அவனோடு என் இரவுகள் அழகானது
16. அவனோடு என் இரவுகள் அழகானது
“தீபா” சொல்லி பார்த்தான் சும்மாவாச்சும் முரளி எதிர்ப்பக்கம் சத்தம் வராததால் .. உடனே பதில் வந்தது
“தம்பி இதோ பாருங்கப்பா.. உங்க மேலே மரியாதை வச்சிருக்கேன்.. கெடுத்துக்காதீங்க..”
தீபா காரமாய்ச் சொல்ல..
அவரின் குரலில் வளர்ந்த குழந்தை ஒன்று ‘இதோ பாரு! உன்னை கொன்றுவேன்’ சொன்னது போல இருக்க.. சிரித்துக்கொண்டான்..
“நீங்க முரளி கூப்பிடுங்க.. ஈசி..”
இப்போ உனக்கு என்ன தான்பா பிரச்சனை முதலில் அதை சொல்லுப்பா.. எரிச்சலின் உச்சத்தில் தீபா..
“அடல்ட்ரேசன் பத்தி ஒன்னுமே தெரியாத அப்பாவி பையன் கிட்டே பிழிய பிழிய அழுது.. நியாயம் கேட்டா அவனுக்கு என்ன தெரியும்? பேங்க் மானேஜர் தான் ஆனா நான் பிஞ்சு பீஸ் தான் ஆன்ட்டி.. கல்யாணம் தெரியாது.. ரெண்டு பிள்ள பெற்று உங்களை போல பெரிய குழந்தையா வளர்க்கல.. அறிவு இருக்கு அனுபவம் இல்ல மேம்.. உங்க தொல்லை எனக்கு தாள முடில.. ” அவர் மனம் லேசா மாற்றும் விதமாய் தன் சங்கடத்தை கேலி போல சொல்லி முரளி கலாய்க்க..
கல்யாணமானபுதிதில் அடிக்கடி தீபாவுக்கு முகம் சிவக்கும் கணவன் ஒற்றைப் பார்வைக்கே.. பிள்ளைகள் பெற்று, பேணி, வருடங்கள் கடந்த பின் அந்த உணர்வுகளுக்கு வேலையே இல்ல.. ஆனால் என்ன வினோதம்! .. இந்த இக்கட்டான நிலையிலும் அப்படி அத்திப்பூத்தாற் போன்று கன்னம் சிவந்தது.. அடிவயிறு குழைந்தது..
அச்சோ! உண்மை தானே! ஆதரவாய் பேசினான் என்று அவனையே போய் மொய் மொய் ன்னு மொய்ச்சா !! ச்ச்சீ! ச்சீ.. நீயெல்லாம் ஒரு பொம்பளையாடி??!! திட்டிக்கொண்டார்.. லேசாய் உணர்வு மயக்கங்களிலிருந்து விடுபட்டு..
“சாரி சாரி சாரிங்க முரளி.. உங்களை இனி அழுது கஷ்டப்படுத்த மாட்டேன்.. எனக்கு என்ன செய்வது ஒன்னும் பிடிப்படல்..இப்போ மட்டும் பாதை சொல்லுங்க.. யோசிக்கிறேன் அப்புறம் தொல்லை பண்ணமாட்டேன்” அவசர அவசரமாய் பேச..
“யோசிப்பதாய் மட்டும் இருந்தால் நான் போன் வச்சுடுறேன் தீபா..”
என்னடா இன்னும் தீபா சொல்றான்?!! ஏற்க மனம் இல்ல..
“சரி வச்சுடுங்க” கட் பண்ணிட்டார் தீபா.. புருஷன் குழப்பி வச்சது ஒரு பக்கம் எரிமலை குழம்பாய் வெடித்து சிதறி வானவேடிக்கை நடக்க.. முரளி ஏற்படுத்திய குழப்பம் அவரை சோர்வடைய வைத்தது..
தன் ஹாண்ட் பேகில் என்ன இருக்கு என்று தேடிப்பார்க்க.. பர்ஸில் பணம் கொஞ்சம் தான் இருந்தது.. அதும் இந்த வாரம் வீட்டு செலவுக்கு கவனம் தந்தது… நகை என்று உடம்பில் பார்த்தால் தாலி, வளையல், கம்மல், சில மோதிரங்கள்.. பசங்க கழுத்தில் காதில் சின்ன சின்ன நகைகள் பிள்ளை பண்டம் போல.. அவர் சேர்த்து வச்சுருக்கிறது பூரா லாக்கரில்.. உருப்படியா இருக்குமா?
வேறேன்ன என் கிட்டே சேவிங்ஸ் இருக்கு? யோசித்து பார்த்தால் அனைத்தும் கணவனுக்கு அள்ளி அள்ளி கொடுத்து அவன் பேரில் சொத்தாக இருந்தது.. அத்தனையும் ஏதாவது பிசினஸ் லோனுக்கு ஈடா பேங்கில் இருக்கு.. ரெண்டும் பெண் பிள்ளைகள்.. எதிர்காலம்??!! நெஞ்சு வெடித்து போனது தீபாவுக்கு.. இதான் முரளி அவசரப்படாதீங்க.. உங்க இடத்தை நீங்க கெட்டியா பிடிச்சுக்கோங்க.. பவர் உங்களுக்குத்தான் சொன்னாரோ?
லேசா அவன் அறிவுரை பிடிபட்டது..
அப்போ நான் ஏமார்ந்தது?
“”நீங்க செத்து போய்ட்டீங்க..” அதையும் அந்த பையன் முடிச்சிட்டானே! “
“பிள்ளைகளுக்கு நன்மை என்றால் அங்கு உங்க வீட்டில் சும்மாவாவது சேரில் உக்கார்ந்துகோங்க” போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு கீதை சொன்ன கண்ணனாய் முரளி தெரிய.. கவலையில் புழுவாய் அழுது துடிக்க ஏங்கிய மனப்பேயை ஓட்டி விட்டு.. சுத்தமாய் உயிர் வெறுத்து திரும்பவும் தன் வீட்டுக்கு போக வேண்டிய முடிவை எடுத்தார்..
அண்ணியிடம் அதைச் சொல்ல..
“ரெண்டு நாள் இருங்களேன் அண்ணி.. உங்கண்ணன் என்ன சொல்றாங்க பார்ப்போம்..”
“அங்கேயே இருக்கேன்.. அண்ணன் எனக்கு செய்கிற நல்ல விஷயத்த எங்க வீட்டுக்கு வந்து செய்யட்டும்..”
“ம்ம்ம்.. நிஜமா உங்களை இப்ப அனுப்ப பிரியமில்ல அண்ணி.. ரெண்டு பிள்ளைகள் உங்க கூட இருக்காங்க என்ற தைரியத்தில் அனுப்பறோம்.. உங்களுக்கு எப்பவும் எல்லாத்துக்கும் பின்னாடி எப்பவும் தூணாய் நாங்க நிப்போம்.. மனசை மட்டும் விட்ராதீங்க.. ” கல்பனா அன்பாய் சொல்ல.. கொஞ்சம் தெம்பானார் தீபா..
“தான்க்ஸ் அண்ணி..”
“ச்சூ.. இப்படிலாம் சொல்லி அந்நியம் ஆக்காதீங்க..”
அதே நேரம் தீபா அண்ணன் அசோக் வீட்டுக்குள் வர.. கிளம்பி நின்ற தங்கச்சி பார்த்து..
“என்ன? இன்னேரம் எங்கே போறே தீபா?” பதற..
“எங்க வீட்டுக்கு மாமா.. இந்த அம்மாக்கு அறிவே இல்ல.. எனக்கும் அபிக்கும் அங்கு போக பிடிக்கவே இல்ல.. இவங்க.. ” தீபா பேசும் இனியா முந்த.. சப்புன்னு அறைந்தார் தீபா.. தன் செல்லை தந்து..
“வீட்டுக்கு போக கேப் புக் பண்ணு”
அசோக் புரியாத புதிராய் மனைவியை பார்க்க.. கல்பனாவும் தீபாவின் முடிவை லேசா அவருக்கு சொல்ல..
“அப்போ உன் வீட்டுக்கு போறே?..”
“ம்ம்ம்.. “
“என்ன திடீர்னு? மதியம் வக்கீல் பாரு.. சொந்தகாரங்களை கூப்பிடு பஞ்சாயத்து வை ன்னு ஆவேசமா நின்ன?”
ஆயாசம் வந்தது தீபாவுக்கு.. அப்போதைய மனநிலை அப்படி.. இப்ப?! முரளிதரன் எல்லாம் மாத்திட்டானே!!
“செத்து போய்ட்டா அந்த தீபா!” கண்ணில் பொங்கி வந்த நீரை சேலை முந்தியில் தங்கை துடைத்து சொன்ன பொழுது உயிர் இருப்பது அண்ணனுக்கு புரிந்தது..
“கல்பனா..”
“சொல்லுங்க மாமா..”
“எனக்கு ரெண்டு செட் ட்ரெஸ் எடுத்து வை.. இனியா கேப் வேணாம்.. மாமா கூட வரேன்.. பார்ப்போம் மச்சான் என்ன பண்றாரு”
“சண்டைலாம் வேணாம்ண்ணா”
“அது உன் புருஷனை பேச்சைப் பொறுத்தது.. நம்ம அப்பா அம்மாக்கு வயசாகி போச்சு அவங்களை முன் வச்சா சுகர் பிரஷர் ஏறும் அவங்கள உள்ள வர நான் விட மாட்டேன்.. ஆனா உனக்கு நானிருக்கேன் தீபா.. கூடவே இருப்பேன்..”
“நல்லதுண்ணா.. ஆனா என் குடும்பத்தின் இந்த நெகட்டிவ் உனக்கும் வர விரும்பலண்ணா. நான் மட்டும் போறேன்.. தைரியமா இருக்கேன்.. எனக்கு உதவி தேவைப்படும்போது உன்ன கூப்பிட்டுக்கிறேன்..”
“அட வா நீ தீபா.. இந்த நேரத்தில் கூட நான் உன் கூட இல்லன்னா “பிறந்தவன்” சொல்லிக்கிறது அசிங்கம் தீபா.. வா போலாம்!”
தீபா அண்ணன் அசோகன் குண்டு தான்.. அப்பாவி தான்.. பணம் மட்டுமே பண்ண தெரிந்த ஆண் தான்.. நல்லா தூங்குவார்.. வஞ்சனையில்லாது சாப்பிடுவார் தான்.. தேக பயிற்சியில் ஆர்வமில்லாதவர் தான்.. பட்டியலிட குறைகள் இருந்தாலும் குடும்ப உறவுகளை நேசிக்கும் உன்னத ஆத்மா..
பின்னிரவில் இவர்கள் வீட்டிற்கு சென்ற பொழுது வீடு திறந்திருந்தது.. நேற்று வரை உறவாயிருந்த உயிர்ப்பாய் எல்லாமுமாயிருந்த வீடு.. இன்று தீபாவுக்கு அதை ஜட பொருளாய் தெரிரிந்ததை என்ன சொல்ல? இதான் புத்தர் சொன்ன பற்றா? வெறுப்பு தட்டினால் ஞானம் வருமோ?! வீட்டின் அத்தனை விளக்குகளும் அவசியமில்லாது போடப்பட்டு கதவு திறந்திருக்க.. கணவன் வீட்டில் இருப்பது நன்றாகவே தெரிந்தது.. நாம் போனதால் அவளை இங்கேயே கூட்டிட்டு வந்துட்டாரோ? உலையாய் ரத்தம் கொதித்தது..
‘நான் செத்துட்டேன்’ ‘நான் செத்துட்டேன்’ திரும்ப திரும்ப சொல்லி எரியும் மனதை அமர்த்தி “என் பெண்களுக்காய்” பல்லைக் கடித்தார் தீபா.. வழியவா என நின்ற கண்ணீரை அடக்கி.. அண்ணன் முன்னே போக இவரும் பெண்களும் போக.. தன் குடும்பம் பார்த்ததும் சீனிக்கு உயிர் வந்தது.. ஆனாலும் அதை முகத்தில் காட்டாது உம்மென்று கெத்தா அமர்ந்திருக்க.. எதிரியை கூட சகிக்கலாம் துரோகியை முடியாது? ஆணுக்கு குடி இருக்கு உள்ளே போட்டு கவுந்தடிச்சி படுத்திடுவார்கள்.. இத வீரம்! பேராண்மை! என்று கூட ஊர் பாராட்டும்.. அவன் ஆதிக்கம் நிறைந்த உலகம்.. அவளுக்கு சொந்தம் கண்ணீர்துளிகளே..
இயற்கையின் உன்னத படைப்பு, ரெண்டே இனம் ஒன்றை நசுக்கி ஒன்று வாழ்கிறது… ஒன்னுக்கு சுயநலம் இன்னொன்னுக்கு தியாகம்.. அப்படி ஒரு பேஸ்
தீபா பிள்ளைகள் அறைக்கு சென்றவர்.. மாமாவை ஸ்டடி ரூம்ல தங்க வை.. என்ன வேணும்னு கேட்டு கவனி ஓடு.. அபியை அக்கா கூட போ அனுப்பிவிட்டு.. ஏதோ ஒரு துணியை எடுத்து தரையில் போட்டு தலையணை கூட இல்லாது கண் மூடிட்டார்.. அண்ணன் வீட்டில் இருந்தபோதாவது அழுகை முட்டுச்சு.. இங்கு வெறுமை பிடித்தது.. விரக்தி சலிப்பு வெறுப்பு பற்றின்மை என வானவில்லாய் இதுவரை இவர் பெறாத உணர்வு நிலைகள் ஆட்கொள்ள, வெளிச்சம் பிடிக்காது எழுந்து ரூமின் லைட்டை அணைத்து கதவை சார்த்தி கனத்த போர்வை கொண்டு முகத்தோடு முழுசும் முடிக்கொண்டார்.. தாயின் கருப்பை இருட்டில் பாதுகாப்பாய் உணர்ந்தார்.. ஆனால் மனம் புருஷன் தன்னோடு உறவு கொண்டு எத்தனை நாளானது? யோசிக்க.. தீபாவுக்கு ஒரு வெற்று சுளிப்பு உதட்டில் வளைந்தது.. அவருக்கு துல்லியமா தெரில.. ஒருமாசத்துக்கு மேலே இருக்கலாம்.. தோளுக்கு மேலே வளர்ந்த ரெண்டு வயசு பொண்ணுங்களை வச்சுக்கிட்டு அசிங்கமா எப்படி புருஷன் பின்னாடி சுத்துவது?
அப்படியும் நேரம் பார்த்து செய்ய வாய்ப்புகள் கம்மி அவர் குடித்து எடுத்து கிளப் எல்லாம் போய் வீட்டுக்கு வரவே நள்ளிரவு ஆகிவிட கதவு திறந்து விடுவதே உச்ச தூக்கத்தில் தான்..ஏதாவது வேணுமா? கேட்டாலும் அங்கே சாப்பிட்டேன் இங்கே சாப்பிட்டு வந்துட்டேன் சொல்ல.. ம்ம்ம்.. அவ்ளோதான்.. மறுநாள் இவ்ளோ பெரிய வீட்டின் ரொட்டின் வேலைகள் செய்ய தூங்கினால் தான் ஆச்சு.. தீபா எதுக்கு இவ்ளோ அலைச்சல்? பெண் பிள்ளைகள் தானே? கடமையை செஞ்சுட்டா அவங்கவங்க குடும்பம் பாக்க போயிருவாங்க மாமா.. நேரத்தோடு வீட்டுக்கு வாங்க.. இருக்கும் வசதிகள் போதும்.. கணவனின் அலைச்சல்கள் கண்டு ஒவ்வொரு நேரம் சொல்லி.. கால் அமுக்கி விட்டு குழந்தை போல தூங்க வைப்பார்.. அப்போல்லாம் பாசம் பெருகியதே காமம் வரலியே.. தாயான நான் முழு நேரம் குடும்பம் உறவுகள் மகள்களின் எதிர்காலம் என்று கர்மயோகியாய் இருக்க.. அவர்?? சின்ன பொண்ணு கேக்குது?? அசாத்திய தைரியம் இல்லன்னா இந்த காரியம் செய்ய வாராது… அவரே அதிக பெண்களுடன் பழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.. ஐய்யய்யயோ! தீபா சும்மாயிருந்தாலும் மனக்குரங்கு அவரை எங்கெங்கோ இழுத்துட்டு அலைய.. சப்பு சப்புன்னு தன்னைத்தானே அறைஞ்சிக்க தோணுச்சு அவருக்கே.. ச்சீ! ச்சீ! குப்பைகளை நினைச்சு நானு குப்பையாகிடுவேன் போல..
எழுந்து உக்கார..
என்னம்மா இருட்டுல இருக்கீங்க? இனியா லைட் போட..
அப்பத்தா ரூம்ல தூக்கமாத்திரை இருந்தா எடுத்துட்டு வா இனியா..
ஏன்?
சொன்னதை செய்டி.. எங்கே என் செல்?
இந்தாங்க.. தன்னிடமிருந்த செல்லைத்தர..
எதுக்கு கையிலேயே வச்சிட்டு சுத்தர? எரிச்சலா மொழிந்து வாங்கியவர்..
அபி எங்கே?
பிரண்ட் கிட்ட பேசிட்டு இருக்கா?
“இப்ப டயம் என்ன? அப்படி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு? அவளை வர்ச்சொல்லு.. அதட்ட..
ரொம்பத்தான் திட்டுறீங்க!! முனகிட்டே இனியா வெளியே போக..
முரளிக்கு போட்டு இங்கு வந்ததை சொல்லிடுவோம்.. நாளைக்கு என்ன செய்யணும்? இவருக்க்கு தெரில.. அதான் முரளிய தொல்லை பண்ணினார் தீபா..
அவர் தானே வீட்டுக்கு வாங்க சொன்னவரு.. என்று போட.. இச்சு! இச்சு! இச்சு! இச்சு! இச்சு!
முத்தங்கள் பிரம் முரளி.. நொடிகள் திகைத்து நின்றது தீபாவின் நொந்த இதயம்..
l
