தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

அத்தியாயம்-2

நன்கு தூங்கிக் கொண்டிருந்த ஷாகிலின் மூக்கிற்கு அரைத்த மசாலா வாசனை தூக்கலாக வரவும் கண்ணை முழித்து பார்த்தான்.

மனீஷ் தன் கையில் ஒரு பெரிய சிக்கன் பீஸை வைத்து கடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

ஆமா அவன் ஒரு வித்தியாசமான பிறவி எங்கிருந்தாலும் தனியாக இருந்து சாப்பிடமாட்டான்.

அதனால் சாப்பாட்டு தட்டை எடுத்துக்கொண்டு வந்து டீவியை பார்த்துக்கொண்டே சோபாவில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

மற்றொரு சோபாவில் படுத்திருந்த ஷாகில்தான் அவன் கையிலிருந்த சாப்பாட்டின் வாசத்தில் எழுந்து அமர்ந்தான்.

இன்னொரு முக்கியாமான விஷயமும் உண்டு சாப்பாட்டு வாசனையில் ஷாகில் தானாக எழுந்துவிடுவான், இது ஒரு பரம ரகசியம் போங்க, அது தெரிஞ்சது நம்ம மனீஷிற்கு மட்டுந்தாங்க.

அதற்குள்ளாக ராஜூ எழுந்து தயாராகி வந்திருந்தான் மணி சரியாக எட்டு, மனீஷ் மணியை பார்க்காமலயே ராஜூவைப் பார்த்ததும்….ஷாகிலு ஓடு மணி எட்டு உங்க பாஸ் வந்துட்டாரு என்றதும் திருதிருவென முழித்தவன் தனது அறைக்குள் ஓடி விட்டான்.

எவ்வளவு பெரிய அறையாக அவர்களுக்கு கொடுத்திருந்தாலும் பாதி நாள் தூக்கம் முன்னறை சோபாவில்தான்.

சரியாக டைனிங் ஹாலிற்கு திரும்பியவன் மனீஷ் கையிலிருந்த தட்டை பார்த்து”சோட்டுஉஉஉ”

அதைக்கேட்டதும் இந்தா வந்துட்டாருல்ல என்று தட்டோடு எழுந்து நேராக டைனிங் ஹால் சென்று அமர்ந்தவன்”பழகிடுச்சு பையா தனியாக சாப்பிட ஒரு மாதிரியாகவே இருக்கு.அதுதான் குண்டன் பக்கத்துல போய் இருந்தேன்”என்று சொன்னவனை பார்த்து அவனது கண்கள் மெல்ல பணித்தது.

இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்கவும் அவசரமாக குளித்து தயாராகி ஷாகிலும் ஓடி வந்து அவர்களுடன் சாப்பிட சேர்ந்துக்கொண்டான்.

அதற்குள் ராஜூ”மனீஷ் நான் வீரார் பேக்ட்டரிக்கு போறேன்.நீயும் ஷாகிலும் தாரவி குடோவுன் போங்க.ப்ரஷ் லெதர் லோடு வந்திருக்க பார்த்திட்டு வந்திடு”

“நான் மட்டும் தனியா போறேன் இவன் உங்ககூட வரட்டும்”

“எனக்கு நீ ஆர்டர் போடுறீயா என்ன?”என்று சட்டென்று மேஜையில் தட்டி கோபத்தில் கேட்டான்.

அதைப்பார்த்தவன்”அது வந்து பையா என்று வார்த்தைகளை இழுத்தவன்…உடனே சாரி” என்று பம்மினான்.

அதற்குள் மீராவினை கவனிக்கவென்று வரும் கேர்டேக்கர் வைஷூ வந்திருந்தாள்.

வந்தவள் ராஜூவை பார்த்தது பயந்து மெதுவாக ஒதுங்கி மீராவின் அறைக்குள் சென்றாள்.

அதற்குள் மீரா எழுந்து மார்னிங் சிக்னஸினால் தலைசுற்றி வயிற்றிலுள்ளதை எல்லாம் வாந்தி பண்ணிவிட்டு வந்தவளது கை வலிக்க அதை பார்த்தவளுக்கு நேற்று நடந்ததுதான் நியாபகம் வந்தது.

அப்போதுதான் வைஷூ உள்ள நுழைந்தவள் மீரா கையை பார்த்துக்கொண்டிருந்ததை  கண்டு”  அருகில் வந்தாள்.

மீராவின் கை வீங்கியிருப்பதை பார்த்து”ஐயோ என்னாச்சு பாபி,கீழ எதுவும் விழுந்திட்டியா என்ன?ஐயோ இந்த நேரத்துல விழக்கூடாதே”என்று பதறினாள்.

“எல்லாம் உங்க ராஜூ பாயோட திருவிளையாடல்தான்”என்று வாயில் வந்த நல்ல நல்ல ஊர் தமிழில் திட்டிக்கொண்டிருந்தாள்.

வைஷூவிற்கோ ஒன்றும் புரியாவிட்டாலும் திட்டுகிறாள் என்று மட்டும் புரிந்தது.

உடனே சிரித்து நீயும் ஒரு மாசமா திட்டிக் கொண்டிருக்க இன்னும் எத்தனைநாள் இப்படியே திட்டுவ.அவர் என்ன நினைக்குறாரோ அதுமட்டுந்தான் அவரோட சாம்ராஜ்ஜியத்துல நடக்கும்.வா குளிச்சிட்டு தயாராகிவா சாப்பிடபோகலாம்”

நான் வரலை அந்த தடியன்கள் இருக்கும்போது நான் வரவில்லை என்று முறுக்கிக்கொண்டு கட்டிலில் அமர்த்தவளை பார்த்தால் சிறுபிள்ளையின் புரியாத பிடிவாதமாக இருந்தது.

பெண்களையே  நெருங்காத காளையவன்,அதைவிட அவர்களை வெறுப்பவன்.

வெளியில் அவனுக்கென்று தனியாக பெயரே உண்டு விஸ்வாமித்திரர் என்று.இருள் உலக தாதாக்களை பெண்களை வைத்து மடக்கிவிடலாம் என்ற ட்ரிக் ராஜூவிடம் செல்லாது.

அவன் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு வைத்திருக்கின்றான் என்றால் கண்டிப்பாக அவனது மனைவியாகத்தானே இருக்கமுடியும் என்றுதான் நம்பினாள்.

அதற்குள்ளாக ராஜூ சாப்பிட்டு முடித்து காத்திருந்தான் மீராவின் வருகைக்காக…

அவளோ அவன் போகட்டும் அதற்கு பிறகு அங்க சாப்பிடபோகலாம் என்று பிடிவாதத்தில் இருந்தாள்.

அதற்குள் ராஜூ”வைஷூ உங்க பாபி வர்றாங்களா இல்லை நான் அங்க வந்து தூக்கிட்டு வரவான்னு கேளு”

அதைக்கேட்ட மீராவிற்கு கோபம் தலைக்கேறி என்னது என்னை தூக்கிட்டு  போவானா அவன் என்று  வெளியே வந்தவள்”என்னை நீ தூக்குவியா?தூக்குவியா?” போட்டிருந்த நைட்டியை இடுப்பில் தூக்கி கட்டிகொண்டு வந்து கேட்டாள்.

அவளை தெனாவட்டாக பார்த்தவன் “குதிக்காதடி”என்று தன் கையை நீட்டி உட்காரு என்று அதட்டினான்.

“முடியாது நான் என்ன உன் அடிமையா?”

ராஜூ மனீஷை பார்த்தான்”ஏய்ஆத்தா மதுரை மீனாட்சி இங்க வா ஆத்தா வந்து சாப்பிடு ஆத்தா.அது உனக்கும் உன் வயித்துல இருக்க பிள்ளைக்கும் புண்ணியமாக போகும்”என்று சிரிக்காது சொல்லவும் ராஜுவிற்கே லேசாக உதடு விரிந்தது.

ஷாகிலோ  பாபி வா என்று தன்னருகில் அழைத்தான்.

அதை கண்டுக்கொள்ளாது”நான் எங்கப்பா வீட்டுக்கே போறேன்.எனக்கு இங்க இருக்க பிடிக்கலை.அதைவிட எனக்கு இங்க இருக்க எந்த உரிமையும் கிடையாது. உங்களை மாதிரி தடியன்ககூட இருந்தால் ஊருதான் தப்பா பேசும்”

அவ்வளவுதான் பக்கத்திலிருந்த சாப்பாடு தட்டு சுவற்றில் மோதி விழுந்தது.

எல்லோரும் ஒரு நொடி அதிர்ந்து”எங்க கூட இருந்தால் அப்படி என்னடி பெயர் கெடும்.ராஜூ பாய் கோட்டைக்குள்ள இருக்க.அதைவிட நான் நெருப்புன்னு தெரியும்.சும்மா வாய்க்கு வந்ததை உளறாத”என்று அவளருகில் சென்றவனை பார்த்து பயந்து வைஷூவின் கையை இறுக பிடித்துக்கொண்டு தன் கண்களை இறுக மூடி, நடுங்கிகொண்டிருந்தாள்.

அதை பார்த்தவன் மெல்ல தன் கையை இறக்கிவிட்டு”இனி நீ பேசினால் இருக்கு”

மனீஷ்தான் க்கும் எப்போதான் இந்த சண்டை ஓயுமோ சாப்பிடக்கூட விடமாட்டுக்காங்களே என்று கன்னத்தில் கைவைத்து அவர்கள் இருவரையும் பார்த்திருந்தான்.

ராஜூ மெல்ல இருக்கையில் அமர்ந்து போனை கையிலெடுத்து யாருக்கோ அழைத்தான் அந்த பக்கம் அழைப்பு ஏற்கப்படவும் “சொல்லுங்க சார் நல்லாயிருககீங்களா”என்று கேட்பவரின் சத்தம் மீராவின் காதில் விழவும்  வேகமாக வந்து சத்தமாக”ப்பா…ப்பா  என்னை வந்து அழைச்சிட்டு போங்கப்பா,எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை”என்று அவருக்கு கேட்கவேண்டுமென்று சத்தமாக பேசினாள்.

அவனோ தன் காதினை ஒற்றை விரலால் கதைடைப்பது போல செய்கை செய்தவன்”அன்பு உன் பொண்ணுக்கு உங்களையெல்லாம் பார்க்கணுமாம்.

அங்க வரணும்னு சொல்றா

அனுப்பிவிடவா”என்று கேட்டவனின் கேள்வியில் என்ன பொருளிருக்கும் என்று புரியாதவரா அன்பு கிட்டதட்ட பத்து வருடங்களாக அவனுக்கு விசவாசமான டிரைவர்.

மகளை திருமணம் முடித்த கையோடு ஊருக்கு சென்று செட்டிலாகிவிட்டார்.

“வேண்டாம் சார் அவள் அங்கயே இருக்கட்டும் சார்.உங்களைவிடவா நான் நல்லா பார்த்துக்கபோறேன்” என்று மகளிடம் என்ன? ஏது?என்று விசாரிக்க கூட தோணாது அழைப்பை துண்டித்துவிட்டார்.

மீராவிற்கோ அழுகை அழுகையாக வந்தது அவன் முன்பு அழபிடிக்காமல் தன் கண்ணீரை உள்ளிழுத்தவள்”அவர் என்ன வேணா சொல்லட்டும் எனக்கு போகணும்,நான் எப்படியாவது போவேன்”என்று தன் முகத்தை வீம்பாக வைத்துக்கொண்டு சொன்னவளை கண்களால்கூட மதிக்காது,மனீஷை பார்த்தவன் “இங்க என்னடா பொருட்காட்சியா நடக்குது வாய்பிளந்து பார்த்திட்டிருக்க”

“ஒன்னுமில்லை பையா நான் தராவி போறேன்”என்று எழுந்தவன் சிக்கனை வாயில் வைத்து கடித்துக்கொண்டிருந்த ஷாகிலை வாடா கார்ல வச்சு சாப்பிடு என்று அவனது சட்டை காலரை பிடித்து இழுத்து சென்றான்.

ராஜூவும் கிளம்பியவன் வைஷூவை பார்க்க”கவனமாக பார்த்துக்குறேன் சாப்”என்று மரியாதை கலந்த பணிவோடு சொன்னாள்.

வாசல் வரை சென்றவன் செக்யூரிட்டியை சத்தமாக அழைத்து”யாராவது கேட் கிட்டவந்து வெளியப்போகணும் என்று கலாட்டா செய்தால் நம்ம குட்டீசை அவிழ்த்தி விட்டுடு” 

அதைக்கேட்ட மீராவோ “அதுகளையா ஐயையோ…பார்த்தாலே ஆறடி இருக்குதே, இதுககிட்டயிருந்து எப்படி தப்பிக்கமுடியும்” என்று பயந்து  தன் கண்களை உருட்டியவளை பார்த்தவன்…திருப்தியாக காரில் ஏறி சென்றுவிட்டான்.

இராட்சஷன்…இராட்சஷன் போடா  உன் கார் எங்கயாவது போய் பஞ்சர் ஆகட்டும் என்று தன் அதிக பட்சமான ஆதங்கத்தை சாபமாக விடுத்திருந்தாள்.

அவளுக்குஅதிகமாக பசித்தாலும் சாப்பாடு தொண்டையில் இறங்கவில்லை கண்ணீர்தான் கண்களிலிருந்து இறங்கியது.

காரில் சென்று கொண்டிருக்கும்போதே பலவித யோசனையில் இருந்தான் ராஜூ.

இந்த யோசனைக்காகத்தான் தனியாக வந்தான்.

இவன் இவ்வளவு யோசிப்பதை பார்த்தால் மனீஷும்,ஷாகிலும் வருத்தப்படுவர்.

அவனுக்கு மீரா விஷயத்தில் ஒரு தீர்மானம் எடுக்கவேண்டியதிருந்தது.

மறுபடியுமாக காரில் வைத்தே மீராவின் அப்பா அன்புவை அழைத்து சிறிது நேரம் பேசியவன், தனது பேக்டரிக்கு சென்றான்.

இங்கோ மனீஷின் கார் அவர்களது வீட்டிலிருந்து தாராவி வருவதற்கு அரைமணிநேரம் எடுக்கும். அதில் பாதி வழியில் அவனது காருக்கு குறுக்காக ஒரு கார் வந்து நின்றதும்.

டிரைவர் காரை சடென் பிரேக் போட்டு நிறுத்திவிட்டு திரும்பி மனீஷை பார்த்தான்.

இருவரும் தங்களது கன்னை கையில் எடுத்து தயாராக வைத்துவிட்டு பார்க்க, எதிரில் நின்றிருந்த காரிலிருந்து இறங்கி வந்தவளை பார்த்தவர்களோ கடுப்பாகிவிட்டனர்.

அதிலிருந்து படு ஸ்டைலாக இறங்கி வந்தவள் இவர்களின் காருக்கருகில் வந்து நிற்கவும் காரின் ஜன்னலை திறந்து “என்னடி”என்று மனீஷ் கேட்டான்.

அதுவா உன் பக்கத்தில் வந்து சொல்றேன் என்று ஷாகிலை பார்த்து”அதுதான் நான் வந்திருக்கேன்னு தெரியதில்ல,இறங்கி முன்னாடி போ இல்லை வெளிய நில்லு” என்றதும் ஷாகில் மனீஷை முறைத்துக்கொண்டே வெளியே சென்றான்.

உடனே மனீஷின் அருகில் வந்து அமர்ந்தவள்” ஏன்டா ஒருத்தி நம்ம பின்னாடியே ஓடி வர்றாளே.அவளை ஒரு மாதமா கண்டுக்காம இருக்கமோ என்று எதாவது பீலிங் வந்துச்சா உனக்கு”

“எனக்கு எதுக்கு பீலிங் வரணும் உனக்குத்தான் ஓவரா பொங்கி வழியுதே அதுவே போதும் இறங்கி போ.மந்திரி பொண்ணு என்றெல்லாம் பார்க்கமாட்டேன் நடுரோட்டுல உருட்டி விட்றுவேன் இறங்கி போடி”

ஏன்டா இப்படி ஒட்டி ஒட்டி உரசுறேனே உணக்கு உணர்ச்சியே  வரலையாடா என்று கேட்டுக்கொண்டே இன்னும் நெருங்கி அவனது தோளோடு தோள் உரச அமர்ந்தவளை தள்ளிவிட்டான்.

“நீ என்ன உரசினாலும் எனக்கு உணர்ச்சி வராதுடி.உங்கப்பன் அந்த டோக்லா மண்டையனும் ஓடிப்போன உங்கண்ணனை நினைச்சாலே ஆத்திரம் ஆத்திரமா வருது இறங்கி ஓடிப்போடி”

“மனீஷ்”

“என்னடி நீ பெயர் வச்ச மாதிரி மனீஷ்னு கூப்பிடுற.அதுதான் அன்றைக்கே சரிவராதுன்னு சொல்லிட்டனே”

கண்கள் கலங்கினாலும் எதுவும் சொல்லாது”நீ நினைச்சா பின்னாடியே வருவ, இல்லைனா துரத்தி விடுவியா போடா இனி உன் பின்னாடி வந்தால் பார்த்துக்கோ”என்று கோபத்தில் கார் கதவை ஓங்கி அறைந்து சாத்தியவள், அங்கே நின்றிருந்த ஷாகிலை இடித்து தள்ளிவிட்டு சென்றாள்.

மறுபடியும் காருக்குள் அமர்ந்தவன்”ஏன் பாய் அவங்ககிட்ட அப்படி பேசினீங்க பாவம்”

இது சரிவராது கான்  இவ அப்பனும் அண்ணனும் நம்ம பையாவையே போட்டுத்தள்ள காத்திருக்கனுங்க.

வேண்டம் கான் சில ஆசைகள் நிறைவேறாது.நம்ம வாழ்க்கையில் ஆசைப்பட்டது எது நிறைவேறி இருக்கு.மூணு வேளை நல்ல சாப்பிடணும்னு நினைச்சதை தவிர”

இதை சொன்னவனுக்கும் பழைய நினைவு கேட்டவனுக்கும் பழை நினைவுகள் மனக்கண் முன் வந்து சென்றது.

மனீஷிடம் உரிமையாக சண்டையிட்டு செல்லும் அவள் பெயர் ஷ்ரேயா பவார்.

அவளது தந்சு மந்திரி அவினாஷ் பவாரோட .அவளது அண்ணன் யாஷ் பவார்.

ராஜூபாயின் பரம எதிரி அதனால்தான் மனீஷ் அப்படி பேசி அனுப்பினான்.

அங்கு மீராவோ இதற்கு மேல் என்ன செய்ய.பால்கனியிலிருந்து பார்த்தால் பின்பக்கமுள்ள கடல் நன்றாக தெரியும் அதை பார்த்துக்கொண்டே இந்த அலைகடல் போலவே என் மனமும் அலைகிறதே.

வாழ்க்கை நன்றாகத்தானே போய்கொண்டிருந்தது…எது இடையில் குறுக்கிட்டது.

இவன்…இவன் இந்த இராட்சஷனின் பகையால் வந்த பழிவெறி…என் பிள்ளைக்கு தகப்பனில்லாது பிறக்க வைத்துவிட்டானே என்று அதில் போட்டிருந்த கம்பியில் தன் கன்னத்தை வைத்து  படுத்து யோசனையில் உளன்றவள் தன்னை அறியாது தூங்கிவிட்டாள்.

வைஷூவிற்குத்தான் பாவமாக இருந்தது.

இதற்கு முன்பு வைஷூவின் அம்மா ராணிதான் இந்த பங்களாவில் வேலை செய்தார்.

அவரைத்தான் வேலைக்காக வரச்செல்லிருந்தான்.அவருக்கு உடம்பு சரியில்லாத காரணத்தால் மட்டுமே வைஷூ வந்திருக்கின்றாள்.

அவளின் நிலையோ மீராவின் நிலையைவிட மோசம்.

திருமணம் முடிந்து குழந்தை இல்லாத காரணத்தால், அவளது கணவன் வேறு பெண்ணை இரண்டாவதாக திருமணம் முடித்து சென்றுவிட்டான்.

தாய்வீட்டிற்கு தஞ்சமாக வந்தவளுக்கு யாரும் ஆதரவு தருவார்கள்.உறவுகள் ஒதுங்கிவிட்ட நிலையில் தாயும் மகளுமாக தனியாக சிறிய வீட்டில் வாழ்கின்றனர்.

இவள்தான் தன் நிலையை விடுத்து மீராவின் நிலையை எண்ணி கலங்குகிறாள்.

தனது பேக்டரியில் எல்லாவற்றையும் ஒரு முறை சுற்றி பார்த்து வந்து அமர்ந்தவனின் அறைக்கு அழைத்த ரிசப்னிஸ்ட் “சார் போலீஸ் கமிஷனர் உங்களை பார்க்க வந்திருக்காங்க”என்ற தகவலை சொன்னாள்.

அதைக்கேட்டவனுக்கு உதட்டோரம் நக்கல் சிரிப்பு லேசாக வந்தது.

அந்த சிறுபுன்னகையுடனே”அவரை உடனே உள்ள அனுப்பு”என்று கட்டளையிட்டு வைத்துவிட்டான்.

அறையின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும்”எஸ் கம் இன் ” என்றவன் வாயிலை நோக்கி பார்த்திருந்தான்.

கமிஷனர் உள்ளே வந்தவர் நேரடியாக அவன் முன்பிருந்த சேரை இழுத்து போட்டு அமர்ந்தவர்”ராஜூ பாய் யாதவ் பாண்டே எங்க”

தன் கண்களை சுருக்கி என்ன கமிஷனர் சார் நான் என்ன சி.பி.ஐ.யா என்கிட்ட வந்து அந்த வி.ஐ.பிய வந்து கேட்குறீங்க”

“இரண்டுமாதம் வரைக்கும் உங்களோட மிஸினஸ் டீலில் இருந்தவன்.இப்போ ஆளும் கட்சியின் முக்கியமான ஆளாக இருக்குறவன்.அவனை நேத்து ராத்திரியில் இருந்து காணவில்லை.

உங்களுக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை”

“ஹஹஹஹ”

“ராஜூபாய் சிரிக்கறதுக்காக சொல்லவில்லை”

அது தெரியும் சிட்டீ கமிஷனருக்கு என்கிட்ட வந்து ஜோக் சொல்லவேண்டும் என்ற வேலையில்லையே.

குற்றவாளிகளை கண்டுபிடிக்குற வேலை இருக்கும் அத போய் பாருங்க”என்று வாசலை நோக்கி கை நீட்டினான்.

இடத்தை காலிபண்ணுங்க சார் என்ற ரீதியில் பார்த்தும் வைத்தான்.

அதற்குமேல் அங்கிருக்க கமிஷனர் என்ன அறிவில்லாதவரா எழுந்து சென்றுவிட்டார்.

மனீஷ் அப்போதுதான் உள்ளே நுழைய கமிஷனர் வெளியே வர இருவரும் ஒருவரையொருவர் சீறிப்பார்த்துக்கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *