அவனோடு என் இரவுகள் அழகானது
9
என்னடா உன் ரூமுக்கெல்லாம் வரா?
தெரில.. உதட்டில் நெளிந்த சிரிப்பை மீசைக்குள் ஒளித்து மகன் கள்ளம் ..
ஒன்னும் சரியில்ல.. முத நாளாச்சும் அங்கிள் அவங்க கிட்ட பேசிட்டு வரேன் அனுமதி கேட்டா.. நேத்து அபி பிள்ளையை என் கிட்டே தள்ளிட்டு உன் ரூமுக்கு வரா.. என்ன நடக்குது??
பொண்ணு கேட்டு வர சொல்லுறா வேறொன்னுமில்ல..
போகவா? நானும் அப்பாவும்..
நானும் வரவா?
இப்போதைக்கு நீ வேணாம்.. நான் தீபா கிட்டே பேசி அங்கு நார்மல் யா என்று சரி பார்த்துட்டு போறேன்.. தினா கிட்டே சொல்லவா முரளி?!
சொல்லுங்க அவனும் ஏதாவது கருத்து சொல்லலாம்..
ஆனா முரளி,..
சொல்லுங்க..
இனியாவை கண்டிச்சி வை.. பொசுக் பொசுக் ன்னு வரா
இங்கேயே இருந்திடவா கேட்டா ..
ஹாங்.. ரொம்ப விளைச்சல் தான்..
இப்படி வாசலை திறந்துவிட்டா மருமக அப்படித்தான் செய்வா.. நீங்க குடுமி பிடிச்சு உள்ளே விடக்கூடாது..
அட நீ வேற.. இனியா நான் பார்த்து வளர்ந்த பொண்ணு அதை போய் முகத்தில் அடிச்ச மாறி சொல்ல முடியாது.. நீயே எடுத்து சொல்லி பொறுத்துக்க சொல்லு..
அவ அடங்க மாட்டா ம்மா..
அப்போ வர முகூர்த்தம் பார்த்திடலாம்.. அப்பா வரட்டும்..
உடனேவா? திருமணம் மலைத்தான் முரளி..
வேலைக்கு போகும் முன்.. இனியா.. என் பேரண்ட்ஸ் உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்க வராங்க.. ஹாப்பியா?
இல்ல.. பதில் வர
என்னடி..
தாலியோடு வர சொல்லுங்க.. நீங்க வேணும்..
பன்னி அவசரம் எல்லாமே உனக்கு
உங்களுக்கு தோணலியா
நடக்கும் போது தானே நடக்கும்டி
இல்ல இப்போவே வேணும்..
என்ன வேணும்?
ஏதோ?
அதான் எது?
முரளி
பேர் சொல்லாதே
சொல்லுவேன் போடா
வந்தேன்னா பார்த்துக்கோ
ஒன்னும் பண்ண மாட்டீங்க.. அதான் தெரியுமே
சீண்டாதே இனியா
ஹுக்கும் சீண்டிட்டாலும்….
அடியேய்.. என்ன தான் வேணும்
உன்னோடு என் இரவுகள் வேணும்
ம்ம்ம்.. காத்திரு
முடியாது… பயமாயிருக்கு
ஏன்?
இவ்ளோ தூரம் வந்த பின் பிரிச்சுடுவங்களோ ன்னு
யார்
அப்பா
என்ன சொல்றாங்க மாமா
சண்டை டெய்லி
ம்ம்ம்.. எல்லாம் உன்னால் தான்..
இவ்ளோ அப்போ முரண்டு பிடிப்பாங்க தெரியாது.. முரளிண்ணா.. ஆசை வைக்கும் பொழுது தெரில..
இப்போ கூட விட்ரு.. இனியா தொண்டை கர கரக்க முரளி சொல்ல..
உயிரை விடவா
ஏய் இப்படி பேசாதே
நீங்க மட்டும் சொல்றீங்க
சைக்கோ போல இருக்காதேடி.. ஒரு முடிவுக்கு வா
நான் எப்பவோ வந்துட்டேன் நீங்க தான் நாள் நட்சத்திரம் பார்த்துட்டு லேட் பண்றீங்க. ஒரு சின்ன கிப்ட் க்கு கூட வழியில்லை.. வசனம் மட்டும் பறக்குது
என்னடி தனியா பேசிக்கிட்டு இருக்க.. உல்லாசியா கார் ஒட்டிக்கிட்டே கடலை இனியாவிடம் முரளி..
கொஞ்சம் கொஞ்சமா கெட ஆரம்பிச்சிருந்தான்..
சு…ம்மா.. ஒரு அங்கிளை லவ் பண்ணிக்கிட்டு நான் படுற பாடு..
நான் அங்கிள்.. ம்ம்ம்.. ஏன்டி வீட்டுக்கு வந்தப்ப ஒரு அஞ்சு நிமிஷம் இருந்திருந்தா கிப்ட் நிறய தந்திருப்பேன்.. ஓடிட்டே..
தெரியுமே..
என்ன தெரியும்..
ஏதோ மேலே குத்துச்சு.. கல கலன்னு இனியா சிரிக்க..
உண்மையில் அப்படி இல்லை.. நாணம் கொண்டு முரளி ..
பொய்சொல்லி போடி.. மிக மெல்லிய குரலில் மறுக்க..
இல்ல..
இல்லடி.. அவ்ளோ ஒன்னும் நாகரீகம் இல்லாதவன் இல்லடி நான்..
நான் பார்த்தேன் பெருசா இருஞ்சு..
இதோ பாரு இனியா கொச்சையா விளையாடாதே .. குரல் உயர்த்த..
நான் உங்க கண்களை சொன்னேன்.. நீங்க என்ன நினைசீங்க ண்ணா.. அப்பக்கம் குறும்பில் குரலை ஊற வைத்து இனியா மிழற்ற..
இதுக்கு இவன் என்ன சொல்வான்? மன்னிச்சி விட்டுட்டான்..
நமக்கு 4 பிள்ளைகளாவது வேணும்ங்க.. இனியா பேச
போலீஸ் ல பிடிச்சிக்கும்.. ரெண்டு தான்
நோ நாலு வேணும்.. போங்க போங்க..
கவர்ன்மெண்ட் சொல்வது தான் கேட்கணும்..
எனக்கு நாலே போதாது.. லிமிட் பண்ணி தான் சொல்லி இருக்கேன்.. போங்க உங்க பேச்சு கா.. நாலுக்கு ஒத்துகிட்டா பேசறேன்.. இப்போ வச்சுடுறேன்.. நான் கோவமா இருக்கேன்.. சட்டுன்னு கட் பண்ணிட்டா இனியா..
காதலாய் பேசலாம் என்று முதன் முதல் முரளி முயற்சிக்கும் பொழுதே.. குழந்தை பற்றி ஊடல்..
இவளை என்ன செய்ய? காலம் பூரா எப்படி தள்ள? ஒன்னுத்துக்கும் லாஜிக் தெரில.. நினைப்பதெல்லாம் நடந்துரணும் குட்டி நாய்க்கு.. கொஞ்சிக்கொண்டான்..
நேற்று இரவு சிறிது நேரம் இருந்திருந்தாலும் எல்லை மீறி இருப்பான் .. இத்தனை வருட பிரம்மச்சரியம் விட்டு.. அப்படி கொஞ்சி கவிழ்த்து உணர்வுகளை கட்டவிழ்த்து விட்டது அவளே! அவளே!
முன்பு இவள் சிறுப்பெண் பக்குவமில்லாதவள் நினைத்த மனசு.. அவளே வேணும் அடம் பண்ணது.. மெல்ல மெல்ல வைரசாய் சிந்தை புகுந்து அகம் வென்றே விட்டாள்.. இனி அவளே வேண்டாம் என்றாலும் இச்சுந்தர புருஷன் விட மாட்டான் .. இனியா தன் மனைவி இதயத்தில் பதித்துவிட்டான்..
முரளிக்கு இப்போது ஒரே கவலை நாலு பிள்ளைக்கு எப்படி பீஸ் கட்டி படிக்க வைப்பது?
மாடே வாங்கலயாம்.. பால் யாருக்கு கொடுப்பது? சண்டையாம்.. கல்யாணமே ஆகல.. பிள்ளை கணக்குக்கு ஊடல்..
