அவனோடு என் இரவுகள் அழகானது
7 அவனோடு என் இரவுகள் அழகானது
இனியா, அருகிருந்த கந்தர்வனை ஆர்வமா எட்டி எட்டி பார்த்து பசியில்லாது தன் உணவை கொறிக்க
முரளிக்கோ அப்பப்ப போன் வர, அதற்கு பொறுப்பாய் மெல்லிய குரலில் பதிலளித்து , அந் நெரிசலிலும் இவளிடம் மென்மை காட்டி தேவையானதை பார்த்து பரிமாறி உண்ண வைக்க, முரளியின் அறத்தில் பதவிசில் சறுக்கியே விழுந்தாள் அவனின் குட்டிக் காதலி..
தூரமிருந்து இரசித்த பிடித்தமான மனிதர்களிடம் நெருங்கி பழக விகாரங்கள் தெரியுமாம் அவர்கள் மீது ஏற்றிவைத்த அபிமானம் சரிந்து அதள பாதாளாம் கூட இறங்குமாம் இது நிதர்சனம்
இங்கோ இனியாக்கு இன்னும் மயக்க லெவல் கூடியது.. இந்த மன்மதன் இன்றே வேணும் வெறி வந்தது.. அவன் கையோடு கை சேர்க்கணும் தோளோடு சாயணும்.. ஏன் பாரீஸ் நகரக் காதலர்கள் போல உதட்டோடு உதடு சேர்த்து கட்டித் தழுவி தன் அன்பை காதலை மயக்கத்தை காதலனுக்கு தெரிவிக்கவும் அவனும் இவளோடு கட்டி இழையவும் தழுவவும் வகை தொகையில்லாத காதல் உணர்வுகள் பொங்கியது..
நம் கலாச்சாரம் பண்பாடு இடையில் இடிக்க.. இந்தம்மா கண்ணிலேயே முரளியை கவ்வி வைத்து தீரா ஏக்கம்.. தலைவன் அருகிருந்தும் பசலை பூத்தாள் தலைவி
போலாமா இனியா?
ம்ம்ம்.. இவள் பர்ஸ் திறந்து பணம் எடுக்க,
வேண்டாம் வை.. அவன் தடுக்க,
எனக்காக செலவு பண்ணுவது கல்யாணத்துக்கு பின்னே தான் .. ஆயுளுக்கும் சரியா?.. இப்போ எங்க அப்பா பணம் தான் சரி..
ஒற்றை கையில் பணம் இவனிடம் தந்து மறு கையால் முகத்தில் மாஸ்க் போட முயல, அது கோணலாக.
தானே அவள் கன்னம் தொட்டு போட்டுவிட்டான் முரளி..
ரொம்பவும் நாசூக்குக்காரன் அவன்.. புறவுலகின் நாகரீகங்களை முறையா கைகொள்பவன் தவறான அசைவு, பார்வை, நடத்தை, பேச்சு ஏதும் அவனிடம் இருக்காது..
ஆனால் இன்று பொது வெளியில் அவளுக்கு மாஸ்க் போட்டுவிட்டது .. அவனுக்கும் இவளின் அன்பின் அதிர்வுகள் அலையென தாவி, சொல்லிலும் செயலிலும் தன்னவள் சுத்தமாக இருக்க.. அப்படியே ஆதூரமாய் அணைத்துக்கொள்ள தோணுச்சு..
அது முடியாதே!! அதனால் இந்த சிறு முயற்சி.. அதுவும் அவள் பட்டு கன்னம் தடவ உதவ கை தொட்ட இடங்கள் ஜொலித்து ஜாலம் செய்ய.. கன்னமே இத்தனை மென்மையென்றால் பஞ்சு தேகக்காரி என்னை தாங்குவாளா? என் இத்தனை வருட பிரம்மச்சரிய விரதம் இவளில் நான் தீர்க்கும் பொழுது இப்பிஞ்சு உடல் தாளுமா?! நினைத்த மாத்திரத்தில் கோடிக்கணக்கான செல்களில் கலகங்கள் நிகழ்ந்து பூரா விடைத்து நின்று அடி வயிற்றில் பட்டாம்பூச்சிகளை சமாதானத்துக்கு அனுப்பிவிட சுருக் சுருக் கென சுக வலிகள்! அம்மாடி இதுதான் காதலா! இனியாவின் கருவண்டு விழிகளில் தன்னதை சேர்த்து கொக்கி போட்டு மயங்கி நின்றான்.. பிடித்தது இக்கணம்
உங்களுக்கு நேரமாகலயா?
மெய் மறந்து நின்றவன் கைகளை பிடித்து உலுக்கி காதலி கேட்க..
வா .. உனக்கு காலேஜ் இல்லியா கேட்டவாறே முரளி முன் நடக்க.. அவனுடன் முயல் குட்டியா துள்ளியபடி இனியா..
பொய் சொல்லி பேக் எடுத்துட்டு வந்தேன் உங்களை பார்க்க.. இப்போ வீட்டுக்குதான் போகணும்
நான் ஆட்டோ ல போய்க்கிறேன்.. நீ வண்டியில் போ..
எனக்கு இந்த சந்து பொந்தெல்லாம் தெரியாது. உங்க பேங்க் கிட்டேயே விடுங்க போய்டுறேன்..
திரும்பவுமா? ஒன்றாகவா? யோசித்தான் முரளி..
அவன் சில லேண்ட் மார்க் சொல்லி அப்படி வீட்டுக்கு போ இனியா வென்று தகவல்களை அள்ளி கொட்ட..
தூங்குறவங்களை எழுப்பலாம்.. நடிப்பவளை.. தெரியவே தெரியாது சாதிச்சுட்டா இனியா.. முரளி அருகிருக்கும் சில நிமிடங்களை இழக்க விரும்பாது..
சரி வா.. வண்டியை கிளப்ப..
ஒருபக்கமாய் கால் போட்டு அமர்ந்தவள்.. சும்மா அவன் இடுப்பு பிடிக்கும் சாக்கில் அழுத்தி கிள்ளி வச்சு அமர,, உயிர் சிலிர்ப்பு அழகனுக்கு.. குறும்பு பிடித்தது..
இனியா.. சும்மா இரு
மாட்டேன்.. காதுக்கு மிக அருகில் கிசு கிசுத்தாள்..
ஏய் எல்லோரும் பார்க்கிறாங்க.. சும்மா இரு…
இந்த மொட்ட வெயிலில் நம்மை பார்ப்பது தான் வேலையோ? ரொம்பத்தான் போங்க போங்க…
லேசு புன்னகையோடவே வாகனம் தேராய் பேங்க் சென்றடைய.. விடைபெற்றவள்,
இன்னைக்காச்சும் செய்யணும் ன்னே.
என்னது?
கனவில் முழுசா..
கண்ணடித்து ஸ்கூட்டியை பிளைட்டாய் கொண்டு பறந்துவிட..
கேட்டவன் மதி இழந்து நின்றான்.. ஆயிரம் சொல்லு ஐநூறு சொல்லு பெண் பிள்ளைகள் ஸ்மார்ட்நெஸ் ஆண் பிள்ளைக்கு வாராது.. அதான் திருமணத்துக்கு ரெண்டுக்கும் நாலு வயசாச்சும் வித்தியாசம் வேணும் சொல்றாங்க..
ஆபிஸ் ஒர்க் ஓடவேயில்ல முரளிக்கு.. மெல்லிய உடல் கொண்ட கொடியவளின் கவனமே புத்தி முழுக்க கெட்டு போச்சு..
இடையில் பத்திரமாய் சேர்ந்ததாய் செய்தி பார்த்தும் போதவில்லை அவளோடு இருந்த நேரங்கள்…. இன்னும் பேசணும் கண்ணோடு கண் பார்க்கணும்.. சிவந்த உதடுகளின் வரிகள் வேணும் எச்சில் கவிதைகள் அதில் தீட்டணும் விடிய விடிய காதல் போர் நிகழ்த்தணும்.. இத்தனை வருட இளமையின் தேடல் அவளில் முட்டும் பொழுது.. ஆஆஆஆ.. பட்ட பகலில் இரவின் ஆசைகள் முரளிக்கு முகிழ்க்க உடம்பெங்கும் ஜிவ்வென்ற உணர்வு.. கத்தி கொண்டு கிழிச்சாலும் நோகாது அத்தகைய போதை உணர்வு..
எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா ஆண் பெண் உறவு நிலையில் தேடத் தேட புதையல்கள் கிடைக்குமோ ஆயுளுக்கும்.. அசந்தான்..
பெண் ஆணுக்கு கிடைத்த வரம் .. இனியாவை உயிராய் நேசிக்கத்துவங்கினான் இக்கணம் .. இனி அவளே தான் வேணும் உயிரில் உயில் எழுதினான்.. இருவருக்கான பந்தம் தாலி கயிற்றில் இணைக்கும் முன்பு உணர்வு நரம்புகளால் இறுக்கி பிணையப்பட்டது..
அம்மாவிடம் இன்று மாலை பேசணும் இனியாவை பெண் கேட்பது குறித்து.. டிக் பண்ணிக்கொண்டான்.. ஆற போட்ட விஷயம் சிறு பொறி தட்டி சூடு பிடித்தது..
தன் வேலை நேரத்தில் கூட அவள் நினைப்பே.. டாலடித்த மூக்குத்தி நெஞ்சுக்குள் மின்னியது.. மாசு மருவற்ற பிள்ளை முகம் இன்னும் அழுத்தமா பதிஞ்சுருக்கணும் மங்கலான முக வடிவுக்கு வருத்தம் கொண்டான்..
சட்டுனு வாட்சப் திறந்து அவள் டீபி பார்க்க.. ரோஸ் நிற ரெடி பியர் லவ் சிம்பல் தாங்கி நிற்க..
உன் போட்டோ அனுப்பு இனியா.. மெசேஜ் போட்டு வைத்துவிட்டான்.. அவள் ஆன்லைன்ல இல்ல.. அதோடு வேலை சுமை அழுத்த அங்கு கவனம் போக.. வீட்டுக்கு போகும் பொழுது தான் .. நெட் ஆன் பண்ணி திறக்க..
அவளின் ஒருவயது குழந்தை போட்டோ விளையாட்டுக்கு அனுப்பி இருந்தாள் இனியா..
உண்மையில் அது அவனுக்கு இன்னும் இன்னும் காதலிக்க தூண்டியது..
அழகிடி நீ..
ம்ம்ம் காதலிக்கும் பொழுது பன்னியும் பேரழகு தான் காதலனுக்கு…
(writer mind voice)😊
.
.
