் நம்ம வீட்டை! வாங்கப்பா போகலாம்.. இப்படி போட்டு மனச குழப்பிக்காதீங்க”
அவரோ அவ்வீட்டை விட்டு கண்களை அகற்றாமல்.. “நிலவா.. நிலவா.. நம்ம வீடுபா…” என்றவாறே நின்றிருந்தவரை கைப்பிடித்து இழுக்காத குறையாக வீட்டுக்கு அழைத்து வந்தான். அதற்குப் பின் அவரை வெளியே வயலுக்கு விடவில்லை.. தனியாக வீட்டில் விடவும் மனதில்லை அவனுக்கு.
அவரோடு ஆதியும் சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்டான்.
அப்பா இப்பொழுது எந்த மனநிலையில் இருப்பார் என்பதை உணர்ந்த மகன் “இவரை விட்டா இப்படியே தனக்குள் நத்தையாய் ஒடுங்கிக் கொள்வார்” என்பதை புரிந்து கொண்டவன் “அத்தைக்கு ஃபோன் போட்டு பேசுறீங்களா அப்பா? இன்னும் ரெண்டு நாள்ல அதாவது சனிக்கிழமை இங்கிருந்து கிளம்பி போகலாம். அவர்களை ஞாயிற்றுக்கிழமை விருந்து வச்சுக்க சொல்லுங்க… அன்னிக்கு எல்லாருக்கும் லீவு என்பதால் வசதியா இருக்கும். நாங்க ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு வந்துடறோம். நீங்க உங்க விருப்பம் பார்த்து செய்யுங்க..” என்றதும் “சரிப்பா.. நான் பேசுறேன்!” என்றவர் அப்பொழுது சுபத்ராவிடம் ஆதி சொன்னது போல விஷயத்தை கூறி முடித்தார்.
இவர்களை பார்த்த மங்கை.. அதிசயமாக கணவன் மதியம் அல்லாத நேரத்தில் வந்திருப்பதை கண்டவர், மகனும் கூட இருப்பதை பார்த்து இருவருக்கும் டீ எடுத்துக் கொண்டு வர.. அப்போதுதான் அருளின் பேச்சு காதில் விழுந்ததும் அவருக்கு ஏக கடுப்பு! “இன்னும் நம்மிடம் சொல்லாமல்.. நம்மிடம் கலந்து பேசாமல்.. இவரே எல்லாம் செய்கிறாரே?” என்று!!
“ஏன் எங்களிடம் ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா? அப்படியா ஒன்னு இல்லாதவளா போயிட்டேன் நானு?” என்றார் ஆத்திரம் கொண்டு!!
“அப்போ இவ்வளவு நாளா நீ என்கிட்ட கேட்காம எல்லா விஷயம் செஞ்சதுக்கு நான் ஒன்னும் இல்லாதவனா இருந்தது தான் காரணம்.. இல்லையா? அப்படி என்ன இல்ல எனக்கு? தங்கறதுக்கு வீடு கூட கிடையாது.. அதனால தான? சொத்து பத்துன்னு ஒரே ஒரு மில்லு தான் இருந்தது.. அதனால தான? அதுவும் நஷ்டத்தில் ஓடிட்டு இருந்தது நான் தான் தாங்கி பிடிச்சேன் அதனால தான? நம்ம கல்யாணத்த அப்போ பொண்ணுக்குனு நான் எங்க அம்மாவோட தாலிச்செயினை தவிர வேற எதுவும் உனக்கு போடல.. அதனால தான? சொல்லு!! ஆனா.. அதுக்கப்புறம் நகை வாங்கி போட்டுக்கனு நான் சொல்லி பணம் கொடுத்த போதெல்லாம்.. ‘என்கிட்ட இல்லாததானு!’ நீ சொன்ன போதே எனக்கு தெரிஞ்சு இருக்கணும்.. நான் ஒன்னும் இல்லாதவன் அதனாலதான் இத்தனை வருஷமா நீ எதையும் என்கிட்ட சொல்றதில்லைனு!! அப்படித்தானே?” என்றதும் ஆடிப் போய்விட்டார் மங்கை!!
‘அதனால தான? அதனால தான?’ என்று அவர் கேட்ட ஒவ்வொரு கேள்வியையும்.. மங்கை நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் இருக்க.. பதில் பேச முடியாமல் திகைத்து நின்றவர், பாவமாக மகனை பார்த்தவரின் கண்கள், அவனை உதவிக்கு.. துணைக்கு.. அழைத்தார். அவனோ வெறுப்புடன் திரும்பிக் கொண்டான்.
பெண்ணின் மனதை ஒரு பெண் புரிந்து கொள்வது போல.. அப்பாவை தாண்டி ஒரு ஆணாக அவரின் மனதை புரிந்து கொண்டதால் வந்து வெறுப்பு அன்னையின் மீது ஆதிக்கு!!
“என்னதான் திருமணம் ஆன சமயத்தில் அப்பா வசதி குறைவாக இருந்தாலும்.. அதைக் கொண்டு அவரை அப்படி மரியாதை குறைவாக நடத்திருக்கக் கூடாது!’ என்று பொருமினான். 
இன்று வரைக்கும் இந்த வீட்டில் அவரை எதையுமே மதித்து அபிப்பிராயம் கேட்டது கிடையாது. தகவல் போல் தான் சொல்லுவார்கள் மங்கையும் ஆதிசங்கரனும்!! ஆனால் ஆதி தலை எடுக்க தலை எடுக்க.. தாத்தாவின் ஆளுமைமையும்.. அப்பாவின் இந்த அடிமைத்தனத்தையும் கண்டு வெகுவாக யோசித்தவனுக்கு தாத்தா மேல் இருந்த பிரியத்தை விடவும் அப்பாவை இப்படி நடத்துகிறாரே என்று வெறுப்புதான்!! அந்நிலையில் இவனுக்கு பழைய விஷயங்களும் தெரிய வர.. தாத்தன் மேல் ஏகப்பட்ட கோபமும் வெறுப்பும். அதைவிட அன்னை மீது ‘இப்படியும் பொண்ணா?’ என்று கோபம்!! ஆனால் அதை எதையும் காட்டிக்கொள்ள மாட்டான் தன் காரியம் ஆகும் வரை!!
அந்த வீட்டை அவ்வளவு ஏக்கத்தோடு அப்பா பார்த்து நின்றதே மனதை பலமாக பிசைந்தது மகனுக்கு. ஆனால் அவர்களது அந்த பரம்பரை வீட்டை மீட்கும் முயற்சியில் மகன் இருக்கிறான் என்று அந்த தந்தைக்கு தெரியாது!! அதனால் கைவிட்டு போன வீட்டை அவ்வப்போது வருத்தம் மேவிட பார்த்துக் கொண்டிருப்பார் அருள்.
முதலில் ஒரு சில நாட்களில் அதை தன் மனைவியாகிய மங்கையிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரோ “நமக்கு தான் இவ்ளோ பெரிய வீடு இருக்குல்ல.. அந்த சின்ன வீடு போனதுக்கு நீங்க ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீங்கனு எனக்கு தெரியவே இல்லை. இந்த வீட்ல நாங்க அப்படி என்ன உங்கள கீழா நடத்திட்டாங்க? இந்த வீட்டு பையனானே எங்க அண்ணனை விட உங்கள தான் எங்க அப்பா பெருசா நினைச்சிருக்காரு.. இன்னமும் இந்த வீட்டை நான் தான் ஆளுறேன்! என்ன குறைச்சல் இங்க உங்களுக்கு? நாளைக்கு உங்க பையன் தான் எங்க அப்பாவுக்கு அப்புறமும் இது எல்லாத்தையும் ஆளப்போறான்!!” என்று கண்கள்
மின்ன பேசியவர், “அதனால போனத நெனச்சு வெசனப்பட்டு உட்காராமல் அடுத்த வேலையை போய் கவனிங்க.. போங்க.. போங்க.. இன்னைக்கு கிழக்கால வயல பருத்தி எடுக்குறாங்களாம்! அப்பா அங்க போக சொன்னாங்க உங்களை!” என்று அசட்டையாக சொல்லி செல்லும் மனைவியை கண்டு மனதினுள் அத்தனை வருத்தம் கொண்டார். அதன் பின் ஒரு வார்த்தை அவ்வீட்டை பற்றி பேசினார் இல்லை. 
இன்று கணவன் பேச.. மகனும் ஒத்து பேச… மங்கை திகைத்து நின்றார். அப்போதும் அவருக்கு புரியவேயில்லை. கணவனின் மனது தெரியவேயில்லை!! அருள் முகத்தில் அருளேயின்றி அறைக்கு சென்று படுத்து விட்டார்.
“ஏன் டா.. ஆதி! அந்த சின்ன வீட்டுக்கு ஏன் டா அவருக்கு இவ்வளோ வருத்தம்! அந்த வீடு போன போகுது வேற பெரிய வீட்டை கட்டிப்போம்… இல்ல.. இவ்வளவு பெரிய வீடு தான் இருக்கே….” என்று அவர் முடிக்கும் முன்… “அம்மா..!” என்று கத்தி விட்டான் ஆதி!
அவர் திகைத்து முழித்து நிற்க… “இவ்வளவு நேரம் அப்பா பேசுனது எதுவும் உன் பெரிய மண்டையில் ஏறவே இல்லையா?” என்று நொந்த குரிலில் பேசியவன், “உன்னை கட்டி வைத்து என் அப்பா வாழ்க்கையை வீணடிச்சிட்டார் தாத்தா..!!” குமறலோடு அவனும் அறைக்கு சென்று விட்டான். நண்பகல் வேளையில் வீட்டுக்கு வராத கணவன் வந்ததும்.. முழங்கையால் கண்களை மூடி படுத்ததையும் பார்த்தவாறு தன் அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தாள் அழகி.
அவளுக்கு சில விஷயங்கள் பேச வேண்டி இருக்க அதை மென்குரலில் தாயிடம் பேசிக் கொண்டும் அதற்கான பதில்களை கேட்டுக் கொண்டும் இருந்தாள். கூடவே நேற்றைய கோபமும் மிச்சம் இருந்தது. அதனால் கணவன் அருகில் அழகி செல்லவில்லை. எப்படியும் அவனுக்கு தேவையானதை தான் அவனே என்னிடம் எடுத்துக் கொள்வானே என்று நினைப்பு வேறு!!
ஆனால் ஆதிக்கு தான் மனது சரியில்லை. அவளே “தொடாதே… வேண்டாம்!” என்று தள்ளிப் போனாலும்.. இவன் தான் எப்பொழுதும் அவள் அப்படித்தான் என்று வம்படையாக இழுத்து அணைத்துக் கொள்வான். என்னவோ இப்பொழுது எல்லாம் அவனின் அணைப்புக்கு அவளிடம் இருந்து எதிரொலியாய் அணைப்பு வேண்டும் என்று உடலும் உள்ளமும் குமறியது.. ஏங்கியது!!
கூடவே அன்னையின் பேச்சு அப்பாவின் மனவலி எல்லாம் சேர ஒருவித கோபத்தில் இருந்தவன், இப்பொழுதும் அவனைக் கண்டு கொள்ளாமல் பேசிக் கொண்டிருக்கும் மனைவியை கண்டவனுக்கு ‘இந்த பொண்டாட்டிகளே இப்படித்தான்! கணவனின் மனதினை அறிந்துக் கொள்ள முயற்சிக்கவே மாட்டார்கள்!” என்றவாறு விருட்டென்று எழுந்து அவளை திரும்பி கூட பாராமல் மில்லுக்கு சென்று விட்டான்.
மறுநாள்… அவன் முன்னே நின்றவளிடம் என்ன என்று அவளை பாராமலே தலைவாறியவாறு கேட்டான். “அம்மா சின்ன ரிசப்ஷன் மாதிரி ஏற்பாடு பண்ணி இருக்காங்க அங்க பெங்களூரில். அதுக்கு நமக்கு அவங்க டிரஸ் எடுப்பாங்க!! ஆனால் வீட்டுல உள்ள மத்தவங்களுக்கு எல்லாம் அம்மா எடுத்து கொடுத்தா மாமாவை தவிர மத்தவங்க வாங்கிப்பாங்களான்னு தெரியலனு.. வருத்தப்படுகிறாங்க…” 
சிகையை வாரியவாறு அவளை கண்ணாடி வழி பார்த்தவன், “அதனால…” என்று மனைவியிடம் கேட்டான்.
“அதனால நாமலே அவங்களுக்கு எல்லாம் எடுத்துருவோமா? ஏன்னா நாம புதுசு கட்டும் போது அவர்களை மட்டும் எப்படி பழசை கட்ட விடுறது? கூடவே இது நம்ம கல்யாணத்துக்குனு வாங்கி கொடுக்குறதா இருக்கட்டுமே!!” என்று முடித்தாள்.
‘பரவால்ல மனைவிக்கு மற்றவர்கள் மீது கோபம் இருந்தாலும் அக்கறையும் இருக்கிறது! அந்த அளவு அப்படியே மங்கையின் வாரிசு இல்லை!’ என்றதில் அவனுக்கு சிறு நிம்மதி!! “சரி.. கிளம்பு போகலாம்” என்றான்.
சரி என்றவள் அடுத்த பத்து நிமிடத்தில் கிளம்பி வர.. இருவரும் ஒன்றாக செல்வதை எப்பொழுதும் போல முறைப்புடன் மங்கை பார்க்க.. வன்மத்தோடு மைத்தி பார்க்க.. எரிச்சலுடன் ஷனா பார்த்தாள்.
“சிட்…!” என்று தனது வெண்ணிற ராயல் என்ஃபீல்டில் அமர்ந்தவன் சொல்ல.. அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள். அவன் மேல் அவள் உடம்பு எங்கும் படவில்லை. அவ்வளவு கவனம்.. அவ்வளவு ரோசம்!! 
திருமணத்திற்கு பின் இருவருக்கும் முதலில் தோன்றும் ஒரு ஊடல்!! ஊடல் இல்லா காதல் ஏது? ஊடலுக்குப் பின் வரும் காதலே சுகமானது!! சுவையானது! இன்னும் உறவை ஆழமாக்கும்!!
”போகலாமா??” ரியர்வு மிரரில் தன்னனவளை பார்த்துக் கொண்டு கேட்டான்.
”ம்ம்.. !!” என முணகிவிட்டு அவளும் அவனை ரியர்வு மிரரில் பார்த்தாள். மெல்லிய புன்னகை சிந்தினாள். அவனோ மருந்துக்கும் சிரிக்காமல் இருக்க..
”கோபமா?” என்று மெதுவாக கேட்டாள்.
” ச்ச.. இல்ல.. இப்போ தான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!” என்றான் விஷமமாக! ஆனாலும் அதில் ஒரு உண்மை இருந்தது. அவளுடன் தனியே செல்வதில் ஏற்பட்ட சந்தோஷம்!! அவள் தன்னை கவனிக்கிறாள் என்ற மகிழ்ச்சி!!
அதை எதையும் காட்டிக் கொள்ளாமல் கருமமே கண்ணாக வண்டியை ஓட்டி சென்றவன் தஞ்சாவூரில் பெரிய துணிக்கடையில் இறங்கி அவளோடு சென்றான்.
திருமணமாகி இத்தனை நாட்களில் அவள்தான் ஒதுங்கி ஒதுங்கிப் போவாள். இவன் தான் பின்னோடு சென்று வம்பிழுத்து அவளிடம் இருவருக்கான உறவையும் உணர வைப்பான்! ‘ஆனால் இன்று ஏன் இப்படி இருக்கிறான்?’ என்று யோசனையோடு அவன் பின்னே சென்றாள்.
பெண்களுக்கான உடையெடுக்கும் பகுதிக்கு முதலில் அழைத்து சென்றான். மைத்தி மற்றும் ஷனாவுக்கு எடுத்தாள் முதலில்!!
அவனைச் சீண்டும் விதமாக.. உடைகளை எடுத்து கழுத்துக்கு கீழே வைத்து.. ‘இது எப்படி இருக்கு.. இது எப்படி இருக்கு..?’ எனக் கேட்டு அவன் அருகே நெருங்கி உரசி என்று அவனை உஷ்ணமாக்கினாள். அருகே நெளிந்து வழிந்து நின்றவளை கண்டவன் உதட்டை கடித்து முகத்தை திருப்பி சிகையை கோதிக் கொண்டான் “படுத்துறாளே பிஜிலி!” என்று!!
அவர்களுக்கான உடைகள் எடுத்த பின் பட்டு புடவை பிரிவில் மங்கை மற்றும் ஏகம்மைக்கு எடுக்க போனவளை தடுத்து, முதலில் அவளுக்கு எடுக்க வைத்தான்.
அவளை அருகில் நிற்க வைத்து அவள் மீது போட்டு போட்டு பார்த்து அவன் தேர்வு செய்ய.. இம்முறை உதட்டை கடித்து முகத்தை திருப்பி உள்ளுக்குள் எழும் தகிப்பை கட்டுபடுத்துவது அவளது முறையானது!! வஞ்சனை இல்லாது அவனது கைகள் மனைவியின் அங்கங்களில் புடவை போடும் சாக்கில் தாராளமாக பயணிக்க..
சிவந்து நின்றவள் கால் கட்டை விரலை நிலத்தில் நன்றாக ஊன்றி சிவப்பை கட்டுபடுத்தினாள்.
அவளின் தகிப்பை தவிப்பை கண்டவன் மெல்ல அவள் புறம் குனிந்து “ஃபீலிங்ஸ் ஆர் சேம் பிஜிலி!! இனி அத்தான் கிட்ட இப்படி விளையாண்டு சீண்டாத!! இந்த ஆதி அதையும் பல மடங்கு திருப்பி தருவான்” என்றவன், மனைவி நிலை அறிந்து அவனே மற்ற இருவருக்கும் தேர்ந்தெடுத்தான். கூடவே சுபத்ராவுக்கும் எடுத்தான்.
ஜென்ஸ் செக்சனில் போனதும் அவளே கணவனுக்கும் அருளுக்கும் எடுத்தாள். அவன் தாத்தாவுக்கு எடுத்தான். ஒரு வழியாக ஷாப்பிங் முடிய மூன்று மணி நேரம் ஆனது. அத்தனை கூட்டத்தில் இரண்டு பேரும் ஒட்டிக் கொண்டு நடந்து வந்தனர். சில இடங்களில் தானாக கைகளைக் கோர்த்துக் கொண்டாள்!! வெளியே வந்த போது கோபதாபங்கள் மறந்து இரண்டு பேரும் கிட்டத்தட்ட இயல்பான கணவன் மனைவி போல நெருக்கமாகி நெருங்கியிருந்தார்கள்!!
வீடு சென்றதும் அனைத்தையும் அன்னையிடம் கொடுத்தவன், “அங்க நடக்க போகும் விருந்தில் கட்டிக் கொள்ள..!!” என்றான். அதை ஒவ்வொன்றாக பிரித்து பார்த்த மங்கை அதில் அழகிக்கு இல்லை என்றதும் மனதில் ஒரு சந்தோஷம்!! அல்பமான சந்தோசம் தான்!! ஆனாலும் அது மங்கைக்கு வந்தது. அதையும் சொல்லி சொல்லி மைத்தியிடம் பெருமைப்பட்டுக் கொண்டார். வீடு வந்ததும் அமைதியாகி போனான் ஆதி. ஆனால் பார்வை மட்டும் அவள் மீதே!!
அவர்கள் அறைக்குள் வந்தவுடன் குளியலறைக்குள் சென்றவள்
நிமிடங்களில் திரும்பி வந்தவள்.. ஈர முகத்தை அணிந்திருந்த துப்பட்டாவால் துடைத்து துப்பட்டாவைத் தூக்கி ஓரமாகப் போட்டவள், அவனைக் கொஞ்சம் கோபமாக பார்த்தாள்.
”என்னை ஏன் ஒரு மாதிரி முறைச்சு பாக்கறிங்க…??”
”நான் ஏன் முறைச்சு பார்க்கிறேன். சும்மா நம்ம பொண்டாட்டியானு உத்து பார்க்கறேன்.. தட்ஸ் ஆல்!!” என்றான் தோளை குலுக்கி…
” ஏன்.. ஏன் ??” என்று அவனிடம் நெஞ்சை நிமிர்த்தி கேள்வி கேட்டவளை அணுஅணுவாய் ரசித்தது அவனது கண்கள் ருசித்திட!!
”நான் உங்க வொய்ப் தானே! பின் ஏன்?” என்றாள் படப்படப்புடன்.
”யெஸ்..!! ஸோ.. வாட்??”
”நீங்க பார்க்கிறது எனக்கு ஒரு மாதிரியா? எப்படி சொல்றது…” என்று தட்டு தடுமாறினாள்.
“என்ன மாதிரியா?” என்றவனின் ஆழ் பார்வை இன்னும் அவளுள் ஊடுவி பரவி படர்ந்தது ஒவ்வொரு அணுவிலும்.
“என்னை கண்ணாலயே கற்பழிக்கிற மாதிரி.. ப்பா.. தாங்கலை எனக்கு..” என்று பார்வையை திருப்பிக் கொண்டாள்.
”ஓஹ்.. மே மீ!! இட்ஸ் நாட் மை மிஸ்டேக்.. பிஜிலி!!”
”அப்போ.. அப்படிதானா??” என்று அவனை அதிர்ந்து பார்க்க..
“ஆமா.. இனிமே தான் உன்னை கற்பழிக்கனுமா என்ன?” என்றவனின் மென் குரல் பெண்ணவளை நாணத்தில் ஆழ்ந்த.. மீண்டும் செங்காந்தளாய் தகித்தாள் அழகி அழகாய்!!
”இல்ல.. இப்ப கூட பாரு.. என் கண்ணுக்கு முன்னால.. செஞ்சு வச்ச கோயில் சிலை மாதிரி இருக்க.. இவ்வளவு அழகை கண்ணு முன்னால காட்னா.. நான்… நான் பார்க்காம என்ன பண்ணுவேன்..? அதுவும் ஃபுல் ரைட்ஸ் எனக்கு இருக்கு!” என்றவன், விரல் கொண்டு அவளது கழுத்தில் கோலமிட்டப்படி அவளது தாலி செயினை வெளியில் எடுத்துப் போட்டான்.
அவள் விக்கித்து நிற்க…
அவன் கண்கள் அவள் முகத்தை ஆசையாகப் பார்த்தது. அவன் பார்வை அவளின் உடலில் ஊடுருவி மெல்லிய நரம்புகளில் மீட்டி உணர்ச்சிகளை தட்டி எழுப்பியது. அவள் முகத்தில் அதிக ரத்த ஓட்டம் பாய்வதை உணர்ந்தாள். உதடுகள் லேசாக உலர்ந்தன. நாக்கை நீட்டி உதடுகளை தடவிக் கொண்டாள்.
காதுகள் எல்லாம் சூடாகி தகித்தன..
மெல்ல அவள் கையை தன் கையில் எடுத்து, அவள் கை விரல்களை நீவினான். பின் குனிந்து ஒவ்வொரு விரலுக்காய் குட்டி குட்டி முத்தமிட்டான். அவள் உடல் சிலிர்த்து சிணுங்க.. மனதோ அவனிடம் சரிந்தது. வறண்டன உதடுகள் அவனின் இதழ் ஈரத்தை கேட்டன!
“லவ் யூ டி பிஜிலி!!” அவள் கையை இழுக்க.. மெல்ல அவன் பக்கம் சாய்ந்தாள். அவன் முகத்தை கீழே இறக்கினான். அவள் மார்பில் அழுத்தமாய்.. ஆசையாய்.. முத்தமிட்டான், ஆழமாய் மூச்சை இழுத்தபடி.. சட்டென்று அவன் கேசம் பற்றி மேலே இழுத்தவள் தலையோ வேண்டாமென மறுக்க.. அவனோ சிரிப்போடு உதட்டில் முத்தமிட்டான். கண்களை மெல்ல அவள் மூட.. அவள் கீழ் உதட்டை கவ்வி சுவைத்தான் கோமகன்! அவளின் கை தன்னிச்சையாக அவன் தோளை இறுக்கியது. அவன் நாவோ அவள் உதடுகளைத் பிரித்து உள்ளே நுழைந்து, அவள் நாவோடு காதல் சமரிட.. மென் தேகம் கொண்டவளோ அவன் கைகளில் குழைந்தாள்.
அவளின் இளஞ் சூடான மூச்சு காற்றை முகர்ந்தபடி அவள் செவ்விதழையும் ஆட்கொண்டான். காதலில் எச்சில் கூட அமிர்தமே!!
“பிஜிலி….”
“ம்ம்?”
“லவ் யூ ஸோ மச் டி… பிஜிலி!”
“ம்ம்” மெல்ல கண் திறந்து அவன் கண்களைப் பார்த்தாள். அவள் மீதான காதல் அதில் வழிய.. ஆழியென இழுக்கும் அவனின் ஆழ் பார்வையில் துடுப்பற்ற படகை போல தத்தளித்தாள்.
விரிந்த பாவையவள் கண்களை முத்தமிட்டான். அவள் கண் இமைகள் துடித்து அடங்கின. சோபாவை விட்டு இறங்கி அவள் முன் மண்டியிட்டு உட்கார்ந்தான். அவள் லேசான திகைப்புடன் அவனைப் பார்த்தாள்
“உன் மனசுல என்ன ஓடுது டி! வெளியில் சொல்லு டா பிஜிலி! உன் அத்தூ தானே நான்!” என்று வருத்தமான குரலில் அவன் கேட்க… தனை மறந்து அவனிடம் பகிர நா துடிக்க.. நெஞ்சு படப்படக்க.. கைகள் நடுங்க… சொல்ல வந்தவள் வார்த்தைகள் எல்லாம் அவள் நெஞ்சுகுழியோடு நின்றது!!
எதிர்பார்ப்போடு அவன் பார்த்திருக்க.. அவளோ அவளை தவிர்த்து எழுந்து ஓடிவிட்டாள் குளியலறை நோக்கி!!
கதவடைத்து நின்றவளின் கண்களில் கண்ணீர் குளம் கட்ட.. சிறிது நேரம் அழுது ஆர்ப்பரித்து அடங்கி அதன் பின்னே அறைக்குள் நுழைய அங்கே ஆதி இல்லை. இவள் பெருமூச்சு விட்டபடி வேறு உடை மாற்றி படுத்து விட்டாள்.
அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அவள் செய்கைகளை பார்த்தபடி பால்கனி ஓரத்தில் இருளில் நின்றிருந்தவன், அவள் தூங்கி பிறகு அருகே வந்து படுத்தான்.
அடுத்த ரெண்டு நாளில் மொத்த குடும்பமும் பெங்களூரை நோக்கி செல்ல.. ஏகம்மை மட்டும் வரவில்லை. எவ்வளவு கூறியும் வர மறுத்துவிட்டார். அவரை தவிர்த்து மொத்த குடும்பமும் சென்றது.
அங்கே தங்கை கணவனை கண்களில் கனலோடு வரவேற்றான் சிவபிரசாத்… அழகியின் பெரியம்மா மகன்!!
ஆசை வளரும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *