ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்.... ஆகினேன் காதலா

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

14

ஆ.கா… ஆ.கா..

ஜியா ஜானவி ❤️

இளையவளின்

இடையொரு நூலகம்..

படித்திடவா பனிவிழும்

இரவுகள் ஆயிரம்…

இடைவெளி எதற்கு சொல் நமக்கு? உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன??

என்னைத் தீண்டக்

கூடாதென.. வானோடு

சொல்லாது வங்கக்கடல்!!

என்னை ஏந்தக் கூடாதென..

கையோடு சொல்லாது

புல்லாங்குழல்!!

நீ தொட்டால்

நிலவினில் கறைகளும் நீங்குமே..

விழிகளில் வழிந்திடும் அழகு

நீர்வீழ்ச்சியே..

எனக்கு நீ உனைத்தர

எதற்கு ஆராய்ச்சியே??

உனைவிட வேறு நினைவுகள் 

ஏது ரோஜா…

ரோஜா ரோஜா…

ரோஜா வண்ண புடவையில் தங்க ஆபரணங்கள் பூண்டு தன் அருகில் பேரழகியாய் நின்றிருக்கும்  அழகியை தான் ஆழ்ந்து பார்த்தான் ஆதி.. பின்னணியில் இசைத்த பாடல் அவர்களுக்காகவே பாடப்பட்டது போல அவனுக்கு தோன்றியது!!

இடையை பற்றி பாடும் பொழுது அன்று பனி விழும் இரவில் அம்மெல்லிடையை அவன் தன் இதழ்களை கொண்டு ஆராய்ச்சி செய்தது ஞாபகம் வந்தது. கூடவே அடுத்த வரி ‘என்னை தீண்ட கூடாது என.. தொடக்கூடாது என’ என்ற வரிகள்.. அவள் கூறியதை நினைவு படுத்த அவளை ஆழ்ந்து பார்த்தான் ஆதி!!

பெண்ணவளோ ஆணவனின் விழி பேசும் மொழி அறிந்து அவன் புறம் திரும்பாமல் நின்றிருந்தாள்.

பெங்களூரில் அவர்களுக்கான சின்ன கெட் டூகதர் போலவும் ரிசப்ஷன் போலவும் நடத்திக் கொண்டிருந்தார் சுபத்ரா. அவர் வசிக்கும் அப்பார்ட்மெண்ட் வாசிகள் தெரிந்த நண்பர்கள் அவரின் கிளைண்டுகள், அழகியின் நண்பர்கள் என்று அனைவரையும் அழைத்திருந்தார்.

ஒருவழியாக ஆதி தன் குடும்பத்தை கிளப்பி திருச்சியில் இருந்து பிளைட்டில் பெங்களூருக்கு அழைத்து வந்திருந்தான். முதலில் முகத்தை தூக்கி வைத்திருந்த மங்கை.. வெளியூர் பயணம் முதல் விமானம் பயணம் என்று சந்தோசமாகவே இருந்தார், சுபத்ரா வீட்டை அடையும் வரை. ஷனாவும் மைத்தியும் மற்றவர்களிடம் பேசாமல் தங்களுக்குள்ளே பேசி அமைதியாகவே வந்து சேர்ந்திருந்தனர். ஆதிசங்கரன் தான் நடப்பதை ஏற்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் தவித்துப் போனார். அருளனந்தன் பயணத்தில் எப்போதும் போல அமைதியாக இருந்தாலும் சுபத்ரா வீட்டை அடைந்தவுடன் மகிழ்ச்சியாகவே வலம் வந்தார்.

சுபத்ராவும் அவரது அக்கா சைலஜாவும் வந்தவர்களை முறையாக வரவேற்றனர். சுபத்ராவின் இரண்டு பெட்ரூம் வீட்டை  அலட்சியமாக பார்த்தார் மங்கை!! ஆதிசங்கரனுக்கு சற்று வருத்தமாக இருந்தது. சுபத்ராவை கொண்டு அல்ல.. அவரது பேத்தி இந்த சின்ன வீட்டிலா இருந்தாள் என்று அழகியை கொண்டு!!

அந்த அப்பார்ட்மெண்ட் கீழே இருக்கும் பார்ட்டி ஹாலில் தான் அவர்களுக்கான வரவேற்பு நடந்தது!!

வந்தவர்கள் எல்லாம் இவர்களின் ஜோடி பொருத்தத்தை பார்த்து ‘மிக அருமையாக ஜோடி!’ ‘சூப்பர் ஜோடி!’ என்று கூறி வாழ்த்தி விட்டு சென்றனர். இடை இடையே அழகியின் தோழிகள் எல்லாம் “ஏய் அழகி.‌.. உண்மைய சொல்லு!! நிஜமாகவே இது அரேஞ்ச் மேரேஜ் தானா? பார்த்தா தெரியலையே!! பக்கா லவ் மேரேஜ் மாதிரி இருக்கு. உன் ஆளு கண்ணு உன்னையே தான் பார்க்குது.. விட்டா இங்கே விழுங்கிடுவாரோ இல்லை கடித்து புசித்திடுவாரோ… செம லவ்வுடி!” என்று வந்து அவளின் காதில் கிசுகிசுப்பதும், சிலர் ஆதிக்கு நேராகவே கூறுவதும் என்று அவளை ஒருவழியாக்கினர்.

ஆனால் அது உண்மை தான் என்று அவன் பார்வையே அவளுக்கு சொன்னது!!

“அம்மு.. குடிக்க ஏதும் கொண்டு வரவா?” என்று பாசமாக அருகில் நின்று கேட்கும் சிவப்பிரசாத்தை கண்டவள், “வேண்டாம் சிவா அண்ணா!” என்றாள்.

தங்கையை கேட்டுவிட்டு தங்கையின் கணவனை கேட்காமல் விட்டால் எப்படி என்று.. மரியாதைக்காக ஆதி புறம் சென்ற சிவப்பிரசாத்.. முகத்தில் அத்தனை இறுக்கத்தை காட்டி.. குரலில் மட்டும் உறவை தேக்கி… “உங்களுக்கு குடிக்க ஏதும் கொண்டு வரவா மச்சான்?” என்றான் பல்லை கடித்துக் கொண்டே..

முதலில் வேண்டாம் என்று சொல்லத்தான் ஆசை கொண்டது ஆதியின் மனது!! ஆனால் வந்ததிலிருந்து தன்னை முறைத்துக் கொண்டே இருக்கும் இந்த அன்பு மச்சானை அப்படியே விட அவனுக்கு பிரியம் இல்லை. “வித் ப்ளஷர்!! மச்சான் இவ்வளோ ஆசையா கேட்கும் போது மறுத்தால் மரியாதையாகவா இருக்கும்?”

என்று அவன் கூற…

தங்கை வேண்டாம் என்று கூறியதால் ஆதியும் வேண்டாம் என்று கூறுவான் எதிர்பார்த்த சிவப்பிரசாத்துக்கு இது சற்று ஆச்சரியமாக இருக்க.. தங்கையை பார்த்தான், அவளோ ஆதியின் கேலியை கண்டு சிரிப்பை அடக்கியவாறு திரும்பி நின்றுக் கொள்ள, “இதோ கொண்டு வருகிறேன் மச்சான்!” என்று விட்டு சென்றான்.

“ஆமா பிஜிலி.. இவனுக்கு ஏன் என் மேல இவ்வளவு காண்டு!! வந்ததுல இருந்து பார்க்கிறேன் முறைச்சுக்கிட்டே இருக்கான்.. உள்ள நம்ம நுழையும்போது கை கொடுத்து ‘ஐ அம் சிவப்பிரசாத்!’ சொன்னான் பாரு.. கைய முறிச்சிருவோன் போல அப்படி ஒரு இறுக்கம் அவன் கையில்.. ஏன் உன் அண்ணாவுக்கு என் மேல் இவ்வளவு பாசம் பொங்கி வழியுது?” என்று நக்கலாக ஆதி கேட்க…

“பின்னே.. என் கல்யாணத்தை எப்படி எல்லாமோ நடத்தணும்.. மாப்பிள்ளையை அவர் தான் பார்க்கனும்னு ஆசைப்பட்டு வச்சிருந்தாரு.. நீங்க எல்லாத்தையும் சரிச்சு கட்டி.. ஒத்த தாலி செயினை போட்டு.. அவர் கனவுக்கு எண்ட் கார்டு போட்டால்… என் அண்ணனுக்கு உங்கள் மீது கோபம் வருமா? வராதா? ஏன் உங்களுக்கும் ஒரு தங்கச்சி இருக்கா தானே?” என்றதும் அவளை தன் புறம் திருப்பியவன், “அவள் கதை வேறு நம் கதை வேறு… உண்மையை சொல்லு? அன்று நான் தாலி கட்டியதை வேண்டும் என்றால் எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாம் நீ!! ஆனால் என் தாலி உன் கழுத்துக்கு தான் என்பது நீ எதிர்பார்த்ததுதானே! இல்லை என்று சொல்ல முடியுமா உன்னால்?” என்றான்.

‘நிறைய நேரங்களில் இவன் வாய அடைக்க நாம பேசினாலும்.. சில சமயம் பார்த்து கரெக்ட்டா அடித்து விடுகிறானே.. பதில் அளிக்க முடியா வண்ணம்! எம காதகன்!’ என்று உள்ளம் கொதிக்க  நின்றவளின் கண்களில் சிவப்பிரசாத் ஜூஸ் எடுத்து வருவது தெரிய.. சட்டென்று மின்னல் தெறிக்க கணவனுக்கு கொடுக்கும் முன்னே அதனை தான் எடுத்து குடித்தாள், உள்ள கொதிப்பை குளிர்பானம் கொண்டு குறைக்க…

இப்போது சிவப்பிரசாத் அண்ணனாக தங்கையை கண்டித்தான். “வேண்டாம்னு சொன்னே தானே அம்மு. நான் அவருக்கு தானே கொண்டு வந்தேன். என்ன பழக்கம் இது!” என்று கண்டித்தாலும், “ஏன் அம்மு ரொம்ப டயர்டா இருக்கா?” என்று ஆதூரமாக அவன் அவள் தலையை நீவி கேட்ட விதத்தில்.. ‘இல்லை ணா..’ என்று அவள் அடுத்து சொல்ல போகும் முன் “நாங்களே ஈருடல் ஒரு உயிர்!! எதற்கு இரண்டு ஜூஸ்  என்று தான்.. இதுவே போதும் எனக்கு மச்சான்!” என்று அழகி குடித்து மீதம் வைத்திருந்த ஜூசை வாங்கி இவன் அநாயாசமாக குடித்தான். அதுவும் அவள் இதழ் வைத்துக் கொடுத்த அதே இடத்தில் இதழ் வைத்து…

‘என்னது இது.. எல்லார் முன்னே?’ என்று அழகி முறைக்க.. “சில் பிஜிலி! எதுக்கு இவ்வளவு காதலா பார்க்குற? ஆக்சுவலா.. இந்த மாதிரி சின்ன சின்ன இன்ட்ரஸ்டிங் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் நம்மள மாதிரி புது மணமக்களுக்கு உன் அண்ணன் தான் செய்யணும்! இப்படியே அன்ரொமான்டிக்கா இருந்தா.‌.. நாளைக்கு உங்க அண்ணா லைஃப் எல்லாம் ரொம்ப கஷ்டம் தான்!” என்று பெருமூச்சு விட்டு, இதுவரை தன்னை காண்டோடு பார்த்தவனை கலாய்த்து விட்டான் ஆதி!!

அதில் மூண்ட எரிச்சலோடு, “நாளைக்கு என் லைஃப்ல அப்படி ஏதாவது டவுட் வந்தா… உன் புருஷன் கிட்ட வந்து கத்துக்குறேன் அம்மு!” என்று விடுவிடுவென்று அவன் கீழே போக…

வேகமாக “சிவப்பிரசாத் மச்சான்…!” என்று மேடையில் இருந்து ஆதி அழைக்க… அதை தவிர்க்க முடியாமல் திரும்பி பார்த்தவனிடம் “வித் ப்ளஷர்!! உங்களுக்காக ஆல்வேஸ் ப்ரீ.. ப்ரீ.. ப்ரீ..” என்று புன்னகைத்தான் கன்னக்குழி விழ.. பல்லை கடித்துக்கொண்டு சிவபிரசாத்தும் அங்கிருந்து சென்று விட்டான்.

“அப்பாடி.. உங்க அண்ணன் போயிட்டான். இனிமேல் ரிலாக்ஸா நம்ம சங்கதியை பேசலாம்.. பதில் சொல்லு அழகி?” என்றான் அவளை நேராக பார்த்து.. அவள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திரு திரு என்று விழித்திருந்த நிலையில்.. மற்றொரு குடும்பம் அவர்களை வாழ்த்த மேடை ஏறி விட.. “தப்பிச்சுட்ட… ஆனாலும் தப்பிக்கல!” என்று விஷமமாக சிரித்தவனை கண்டு உள்ளுக்குள் சற்று பயந்து தான் போனாள் அழகி!!

அன்றிரவு அருள் ஆதிசங்கரன் மைத்தி மங்கை கிளம்பி விட… ஷனாவை தன்னுடன் இருத்திக் கொண்டான் ஆதி!

“டேய் வயசு பொண்ணு எல்லாம் தனியா விட்டுட்டு போக முடியாதுடா!” என்று மங்கை கத்த…

“ஏன் அவளுக்கு அண்ணனை நான் இல்ல? வீட்டிலேயே போட்டு அவளை அடச்சி வெச்சி இருக்கனுமா என்ன? இங்க இருந்தா நிறைய இடத்தை சுத்தி பாக்கலாம்! நான் இருக்கும் போது என்ன பயம் உங்களுக்கு? அதுவுமில்லாம என் தங்கச்சி மேல தான் எனக்கு உரிமை இருக்கு!!” என்றவன் மைத்தியை பார்த்துவிட்டு ஷனாவிடம் திரும்ப.. அவளுக்கும் அந்த இறுக்கமான குடும்ப சூழ்நிலையில் இருந்து சற்று இலகுவாக இருக்க விரும்பியவள், “நான் அண்ணன் கூடவே வரேன் மா!” என்று விட்டாள், மைத்தியும் அதிர்ச்சியாக அவளை பார்த்தாள்.

“நீயும் எங்க கூட இங்க இரண்டு நாள் இரேன் மைத்தி!” என்று ஷனா ஆசையாக சொல்ல… “ஏன் உன் அண்ணா.. அவளோட கொஞ்சி குலாவுறதை கண் நிறைய பார்க்கவா? ஏற்கனவே எனக்கு நெருப்பு மேல இருக்குற மாதிரி இருக்கு! எப்போடா என் வீட்டுக்கு போவேன்னு இருக்கு!” என்று என் வீடு என்று அழுத்தம் கொண்டு கூறி.. அழகியை பார்த்தாள்.

அழகியோ அவளை கண்டுக் கொள்ளவில்லை. மொபைலில் ஏதோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென்று நிமிர்ந்து மைத்தியை ஒரு ஏளன பார்வை பார்த்து “எல்லோருக்கும் டிக்கெட் போட்டாச்சுங்க.. ஷனாவை தவிர்த்து! உங்களுக்கு வாட்ஸ் அப்பில் அதை அனுப்பி இருக்கேன் பாருங்க” என்றாள். ஆதியும் ம்ம் என்று பார்த்தவன், அதனை அவன் அப்பாவிற்கு அனுப்பி வைத்தான்.

அதற்குள் சிவப்பிரசாத்தும் இவர்கள் செல்வதற்கு கேப் புக் செய்தவன், “கேப் வந்து விட்டது!” என்றான்.

அவனுக்கு சற்று தள்ளி நின்றிருந்த “ஷனா.. எங்களை பேக் பண்ணி அனுப்புவதிலேயே குறியா இருக்காங்க அண்ணனும் தங்கச்சியும்!!” என்று கடுக்கடுத்தாள்.

“அப்படியா? அப்போ இங்கே தங்க வைச்சிடுவோமா?” என்றதும் அவள் அதிர்ந்து “யாரை?” என்று கேட்டாள்.

“ம்ம்… யாரையோ?” என்றவன் அவளை தோளை வேண்டுமென்றே இடித்து சென்றான்.

ஒரு வழியாக ஆதிசங்கரன் மங்கை அருள் மைத்தி என்று நால்வரும் கிளம்பி கீழே வர.. மங்கைக்கு தான் தன் மகனை விட்டுட்டு போக கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை. அதுவும் அவள் வீட்டில் என்று!! இன்னமும் ஏக முகச் சுழிப்பு தான்!

கீழே கேபில் அவர்கள் ஏற.. மரியாதை நிமித்தமாக அழகியும் சுபத்ராவும் வந்திருந்தார்கள். பெற்றோர்களை வழி அனுப்ப என்று ஆதியும் ஷனாவும் வந்து நிற்க.. மகளை விடுத்து மகனின் கைபிடித்துக் கொண்டு அத்தனை பத்திரம் கூறினார் மங்கை!!

சட்டென்று அவர் புறம் குனிந்த அழகி “மாமியாரே.. கவலைப்படாதீங்க உங்க பிள்ளையே என் இடுப்பை விட்டு இறக்கவே மாட்டேன்.. ஊருக்கு வந்து சேரும் வரை!! சரியா? ஈன்னு சிரிச்சிட்டே போங்க பார்ப்போம்!” என்று சிரிக்காமல் கூற… “ஏற்கனவே தான் முந்தானையில் முடிந்து வைத்திருக்க.. இப்போ இடுப்புலையுமா?” என்று வெடுக்கவென்று முகத்தை திருப்பிக் கொண்டார் மங்கை.

“டிரைவர் அண்ணா.. என் மாமியார் நல்ல மூடுல இருக்கும்போது காரை கிளப்பிட்டு போயிடுங்க!”என்றவள்  சத்தமாக சொல்ல.. முறைப்போடு அவளை பார்த்தவாறு பெங்களூருக்கு டாட்டா காட்டி சென்றனர் மங்கையும் அவரது பரிவாரங்களும்!!

ஆதி அப்படியே அருளின் வாரிசாய் சுபத்ரா மற்றும் அவர் குடும்பத்தோடு நன்றாக பழக.. ஷனாவோ மங்கையின் வாரிசாய் கொஞ்சம் சுணங்கியே இருந்தாள். 

சுணங்கிருப்பவளை பெருசாக தொந்தரவு செய்யாமல் இயல்பாக “இந்தா சாப்பாடு!” “இதை எடுத்துக்கோ!” “இங்கே வந்து எங்களோடு உட்கார்ந்து பேசு!” என்று அவளை தன்னோடு அழைத்துக் கொண்டாள் அழகி! 

இரவு சுபத்ரா அவளை தன்னோடு படுக்க வைத்துக் கொண்டார். “மாப்பிள்ளை தம்பி எங்க இனியா?” என்ற சுபத்ரா கேட்க.. “அவருக்கு காலையிலிருந்து ஒரே இடத்தில் இருந்து ஒரே மாதிரியா இருக்காம்! மொட்டை மாடிக்கு வாக்கிங் போயிட்டார்” என்றாள் அழகி சிரிப்புடன்.

“நல்ல புள்ள போ!! ரொம்ப நேரம் இருக்க வேண்டாம் பெங்களூர் குளுரு அவங்களுக்கு ஒத்துக்குதோ இல்லையோ? சீக்கிரமா வந்து படுங்க!” என்றவர் அவர் அறைக்கு சென்று விட.. தங்கள் அறையில் படுக்கை எல்லாம் சரி போட்டு அரை மணி நேரம் பார்த்தாள் ஆதி வரவே இல்லை. “இவரோட…!” என்று அவனை தேடிக்கொண்டு மாடிக்கு விரைந்தாள் மாது!!

அந்த அப்பார்ட்மெண்ட்டின் மொட்டை மாடி..!! இரவென்பதால் மிகவும் அமைதியாக இருந்தது. வானத்தில் தேய் பிறை நிலா.. மேகங்களுக்குள் ஒளிந்து விளையாடியபடி மெல்லிய ஒளியை வீசிக் கொண்டிருந்தது. அந்த மெல்லிய நிலா வெளிச்சத்தில் தெரிந்த நிலவினின் கோட்ட ஓவியம் அவனை பல்லவர்களின் சிற்பமாக அல்லாமல் அந்தப் பல்லவனே எதிரில் நிற்பது போல் அத்தனை தேஜஸ்ஸோடு நின்று இருந்தான்.

“என்னங்க…” என்று அழைத்தவாறு வந்தவளை மெல்ல திரும்பி பார்த்தான்.

அழகியின் அழகிய முகமும்.. பெண்மைத் தோற்றமும்.. அவனுள் கணவனுக்கே உண்டான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அவளின் முதுகில் புரளும் கற்றை முடிகளிலிருந்து.. பிரிந்த சில ஒற்றை முடிகள் லேசான காற்றில் ஆடும் முடிகள் வரை அத்தனையும் அழகு!! அவளிடம் மட்டுமே அழகு!!

“என்‌ மாமன் பேர சரியாத்தான் வைச்சிருக்காரு!” என்று மீண்டும் விழி வழியே அவன் காதல் செய்தி அனுப்ப… அவளோ இருட்டில் பளபளக்கும் அவனது கண்களை பார்த்தப்படி அருகில் வந்து நின்றாள்.

அவள் காதோரம் புரண்டு கொண்டிருந்த முடிகளை சுருட்டி காதின் பின் பக்கம் தள்ளிவிட்டவன், ம்ம் என்றான்.  கைகள் இரண்டையும் குளிருக்கு இதமாக தேய்த்து கன்னத்தில் வைத்துக் கொண்டாள். அவன் பக்கத்தில்.. அவன் தோளை உரசிக் கொண்டிருந்த.. அழகியை முகத்தை திருப்பி பார்த்தான். அவளும் என்ன என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க…

அவளின் பெண்மையின் ஸ்பரிசத்தில் அவனின் ஆண்மை தவித்தது!! அவளின் பெண்மை வாசம் அவன் சுவாசத்தில் கலந்து.. நாசிக்குள் இனிய மணத்தை பரவி விரவி.. இதயத்துக்குள் சுகமாய் நிறைந்தது!!

காற்றிலாடும் அவளது கூந்தல் மயிரிழை போல அவன் மனதும் சஞ்சலத்தில் உழன்று கொண்டிருந்தது. “இவளை எப்படி ஹாண்டில் செய்றது?” என்று எண்ணி!!

கழுத்தை வளைத்து தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தவள் “என்ன கேட்கனும் என்னிடம்?” கேட்டாள்.

“அது இருக்கு நிறைய…. ஆனா… ” என்றவன் அவளை பார்க்காமல் மீண்டும் இருளை வெறித்தவாறு நின்றிருக்க…

“இப்போ என்ன.. உங்களை பார்த்து நான்… ஐ.. ஐ லவ் யூ.. சொன்னா.. நீங்க நார்மல் ஆகிடுவீங்களா?” என்று இவளும் அவன் முகம் பார்க்காமல் பேச..

அவன் அவள் புறம் திரும்பி “என்ன திடீர்னு?” என்றான்.

“உங்களை சகஜமாக்க தான்!” என்றாள்.

“என்னை சகஜமாக்க வெறும் வாய் வார்த்தையால் நீ சொல்லும் ஐ லவ் யூ பத்தாது.. அது தேவையும் இல்லை. அதை உன் கண்ணே சொல்லிவிடும் உன் மனதில் இருந்து வந்தால்… கூடவே…” அவள் முன் குனிந்தவன் “உன்னுடைய அத்தூ… அது சொல்லும் ஆயிரம் அர்த்தம்!!” என்றதும் அவள் அதிர்ந்து அவனை பார்க்க…

“உன்னை.. இப்ப.. இப்படி பார்க்குறப்ப நீ எப்படி இருக்க தெரியுமா.. பிஜிலி??” 

“ம்ம்.. எப்படி இருக்கேன்?

சொல்லுங்களேன்!” என்று அவள் நாக்கை கன்னத்தில் குழைக்க..

“மாமல்லபுரம் சிற்பம் ஒன்னு.. உயிரோட வந்து என் முன்னால நிக்கற ஒரு பிரமையை தருது எனக்கு.. இந்த நிலா வெளிச்சத்துல உன்னை பாக்கறப்ப.. !!” ”

“எது?” என்று அதிர்ந்தவள்,

முகம் தூக்கி அன்னாந்து சிரித்தாள்.

“நீங்க மாமல்லபுரம் சிற்பத்தை நேரில் பார்த்திருக்கீங்களா?

புளுகவும் ஒரு அளவில்ல..??”  என்று மீண்டும் சிரித்தாள்.

“ஏய் பிஜிலி…நான் பொய் சொல்லல.. !! இது என் பீல்..!!” என்றான். அவள் கேட்டுக்கொண்டே மார்பில் கட்டியிருந்த கைகளை விலக்கி மாடி மதிற்சுவர் மீது கை ஊன்றி நின்று தூரத்தில் பார்க்க ஆரம்பித்தாள். அவள் தோளில் தன் ஒரு கையை வைத்து “நான் நேரிலே பார்த்திருக்கிறேன் பிஜிலி!” என்றான் ஹஸ்கி குரலில்!!

“எதை?” என்று அவள் புரியாமல் விழிக்க…

“மாமல்லபுர சிற்பத்தை!!” என்றான் அவளை கூர்ந்து பார்த்து…

 “பொய் சொல்லாதீங்க.. சிற்பம் எல்லாம் எங்காவது உயிரோட வருமா என்ன?? எல்லாம் புருடா!!” என்று சிரித்தாள்.

“வரும்…!!” என்றான் அவளை பார்வையால் தின்றபடி..

“பொய்!!” என்றாள் அவனை முறைத்தபடி…

அவளின் தோளை அவன் மெதுவாக அழுத்தி பிடிக்க.. அவள் பார்வை இன்னும் எங்கோ தொலைவில் தான் இருந்தது. லேசான படபடப்புடன்  அவள் நிற்க.. அவள் பக்கம் நெருங்கி நின்று அவன் கையை எடுத்து.. அவளின் அடுத்த தோளிலும் வைத்து மெல்ல அணைத்துக் கொண்டான்.!

அவளிடம் எந்த அசைவும் இல்லை. அமைதியாகவே இருந்தாள். அவள் முதுகின் பக்கம் இரண்டு கைகளையும் கொண்டு சென்றவன், இப்பொது இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“பிஜிலி… சொல்லு?”

“என்ன சொல்லனும்?” அவள் குரல் இயல்பாகவே வெளிப்பட்டது. 

“அத்தூ… சொல்லு!!” என்றான்.

“தனிமை ரொம்ப பலவீனமானது இல்லைங்க.. ??” என அமைதியான குரலிலேயே கேட்டாள். 

“எஸ்..!!” என்றவன் அவளது இடது தோளில் தன் முகம் தாங்கினான். 

“தனிமை அதனோடு கூடிய இளமை.. எவ்வளவு திடமானவனங்களையும் பலவீனமாக்கக் கூடிய ஒரு அபாயமான ஆற்றல் மிக்க சூழல்!! இல்லையா?”

“எஸ்.. யூ ஆர் ரைட்.. !! ஆனா.. இப்போ அதை எதுக்கு சொல்ற?” என்று அவன் புரியாமல் கேட்க..

“அதனால தான்.. மனசுல உங்கள் மீது எவ்வளவு கோபம்.. ஆத்திரம் இருந்தாலும்.. இப்படி குழைத்துக் கொண்டு நிற்கிறேன்!” என்று தணலை அவள் கக்க.. தீச்சுட்டாற் போல் அவளை பிரிந்து நின்றவன் அவளை அதிர்ந்து பார்த்தான்.

ஆசை வளரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *