தொடாமலே சுடுகிறாயே சுந்தரா
அத்தியாயம்-29
அவினாஷ் ராஜூபாயை தோற்கடிப்பதற்கும் அரசியலில் இருந்து ஓடவைப்பதற்கும் மீண்டும் ஒருத்தனை ராஜூபாய்க்கு எதிராக நிற்கவைத்தான்.
அரசியலில் ராஜூபாய் நுழைந்தால், அங்கும் நமக்கு பிரச்சனையாக வருவான் என்று சில முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் சேர்ந்து, தனித்தனியாக கட்சியின் பெயர் வெளியே தெரியாதளவிற்கு பணங்கொடுத்து சுயேட்சையாக தங்களது ஆட்களையே நிற்க வைத்தனர்.
பலபேர் நிற்கும்போது கண்டிப்பாக ஓட்டுக்கள் சிதறியாவது ராஜூபாய் வெற்றியடையக்கூடாது என்று திட்டம் போட்டு வேலை செய்தனர்.
ராஜூபாயிற்கும் கோபமெல்லாம் பிய்த்துக்கொண்டு வந்தது.இருந்தாலும் இது தனக்கு கீழ் இருக்கும் தன்னுடைய தொழில் அல்லவே.
இதில் மெது மெதுவாகத்தான் அடியெடுத்து பழகி பின் காலூன்ற வேண்டும் என்று நிதானித்தான்.
அந்த நாட்களிலெல்லாம் மீரா ராஜூபாயின் அருகில் செல்லவே பயப்படுவாள்.அவன் அவ்வளவு கோபத்தில் இருப்பான் முகத்தினை கண்டே உணர்ந்துவிடுவாள்.
ஆனால் அவனோ தன் மனைவி மகனை தவிர்க்காமல், என்ன கோபதாபங்கள் வெளியுலக வருத்தங்கள் இருந்தாலும், மனையின் அருகில் அவள்மேல் கைப்போட்டுக்கொண்டு படுத்து அமைதியாகிவிடுவான்.
மீராவிற்குமே எங்கே தான் கோபத்தில் பேசிவிடுவோமோ என்று சிலநேரம் யோசித்து அமைதியாகிவிடுவாள்.
அவனுமே தன் கோபத்தை மனைவிமேல் காண்பித்துவிடக்கூடாது என்று வாயே திறப்பதில்லை.
ஒருவருக்காக மற்றவர் யோசிக்க ஆரம்பித்ததே இருவரின் காதலை சொல்லாமலே இறுகபிடித்து வைத்திருந்தது.
களிமண்ணாய் இல்லாது பாறையாக காதல் இருக்கும்போது யாரும் அதை அவ்வளவு எளிதில் தட்டி உடைக்கமுடியாது.அவர்களின் அன்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்தது.
அரசியலில் ஜெயிக்கவேண்டுமென்றால் பணபலம் வேண்டுமென்று ஏற்கனவே புரிந்து வைத்திருந்தததால் நிறைய செலவு செய்தான் அவனிடம் இல்லாத பணமா!
எதிரிகள் செய்ததைவிட அதிகமாக செலவு செய்தான்.
தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் தெரியும் நாளன்று வெளியே கிளம்பினான்.
கிளம்பும்போதுதான் மீரா அவனது வலது கையை பிடித்திழுத்து”சட்டென்று அவனது கன்னத்தில் கடித்து வைத்து முத்தம் கொடுத்து…வாழ்த்துக்கள் எம.எல்.ஏ.ராஜூபாய்”
அதைக்கேட்டதும் அவனுக்கு அப்படியொரு மகிழ்ச்சி.தாதா, டான் என்று அழைக்கும்போது இருக்கும் நெருடல் இப்போது இல்லை.
சட்டென்று மீராவை தன் உயரத்திற்கு தூக்கி அவளின் மூக்கின் நுனியை கடித்து “நன்றி மிர்ச்சி” என்றான்.
ஐயோ வெள்ளை வேஷ்டி சட்டை கசங்கி அழுக்காகிடும் என்று மீரா சத்தமிட்டு இறங்கப்போனவளிடம்”இருக்கட்டும் மிர்ச்சி அழுக்கானால் வேற மாத்திக்கலாம்”என்று அவளின் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைத்து கொஞ்சியவனுக்கு நேரமாகியதும்…அவளை இறக்கிவிட்டான்.
“மிர்ச்சி முக்கியமான வேலைக்கு போகும்போது இப்படிவராத மிர்ச்சி…வேற எண்ணங்கள் எல்லாம் வருது”என்று கண்ணடித்து சிரித்தவன், அப்படியே அவளது கன்னத்தை கிள்ளிவைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
வாக்கு எண்ணிக்கை எண்ணும் இடத்திற்கு சென்றவன்,அங்கு தன் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தவனை யாஷ்பவார்தான் கொலைகாண்டில் பார்த்திருந்தான்.
“எ மதராஸி வாலா இதர்பே நஹி ஜீத்னேஹா.ஹம்லுக் மராத்திலுக் இஸ்கோ பேர் நஹி பட்னேக்கா.ஹெஸ்ஸே பி அம்லுக் ஜீத்தேஹா”என்று பக்கத்தில் இருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தான்.
முடிவு வெளியேற வெளியேற யாஷின் முகம் அஷ்டகோணலாக மாறியது.
ராஜூபாய்தான் வெற்றிபெற்றான் என்று அறிந்ததும் அவசர அவசரமாக வெளியேறிவிட்டான்.
அதற்குள் தன்னுடைய வெற்றி சான்றிதழை வாங்கிக்கொண்டு வெளியே வந்தவனை கட்டிப்பிடித்து சந்தோஷமாக கூச்சலிட்டான் மனீஷ்.
அவர்கள் இருவைரையும் சேர்த்து அணைத்தான் ஷாகில்.
மொத்தமாக மூன்று பேரும் சந்தோஷத்துடனே தங்களது காரில் ஏறி வீட்டிற்கு வரும் வழியில் அவர்களை காரை கிட்டதட்ட பத்து கார் வழிமறித்து சுற்றி வளைத்தது.
ராஜூபாய்தான் அதைப்பார்த்து தன் நெற்றியில் கைவைத்தவன்”ஊப்ஸ் எம்.எல்.ஏ ஆனாலும் நம்மளை மறுபடியும் தாதா தொழிலையே செய்ய வைத்திருவான்க போலவே” என்று எண்ணியவன்.
டிரைவரிடம் வண்டியை நிறுத்தாமல் ஓட்டச் சொல்லியவன், அவனே காரின் முன்பக்கம் வந்து டிரைவரை நகர்த்திவிட்டு தான் அமர்ந்துகொண்டான்.
காரில் இருந்த அத்தனை பேரும் சீட் பெல்ட்டை போட சொல்லியவன், அவன் கவனமாக இருக்கச் சொல்லிவிட்டு காரை இன்னும் வேகமாக ஓட்டினான்.
அவ்வளவுதான் காரின் வேகம் நுற்றிருபதை தாண்டி போய்க்கொண்டிருந்தது.
எப்படி சென்றாலும் பத்து கார்களும் அவனது காரினை முன்னும் பின்னும் அணைபோட்டு தடுத்தனர்.
ராஜூபாய் சில நொடி யோசித்தவன் காரினை சிட்டிக்குள் விடாமல் ஹைவேஸின் வழியாக தன்னுடைய ஃபேக்ட்டரி இருக்கும் பகுதிக்கு காரை ஓட்டிச் சென்றான்.
அவனுக்கும் தெரியும் சிட்டிக்குள் வைத்து எதுவும் பண்ண இயலாது
இப்பொழுது தனக்கு என்று ஒரு இமேஜ் உருவாகி விட்டது. அது எம்எல்ஏ என்ற பதவியிலிருந்துகொண்டு எது செய்தாலும், அது அவனுக்கு எதிராக வந்து நிற்கும் என்பதால் அந்த சில நொடிகளில் திட்டம் போட்டு விட்டான் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று.
காரினை ஆட்களில்லாத இடமாக ஓட்டிச்சென்றான் அவனுக்குப் பின்னாக அந்த கார்களும் வந்துக்கொண்டிருந்தது.
அதன்பின்தான் ராஜுபாயின் ஆட்டம் தொடங்கியது. ஒற்றே இடியில் வலதுபக்கம் இருந்த கார் அப்படியே சரிந்து விழுந்து விட்டது….
அதுபோல்தான் இடது பக்கம் இருந்தகாரையும் வேகமாக இடித்தான்.இடித்த வேகத்தில் அந்த கார் நொருங்கி அருகிலிருந்த மரத்தின் மீது இடித்து தீபிடித்தது.
இதைப் பார்த்ததும் மற்ற கார்கள் மெதுவாக பின்வாங்கியது… ஆனாலும் ராஜுபாய் சும்மா விட்டானில்லை. தன் காரை எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக செலுத்த முடியுமா வேகமாக செலுத்தினான்.
அதில் நான்கு கார்கள் அவன் காரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னாக நகர்ந்தது.
முன்பக்கமாக சென்றுகொண்டிருந்த கார் அவன் இடிக்க செல்வது போல் வேகமெடுத்து ஓட்டவும், ஒதுங்கி வழிவிட்டு நின்று விட்டனர்.
அதைக்கண்ட இவர்களை சும்மா விடக்கூடாது ஒதுங்கி போனாலும், சும்மா இருந்தவனை சீண்டி விட்டுட்டானுங்க, இவனுங்களுக்கு ஒரு பாடம் எப்படி கத்துக் கொடுக்கணும்,இல்லைனா நம்மளை வாழவிடமாட்டார்கள் என்று போன வேகத்தில் சடாரென யூடேர்ன் எடுத்து மீண்டும் வந்தான்.
வந்த வேகத்தில் ஒரு காரை இடித்தான், அந்த வேகத்தில் அது முட்டி மோதி பாலத்திலிருந்து கீழே விழுந்தது.
அதற்குள் மீதியிருந்த கார்கள் எல்லாம் காணாமல் போகிருந்தது.
அவர்களின் எண்ணமெல்லாம் எப்படியென்றால் ராஜூபாய் திருந்தி அரசியலுக்கு வந்துவிட்டதாக எண்ணினர்.
அவனே தொழிலிலிருந்து விலகி தன் மேலான இடத்தில் இருந்தால் மட்டுமே வேறு பிரச்சனைகள் வராது என்று நினைத்து முடிவெடுத்து அரசியல் வந்தவன்.
அதை எப்படி மறப்பான் தனக்கு பாதுகாப்பு என்று வரும்போது ராஜூபாய் இறங்கி வேலை செய்வான் என்று அறியாது போயிற்று.
இப்போது இறங்கி செய்து மற்றவர்களை ஓட ஓட விரட்டிவிட்டான்.
உடனே யாஷ்பவாருக்கு அழைத்தவன் “உங்கப்பான் போன இடத்துக்கே உன்னையும் அனுப்பி வைக்க எனக்கு ரொம்ப நேரமாகாது.ஷ்ரேயாவை நினைத்துதான் உன்னை விட்டு வைத்திருக்கேன்.இனியும் என்னோட விஷயத்தில் தலையிட்டனு தெரிந்தது…கடலில் சுறாவிற்கு இரையாகபோட்டிருவேன்.யாரென்று நினைத்த ராஜூபாய் தீ ஜாக்குவார்”என்று போனை வைத்தவன் காரை வீட்டை நோக்கி ஓட்டினான்.
அதில் டிரைவர் அரண்டு மயங்கியே விழுந்துவிட்டான்.அவனுக்கு ராஜூபாயை பற்றி தெரியாது புதியதாக வேலைக்கு சேர்ந்திருந்தான்.
அவனை தூக்கி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்தனர்.
அதற்குள் ஸ்ரேயாவும் வைஷூவும் வீட்டிற்கு வந்திருந்தனர்.ராஜூபாயின் வெற்றியை கொண்டாடுவதற்கு.
ஆனால் கார் நசுங்கி நெளிந்து இருப்பதை பார்த்து எல்லோருக்குமே அதிர்ச்சிதான்.ஆனால் யாரும் எதுவும் கேட்கவில்லை.
வீட்டினுள் வந்தவனை காண ஏற்கனவே கட்சியிலிருந்தும் பெரிய பெரிய ஆட்கள் வாழ்த்துக்கள் சொல்லவும் வந்திருந்ததால் வேறு எதுபற்றியும் பேசமுடியாது குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர்.
ராஜூபாய் வெளியே எல்லோருடனும் இருக்க இங்கு மனீஷூம் ஷாகிலும் என்ன நடந்தது என்று படம்போட்டு விளக்கிக்கொண்டிருக்க…அதைகேட்டு மீராவிற்கு அவ்வளவு வலித்தது.
இந்த மனுஷன் நம்மகூட சந்தோஷமா நல்லவாழ்வாங்கன்னு நினைத்தால் இப்படி கார் ரேஸ் செய்து சண்டைபோட்டு வந்திருக்காரு என்று வந்த கோபத்தை அடக்கி வைத்தாள். எப்போது அவனோடு பேசுவதற்கு தனிமை கிடைக்குமென்று.
எல்லா வெற்றிகொண்டாட்டங்களும் முடிய நல்லிரவு
வேளையாகிற்று…நேராக வீட்டினுள் வந்தவனை முதலாக ஸ்ரேயா வரவேற்றாள்”ஹாய் ஜீஜூ வாழ்த்துக்கள்.அடுத்து சி.எம் போஸ்ட்டுக்கே போட்டி போடுங்க.எங்க ஜீஜூ முதல்வரானா எனக்கு பெருமைதான.நாங்க அப்படியே காலரை தூக்கிவிட்டு சொல்வோம்”
“ஓகே டன்…நீ சொன்னால் அப்பீலே இல்லை.அங்கேயும் காலை ஊன்றிவிடுவோம்” என்று மீசை முறுகியபடியே வந்தமர்ந்தவனை தன் முட்டைக்கண்ணால் முறைத்துக்கொண்டிருந்தாள்.
ராஜூபாய்தான் இவ எதுக்கு இப்படி முறைத்துக்கொண்டு போகிறாள் என் நினைத்தவன்,அதை கண்டுக்கொள்ளாது ஷாகில் மனீஷ் இருவரது குடும்பமும் அங்கிருப்பதால் அமைதியாக இருந்தான்.
அதில் இப்போது வைஷூவிற்கு ஏழுமாதம் என்பதால் வளைகாப்பு எப்படி வைப்பது என்று பேசிமுடித்துவிட்டு, இரவு உணவையும் முடித்து அவர்கள் கிளம்பி சென்றபின்தான் கணவன் மனைவிக்கு தனியாக பேச நேரம் கிடைத்தது.
அதற்குள் மகன் அழவும் அவனை சமாதானப்படுத்தி தூங்கப்போட்டவள் இருந்த கோபத்தில் வந்து அவனது மேல் பொத்தென்று விழுந்தாள்.
“அதை எதிர்பார்க்காத ராஜூபாய் என்னடி மிர்ச்சி இப்படி வந்து விழுற என்னவாகிட்டு…முறைச்சிகிட்டே இருக்க…ம்ம்ம்”
சட்டென்று அவனது மீசையை வலிக்க பிடித்திழுத்தவள்”என்னயா மனுஷன் நீ.இப்போதான் மனைவி பிள்ளையென்று வாழ ஆரம்பித்திருக்க, அதுக்குள்ள மறுபடியும் கார் ரேஸ் சேஸிங்குன்னு இப்படி அதகளம் பண்ணி வைத்திருக்க.உடம்பெல்லாம் பதறுது அதைகேட்டு…கொஞ்சமாவது அறிவிருக்கா” என்று பழைய மீராவாக அவன் எதிர்பார்த்த காரம் நிறைந்த மிர்ச்சியாக அவனையே கண்டிப்பவளையே ஆசையாக பார்த்திருந்தவன்.
அடியே மிரச்சி எப்.எம் கொஞ்சம் நிறுத்துறியா…என்றவனைப் பார்த்து மீண்டும்”என்னது எஃப்.எம்மா..நான் பயந்து பதறி பேசுறது அப்படியா இருக்கு உனக்கு” என்று மரியாதையெல்லாம் காற்றில் பறக்க பேசியவளின் வாயை தன் வாயால் அடைத்து மிர்ச்சி எஃப.எம்மை நிறுத்தியிருந்தான்.
மீராவோ அதில் அதிர்ந்து தன் கண்களை விரித்தவள் அவனின் தோளில் அடித்தாள். அவன் தன் ஒற்றை கரத்தினால் பிடித்து நிறுத்தியவன் மெல்ல மெல்ல அவளின் இதழில் தன் வன்னெழுத்து கவிதையை எழுதிக்கொண்டிருந்தான்.
கோபத்தில் சிறிது முரண்டினவள் பின் மெல்ல மெல்ல தன் கண்கள் கிறங்கி, அவனின் கைகளில் குழைந்தாள்.
அதுதானே அவனுக்கு வேண்டும் மெல்ல அவளது காதில் மிர்ச்சி இந்த காரம்தான் செமயா மூடேறுது தெரியுமா என்றதும்…
தன் தலைதூக்கி அவனை பார்த்து முறைத்தவளின் இரு கன்னத்தினையும் தன் ஒற்றை கரத்தினால் பிடித்து அழுத்தவும், லேசாக இதழ்கள் தானாக திறந்தவளின் வாயிற்குள் தன் நாக்கினை விட்டு அவளது நாக்கினை பிடித்துக்கொண்டான்.
இதழின்தேனை மெல்ல மெல்ல உறிந்தவன் தன் வாயை அசைத்து இழுத்தான்.
இருவரின் தொண்டைக்குழிகளும் ஏறியிறங்கி தன் உணர்வுகளை விழுங்கி இதழமுதம் பருகி காதலின் சுவையை அறிந்துக்கொண்டிருந்தனர்.
மீரா இரவு உடையில் இருந்தாள் ராஜூபாயிற்கு இன்னும் வசதியாக போய்விட்டது.
முன்பக்கமிருந்த ஸிப்பினை இழுக்க அது அவனுடைய கையோடு வந்துவிட்டது.
அதைப்பார்த்தவள் இதுதான் உங்க டக்கா சார்…இப்படிதாதன் ட்ரஸை கிழித்தெடுப்பீங்களா.
உங்க மகன் படுத்தறது போதாதென்று நீங்க வேறயா என்று அவனது கையை தட்டிவிட்டாள்.
கையை தட்டிவிட்டதும்தான் இன்னும் அவள்மேல் போதையேறி ஆக்ரோஷமாக இழுத்துபிடித்து இறுக அணைத்துக்கொண்டான்.
அந்த அணைப்பில் அவளது எலும்பு நொருங்கிவிடும்போல் உணர்ந்தாள்.அவ்வளவு வலிமையான பிடியாக இருந்தது ராஜூபாயோடது.
அப்படியே மீராவினை அந்த நைட் ட்ரஸ்ஸையும் உருவியவனின் கண்முன் தன் கைகளை மட்டுமே வைத்து மேல்பக்கம் மறைத்திருந்தாள்.
அருகே சரிந்துபடுத்து மீராவின் நெற்றியிலிருந்து தன் உதட்டினால் முத்தம் வைக்கத் தொட்ஙகினான்.
அவளோ நிமிர்ந்து படுத்து தன் வலது காலை மடக்கி குற்றுகாலிட்டிருந்தவள் அவனிடம் முத்தத்திலும் அவனது உதட்டின் வெப்பத்திலும் பொங்கி பிரவாகித்து நீருற்றைப்போல உரண்டு பிரண்டாள்.
ராஜூவிற்கோ பேச்சுக்களற்ற இந்த ஏகாந்த நிலைதான் மிகவும் பிடிக்கும்…எனவே எந்த வார்த்தை பிரயோகமும் இல்லாது தன் உதட்டினை அவளது உடலளப்பதற்கு மட்டுமே என்ற முடிசெய்தவனாக அங்குலம் அங்கலமாக ஆய்ச்சி செய்த்தான்.
கன்னம் கிள்ளியவன், காதை கடித்து இழுத்து தன் மூச்சுக்காற்று அவளுக்கு கேட்குமாறு உராசிக்கொண்டான்.
அப்படியே கழுத்து எனும் சருக்கிமரத்தில் வழுக்கிக்கொண்டு கண்ணாடி தொண்டையில் முத்தம் வைத்து கீழாக இறங்கினான்.
இரு இளவம்பஞ்சு காய்களும் அவனுக்கு கண்ணுக்கு விருந்தளித்ததும், அது தன் நாக்கிற்கும் வேண்டுமென்று மெல்ல தன் வாயை விரிவாகத்திறந்து அழுத்தி கடித்து உள்ளாக இழுத்து வைத்து சுவைக்க ஆரம்பித்தவனின் வாயெல்லாம் இனித்தது.
அமுதூறும் கலசங்கள் இரண்டும் அவனின் நாச்சுவையை இன்னும் கூட்டியது.
தங்கத்தாமரையாள் தன் கணவனின் கரம் பற்றி இழுத்து இன்னம் தன் மார்புக்கூட்டில் புதைத்து பொத்தி வைக்க முயற்சி செய்தாள்.
இருநெஞ்சமும் ஒன்றோடொன்று மோதி அழுத்தி இணைந்துக்கொண்டது.
தன் வலியக்கரத்தினால் அப்படியே அவளது இடுப்பின் வளைவில் ஓடவிட்டவன்.
பெண்ணவளின் மத்தளங்கள் இரண்டையும் பிடித்து தாங்கி, இணையோடு உயிராக இணைவதற்கு மீராவின் காலினை தன் இடுப்பில் தூக்கி போட்டுக்கொண்டான்.
அப்படியே சிற்றிடையாளை தன் கைகளில் வாழையிலையாக ஏந்திக்கொண்டு, அவளுள் பட்டென்று படுவேகமாக நுழைந்தான்.
அவ்ளவுதான் மீரா தன்னை மொத்தமாக இழந்து, தன் நட்சத்திர கண்கள் மின்ன தன் கணவனை மயக்கும் பார்வை பார்த்து வைத்தாள்.அதில் அவனது நரம்புகள் முறுக்கேறி தன் அசைவுகளை வேகப்படுத்தினான்.
அந்த ஜாக்குவார் எப்போவும் அந்த சிறு பெண்ணின் கண்ணசைவில் கண்டுண்டுதான் கிடக்கின்றான்.
மனையாளினின் அன்பிற்கு அடங்கிப்போகின்றான் கட்டிலில் தனியறையில்.
தன் குடும்பம், தன் பிள்ளை, தன் மனைவியென்று வரும்போது சீறும் சிறுத்தையின் வேகமட்டும் சிறிது தணிந்து போகின்றது.
இருவரின் உடல்களும் ஒன்றையொன்று அசைத்து அசைத்து உரசி சிக்கிமுக்கி கற்களாக மோகத்தீ பறக்க தீண்டி தீண்டி வியர்வையில் குளித்து…தேகத்தின் தீயை அணைக்க முயல…ம்ஹூம் அதுவோ பற்றியெறியும் மூங்கில் காடாக இன்னும் இன்னும் அதிக வேகத்தில் எறிந்துக்கொண்டிருந்தது.
மீராவோ தன்னவனின் அத்தனை செயல்களையும் சுகமாகத்தாங்கி உச்சம்பெற்று அவனின் நெஞ்சோடு சாய்ந்து படுத்துக்கொண்டாள்.
இதுதான் ராஜூபாய்க்கான ஏற்ற வாழ்க்கை…அதை அவன் நிறைவாக வாழ பழக ஆரம்பித்தான்.
அடுத்து வந்த வாரத்தில் ஒரு நல்ல நாளில் வைஷூவிற்கு வாளைகாப்பு வைத்தனர்.அதில் அவளது அண்ணன் தம்பிகளை அழைத்திருந்தனர்.
எந்த பழைய வாழ்கையில் அவளுக்கு குழந்தை இல்லையென்று அவளை கைவிட்டவனோ, இரண்டாவது திருமணம் செய்து குழந்தை இல்லாது பிரச்சனைகளில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றான்.வைஷூவிற்கு கிடைத்த நல்ல வாழ்க்கையை நினைத்து மனதிற்குள் புழுங்கிக்கொண்டிருக்கின்றான்.
வளைகாப்பு நல்லவிதமாக முடிந்து,எல்லோரும் வீட்டிற்கு கிளம்பும் போது ஸ்ரேயா மயங்கிவிழுந்தாள்.
அவ்வளவுதான் மனீஷ் உயிரே போனதுபோன்று உணர்ந்து பதறினான்.
ராஜூபாய்தான் தைரியமாக அவளை தன் மகளைப்போல தூக்கிக்கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தான்.
மருத்துவர் பரிசோதித்துவிட்டு நல்ல செய்தியாக சொன்னதற்கு பின்தான் மனீஷ் தன் நெஞ்சில் கைவைத்து ஹப்பாடா என்று உணர்ந்தான்.
அதைப்பார்த்த ராஜூபாயும் மீராவும்தான் சிரித்தனர்.சோட்டூ இன்னும் சோட்டூவாகவே இருப்பதால் சிரித்தனர்.செய்கின்ற வேலையை சரியாக செய்துவிட்டு இப்போது ஒன்னும் தெரியாது போல் பயந்து இருக்கின்றானே என்றுதான் நினைத்து சிரித்தனர்.
அடுத்த மூன்றே மாதத்தில் ஷாகில் வைஷூவிற்கு ஆண்குழந்தை பிறந்தது.
அடுத்த ஏழுமாதத்தில் மனிஷ் ஸ்ரேயாவிற்கும் ஆண்குழந்தை பிறந்தது.
குழந்தை குட்டி என்று வந்தபின்தான் வாழ்க்கை அவ்வளவு வேகமாக அவர்களுக்கு சென்றது.
அதுவும் ராஜூபாயிற்கோ நிற்க நேரமில்லாது சென்று கொண்டிருக்கிறது.
இப்போது அவன் தொழில்துறை அமைச்சர்.எப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்றான்.யாஷ்பவாரின் மொத்த அரசியல் வாழ்க்கையும் அஸ்தமனம் செய்ய என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்து வைத்து விட்டான்.
அன்றிரவு கிட்டதட்ட இரண்டு மணிக்குமேல் மெல்ல தன்னறையின் கதவை திறந்தவன் மனைவியும் மகனும் தூங்கிக்கொண்டிருக்க கண்டவன் பூனைபோல் நடந்து உடைமாற்றியவன்,அப்படியே வாஷ்ரும் சென்று குளித்துவிட்டு வெளியே வர வாசலிலயே கோபத்தில் தன் கண்ணை உருட்டி இதுதான் வீட்டிற்கு வரக்கூடிய நேரமா? என்று கேடுடவளை கண்டுக்காது அமைதியாக கட்டிலில் சென்று கண்ணை மூடி படுத்து விட்டான்.
“அதைக் கண்டவன் நான் இங்க ஒருத்தி பேசிகிட்டு இருக்கேன் என்னன்னு கண்டுக்காம போய் படுத்துட்டீங்க.என்னை பார்த்தால் எப்படி தெரியுது ஆஹ்ன்”
“தன் கண்ணை திறந்து பார்த்தவனை நோக்கி”இங்க இரண்டு ஜீவன் இருக்கமே, உங்களுக்கு அது ஞாபகம் இருக்கா? இல்லையா?”
“மிர்ச்சி தூக்கம் வருதுடி”
அதில்கொஞ்சம் பேச்சினை குறைத்தவள் அவனருகில் வந்து படுத்துக்கொண்டு ஏதோ பேசிக்கொண்டிருக்க சட்டென்று அவளிடம் திரும்பி அவளது வாயை தன் வாயால் அடைத்துவிட்டான்.
அவள் எப்போதெல்லாம் அதிகமாக பேசுகின்றாளோ அப்போதெல்லாம் அவளது வாயினை அடைக்கும் முறையை அவன் சரியாக செய்துவிடுவான்.
மீராவும் அதில் அப்படியே அடங்கிவிடுவாள்.
கிட்டதட்ட ஐந்து வருடம் கழித்து அந்த வீடே வீழாக்கோலத்தில் இருந்தது.
அன்று ராஜுபாய் மீராவின் இரண்டாவது குழந்தையான ஆதிராவின் முதல் பிறந்தநாள்.அந்த விழாவினை பெரிதாக கொண்டாடுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தான்.
மற்ற இருவருக்கும் இரண்டாவது ஆண் குழந்தைகள் பிறந்திருக்க,அந்த வீட்டின் முதல் பெணாகுழந்தையாக ஆதிரா பிறந்தாள்.
ராஜூபாயிற்கும் மனீஷிற்கும் தங்களது அம்மாவே மகளாக பிறந்ததுபோல் கொண்டாடி தீர்த்துவிட்டனர்.
மீராவோ தன் மகளை தயாராகி ஸ்ரேயாவின் கையில் கொடுத்து விட்டு, உடை மாற்றுவதற்கு அறைக்குள் நுழைந்தவள் அங்கு வந்த ராஜுபாயை பிடித்துக் கொண்டாள்.
என்றைக்கு ராஜூபாய் அரசியலுக்குள் நுழைந்தாரோ, அன்றோடு அவரை நான் தொலைத்துவிட்டேன்.ஆடிக்கொருமுறைதான் பார்க்க முடியுது.
காலையில் இருந்து உங்களை தேடுறேன் கண்ணுலேயே மாட்டல இப்பத்தான் வந்திருக்கீங்க. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க என்று கையை மடித்து அவனிடம் கேள்வியாக கேட்டு அருகில் சென்றாள்.
அவள் கோபத்தில் இருக்கும் போதெல்லாம் என்ன செய்வானோ அதை தான் இப்பவும் செய்தான். மிர்ச்சி கொஞ்சம் உன் எஃப்.எம்மை ஆஃப் பண்ணு என்றவன் வாயை கடித்து வைத்தான்.
அதில் அவனை தள்ளிவிட்டவள்” இப்படியே எஃப்.எம். ஆஃப் பண்ணு என்று சொல்லி சொல்லியே இரண்டாவது பாப்பா வந்தாச்சு. போதும் இனி தாங்காது என்று அவனிடம் இருந்து கையை விடுவித்து வெளியே சென்றாள்.
இப்போதும் அவசரத்தில் ஏதாவது பேசி விடுவாள். அதில் முக்கியமாக அவனது அன்பிற்கு ஏங்கியதாகவே இருக்கும் என்பதால் அவளினை பொருமையாக சரியாக கையாளத்தெரிந்திருந்தான்.
ஆதிராவின் பிறந்த நாள் விழா அவ்வளவு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
அன்றிரவு தன் மனைவி இரு பிள்ளைகளும் படுத்து இருக்க அதை கட்டிலில் ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான், பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
இந்த வாழ்க்கை தனக்கு கிடைக்குமென்று அவன் கனவிலும் நினைத்தானில்லை.
அவனது வாழ்க்கை இப்போது தெளிந்த நீரோடையாகசெல்கின்றது.
அரசியலில் அவன் இன்னும் இன்னும் வளர்ந்து இப்போது முதலமைச்சர் கேண்டிடேட்டாக இருக்கின்றான்.அதிலும் வெற்றி பெறுவான்.
ஆனால் அவன் தினமும் தோற்றுப்போகிற ஒரு இடமெனில் அது தன் மனைவி மீரவிடம் மட்டுமே…அவள் தன் மிர்ச்சி எஃப்.எம் தொடங்கிவிட்டால் ராஜூபாய் அப்படியே அடங்கி அவளிடம் தோற்று வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றான்.
அவர்களது வாழ்க்கையில் எல்லாவளமும் பெற்று இன்னும் அரசியல் வாழ்க்கையில் உச்சம் தொடுவான்.
வாழ்க வளமுடன்
