அவனோடு என் இரவுகள் அழகானது
5. அவனோடு என் இரவுகள் அழகானது
காதலுக்கு முதல் தேவை இருவருக்கான தொடர்புதான்.. முரளி வலிய அதன் வழிகளை அடைத்து வைத்தான்..
சயனைடில் துளி கூட ஆள் கொல்லும்.. இங்கு வீரியமான இனியாவின் காதல் அவனுக்கும் ஏறிடுமோ பயந்தான்.. அந்த அன்பின் பாய்ச்சலை சந்திக்க தயங்கினான்.. உள்ளுக்குள் வியர்த்தான்
தற்போது சீனிவாசன் அங்கிள் பற்றி இவன் கேள்வி படும் விஷயங்கள் ஒருவேளை, அவளை அவளே இஷ்டப்பட்டாலும், இங்கிருந்து போய் பெண் கேட்டாலும் தர மாட்டார்கள் என்ற அனுமானம் தந்திருந்தது.. இனியாதான் வேணுமா? இவனுக்கு இன்னும் உறுதி வரல..
ஆனால் அவள் ஆசைப்பட்டாளே! நீ இல்லன்னா செத்துருவேன் சொல்லி இருக்காளே! ஒரே ஒரு முறை அவளை சமாதானம் பண்ணி பார்ப்போமா? உங்க வீடு ஒரு மாதிரி எங்களுது ஒரு மாதிரி ஒத்து வராது..
ஆசை விட்ருடா எண்ணம் மாற்றுவோமா?!
இனியா என்னை மறந்திடுவாளா?!
ஒருபக்கம் மறந்திடனும் எண்ணமிருந்தாலும் மறப்பாளோ?!! வலித்தது.. தலையை உலுப்பி வலி கூடாது.. நான் படிச்சவன்! அறிவாளி! எதார்த்ததுக்கு ஒவ்வாத விஷயங்களில் நான் அலட்டிக்க மாட்டேன் வலிய சொல்லிக்கொண்டவன்.. அதிலிருந்து மீண்டு..
இவனுக்கு பொண்ணு பாக்குறேன் என்று கிளம்பி எதுவுமே கண்டுக்காமல் அலையும் தாயிடம் வந்தான்.. அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை! ராமகிருஷ்ணன் அப்பொழுது வீட்டில் இல்ல.. சமையலடியில் வேலை செய்து கொண்டிருந்த சுப்புவை..
அம்மா!! கூப்பிட்டவனுக்கு தொண்டையில் ஏதோ அடைத்தது..
“சொல்லுப்பா!”
“இனியா விஷயம் என்னாச்சு?”
“ஒன்னும் தெரில..” அவரும் மூணாவது ஆள் மாறியே கை விரிக்க..
“இல்ல தீபா ஆன்ட்டி ஏதாச்சும் சொன்னாங்களா?”
“போனவாரம் தீபா நம் வீட்டுக்கு வந்திருந்தா.. நீ செலவு பணத்துக்கு மேலேயே பணம் என் கையில் கொடுத்து.. அன்று ஹாஸ்பிட்டல் வந்தது அவ்ளோ பெரிய மாரல் சப்போர்ட் ன்னு பீல் பண்ணி சொன்னா..”
இந்த சள்ளை கதைகள் யாருக்கு வேணும்? புரிஞ்சிக்காமல் பேசும் அப்பாவி அம்மாவை பாசமாய் வெறித்தான் முரளி..
அவனும் நாகரீகமாய் அம்மாவே பேச வேண்டும் என்று நினைக்க..
அவரோ, அவர்கள் தெருநாய் 6 குட்டிகள் போட்டது.. பேப்பர்காரன் ரெண்டு நாள் பேப்பர் போடாது அதற்கும் சேர்த்து காசு வாங்கிக்கொண்ட அக்கிரமம், வீட்டு வேலைக்கு உதவிக்கு வரும் பெண் அட்வான்ஸ்க்கு மேலே அட்வான்ஸ் கேட்டு பண்ணும் கொடுமை, ஐயர்ன்காரர் கூப்பிட்டாலும் வராத அலட்சியம், இரவில் ஒருநாளும் கண்ணில் படாத கூர்க்கா ஒன்னாந்தேதி டான்னு கலக்சனுக்கு வந்து நிற்பது பற்றி பக்க பக்கமாய் தன்னை சுற்றி நடக்கும் அநியாயங்கள்.. அது தன்னை எப்படிலாம் வருத்துது என்று மகன் காது பிரீயா இருக்கு என்று அள்ளி அள்ளி கொட்ட.. அந்து நொந்து போனான் முரளி..
கொக்குக்கு ஒன்றே மதியாம்.. அவனுக்கு மதி முழுக்க இனியா மீதே.. நீ இல்லன்னா செத்துருவேன் மிரட்டி வச்சுட்டு போயிருக்கா.. அதை சுமுகமா முடிக்கணும்.. எனக்கு அவளே வா? அல்லது வெளியிலா? ஒரு முடிவு தெரிஞ்சாகணும்..
கல்யாணம் பண்ணிக்க அவசரமில்லை தான் ஆனால் தொடுக்கில் நிற்கும் அவள் ப்ரொபோசல் தான் இம்சை.. எவ்ளோ தயக்கமே இல்லாது அன்று எச்சில் கையை சுவைக்கிறாள்? அன்று பண்ணியது இன்று சிலிர்த்தது.. எப்பவும் அவளே எல்லாத்திலும் முந்துரா.. இவன் சாங்கியம் சடங்கு பார்த்தே நேரம் கடத்துறான்.. யோசிக்க யோசிக்க முரளிக்கு குழப்பம் தான் மிஞ்சுது..
இனியாவை மனைவியா நினைக்க கூட உத்திரவாதம் வேண்டி நிற்கிறான்.. இவன் பாடு கஷ்டம் தான் ஆனாலும் அவள் கள்ளமில்லா நேசம் ஈர்த்தது.. பெருமூச்சு விட்டான்.. என்னடா எனக்கு வந்த சோதனை என்று..
அவன் பெண்ணாயிருந்தால் பார்க்கும் யாரிடமும் தன்னிலை சொல்லி புலம்பியிருப்பான்.. சங்க காலத்தில் பிறந்திருந்தால் மடலேறி ஊரைவலம் வந்து தன் கைம்மை நிலை உரைத்திருப்பான்.. நவயுக ஆணாய் வீணாய் போனதால் வெளியில் ஏதும் சொல்லாதிருப்பதே கெத்து என்பதாகி, அழுத்தம் கூட.. அவன் இதயத்துக்கு பாரமாகிப்போனாள் இனியா..
எப்படி அம்மாவிடம் நேரடியா கேட்பது? இனியாவை நீங்க மருமகளாய் பிக்ஸ் பண்ணியிருந்தால் என்ன அதற்கு முயற்சி பண்ணிட்டு இருக்கீங்க??! ம்ம்ம்.ம் வாய் வராது நின்றான்..
“ஏன்மா ஆன்ட்டி கிட்டே பணம் வாங்கினீங்க? அது ஒன்றும் பெரிய அமவுண்ட் இல்லையே..” முரளி குறைபட.
“நானும் அதுதான் சொன்னேன்.. முரளி ஏகப்பட்ட பணம் வச்சுருக்கான்.. விடு செலவு பண்ணட்டும்ன்னு “
பங்கம் பங்கமோ பங்கம்.. பெற்ற தாயே போட்டு கொடுப்பது ஓவர்..
இன்னும் கொஞ்ச நேரம் அம்மா கிட்டே பேசினா அவ்ளோதான்.. பேச்சு எங்கெங்கோ தாவ அது பிடிக்காது முரளி ஹாலுக்கு செல்லத் திரும்ப..
“தீபா மாதிரி ஒரு நல்ல தாய்க்கு பிறந்த மகள் உனக்கு மனைவியா வரணும் ன்னா நீதான் கொடுத்து வச்சிருக்கணும் முரளி” அசரரீ போன்று சுப்பு லட்சுமி மகன் முதுகை பார்த்து சொல்ல.. கிழக்கு சுவற்று கவுளியும் சப்தமிட்டு “ஆம்” என்றது..
அவன் எதை கேட்க வந்தானோ? பதில் கிடைத்தது.. திரும்பி வந்தான்..
“ஏம்மா இனியா குட்டி பொண்ணு எனக்கு சரி வருவாளா?”
“உன் மேலே அன்பா இருப்பா அதுதானே வேணும்டா”
“ஓ! அவங்க அப்பாக்கு..”
“அதெல்லாம் பொண்ண பெத்தவருக்கு என்ன ரோஷம் வேண்டி கிடக்கு? நானும் அப்பாவும் போய் இனியாவை பெண் கேட்கிறோம்..”
“அப்போவும் தரலேன்னா?”
“நீ தூக்கிட்டு வந்துரு என் மருமகளை.. ” லேசா புன்னகைத்து சுப்பு லட்சுமி அடுப்பு பக்கம் போக.. அச்சு வெல்லமாய் இனித்தது முரளிக்கு அவ்வார்தைகள்..
மறுநாள் அவன் கண்ணாடி கேபின் வெளியில், உள் நுழைய அனுமதி கேட்டு காத்திருந்தாள் இனியா..
என்னவோ? ஏதோ? ரெக்கையடித்தது மனசு..
