ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்.... ஆகினேன் காதலா

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

ஆசையே காதலாம்…. ஆகினேன் காதலா!!

10

ஆ.கா.. ஆ.கா..

ஜியா ஜானவி ❤️

ஏகம்மை சமையலறையில் ஏதோ யோசனையாக இருந்தார். அவர் முன்னே உலையில் கொதித்துக் கொண்டிருந்த சாதம் பொங்கி வழிவது கூட அவருக்கு தெரியவில்லை. அதைவிட சாதம் அடுப்பில் வழிந்து விட.. அடுப்பு அணைந்து கொஞ்சம் கொஞ்சமாக கேஸ் அந்த சமையலறையில் பரவிக் கொண்டிருந்தது. அது எதுவும் அவருக்கு நினைவிலோ உணர்விலோ இல்லை. கைகள் ரொம்ப நேரமாக புளியை கரைத்துக் கொண்டே இருந்தது.

“இந்த சம்மூவம் பயல போய் வாங்கி வர சொன்னா.. என் பேச்சைக் கேட்க மாட்டேங்கிறான். காலைல வந்து இந்த மீனை வாங்கி கொடுத்துட்டு போடான்னு சொன்னா ஆள் கிட்ட அனுப்பி கொடுத்து விடுறான். இங்க இவன் முதலாளியா நாம முதலாளியானு தெரியல…!!” என்று சண்முகம் மற்றொரு வேலையாளிடம் வாங்கிக் கொடுத்த மீன்களை சுத்தப்படுத்தி எடுத்துக்கொண்டு உள்ளே வந்தவரின் நாசியில் கேஸின் நெடி உணர.. “ஐயோ.. அத்தாச்சி…” என்று பதறி வந்தவர் அவசரமாக கேஸ் ஸ்டவ்வை அணைத்து விட்டு சமையலறையின் பின்புறம் இருந்த கதவையும் ஜன்னல்களையும் நன்றாக திறந்து விட்டார்.

அப்பவும் ஏதோ யோசனையோடு நின்றிருந்த ஏகம்மையை கைதொட்டு உலுக்கியவர் “அத்தாச்சி…!!” என்று சத்தமாக அழைக்க.. ஏதோ கனவில் இருந்து விழிப்பவர் போல விழித்த ஏகம்மை மங்கையை பார்த்துவிட்டு “என்ன.. என்ன அண்ணி? என்ன ஆச்சு?” என்றார் கலவரமாக…

“என்ன ஆச்சா??? கொஞ்ச நேரத்துல நம்ம ரெண்டு பேரும் பரலோகத்துக்கு போய் இருப்போம்!! காலைல தான் அந்த சீமை சித்திராங்கி சொன்னா.. அதை நீங்க நிறைவேத்திருவீங்க போல.. அடுப்பு கிட்ட கவனமா இருக்க வேண்டாமா அத்தாச்சி? எந்த கோட்டையை பிடிக்க இப்படி யோசனை!!” என்றவாறு சாதத்தை வேற அடுப்புக்கு மாற்றி அடுப்பை சுத்தம் செய்தார்.

பின் ஏகம்மையின் கையில் இருந்த புளி கரைசலை வாங்கி இவரே குழம்புக்கு கூட்டினார், அவரை ஓரப்பார்வையால் பார்த்துக் கொண்டே.. 

“கேட்கிறேன் இல்லையா.. அத்தாச்சி?” என்று மீண்டும் மங்கை கேட்க..  

“ம்ஹீம்.. வேற யாரைப் பத்தி நினைக்க போறேன்! எனக்கு இருக்கிறது அவ ஒருத்தி தானே!! எல்லாம் உங்க மருமகள பத்தி தான் நினைப்பு அண்ணி” என்றார்.

“ஏன் அண்ணி? அவளுக்கு என்ன?” என்றதும் மங்கையை வெறுமையாக பார்த்தார். அதில் அத்தனை துயரங்கள் வலிகள் அவரது கண்களில்.. இப்போது மங்கையாலையும் பதில் சொல்ல முடியவில்லை. மகன் இப்படி மாற்றி அவள் கழுத்தில் கட்டுவான் என்று அவர் என்ன  கனவா கண்டார்!!

“இப்ப எதுக்கு ஏன் அண்ணி நீங்க வெசனப்பட்டுக்கிட்டு இருக்கீங்க.. என்னைக்கு இருந்தாலும் அவ தான் என் மருமக.. வந்தவளை ஓட ஓட விரட்டி விட்டு உங்க மகளை அங்கே வைக்கிறேனா இல்லையானு  மட்டும் பாருங்க.. என்ன இந்த மங்கை பத்தி உங்களுக்கு தெரியாதா? கொஞ்ச நாள் ஆகட்டும் இப்பதானே புதுசா பார்த்து இருக்கான் என் புள்ள…” என்று கொதிக்கும் குழம்பை பார்த்துக் கொண்டே அவர் கூற.. அதைவிட ஏகம்மையின் மனது இன்னும் கொதித்தது!!

“போதும் அண்ணி.. இதுவரைக்கும் நீங்க செய்ததே போதும்! இது என் பெண்ணோட வாழ்க்கை இதில் விளையாட வேணாம்!!” என்று அத்தணை வேகமாக கத்தியிருந்தார்.

ஏகம்மை எப்பொழுதும் மங்கையிடம் அதிர்ந்து பேசவே மாட்டார். அவரால் தான் இங்கே நாம் பிழைக்கிறோம் என்று அவருக்கு தெரியும். சிறுவயதிலிருந்தே அப்பா அம்மா இல்லாமல் வளர்ந்தவர், அதுவே யாரையாவது சார்ந்து வாழ்கிறோம் என்று மனதில் ஒரு தாழ்வுணர்ச்சி  எப்பொழுதும் இருக்கும் அவருக்கு.  யாரையாவது ஒருத்தரை சார்ந்து வாழ்ந்தே இந்நாள் வரை பழகி விட்டவருக்கு, யாரையும் எதிர்த்தோ துணிந்து பேசவோ வராது! எப்பவும் மங்கைக்கு பின்னால் ஒளித்து கொள்வார். ஆனால் இன்று குரலை உயர்த்தி அவரிடமே பேச..  குழம்பில் மீனை போட்டுக் கொண்டிருந்த மங்கை திடுக்கிட்டு திரும்பி பார்த்தார்.

“என்ன அத்தாச்சி சொல்றீங்க? ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? எனக்கு உங்க மேலயும் மைத்தி மேலையும் அக்கறை இல்லையா? அன்பு இல்லையா? பாசம் இல்லையா?” என்று அடுத்தடுத்து வசனங்களை அவர் பேச..

“போதும் அண்ணி… இதுவரைக்கும் நீங்க காட்டின வரை போதும்!! எல்லாத்துக்கும் ஒரு நன்றி!!” என்று இரு கையை கூப்பியவர் விடுவிடு என்று கொல்லைப்புற வாசலில் சென்று அமர்ந்து கொண்டார்.

இத்தனைக்கும் மீன் குழம்பு ஒரு முறை பார்த்துவிட்டு நெருப்பை அடக்கி வைத்துவிட்டு ஏகம்மையை காண சென்றார் மங்கை.

“ஏன் அத்தாச்சி.. ஏன் இப்படி பேசுறீங்க?” என்று மெல்லிய குரலில் மங்கை கேட்க.. அண்ணன் பொண்டாட்டி என்பதை தாண்டி இருவருக்குள்ளவும் ஒரு நட்பு உண்டு!! அது சிறு வயது மாதிரி இருந்து வருவதால்.. பெரும்பாலும் அத்தாச்சி என்று தான் மங்கை விளிப்பார். சத்யேந்திரனை மணந்த பின்பு தான் அண்ணி என்ற ஸ்தானத்தை நிலை நிறுத்த அண்ணி என்பார். ஆனால் பல நேரம் வழக்கம் போல அத்தாச்சியே அவர் வாயில் வரும்.

ஏகம்மையும் “மன்னிச்சிடுங்க அண்ணி.. உங்களை இதுக்கு மேலயும் நான் கஷ்டப்படுத்த விரும்பல.. ஏற்கனவே ஒரு தடவை நீங்க பண்ணினது போதும்!! அதுக்கே இன்னும் பேச்சு அடங்கல.. பண்ண பாவமும் போதல! அதுதான் என் பொண்ண வந்து தாக்குது போல.. ” என்றதும் மங்கை அதிர்ந்து “இப்படி எல்லாம் பேசாதீங்க!!” என்றார்.

“இல்ல அண்ணி.. என்னதான் நாம பேசி முழுகினாலும் உண்மை சுடத்தான் செய்யுது!! பண்ணுன பாவம் இல்லை என்று ஆகாதில்லையே? அது அந்த தாலியை பார்த்த உடனே எனக்கு தெரிஞ்சிடுச்சு!! நான் பண்ணின பாவம் என்னை துரத்துது.. என் பொண்ணை துரத்துவது!! போதும் அண்ணி.. இதுவரைக்கும் நீங்க செய்ததே போதும்!! இனி என் பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க வேண்டாம்.. அவ சந்தோஷமா வாழனும் அண்ணி!! ஏற்கனவே ஒரு முறையில்லா திருமணத்தை பண்ணியதால் மூன்று பேரோட வாழ்க்கை போச்சு.. அதே மாதிரி இம்முறையும் நடக்க வேண்டாம்” என்று குலுங்கி அழுதவரை ஆறுதலாக அரவணைத்துக் கொண்டார் மங்கை.

சிறிது நேரம் அழட்டும் அதன் பின் பேசிக்கலாம் என்று அவர் காத்திருக்க.. அன்று ஒரு முடிவோடு இருந்தார் போல ஏகம்மை, கண்களை துடைத்துவிட்டு “நான் நம்ம சொந்தக்காரங்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பி இருக்கேன் அண்ணி..”

“எதுக்கு?” என்று மங்கை பார்க்க.. “நம்ம மைத்திக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி.. இன்னும் ஒரு வாரத்தில் நல்ல மாப்பிள்ளையா கொண்டு வர சொல்லி இருக்கேன். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மைத்திக்கு கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்கணும் அண்ணி” என்றார் தீர்க்கமான குரலில். பெற்ற அன்னையாக அவரது ஆதங்கம் சரியே;;

மங்கைக்கு பதில் சொல்ல முடியவில்லை  ஆனாலும் இப்பொழுது இவரிடம் பேசி தர்க்கம் பண்ண வேண்டாம் பின்னால் பார்த்து கொள்ளலாம் என்று காத்திருந்தார். மகன்தான் எங்கே போய் விடப் போகிறான்? மருமகள் தான் எங்கே போக போகிறாள் என்று சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்!

ஆனால் மங்கைக்கு அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஆதி வழங்கவே போவது இல்லை என்பதை அவர் அறியவில்லை‌ அதைவிட அழகி ஒன்றும் சுபத்ரா அல்லவே!!

ஏகம்மை அதோடு விட்டுவிடவில்லை. சூட்டோடு சூடாக பெண்ணுக்கு மாப்பிள்ளையை அவர் சொந்தத்திலும் தெரிந்தவர் அறிந்தவர் மூலமாக பார்க்க சொல்லி பேசினார்‌ தொலைபேசியில். கூடவே அன்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த அருளின் அருகில் தயங்கி தயங்கி இவர் நிற்க.. “ஏகா.. என்ன ஏதாவது கேட்கணுமா? இல்ல சொல்லனுமா?” என்று அவராகவே கேட்டார். இனி தங்கை தன்னிடம் எதுவாக இருந்தாலும் கேட்க வேண்டும். அவள் இப்படி தயங்கி தயங்கி நின்று மற்றவருக்கு பின்னால் ஒளிந்து தான் இப்படிப்பட்ட வாழ்க்கை கிடைத்தது. அதனால் முதலில் அவரது தயக்கத்தை கலைய செய்தார்.

“அண்ணே… அது வந்து நம்ம மைத்தி…!” என்று இழுத்து தயங்கினார். ஏனென்றால் அங்க அமர்ந்திருந்த சனா மற்றும் மைத்ரேயியை பார்த்து.. ஆதிசங்கரன் முன்னமே உணவு முடித்து சென்றிருந்தார். ஆதி மதிய உணவுக்கு வரமாட்டேன் என்றதும் அவனுக்கு சாப்பாடு எடுத்து செல்ல வந்து சண்முகததுடம் தானும் வருவதாக கூறி.. தனக்கும் சேர்த்து உணவோடு காரில் சென்று விட்டாள் அழகி.

அதனால் இப்பொழுது வீட்டில் உள்ள பெண்களோடு அருள் மட்டுமே இருக்க.. அப்போதே அதை பேசிவிட வேண்டும் என்று முனைப்போடு இருந்த  ஏகம்மை “மைத்திக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பார்க்கணும் ணே!” என்றதும் அருள் முகத்தில் சந்தோசம்.

“அந்த மட்டிலும் உனக்கு உன் பொண்ணு மீதும்.. அவ வாழ்க்கை மீதும் அக்கறை இருக்கிறதே.. சந்தோஷம் ஏகா!! இனி நான் பார்த்துக்கிறேன்!! அதுவும் முதல்முறையாக அண்ணனை மதித்து நீயாக ஒன்று கேட்டிருக்கிறாய்.. சொல்லி இருக்கிறாய்.. ரொம்ப சந்தோசமா!! ஏற்கனவே எனக்குள் மைத்தி வாழ்க்கை குறித்த எண்ணம் ஓடிக்கொண்டு இருந்தது. இன்று நீயாக சொன்னதும்.. இனி அவள் கல்யாணத்தை முடித்துவிட்டு தான் நான் ஓய்வேன்!!” என்று சந்தோசமாகவே சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றார் அருள்.

அண்ணன் சொல்லிய ‘முதல் முறையாக என்னிடம் நீயாக ஒன்று கேட்டு வந்திருக்கிறாய்’ என்ற வார்த்தை சுட்டது அவரை. ஒருவேளை அன்றைக்கும் அண்ணனிடமே சொல்லி இருக்க வேண்டுமோ? சுமூகமாக அவரே எல்லாத்தையும் முடித்து வைத்திருந்திருப்பாரோ? காலம் கடந்த ஞானோதயம் ஏகம்மைக்கு.

மங்கைக்கு, ஏகம்மை இதில் கணவரை இழுத்துவிட்டது கொஞ்சமும் பிடிக்கவில்லை. பிடித்தமின்மையை அவர் முகத்தில் காட்டிக் கொண்டு நிற்க.. ஷனாவோ ‘இதில் நாம் என்ன பேச? அச்சோ பாவம் அத்தாச்சி!” என்று அவளை திரும்பி பார்க்க சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை அப்படியே தரையில் வீசி அடித்தாள் மைத்ரேயி!!

“மைத்தி!!” என்று ஏகம்மை சத்தம் போட..

“உஷ்!! யாரைக் கேட்டு என் கல்யாணத்தை நீ முடிவு பண்ணுன சொல்லுமா? சொல்லு!! என்னை கல்யாணம் பண்ணி இந்த வீட்டை விட்டு துரத்தி விடலாம் என்று நினைக்கிறாயா? முடியாது முடியவே முடியாது! நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன். இது என்னோட உரிமை.. எனக்கு மட்டுமான உரிமை!! நீ எத்தனை மாப்பிள்ளை கொண்டு வந்து நிறுத்தினாலும் எவனுடன் என் கல்யாணம் நடக்காது. நடக்கவே நடக்காது!!” என்று அன்னையிடம் கத்தி தீர்த்தவள் அப்படியே ஒரு யூ டர்ன் போட்டு மங்கையிடம் வந்து நின்றாள்.

“அத்த.. நீங்க தானே சொல்லி சொல்லி வளர்த்தீங்க.. என் பையன் உனக்குத்தான்! நீ தான் என் மருமகள்! நீதான் இந்த வீட்டு அடுத்த வரிசை கொடுக்க போறேன்னு சொல்லி சொல்லி வளர்த்தீங்க தானே.. இப்ப பொசுக்குனு அவ கழுத்துல அவரு தாலிய கட்டிட்டா.. நான் விட்டுட்டு போய்டனுமா அத்த? நான் ஏன் விட்டுட்டு போகணும்? நான் எப்படி விட்டுட்டு போக முடியும்? அவரு என் மாமா மகன்.. இன்னோரு வகையில் என் அத்தை மகன்.. இப்படி இரண்டு வழிகளிலும் சொந்தம் இருக்க.. நான் அவருக்கு சொந்தம் இல்லாமல் போயிட்டேனா? அதெல்லாம் எனக்கு தெரியாது!! அன்னைக்கு எங்க அம்மாவை மட்டும் மாமா வாழ்க்கையில் கொண்டு வந்தீங்க இல்லையா… அதே போல இப்ப என்னையும் என் மாமா வாழ்க்கைக்குள்ள கொண்டு போங்க.. என்னால அவ கிட்ட தோற்க முடியாது! இது என் வீடு! என் உரிமை!” என்று வெறி பிடித்தவள் போல மைத்தி கத்த அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் ஏகம்மை!!

மங்கையோ மைத்தியின் இந்த ஆவேச பேச்சிலிருந்து சற்றும் தெளியாமல் அதிர்ந்து நிற்க.. அதற்கு ஏகம்மையின் எதிர் வினையில் அதிர்ச்சியின் உச்சிக்கே போய்விட்டார். ஷனா தான் ஓடிவந்து மைத்தியை தாங்கி “என்ன த்தை.. நீங்க? இப்படி கை நீட்டுறீங்க? அவ மேல என்ன தப்பு? தப்பை பெரியவங்க நீங்கள் எல்லாம் செஞ்சுட்டு இப்போ அவளிடம் மனசை மாத்திக்க சொன்னா.. எப்படி முடியும்? போங்க த்தை!!” என்று மைத்தியை கைத்தாங்கலாக அவள் அறைக்கு அழைத்து சென்றாள்.

பெண்ணின் செயலிலும் அவளை அடித்து விட்டோமே என்று குற்ற உணர்விலும் மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தார் ஏகம்மை. மங்கையோ அவர் அருகிலேயே கைப் பிடித்தப்படி ஆதரவாக அமர்ந்திருந்தார். ஆக மொத்தம் யாரும் இங்கே சாப்பிடவில்லை.

அங்கே ஆதியின் மில்லிலோ இதற்கு நேர் மாறாக இருந்தது‌. முதன் முதல் பார்க்கும் கணவனின் மில்லை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள் அழகி. ‘அப்படி என்ன இந்த கிராமத்து விவசாயி புரட்சி பண்ணுகிறான்?’ என்று ஒரு மனது பார்க்க ஆசைப்பட்டாலும்.. அங்கே மொட்டு மொட்டு என்று தனியாக அமர்ந்து இருக்க பிரியம் இல்லாமல் தான் சண்முகத்தோடு கிளம்பியவள் இங்கே வந்தது.

கதவை திறக்கும் சத்தத்தில் “சாப்பாட அங்க மேஜையில் வச்சிட்டு போ சண்முகம்!!” என்று கணக்கு வழக்கில் பிஸியாக இருந்தான் ஆதி.

“முதலில் புதுப் பெண்டாட்டியை கணக்கு பண்ணுங்க ஆஃபீசர்.. அப்புறம் மில்லு கணக்கை கணக்கு பண்ணலாம்” என்று குறும்பு வழிய வந்த குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்க்க.. அங்கே கேரியலோடு நின்றிருந்தாள் ஆதியின் அழகி!!

“அட.. பிஜிலி.. என்ன அதிசயமா இருக்கு? இனிமே தான் கணக்கு பண்ணனுமா என்ன?” என்றபடி அவளை அணைக்க வந்தவனை தள்ளி நிறுத்தியவள், “முதலில் வயித்துக் சாப்பாடு! எனக்கெல்லாம் சோறு முக்கியம்” என்றதும் சிரிப்போடு கை கழுவி அவன் அமர.. இருவருக்கும் தட்டெடுத்து வைத்து அனைத்து பாத்திரங்களையும் பிரித்து வைத்தவள் “நான் பரிமாறி நீங்க சாப்பிட்டு அதை வேடிக்கை பார்க்கிற அளவுக்கு எல்லாம் எனக்கு பொறுமை இல்லை.. ஏன்னா.. பசி வந்தால் அந்த பத்துல பொறுமையும் பறந்து போகும்” என்ற அவள் இருவருக்குமாக சாதம் பரிமாற.. அவன் மீனை இருவருக்கும் பரிமாற என்று இருவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.

“ஸ்ஸ்.. அள்ளுது என் மாமியார் செஞ்ச அய்ர மீனு குழம்பு!! இந்த ஒரு காரணத்துக்காகவே அவங்க கிட்ட ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டும்னு சண்டை போடுறதை குறைக்கலாம்னு பெரிய மனது பண்ணி நான் முடிவெடுத்திருக்கேன்” என்றவளை ரசனையோடு பார்த்தான்.

“அப்படி எல்லாம் நீயாக தனியாக முடிவெடுக்க முடியாது பிஜிலி!! ஏன்னா உங்க உன் மாமியார் சண்டை போட காரணம் கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு நிகர் அவங்கதான்!! திருச்சிற்றம்பலத்தில ஒரே ஒரு மங்கையர்க்கரசி!! சிங்கிள் யூனிக் பீஸ்!!” என்றான் அம்மாவின் அருமை பெருமைகளை அள்ளிவிட்டவாறு!!

“நோ.. நோ.. நோ.. நோ!! இதுவரை திருச்சிற்றம்பலத்தில் அவங்க ஒரே ஒரு மங்கையா இருந்திருக்கலாம். ஆனால் இப்போ அவங்களுக்கு போட்டியா நான் இருக்கேன். இனி இந்த அழகி சொல்வதே சட்டம்!! அதுவே சாசனம்!!” என்று சிரித்து முடிக்க.. அவர்களும் சாப்பிட்டு முடித்திருந்தனர்.

பாத்திரத்தை மீண்டும் கேரிரோடு இணைத்து பையில் அவள் வைக்க அவளது போன் இசைக்கவும் சரியாக இருந்தது. “அம்மா..!!” என்று ஆச்சரியமாக எடுத்தவள் “என்ன சுபா ஆச்சரியமா இருக்கு? மதியம் எல்லாம் பொண்ணு, உங்களுக்கு ஞாபகம் வந்திருக்கா? அதுவும் வேலை நேரத்தில்..” என்று அவள் கிண்டல் அடிக்க..

“அப்படி எல்லாம் இல்ல டா!! நினைப்பதற்கு உன்னைத் தவிர வேறு யாரு இருக்கா எனக்கு? ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அருள் அண்ணனுக்கு போன் செய்தேன். அவங்க எடுக்கல.. அதான் தம்பி எங்க இருக்கார் என்னனு கேட்கலாம் உனக்கு போன் பண்ணேன். சாப்பிட வீட்டுக்கு வந்து இருக்காங்களா?” என்று சுபத்ரா கேட்க..

“அவங்க வீட்டுக்கு வரல.. நான் தான் மில்லுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்தேன். எவ்வளவு நேரம் தான் அந்த வீட்டிலேயே இருக்க.. ஒரே போர் ம்மா!” என்றவள் ஆதியிடம் ஃபோனை நீட்டி உங்க மாமியார் என்றாள்.

ஃபோனை கொடுத்து தள்ளி சென்றவளை கையை பிடித்து இழுத்து அவளை தன்  மடியில் உட்கார வைத்துக் கொண்டான் ஆதி. அவளின் வாசம் பிடித்தபடியே தன் மாமியாருடன் பேசினான். அவன் கை அவள் இடுப்பை வளைத்து மெதுவாக தடவிக் கொடுத்தது. அவன் பேசுவதை ஒட்டுக் கேட்பதை போல.. அவன் மொபைலின் மீது தன் காதை ஒட்டி வைத்தாள். இருவரின் கன்னங்களும் உரசிக் கொண்டன.!!

“சொல்லுங்க அத்தை.. நல்லா இருக்கீங்களா?” என்று அவன் ஆரம்பிக்க..

 “நல்லா இருக்கேன் தம்பி! அண்ணனுக்கு ஃபோன் பண்ணுனேன். இரண்டு மூன்று தடவை பண்ணியும் எடுக்கல.. ஏதோ அவசர வேலையா இருப்பாங்க போல.. மறு வீட்டுக்கு உங்களை அழைக்கனும் தம்பி! அதற்காக தான் பேசணும்னு நினைத்தேன்” என்றார் தயங்கி தயங்கியே..

“இதில் என்னத்த உங்களுக்கு தயக்கம்? எப்படியும் நாங்க அங்கதானே இனி விருந்து மருந்துக்கு எல்லாம் வரணும். நானே அப்பா கிட்ட பேசி  உங்களுக்கு போன் பண்ண சொல்கிறேன் அத்த” என்றான்.

ஆதிக்கு மடியில் மனைவி உட்கார்ந்திருக்க.. அவள் நெளிந்து வளைந்து குலைந்து என்றதில் அவனுக்கு மோகம் கிளர்ந்து விட்டது. அவளை கொஞ்சம் இறுக்கி அணைத்தான். அவள் நெளியக் கூட இல்லை. சுபத்ராவிடம் பேசிக் கொண்டே அவளின் கன்னத்தை தன் கன்னத்தால் தேய்த்தான். அவளுக்கு அந்த அந்நியோன்யம் தெரியவே இல்லை. அம்மா என்ன பேசுகிறார் என்பதிலேயே கவனமாக இருந்தாள். ஃபோனில் பேசிக் கொண்டே முத்தம் கொடுத்தான். அவளை கொஞ்சினான். அவளை கெஞ்ச விட்டான்.

அவனின் உரிமையான சீண்டலில் தீண்டலில் அவளது உடம்பில் உஷ்ணம் படர.. அவளது பெண்மை அவனது வெம்மையில் சுகம் காண.. அவளது உடலை தழுவிய அவன் கையைப் பிடித்து அவன் விரல்களைக் கோர்த்து பிண்ணிக் கொண்டவள், அவனை அத்துமீற விடவில்லை. கூடவே அவன் மடியில் இருந்து எழ முயற்சிக்க..”அத்த.. அழகி உங்க கிட்ட பேசணுமாம்!” என்று ஃபோனை அவள் காதில் வைத்து விட்டான் திடீரென்று!!

“இனியா அங்க ஒன்னும் உனக்கு பிரச்சனை இல்லையே? உன் அத்தை.. அவங்க கிட்ட நீ ஒன்னும் சண்டைக்கு செல்லவில்லையே?” என்று மகளை அறிந்தவராக அங்கே மகள் எப்படி பொருந்தி போகிறாளோ என்று கவலையில் அவர் கேள்வி மேல் கேள்வி கேட்க.. இங்கே அழகிக்கு தான் பதில் சொல்வது சிரமமாக இருந்தது.

அவன் விரல் செய்த மாயத்தில் உடம்பு மெல்ல மெல்ல இறுக்கம் தளர்ந்தது. அவள் உடல் பஞ்சு போலாகி.. பூமியை விட்டு உயர்ந்து எங்கோ மிதப்பதை போல உணர ஆரம்பித்தாள். அவளும் மோகம் காம உணர்ச்சிகள் கொண்ட பெண் தானே? ஆனால் அதை இப்படி ஒரு ஆணின் மடியில் உட்கார்ந்து உணர்ந்ததில்லை!! அவனோடான கூடலை விட இந்த தீண்டல் அவளுக்கு தகித்தது!!

“ஹனிமூனுக்கு எங்கேயாவது பிளான் பண்ணி இருக்கீங்களா? நான் சிவா கிட்ட சொல்லி புக் பண்ணவா?” என்று சுபத்ரா கேட்டார். இத்தனை நாட்களில் மகளின் வாழ்க்கையைப் பற்றிய கவலை அவருக்கு இல்லை. அந்த அளவுக்கு அவளது குரலில் ஆதி பற்றி பேசும் போது ஒரு நிறைவு இருந்தது. அந்த தைரியத்திலேயே ஹனிமூன் பற்றி கேட்டார்.

“அது எதுக்குமா தனியாக ஹனிமூன்? உன் மாப்பிள்ளை தான் இருக்கும் இடத்தையே அவருக்கு ஏத்த மாதிரி மாற்றிக் கொள்கிறாரே.. சிம்பிள் ஹனிமூன் ப்ளேஸ்.. அவரு தோட்டத்தில் உள்ள லான்..” என்று அவள் மொத்தமாக ஆதியின் மானத்தை வாங்கும் முன் அவள் வாயை அடைத்து இருந்தான் ஆதி!! இம்முறை இதழ்கள் கொண்டு இறுக்கமாக!!

ஆசை வளரும்…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *