ஆசையே காதலாம்.... ஆகினேன் காதலா
17
ஆ.கா…. ஆ.கா…
ஜியா ஜானவி ❤️
எதே பழகி பார்க்கவா?? என்று ஷனா முழிக்க… “எஸ் ஷனா.. அப்போதானே எங்க அண்ணன் ஒரு கேடிஎம் 916 தங்கமனு உனக்கு தெரியும்!! ” என்ற அழகி தேறாத விற்காத நகையை எப்படியாவது கஸ்டமரின் தலையில் கட்டி விட பார்க்கும் அசல் சேஸ்கேர்ளாய் மாறி சிரிக்க…
‘அடி பாவி தங்காய்!! யார் கிட்ட டேட்டிங் பத்தி எல்லாம் பேசுற… என்னையெல்லாம் என் ஆஃபிஸில் வந்து கேட்டு பாரு!! பார்க்க தான் 90’ஸ் கிட்… ஆனா பக்கா 20’ஸ் கிட்!!’
என்று சிவாவின் மனம் அலறியது எல்லாம் பாவம் அழகியின் காதிலோ
ஷனாவின் காதிலோ விழவில்லை.
ஆதி அர்த்தபுஷ்டியுடன் சிவாவை பார்த்து சிரிக்க… “மச்சான் எதுக்கு நம்மள பாசமா பார்த்து சிரிக்கிறான்? இது தப்பாச்சே!! வாண்டடா வலையில சிக்கிட்டோமோ?? ஆனாலும் நமக்கு தங்கச்சி பாசம் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு! இட்ஸ் ஆல் மேனுஃபாக்சரிங் டிபெக்ட்!! எல்லாம் அந்த சைலஜாவால தான். இந்த சைலஜாவுக்கு சுபத்ரா மேல தங்கச்சின்னு பாசம் பொங்கி வரும். அது போல நமக்கும் அம்மு மேல பாசம் பொங்கி வந்துடுச்சு!!” என்று நெத்தியை தட்டி தட்டி அவன் ஒரு புறம் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தான்.
அவன் முன் நிழலாட.. மெதுவாக தலையை நிமிர்த்திப் பார்த்தான். ஆதி கைகட்டி கொண்டு நிற்க.. அழகியோ இடுப்பில் கைவைத்தபடி பார்க்க.. ஷனாவோ ஷாலை விரலில் சுற்றிக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்ப்பதும் பின் தலைகுனிந்து கொள்வதுமாய் இருக்க.. ‘இப்போ என்னங்கடா?’ என்ற மாதிரி பாவமாக பார்த்தான் சிவபிரசாத்!!
“இங்க பாரு அண்ணா.. நான் தான் ஷனாவை உன்னை நம்பி அனுப்பி வைக்கிறேன். அதனால.. அவ மனசு புண் படுற மாதிரி எதுவும் நீ பேசக்கூடாது.. பண்ணக்கூடாது!!” என்றதும், “அப்படி எல்லாம் என் தங்கச்சியை உன் அண்ணனோட தனியா அனுப்ப முடியாது!!” என்று ஆதி அழகியிடம் மல்லு கட்ட…
“அதுக்கு?” என்று பார்த்த அழகியிடம்.. “வா நாமும் சேர்ந்து டேட்டிங் போகலாம்!!” என்றான்
கண்களில் ரகசியமாய் சிரித்து!!
“வாவ்…அண்ணா!! சூப்பர் ஐடியா!!” என்று ஷனா குதூக்களிக்க..
“அடேய்… டேட்டிங்க்கான மரியாதையே போச்சுடா!!” என்று மனதுக்குள் கவுண்ட்டர் கொடுத்தவன், அவர்களைப் பார்த்து பல்லு விழுந்த பல்லியாய் சிரித்தான் சிவா.
வேற என்னதான் செய்ய முடியும் என்று சோபாவில் சோகமாக அமைந்திருக்க.. அங்கு சற்று தள்ளி எங்கே டேட்டிங் போகலாம் என்று மூவரும் மிக முக்கியமான விவாதத்தில் இருக்கும்போது.. கஜா புயலாய் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த சைலஜாவோ மகனை எழுப்பி கன்னத்தை பதம் பார்த்தார்.
“அம்மா..!!” என்று அவன் அலற “ஏன்டா கொஞ்சமாச்சும் உனக்கு எங்க மேல பாசம் இருக்கா? மரியாதை இருக்கா? பயம் இருக்கா? பக்தி இருக்கா? அன்பு இருக்கா?” என்று அவ்வையார் ரேஞ்சுக்கு கேட்டுக் கொண்டே சென்ற சைலஜா பின்பு, “பெற்றவங்க நாங்க என்ன செத்தா போயிட்டோம்? இந்த பக்கம் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வரதுக்குள்ள இப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறியே!! உனக்கு எப்படி எப்படி எல்லாம் பொண்ணு பார்க்கணும் நான் நினைச்சிருந்தேன்!! அந்த ஊரே வேணாம்னு நினைச்சா.. கடைசியில…” என்று சைலஜா ஆத்திரம் அழுத்தம் மிகுதியில் பிபி எகிற ஓரமாய் அமர்ந்து விட்டார்.
இவர்கள் வந்த விஷயம் அறிந்து ஓடி வந்த சுபத்ரா… அக்காவின் அருகில் அமர்ந்து அவரின் கையை பிடித்து பொறுமையாக அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். இங்கு மணிகண்டனோ மகன் அருகில் அமர்ந்து அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தார்.
மற்றவர்களுக்கு மகனிடம் ஏதோ அறிவுரைகள் சொல்லுகிறார் என்று தான் தெரிந்திருந்தது. ஆனால் அவரோ “நல்ல வேலை செஞ்சடா மகனே!! உங்க அம்மாவ ஒத்தையா நான் சமாளிக்க முடியாம இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தேன். அதுவும் அந்த ஊரு பொண்ணுங்களுக்கு என்ன வாயோ? ஏதோ சுபத்ரா தான் தப்பி தவறி பிறந்துட்டு. இனி மாமியாராச்சு மருமகள் ஆச்சுன்னு நான் நிம்மதியாக இருக்கலாம். இரண்டு பேரையும் கோர்த்துவிட்டு…” என்று மிக மிக சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு மனைவியை கலாய்த்து கொண்டிருந்தார் மனுஷன்.
ஙேன்று பார்த்து பார்த்துக் கொண்டிருந்தான் அப்பாவை சிவா.
“என்னடா அப்பா இப்படி பேசுறாறேனு அதிர்ச்சியா இருக்கா? இருக்கட்டும் இருக்கட்டும் அது பாட்டுக்கு ஒரு ஓரம் இருக்கட்டும்!! வேற என்ன பண்றது நாம அதிகாரத்தை கொடுக்கவில்லை என்றாலும் அவங்களே எடுத்துக் கொள்ளுவாளுங்க… ஒரு வார்த்தை நம்ம வெளியில பேசினால்.. அவ்வளோ தான்! ஆண் அராஜகம்.. புருஷனோட அடக்குமுறை… கணவன் கட்டுப்பாடுன்னு.. ஏகப்பட்டது சொல்லி நம்மளுடைய தலையில் தட்டி ஓரமா உட்கார வைச்சிடுறாங்க! கல்யாணம் ஆன முதல் அஞ்சு வருஷம் மட்டும் தான் அவங்க நம்ம கட்டுப்பாட்டில்… அதுக்கப்புறம் ஆயுளுக்கும் நாம தான் அவங்க கட்டுப்பாட்டில்!! உன் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் எனக்கு கொஞ்சம் ரிலீஃப்!! இனி என் தலை உருளாது அல்லவா?” என்றார் நிம்மதியாக.. ஆனால் அதையும் முகத்தை அட்வைஸ் செய்வது போல வைத்துக்கொண்டு பேசிய தந்தையை பார்த்து அதிசயத்து தான் போனான்.
“போகப்போக நீயும் என் போலவே மாறி விடுவாய் கண்ணா!” என்று கடைசியாக சொல்லிவிட்டு கையை கட்டிக்கொண்டு மனைவியின் அருகே வந்து அமர்ந்து விட்டார். கோபமாக இருக்கிறாராமாம்!
அதற்குள் மதியம் தாண்டி நான்கு மணி ஆகிவிட சாப்பாட்டை பற்றி யாருக்கும் எண்ணம் இல்லாமல் இருக்க.. அழகிதான் அனைவருக்கும் வெளியில் இருந்து உணவு வரவழைத்தாள். சைலஜா சுபத்ராவிடம் அத்தனை நியாயங்கள் பேசிக்கொண்டே உண்டார்.
மணிகண்டன் எப்பொழுதும் போல முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு உணவு உண்டு விட்டு தங்கள் வீட்டிற்கு சென்று விட்டார். இன்னும் கொஞ்ச நாட்கள் மனைவியின் வாயில் தாம் அரைப்பட மாட்டோம் என்ற நிம்மதியில்!!
“அடுத்த கட்டம் என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?” என்று சுபத்ரா தன் அறையை ஒரு முறை பார்த்தவிட்டு கேட்டார். புலம்பிக் கொண்டிருந்த அக்காவை கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு என்று படுக்க வைத்துவிட்டு இங்கே மக்களோடு பேச வந்தார்.
“டேட்டிங் போலாம்னு இருக்கோம் மா!” என்று அழகி வாயை விட.. அவர் முறைத்த முறைப்பில் கப்பு என்று வாயை பொத்திக் கொண்டாள் அழகி.
“இல்ல அத்தை.. ஷனாவுக்கு புடிச்சிருக்கானு ஃபர்ஸ்ட் தெரியனும். அதனால… இந்த கல்யாணம் நடந்ததே மறந்துட்டு அவர் கூட பேசிப் பார்க்கலாம் என்று சொல்லி இருக்கேன். அவளுக்கு பிடித்திருந்ததுனா.. இதை நாம முறைப்படி அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகலாம். இல்லன்னா இங்கு நடந்தது நமக்கு மட்டுமே தெரிந்ததாக தான் இருக்கணும்!!” என்று சிவாவை ஆதி பார்த்த பார்வையில் ‘இதுதான் முடிவு!! இதை தாண்டி நீ எதுவும் புடுங்க முடியாது.. அது உன் ஊரே ஆனாலும்…’ என்பது போல் அழுத்தமாக இருக்க.. சிவாவோ முகத்தை திருப்பிக் கொண்டான்.
“சரி.. கொஞ்ச நேரம் எல்லாரும் ஓய்வு எடுத்துட்டு கிளம்புங்க” என்றதும் சிவா எழுந்து தன் வீட்டுக்கு செல்ல.. “அண்ணா ஆறு மணிக்கு ரெடியாகி வந்துடு” என்று அனுப்பி வைத்தாள் அழகி. பின்பு ஷனாவை தன் அறைக்கு அழைத்து சென்று விட்டாள் அழகி.
சுபத்ரா தன் அறைக்கு சென்று சைலஜாவோடு இளைப்பாற.. ஹாலில் தனித்துவிடப்பட்ட ஆதியோ “பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெறி கட்டுவது போல.. இவன் கல்யாணம் பண்ணி சேர்த்து வைக்கிறதுக்கு என்னை ஏண்டா என் பொண்டாட்டி விட்டு பிரிச்சி வச்சீங்க!!” என்றவன் சோபாவில் சாய்ந்து விட்டான்.
மாலை அருகில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு நால்வரும் செல்ல.. அழகியை தனியாக அழைத்துக் கொண்டு வந்து விட்டான் ஆதி. கண் பார்வையில் தங்கையை வைத்துக் கொண்டே..
என்னதான் கிராமத்தில் பிறந்தாலும்.. தஞ்சையில் படிப்பை முடித்தாலும்.. அதை தாண்டி எல்லாம் வெளி உலகம் ஷனாவுக்கு தெரியாது. தன் குடும்பம்.. கோவில்.. இது தவிர கல்லூரி காலத்தில் சென்று வந்து சுற்றுலா தளங்கள் மட்டுமே!!
வேலை செய்யவும் பெரிதாக அவளுக்கு எண்ணம் இல்லாததால்.. இந்த ஹை ஃபை சிட்டியான பெங்களூரின் ஆடம்பரங்களும் வேகங்களும் முதலில் ஆச்சரியப்படுத்தினாலும் இப்பொழுது பயமுறுத்தின..
சிவாவோடு பொருந்தி வாழ முடியுமா என்பதை எல்லாம் அவள் யோசிக்கவில்லை. இந்த பெங்களூரில் எப்படி நம்மால் காலம் தள்ள முடியும் தான் என்றது அவளது யோசனை!! அத்தனை டிராபிக்.. அத்தனை குளிர்.. அத்தனை பாஷைகள்!! முடியுமா தன்னால்? என்று அங்கே அவர்களை சுற்றி இருந்த நவ நாகரீக யுவதிகளையும் இளைஞர்களையும் அவர்களுக்கு சற்றும் குறையாத விதத்தில் இருக்கும் மத்திய வயது ஜோடிகளையும் பார்த்தவாறு அவள் அமர்ந்திருந்தாள்.
“க்கும்!!”என்று தொண்டையை சிவா கணைக்க.. தன்னை தான் கூப்பிடுகிறான் என்று புரிந்தாலும் அவள் திரும்பி பார்க்கவில்லை.
‘கொழுப்பு! திமிரு! அப்படியே அவங்க அண்ணன் மாதிரி’ என்று முணுமுணுத்தவன் “என்ன படிச்சிருக்க?” என்று கேட்டான்.
“ஏன்.. உங்க கம்பெனியில் எனக்கும் வேலை வாங்கி தர போறீங்களா?” என்றாள் பதிலுக்கு..
“என் கம்பெனி என்ன உங்க அண்ணன் நடத்துற மாதிரி பஞ்சு மில்லுனு நினைச்சியா?
உன்ன போல கிராமத்திலிருந்து வந்தவங்க ஒரு நாள் கூட தாக்கு பிடிக்க முடியாது!” என்று அலட்சியமாக அவளை பார்த்து கூறினான்.
“ஓஹ்ஹோ…. ஏன் அங்க இருக்குறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா? காட்டில் திரிகிற மிருகங்களா? என்னை போல மனுஷங்கள் வர முடியாமல் இருப்பதற்கு.. இல்லை கட்டுப்பாட்டு இல்லாத காட்டுமிராண்டிகளா.. ஒழுக்கமான என்னை மாதிரி பொண்ணுங்க வேலை செய்ய முடியாமல் இருப்பதற்கு..” என்று இவளும் காட்டமாக கேட்க..
‘அய்யோ சொதப்புரியேடா சிவா!’ உன் கம்பெனிக்கு மார்க்கெட்டிங் பண்ணவாடா வந்த?’ என்று தலையை கோதிக் கொண்டவன் “நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை!! கொஞ்சம் ஹை ஃபையா இருக்கும். பேச்சு வழக்கில் இருந்து நடவடிக்கை எல்லாமே!! ஆண் பெண் பேதம் இல்லாமல் முதல் நாள் பாக்குறவங்க கூட லைட்ட ஆ ஹக் பண்ணி தான் ஹலோவே சொல்லுவாங்க!!” என்று தணிந்த குரலில் கூறியதும் “என்னது ஹக் பண்ணி ஹலோ சொல்லுவாங்களா? இவனுமா?” என்று அதிர்ந்து பார்த்தாள்.
“இதை.. இதைத்தான் சொன்னேன்! இதெல்லாம் எங்களுக்கு பழக்கமான ஒன்று.. உன்னை மாதிரி கிராமத்தில் இருந்து வந்தவளுக்கு இதெல்லாம் பழக்கம் கிடையாது. அதை தவிர…” என்று அவளை உச்சம் முதல் பாதம் வரை நோட்டமிட்டான்.
இளமஞ்சளில் அனார்கலி சுடியில் இருந்தாள் ஷனா. அழகி தான்!! முகத்தில் மூன்று கோட் பவுண்டேஷன் இல்லாமல்!! லிப் கிளாஸ் இல்லாத சிவந்த உதட்டோடு.. ரூஜ் இல்லாத சிவந்த கன்னங்களோடு அழகாக இருந்தாள்.
இயற்கையான அழகோடு செயற்கைத் தனங்கள் இன்றி அழகாக இருந்தாள் ஷனா.. அதற்காக மேக்கப் செய்யாத தெரியாத யுவதி என்றும் கூற முடியாது. காஜல் ஐலைனர் மெல்லிய லிப்ஸ்டிக் என்று ஆர்ப்பாட்டம் இல்லாத அழகாக இருந்தாள் ஷனா.
இதுவரை தங்கையின் நாத்தனார் என்ற பார்வையிலிருந்து மாறி.. அவளை முதன் முதலாக அவளாக அவளை ஒரு பெண்ணாக பார்த்தான் சிவா!!
ஷனாவுக்கு அந்த எண்ணம் எல்லாம் இல்லை. இவன் தான் முதலிலே சொல்லி விட்டானே… நீ கிராமத்தவள் என்று!! அதிலேயே புசுபுசு என்று கோபத்தோடு அமர்ந்திருக்க.. அந்த கோபத்தை எல்லாம் எப்படி காட்டுவது என்று தெரியாமல் இருந்த போது, அவளிடம் பேரர் வந்து “யுவர் ஆர்டர் ப்ளீஸ் மேம்!” என்று முகத்தில் அத்தனை பற்களையும் காட்டி ஸ்டைலாக வினவியவனை பார்த்தவளுக்கு மண்டையில் பல்பு எறிய.. மெனு கார்டை எடுத்தவள் கண்ணில் பட்டதை எல்லாம் ஆர்டர் செய்து வைத்து விட்டாள்.
இவளுடைய அழகை பெங்களூர் அழகிகளோடு ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்த சிவா இதெல்லாம் கவனிக்கவே இல்லை. பிறகு பேரர் வந்து அடிக்கியவுடன் தான் கண்கள் வெளியே குதிக்கும் மாறு அவளை பார்க்க… “நான் கோபமாக இருந்தால் கொஞ்சம் நிறைய சாப்பிடுவேன்!” என்றவள், ஏதோ போனால் போகுது என்று இரண்டு பதார்த்தத்தை அவன் புறம் தள்ளி வைத்துவிட்டு.. இவள் வெட்டிக் கொண்டிருந்தாள்.
இவர்கள் இருவரும் என்ன செய்கின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்துக் கொண்டே தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த ஆதியோ வெகு மும்பரமாக “ஆமாம் அந்த அத்துவ நீ எப்ப சொல்லுவ?” என்று கேட்க.. வெகு நாள் பிறகு அவளின் சைனீஸ் ஐட்டத்தை உள்ளே தள்ளிக் கொண்டிருந்த அழகிக்கு புரையேற வாயில் வைத்த நூடுல்ஸோடு கண்களெல்லாம் கலங்கி கணவனை பார்த்தாள்.
“ஒரு பேருக்கு இவ்வளவு எமோஷனலா? நீ கண்கலங்குவேன்னு எதிர்பார்க்கவே இல்லை பிஜிலி!!” என்று கூறி சிரித்து அவளிடம் தண்ணியை நகர்த்தினான். அவளும் சாப்பாட்டுக்கு மட்டுமே வாய் திறப்பேன் என்று அதன் பின் வித்தியாசமான மௌன விரதத்தை எடுத்துக் கொண்டாள்.
பின் ஆதியும் தங்களுக்கான பில்லையும் சிவாவிடமே கொடுக்க சொல்லிவிட்டான். அழகி என்ன இது என்று பார்க்க.. “உன் அண்ணன் தானே பழகி பாக்கணும் ஆசைப்பட்ட.. அப்போ அவன்தான் செய்யணும்!!” என்று முன்னே நடக்க.. கையில் வைத்திருந்த இரு பில்லையும் பார்த்த சிவா… “இப்படியே ஒரு பத்து நாள் போச்சு இந்த மாசம் சம்பளம் ஹோகையா தான்!” என்றவாறு பில்லை கட்டி விட்டு டிப்ஸூம் வைத்துவிட்டு இவர்கள் பின்னோடு சேர்ந்து கொண்டான்.
சிவா காரில் போகும்போது முன்னால் அமர்ந்துவிட.. பின்னால் ஆதி பெண்களோடு அமர்ந்திருக்க இது என்ன? அது என்ன? என்று ஷனாவிடம் பேச ஆரம்பித்தாள் அழகி. கொஞ்ச நேரத்தில் அவளுமே இயல்பாக சகஜமாக அழகியோடு பேச ஆரம்பித்து விட்டாள்.
மைத்தியோடு பேச்சுவார்த்தை எல்லாம் சுற்றி சுற்றி அவர்களை குடும்பத்தை பற்றி தான் இருக்கும் ஷனாவுக்கு. அண்ணன் இப்படி அம்மா இப்படி என்று அதை தவிர பெரிதாக மைத்திக்கு அந்த ஊரைத் தாண்டி எதுவும் தெரியாது. கூடவே எப்பொழுதும் ஒரு விழிப்புணர்வோடு தான் இருப்பாள். யாரும் ஏதும் தங்களை சொல்லிவிடுவார்களோ என்று!! ஒரு ஒதுங்கிய பாவம் அவளிடம் இருக்கும். அதனால் ரொம்பவெல்லம் கலகலவென்று பேசமாட்டாள் மைத்தி.
ஹாஸ்டலில் நண்பர்களுடன் அப்படி பேசிய பழகிய ஷனாவுக்கு, கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது முதலில் வீட்டில் வந்து இருந்தபோது… பின்பு ஓரளவு பழக்கமாகிவிட, இப்போது அழகியின் மடைத்திறந்த வெள்ளமான பேச்சில் அவளாகவே இயல்போடு அதில் பயணித்தாள்.
அந்தப் பயணம் அதோடு முடியவில்லை. இரவு கூட பேசிய படியே பெண்கள் இருவரும் அழகியின் அறைக்குள் நுழைந்து கொள்ள… இப்பொழுது சங்கடமாக உணர்ந்தான் ஆதி.
இவருக்குள்ளான பிணைப்பு அது எப்பொழுதும் போல இருந்தாலும் சிறிது காலமாக அவளுடைய அருகாமையில்.. ஸ்பரிசத்தில்.. வாசத்தை நுகர்ந்து கொண்டே உறங்கியவனுக்கு இன்று ஏனோ ஹால் வெறுமையாகவே இருந்தது.
மகளோடு ஷனா இருந்ததால் சட்டென்று ஷனாவை தன்னறைக்கு அழைக்க சுபத்ராவால் முடியவில்லை. அதனால் தன்னறையில் படுத்துக்கொள்ளுங்கள் என்று கூற.. அவன் மறுத்து விட்டான். மெத்தையை மட்டும் கொண்டு வந்து ஹாலில் போட்டு அவனுக்கு வசதி செய்துவிட.. “பரவாயில்ல அத்த இங்கே படுத்துகிறேன்!” என்றவன் கண்களோ மூடிய அறை மீதே பொதிந்திருந்தது.
வெளியில் சாப்பிட்டு வந்து விட்டதால் பேசியபடியே சென்று உடைமாற்றிவிட்டு இருவரும் படுத்துவிட.. தண்ணீர் எடுத்து வைக்க மறந்து விட்டாள் அழகி.
பாதி இரவில் தாகத்துக்கு தவிக்க வெளிய வந்தவள், அப்போதுதான் கணவன் தனியாக படுப்பது தெரிய பார்த்ததும் ஒரு கள்ளச்சிரிப்பு அவளிடத்தில்!! “படுக்கட்டும் படுக்கட்டும்.. தனியா” என்று சிறு சிரிப்போடு சமையலறைக்குள் நுழைந்தாள்.
இவன் உறங்கினால் அல்லவா? மனைவி வந்து தன்னருகில் நின்று சிரித்து சென்றதை அரை கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தவன்..
சத்தம் இல்லாமல் கிச்சனுக்குள் நுழைந்து, மெதுவாக அழகியை நெருங்கினான். மனைவியை பின் புறமாக இடுப்புக்கிடையே இரு கைகளை நுழைத்து அவளின் அடி வயிற்றைக் கட்டி பிடிக்க… அழகி பயந்து கத்துவதற்கு வாயைத் திறக்க, அவளின் இதழை அழுத்தி மூடினான்.
“நான்தான் டி பிஜிலி… சத்தம் போடாதே!!” என்று கிசிகிசுத்தான்.
ஆதியின் சூடான மூச்சு காற்று அவள் கன்னத்தில் சீறி பாய, அழகியின் முகம் முழுவதும் சிவக்க ஆரம்பித்து.
“உன் அண்ணனுக்கு ஏண்டி இந்த வயித்தெரிச்சல்!! மறு வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை இப்படி பிரித்து வைத்துவிட்டானே! நீ இல்லாமல் நான் தனியா படுத்தா தூக்கம் வருமா?” என்று மோக தாகத்தில் தவித்தவன், மெதுவாக அழகியின் கன்னத்தை திருப்ப, அவள் முழுவதுமாக அவன் புறம் திரும்பினாள். அவளின் பின்புற மேடுகள் கிச்சன் திண்டில் நசுங்க, ஆதியின் மார்பில் கைகளை வைத்து
அவன் நெருங்க முடியாமல் தடை போட்டாள்.
ஆதி உதட்டுக்குள் சிரித்த படி, அவளின் இதழை நெருங்க… அவளுக்குள் திக் திக் என்று இதயம் வேகம் எடுக்க… ஆதியின் உதடு அழகியின் துடித்து கொண்டிருந்த செவ்விதழை நெருங்கியது. அவளுக்குள் இருந்த பயம் சூடான காற்றாக வெளியே வந்து ஆதியின் முகத்தில் பரவ, பற்களை இறுக கடித்தப்படி கண்களை இறுக மூடினாள்.
அவன் அழுத்தி அவள் இதழ் நசுங்க முத்தமிட, நொடி பொழுதில் பூ மலர்ந்தது போல் அவள் கண்கள் அகண்டு விரிந்தது. அவள் கழுத்தில் வியர்த்து வழிந்தோட, அவள் உதட்டை கவ்வி சுவைத்தான். அழகி மூச்சு விட முடியாமல் திக்கு முக்காட, ஆதியின் உடலை பின்னோக்கி தள்ளிக் கொண்டிருந்த அவளின் கைகள் பலம் இழந்து துவண்டு விழ.. ஆதியின் மார்பில் அழகியின் இளம் மென்மைகள் இரண்டும் தஞ்சம் கொள்ள… அந்த கிறக்கத்தில் கண்களை மூடிய ஆதி அவளுள் பொதிந்து போனான்.
இரு நிமிடங்கள் கடந்திருக்கும். அழகி ஆதியின் அணைப்பில் கரைந்து போனாள். அப்போது கதவு திறக்கும் சத்தத்தில்… ஆதியை தள்ளிவிட்ட அழகி விரைந்து ஓடினாள் தன் அறைக்கு!!
இதழுக்கு எட்டிய இதழ்கள் செய்த மாயத்தில்… பாதியிலே அவை சென்ற தாபத்தில்… சமையலறை திண்டில் சாய்ந்து கண்களை மூடி தலையை கோதியவாறு நின்று இருந்தான் ஆதி!!
“கொல்றடி பிஜிலி!!” என்று புலம்பியவாறு…
ஆசை வளரும்…
