அவனோடு என் இரவுகள் அழகானது
1 அவனோடு என் இரவுகள் அழகானது
ஆசிரியர் விஜயஸ்ரீ பத்மநாபன் ❤️
1
அது ஒரு அரசு வங்கி.. அதன் முற்பகல் நெரிசல் வேலைகளின் நடுவில் முன்முடி நெற்றியில் விழ, மாநிறமும் பட்டை மீசையும் அழகிய மாடல் போன்ற உடையுடனும் மேலாளர் கேபினில்.. அப்பதவியின் இருக்கையில் சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்தான் முரளிதரன்
காண்போர் மயங்கும் அழகன் ஒருவன்..
சுழல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் பொழுதே அவன் உயரம் அதிகம் என்பதை கம்பீர தோற்றம் கட்டியம் கூற.. இளமையும் அழகும் அறிவும் பொறுமையும் ஒரு போல யாருக்கும் அமையாதாம் இவனுக்கு அமைந்தது அதிர்ஷ்டமே…. ஒவ்வொரு பெண்ணின் கணவன் கனவுக்கு பொருத்தமானவன் முரளி.. இதற்கு மேல் என்ன சொல்ல!!
காரியக்காரன் தன் முன் உள்ள கணினியில் துளியும் அழுக்கில்லா தன் நீள வலிய விரல்கள் நர்த்தனமாட அதி வேகமாய் வேலை பார்த்துக்கொண்டிருக்க..அந்நேரம் போன் கனைத்தது…
முரளி கவனம் சிதறி திரையை எட்டி பார்க்க.. அம்மா காலிங்!! ம்ம்ம்..
இன்று நல்லநாள் வந்திருக்கும் பொண்ணு ஜாதகம் வைத்து பொருத்தம் பார்க்கவேணும் சொன்னாங்களே.. அதுபற்றியோ? இது பேச பேங்க் ஹவர்ஸ் ஏன்? யோசனையில் புருவம் சுழிச்சாலும் கேட்டே விடுவோம்..
“சொல்லுங்கம்மா..”
தன் முன் வைக்கப்பட்டிருந்த காசோலைகளை ஆராய்ந்த வண்ணம் கேட்க..
அவர் மூச்சு விடாது பதட்டதோடு பேசிய விடயம் கேட்டு.. ஆயிரம்வாலா வெடியை பொருத்தி விட்டது போன்று சரம் சரமாய் உள் நெஞ்சில் சப்தங்கள்.. இவ்ளோநேரம் இருந்த இதம் தொலைத்தான்
“அந்த குட்டிக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லம்மா.. இதை பற்றி என்கிட்டே பேசாதீங்க.. வேணாம்.. வச்சிடுறேன்..”
அழைப்பை துண்டித்தாலும் இயல்பு போல அன்று முழுமையும் வாய், சடங்கு வார்த்தைகளை பேசினாலும்… கை, அனிச்சை செயலாய் அலுவலகத்தில் வேலை செய்தாலும்.. போனில் சொல்லப்பட்ட செய்தியின் தாக்கம் முரளியை விடவில்லை..
சின்ன கழுதைக்கு ஆசையைப்பாரு! அடிக்கடி முணு முணுத்தான்..
என் இடுப்புக்கு இருப்பாளா? குட்டி நாய்க்கு உடம்பு பூரா கொழுப்பு.. அங்கிள் லட்சம் லட்சமா சம்பாரிக்கிறார் தங்கமா தாங்குறார்.. இவளுக்கு தின்னுட்டு இருக்க முடில.. கையில் மாட்டு.. காதை திருகி விடுறேன் ஏ! குட்டி! ஆசை படலாம் தப்பில்லை அதற்கு நான் தான் கிடைச்சேனா?!!
ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் தொடர் சிந்தனைகள்..
பொறுமையானவனையும் கோபம் கொள்ளச் செய்த குட்டி யார்?!
அவன் தூரத்து சொந்தமான ஸ்ரீனிவாசன் அங்கிள் பொண்ணு இன்பா தான் அவள்.. இருவரின் வீடும் ஒரே தெரு.. ஒரே இனம், ஒரே ஊர்க்காரர்கள் என்ற மெல்லிய பந்தம் உண்டு
பொருளாதாரத்தில் மட்டும் வேறுபாடு.. அவள் வீடு பரம்பரை பணக்காரர்கள்.. கணக்கில்லா சொத்துக்கள் பூர்விகத்தில் இருந்தாலும் வாரிசுகளின் படிப்பு என்று சென்னையில் ஒரு சொந்த வீடு.. வகை வகையா கார்கள்… ரகம் ரகமாய் உறவினர்கள் சொந்தக்காரர்கள் புடைசூழ.. அங்குமிங்கும் எப்பொழுதும் ஏதாவது ஒரு சந்தடி திருவிழா போல அவங்கவீட்டில் எல்லாமே ஒரு பிடி தூக்கலாய் தான் நடக்கும்..
இவர்களுக்கு அப்படியே எதிர் பதம் முரளிதரன் வீடு.. மெத்த படிப்பு .. அதற்குள்ள பெரிய பதவிகள்.. கல்வி மான்கள் கொண்ட குடும்பம்.. அலட்டல் பந்தா பற்றிலாம் தெரியாது.. அன்னமிடும் குடும்ப தலைவி தான் இங்கு எல்லாமே.. அவள் கையில் சம்பளத்தை கொடுத்து விட்டு ஹாயா ஈஸி சேரில் அமர்ந்து உண்டு உறங்கி உடல்கலையாமல் ஸ்டைலா வாழும்,87 எண்ணி எண்ணி செலவழிக்கும் மத்தியதர குடும்பம்..
அடிப்படை குடும்ப அமைப்பு ஒத்து வருமா??!! இதில் அந்த குட்டி நாய் முரளிதரனைத்தான் கட்டுவேன் வெளியில் பெண் பார்க்கக்கூடாது என்று வீட்டுக்கு வந்து சொல்லிட்டு போச்சாம்.. எம்புட்டு திண்ணக்கம்!!
பல்லைக் கடித்தான் முரளி..
பேங்கில் அன்றைய தன் பொறுப்பெல்லாம் முடித்து.. களைத்து வீட்டுக்கு வந்தாலும் முரளியின் தாயிடம் முதல் கேள்வி..
“என்னாச்சு?”
அவரோ சீரியஸ் முகபாவம் வச்சு இவனை பார்த்துக்கொண்டே, நீ போய் பிரஷ் ஆகிட்டு வா சொல்றேன்.. என்று ஒருவித திகில் எபெக்ட் தர.. கடுப்பானான் முரளி..
அம்மா எப்பவும் இப்படித்தான் சின்ன விஷயத்தை கூட பெருசான பின்னனி இசையோடு சொல்லி பிரஷர் பண்ணுவாங்க.. சலித்துக்கொண்டு.. சுத்தமாகி இலகு உடையணிந்து ஹாலின் சோபாவில் அமர, சூடா காபி கையில் தந்து அருகில் அமர்ந்தார் சுப்பு..
இன்னும் பேசவில்லை.. இப்படி சும்மா நகரும் நிமிடங்கள் முரளிக்கு பெரும் இம்சையை கொடுக்கிறது அவன் தாய்க்கும் தெரியவில்லை..
இவனுக்கும் தானே வலிய கேட்கணுமா? ஆர்வப்படுவது போல தெரிஞ்சிருமோ? தயங்கினான்..
அந்த நேரம் வெளியிலிருந்து முரளியின் தந்தை ராமச்சந்திரன் வர, சுப்புவும் அவரும் ஏதோ ஜாடை சிக்னல்கள் செய்த மாதிரி மகனுக்கு பட்டது.. தன்னை சுற்றி என்ன நடக்குது??!! இதெல்லாம் இதுவரை அவன் காணா சமாச்சாரங்கள்..
காபி முழுக்க குடிச்ச பின்.. தொண்டையை கனைத்து, தயக்கம் விலக்கி.. என்னதான் விஷயம் கேட்போம்? நாம படிச்சிருக்கோம்.. மெச்சூரிட்டியா இருக்கோம்.. எதுவென்றாலும் நேருக்கு நேர் சந்திப்பது தான் உத்தமம்..
அம்மா சொல்லுங்க என்னாச்சு? என்ன நடக்குது இங்க?
அவர் இன்னும் முகத்தை ஏழு முழத்துக்கு தூக்கி வச்சி இவன் பேச்சுக்கு கனம் கொடுக்க..
ஸ்ஷ்ஷப்பா! முடிலம்மா! முடில! அவனுக்கு பெற்றோரிடம் கோபம் கொள்ளத் தெரியாது.. ஆனால் இன்று தாய் போடும் சீனுக்கு எகிற தோணுச்சு
“அப்பா! என்ன அம்மா ஒன்னும் பேச மாட்டுறாங்க”
இங்க விட்டு அங்கு தாவினான்..
“லச்சு என்கிட்டேயும் சொன்னா தம்பி! அந்த பொண்ணு உறுதியா உன்னைத் தான் கட்டிப்பேன் நிக்குதாம்.. இப்போ சீனியை பார்த்துட்டு வரேன்.. அவரும் திகைச்சி போய் தான் உக்கார்ந்திருக்கார்..”
“அவ ரொம்ப சின்ன பொண்ணு எனக்கு கட்ட இஷ்டமில்லைப்பா..” லேசா எரிச்சல் மண்டிய குரலில் முரளி..
“முரளி .. இன்பா நல்ல .. “
“நீங்க கொஞ்சம் சும்மா இருங்கீங்களா??!!.. இது என் வாழ்க்கை! புரிஞ்சுதா? எனக்கு இதுமாதிரி பொட்டு பொடிசு கூடலாம் குடும்பம் பண்ண முடியாது டபிள் டிகிரி வேலைக்கு போகும் பொறுப்பான பெண் தான் சூட் ஆகும்.. இந்த பேச்சை இதோடு விடுங்க” ஏதோ சொல்ல வந்த தாயை தடுத்து நிறுத்தி.. குரல் உயர்த்தி தன் மனதை கூறி அவ்ளோதான் முடிந்தது என்பது போல.. டீவியை உயிர்ப்பித்து செய்தி சேனலை வைத்து பார்க்க ஆரம்பித்து விட்டான்..
பெரியவர்கள் இருவரும் நெற்றி சுருக்கி யோசனையில் அமர்ந்திருந்தனர்.. முரளி கேட்கும் பெண் எளிதில் கிடைக்கும் அவ்ளோ வரன்கள் அணுகி இருக்கிறார்கள்.. இடையில் “இன்பா” வந்ததுதான் கலாட்டா தொடங்கி இருக்கு..
ஆயிரம் பொய்கள் சொன்னால் தான் ஒரு கல்யாணம் நடக்குமாம்.. இங்கோ இந்த பேச்சு தொடங்கிய முத நாளே கலகம்..
“சீனி வீட்டிலும் எதிர்ப்பு இங்கு மகனும் வேண்டவே வேண்டாம் என்கிறான்.. விட்டுடு சுப்பு”
“அந்த பொண்ணு வாழ்ந்தால் இவங்களோடு தான் ஆசை வச்சுட்டேன்.. எடுக்க முடியாது.ம் அவர் யாரை கட்டினாலும் என்னை யாருக்காவது கட்டி வைக்க முயன்றாலும் செத்து போவனே தவிர முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன்.. அடம் பிடிக்குதேங்க”
இதை நேரடியா இன்பா சுப்பு லட்சுமி கிட்டேயே எந்த அரிதாரமுமில்லாது அதிகாரமாய் அறிக்கையிட ஆடித்தான் போய்ட்விட்டடார் அவர்.. அத்தனை அழுத்தமாய் சொல்வது என்றால் அப்பெண் எவ்ளோ மனக்கோவில் கட்டியிருக்கும் புரிந்தது.. சுப்பு நல்ல மாமியாரோ இல்லையோ? நிச்சயம் நல்ல தாய், இந்த பெண் கிடைக்க முரளி கொடுத்து வைத்தவன்.. கடைசி வரை என் பிள்ளையை அன்பா பார்த்துப்பா.. அது மட்டுமே அக்கணம் நச்சுன்னு தோன்றியது..
வெளியில் யாரையோ பார்த்து தேடி கண்டுபிடிச்சி ஜோடி சேர்ப்பதுக்கு இன்பா அருமையான பெண்ணல்லவா?!!
செல்வாக்கு, ஆள் பலம், வசதியான குடும்பம் இங்கு சம்பந்தம் செய்தால் இன்னும் முரளிக்கு அந்தஸ்து கூடுமே! நாமா கேட்க முடியாது இன்பா எட்டா கனி.. தானா மடியில் விழும் பொழுது எதுக்கு வேண்டாம் சொல்லணும்?! அவ்ளோதான்.. அன்னியத்தில் பெண் பார்க்கும் யோசனையை உடனே நிறுத்தி விட்டார்..
மகனின் எதிர்ப்பு அதிர்ச்சி தந்தாலும் சிறுது நாள் ஆறப் போட்டுட்டு பிற்பாடு பேசி பேசி மகன் மனசை கரைச்சு பார்ப்போம் அதான் அதிகம் பேசாதிருந்தார்.. பெண்பார்க்கும் பொறுப்பை தள்ளி விடும் இந்த சலிப்புக்கும் ஒரு முன் கதையுண்டு.. அது மூத்த மகன் தினகரன் விஷயத்தில் கிடைத்த கசப்பான அனுபவம்
இராவில் மூத்த தம்பதியர் இருவரும் தங்களுக்கு தங்களுக்கேயான தனியறையில் ஒரே கட்டிலில் படுத்த பொழுது.. இதே சிந்தனையை என்ன? என்னவென்று சுப்புலட்சுமி கிடக்க.. அவரின் காட்டன் சேலை சுற்றிய இடுப்பில் நரம்புகள் ஓடிய வெள்ளையும் கருப்பும் முடிகள் கொண்ட கை உறவுக்கு அழைப்பு கொடுத்து அணைக்க..
ப்ச்சு.. என்னதிது?
இதான்!! இருவருக்கும் புரியும் வண்ணம் வாசம் பிடித்து நேச அணைப்பு
சுப்புவுக்கு உறவு நிலை கூட வேண்டாம்.. இது போதும் ஒருவர் சூட்டில் ஒருவர் மனமொத்த அணைப்பு.. இருந்தாலும் சிணுங்கி
“விடுங்க.. உடம்பு என்னதுக்காகும்? பேரன் பேத்தி எடுத்தாச்சு இன்னும் என்ன? போங்க போங்க”
“அதை விடுடி.. உனக்கு புருஷன் தானேடி எப்போவும்”
“ம்ஹும்.. ரொம்பத்தான்..சின்னவனுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றோம் உங்களுக்கு இல்ல தினுப்பா “
பேச்சு இருவருக்கும் பேச்சா இருந்தாலும் குழைவும் இணக்கமும் வேறாயிருந்தது.. ராம்கி பிடியோ இன்னும் குரங்கு பிடியானது.. கணவனின் வன்மையை சுப்புவும் இரசித்தார்
மனுஷன் வெளியில் பார்க்கத்தான் ஒன்னும் தெரியா பப்பாவா அளவாய் பேசி, லேசாய் கூச்சம் கொண்டு மற்றவர்களோடு பழக சிரமப்படுவார்.. ஆனால் தன் மனைவியிடம் மட்டுமே மொத்த சேட்டை.. அவரின் ஒரே உலகம் சுப்பு லட்சுமி தான்.. அவரிடம் மட்டுமே முட்டுவார் தேடுவார்.. எந்த கெட்ட பழக்கமும் இல்ல.. ஆனால் இது மட்டும் அடைமழையா பொழிவார்.. டெய்லி வேணும்..
என்றும் அவரின் சுப்புலட்சுமி முதல் இரவுக்கு வந்த புதுப்பெண்தான்.. அவ்ளோ பாசம்!
வார்த்தையால் அவருக்கு அதை சொல்ல தெரியாது.. கண்ணும் தேடலும் பரிதவிப்பும் கோபங்களுமே அவரின் உண்மை காதலை சொல்லும்.. இவர்களுக்கு பெரியோர்கள் பார்த்து வைத்த திருமணம்.. வெற்றி பெற்றது சுப்புவின் பொறுமையும் தியாகமும் மட்டுமே காரணம்.. இல்லன்னா இந்த மாதிரி சைக்கோவையெல்லாம் யார் கூட வச்சுருப்பா??!!
வலது பக்க வைரக்கம்மலின் கற்களின் மீது முதல் மழைத்துளி போல கணவன் முத்த ஈரம் சொட்ட.. இன்னும் பின்னோடு நெருங்கி..
“வேணாம் தினுப்பா” மறுப்பை உறுதியா மனைவி
அவருக்கு காது கேட்கவேயில்ல.. அனுபவ கைகள் அந்த பேரிளம்பெண்ணின் அங்கமெங்கும் உலா வர.. அவர் ஈர்ப்பின் தேடல் முழுமையாக இருக்கும் பொழுதில் இவரின் ஏற்பு பாதியாகவாவது இருக்கும்ல.. இசைய இசைக்க.. இரச லயம்
“இது இல்லாமல் தூக்கம் வரலேடி” அசைவாடிக்கொண்டே ஆகச்சிறந்த போதையில் கண் சொக்கி ராம்கி புலம்ப.. சுப்பு வெட்கத்தில் அவர் அடியில் புதைந்து கொண்டார்.. இந்த சின்ன மீனுக்கு ஆசைப்பட்டு தானே பெரிய மீனான வாழ்க்கை பிடிபடுது பெண்களுக்கு..ம்ம்ம்
கல்யாணம் என்றாலே இது உன் ஆண் உன் பெண் இருவரும் என்னவேணும்னாலும் செஞ்சுக்கோங்க.. புது குடும்பம் மட்டும் உருவானால் போதும் விதி சமைப்பது நம் சமூக கட்டமைப்பு..
கல்யாணம் என்ற அமைப்பிற்குள் சூட்சமங்கள் உண்டு.. குடும்பமில்லாது இருக்கும் தனிப்பட்ட ஆணும் பெண்ணும் சமூகத்திற்கு பயம் தருபவர்கள்..
குடும்பத்தில் இருப்பவர்கள் சட்ட திட்டங்களுக்கு கட்டு படுறாங்க.. வம்பு சண்டைகளில் ஈடுபடுவதில்லை.. என் மனைவி! என் பிள்ள! எனும் பாசம் வரும் பொழுதுதான் அந்த மனிதன் பண்படுகிறான்.. சகித்து பழகி சுமுகமாக வாழும் ஒரு மனிதனை, அவன் அளப்பரிய ஆற்றலை கட்டுக்குள் கொண்டு வந்து சோசியல் மிருகம் ஆக்குவது திருமணம்..
இந்த ஜோடிகளின் நிலை.. முன்பெல்லாம் உறவு கொள்ளும் பொழுது சீக்கிரம் முடிந்து போவது இப்பொழுதோ வயதோ அல்லது விளைந்த உடலின் தளர்ச்சியோ மனத்தின் நிதானமோ என்னவோ நீண்ட நேரம் எடுக்க..
“சீக்கிரம் முடிங்க தினுப்பா.. “
“ராம் ன்னு கூப்பிடுடி லச்சு.. உன் பிள்ளைகளுக்கு அப்பா தான் ஆனா இந்த நேரத்திலும் நியாபகம் பண்ணக்கூடாது “
“இந்த நக்கல் தானே வேணாம்ங்குறது
“பண்ணலடி..ராம் கூப்பிடு”
“கிளவா வேணும்னா கூப்பிடுறேன்.. ராம் மட்டும் வேணாம்..”
“சொல்லுடி.. கிழவி” இன்னும் தொடையுரசி குதிரை ஓட்ட..
“சொல்லுறேன் உங்கம்மா முன்னாடி..” அக்காதற்பொழுதிலும் கிண்டல் லச்சு
“பார்த்தியா மருமக குசும்ப?!! ராம்கி” சுள்ளென்று காய..
“போயா! போயா! அம்மா கோண்டு..” படு நக்கலாய் மொழிந்து.. தன் மேலே மராமரமாய் படர்ந்து கிடைந்தவரை மிகுந்த பிரியத்தோடு அணைக்க அவரும் உடும்பாய் பிடிக்க, கசக்க, நெகிழ்த்த ஆனந்த சங்கமம்..
ஜோலி பார்த்து களைத்த கணவருக்கு சூடாய் சத்து பானம் கலக்கி கொடுத்து.. அவர் சுல்தானாய் கட்டிலில் சாய்வாய் அமர்ந்திருக்க.. முட்டிக்கு கீழே இதமாய் அமுக்கியபடி..
“தினுப்பா.. இந்த இனிபா பொண்ணு இப்படி பண்ணுதே .. நம்ம குடும்பத்துக்கு சரி பட்டு வருமா?”
“அப்பவே வேணாம் சொன்னேனே.. நாம ஆசைப்பட்டாலும் முரளிக்கு பிடிக்கணுமேடி”
“அதெல்லாம் பார்க்க பார்க்க பிடிக்கும் தினுப்பா”
“எப்படி உன்னை போலவா?”
“முரளி பற்றி பேசும் பொழுது எதுக்கு என்னை இழுக்குறீங்க.. ஆமாம்.. நான் உங்களை விட கருப்புதான் போயா.. புதுசா பொண்ணு பார்த்துக்கோ.. இங்கு கலர் இவ்ளோதான்.. “
ஊடல் கொண்டு கால் அமுக்குவதை விட்டு, கட்டிலின் ஓரத்தில் படுத்துக்கொள்ள.. அச்சோ! சுகம் போச்சோ! பீலில் ராம்கி ..
“நீ தாண்டி என் பாக்தாத் பேரழகி..”
“பொய்..”
பொய்யே என்றாலும் உன்னையன்றி யாரும் பிடிக்காது லச்சு.. முன்பு எப்படியோ? இன்று சொல்றேன்.. நீ இல்லன்னா நான் இருக்க மாட்டேன்டி.. ராம்கி.. உள்ளம் பகர.. பொசுக்கென்று கண்ணில் நீர் கட்டியது சுப்புலட்சுமிக்கு சட்டுன்னு எழுந்தவர்..
“என்னதிது? இப்படி ஒரு மார்க்கமா பேசிக்கிட்டு.. விடுங்க.. இந்தாங்க தண்ணீ குடிங்க..” பேச்சு மாற்ற தண்ணீர் பாட்டில் தேட..
“நீ முதலில் கண்ணீரை தொடைச்சுட்டு தேடு.. எதிரில் வச்சுட்டே எங்கேயோ துழாவுர.. லச்சு”
“கிளவா இனி இப்படி பேசினா எங்கம்மா வீட்டுக்கு போயிருவேன் பார்த்துக்கோ..” கண்ணை முந்தானையில் துடைத்து.. தண்ணீர் கொடுக்க..
“ஹாஹான்.. 35 வருஷம் போவாதவ இப்போ போவியோ? என்னை விட்டு?”
உயிர் ஒன்று போனபின் தான் பிரிவு ஒன்று வரும் அன்பே.. என்றோ சுயம் இழந்து போன சுப்புலட்சுமி எனும் கவிதைக்காரி உயிர்பெற்று மனதுள் கிறுக்க.. அதும் கூடுதல் வேதனை தர.. சுப்பு குமுறி குமுறி அழுகை.. அவர் உலகமும் இராமச்சந்திரன் தான் .. வயதாக ஆக கோபம் வேகங்கள் நீர்த்து போய் கூட இருப்போராவது நம்மோடு இருப்பார்களா இறப்பு பயம் கொடுக்கும் ஞானம் திகிலானது..
இங்கு தன்னறையில்..
பதவி உயர்வு பெற வேண்டிய தேர்வுகளுக்கான பாடங்களை புரட்டி குறிப்பு எடுத்துக்கொண்டிருந்த முரளியின் செல்லில் வினோத சப்தங்கள்..
என்னது? என்று எடுத்து பார்த்தால் இனியாவின் வாட்சப் தொடர் செய்திகளின் ஒலி அது
கோடி முத்தங்கள் சலிக்காது போட்டு அடித்துக்கொண்டிருந்தாள் இனியா..
உன்னோடு என் இரவுகள் அழகானது முர்லி ணா..
முன்னதெல்லாம் ஆங்கிலம்..கடைசி செய்தி தமிழ்.. பல்லை நற நற ன்னு கடித்தான் முர்லி..
என்ன பண்ண? 21k கிட்ஸ் பூரா ஆங்கில வழி கல்வி.. காதல் சொல்ல தமிழ் உபயோகம் பண்ணாலும் பிழைகள் கொடூரம்..
நம் இனியாக்கு லவ்வை போல தமிழும் தகராறு..
இந்த பிடிவாதக்காரியின் காதல் காயோ? பழமோ? முரளியின் கைகளில்..
