உயிரை உயிரால் கோர்க்கவா
22 உயிரை உயிரால் கோர்க்க வா
அனிதாவுக்கு கைகால்கள் வெடவெடவென நடுங்கத்துவங்கியது.. அவன் கட்டிய தாலியை ஏற்றுக்கொண்டவளுக்கு அவனுடன் கூடிய பிஷிக்கல் ரிலேசன்ஷிப்புக்கு அவள் இன்னும் தயாராகவில்லை.. பேன் ஓடிக்கொண்டுதான் இருந்தது.. ஜன்னல்களும் திறந்து விட்டுதான் இருந்தது.. இருந்தாலும் அனிதாவுக்கு வியர்த்துக்கொட்டியது.. முந்தானையால் கழுத்தில் வடிந்த வியர்வையை துடைத்துக்கொண்டாள்.
மோகனோ ஜன்னல் ஸ்கீரனை இழுத்துவிட்டு அனிதாவின் பக்கம் வந்தவன் அவளது கையை பிடிக்க.. அவளுக்கோ கண்ணீர் வந்துவிட்டது.. “நா.நான் அ.அது வந்து” என்று பேச வார்த்தைகள் வராமல் தத்தளித்தாள் பேதை பெண்.
“இப்ப எதுக்கு அழற நீ.. நான் உன் மேல பாய்ச்சிட்டேனா அது இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என்றவன் அவளது கையைபிடித்து சோபாவில் உட்கார வைத்தவன் அவள் விசும்பல் நிற்காமல் இருக்க.. அவள் முகம் நோக்கி குனிய அவளது விசும்பல் நின்று போனது.. மோகனுக்கும் அவளிடம் இப்படி நடந்து கொள்வது பிடிக்கவில்லைதான் என்ன செய்வது இருவரின் வாழ்க்கையை ஆரம்பிக்கும்முன் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்தபிறகு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டான்.. பழைய வாழ்க்கையில் அவன் முதல் மனைவி ஆஷா அவனை புரிந்து கொள்ளாமல் விட்டு போய்விட்டாள்.. இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்தால் நன்றாக இருக்குமென்று அவளிடம் பேச ஆரம்பித்தான்.
“அனிதா நானும் மனுசன்தான்.. நீ என்னை பார்த்து பயப்படத்தேவையில்லை.. “நம்ம ரெண்டு பேர் மனசுலயும் என்ன இருக்குனு மனசு விட்டு பேசுவோம் என்றவன் அவள் கண்களை பார்த்தவாறு என்னை பிடிச்சிருக்கா இல்ல உன் அப்பா சொன்னதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டயா?” என்று தடாலடியாக கேட்க.. அனிதாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.. காலையிலிருந்து பேசாதவன் தீடிரென இப்படி தன் கையை பிடித்து நெருக்கமாக உட்கார்ந்து பேசுவானென்று அவள் எதிர்பார்க்கவில்லை..
அவள் பேச தயங்குவதை பார்த்தவனுக்கு மனதில் என்னென்னவோ தோன்றியது.. சில நொடிகள் கழிச்சு “எனக்கு பிடிச்சுத்தான் சம்மதிச்சேன்.. ஆனா நான் உங்ககூட சேர்ந்து வாழ கொஞ்சம் டைம் வேணும்” என்று நிலத்தை பார்த்தபடி மெதுவாய் பேசினாள்..
“ஏன் உனக்கு டைம் வேணும்.. இன்னும் பழைய ஹஸ்பண்ட் உன் மனசுல இருக்கானா” என்று அவள் முகத்தை கைகளால் தாங்கி அழுத்தமாக கேட்டான்..
“அதுவந்து நீங்க கட்டின தாலி என் கழுத்துல எப்ப ஏறுச்சோ அப்போதிருந்து நீங்க தான் என் மனசுல இருக்கீங்க.. இருந்தாலும் உடனே நமக்குள்ள எல்லாம் நடக்க என்னோட மனசும் உடம்பும் தயாராக இல்லைங்க” என்று அவன் முகம் பார்த்தே பேசினாள் நிதானமாக.
“உன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கத்தான் உன் கையை பிடிச்சு பேசினேன்.. உன் விருப்பம் இல்லாம உன்னை தொட கூட மாட்டேன்.. என்னோட பழைய லைப் பத்தி உனக்கு தெரியும்தான.. அதைப்பத்தி இப்ப எனக்கு பேச கூட நினைக்கத்தோணல அனிதா.. நான் பழைய லைப்பை சுத்தமாவே மறந்துட்டேன்.. அதான் உன் கழுத்துல என்னால தாலி கட்ட முடிச்சுச்சு.. அதே போல உன் பழைய வாழ்க்கையை பத்தி நானும் கேட்க மாட்டேன்.. அப்புறம் எந்நேரமும் உன்கிட்ட சிரிச்சு பேசுவேன், உன்னை கொஞ்சுவேனு நீ நினைக்கக்கூடாது.. பவனை நீ உன்னோட குழந்தையாத்தான் பார்த்துக்கணும்.. அண்ட் நமக்குள்ள எல்லாம் நடந்தாலும் இப்போதைக்கு நமக்கு குழந்தை வேணாம்” என்றான்.. அவள் முகத்தை பார்த்தே ஒவ்வொன்றும் பேசினான்.. இதுவரை பேசியதற்கு அவள் முகத்தில் எந்த வித பாவனையும் காட்டவில்லை.. ஆனால் குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்னதற்கு மட்டும் அவளது கண்கள் சுருங்கியது.. அதையும் கவனித்தான் மோகன்..
அனிதா பேச வாயெடுக்க, பவன் சிணுங்கினான்.. “சரி நீ போய் தூங்கு.. அம்மா காலையில கேட்டா எல்லாம் நடந்துச்சுனு சொல்லு” என்று பேசியவன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
பெரும்மூச்சுடன் எழுந்தவள் சிணுங்கும் பவனின் பக்கம் படுத்துக்கொண்டு தட்டிக்கொடுத்து தூங்க வைத்து கண்ணை மூடிக்கொண்டாள்.. குளியலறையிலிருந்து வந்தவனோ தலையணையை எடுத்துக்கொண்டு சோபாவில் படுத்துக்கொண்டான்.
மல்லிகாவோ வீட்டுக்குச் சென்றதும் விமலா கோவிலுக்குச் சென்றிருந்தார்.. முகம் கழுவி காபி போட்டு குடித்துவிட்டு சிறிது நேரம் அப்படியே கண்ணை மூடி அமைதியாக உட்கார்ந்திருக்க புஷ்பா போன் செய்தார்.. “சொல்லுங்கம்மா எப்படி இருக்கீங்க”.
“நான் நல்லாயிருக்கேன்டி நீ சந்தோஷமாயிருக்கியா” என்றார்.
“ம்ம் சந்தோசமாத்தான் இருக்கேன்ம்மா அப்பா எப்படியிருக்காரு”
“இப்பத்தான் வெளியில போனாருடி.. உன் நினைப்பாவே இருக்கு.. நாளைக்கு நீயும், மாப்பிள்ளையும் வீட்டுக்கு வாங்களேன்.. கண்ணுக்குள்ளயே இருக்கடி” என்றார் மனம் நெகிழ்ந்து போய்..
“வரோம்மா நான் போன் வைக்கட்டுமா” என்றதும்..
“சரிமா மாப்பிள்ளைகிட்ட கொஞ்சம் அனுசரிச்சு போடி” என்றார் மகளின் மனமறிந்த தாயாய்..
“நான் எல்லாம் பார்த்துக்குறேன்.. நான் போன் வைக்குறேன்மா” என்று போனை வைத்தவள் மணியை பார்க்க ஏழு ஆகியிருந்தது.. சமையல் கட்டுக்குச் சென்றவள் இரவு சமையலை செய்ய ஆரம்பித்தாள்.. சிவா வீட்டுக்குள் வந்தவன் சமையல் அறையில் சத்தம் கேட்க ஓ மேடம் சமைக்குறாங்களா.. சரி குளிச்சிட்டு போய் பார்ப்போம் என்று தனக்குள் பேசிக்கொண்டு அறைக்குச் சென்று குளித்துவிட்டு வந்து பிடித்த பர்யூமை பார்த்து வாங்கி வந்திருந்தவன் சர்சர்ரென்று மேனியில் அடித்துக்கொண்டு சமையல் கட்டுக்குள் சென்றான்.
சமையல் செய்து முடித்துவிட்டு திரும்ப சிவா நின்றிருந்தான் மோகப்பார்வையுடன்.. “தள்ளுங்க நான் போய் குளிச்சிட்டு வரணும்” என்றாள் கழுத்தில் வடிந்த வியர்வையை துடைத்தபடி.. அவனோ அவளை மார்க்கமாக பார்த்துக்கொண்டே சமையல்கட்டுக்குள் சென்றான்.. அவளோ பின்னே சென்றவள் சமைக்கும் திண்டில் மோதி நின்றாள்..
“சிவா நான் குளிக்கணும் விடுங்க” என்று அவள் வாய்தான் பேசியது.. அவனது பார்வையில் மயங்கிப்போனாள்.. ச்சே இவரு கண்ணை நாம பார்க்கவே கூடாது என்று முகத்தை திருப்பிக்கொண்டு நின்றாள் மல்லிகா.
மேடம் என்னை பழிவாங்குறாங்களா.. அதுக்கு நான் விடமாட்டேன் கண்மணி என்று மனதில் சிரித்துக்கொண்டவன் அவளது தாடையை பிடித்து தன் முகம் பார்க்கச் செய்தவன்.. “என்னடி ஆச்சு எதுக்கு என்னோட முகம் பார்க்க மாட்டேன்கிற” என்று கேட்டுக்கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட்டான்..
“ம்ப்ச் ஒரு மண்ணும் ஆகல விடுங்க” என்று அவன் மார்பில் கையை வைத்து தள்ள..
“நீ என்னை பிடிச்சு தள்ளினா நான் கீழ விழுவதற்கு எனக்கு இன்னும் வயசாகலைடி என்றவன்” அவள் இடையோடு கையை போட்டு இறுக்கிக் கட்டிக்கொண்டான்.. போச்சு இவர் கைபட்டாவே நாம உருகிவிடுவோமே.. எங்கே கோபப்படுவது என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டிருந்தாள் மனதிற்குள்.. அந்த நேரத்தில் அவனோ நெற்றியில், கண்ணில், கன்னத்தில் என முத்தமிடத்துவங்கிவிட்டான்.. அவன் கொடுக்கும் முத்தத்தில் கண்ணை மூடிக்கொண்டாள்.. ம்ம் இதுதாண்டி எனக்கு வேணும் என்று அப்படியே தூக்கிக்கொண்டவன் “ரொம்ப வெயிட்டா இருக்கடி” என்று அவள் இதழில் முத்தமிட கண்ணைத்திறந்தவள்
“உங்களை யாரு என்னை தூக்கச் சொன்னா இறங்கிவிடுங்க” என்று சிணுங்க..
“அறுபது கிலோ எடையை சும்மா தூக்குவேனா” என்று கண்ணடித்தவன் “ஐ நீட் யூ டி” என்றவன் மல்லிகாவை தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்றவன் கதவை காலால் அடித்து மூடிவிட்டு கட்டிலில் படுக்க வைக்க.. அவனது எண்ணம் புரிந்தவள் “நான் குளிச்சிட்டு வரேன்” என்று எழும்ப “அப்புறமா சேர்த்து குளிச்சிக்கோடி” என்றவன் அவளது இதழில் தஞ்சமடைந்தான்.. அவளுக்கோ அவனுக்கு தன்னை கொடுக்க வேண்டாமென இருந்தவள் தன்னை மறந்து அவனது முத்தத்தில் அவனுடன் சேர்ந்து பதில் முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தாள்.. அவனுக்கு சிரிப்புதான் வந்தது.. அவளது காதுமடலில் நாவால் கூசச்செய்தவன் “ஐ லவ் யூ டி மல்லி” என்று கழுத்தில் பற்தடம் பதியவைத்தான்.. அவளது ஆடைகளுக்கு விடுதலை கொடுத்தவன் மென்மையாய் இருந்த அவளது பொற் கலசங்களை கைகள் கொண்டு செதுக்க ஆரம்பித்தான்.. அவளோ துடித்து போய் அவனை இறுக கட்டிக்கொண்டாள்.. அவன், அவளது இரட்டை மதுக்குடங்களை மெல்ல இரசித்து சுவைத்தான்.. மினுக்கி நின்ற கீரிடங்களை நகம் கொண்டு சோதிக்க பெண்ணவள் அவனை மார்பில் கடித்து வைத்தாள்.. அவளது கடிகளை சுகமாக ஏற்றுக்கொண்டவன் பெண்ணவளுக்குள் முத்தை சேர்த்து அவளது வயிற்றுக்கு முத்து வளர அடித்தளம் போட்டான்.
கோவிலுக்குச் சென்று வந்த விமலாவோ கதவு மூடியிருக்க என்ன கதவு மூடியிருக்கு.. அதுக்குள்ள தூங்கிட்டாங்களா என்றவர் தன்னிடமிருந்த சாவியை போட்டு கதவை திறந்து போய் பார்க்க சிவாவின் அறைக்கதவு லாக் செய்திருந்ததை பார்த்தவர் நாம வருவோம்னு தெரியும்ல அதுக்குள்ள இவ போய் தூங்கணுமா என்ன இந்தக் காலத்து புள்ளைங்களுக்கு இங்கிதமே தெரியாது போல.. சமைச்சு வைச்சிருக்காளானு தெரியல சமைக்காம இருக்கட்டும் கதவை தட்டி கலாட்டா பண்ணிடுவேன் என்று கோபப்பட்டவர் சமையல்கட்டுக்குள் சென்று பார்க்க.. ஹாட்பாக்ஸில் சப்பாத்தி இருக்க.. வெஜிடபிள் குருமா வைத்திருந்தாள்.. ம்ம் சமைச்சுதான் வைச்சிருக்கா என்கிட்ட தப்பிச்சுட்டா என்று தட்டில் சப்பாத்தியை போட்டு சாப்பிட்டவர் சமையல் நல்லாத்தான் செய்திருக்கா என்று சாப்பிட்டு விட்டு அறைக்கு போனவர் சிவாவின் அறைக்குள் சிணுங்கல் சத்தம் கேட்க.. ஈஸ்வரா என்று காதை பொத்திக்கொண்டு உள்ளே சென்றார்.. இவரும் கல்யாணமாகி எல்லா சுகபோகங்களை அனுப்பவித்தவர் என்பதை மறந்து போனார் விமலா.
சிவாவோ மல்லிகாவை கொஞ்சி கொஞ்சியே அவளை தனக்குள் வாரி சுருட்டிக்கொண்டான்.. அவன் அவளை விட்டு பிரியவே நடுஇரவு ஆனது.. அவளுக்கு சோர்வாய் இருக்க கண்ணை மூடினாள்.. “ஏய் மல்லி தூங்காதடி சாப்பிட்டு தூங்கலாம்” என்று அவளது இதழில் முத்திட்டு எழுப்ப.. “எனக்கு பசியே போயிடுச்சு.. நீங்க படுத்தின பாட்டில்” என்றாள் போலிக் கோவத்துடன்.
“அப்படியா அப்போ மறுபடியும் என அவள் நோக்கி குனிய சிவாவை முறைத்துவிட்டு “என்னால முடியாதுப்பா” என்று திரும்பி படுத்துக்கொண்டாள் மல்லிகா.
சிவாவோ குளியலறைக்குள் சென்றவன் குளித்துவிட்டு சமையல்கட்டுக்கு சென்றவன் இருவருக்கும் சப்பாத்தியை தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு வந்தவன் “மல்லி சாப்பிட்டு தூங்குடி” என்றவன் அவளை தூக்கி தன்மீது சாய வைத்துக்கொண்டான்.
அவளுக்கோ உடம்பெல்லாம் வலித்தது.. அவளது சோர்வு அவளது கண்ணில் தெரிய “சாரிடி ரொம்ப படுத்திட்டேன்” என்றான் வருத்தமாக..
“அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்று அவனது நெஞ்சில் தலையை புதைத்துக்கொண்டாள்.. சப்பாத்தியை குருமாவில் தொட்டு ஊட்ட சாப்பிட்டவள் அப்படியே தூங்கியும் போனாள்.. அவளது வாயை தண்ணீர்கொண்டு துடைத்துவிட்டு தானும் சாப்பிட்டு தட்டை வாஷ் செய்துவிட்டு விமலாவின் அறைக்கதவு எப்போதும் திறந்திருக்கும் என்று எட்டிப்பார்த்தான்.. அவரோ குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.. இந்தம்மா மட்டும் மல்லிகூட சண்டை போடாம இருந்தா எனக்கு இன்னும் நிம்மதியா இருக்கும் என்றவன் பெரும்மூச்சுடன் அறைக்குள் வந்தவன் மல்லிகாவை அணைத்துக்கொண்டு உறங்கினான்.. மல்லிகாவோ அவன் அணைத்ததும் அவனது நெஞ்சோடு சேர்ந்து கட்டிக்கொண்டு உறங்கினாள்.. சிவாவிடம் அவளால் கோபப்படவே முடியவில்லை.. அடுத்த நாள் காலை நேரமே கண்விழித்துப்பார்த்தவள் சிவாவை கட்டிக்கொண்டு உறங்கியதை கண்டு டேய் சிவா உன்னை பார்த்தாலே நான் மெழுகா உருகிடுறேன்டா என்றவள் அவனது கன்னத்தில் செல்லமாய் அடிபோட்டாள்.. அவனோ அவள் தன்னைவிட்டு பிரிந்ததுமே கண்விழித்துக்கொண்டான் கள்ளன். “இந்தக் கன்னத்திலையும் அடி மல்லி” என்று இன்னொரு கன்னத்தையும் காட்ட சப்பென்று ஒரு அறைவிட்டு குளிக்கச் சென்றுவிட்டாள்.. அடிப்பாவி ஒரு பேச்சுக்கு சும்மா அடினு சொன்னேன் அடிச்சுட்டாளே என்று கன்னத்தை தேய்த்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.. மல்லிகாவோ குளித்துவிட்டு வர இறங்கி குளியலறைக்குள் போவது போல பாவ்லா செய்தவன் கண்ணாடி முன்னே நின்று அவள் தலையை துவட்டிக்கொண்டிருக்க அவளது முதுகில் முத்தமிட்டான்.. “டேய் சிவா விடுறா நைட் படுத்தினது போதாது இப்பவும் உன் சேட்டையை ஆரம்பிச்சிட்டியா” என்றாள் கோபமாக.
“நீ என்ன பேசினாலும் எனக்கு கோபம் வராதுடி மல்லிஇஇ.. இப்ப டர்ட்டி கிஸ் பண்ணிட்டுத்தான் குளிக்கப் போவேன்” என்று அவளை தன் பக்கம் இழுத்து அவளது இதழில் முத்தமிடத்துவங்கினான்.. மணி ஆறாகியிருக்க அவனது மார்பில் கையை வைத்து தள்ள மெல்ல அவளை விட்டு விலக.. அவளோ கோபத்தில் அவனது மார்பின் முடியை இழுத்து சண்டைபோட்டாள்.. ஆஆ வலிக்குதுடி விடு” என்று அவளிடமிருந்து விலகி டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் ஓடினான் சிவா.
போச்சு இந்த மாமியார் வேற எழுந்து காபிக்கு உட்கார்ந்திருப்பாங்க.. எல்லாம் உன்னாலதாண்டா சிவா என்று சிவாவை சினத்துடன் திட்டிக்கொண்டே சமையல்கட்டுக்கு போக.
“ஏய் நில்லுடி” என்றார் விமலா..
மல்லிகாவுக்கோ டி என்று சொன்னதும் சுர்ரென்று வந்தது.
23 உயிரை உயிரால் கோர்க்க வா
“அத்தை என்பேரு மல்லிகா.. டி இல்ல” என்று அவருக்கு பதில் கொடுத்து சமையல்கட்டுக்குச் சென்றாள்
ம்ம் காரமாத்தான் இருக்கா.. நமக்கும் இப்படி இருந்தாதான் பிடிக்கும் என்றவர் காபி போட்டு “சீக்கிரம் கொண்டுவா குடும்ப பொண்ணு இவ்வளவு நேரம் தூங்கினா எப்படி குடும்பம் விளங்கும்” என்று சத்தம் போட்டு பேசினார்.. மல்லிக்கு கோபம் வந்தாலும் அமைதியாக காபியை போட்டு டம்ளரில் கொண்டுவந்து கொடுத்தவள்.. “அத்தை உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து அமைதியாக இருக்கேன்.. நீங்க என்னை ஏதாவது சீண்டினா நான் சும்மா இருக்கமாட்டேன்” என்று பேசியவள் சமையல் கட்டுக்குள் போக
“ஏய் என்னடி ரொம்ப பேசுற.. நானெல்லாம் என் மாமியார் முன்னாடி வாயே பேசமாட்டேன் தெரியுமா.. நீ என்னமோ கூட கூட பேசுறவ” என்று காந்தினார் மல்லிகா மேல்..
“உங்களுக்குத் தேவையானதை நாளையிலிருந்து நீங்களே செய்துக்கோங்க.. நான் எனக்கும் என் வீட்டுக்காரருக்கு மட்டும் செய்துக்குறேன்.. நான் உங்க பையனுக்கு மட்டும்தான் பொண்டாட்டி.. உங்களுக்கு அடிமை கிடையாது.. அன்பா கேட்டா நீங்க கேட்காததையும் செய்து கொடுப்பேன்.. ஆர்டர் போட்டா சூடு தண்ணீ கூட வைச்சு தரமாட்டேன்” என்று பேசிவிட்டு சமையல் கட்டுக்குள் சென்றுவிட்டாள் மல்லிகா..
விமலா வாயடைத்துப்போய் பார்த்தார் மல்லிகாவை.
சிவாவோ குளித்துவிட்டு வந்தவன் சோபாவில் உட்கார்ந்து “மல்லி எனக்கு டீ வேணும்” என்றான்..
மல்லிகாவோ காய் கட் பண்ணிக்கொண்டிருந்தவள் இவருக்கு டீ வேணுமா.. காபி தான் போட்டு வச்சிருக்கேன்.. காபி தான் கொண்டு போய் கொடுப்பேன் ஏதாவது பேசட்டும் இவர் வாயையும் அடைக்குறேன் என்று காளி அவதாரமாய் பேசியவள் காபியை டம்ளரில் ஊத்திக்கொண்டு ஹாலுக்கு வந்தவள் காபியை கொடுக்க பக்கத்திலிருந்த விமலாவோ
“ஏய் என் பையன் டீ கேட்டான் நீ எனக்கு போட்ட காபியை கொண்டு வர”என்று அட ங்காமல் பேசினார்..
மல்லிகாவோ சிவாவை முறைக்க “எனக்கு காபியே போதும்.. நீங்க சும்மா இருங்க அம்மா.. உங்க கையில் இருக்கும் காபி ஆறிப்போய்டும் அத குடிங்க” என்றான் மெதுவாக மல்லிகாவை பார்த்துக்கொண்டே..
அப்படி வாங்க ரெண்டு பேரும்.. நான் ஒருத்தி சமையல்கட்டுல வேலை செய்யுறேன் சும்மா அதிகாரம் செய்யவேண்டியது என்று மனிதிற்குள் பேசியவள் இடுப்பில் சேலையை சொருகிக்கொண்டு சமையல்கட்டுக்குள் சென்றாள்.
“டேய் சிவா உன் பொண்டாட்டிக்கு ரொம்ப வாய் நீளம்டா, கொஞ்சம் அடக்கிவைடா” என்றவர் ஆறிப்போன காபியை குடிக்க ஆரம்பித்தவர் வந்தனைக்கு புள்ளப்பூச்சி போல இருந்தா இப்ப என்னடானா என்னையே எதிர்த்து பேசுறா என்று தனக்குள் புலம்பிக்கொண்டார்.
“ம்மா அவக்கிட்ட சண்டை போடாம அவ சமைச்சு வைக்கிறதை சாப்பிட்டு காலாட்டிக்கிட்டு டிவி பாருங்க.. அதைவிட்டு அவகிட்ட சண்டைபோட்டா என்னால ஒண்ணும் செய்ய முடியாது.. இந்தாங்க காபி டம்ளர் கழுவி வைங்க” என்று விமலாவின் கையில் கொடுத்துவிட்டுச் சென்றான் சிவா.
அர்ஜுன் முதலில் எழும்ப தன்மீது குழந்தை போல உறங்கிக்கொண்டிருக்கும் ஜோஷிதாவின் நெற்றியில் முத்தம் கொடுத்தவன் அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு குளியலறைக்குள் சென்றான்.. குளித்துவிட்டு வந்தவன் கதவு திறந்து கௌரியை போய் பார்க்க அவரோ உறங்கிக்கொண்டிருந்தார்.. மீண்டும் அறைக்குள் வந்தவன் தனது லேப்டாப்பை ஆன் செய்து இன்றைக்கு மாணவர்களுக்கு எடுக்க வேண்டிய பாடத்திற்கான நோட்ஸை பார்த்துக்கொண்டிருந்தான்..
அர்ஜுனும் ஜோஷிதாவும் இரவு அறைக்குள் சென்றதும் கண்விழித்த கௌரியோ “இன்னுமா வரலை அர்ஜுன்” என்று அலமேலுவிடம் கேட்டார் சினமாக..
“அம்மா அர்ஜுன் தம்பி வந்துட்டாங்க.. நீங்க தூங்கிட்டிருக்கறதை பார்த்து எழுப்பவேண்டாம்னு சொல்லிட்டு ஜோஷிதாம்மாகூட தூங்க போய்ட்டாங்க” என்று அலமேலு சொல்ல..
“என்னது ரெண்டுபேரும் ஒண்ணா தூங்கப்போனாங்களா” என்று ஆயாசமாக கேட்டார்..
“என்ன பெரியம்மா அவங்க ரெண்டு பேரும் புருசன் பொண்டாட்டிதான ஒண்ணா தூங்கினா தப்பில்லையே” என்றார் அலுமேலு வெகுளியாய்.
“உனக்கு ஒண்ணும் தெரியாது” என்றவர் காலையில் எழுந்ததும் குளித்து முடித்து நேரத்தை பார்த்த கௌரி ஏழுமணியாகியும் ஜோஷிதா இன்னும் எழும்பாமல் இருக்க ரெண்டும் பேரும் சேர்ந்துட்டாங்க போல.. நான் நடக்க கூடாதுனு நினைச்சது நடந்திருச்சு.. அடுத்த இந்த கௌரி யாருனு காட்டுறேன்டி என்று பொருமிக்கொண்டார்.
அலமேலு சமைத்து வைத்துவிட்டு அம்மா நான் வீட்டுக்கு போய்ட்டு வரேன் என்று கிளம்பிவிட்டார்.. கௌரி எழுந்து வந்து ஹாலில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்.. ஜோஷிதா கண்விழித்துப்பார்க்க மணி எட்டாக இருந்தது.. எதிரே அர்ஜுன் இன்னும் லேப்டாப்பில்தான் இருந்தான்.. “அர்ஜுன் மணி எட்டாகிடுச்சு என்னை எழுப்பியிருக்கலாம்ல” என்று எழும்ப அவள் மேனியில்தான் ஆடையே இல்லை.. “அச்சோ” என்று வெட்கப்பட்டு போர்வையை போர்த்தி கொள்ள.
“லட்டு நான் பார்க்காதது இருக்கா என்ன.. போய் குளிச்சிட்டு வா.. நான், நீ எழும்பட்டும்னு தான் வெளியே போகமா இங்கயே உட்கார்ந்திருக்கேன்” என்றான்..
“ஓ அத்தை என்னை தப்பா நினைக்கமாட்டாங்கள்ள அர்ஜுன்” என்று தலையை சாய்த்து பாவமாக கேட்டாள்..
“அவங்களும் படிச்சவங்கதான் நம்மளை தப்பா நினைக்க மாட்டாங்க லட்டு நீ போய் குளிச்சுட்டு வா” என்றான் கண்ணைச்சிமிட்டி..
“இதோ டென் மினிட்ஸ்ல வரேன்” என்று குளியலறைக்குள் சென்றவள் குளித்து விட்டு டவலுடன் வர.. அவளை ஏற இறங்க பார்த்த அர்ஜுனோ “என்னடி காலையில மார்க்கமா வந்து நிற்குற” என்று அவளருகே போக “அர்ஜுன் நேரமாச்சு ப்ளீஸ்” என்று கண்களால் கெஞ்ச.
“ஒரு முத்தம் மட்டும் கொடுக்குறேன்டி” என்றவன் அவளது இழதில் ஆழ்ந்த முத்தம் பதித்தே விலகினான்..
“போயா ஹெச்ஓடி” என்றவள் கபோர்டிலிருந்து சேலையை எடுத்து கட்டிக்கொண்டு தலையை கிளிப்போட்டு அடக்கி “நான் ரெடி போலாமா” என்றதும்.. “லட்டு மறுபடியும் தோணுதுடி” என்றவன் அவளை அணைக்க…
“நைட் வந்து பார்த்துக்கலாம் அர்ஜுன்” என்றவள் அவன் முதுகில் கை வைத்து தள்ளிக்கொண்டு வந்தவள் கதவை திறந்து வெளியே வந்தனர் இருவரும்..
கௌரியோ பக்கவாட்டாக திரும்பி பார்க்க ஜோஷிதா அர்ஜுனுடன் சந்தோசமாய் சிரித்து பேசி வருவது அவருக்கு எரிச்சலை உண்டுபண்ணியது.. இருவரும் கௌரியின் பக்கம் வந்தது தெரிந்து “அர்ஜுன் நீ நேரமே எழுந்துப்பல்ல இன்னிக்கு மணி எட்டாச்சு இந்த நேரம் ஆகியும் இன்னும் வரலையேனு பார்த்துட்டேயிருந்தேன்” என்றார் சிலாகித்து..
“அம்மா ஜோஷிக்கு நாளைக்கு எடுக்க வேண்டிய பாடத்தில டவுட் சொல்லிக்கொடுத்திட்டிருந்தேன்.. நாங்க லேட்டாத்தான் தூங்கினோம்.. ஜோஷியும் நல்லா தூங்கினா தூங்கட்டும்னு விட்டுட்டேன்மா.. இப்ப கால் வலி எப்படியிருக்கு” என்றான் கௌரியின் பக்கம் அமர்ந்து..
கௌரியின் முகத்தில் இருக்கும் கோபத்தை கண்டு கொண்ட ஜோஷிதாவோ “அர்ஜுன் நான் பிரேக்பாஸ்ட் செய்ய போகட்டுமா” என்று சமையல்கட்டுக்கு போக.
“உனக்கு சமையல்கட்டுல வேலையில்லை ஜோஷிதா.. இன்னிக்கு அலமேலு சமைச்சு வச்சிட்டா.. நாளையிலிருந்து நீ நேரமே எழுந்து வீட்டுல பூஜை பண்ணிட்டு சமைக்குற சரியா” என்றார் ஆர்டர் போடுவது போல.
அர்ஜுனோ “அம்மா சமையலுக்கு ஆள் போட்டுக்கலாம்.. அவளும் காலேஜ் வேலைக்கு போறாள” என்றான் ஜோஷிதாவை பார்த்துக்கொண்டே..
“ஏன் அர்ஜுன் நான் நீ சின்ன வயசா இருக்கும்போதே உன்னையும் காலேஜையும் வீட்டு வேலையும் செய்துகிட்டுத்தான் பார்த்தேன்.. இப்ப வேலை செய்து பழகினாத்தான் நாளைக்கு புள்ள பிறந்த பிறகு ஜோஷிதாவால எல்லாத்தையும் மேனேஜ் பண்ணமுடியும் அர்ஜுன்.. நீ இந்த விசயத்துல தலையிடாத” என்றார் சற்று குரலை உயர்த்தி..
“அத்தை எதுக்கு இவ்ளோ டென்சன் ஆகுறீங்க.. நான் வேலை செய்யலைனு சொன்னாதானே ப்ராப்ளம்.. நாளையிலிருந்து நானே வீட்டு வேலை எல்லாமும் செய்துடுவேன்.. இப்ப எனக்கு பசிக்குது நான் போய் சாப்பிடவா.. அர்ஜுன் நீங்களும் சாப்பிட வாங்களேன்.. சாப்பிட்டு காலேஜ் கிளம்ப டைம் சரியா இருக்கும்” என்றாள் கௌரியை முறைத்துப்பார்த்துக்கொண்டே..
“அர்ஜுன் வரேன் ஜோ” என்று எழும்பியவன் “அம்மா நீங்களும் சாப்பிடலாம் வாங்களேன்.. நான் உங்களை கூட்டிட்டுப் போறேன்” என்று கௌரியின் கையைப்பிடிக்க..
“இப்போ என்னால நடக்க முடியும் அர்ஜுன்.. எனக்கு பசிக்கல நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்குறேன்” என்று பேப்பரை படிக்கத்துவங்கினார்.
இரண்டு பேர் நடுவுல மாட்டிக்கிட்டு தவிக்கிறேன்பா என்று பெரும்மூச்சுவிட்டு ஜோஷிதாவோடு சாப்பிடச்சென்றான்..
அனிதா அவர்களது கிராமத்தில நேரமே எழுந்து பழக்கம் உள்ளவள் .. ஐந்து மணிக்கே எழுந்தவள் பவனுக்கு இருபுறமும் தலையணை வைத்துவிட்டு எழும்பிப்போக மோகன் சோபாவில் காலை குறுக்கிப் படுத்திருந்தான்.. நாளையிலிருந்து நாம கீழ படுத்துக்கிட்டு அவரை கட்டிலில் படுக்கச் சொல்லணும் என்று மனதில் எண்ணியவள் குளிக்கச் சென்றாள்.. அனிதா எழுந்த போதே அவளது கால் கொலுசொலி சத்தம் கேட்டு எழுந்துவிட்டான் மோகன்.. பவன் தனியாக படுத்திருக்க அமைதியாக கட்டிலில் வந்து படுத்தவன்.. என்ன இவ இவ்ளோ நேரமே எழுந்துட்டா என்று மணியை பார்க்க ஐந்தேகால் ஆகியிருந்தது..அவள் குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு கண்ணை மூடிப்படுத்துக்கொண்டான்.
அனிதாவோ குளித்துவிட்டு பார்க்க பாத்ரூம் உள்ளே தனியாக டிரஸ் மாற்ற இடம் இல்லை.. அங்கே சேலையை கட்டினாள் ஈரமாகிவடும் என்று எண்ணியவள் அறைகுறையாக சேலையை கட்டிக்கொண்டு வெளியே வந்து மோகன் தூங்கிவிட்டானா என்று எட்டி பார்த்தவள் அவன் மூச்சு சீராக விட தூங்கிவிட்டான் என்று நம்பியவள் புடவைக்கு மடிப்பெடுத்து கட்டிக்கொண்டு வெளியே சென்றாள்.
மோகன் தூங்குவது போல நடித்து கொண்டிருந்தான் இன்னும் எத்தனை நாள் இந்த சோதனையோ என்று மனதில் நினைத்த மோகனோ பவனை அணைத்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தான்.. ஆனால் தூக்கம்தான் வரவில்லை.. அவளையும் கஷ்டப்படுத்துறோமா என்றும் எண்ணி கவலைப்பட்டான்.
அனிதாவோ வாசல் பெருக்கி கோலம் போட்டு முடித்து தோட்டத்தில் பூ பறித்து பூஜையறைக்கு வந்தவள் சுவாமிபடத்துக்கு பூவை போட்டு விளக்கேற்றி சாமி கும்பிட்டு சமையல் கட்டுக்கு வந்தவள் வேலையை கவனித்தாள்.. பரிமளாவோ அசந்து தூங்கியவர் எழுந்து பார்க்க மணி ஆறு ஆகியிருக்க எழுந்தவர் குளித்துவிட்டு பூஜையறைக்கு வந்து பார்க்க சுவாமி படங்களுக்கு பூபோட்டு விளக்கேற்றியிருந்தது.. மருமக நேரமே எழுந்துட்டா போல என்று நினைத்தவர் சாமி கும்பிட்டு விட்டு நெற்றியில் விபூதியை பூசிக்கொண்டு சமையல் கட்டுக்கு போக பாதி சமையலை முடித்திருந்தாள்.. தான் பிறந்த வீட்டுக்கு போகவேண்டுமென்ற எண்ணத்தில் வேகமாக சமைத்துக்கொண்டிருந்தாள்.
“அம்மாடி அனிதா வீட்டுக்கு வந்த முதல் நாள் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமே ஏன் இவ்ளோ நேரமே எழுந்தேம்மா” என்று அக்கறையாக கேட்டார் பரிமளா.
“அத்தை நான் எங்க கிராமத்துல நேரமே எழுந்து பழக்கம்.. அதான் இங்கயும் தூக்கம் வரலை நேரமே எழுந்து சமையல் ஆரம்பிச்சேன்” என்றவள் போட்டு வைத்த காபியை டம்ளரில் ஊற்றிக்கொடுத்தாள்.
காபியை வாங்கிக்குடித்தவர் “மீதி சமையல் வேலையை நான் செய்யுறேன் நீ கொஞ்சம் நேரம் உட்காரு” என்று சொல்லிக்கொண்டிருக்க..
பவன் அழுகை சத்தம் கேட்க. “இதோ உன் மகன் எழுந்துட்டான்.. எழுந்ததும் உன்னைதான் தேடியிருப்பான்.. நீ இல்லைனதும் அழாறான் அவனை போய் கவனி” என்றார் சிரிப்புடன்..
“இதோ போறேன் அத்தை” என்றவள் பாலை டம்ளரில் ஊத்திக்கொண்டு மோகன் அறைக்குச் சென்றாள் பவனை பெற்ற தாய் போல.
மோகனோ பவனை குளியலறைக்குள் கூட்டிச்சென்று அவனுக்கு பல்துலக்கி தூக்கி வந்தான்.
பவனோ “ப்பா ம்மாட்டா” என்று அழுதுகொண்டிருந்தவன் அனிதாவை பார்த்ததும் “ம்மா” அவளிடம் தாவினான்.. பால் டம்ளரை டேபிளிலில் வைத்தவள் “வாங்க செல்லம்” என்று பவனை ஆசையாக தூக்கியவள் குழந்தையின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்..
மோகனோ “இந்த செல்லம் எல்லாம் உனக்கும் ஒரு குழந்தை வந்தா பவனுக்கு கொடுப்பியா” என்று பட்டென்று கேட்டுவிட்டான் மோகன்.
“நான் ஆஞ்சநேயர் இல்லீங்க.. என் மனசுல நீங்களும் பவனும் இருப்பீங்க.. நமக்கு பிறக்கப் போகும் பிள்ளையும் அதில் இருப்பானு திறந்து காட்ட.. வாயால மட்டும்தான் என்னால சொல்ல முடியும்” என்று அடித்துப்பேசி விட்டாள் அனிதா.
ஒருநாள்ல இவளுக்கு பேச வாய் வந்துருச்சா என்று எண்ணியவன் “இன்னிக்கு மட்டும் தான் காலேஜ் லீவ் சீக்கிரம் புறப்படு உங்கப்பா வீட்டுக்குப் போய்ட்டு வந்துடலாம்” என்று டவலை எடுத்து குளியலறைக்குள் சென்றுவிட்டான்.
குளித்து வந்தவன் தலையை துவட்டிக்கொண்டு வெளியே சென்றான்.. பவனுக்கு பால் காட்டி முடித்து “கண்ணா நாம தாத்தா வீட்டுக்குப் போவோமா” என்று கேட்க..
“ம்ம் போவோம்” என்று சந்தோஷத்தில் தலையை ஆட்டியது பவன்..
அனிதாவுடன் அவளது வீட்டிற்குச் சென்றான் மோகன்.
காலை டிபன் சாப்பிட்டு முடித்து அனிதாவின் வீட்டுக்கு கிளம்பி வெளியே வந்தனர்.. மோகன் அவசியமென்றால் தான் காரை எடுப்பான்.. இன்று காரில் போவதை இல்லை பைக்கில் போவதா என்று குழம்பி கொண்டிருந்தான்
மோகனின் எண்ணத்தை புரிந்து கொண்ட அனிதா “என்னங்க மதியம் வெயில் வந்திடும் பவனுக்கு வெயில் ஒத்துக்காது நாம கார்லயே போயிடுவோம்” என்று காற்றில் ஆடும் தலை முடியை ஒதுக்கி விட்டு பேச
அனிதா பேசியதில் சந்தோசப்பட்டவன் அவளை முதன் முறையாக ரசித்து பார்த்தான்..
அவளோ அவனது பார்வையில் வெட்கம் கொண்டவள் “போலாம்ங்க” என்று கேட்டதும்
“ம்ம் போலாம்” என்று மெல்ல சிரித்தவன் காரை திறந்து உட்கார்ந்தான்
அனிதாவும் உட்கார வெளியே வந்த பரிமளா பவனுக்கு டாட்டா காட்ட “போயிட்டு வரோம் அத்தை” என்று தலையை ஆட்டினாள் அனிதா.
“போய்ட்டு வாங்க” என்று சந்தோசமாக கையை அசைத்தார் பரிமளா.. மகன் குடும்பமாக வாழ வேண்டி எத்தனை கோவிலுக்கு போயிருப்பார் பரிமளா.. இன்று அவரது ஆசை நிறைவேறி இருந்தது.. ஆனால் தன் மகன் குறுக்கே திரும்புவான் என்று அறியாமல் இருக்கிறார் பரிமளா
முத்துவோ மகளும் மருமகனும் வருகிறார்கள் என்று ஆடு கோழி மீன் என்று பறப்பன எல்லாம் வாங்கி சமையல் செய்ய ஆரம்பித்திருந்தார்.
