வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி
அத்தியாயம் 17
  கதவை திறந்ததும் புதிதாக ஒருவரை பார்த்து உள்ளூர பயம் கொண்டாள். இருந்தும் அதை மறைத்துக்கொண்டு “உங்களுக்கு யார் வேண்டும்?” என்று கேள்வி கேட்டாள் மதிமலர். அதற்கு அவன் ஆற்றிய எதிர் செயலைக்கண்டு இன்னும் பயம் கொண்டாள் . அவன் வலக்கைவிரல்களை  இறுக்கி  ஓங்கி  சுவற்றில் அடித்ததில் பெயர்ப்பலகை மாற்றுவதற்காக அடிக்கப்பட்டிருந்த ஆணியில் உள்ளங்கை கிழித்து இரத்தம் ஒழுகத் தொடங்கியது.
ஒரு நிமிடம் என்ன நடந்தது? என்று விளங்காமல் ஓரடி  பின்னால் நகர்ந்த மதி அவன் கைகளில் ரத்தம் வழிவதைப் பார்த்தாள். அவன் மீண்டும் விரல்களை மடக்கி இருக்க எங்கே மீண்டும் காயப்படுத்திக் கொள்வானோ என்ற பதட்டம் தொற்றிக் கொள்ள   திரும்பவும் முன்னால் ஓரடி வைத்து அவன் கைகளை தடுத்து நிறுத்துவது போல் பிடித்து,  “அச்சச்சோ என்ன ஆச்சு? ஏன் இப்படி செய்கிறீர்கள்?” என்று கைகளை பற்றி திருப்பி பார்த்தாள். கையை கிழித்திருந்த இடத்தில்  ரத்தம் அதிகமாக வெளியேறுவதை கண்டு  கூந்தலை சுற்றியிருந்த ஈரமான டவலை எடுத்து அவன் கைகளை இறுகச் சுற்றினாள்.
இதையெல்லாம் செய்து கொண்டிருந்த மதி நிமிர்ந்து அவனின் முகத்தை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் ஒருவன் காயப்பட்டு இரத்தம் வழியும் நிலையில் ஏதோ சொர்க்கத்தை கண்டு விட்டவன் போல முகத்தில்  மகிழ்ச்சியோடு மதியை பார்த்தபடி நின்றிருந்தான்.
கையில் துண்டை இறுக்க கட்டி நிமிர்ந்தவள் “அதிகமாக கிழித்திருக்கிறது காயத்திற்கு தையல் போட வேண்டுமோ என்னமோ?” என்று கவலையோடு அவன் முகம் பார்த்து கூறினாள். பின்பு” உங்களுக்கு இங்கு யாரைப் பார்க்க வேண்டும் ?” என்று கேட்டாள். “மாயா இல்லையா?” என்று கேட்டான்.” ஓ “மாயாவின் நண்பரா நீங்கள்? அப்போ உள்ளே வாங்க” என்று அழைத்து அவனை அமரச் செய்தாள்.
“மாயா காலையிலேயே படப்பிடிப்பு விஷயமாக வெளியே சென்று விட்டார்கள். அவர்கள் போன் நம்பர்  இருந்தால் அவர்களிடம் பேசிப் பாருங்களேன்” என்று கூறி விட்டு  “காபி சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டாள்.
“கொடுத்தால் சந்தோஷப்படுவேன்” என்று லேசாக சிரித்தபடியே பதிலளித்தான். “ஒரே ஒரு நிமிடம்” என்று சொல்லிவிட்டு உள் அறைக்குச் சென்று விரிந்திருந்த கூந்தலை இருபக்கமும் எடுத்து பின் செய்துவிட்டு கிச்சனில் நுழைந்து அவனுக்கு காபி தயாரித்தாள். அவள் ஈர கூந்தலிலிருந்து நீர் சொட்ட சொட்ட அங்குமிங்கும் லேசாக அசைந்து அசைந்து அவள் வேலைசெய்யும் விதத்தை ரசித்து பார்த்திருந்தான். காலை உணவாக அவளுக்கு அவலை  நனைத்து  தேங்காய்ப்பூ சர்க்கரை சேர்த்து வைத்திருந்தாள், அதையும் ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொண்டு காபியோடு அவனுக்கு முன்னால் வைத்தாள்.
சாப்பிடுவானா ?என்னவோ? என்று தயக்கமாக பார்க்க அவனோ எந்த கூச்சமும் இன்றி “ஒரு ஸ்பூன் தருகிறாயா?” என்று மதியைப் பார்த்து கேட்டான். அவள் எடுத்து தரவே   ரசித்து சாப்பிட்டான். கையில் துண்டு சுற்றி இருக்க மெதுவாக  அவன் சாப்பிட்ட விதத்தை பார்த்து “ரொம்ப வலிக்கிறதா?” என்று கேட்டாள். அவனுக்கு அதெல்லாம் எங்கு காதில் விழுந்தது அவன் எதிர்பார்த்தது போலவே தேவியின் தரிசனம், கூடவே பிரசாதம்  என்பதுபோல   தெய்வீக மனநிலையில் தான் இருந்தான். பின்பு காப்பியை குடித்தவன் “நான் வருகிறேன் மாயா வந்தால் சொல்லிவிடுங்கள்” என்று எழுந்து நின்றான்.
அவன் எழுந்து புறப்பட தயாராகத் தான் மதிக்கு உறைத்தது அவன் பெயரைக் கூட கேட்கவில்லை என்று” உங்கள் பெயர்? மாயாவிடம் என்னவென்று சொல்ல வேண்டும்? “என்று கேட்டாள். “ஆதவன்” என்று சொல்லுங்கள் என்றவுடன், “ஆதவன் சார் கையை பார்த்துக்கோங்க மருத்துவரிடம் காட்டி விடுங்கள் “என்றாள் அக்கறையாக.
மலரின் வாயிலிருந்து முதல்முறையாக ஆதவன் என்ற அவன் பெயர் உச்சரிப்பதை  கேட்டு மகிழ்ந்தவன். கூடவே வாலாக ஒட்டிக் கொண்டு வந்த சார் என்று விளியில் முகம் சுளித்தான். இன்றைக்கு இது போதும் இனி நாளைக்கு பார்க்கலாம் என்று முடிவு செய்து கொண்டவனாய் அவளிடமிருந்து விடைபெற்று திரும்பிக்கூடப் பார்க்காமல் வேக நடை நடந்து வெளியேறினான்.
அவன் சென்ற பிறகு தான் மலர் யோசித்தாள் மாயாவை பார்க்க வந்தான் சரி, கையில் ஏன் குத்தி காயம் செய்து கொண்டான்? என்று யோசித்து விட்டு, முதலில் எப்படி யார் என்று தெரியாமல் உள்ளே அனுமதித்தோம்? மாயாவுக்கு தெரிந்தவரா? இல்லையா ?இனிமேல் இப்படி யாரையும் உள்ளே விடக்கூடாது ஆதவனை தெரியுமா? என்று இன்று இரவு மாயாவிடம் கேட்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
இரவு மாயா வந்ததும் அவளை காண ஆதவன் வந்ததாக சொன்னாள். அதற்கு  மாயா” தெரியும் போனில் பேசி விட்டேன்” என்று முடித்து விட்டு படுக்கச் சென்று விட்டாள். அப்போது தெரிந்தவர் தான். அவரை தவறாக நினைப்பது போல் நடந்து கொள்ளவும் இல்லை கையை குத்திக் கிழித்துக் கொண்டது தவிர என்று சிரித்துக்கொண்டாள். அடுத்த நாள் மலருக்கு ஆதவனின் நினைவு வந்தது கை காயம் எப்படி இருக்கிறதோ? என்னவோ? என்று நினைத்துக்கொண்டாள்.
இரண்டு நாட்கள் முடிந்திருந்த நிலையில் பிற்பகலில் அழைப்பு மணி ஒலிக்கும் ஓசை கேட்டது. திறக்கவே நின்றிருந்தது ஆதவன். என்ன இது மாயா இல்லாத நேரம் வந்திருக்கிறார் உள்ளே அழைக்கலாமா ?வேண்டாமா ?என்று தயங்கிக் கொண்டிருக்கும் போது அவளைக் கடந்து உள்ளே வந்து அமர்ந்து விட்டான்.
“மாயா இல்லையா? என்று கேட்டான்.
” இல்லை சார் “என்று சொல்லிவிட்டு, “கை காயம் எப்படி இருக்கிறது? பரவாயில்லையா?” என்று விசாரித்தாள்.
கைகளை விரித்து காமித்து” இன்னும் லேசாக வலி இருக்கிறது ஆனால் காயம் ஆற  தொடங்கிவிட்டது” என்றான்.
சிறிதுநேரம்  ஏதோ நியூஸ் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு “மலரை பார்த்து சாப்பிட ஏதாவது தர முடியுமா? “என்று கேட்டான். “தோசை மாவு தான் இருக்கிறது சார் சாப்பிடுகிறீர்களா?”என்று கேட்டாள். “கொடு “என்றுவிட்டு பாத்ரூமை பயன்படுத்துவதற்காக எழுந்து சென்றாள் வலப்புறம் இருந்த அறையை திறந்ததுமே முகத்தில் அடித்த பர்ஃப்யூம் வாசனையும் இறைந்து கிடந்த அழகு சாதனப் பொருட்களும் சொல்லாமல் சொன்னது அது மாயாவினுடைய அறை என்று.  அந்த அறையை அடைத்துவிட்டு எதிர்ப்புறமாக இருந்த மலரின் அறையை திறந்து உள்ளே செல்ல முயன்றான்.
அப்போது அங்கு வந்த மதி “இதுதான்  மாயாவுடைய அறை” என்று மற்றொரு அறையைக் காட்டினாள். அவள் அப்படி சொன்னதும் கதவின் கைப்பிடியின் மேல் கை வைத்துக்கொண்டு “ஏன் இந்த அறையில் தண்ணீர் வராதா ?”என்று கேட்டான்.
*வரும் சார்” என்று  பதிலளித்துவிட்டு, “மாயாவின் அறையிலும் தண்ணீர் வரும் சார் “என்றாள்.
 “அப்படி என்ன இந்த அறைக்குள் நான் போகக்கூடாது என்று இத்தனை வாக்குவாதம் செய்கிறாய்?”. ” ஏடிஎம் மிஷின் ஏதாவது உடைத்துக்கொண்டு வந்து உள்ளே வைத்திருக்கிறாயோ?” என்று தாடையில் ஒரு விரலை வைத்து அதிசயித்த படி கேட்டான்.
 “அச்சச்சோ அப்படியெல்லாம் இல்லை சார்” .
“வேறு என்ன? இந்த பாத்ரூம் பயன்படுத்துவதற்கு வாடகை ஏதாவது தரணுமா?” என்று  அவனுடைய பர்சை எடுத்து இரண்டாயிரம் ரூபாய்  தாள்கள் சிலவற்றை நீட்டினான். “இல்ல சார் அப்படி இல்லை வேண்டாம், வேண்டாம்” என்று கையசைத்தபடி பின்னாடி நகர்ந்தாள். 
“இந்த வீட்டிற்கு வாடகை தருவது யார் என்று தெரியுமா?”
“மாயா மேடம் தானே சார் “என்றாள்.
“முதலில் மாயா மேடம் என்று நீட்டி முழக்குவதை நிறுத்து” என்றான்  அதட்டலாக. “இந்த வீட்டுக்கு வாடகை கொடுப்பது யார் தெரியுமா? மாயா இல்லை. இந்த வீட்டின் வாடகை கீர்த்தனா மில்சின் சார்பில் கொடுக்கப்படுகிறது. அந்த கீர்த்தனா மில்ஸ் உரிமையாளன் நான் தான் தெரியுமா? இனிமேலும்  உனக்கு இந்த பாத்ரூமை நான் பயன்படுத்துவது ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா? ” என்று அசால்டாக கூறி உள்ளே நுழைந்து கதவை அடைத்துக் கொண்டான்.
இவனுக்கு எப்படி தன் நிலைமையை விளக்குவது சரி இன்று ஒரு நாள் மட்டும் தானே என்று, இரவு உணவுக்காக அவளுக்கு வைத்திருந்த மாவில் மூன்று தோசையை ஊற்றி மதியத்திற்கு செய்திருந்த சாம்பார்  இட்லி பொடியும் வைத்துக் கொடுத்தாள். அவன் சாப்பிட்ட வேகம் கண்டே  அவன் பசியை புரிந்துகொண்டு வீட்டிலிருந்த  இரண்டு முட்டையை வேகமாக வெங்காயம் சேர்த்து ஆம்லெட் ஆக தயாரித்துக் கொண்டு போய் கொடுத்தாள்.
சாப்பிட்டு முடித்துவிட்டு” இனிப்பு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன்?”
அன்றாட சாப்பாடுக்கே ஆயிரம் சிக்கனம் பார்ப்பவள் மதிமலர்,இதில் இனிப்புக்கு எங்கே போவாள் இருந்தும் அந்த அப்பார்ட்மெண்டிலேயே ஒரு பெண்மணி வீட்டில் செய்யும் பாரம்பரிய தின்பண்டங்கள் கொண்டுவந்து விற்பனை செய்வார். அவரிடம் மதிமலர் தேன் மிட்டாய்பாக்கெட்டு ஒன்றை வாங்கி வைத்திருந்தாள். அது அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
 ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படும் போது அதைத்தான் எடுத்து சாப்பிடுவாள். இதையெல்லாம் இவர் சாப்பிடுவாரோ  என்னவோ என்று யோசித்துக்கொண்டே அதை எடுத்து அவனிடம் நீட்டி” தரமான முறையில் தயாரிக்கப்பட்டது தான் சார் ஒன்று சாப்பிடலாம்” என்றாள்.
ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டான்.
இதற்குப் பிறகு அவனிடமிருந்து மதி சற்று விலகிக் தான் இருந்தாள் .மதிக்கு அவன் இன்னாரென்று தெரியாத போதிலும்அவன்  பணக்காரன் என்ற ஒரு விஷயமே போதுமானதாக இருந்தது அவனிடம் இருந்து தள்ளி இருக்க.
இவையெல்லாம் ஆதவன் கவனித்து போலவே தெரியலை மாயாவை கேட்டுக்கொண்டு பகல் பொழுதுகளில் வரும் அவன் சில நேரங்கள் உணவுப் பொருட்களை பார்சல் செய்து வாங்கி வந்து அங்கேயே அமர்ந்து சாப்பிடுவான்.
ஒதுங்கி நிற்கும் மதிமலரை அழைத்து “இதையெல்லாம் பிரித்து எனக்கு உதவ மாட்டாயா? “என்று  ,  அவனுக்கு  அவளை பரிமாற வைத்து விடுவான்.
அவன் வாங்கி வரும் உணவுப் பார்சல்களை சிலவற்றை பிரிக்கக் கூட மாட்டான். அப்படியே வைத்துவிட்டு சென்றுவிடுவான். மதி மலருக்குத் தான் சலிப்பாக இருக்கும் இதை என்ன செய்வது . எதற்கு தேவையில்லாமல் இத்தனையை வாங்கி வரவேண்டும். இப்படி விட்டு விட்டு செல்ல வேண்டும் என்று. அதை சாப்பிடவும் முடியாமல். வீண் பண்ணவும் முடியாமல் அவதிப்படுவாள்.
ஆதவன் உள்ளே வரும்போது” மாயா இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே வருவான். ஒருநாள்கூட மாயா இருந்தபொழுது வீட்டிற்கு வந்ததே கிடையாது.  இந்த விஷயம் தான் மதிமலருக்கு  கொஞ்சம் உறுத்த தொடங்கியது. சட்டென்று எதையும் உதறி தள்ளிவிட்டு செல்லமுடியாத அவளது நிலைமை மேல் அவளுக்கு சுய பச்சாதாபம் ஏற்பட்டது. எப்படியோ இதை வளர விடக்கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.
அன்று அப்படித்தான் ஆதவன் வந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகிறது. இன்று வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்துக்கொண்டே அவளது அறையை பூட்டி சாவியை கையில் வைத்துக்கொண்டாள். அவள் நினைத்தது சரி என்பதுபோல்  மதிய பொழுதில் அழைப்பு மணி ஒலித்தது கதவை திறக்க சிரித்த முகமாக நின்றிருந்தான்  ஆதவன். அவளை கேட்காமல் நெடுநெடுவென உள்ளே வந்தவன் டைனிங் டேபிளின் மேல் கொண்டு வந்த உணவுப் பார்சல்களை வைத்துவிட்டு ஹாலில் சோபாவில் அமர்ந்து டிவி பார்க்கத் தொடங்கினான். சிறிது நேரம் கழித்து வழக்கம்போல பாத்ரூமை பயன்படுத்துவதற்காக எழுந்துசென்று மதியின் அறைக் கதவில் கை வைக்க அது பூட்டி இருப்பவை புரிந்துகொண்டான். திரும்பி மதியைப் பார்க்க ,அவள் அப்போதுதான் சமையலறையில் முக்கிய வேலையை இருப்பதுபோல் எதையோ எடுப்பதும் வைப்பதுமாக கவனிக்காதது போல் அவனை பார்க்க அவளை முறைத்தபடி அவளது அறை வாசலில் முன்பு நின்றிருந்தான். மதியை முறைத்தபடியே “பூட்டி இருக்கிறதே சாவி எங்கே?” என்று கேட்டான். “எங்கோ தொலைந்து விட்டது சார். மாயாவிடம் இன்னொரு சாவி இருக்கிறது இரவு வந்ததும் வாங்கிக் கொள்வேன்.” என்று பொய் சொன்னாள். “உங்களுக்கு பாத்ரூமை பயன்படுத்த வேண்டுமென்றால் மாயாவின் அறை யில்  உள்ளதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் “என்றாள். “தேவையில்லை” என்று அமைதியாக பதில்சொன்னவன், திரும்பி வந்து சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து   போனில் ஏதோ  செய்துகொண்டே டிவியில் செய்திசேனலை பார்க்க தொடங்கி விட்டான்.
 இந்த அமைதி மதிக்கு ஆச்சரியமாக இருந்தது. என்ன இது கோவப்பட்டு போய்விடுவார் என்று பார்க்க இப்படி அமர்ந்து விட்டாரே என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே இருபது நிமிடங்கள் கடந்திருந்தது. அப்போது அழைப்பு மணி ஒலிக்க  அவனே எழுந்து கதவை திறந்தான். யாரோ ஒரு நபர் அவனிடம் கையில் எதுவோ கொடுப்பது போல் இருந்தது. அவனுக்குத் தெரிந்தவர்கள் போல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு மதி அடுப்படிக்கு திரும்பவே அவளுக்கு முன்னால் வந்து இடுப்பில் கை வைத்த உடலை சற்று பின்னால் சாய்த்து வெற்றிச் சிரிப்பு  சிரித்தான். சிரித்து முடித்த அவன் கைகளில் இருந்த சாவியை அவளின் முகத்துக்கு நேராக ஆட்டினான்.  அதில் இந்த வீட்டின் மெயின் டோர் சாவியோடு இரண்டு படுக்கை அறையின் சாவிகளும் இருந்தது. “என் சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும்  என்னிடம் என்னிடம் மாற்று சாவி உண்டு. இனி இதுபோல் முட்டாள்தனமாக எதுவும் செய்யாதே” என்று சொல்லிவிட்டு. மாற்று சாவியை கொண்டு அவளது அறையின் கதவைத்திறந்து உள்ளே சென்றவன், தலையை மட்டும் வெளியே நீட்டி  மதியின் முகத்தைப் பார்த்து இரு கண்களையும் சிமிட்டிச் சிரித்து கதவை அடைத்து விட்டான். 
                                 இசைக்கும்……………..

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *