தொடாமலே சுடுகிறாயே சுந்தரா
அத்தியாயம்-21
ராஜூபாய் உடல்நிலை கொஞ்சம் தேறியிருந்ததும் அலுவலுகம் செல்ல கிளம்பி நின்றிருக்க அவனது அருகில் வந்த மீரா “அம்மா அப்பாவை இங்க வரசொல்ல முடியுமா”
திரும்பி அவளை யாரோ யவரோ என்ற ரீதியில் பார்த்துவைத்தான்.
மறுபடியும் அவனின் முன்பாக போய் நின்றவள்”பாப்பா வயித்துல இருக்கும்போது வளைகாப்பு பண்ணுவாங்க, எனக்கும் ஆசையாக இருக்கு.அப்பா அம்மா இருந்தும் அநாதை மாதிரி யாரும் எதவும் செய்யறதுக்கில்லாமல் நிக்குறேன்”என்று குனிந்துகொண்டே தன் கைகளை பார்த்தவாறே பேசினாள்.
எது இடித்ததோ இல்லையோ அந்த
அநாதை என்ற வார்த்தை அவனது நெஞ்சில் ஒரு குத்து குத்தியது.
அவளிடம் எந்த பதிலும் கூறாது சாப்பிட்டு கிளம்பி வெளியே வரவும் மனீஷ் ஸ்ரேயாவுடன் வந்து நின்றான்.
அதைக்கண்டதும் ராஜூபாயின் முகத்தில் சிறுபுன்னகை மலர்ந்து மறைந்தது.
ஸ்ரேயாவோ நேரடியாக அவனிடமே வந்து ராஜூபாய் உங்களுக்காக மட்டுந்தான் நான் இந்தியா வந்தேன்.
இந்த எருமையை எல்லாம் கல்யாணம் பண்ணிக்கறதுக்காக இல்லை என்று மனீஷின் மீதுள்ள கோபத்தை வெளிப்படையாகவே காட்டினாள்.
ராஜூபாய் உடனே மனீஷை முறைத்துப்பார்த்தான், சாரி பையா என்று தன் ஒற்றைகாதில் கைவைத்து சொன்னவனை பார்த்து லேசாக தலையாட்டியவனை சரி கிளம்பி ஆபிஸிற்கு வா அழைத்ததும், ஹப்பாடா தப்பிச்சேன் என்று உடனே ராஜூபாயுடன் சென்றுவிட்டான்.
ஸ்ரேயா ராஜூபாயின் வீட்டிற்கு வந்துவிட்டாள் என்று அவளது அப்பாவிற்கும் அண்ணனிற்கும் தெரிந்ததும், இரத்தம் தலைக்கேறி என்ன செய்யலாம் என்று தங்களுக்குள் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர்.
ஆம் சி.எம் மகனுடனான தன் மகள் திருமணம் நின்றதுகூட பெரிய விஷயமாக தெரியவில்லை.
அதைவிட யாஷிற்கும் திருமணம் செய்ய முடியாத நிலை.என்னவென்றால் சி.எம் வீட்டு திருமணபந்தம் கிடைப்பதால்தான், யாஷிற்கும் ஒரு பெரிய பிஸினஸ்மேனின் மகளிற்கும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.அந்த திருமணமும் நடைபெறாது போகவும், அப்பாவும் மகனிற்கும் அப்படியே வயிறெரிந்தது.
எப்பவுமே நம்மோளோட திட்டங்களில் தலையிட்டு அதை இல்லாது பண்ணுவதுதான் இந்த ராஜூபாயோட வேலை.
இப்பவும் அதை சரியாக செய்துவிட்டான்.அவன் தம்பி அந்த மனீஷ் அவனுக்கு ரொம்ப திமிர் ராஜூபாயோட தம்பி அப்படின்னு கெத்து காண்பித்துவிட்டு இருக்கின்றான்.
நம்மவீட்டு பொண்ணையவே மடக்கிட்டானுங்க தாதா பசங்க என்று கொதித்துக்கொண்டிருந்தனர்.
அதுவும் ஸ்ரேயாவை அங்கிருந்து எப்படி தூக்கலாம் என்று திட்டம்தீட்டினார்கள்.
அதற்குள் கமிஷனர் அவர்களைத்தேடி வந்தார்.
ஏற்கனவே கமிஷனருக்கு மனீஷ் மேல் ஒரு வெறுப்பு இருக்கின்றது.
ஒரு முறை ராஜூபாயின் கார் இரவில் பாரிலிருந்து வெளியே வந்தது.அப்போது இரவு பாதுகாப்பிற்காக தனது காரில் வந்துக்கொண்டிருந்த கமிஷனர் ராஜூபாயின் காரை மறித்தார்.
அது நிற்காமல் செல்லவும் அப்படியே விரட்டி சென்று மறித்து நின்றார்.
அப்போது ராஜூபாய் ஓவர் போதையில் தூங்கிக்கொண்டிருந்தாற், ஏன் என்றால் அர்ஜூன் இறந்து ஒருவாரம்தான் ஆகியிருந்தது, அந்த சோகத்தில் பாட்டில் பாட்டிலாக குடித்திருந்தான்.
காரினை மறித்ததும் மனீஷ்தான் இறங்கினான்.ஷாகில் அருகிலிருந்தாலும் மனீஷ்தான்”என்ன சார்”என்றான்.
அவ்வளவுதான் உடனே கமிஷனர் அவனது சட்டையை எட்டிப்பிடித்து அடிப்பதற்கு செல்ல சட்டென்று அவரது கையை பிடித்து தடுத்து தள்ளிவிட்டுவிட்டான்.
அது பெரிய கைகலப்பாகிவிடவும் கூடயிருந்து போலீஸ்காரர்கள்தான் இருவரையும் விலக்கிவிட்டனர்.
புது கமீஷனர் என்பதால் ராஜூபாயை எதிர்க்க துணிந்திருந்தான். அதுவும் அவினாஷ்பவாரின் சொந்தக்காரன் வேறு, அதனால் மனீஷின் மீது கைவைத்தான்.
ராஜூபாய் உள்ளே படுத்திருந்ததை பார்க்கவில்லை என்பதால், மனீஷினை எப்படியாவது கைவைத்து தூக்கிவிட்டால் ராஜூபாய் நம்மிடம் வந்துதானே ஆகவேண்டும் என்று தப்பாக கணக்குபோட்டவன் மனீஷினையும் ஷாகிலையும் போலீஸ் வண்டியில் ஏற்றுவதற்கு இழுத்துபோகப்போனவரை சாரளென்று அடித்துவிட்டான் மனீஷ்.
இதை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை அதற்குள்ளாக ராஜூபாயும் விழித்து வெளியே வந்தவன் கண்டது மனீஷை பிடித்து வைத்திருந்த கமிஷனரைத்தான்.
சட்டென்று தன் கன்னை எடுத்து அவரது தலையில் வைத்துவிட்டான் ராஜூபாய்.அவனுக்கு வேறெதும் தெரியவேண்டியதில்லை, தன் கண்முன்னே தம்பியை இழுத்துசெல்கிறான் என்றால் அது யாராக இருந்தாலும் போட்டுதள்ளத்தானே செய்வான்.
அப்படியே அத்தனை பேரும் அதிர்ந்து என்ன செய்யவேண்டும் என்று தெரியாது சிலைபோல் நின்றுவிட்டனர்.
கமிஷனரின் கையிலிருந்து மனீஷை இழுத்தவன், என்ன கமிஷனர் சாப் ராஜூபாய் தம்பிமேல் கைவைக்குறளவுக்கு நீங்க பெரியாளாகிட்டீங்களா…நீங்க உண்மையிலயே நியாயமான ஆபிசராக இருந்தால் விட்டுட்டு போயிருப்பேன்.
ஆனால் நீங்களே பணமுழுங்கியாகிற்றே என்று தன் பையிலிருந்த பணத்தை கட்டாக தூக்கிவிசியவன், இனிமேல் எதாவது பிரச்சனையென்று வந்தது தூக்கிபோட்டு மிதிச்சிட்டு போயிகிட்டே இருப்பேன் என்றவன் மனீஷையும் ஷாகிலையும் காரில் ஏற சொன்னவன் கிளம்பிவிட்டான்.
அன்றிலிருந்து இன்று வரை மனீஷின் மேல் வன்மம் வைத்திருக்கும் அவனிடமே ஸ்ரேயாவை கடத்திட்டாங்கன்னு கேஸை எழுதி மனீஷை தூக்கி உள்ளப்போடுடா, அந்த ராஜூபாய் ஆட்டம் ஓவராக இருக்கு.
இந்த ராணா அவனை போட்டுத்தள்ளிருப்பான் என்று நினைத்தால் மீண்டு வந்துட்டான்.கடைசியில் அவனைத்தான் காணவில்லை என்று கமிஷனரை ஏத்திவிட்டுவிட்டார்கள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆண்கள் இல்லாத வீட்டில் மீராவும் ஸ்ரேயாவும் மட்டுமே இருக்க போலீஸ் ஜீப் வந்து நின்றது.
அதைவிட பெண் கடத்தல் கேஸ் என்றும் சோதனை செய்ய வந்திருந்தனர்.
செக்யூரிட்டி உள்ளே விடவில்லை என்றதும், வலிய உள்ளே நுழைந்தனர்.
திடுதிப்பென்று நிறை போலீஸ்காரர்கள் வீட்டினுள் நுழையவும் மீரா பயந்து மிரண்டு உடனே ராஜூவிற்கு அழைத்துவிட்டாள்.
ஒருநாளும் மீரா போனில் அழைத்தில்லையே இன்றென்ன அழைக்கிறாள் என அவசரமாக போனை எடுத்து காதில் வைத்தவனுக்கு மீராவின் அழுகையின் சத்தம்தான் கேட்டது.
” என்னாச்சு பதறாமல் பேசு மிர்ச்சி” என்று அதற்குள் வெளியே ஓடி வந்திருந்தான் காரை எடுப்பதற்கு…அவள் அழுதுகொண்டே பேசுவதற்குள்”போனை ஸ்ரேயா வாங்கி ஜீஜூ அது ஒன்னுமில்லை என்னை நீங்க கடத்திட்டீங்கன்னு அப்பா புகார் கொடுத்திருகாங்க, போலீஸ் மனீஷை அரெஸ்ட் பண்ண வந்திருக்காங்க என்ன செய்ய என்று நிதானமாக கேட்டாள்.
ராஜூபாயிற்கு மனதிற்குள் அவ்வளவு சந்தோஷம் எந்தவித பதட்டமும் இல்லாது, நிதானமாக பேசிய ஸ்ரேயாவை அவனுக்கு பிடித்தது.தன் அவசரக்குடுக்கை தம்பியை சரிசெய்ய இவள்தான் சரியான தேர்வு முதலில் அவினாஷ் மகள் என்றதும் யோசித்தான்.இருப்பினும் அவள் தன் தம்பி விரும்பிய பெண் எப்படியிருந்தாலும் அவர்கள்தான் வாழப்போகிறார்கள் இதில் நம் விருப்பம் என்னயிருக்கின்றது என்றுவிட்டுவிட்டான்.இப்போது அவன் ஜீஜூ என்று அழைத்தபோதே அவ்வளவு மகிழ்ச்சி.
ராஜூபாய்”ஸ்ரேயா போனை அங்கே இருக்கின்ற இன்ஸ்பெக்டர் கையில் கொடுக்குறியாடா”
“ஜீஜூ கமிஷனரே நேரடியாக வந்திருக்காரு”
“ஓஓ இரு நானே வர்றேன் நான் வந்தால்தான் சரியாக இருக்கும், மீராவை பார்த்துக்கோ அழவிடாத”
“ஹான்…சரி”
அடுத்த பத்தே நிமிடத்தில் ராஜூபாய் வீடுவந்து சேர்ந்தான், அவனை பார்த்து கெத்தாக “உங்க தம்பி மனிஷ் எங்கே? அவரை அரஸ்ட் செய்ய வந்திருக்கின்றோம் என்றதும் அடுத்தது ஒரு கார் வந்து நின்றது.அதிலிருந்து மும்பையின் பிரபலமான வக்கீல் முகிரா வந்திருந்தார்.
அதைப்பார்த்தவுடனே கமிஷனருக்கு காற்று போகிட்டு.அவர் வந்தால் என்னாகுமென்றுதான் தெரியுமே.
முகிரா ராஜூபயிற்கு வணக்கம் வைத்தவன்”என்ன கமிஸனர் சாப், கோர்டல் முறைப்படி பதிந்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளை பிரிக்க வந்திருக்கீங்க”
இல்லை சார் அது மந்திரி அவினாஷ் கம்ப்ளையிண்ட கொடுத்திருக்காரு.
“என்ன கம்ப்ளைண்ட்”
“அது அவரோட மகளை கடத்திட்டு வந்திருக்காங்க என்று அவரே நேரடியாக வந்து கம்ப்ளையின்ட் கொடுத்திருக்காரு”
ஓஓஓ..அப்படியா அவரு பொண்ணு விசாரித்தீங்களா?
“இல்லை”
“அப்புறம் எப்படி மனீஷை கைது செய்ய முடியும்”
ராஜூபாய்”அதுவா வக்கீல்சாப் அரெஸ்ட் வாரண்ட் இருக்காது, மணி வாரண்ட் இருக்கும்.அப்படித்தானே கமிஷனர் சாப்” என்று கேட்டுவிட்டு சிரித்தான்.
அவனுக்கு அது மிளாகையை அரைத்து தேய்த்ததுபோல் காந்தியது.
அதற்குள் ராஜூபாய் தனது கையிலிருந்த பேப்பரை எடுத்து கொடுத்தான்.
இருவருக்கும் பதிவு திருமணம் நடத்திவிட்டதாக அந்த சான்றிதழில் இருந்தது.
தன் தலையை தொங்கபோட்டுக்கொண்டு கமிஷனர் தன் படைகளை அழைத்துக்கொண்டு திரும்பிவிட்டார்.
அதற்குள் மனீஷூம் ராஜூபாய் கிளம்பி வந்தது தெரியாது இருந்தவன், அவனை காணாது போனில் அழைத்தான் எடுக்கவில்லை பின் வீட்டிற்கு அழைத்து கேட்டு அங்கிருந்த கிளம்பியிருந்தான்.
கமிஷனர் கார் வெளியே செல்லவும் மனீஷின் கார் உள்ளே வந்தது.
எப்போதும் எதிரெதிர் திசைகளிலே இருக்கின்றனர், எப்போது முட்டிக்கொள்ளப்போகுதோ தெரியவில்லை.
அவனும் உள்ளே வந்ததும் வக்கீல் முகிராவின் தோழில் கைப்போட்டு நன்றி நண்பா என்று தன்னோடு சேர்த்து அணைத்து விட்டான்.
இருவரும் பள்ளித்தோழர்கள் வளர்ந்தபின்னும் இருவேறு தொழிலில் இருந்தாலும் ராஜூவிற்காக வந்து நிற்பான் எப்போதும்.
உடனே அனைவரும் உள்ளே செல்ல அங்கே மீரா ரொம்ப பயந்திருந்தாள், அறைக்குள் இருந்தாள்.
முன்பென்றால் என்ன நடந்தாலும் கவலைகொள்ளமாட்டாள்.ஆனால் இப்போது தன் கணவனும் அவனுடன் சேர்ந்தவர்களும் செய்யும் தொழில் தெரியும், அதைவிட அவர்கள் அவளின் மனதிற்கு நெருக்கமானவர்களாகிவிட்டதால் போலீஸ் வந்ததும் பயந்துவிட்டாள்.
ஷூகிலும் வைஷூவும் இன்னும் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருப்பதால் ராஜூபாயோ அவனுக்கு எதுவும் தெரியாது பார்த்துக்கொண்டான்.இல்லையென்றால் உடனே கிளம்பி இங்கே வந்திருப்பான்.
ஸ்ரேயாதன் மீராவின் அருகில் சென்று அவளின் முதுகில் கைவைத்து அவளை ஆசுவாசப்படுத்தினாள்.
இங்கு முகிரா”ராஜூ பேசாமல் மனீஷிற்கு யாருக்கும்தெரியாது கோவிலில் திருமணம் செய்துவிட்டு, பெருசா ரிசப்ஷன் வைத்துவிட்டால் சிம்பிள், அதுல உன் டச்சாக சி.எம்மையே அழைச்சிடு முடிஞ்சுது பிரச்சனை”என்று சிரிக்கவும் எல்லோரும் சிரித்தனர்.
ராஜூபாய் ஏற்கனவே அதை முடிவு செய்து எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தான்.முகிரா சொன்னதும் உடனே காரிலிருந்து பார்சலை எடுத்து வரசொன்னவன் அதிலிருந்து ஒரு அழைப்பிதழை எடுத்து கொடுத்து நீதான்டா என் தம்பி கல்யாணத்திற்கு சிறப்பு விருந்தினர் அதனால் நாளை காலை திருமணம் அதோடு ஞாயிறன்று வரவேற்பு வந்திடு என்று கொடுத்தான்.
முகிரா ஆச்சர்யபட்டான்”நான் இப்போதான் ஐடியா கொடுத்தேன்.ஆனால் நீ அதை முன்பே தீர்மானித்து முடித்துவிட்டு.அந்த மூளைதான்டா உன்னை இந்தளவுக்கு கொண்டு வந்திருக்கு என்று எழுந்தவன் மனீஷை வாழ்த்திவிட்டு சென்றுவிட்டான்.
உடனே ராஜுபாய் எழுந்து தன்னோடு அறைக்குள் செல்ல அங்கு மீரா படுத்திருக்க ஸ்ரேயா அவரருகில் இருந்தாள்.
அவனை பார்த்தவுடன் மெல்ல ஸ்ரேயா விலகி அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியே வந்துவிட்டாள்.
ராஜூபாய் மீராவைத்தான் பார்த்திருந்தான்…மீராவும் தன் கண்களை விலக்காது தன்னவனையே பார்த்து விழிகளினால் சிறைபிடித்துக்கொண்டிருந்தாள்.
அவனுக்கோ தன் மனது எங்கோ உருகுவதுபோல் தோன்ற”பார்த்து நடந்துக்கோ நீ இப்படி இருந்தால் அது என் பிள்ளையை பாதிக்கும், பெத்துகொடுத்திட்டு நீ எப்படினாலும் டென்சன் ஆகு”என்று நக்கலாக சொன்னவனை பார்த்து கோபத்தில் பக்கத்தில் இருந்த தலையணையை தூக்கி விசியவள் போடா கல்நெஞ்சுக்காரா என்று திரும்பி படுத்துக்கொண்டாள்.
வந்த அழுகையை அப்படியே அடக்கிக்கொண்டாள் கண்ணீர் மட்டும் தானாக வடிந்தது.
அவனுக்குமே தெரியும் அவள் அழுகின்றாள் என்று ஆனாலும் தன் தோளை குலுக்கிவிட்டு சென்றுவிட்டான்.
அடுத்தநாள் அதிகாலையில் மங்களகரமாக பெரிய கோவிலில் நான்கே ஆட்களை வைத்து திருமணத்து முடித்துவிட்டான்.
மனீஷ் ஸ்ரேயா கழுத்தில் நம் தமிழ் கலாச்சாரபடியே மஞ்சள் தாலியை கட்டினான்.
உண்மையில் ராஜூபாய் மனீஷை கட்டாயபடுத்தவில்லை என்றால்,தன் அண்ணனுக்காக கண்டிப்பா தன் காதலை தூறந்திருப்பான்.
மனீஷூம் ஸ்ரேயாவும் ராஜூபாய் மீராவின் காலில் விழவும் உண்மையிலயே முதன்முறையாக தன் தம்பியை அண்ணன் என்ற உரிமையுடன் கட்டிக்கொண்டான்.
ஆம் மனீஷ் ராஜூபாயின் சொந்ததம்பி ஒரே இரத்தம்.எத்தனை பிரச்சனைகளை கடந்து அண்ணனும் தம்பியும் அந்தவீட்டில் ஒன்றாக வாழ்கின்றனர்.
அதுவும் தம்பியை தம்பதி சகிதமாக நிற்கவும் அவ்வளவு சந்தோஷமும் நிம்மதியுமாக இருந்தது.
திருமண தம்பதிகளை வீடு அழைத்து வந்ததும் ஸ்ரேயாவின் அருகே ஒட்டிக்கொண்டும் உரசிக்கொண்டும் இருந்தான்.
இரவுவேளையில்தான் மொத்தமாக பெரிய ஆப்பாக மனீஷிற்கு ராஜூபாய் வைத்துவிட்டான்.
அதைக்கேட்டு ஸ்ரேயா நமுட்டு சிரிப்புடன் மீராவின் அறைக்குள் சென்றாள்.
மனீஷோ தன் அறையில் தலையணையை கட்டிக்கொண்டு குமுறிக்கொண்டிருந்தான்.
ஐயோ தாலியைகட்ட வைத்து,விட்டு பிரிச்சு வச்சீட்டீங்களே தலை, முடியலை என்று ராஜூபாயிடம் புலம்புவதுபோல் புலம்பிக்கொண்டிருந்தான்.
அது ஒன்றுமில்லை ஒரேடியாக ரிசப்ஷன் முடிந்து குடும்பவாழ்க்கையை ஆரம்பிக்காலாம் என்று தாடா போட்டுவிட்டான். அந்த கடுப்பில்தான் மனீஷ் தலையணையை பிய்த்துக்கொண்டிருந்தான்.
ஆனால் அங்கு மீராவின் அருகிலிருந்த ஸ்ரேயா அவளை கண்ணெடுக்காது பார்த்திருந்தாள்.
மீரா “என்ன அப்படி பாக்குற?”
“இல்லை எவ்வளவு அழகா இருக்கீங்க, அதுதான் ஜீஜூ உங்க காலடியில தடாலடியாக விழுந்திருக்காங்க, அதுதான் பார்த்திட்டிருக்கேன்”
மீரா “அவரு எங்க விழுந்தாரு, அந்த முறுக்கு மீசைக்காரன் மேல் காதல் பொங்கி நான் தான் விழுந்துகிடக்கின்றேன்”
அப்படியா என்று கேட்டவளிடம் தன் காதல் கதையை சொன்னாள் மீரா, சில காட்சிகளை மட்டும் சொல்லாது விட்டுவிட்டாள்.ராஜூவினை யாரும் தப்பாக நினைக்ககூடாது என்று நினைத்து.
அதையெல்லாம் கேட்டு ஜீஜூவா?இவ்வளவு முரடா என்று அதிர்ந்திருந்தாள்.
தொடரும்….
