தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

அத்தியாயம்-14

சட்டென்று மீராவின் உடல் தூக்கத்திலயே உதறல் எடுத்தது…

அதேவேளையில் அங்கு ஐ.சி.யூவில் ராஜூவின் தலைக்குள் ஏதேதோ தோன்றியது.அதில் அவனது உடலும் அதிர்ந்து துடித்தது.

மொத்த உடலும் தூக்கியடித்தது அவ்வளவுதான் நர்ஸ் அலார்ம் அடித்து டாக்டர்ஸ்ஸை வரவழைத்தாள்.

டாக்டர்ஸ் ஓடிவரவும் வெளியே இருந்து அவசரமாக ஓடிவந்ததை பார்த்து மனீஷ் மொத்தமாக உடைந்துவிட்டான்.

ராஜூபையாவிற்கு எதோ ஆகிவிட்டது என்று அப்படியே மடிந்து அமர்ந்துவிட்டான்.

ஷாகில் ஓடிப்போய் ஐ.சி.யூவின் முன்பிருந்த கதவின் கண்ணாடி வழியாக பார்த்தான்.

அங்கோ ராஜூபாய் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான்.

அவனை பக்கத்திலிருந்த டாக்டர்ஸும் நர்ஸ் பிடித்து வைத்து என்னென்னமோ செய்துக்கொண்டிருந்தனர்.

ஊசி போட்டும் அடங்கவில்லை அவனது உடல் துடிப்பு…அதை பார்த்தவனுக்கு மனமெல்லாம் பதறியது.

மீராவின் நிலையும் அதேதான் என்றதும் வைஷுதான் சத்தமாக அழுதாள்.அதைக்கண்டு நர்ஸ் ஓடிவந்து என்னவென்று மீராவை பார்த்தார்.

மீரா ஆழ்ந்த தூக்கத்தில் பிதற்றிக்கொண்டும் கைகால்களை உதறிக்கொண்டுமிருந்தாள்.

அவளின் கைகாலினை பிடித்து அழுத்தி வைத்ததும் சிறிது நேரத்தில் நார்மலானவள் அப்படியே மீண்டும் தன் ஆழ்மன எண்ணங்களுக்குள் பயணித்தாள்.

அர்ஜூன் மீரா திருமணநாளன்று ராஜூவோ மீராவின் பதிலைக்கேட்டதும் அப்படியே விலகி வந்தவன் அன்பினை அழைத்து”அன்பு உன்னோட பொண்ணை அர்ஜூன் ரொம்ப விரும்புறான்.அவன் படிப்பிற்கும் வேலைக்கும் மீராவுக்கு பொருத்தமாக இருப்பான்.நால்லா பார்த்துப்பான் அதுக்கு நான் உத்திரவாதம் கொடுக்கிறேன்”

அன்பு “என்ன பெரியசார் நீங்க எனக்கு உத்தரவாதம் தர்றீங்களா சரியகப்போச்சுது

உங்கபேச்சுக்கு என்னைக்கு மறுபேச்சை பேசியிருக்கேன்.நீங்க ஒருநாளும் எனக்கும் என் குடும்பத்திற்கும் கெடுதல் நினைக்கமாட்டீங்க” என்று தன் மனதினை எடுத்துரைத்த அன்புவினை நினைத்து பெருமையாக இருந்தது.

இப்படிபட்ட வெள்ளந்தி மனிதர்களாலும் நம்பிக்கையானவர்களாலும் மட்டுமே எத்தனையோ முறை வீழ்ந்தாலும் எழுந்து நின்றிருக்கின்றான்.

ம்ம் உன் பொண்ணுகிட்ட எடுத்து சொல்லி அழைச்சிட்டுவா இப்பவே கல்யாணத்தை முடிச்சிடுவோம்.

அதன்பிறகு ரிசப்ஷன் வைச்சுக்கலாம் என்று பேசிவிட்டு நகர்ந்து சென்றுவிட்டான்.

அன்பு நேராக மீராவிடம் சென்று”ம்மா அர்ஜூன் தம்பி நல்ல பிள்ளைதான்.

உனக்கு ஏத்தவிதமாக படிச்சிருக்காங்க, அவங்களை கட்டிக்கிட்டா நீ நல்லாயிருப்ப தாயி.அதான் பெரியசார்கிட்ட உனக்கு அர்ஜூனை கட்டிக்கொடுக்குறேன்னு வாக்குகொடுத்திட்டு வந்துட்டேன்.நீ இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிடு தாயி”

“ப்பா என்ன பேசறீங்க நீங்க?நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்குற ஐடியா இல்லை.நான் படிச்சு வேலைக்கு போகணும்.இவங்க இல்லை யாரையுமே எனக்கு கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலை.தயவு செய்து இப்படியெல்லாம் கேட்காதீங்க”

“என்னம்மா பேசுறா நல்லவரன் பெரிய சாரே சொல்றாரு.அர்ஜூன் தம்பியை இதுக்குமுன்னாடி எனக்குத் தெரியாதுதான், ஆனால் இப்போ கொஞ்சநாளாதான் தெரியும்.நல்ல தம்பி.பெரியசாரே நம்ம சம்மதம் கேட்டு நிக்குறாரு, வாம்மா கல்யாணம் பண்ணிக்கோ”

“ப்பா எனக்கு கல்யாணமே பிடிக்கலைனு சொல்றேன் நீங்க என்னடான்னா நல்லதொம்பினு சொல்லிட்டிருக்கீங்க.

சம்மதிக்க முடியாது”

“மீராம்மா பெரியசாருக்கு நான் நிறைய விதத்தில் கடன்பட்டிருக்கேன் உங்கம்மாவை யாருக்குத்தெரியாம கல்யாணம் பண்ணிட்டு ஊருக்கு போகும்போது உதவி செய்தது எல்லாமே பெரியசாரோட அப்பாதான்.

அதுவுமில்லாமல் இவ்வளவு நாளும் நமக்கு உதவிசெய்தது எல்லாமே அவர்தான்.”

“உதவி செய்தால் நன்றிக்கடனாக பொண்ணை கேட்பாங்களா?இது எந்தவூரு நியாயம்பா…முடியாதுன்னு சொல்லுங்க” என்று வெளியே போகப்போனவளை பார்த்த அன்பு”மீராம்மா இதுதான் அப்பாவோட முடிவு பேசமா உள்ளபோ அர்ஜூன் தம்பின்தான் உனக்காக நான் பார்த்த மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிக்கோ.

இல்லைன்னா அப்பா வாக்குதவறிட்டேன்னு சொல்லுவாங்க நான் உயிரோடவே இருக்கமாட்டேன்”

இதைக்கேட்டதும் மீராவிற்கு ஐயோவென்றிருந்தது.ஏனென்றால் அன்பு ஒருநாளும் பிள்ளைகளிடம் இப்படியான வார்த்தைகளை பயன்படுத்தியதே இல்லை.

அதுவும் செத்துப் போய் விடுவேன் என்று சொன்னதும் மீராவுக்கு மனம் தானாக பதறியது.

“ப்பா நான் என்ன சொல்லவர்றேன்னே உங்களுக்கு புரியலையாப்பா”என்று கண்ணீர் குளம் கட்ட கேட்டவளிடம் பெரியசார் எப்போதும் நம்ம நன்மைக்குத்தான் சொல்லுவாங்க”

உடனே மீரா தன் மனதில் உன்கூட வழபிடிக்கலைன்னு சொன்னதுக்காக இப்படி என்னை மாட்டிவிடுறியா இராட்சஷனே.

இரு அவனையே கட்டிக்கிட்டு உன் கண்முன்னாடி நான் நல்லா வாழ்ந்து காண்பிக்கலை நான் மீரா இல்லை என்று தன் கண்ணீரை துடைத்தவள் மனதினை கல்லாக்கி கொண்டு திருமணத்திற்கு தயரானாள்.

அர்ஜூன் தாலிகட்டும்போதுதான் மனம் அரற்றியது.

மீரா தன் தகப்பனிடம் சம்மதம் சொன்னதும் ராஜூபாயின் முகம் ஒருநொடி அதிர்வை காட்டியதுதான்.

உடனே சுதாரித்து அர்ஜூனிடம் மீராவின் சம்மதத்தை கூறினான்.

அவனுக்கு தலைகால் புரியாது சந்தோஷம் அப்படியே ராஜூவினை கட்டிக்கொண்டான்.நன்றிடா நண்பா என்று உணர்வுபூர்வமாக கூறினான்.

ராஜூபாய்க்கோ என்ன சொல்வதென்றே தெரியாது அமைதியாக நின்றான்.அன்பு ராஜுவிடம் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.

ராஜூவோ தன் நண்பனுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறான் வேறு என்ன சொல்ல விதி வலியது.

மொத்தமாக மீராவினை தன் வாழ்க்கையில் ஒதுக்கவேண்டிய நிலைவருமென்று அவன் மனதில் சிறுதுளியளவுகூட நினைக்கவில்லை.

எத்தனையோ இழப்புகளையும் வலியையும் தாண்டித்தானே வந்திருக்கின்றான்.அதனால் எது என்ன புதுவலியா இந்த வலியும் மறந்து கடந்துபோகுமென்று தன் மனதினை கல்லாக்கிகொண்டு நின்றான்.

அர்ஜூன் ஏற்கனவே எல்லாவற்றையும் தயாராகத்தானே வைத்திருந்தான் உடனே அதுவும் ராஜூபாய் வந்து நிற்கும்போது ஏதாவது தடைவருமா என்ன…

எல்லாம் முடிந்தது தன் கழுத்தில் கிடந்த தாலியை பார்த்தவளுக்கு இப்போது அவளது எண்ணத்தையும் மீறி ஒரு விம்மல் வெளிவந்தது.

அதையும் ராஜூவை பார்த்தவுடன் அடக்கிக்கொண்டு நின்றாள்.

அதன் பின் நடந்தது எதுவுமே அவளது கையின்வசமில்லை.

பாந்தரா ப்ளாட்டில் இருக்கவேண்டாம் என்று தன்னுடைய வீட்டிற்கே அழைத்து சென்றான்.

அவர்களை அங்கேவிட்டுவிட்டு எல்லாம் தயார் செய்துவிட்டு ராஜூவோ அலிபாக்கில் உள்ள அந்தவீட்டிற்கே சென்றுவிட்டான்.

அவளோடு அன்று ஒன்றாக இருந்த ஞாபகத்தை நினைத்து நினைத்து மன்புழுங்கியவனுக்கு என்ன செய்தும் மனம் அடங்காது நிலையில் ஷாகிலை விட்டு வீட்டிலிருந்த சரக்கினை பாட்டில் பாட்டிலா உள்ளே ஊற்றியும் அவனது நெஞ்சத்தில் அந்த பாதகத்தி பற்றவைத்த தீ அடங்கவில்லை.

ஷாகில்தான்  பையா என்ன இது நீங்க இப்படி குடித்து பார்த்ததில்லையே என்று அவனை சமாதானப்படுத்த முயற்சித்தான்.

ம்ஹூம் எங்கே என்னென்னமோ பழைய நியாபகங்களை நினைத்து நினைத்து வெம்பி படுத்திருந்தான்.

அங்கோ அர்ஜூனிற்கும் மீராவிற்கும் தனியறையை ஒதுக்கியிருந்தனர்.

அதில் அலங்காரத்தோடு, மொத்தமாக தனியிரவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பலகனவுகளோடும் சந்தோஷத்தோடும் உள்ளே வந்த அர்ஜூன் அங்கு பார்த்த காட்சியில் சிறிது அதிர்ந்தவன் மெல்ல நடந்து கட்டிலின் அருகே வந்தவனை சட்டைசெய்யாது கீழே படுத்திருந்த மீரா தலையைகூட திருப்பவில்லை.

அவளருகில் குனிந்து மண்டியிட்டவன் மீரா என்று அவளுக்கு வலிக்காது அழைக்க, அது தன் காதில் கேட்டும் கேட்காத மாதிரி அமைதியாக படுத்திருந்தாள்.

மறுபடியும் மீரா என்று அழைத்தவன் அவளது தோளினை தட்டினதுததான்.

அணுகுண்டு வெடித்து சிதறியதுபோல எழுந்தவள்”அறிவிருக்காடா உனக்கு…எத்தனை முறை உன்கிட்ட சொன்னேன் எனக்கு உன்னையில்லை வேற எவனையும் இந்த உலகத்தில் பிடிக்காது.யாரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு சொன்னேன்லடா.முட்டாள் கடத்தினதுமில்லமால் எங்கப்பாவையே சம்மதிக்க வைத்து தாலிகட்டிட்டா உன்னோடு ஒருத்தி வாழ்ந்திருவாளாடா எருமைமாடே.என் வாழ்க்கையவே நாசமாக்கிட்டு வந்து மீரா…கீரான்னுட்டு”

என்று பேசிமுடித்து மொத்தமாக மூச்செடுத்தாள்.

இதனை அர்ஜூன் எதிர்பார்க்கவில்லை சட்டென்று அங்கயே சம்மனமிட்டு அமர்ந்துவிட்டான்.

இந்த சிக்கலை அவன் எதிர்பார்க்கவில்லை, அடுத்து என்ன செய்யவென்று முழித்துக்கொண்டிருந்தவனிடம்”என்ன”என்று கேட்டாள்.

நிஜமாகவே உனக்கு என்னைய பிடிக்கலையா?

உடனே வாரிசுருட்டி எழுந்தவள்”லூசாடா நீ…நீயெல்லாம் ஒரு காலேஜ் புரபசர்னு வெளியே சொல்லாத.ஒரு பெண்ணோட மனசை புரிந்துக்கொள்ளாமல் கட்டாய கல்யாணம் பண்ணிக்கிட்டு மூஞ்சைப்பாரு”

அர்ஜூனுக்கு இப்போது கோபம் வந்தது உடனே”என்னடி ஓவரா பேசுற.ஏன் உங்கப்பா சொன்ன உனக்கெங்க போச்சுது அறிவு.அப்பவே நீ சொல்லவேண்டியதுதான் தாலியை ஏன் வாங்கின”

“ஹான்… வேண்டுதல் எங்கப்பா செத்துருவேன்னு மிரட்டினாரு அதனால்தான்.ஏதோ உன் பிரண்டு அந்த இராட்சஷன் ராஜூக்கு நன்றிக்கடனாக என்னை மிரட்டினாரு”

இப்போது உண்மையாக கோபம் கொண்டவன் “இங்கப்பாரு என்னை என்னவேணா சொல்லு…என் நண்பனை எதாவது சொன்ன கொன்றுவேன்டி”

அதைகேட்டவள் பார்டா அந்த இராட்சஷனுக்கு இந்த இரத்தகாட்டேறி சப்போர்ட்டு பண்றதை…போங்கடா நீங்களும் உங்க நட்பும்.

இங்கபாரு என்னைய எதாவது சீண்டின, இல்லை பக்கத்துல வந்த யாரு என்னனு பார்க்கமாட்டேன்.நான் பாட்டுக்கு டிவர்ஸ் வாங்கிட்டு போயிட்டே இருப்பேன்.

நீங்க யார்பத்தியும் யோசிக்கமாட்டிங்க.நான் மட்டும் ஏன்டா உங்களை நினைக்கனும் என்றவள் கீழே விரித்திருந்த பெட்சீட்டில் படுத்துவிட்டாள்.

அர்ஜூன்தான் ஊப்ஸ் இதுக்குத்தான் அன்னைக்கே ராஜூ சொன்னானோ சமாளிக்கமுடியது என்று இப்போது யோசித்தான்.

அவனது மனமே இடித்துரைத்தது விருப்பமில்லாது ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்க்கை நரகமாக மாறிவிட்டதோ என காலங்கடந்து ஞானம்பெற்றான்.

கட்டிலில் படுத்தவனுக்கு அந்த மெத்தை முள்ளாக உறுத்தியது.

ஏற்கனவே தாய்தந்தையில்லாது அநாதையாக வாழ்ந்தவனுக்கு ராஜூவும் மனீஷும் உறவாக வந்தனர்.அதன் பின்தான் ஷாகில் வந்தான்.

முதன்முதலாக விரும்பியது மீராவைத்தான்.அது என்னவென்று சொல்லத்தெரியாத உணர்வு அவனுக்கு அதற்கு காதலென்று அவசர அவசரமாக பெயர்வைத்து வாழ்க்கையும் அவரசமாக அமைத்துக்கொண்டான்.

எப்போது தூங்கினான் என்று தெரியாது விழித்து பார்த்தான் நண்பகல் இருக்கும் அவசர அவசரமாக குளித்து வெளியே வந்தவனின் முன்பு ஷாகில் வந்து நின்றான்.

என்னடா குண்டா என்று இரவு நடந்ததை மறைத்து சிரித்த முகத்துடன் கேட்டான்”அதுவா ராஜூபையா உன்னை குர்லாவில்  இருக்கற வீட்டுக்கு மாற சொன்னாங்க.அங்க எல்லாம் நேற்றே ரெடி பண்ணி வச்சுட்டாராம்”

ஏன் இங்க ஒன்னா இருந்தா என்ன குறைச்சல் வந்திடப்போகுது என்று கோபப்பட்டவன் ராஜூவிற்கு அழைக்க அதுவோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது என்ற தகவலை தந்தது.

ஏதோ புரியாது ஒன்று நடக்கிறது என்று மட்டும் உணர்ந்தவன் அந்த வீட்டிற்குபோவதற்கு தயாராகினான்.

அந்த வீட்டில் முதன்முதலாக காலடி எடுத்து வைக்கும்போது அப்படியொரு உணர்வை பெற்றான் அர்ஜூன்.

ஆனால் மீராவிற்கோ அது எதுவுமேயில்லை எப்படியும் இவனோடு நான் வாழப்போவதில்லை பின் எதற்கு வேண்டாத எண்ணங்கள் எல்லாம் என்று மனதில் நினைத்துக்கொண்டுதான் உள்ளே நுழைந்தாள்.

 இவர்கள் இந்த வீட்டிற்கு குடிவந்து ஒருவாரம் கழித்துதான் தன் வீட்டிற்கே வந்தான் ராஜுபாய்.

அதைவிட அர்ஜுனை பர்ப்பதையும் அவனோடு பேசுவதையும் முற்றிலுமாக தவிர்த்தான்.

இங்கு மீராவோ யாரிடமும் எதுவும் பேசாது அமைதியாகவே நாட்களை கடத்தினாள்.இந்த வீட்டிற்கு வரும்போது மட்டுமே மீனாட்சியும்அன்பும் வந்திருந்தனர்.

அடிக்கடி வந்து பார்த்தால் பணத்திற்காக மகளை பார்க்க வருவதாக நினைத்துவிடக்கூடாதே என்றுதான் அடிக்கடி வருவதில்லை.

கிட்டதட்ட அவர்கள் திருமணம் நடந்து ஒருமாதம் கடந்த நிலையில் அன்று பால்கனியில் அமர்ந்து புறாக்கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவளின் அருகே அமர்ந்தவன்”ஆக்ட்சுவலா உனக்கு என்ன பிரச்சனை…நான் கட்டாயாத்தாலி கட்டினதுனாலயா,அதுதான் பிரச்சனைனா நம்ம பேசி தீர்த்துக்கலாம்”

மெல்ல தன் தலையை திருப்பி அவனை பார்த்தவள் அதுவும் ஒரு காரணம் அதைவிட வேறு முக்கியமான காரணம் ஒன்னு இருக்கு, நான் நீங்க நினைக்கின்றமாதிரி கன்னிப்பெண்ணல்ல”

“என்ன  புரியலை”என்று முழித்தவனிடம்.

“நான் ஏற்கனவே ஒருத்தனால் வலுக்கட்டயாமாக உடலால் பயன்படுத்தபட்டவள்”

அவனுக்கு இது சிறிது அயிர்ச்சியை கொடுத்தது என்றாலும் மேலைநாட்டு கலாச்சாரத்தில் வாழ்ந்தவன் என்பதால் மனதை சமன்படுத்திகொண்டு

“ஓஓ…அதுல உன் தப்பு எதுவுமில்லையே.அவனைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டும்னு இருந்தியா”

இல்லை கொஞ்சமா பிடிச்சிருந்தது..இந்த நிகழ்விற்கு பின் அவனை வெறுக்கிறேன்.உடல்தான் பிராதானம் என்று எண்ணியவன் எனக்கு வேண்டாம்.அவனோடு எல்லாம் வாழமுடியாது.அதுக்காக உங்களோடு பின்னி பிணைந்து வாழணும்னு கட்டாயமில்லையே என்று தன் பேச்சை முடித்துக்கொண்டு எழுந்து சென்றுவிட்டாள்.

அர்ஜூன்தான் தன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

முன்னேபோன கடிக்குது…

பின்னாடி போனால் உதைக்குது… இது என்னாடா கல்யாண வாழ்க்கை என்று நொந்துக்கொண்டவன்.

ராஜூவை தேடிப்போனான் தன் துயரம் பகிர்வதற்கு…

தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *