வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி
அத்தியாயம் 29
மனைவியை தோளோடு அணைத்தபடியே கீழே இறங்கி வந்தவன் யசோதாவையும் அவர்களுடன் அழைத்துக் கொண்டான். யசோதா உதயாவை வைத்தபடி காரில் பின்னாடி அமர்ந்துகொள்ள, மலருக்கு முன் கதவை திறந்துவிட்டான். 
மில்லை அடைந்தவர்களை அனைவரும் சேர்ந்து வரவேற்று ஆதவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்கள். அவர்களது வாழ்த்துக்களை எல்லாம்  தலையசைப்புடன் ஏற்றவன் கோயில் இருக்கும் இடத்திற்கு குடும்பத்தோடு சென்றான். பூஜையின்போது உதயாவை வாங்கி தன் கையில் வைத்துக் கொண்டாள் மலர்.பூஜை முடிந்து அனைவருக்கும் இனிப்பு, காரத்தோடு தேநீரும் வழங்கப்பட்டது. அப்போது மலரை செக்யூரிட்டி செட்டுக்கு அருகில்  கட்டியிருந்த நாயை பார்ப்பதற்காக அழைத்துச் சென்றான்..  அவர்கள் வருவதைப் பார்த்ததுமே குரைக்கத் தொடங்கியது அந்த நாய். அதன் சத்தத்திற்கு  உதயா அழுத்தொடங்க அவளை மலரிடம் இருந்து வாங்கி சமாதானம் செய்து அழுகையை நிறுத்தி யசோதாவிடம்  கொடுத்தான் பின்பு மலரின் கையை பிடித்து மீண்டும் அந்த நாயின் அருகில் அழைத்துச் சென்றான்.
அவன் அருகில் செல்லவும் அவர்களைப் பார்த்து வாலாட்டியபடி துள்ளி குதித்தது அந்த நாட்டு நாய். “இதை நான் முதலிலேயே பார்த்திருக்கிறேன். ஒருமுறை இங்கு வந்தபோது என்னை பார்த்து இது கத்திக்கொண்டே இருந்தது” என்றாள் மலர். ஹா ஹா ஹா என்று சிரித்தவன் “அது உன்னைப் பார்த்து கத்தவில்லை உன்னோடு விளையாட உன்னை அருகில் அழைக்கிறது”. “வா ஒன்றும் செய்யாது” என்று அவளை அழைத்துச் சென்று கூண்டின் கம்பி வழியாக கைகளை நுழைத்து அதன் தலையை தடவிக் கொடுத்தான். மலர் பயந்தாலும் அது தன்னிடமும் தலையை தடவிக்கொடுக்க நீட்ட மெதுவாக கை நீட்டி தலையை தடவிக் கொடுத்தாள். “பார்த்தாயா அது உன்னிடம் அன்பாக தான் இருக்கிறது”. “இதற்கு எப்படி என்னை தெரியும்?”  என்று கேட்டாள்.
“அது என்னவோ நீ அதனிடம் தான் கேட்கவேண்டும்” என்று குறும்பாக சிரித்தான். யோசனையாக அவனது முகம் பார்த்தவள் அவன் சிரிப்பில் மயங்கினாள். இதன் பெயர் என்ன தெரியுமா? இதன் பெயர் “சுட்டி” என்றான்.
“ஓ சுட்டியா? நல்ல பெயர்” என்றாள். எதிர்பார்ப்போடு அவளின் முகத்தை பார்த்திருந்தவன்  இதைக் கேட்டதும் ஆதவனது முகம் வாடிப் போனது. பின்பு அவர்களது மில்லை சுற்றி காட்டியவன் சிறிது நேரத்தில் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். வந்தவன் உடை கூட மாற்றாமல் அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டான். மலரும் உதயாவின் சாப்பாட்டை கவனிக்கச் சென்றுவிட்டாள்.
மகளை கவனித்து யசோதா இடம் கொடுத்துவிட்டு ஆதவனை இரவு உணவு சாப்பிட அழைப்பதற்கு அலுவலக அறைக்கு சென்று பார்த்தாள்.அங்கு அவனை காணாமல் அவர்களது அறையில் பார்ப்பதற்கு படியேறினாள்.
ஆதவன் அவர்களது அறையில் தான்  அமர்ந்திருந்தான்.அவனது உணர்வு களை கட்டுப்படுத்த முடியாமல் போராடிக்கொண்டிருந்தான். அவனுக்கு நன்றாகத் தெரிந்து போனது இன்று மலரின் அருகில் அவளை அணைத்துக் கொண்டு மட்டும் தன்னால் படுக்க முடியாது என்று. தனது பிறந்த நாள், தன் மனதில் மலர்மீதான நேசம், மாலையில் மலர் தன் கைகளில் மயங்கி நின்றது எல்லாம் சேர்ந்து இந்த இரவை அவள் இல்லாது கடக்க முடியாது என்று தோன்றிப் போனது.கட்டிலின் இரு பக்கமும் கைகளை ஊன்றி கண்களை இறுக மூடி தலையை பின்னாடி சாய்த்தபடி அமர்ந்திருந்தான். கதவை திறந்து உள்ளே வந்த மலர், உடை கூட மாற்றாமல் அவளுக்குப் பிடித்த வெள்ளை வேஷ்டி சட்டையில் கட்டிலின் மேல் அமர்ந்திருந்த ஆதவனின் தோற்றத்தில் திகைத்து நின்றாள். அவள் வந்த சத்தத்திற்கு கூட அசையாமல் அப்படியே அன்னாந்து அமர்ந்திருக்கக் கண்டு அவன் அருகில் சென்று மெதுவாக தோளைத் தொட்டாள். அவள் தொட்டது தான் தாமதம் சட்டென தலையை நிமிர்த்தி இரு கைகளை கொண்டு அவளைஇடையோடு அணைத்து அவள் மார்போடு தனது தலையை சாய்த்துக் கொண்டான். அவன் அப்படி  தன்னை அணைத்துக் கொண்டதும் தன் இரு கைவிரல்களால் அவனது நெற்றி வருடி சிகை கோதினாள். அதில் ஆதவன் இன்னும் கிளர்ந்தான். இடவலமாக முகத்தைத் திருப்பி அவள் மார்பின் மீது முத்தமிட்டு  அவனது தாடையை அவளது மார்பின் மையத்தில் பதித்து முகத்தை நிமிர்ந்தி அவளை பார்த்தான். அவனது திடீர் செயலில் உணர்ச்சிவசப்பட்ட அவளும் கண்களை இறுக மூடி அவனது  தலையை மார்போடு அணைத்துக் கொண்டு கதிர் என்று மெதுவாக உச்சரித்தாள். 
சில நொடிகளுக்கு பிறகுதான் தான் வாய்விட்டு கதிர் என்று உச்சரித்ததை உணர்ந்தவள். அப்போது தான் கோவையில் ஆதவன்  கதிரவனைப் பற்றிப் பேசும் போது அவளிடம் எச்சரித்ததும் நினைவு வந்தது. அவனிடம் அசைவில்லை என்பதையும் உணர்ந்து கண்களைத திறந்து அச்சத்துடன் அவனைப் பார்த்தாள்.என்ன சொல்லப் போகிறானோ? என்று அவன் முகம் பார்க்க அவனது விழிகளோ ஜொலித்தபடி இருந்தது. இடையோடு அவளை இன்னும் இறுக்கி அணைத்தபடி  “எனக்கு நீ வேண்டும் மலர்” என்றான்.
அவன் அப்படி கேட்டதும் அவனோடு உயிரோடு உயிராக கலந்து விடத்தான் துடித்தாள். கதிரவன், கணவன் என்றெல்லாம் உளறி வைத்துவிட்டு இப்போது எப்படி அவன் கைகளுக்குள் அடைக்கலம் ஆவது? என்று எண்ணி மௌனமாய் நின்றாள். ஆதவனுக்கு அவளது நிலை புரிந்தது. அவளாக வாய் திறந்து எந்த விளக்கமும் தரப் போவதில்லை. ஆனால் அவனுமே இந்த கணத்தை விளக்கம் கேட்டு தவற விடப் போவதில்லை. எப்படி இருந்தாலும் என் மனைவி இன்று எனக்கு மட்டும் என்று நினைத்துக் கொண்டவன் அவளை கைகளில் அள்ளிக் கொண்டான். திடீரென்று அவன் அள்ளிக் கொள்ளவும் கழுத்தில் கைகளை மாலையாய் கோர்த்து” நான்” ” கதிர்” ” கதிரவன்” என்று  சொல்லத் துடித்தாள். அவள் சொல்ல வருவது எல்லாம் கேட்கும் மனநிலையில் அவன் இல்லை.அவளது கதிரவன் கதை தான் அவனுக்கு தெரிந்த கதையாயிற்றே. எனவே “ஸ்ஸ்” என்று அவளை அடக்கியவன் மெல்ல  அவளை அள்ளியபடியே நடந்து கதவை அடைத்து தாழிட்டு கட்டிலை அடைந்தான்.
மெல்ல கட்டிலில் சரித்து  அழகோவியமாய் இருந்தவளை அணைத்துக் கொண்டான்.அவன் பரிசளித்த புடவையை அவனே பறிமுதல் செய்தான்.வெட்கம் கொண்டு பேரழகை இரு கை கொண்டு மறைக்க அதை தன் கை கொண்டு தடுத்தான். நெற்றியில் முத்தமிட்டவன் கீழிறங்கி நாசி நுனியில் அவனது மீசை கொண்டு லேசாக உரசினான். அவனது இந்தச் செயலில்  கூசியவள் நாசியையும், இதழ்களையும் சுருக்கி முகம் சுளித்தாள். அவள்  மழலையாய் முகம் சுருக்கி  இதழ்களை குவித்த அழகில் மயங்கி போனவன் அவள் இதழ்களை தன் இதழ்கொண்டு அணைத்துக் கொண்டான். அவளது அங்கங்களின் சௌந்தர்யம் எல்லாம் தனக்கே சொந்தம் என்று துரிதமாய் கொள்ளையிட்டான்.
அவனது வன்தீண்டல்களுக்கெல்லாம் 
மௌனமாய் ஒத்துழைத்து, கொள்ளைக்கு துணை போனவளின் உடலெங்கும்  சொர்க்கசுகங்கள் புஸ்வானமாய் வெடித்துச் சிதறியது.
 மலரது உடல்மொழி அவனை ஆராதனை செய்த போதும்  மனதில் இருந்த  நெருடலை அவன் உணர்ந்து தான் இருந்தான். அதையும் தாண்டி மனைவியோடான இந்த நெருக்கம் இளம் கணவனான அவனுக்கு தேவைப்பட்டது. 
கூடல் முடிந்த பின்னும் அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்து கை வளைவிலேயே வைத்துக் கொண்டான். மலர் அவனிடமிருந்து மெதுவாக விலக முயல “எங்கே போகிறாய்?” என்றான்.
அவன் முகம் பார்க்கத்தயங்கி “உதயா தேடுவாள்” என்றாள் அக்கறையுள்ள தாயாக. “கொஞ்ச நேரம் இப்படியே இரு பிறகு போகலாம்” என்று இழுத்து அணைத்துக்கொண்டான். கணவனின் பிறந்தநாளுக்கு தன்னையே பரிசாக கொடுத்து விட்டாலும்  தன்னைப்பற்றி என்ன நினைப்பாரோ? என்று வெட்கமும், வேதனையும் கொண்டாள். அதை மறைத்துக் கொள்ள அவனது மார்பில் புதைத்தாள். ஆதவனுக்கு அவள் உள்ளக்குமுறல்கள் எல்லாம் புரியத்தான் செய்தது. மெதுவாக அவள் தலையை வருடிக் கொடுக்க சின்ன விசும்பல் அவளிடமிருந்து வெளிப்பட்டது.அதை உணர்ந்து  அவளது முதுகை நீவி தட்டிக்கொடுக்க சற்றுநேரத்தில் அவளிடம் அசைவில்லை. மெல்ல குனிந்து பார்த்தான். ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் அவனது “அழகு ராட்சசி”.
இப்படியே கை வளைவில் அவளை வைத்தபடியே இரவைக் கடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் மகளை நினைத்து மெல்ல அவளை விலக்கி படுக்க வைத்து போர்வையை போர்த்தினான். அவசரக் குளியல் ஒன்றைப் போட்டு விட்டு மகளைத் தேடிச் சென்றான். அவனைக் கண்டதும் அவனுக்கு  சாப்பாடு எடுத்துவைக்க தயாரானார் யசோதா. “வேண்டாம்” என்று மறுத்து விட்டு” எங்கள் இருவருக்கும் உணவை அறை முன்பு வைத்து விடுங்கள்” என்றவன், உதயாவை  வாங்கி கொண்டான். மகளை  தூக்கிக்கொண்டு  அவர்களது அறைக்கு வந்து, மனைவியின் தூக்கம் கலையாதவாரு மகளோடு பேசி சிரித்து விளையாடினான். மெல்லக் கண் விழித்த மலர் கணவனும் மகளும் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். கட்டிலில் அசைவை உணர்ந்து அவளை திரும்பிப் பார்த்தான். கணவனின் பார்வை மாறியதைக் கண்டு பெட்ஷீட்டை வாரி சுருட்டி தோளோடு போர்த்திக்கொண்டு இறங்கி தடுமாறி நடந்து மாற்று உடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். அவள் குளித்து வெளியே வரவும் உதயா தாயைப் பார்த்து கை நீட்ட விரைந்து வந்து அவனிடமிருந்து குழந்தையை வாங்கி கட்டிலில் அமர்ந்து மடியில் வைத்துக் கொண்டாள்.இருவரும் கட்டிலில் அமர்ந்தபடியே குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தனர். ஆதவனை சந்திக்க கூச்சம் கொண்டவள் இப்பொழுது குழந்தையோடு விளையாடி  இயல்பான மன நிலைக்கு திரும்பி இருந்தாள். கணவனது உணவு வேளை தாண்டி போவதை உணர்ந்து “சாப்பிடபோகலாமா?” என்று கேட்டாள். “அப்போதே நான் உங்களை சாப்பிட அழைக்க தான்” என்றவள் முடிக்க முடியாமல் வெட்கத்தில் பாதியோடு நிறுத்தினாள். அவளது சிவந்த முகத்தை பார்த்தவன் எழுந்து  “இரு வருகிறேன்” என்று அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று யசோதா அவர்களுக்காக வைத்திருந்த உணவை எடுத்து வந்தான். அதில் இட்லி சட்னி சாம்பார் என்று இருக்க இருவருக்கும் தேவையானதை ஒரே தட்டில் எடுத்து வந்து முதலில் இட்லியை பிய்த்து மகளுக்கு ஒரு வாய் ஊட்டினான். பின்பு  இட்லியோடு சட்னி-சாம்பார் சேர்த்து மனைவியின் வாயருகே நீட்டினான். மலருக்கு உள்ளுர ஆசை தான் ஆனாலும் வெளியே “வேண்டாம்  நீங்கள் சாப்பிடுங்கள். நான் பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன்” என்றாள்.அப்போது மதியம் அவள் செய்தது போலவே மகளது கையைப்பிடித்து  இட்லியை சட்னி சாம்பாரில் தொட்டு அவனது கை கொண்டு மனைவியின் வாயருகே நீட்டினான். இதை மறுக்கும் எண்ணம் மலருக்கு தோன்றவில்லை.  பொக்கிஷகணங்கள் அல்லவா? கண்களில்  நீர் கோர்க்க மெல்ல வாய் திறந்து உணவை வாங்கிக் கொண்டாள்.அதைக்கண்டு அவனது கண்கள்கூட லேசாக கலங்கியது. அவன் கண்களுக்கு அவளும் குழந்தையாகவே தெரிந்தாள். ஆம் பாசத்துக்கு ஏங்கும் வளர்ந்த குழந்தை.அடுத்த வாய் உணவை   தன் கையால் எடுத்து  அவளுக்கு ஊட்டினான். ஊட்டியவன் அவளது இதழ்களில் இருந்து தனது விரல்களை பிரிக்கமுடியாதவன் போல மெதுவாகவே எடுத்தான்.  விரல்களில் பட்டிருந்த மீதி உணவை மலரது முகத்தை பார்த்துக் கொண்டே அவள் தேன் மிட்டாய் சாப்பிட்டுவிட்டு செய்வது போல ஒவ்வொரு விரலாக அவனது வாய்க்குள் வைத்து சுவைத்தான். அவனது இந்த செயலில் மலர் வெட்கிச் சிவந்து நெளிந்தாள். அவளுக்கு ஊட்டியபடியே இடையில் அவனும் சாப்பிட்டான். கணவன் மனைவிக்குள் சற்று முன்பு நடந்த கூடல் சிற்றின்பம் என்றால்  இதுபோன்ற நிகழ்வுகள் பேரின்பம் என்று தோன்றியது.  
தேகசுகங்களையும் தாண்டி உன்னதமான உணர்வுகள் இருவரையும் கட்டிப்போட்டது.இருவரும் சாப்பிட்டு முடிக்கவும், உதயா தூக்கத்திற்கு அழவும் சரியாக இருந்தது. மகளை தூக்கிக் கொண்டு அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டாள். அவளது செய்கையை பார்த்து ரசித்தவன் “எப்பொழுது தான் என்னிடம் உனக்கு வெட்கம் தீரும் மலர்?” என்று  நினைத்துக் கொண்டு அவனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்ய தொடங்கினான். 
மடியில் உறங்கிய மகளை மெதுவாக தூக்கி தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு வழக்கம்போல அவனுக்கு முதுகு காட்டி கட்டிலில்  படுத்து விட்டாள். சிறிது நேரத்தில் விளக்கனைத்து  படுத்தவன் கைகளால் அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். குளித்து சுகந்தமாய் இருந்தவள் அவனுள் மோக வெள்ளத்தைப் பொங்கச் செய்தாள். அவனுக்கே உரிய பிரத்தியேக வாசனை அவளையும் மயக்கியது. இதழ்களில் தொடங்கி இலக்கின்றி அவளது தேகமெல்லாம் அலைந்த அவனது கைகளுக்கு தடை போட முடியாமல், அவன் வெற்று மார்பில் முகம் சாய்த்து முழுதாய் தன்னை சமர்ப்பித்தாள்.  நடுங்கிய உதடுகள் முடிகொண்ட மார்பில் அசைய  அசைய அந்த சுகதாக்கத்தை தாளமுடியாமல் அவளைப் பின்னிக் கொண்டான். கொஞ்சல், கெஞ்சல் எதுவும் இன்றி  மீண்டும் மௌனமாய், கவிதையாய் ஒரு கூடல் அங்கே நடந்தேறியது.
                                 இசைக்கும்…………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *