தொடாமலே சுடுகிறாயே சுந்தரா
அத்தியாயம்-11
அர்ஜுனும் ராஜூபாயும் தரையில் அருகருகே அமர்ந்து ஒருத்தர் தொடையில் ஒருத்தர் கைவைத்து அடித்து பேசிக்கொண்டு தங்களது கையலிருந்த டிரிங்க்ஸை குடித்துக்கொண்டிருந்தனர்.
ராஜூவின் வாழ்க்கையின் முக்கியமானவன் அர்ஜூன்.உயிர் நண்பன் பதினைந்து வயதில் வாழ்கையில் அவன் செய்த செயலின் விளைவாக வாழ்வின் மரணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தபோது ஆபத்பாந்தவனாக வந்தவன்தான் இந்த அர்ஜூன்.
அதனால் அர்ஜூன் என்றால் எப்போதும் ராஜூபாய் அடங்கிபோய்விடுவான்.
அதைவிட அர்ஜானிற்கு ராஜூபாய் என்றால் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுத்துவிடுவான்.
அர்ஜூன் சிறுவயதிலிருந்தே படிப்பின் மீது நாட்டம் கொண்டவன் என்பதால் தன் தொழில் தன்னோடு போகட்டும் என்று அர்ஜூனை படிக்கவைத்தான்.
மும்பையில் இருக்கும் வரைக்கும் இருவரும் தொழிலிலும் ஈடுபட்டனர்.அதே அர்ஜூன் படிக்கவும் செய்தான்.
மொத்தமாக ராஜூவினோடு தாதாஅரசியலில் ஈடுபடவும்,
அதுவேண்டாம் என்று அர்ஜூனை கட்டாயபடுத்திதான் வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பினான்.
ஷாகிலும் இவர்களோடு சிறுவயதிலிருந்தே இருக்கின்றான்.
அர்ஜுனோ எம்.காம் முடித்து அமெரிக்கா சென்று எம்.பி.ஏ படித்து முடித்தான்.
பின் இந்தியா வர எத்தனிக்க, ராஜூ அங்கயேதான் வேலைபார்க்கவேண்டும்,
இந்தியா வரக்கூடாது என்று சொல்லிவிட்டதால் வரமுடியாது வேலையை அங்கயே தொடர்ந்தான்.
ஒருகட்டத்தில் இங்குள்ள பிரச்சனைகள் பெரிதாக இருக்கவும்தான் இப்போது ராஜூவிடம் சொல்லாமல் வந்துவிட்டான்.
வேறுவழியின்றி ராஜூபாயும் அவனுக்கு வேலை வாங்கிகொடுத்தாகிற்று.
இப்போது இருவரும் அருகருகே நெடுநாளைக்குபின் அமர்ந்திருப்பதால்தான் அந்த குடியும் கூத்தும்.
அர்ஜூனை இந்த தொழிலில் இனி வரக்கூடாது என்று அவனிடம் சொல்லியிருந்தான்.அவனும் சம்மதித்துதான் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தான்.
நெடுநாளைக்குப் பின் அவ்வளவு சந்தோஷம் இருவருக்கும் ராஜூவும் அங்கயே படுத்து தூங்கிவிட்டான்.
கிட்டதட்ட ஒரு செமஸ்டர் முடிந்து,அடுத்த செமஸ்டர் ஆரம்பித்த அன்று கல்லூரிக்கு சென்ற மீராவிற்கு மனதில் ஏதோ நெருடலாகவே இருந்தது.
என்னவென்று தெரியாத ஒரு உணர்வு ஏதோ தவறாக நடக்கப்போகின்றது என்றே தோன்றியது.
வகுப்பில் இருந்தவளது கவனம் வேறொங்கோ இருக்க, அவளின் அருகில் வந்த அர்ஜூன் சட்டென்று அவளின் முன்பு புத்தகத்தை வைத்து பெஞ்சில் அடித்ததும் சட்டென்று உணர்வுக்கு வந்து திருதிருவென்று எழுந்து நின்றாள்.
அதைபார்த்த அர்ஜூனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை மறைத்துக்கொண்டு,
அவன் அப்போது நடத்திய பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கவும் “தெரியாது சார்”என்று அசடு வழிந்து நின்றவளின் அந்த முழியே அவனை என்னவோ செய்தது.
அர்ஜூனுக்கு தமிழ் தெரியுமென்று இன்னும் மீராவிற்கு தெரியாது.
அவன் அருகிலிருக்கும்போதே “நல்ல இங்கிலீஷ்ல தாலாட்டு பாடிட்டு அதுல இருந்து கேள்வி கேட்கவேண்டியது.
தூக்கத்தில் எங்கயிருந்து பதில் சொல்றது போயா” என்று முணுமுணுத்தவளை “வாட் டிட் யூ சே?”என்று திரும்பி பார்த்தவனை”நத்திங் சார்”என்றவள்
“போய் பிள்ளைகுட்டிகளை தூங்க வைங்க…வந்து எங்களை தூங்க வச்சிட்டு”தன் உதட்டை இழுத்து வைத்து சியித்தவாறே அமர்ந்தாள்.
உடனே அருகில் வந்து அவளிடம் “பிள்ளைகுட்டிகளை தூங்க வைக்க நான் ரெடி நீ ரெடியாக இருக்கியா?”என்று சட்டென்று தமிழில் கேட்டுவிட்டான்.
அவனது பதில் அதுவும் தமிழில் என்றதும் அப்படியே நெட்டியவள், பின் பக்கமாக சரிந்து விழப்போக அவளது கையை சட்டென்று பிடித்து நிறுத்தினான்.
மீரா முழிப்பதை பார்த்து அவனுக்கு அவ்வளவு சிரிப்பு வந்தது.
இப்போது மீராவின் மண்டைக்குள்ளாக இந்த ஆறுமாசமாக இவனை தமிழ்ல எப்படியெல்லாம் ஓட்டியிருப்பேன்.
அவ்வளவையும் கேட்டுவிட்டு அமைதியாக இருந்திருக்கானே அசிங்கப்பட்டாள் மீரா என்று அமைதியாக அமர்ந்தாள்.
அங்கு ராஜூபாய் அவனது தொழில் சகாக்களுடன் மீட்டீங்கில் இருந்தான்.
இப்போது வந்திருக்கும் ஆட்சி மாற்றத்தில் மந்திரி அவினாஷ் பவார் ரொம்ப பணம் கேட்கின்றான் என்று பிரச்சனைகளை கொண்டுவந்திருந்தனர்.
“அவனுக்கு இந்த கடத்தல் தொழிலில் பெட்டி பெட்டியாக பணத்தை கொடுத்துவிட்டு நம்ம என்ன செய்யமுடியும்…கொடுக்கமுடியாதுன்னு சொல்லுங்க” என்று ராஜூபாய் சொல்லவும் கூடியிருந்தவர்களில் ஒரு சிலருக்கு அது பிடிக்கவில்லை.
இந்த தொழிலில் முதலில் அரசியல்வாதிகள்தான் நமக்கு உறுதுணையாக இருப்பவர்கள்.
அவர்களை பகைத்துக்கொண்டால் அவ்வளவுதான் எனவே இது சரியாக வராது என்று கூட்டத்திலிருந்து எழுந்து செல்ல முயற்சிக்க அதை தன் தாடியை தடவியாவாறே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனது பார்வை மாற்றத்தை அறிந்தவர்கள் உடனே திரும்பி வந்து தங்களது இருக்கையில் அமர்ந்துகொண்டே முணுமுணுத்தானர்.
அந்தபார்வையின் அர்த்தம் அவர்களுக்குத் தெரியுமே இன்று எழுந்துபோனாள் நாளை உயிரோடு இருக்கமுடியாது என்று புரிந்ததினால் வந்து அமர்ந்தனர்.
“நம்ம கடலில் வந்து நிற்கிற கப்பலில் இருந்து சரக்கினை கைமாத்துறோம். அதைவிட என்னோட கப்பல் தனியாக இருக்கு அதில் வரும் வருமானத்திற்கும் எதுக்கு அந்த மந்திரிக்கு பணம் கொடுக்கணும்.
கஷ்டப்படுறது நம்மளும் நம்மகூட உயிரை பணயம் வைத்து வேலை செய்கின்றவர்களும்தான் இதில இவனுங்க பதவியில் இருந்தால் மிரட்டுவாங்களா.முடியாதுன்னு சொல்லிட்டு நம்ம வேலையை பார்க்கபோவோம் என்று மீட்டிங்கை முடித்து தன் ஆபிஸில் இருந்தவனுக்கு அடுத்த அரைமணி நேரத்தில் மந்திரி அவினாஷ் பவாரின் பி.ஏவிடமிருந்து அழைப்பு வந்தது.
ராஜூவின் செக்ரட்டரி வந்து போனை கொடுத்தாள்”சொல்லுங்க அனில் காம்பளே என்ன உங்க மந்திரி என்னை பார்க்கவேண்டும்னு சொல்றாரா”என்று கேட்டுவிட்டு மெல்ல சிரித்தவனிடம்”ராஜூபாய் உங்களுக்குத் தெரியாததா உங்களை அவரோட கெஸ்ட்ஹவுஸ் பங்களாவுக்கு வரச்சொல்லியிருக்காரு எதோ பேசவேண்டியதிருக்கிறதாம்”
“உங்க மந்திரிக்கிட்ட சொல்லிடுங்க ராஜூபாய்க்கு அதைவிட வேறுபல வேலைகள் இருக்கு பார்க்க வரமுடியாது என்று”
“சார் சார் ப்ளீஸ் வந்திடுங்க இல்லைனா ஏதாவது ஏடாகூடமா செய்து வைத்திடுவாங்க”
“என்னவேண்டுமானாலும் செய்யட்டும்.ராஜூபாய் யாரோட மிரட்டலுக்கும் பயப்படாதவன் தெரியும்தானே”என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.
உடனே எழுந்து ஹார்பர் சென்றவன் தனது கப்பலிலிருந்து சரக்குகளை வெளியே கொண்டுவர ஏற்பாடு செய்துவிட்டு வர மந்திரி அவினாஷின் மகன் யாஷ்பவார் போனில் அழைத்தான்.
“என்ன ராஜூபாய் எங்களுக்கு பணம் தரக்கூடாது என்று ஏதோ மீட்டிங் போட்டீங்களாம் அப்படியா”
“யார் நீ உனக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும்…போனை வை” என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.
அங்க அவினாஷ் மற்றும் அவர் மகன் யாஷ் பவாரும் தங்களது வீட்டில் கூடிபேசிக்கொண்டனர்.ராஜூவிடம் பயந்து இருந்த அந்த நாலைந்துபேரும் அங்கேதான் இருந்தனர்.
“அந்த ராஜூபாய் நம்ம மொத்த திட்டத்தையும் கெடுத்துவிடுவான் போலிருக்கு.அவன் நமக்கு பணம் தரவில்லையென்றால் கண்டிப்பாக மத்த பார்ட்டிகளும் பணம் தரமாட்டார்கள், அதுல அவனுக்கு மூணு கப்பல்வேற இருக்கு.அதுல கள்ளசரக்கு கொண்டுவந்தாலும் தெரியாது”
அவினாஷ் மகன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார். சிறிது யோசனைக்குப்பின் அவனை எப்படி வழிக்கு கொண்டுவரலாம்னு எதுவும் ஐடியா இருக்கா உன்கிட்ட.
“அவனுக்கு குடும்பமே கிடையாது இப்போதான் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒருத்திக்கூட கிசுகிசு வந்தது. காதலியோ என்னவோ பழகினவளா என்று தெரியாது.போன ஆட்சியிலிருந்த மந்திரியோட காலேஜ்ல தான் படிக்குறாள் போல”
“ஓகே அப்போ அவளை தூக்க சொல்லு நம்ம ஆட்களை வைத்து.மிரட்டுவோம் இப்பவே மிரட்டி வைத்தால்தான் சரியாகும்.இல்லைனா நம்மளை மிஞ்சி போய்டுவானுங்க.நம்ம ஒன்னும் சம்பாதிக்கமுடியாது வெறுங்கையோடத்தான் ஐஞ்சு வருஷம் முடிஞ்சு போகணும்”
ஓகேப்பா இன்னைக்கே முடிக்க சொல்லிடுறேன் என்று வெளியே வந்தவன், அவர்களுக்கு இப்படிபட்ட வேலைகளை செய்து கொடுக்கும் கையாளினை அழைத்து விவரத்தை சொல்லி விட்டான்.
மீராவின் போட்டோவை அந்த பத்திரிகையிலிருந்து தேடி எடுத்து அதையும் அவர்களுக்கு அனுப்பிவிட்டான்.
இங்கு கல்லூரி முடிந்ததும் அர்ஜூனை தனியாக அவனது இடத்திற்கே சென்று சந்தித்தவள் “சாரி சார் உங்களுக்கு தமிழ் தெரியும்னு எனக்குத்தெரியாது சார்”
அர்ஜுன்”தமிழ் தெரியாதுன்னா என்ன வேணாலும் பேசுவியா.தப்புதான மரியாதை இல்லாமல் பேசற…என்ன மாதிரி இருந்துட்டு கவுண்டர் கொடுக்குற.நான் பேசுற ஒவ்வொன்னுக்கும் நக்கலு..ம்ம்”
சாரி என்று முகத்தை பாவமாக வைத்து கெஞ்சினவளை பார்த்து மெதுவாக புன்னகைத்தவன்”என்னோட பேச்சு வெண்டைக்காய் மாதிரியா வளவளன்னு இருக்க…ம்ம் சொல்லு”
அப்படியில்லை சார்…அது உங்க இங்கலீஸ் கொஞ்சம் புரியறதுக்கு கஷ்டமாக இருந்தது.அதுதான் அதுக்கும் சேர்த்து சாரி என்றவளை பார்த்து…அதெல்லாம் சரி என் பிள்ளைகுட்டிக்கு தாலாட்டு பாட நீ தயாராக இருக்கியா?என்று ஒரு மார்க்கமாக கேட்டு வைத்தான்.
இதை மீரா எதிர்பார்க்கவில்லை.இந்த பேச்சு வளரக்கூடாதே என்று சாரி சார் நேரமாகிவிட்டது நான் வர்றேன் என்று நழுவி ஓடிவந்தவள் கல்லூரியின் வாயிலுக்கு வரவும் ஒரு கார் வந்து அவளை தூக்கிபோட்டுக்கொண்டு செல்லவும் சரியாக இருந்தது.
காருக்குள் போட்டதும் எம்பி துள்ளி எழுந்து பயந்து அலறியவளை பார்த்து “ஷாகில் அவளை வாயை மூடச்சொல்லுடா, இல்லைனா ஏதாவது துணி எடுத்து அவளோட வாயை மூடுடா இல்லைனா நம்மளை பேசியே கொன்னுடுவா” என்றான் ராஜூபாய்.
அந்த குரலை கேட்டதும்தான் மெல்ல தன் அலறலை நிறுத்தியவள் “மறுபடியும் எங்கடா என்னை கடத்திட்டு போறீங்க” என்று சத்தம்போட்டாள்.
ஷாகில் உடனே ராஜூபாயை பார்க்க”ஹான் உன் மாமன்க பின்னாடி உன்னை தூக்க வர்றானுங்க.அவனுங்க கையில மாட்டுனா மிர்ச்சி உன்னை ஊறுகாய் போட்றுவானுங்கன்னு,
அதுதான் உன்னை பத்திரமா முழுசா அன்புகிட்ட ஒப்படைக்க தூக்கிட்டேன்”
“லூசாடா நீ என்னை எதுக்குடா எவனோ கடத்தப்போறான்.நான் சாதாரணமான ஒரு டிரைவர் பொண்ணுடா…உன் கதையை அளந்துவிடாத இறக்கிவிடுடா”
இதைக்கேட்ட ஷாகில் அவனது கையை ஓங்கியவன் தன் கொஞ்சும் தமிழில்”என்ன பேசுற நீ டா சொல்ற..ராஜூபாயை அவர் எவ்வளவு பெரிய டான்..மரியாதையா பேசு”என்று எகிறியவனிடம்…
ஷாகில்”அவளுக்கு மரியாதைன்னா என்னனே தெரியாதுடா…இவ பேசுற பேச்சுக்கு இப்பவே இறக்கிவிட்டுட்டு போயிடுவோம்…அந்த யாஷ்பவார் ஆட்கள்வந்து வந்து அவளை அள்ளிக்கிட்டு ஊறுகாய் போடட்டும்” என்று வண்டியை நிறுத்தவும்…
பின்னாக வந்த காரிலிருந்து ஒருத்தன் கத்தியை வீச அது நேராக இவர்களின் கார் கண்ணாடியில் பட்டு தெறித்தது.
அதைப்பார்த்த மீரா தன் வாயில் கைவைத்து ஆஆஆஆவ்…என்னு மூடினாள்.
ராஜூ திரும்பி பார்த்து “என்ன இறங்குறீயா எனக்கு ஒரு வேலை மிச்சம்”
தன் தலையை இடம்வலம் ஆட்டி இல்லை என்று தன் கண்களாலும் பதில் சொல்ல…உடனே காரை எடுத்திருந்தான்.
அவளை அவன் அழைத்து சென்றது அலிபாக் பங்களாவிற்குத்தான்.அது அவனது கோட்டை யாரும் அவ்வளவு சீக்கிரம் உள்ள நுழைய முடியாது.
அங்கே சுற்றிலும் பாதுகாப்பிற்கு ஆட்கள் நின்றனர் காரை நேராக உள்ளேவிட்டான்.
காரை நிறுத்தியதும் எல்லோரும் இறங்க, மீராமட்டும் காருக்குள்ளயே இருந்தாள்.
உடனே ராஜுபாய் குனிந்து”ஏன் உனக்கு மட்டும் தனியாக சொல்லணுமா இறங்குவதற்கு என்னடி, இறங்குடி”
“என்னது டியா”
“ஆமாடி இறங்கிடி மிர்ச்சி…நீ யாருக்காவது மரியாதை கொடுக்குறீயா…நீ என்ன குடுக்குறீயோ அதுதான் உனக்கு திருப்பி கிடைக்கும்” என்றவன் வீட்டினுள் சென்றுவிட்டான்.
மீராவோ கோபத்தில் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தாள் அது கோட்டைபோன்று பெரிய பெரிய சுவர்களால் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தது.வெளியேயிருந்து உள்ளே பார்க்கவே முடியாது.அவ்வளவு சீக்கிரமாக யாரும் உள்ளே நுழையவும் முடியாது.
அப்படியே பிரமித்து பார்த்துக்கொண்டிருந்தவள் மெல்ல உள்ளே வந்து”எங்க வீட்டுல கொண்டு விடவேண்டியதுதான,எதுக்கு இங்க அழைச்சிட்டு வந்திருக்க” என்று அங்கு அமர்ந்து யாரோடோ போனில் பேசிக்கொண்டிருந்தவனிடம் போய் நின்றாள்.
அவனோ அவளை ஏறயிறங்க பார்த்தவன் தன் பேச்சிலயே கவனமாக இருந்தான்.
சுற்றும் முற்றும் பார்த்தவள் பக்கத்தில் அந்த வீட்டின் நடுவில் சிறிய சிட்டவுட்டும் அதை சுற்றியிருந்த பூச்சாடிகளும் கண்ணில் பட்டதும் அதனருகே சென்று ஒரு பூச்சாடியை எடுத்து பேசிக்கொண்டிருந்தவனின் முன்பு பொத்தென்று போட்டுவிட்டாள்.
அதை அவன் எதிர்பார்க்கவில்லை உடனே எழுந்து அவளை அடிக்க கையோங்கியிருந்தான்.
பின் மெல்ல இந்த கோபத்தில் அறைந்தால் செத்துருவாள் என்று தன் கையை இறக்கியாவன்.
“உனக்கு என்னதான்டி பிரச்சனை உன்னை அந்த மந்திரி மகன்கிட்டயே விட்றுக்கனும் அன்புக்கு கடமை பட்டிருக்கனேனு காப்பாத்தினால் ரொம்ப ஓவரா துள்ற”
“இப்போ எங்கப்பா தேடுவாங்கதான, அவங்களுக்கு என்ன பதில் சொல்லுவ”
அது உனக்கு தேவையில்லாதது.அன்புகிட்ட நான் ஒருவார்த்தை சொன்னால் போதும் அதை அவர் மறுத்து பேசவேமாட்டார்.
“ஆமா…ஆமா அவருதான் உன்னோட ஜிங்கியாச்சே.அதனால்தான நீ இப்படி என்கிட்ட ஆடுற”என்றவள் தூக்கிட்டு வந்தியே பசிக்குது அதுயாரு தருவா என்று சட்டமாக அங்கயே அமர்ந்துவிட்டாள்.
மெல்ல தலையாட்டியவன் ஷூகிலை பார்க்க உள்ளே சென்று சமையல்காரனிடம் சாப்பாட்டுக்கு சொல்லிவிட்டு வந்தான்.
ராஜூ இப்போது ஷாகிலை தனியாக அழைத்து”நீ பாந்தரா போ நம்ம பசங்களை அர்ஜூன்கூடவே இருக்க சொல்லு”உடனே சரியென்று தலையாட்டியவன் கிளம்பிவிட்டான்.
ஷாகில் இருந்திருந்தால்கூட அந்த விபரீதம் நடந்திருக்காது.
ராஜுபாயும் மீராவும் தனியாக அந்தவீடடில் அதுவும் மீராவின் துடுக்கான வாய்தான் அந்த நிகழ்விற்கு ராஜூவை தூண்டியது…அதன் பின்விளைவுகள்தான் அர்ஜூன் மீரா திருமணம் நடப்பதற்கு முழுமுதற்காரணமாக அமைந்தது.
தொடரும்…
