அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

15 அவனோடு என் இரவுகள் அழகானது

ஏதாவது எடுத்துட்டு வரவா? சுப்புலட்சுமி முரளியின் தோள் உலுப்பி கேட்க..

பசி உணர்வு இனி வருமா? வயிறு ஒரு வாரத்துக்கு ஏதும் கேட்காது அப்படி ஒரு நிறைவு பெற்ற காதல் போகியா முரளி.. 

“பால் ப்ரிட்ஜில் இருக்கட்டும் பசிக்கும் பொழுது நானே காய்ச்சி குடிச்சிக்கிறேன் ம்மா”

“மறக்காம குடி.. இடையில் எந்திரிச்சு பார்ப்பேன்..”

“சரிம்மா ..” சொல்லி லேப்டாப் பார்க்க .. செல் அடித்தது.. தீப்பு காலிங் வர.. யார்? என்று யோசிக்க.. ஓ! இனியா அவங்கம்மா பேரை இப்படி சேவ் பண்ணியிருக்கா போல.. ஓகே!ஓகே! சரியான லூசு பயபுள்ள.. திட்டினான்..

காதில் ப்ளூ டூத் போட்டு.. ரிங் போக விட்டே எடுக்க.. இச்சு இச்சு இச்சு இச்சு இச்சு விடாது பல்லி சப்தம்.. இதுக்கும் தன் லவ் லூசு பயபுள்ளைக்கு திட்டு கொடுத்தான்.. 
தீபா ஆன்ட்டி செல்லிலிருந்து இனியா சேட்டை இவனுக்கு கூச்சம் தந்தது..

“ஜிவ்வுன்னு இருஞ்சுண்ணா”

“இன்னும் அண்ணாவாடி?”

“கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் மாமா மச்சா கூப்பிட்டுக்கிறேன்..”

“அப்போ இந்த கிஸ்??”

“தொங்கலில் தான் நிக்குது.. உங்களுக்கும் இல்ல எனக்கும் இல்ல..”

வாய்விட்டு சிரித்தான் அடி போடி கள்ள நாயே!

“நாளைக்கு முழுசா செய்யலாம் நினைக்கிறேன்.. அது எந்த லிஸ்ட்டாம்..” 

“ப்ரோ கணக்குத்தான்..” உடனே துடுக்கான பதில் இனியாவிடமிருந்து வர..

இச்சு இச்சு இச்சு இச்சு இப்பக்கமிருந்து வஞ்சமில்லாது முத்தங்கள் அனுப்பினான் முரளி..

“என் பூனை குட்டி இப்படித்தான் சிரிச்சிட்டே இருக்கணும்..”

“இப்ப மனசு லேசாயிருக்கு.. காலையிலிருந்து மூட் அவுட்டா இருந்தேன்.. உங்க கிஸ் ஏதோ பண்ணிருச்சு.. நான் செல்பிஷ் முரளிண்ணா உங்களையே நினைச்சுட்டு இருக்கேன் லூஸா..”

“ஏய்.. எப்படி இருஞ்சு கிஸ்..”

“நான் நினைச்ச அளவு இல்லன்னாலும் ஏதோ கடிச்சி பல் பட்டதால் நானே இதான் கிஸ் ன்னு நம்ப வேண்டியதா போச்சு..”

ச்சீ! குட்டி நாயே! 

தன்னவளிடமிருந்து வந்த மெய் கமெண்ட் காரணமாக வெட்கத்தில் முகம் சிவந்தான் முரளி.. இருந்தாலும் இவளுக்கு இம்புட்டு அறிவு ஆகாது.. காதல்ன்னா பொண்ணுங்க லைட்டா மக்கா இருக்கணும் இந்த நாய் இதிலெல்லாம் ரொம்ப விவரம்..

“கோணாலாயிருந்தாலும் என்னுதாக்கும்.. சோ ஏற்றுக்கொண்டேன் முரளிண்ணா”

“வலிக்குதாடி!”

“என்னது?”

“உதடு!!”

“ம்ம்ம்.. உங்க உதட்டால் மருந்து போடணுமாம் கேட்டு கேட்டு வலிக்குது..”

“வரவா?”

“அச்சோ! சாரி சாரி முரளிண்ணா.. மறந்தே போய்ட்டேன்.. அம்மா உங்ககிட்ட பேசணும் என்று தான் போட சொன்னாங்க.. இதோ கொடுக்கிறேன்..”

தலையில் கைவைத்து விட்டான் முரளி.. இந்த டெஸ்ட் எழுதின மாறிதான்.. 

என்னடி ஒரு போன் போட இவ்ளோ நேரமா? தீபா குரல்

“எம்மா! லைனே கிடைக்கல.. இப்போ கிடைக்குது கொடுக்கலாம் நினைச்சேன்..நீங்க வரீங்க..”

“கொடு.. நீ வெளியில் போ..”

“இருக்கேனே.. “

“தேவையே இல்லை.. போ நம்ம வீட்டுக்கு போக வேண்டியிருக்கும் பொருள் எடுத்து வை.. அபியை கிளப்பு.. சாமியாடிட்டு இருக்கா பாரு..”

தாயும் மகளுக்கும் எந்த நாகரீகமுமில்லாத உரையாடல் முரளி காதில் விழுந்தது.. இங்கு வராங்களா? அப்போன்னா புத்திசாலி தான்..

“தம்பி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” குரல் இன்னும் சரியில்லை என்பாதான கரகரப்பு..

“இல்ல.. சொல்லுங்க..”

“உங்க வீட்டுக்கு வந்து போராடுங்க சொல்றீங்க.. எதுக்கு?”

“உங்க ரெண்டு பெண் பிள்ளைகளுக்காய்.. அவங்க படிப்பு எதிர்காலத்துக்காய்..”

“அப்போ என் எதிர்காலம் யாரோவால் சிதைக்கப்பட்டாலும் பரவாயில்லையா? நான் அதுக்காக என் எதிர்ப்பை காட்டக்கூடாதா?”

கத்தி போல கூர்மையான கேள்விகள்.. இவன் பேசி போனபின் தீபா ரொம்பவும் யோசிச்சுருக்கார் புரிந்தது.. இந்த கேள்விகள் என் கிட்டே ஏன்? முரளிக்கு ஆயாசம் தந்தாலும். நீங்க என் அக்கா மாதிரி சொல்லி அவருக்கு அறிவுரை சொன்னதால் மாட்டிக்கொண்டான் .. இதான் இப்போ நாட்டாமை போஸ்ட்ல இருக்கான்..

“ஏன் அடுத்தவங்க சிதைத்தார்கள் சொல்றீங்க? சிதைக்கும் அளவுக்கு நீங்க தூங்கிட்டு இருந்திருக்கீறீர்கள் ..”

“நானா?”

“நீங்க இல்லாமல் பாதிச்சது யாராம்?”

“அவர் ஒழுக்கத்துக்கு நான் அண்ணாவி இல்லப்பா புரிஞ்சிக்கோங்க.. என்னை குத்தம்  சொல்லாதீங்க தம்பி.. வலிக்குது”

“நீங்க ஒழுக்கம், நேர்மை தான், அழகுதான், டிகிரி படிப்புதான், வசதி தான்.. எங்கே உங்க பிடி நழுவுச்சு?”

“அதான் தெரிலியே..”

“குடும்பம்ன்னு அதிலேயே முழுக்க கவிழ்ந்து படுத்துடீங்க.. உங்க சுயத்தை வளர்த்துக்கல.. வெளியுலகம் எட்டி பார்க்கல.. உங்களுக்கு என்று நட்பு இல்ல..”

“அது தப்பா? தாலி கொடுத்து இனி நான் தான் உனக்கு எல்லாம் ன்னு அக்கினி வலம் வந்து வாக்கு தராங்க… அது  அத்தனையும் பொய்யா? லட்ச ரூபாய்க்கு மண்டபம் பிடிச்சி ஐயாயிரம் பேருக்கு விருந்து வச்சு ஊர் சாட்சியா இவ என் பொண்டாட்டி சொன்னாங்க.. அதெல்லாம் பொய்யா?! நான் அவருக்கு உண்மையா இருந்தேனே?! என் அண்ணன் தவிர அந்நிய ஆண் முகம் கூட எனக்கு அடையாளம் தெரியாதே.. நான் பாவம் இல்லையா? என்னை இனியா அப்பா இப்படி ஏமாற்றலாமா? அவருக்கு மூத்த பெண் போல தானே நானும் இருந்தேன்.. அவர் குழந்தையை அவர் கழுத்தறுப்பாரா? ..” தீபா அழுகையில் குமுறுகிறார்.. இவனுக்கு சிறு சிறு ஒலிகளால் உணர முடிந்தது..

அவர் கிட்டேயிருந்தா கண்டிப்பா தீபாவின் கைகளை பிடித்திருப்பான்.. அந்த ஆன்மாவின் வலியை குறைக்க முயன்றிருப்பான்..

“நீங்க லூசர் ஆன்ட்டி ..”

…….. 

“இனி இப்படி அழுதிட்டே இருந்தா நிச்சயம் இந்த பேர் கடைசி வரை வரும்..”

“நான் தோத்துட்டேன் தான்.. இனி அப்படி இல்லப்பா.. சொல்லுங்க என்ன செய்யணும்?”

“உங்களுக்கு தற்கொலை பண்ணிக்கணும் தோணுதா?”

“நிச்சயமா.. தூக்கு கயிறு கழுத்தை இறுக்கினால் கூட வலிக்கவே வலிக்காது.. உடல் உள்ளம் இதயம் எல்லாம் மரத்து தான் கிடக்குது..”

“டயம் என்ன?”

“என்னப்பா?”

“டயம் கேட்டேன்”

“10 மணி”

“இந்த டேட் டயம் எழுதி வச்சுக்கோங்க.. தீபா இறந்துட்டாங்க.. அவங்க தவிப்புக்கள் வலிகள் ஏமாற்றங்கள் முடிஞ்சே போச்சு.”

……….

“என்னாச்சு?”

“இருக்கேன் தம்பி”

“முரளின்னே கூப்பிடுங்க”

“இருக்கட்டும்ப்பா!”

“பரவாயில்ல.. அது உங்களுக்கு இலகு தன்மை தரலாம்..”

“வேண்டாம் ப்பா.. இப்படியே இருக்கட்டும்”

“அப்போ நான் தீபா ன்னு கூப்பிடுவேன் பரவாயில்லையா!!”

ஆ..ஹ்ஹா! அழுது சுருங்கிய தீபாவின் இமைகள் அதிர்ச்சியில் விரிந்தது..

புருஷன் சரியில்ல ன்னு சொன்னா ஆம்பளைங்க இப்படித்தான் உடனே உள்ளே வந்துருவான்க போல.. மகா எரிச்சலானார்..








Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *