வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி
அத்தியாயம் 25
ஒரு ஆண்மகனாக  அவனது முதலிரவை  பற்றிய கனவும், கற்பனையும் ஆதவனுக்கும் இருந்தது.தாயாருக்காக திருமணத்தை முதலில் செய்து கொண்டிருந்தாலும்,மலரிடம் தன் நேசத்தை வெளிப்படுத்தி அவளின் சம்மதத்துடன் இல்வாழ்கையை இன்பமாக தொடங்கவேண்டும் என்று நினைத்திருந்தான்.
காலத்தில் பிடியில் இருக்கும் கயிறு கட்டிய பொம்மைகள் தானே நாம். நினைபதெல்லாம் நடந்துவிடுமா?  காய்ச்சலின் விளைவோ? அல்லது அவள் உறங்குவதற்காக கொடுத்த மருந்தின் விளைவோ? மனதில் உள்ளதை எல்லாம் ஆதவனிடம்   புலம்பிக் கொண்டிருந்தாள் மலர்.
அவன் முகம் பார்த்து நீங்கள் என்னை நேசிக்கமுடியாது ஆனால் நான் உங்களை உயிருக்கு உயிராக நேசிக்கிறேனே அதற்காகவாவது உங்கள் குழந்தையை சுமக்கும் தகுதியை தாருங்களேன்.
எனக்கு உங்கள் பணம், அந்தஸ்து ஏதும் வேண்டாம்.உங்களுக்கு புரிகிறதா?அதை நீங்கள் மட்டுமே எனக்கு கொடுக்க முடியும் அதனால் தான் கேட்கிறேன் என்று அழுதாள்.பின்பு மீண்டும் நீங்கள்  என் கதிர் தானே சொல்லுங்கள் என்று அவன் காலரை பிடித்து ஆட்டி, அவனை ஆட்டிப்படைத்தாள் அவனது அழகு ராட்சசி.
இனி மலருக்கு சொல்லி விளங்கவைக்க முடியாது செயலால் விளக்கிவிட முடிவுசெய்தான். தங்கள் திருமணம் நடந்த சூழ்நிலை, தாயாரின் உடல்நிலை, மலரின் உடல்நிலை என்று அவன் முன்னே இருந்த அத்தனை காரணங்களையும் தள்ளி வைத்து காதல் மனைவியை கைகளில் அள்ளிக் கொண்டான்.
மெத்தையில் சரித்து அவளது  முகம் பார்த்தான். அப்போதும் அவனது சட்டை காலரை விடாமல் “எனக்கு என் கதிர்  வேண்டும்” என்று ஆதவன் கண்களை பார்த்து சொன்னாள். அவளது கண்களில் கண்ணீரோடு கலக்கமும் ஏக்கமும் கலந்தே வழிந்தது.அதன் பிறகும் ஆதவனால் அமைதியாக இருக்கமுடியுமா?
தயக்கம் தகர்த்து அவள் முகமெல்லாம் முத்தமிட்டு மோகம் வளர்த்தான். ஒரு நொடி கூட தாளமுடியாது என்பதாய் காதோரம் கிறங்கி ஒலித்த கதிர் என்ற அழைப்பு அவனது நிதானத்தை நிலைகுலையச் செய்து செல்களில் எல்லாம் இளமையின் இம்சை ஊற்றுக்களை உற்பத்திசெய்தது.
களைத்து தெரிந்த அவளின் உடைகளை கலைத்து உன்மத்தம் கொண்டான். பேரழகு பெண்மையை இதமாய்  இதழ்களாலும், பதமாய் பத்து விரல்களாலும் படையெடுத்து கொண்டாடி  மலரை திண்டாட வைத்தான். 
கண்களை மூடி பரவசநிலையில் தன் இதழ்களை பற்களால் கடித்து தவித்தாள்.அந்த செயலையையும் தன தாக்கி தன்னவளில் மூழ்கி தாபத்தை முகிழ்க்கச்செய்தான்.
மலரும் இன்பச்சுமையை இடைவெளி இல்லாது இரு கை கொண்டு இறுக அணைத்து வரவேற்று இசைந்து இல்லறம் படித்தாள். 
மலர் எனும் உயிர் வீணையை அவன் விரல்கள் கொண்டு மென்மையோடும், சிறிது வன்மையோடும் ஓயாமல் மீட்டி இசைத்து பேரின்பம்கொண்டான்.
ஆதவனின் வியர்வை படிந்த வெற்று முதுகில்  மென்விரல்கள் கொண்டு  ஆழஉழுது, ஆண் அவனுக்குள் ஆவலை  விதைத்தாள்.  உதடுகளாலும், உடலாலும் உயிர் தீண்டி உரமிட்டு  இன்பப் பூக்களை விளைவித்தான். ஆண் மகனின் ஆளுமையான  வேகத்திற்கும், தேகத்தின் தேடலுக்கும் விரும்பியே விருந்து படைத்தாள்.
இருவரும் இரவெல்லாம் தீண்டி தீண்டி தித்திக்கும் தீ வளர்த்தே தீரா இன்பத்தில் குளிர்காய்ந்தனர்.
அந்த இனிய ஏகாந்த இரவில் அந்த அறையில் கேட்டதெல்லாம் “கதிர்”  “மலர்” என்ற  ஏற்ற இறக்கங்களுடன் கூடிய  ஒலிகள் மட்டுமே.
உறக்கம் மறந்து, உறவு வளர்த்து இருவரும் விழி மூடிய போது இரவும் முடிந்து போனது.
தாமதமாய் தூங்கிய போதும் முதலில் விழித்துக் கொண்டது மலர்தான். வழக்கமான நேரத்தில் கண்விழித்தவள் ஆதவனின் வலப்பக்க மார்பில் தலை வைத்திருக்க அவனது வலது கையால் மலரை அணைத்துப்  பிடித்தபடி உறங்கிக் கொண்டிருந்தான் அவளது ஆசைக் கணவன் கதிரவன்.
முதலில் கனவென்று நினைத்து அவன்இடக் கன்னத்தில் வலது உள்ளங்கையை பதித்து அசந்து உறங்கும் அவனை ஆசையாக பார்த்திருந்தாள். அவள் தொடுகைக்கு  அவளது உள்ளங்கையோடு இன்னும் வாகாக கன்னம் சாய்த்து மென்மையாக சிரித்து மீண்டும் உறங்கத் தொடங்கினான்.
அப்போதுதான் நிகழ் உலகிற்கு வந்தாள் மலர். மெல்ல அவர்களின் நிலை உணர்ந்து, அதிர்ந்து  அவனை விட்டு உறக்கம் கலையா  வண்ணம் மெதுவாக விலகினாள்.
எப்படி நடந்தது? என்று விளங்கா விட்டாலும் நடந்து முடிந்ததை விளக்கிச்சொன்னது அவர்கள் இருந்த நிலை.
தன் புடவையை எடுத்து சுற்றிக் கொண்டு மாற்றுஉடைகளை எடுத்துக்கொண்டு குளியலறை புகுந்தாள்.
யோசிக்க யோசிக்க எதுவும் தெளிவில்லாத நிலை. ஆதவன் மேல் சாய்ந்து அழுதது வரை மட்டுமே மலருக்கு நினைவிருந்தது. அவனை கதிரவன் என்று அழைத்து தன் மனக்குழப்பத்தை , தான் அவனை காதலிப்பதை சொல்லியது எதுவுமே மலருக்கு நினைவு இல்லை. ஏதோ ஒரு வகையில் அவனை தான் நிர்ப்பந்த படுத்தியது போல் குற்ற உணர்வில் தவித்தாள். ஆதவனுக்கு  தான் துரோகம் செய்து விட்டதாகவே எண்ணி தவித்தாள். அவன் நேசிக்கும் பெண்ணை சந்திக்கும் வரை மனைவியாக இருக்கிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு இப்படி அவரோடு வாழ்ந்து விட்டேனே. இனி எப்படி அவரின் முகத்தில் விழிப்பது என்று குளியல் அறையிலேயே கண்ணீர் வடித்தாள். 
குளியலறையை விட்டு  மெதுவாக அவள் வெளியே வந்தபோது ஆதவனின் அலைபேசி ஒலிக்கத் தொடங்கி யிருந்தது. அதன் ஒலியில்  விழி மலர்ந்தவன் முதலில் கண்டது  “அழகு ராட்சசி”யின் தோற்றத்தைத் தான். காதல் கணவனாக பார்வையாலேயே அவளை   ஆராய்ச்சி செய்தபடியே அலைபேசியை காதில் வைத்தவன் முகம் அப்பட்டமாய் மாறிப்போனது. வாரி சுருட்டிக் கொண்டு அவசரமாக எழுந்து “இப்போதே வருகிறேன்” என்று பதிலளித்து விட்டு வேகவேகமாக உடைகளை அணிந்தான்.
அவனது பதட்டத்திலேயே ஒருவாறு உணர்ந்து கொண்டவள் “அத்தைக்கு என்ன ஆயிற்று?” என்று அவனுக்கு முன்னால் அறையின் கதவு திறந்து வெளியே ஓடத் தொடங்கினாள். “தெரியவில்லை நர்ஸ் கீழே வரச் சொல்கிறார்கள்” என்று அவளோடு சேர்ந்து அவனும் படிகளை வேகமாக கடந்தான்.
அவர்கள் கீர்த்தனாவின் அறையில் நுழைந்த போது ஒருக்களித்தது போல் கட்டிலில் படுத்திருந்தார் கீர்த்தனா. “என்ன ஆச்சு?” என்று நர்சை பார்த்து கேட்டபடியே தாயின் கைகளை பிடிக்க அது ஜில்லென்று இருந்தது.
“சார் தூங்குகிறார்கள் என்று நினைத்திருந்தேன். இத்தனை நேரமாகியும்  அசையாமல் ஒரு பக்கமாகவே படுத்திருக்க சந்தேகம் வந்து  பார்த்தேன். எப்போது உயிர் பிரிந்தது என்று தெரியவில்லை” என்று பரிதாபமாகச் சொன்னார்.
ஆம் மகனையும்,மருமகளையும் சேர்த்து வைத்த நிம்மதியோடு மீளாத்துயிலில் மூழ்கியிருந்தார் கீர்த்தனா. இதைக் கேட்டதும் “அத்தை” என்று அவரது கால்களில் விழுந்து கதறி துடித்தாள் மலர். “இப்படி ஆகும் என்று தெரியவில்லையே.தெரிந்திருந்தால் நேற்று இரவு உங்களை விட்டு நான் விலகிச் சென்று இருக்கவே மாட்டேனே” என்று அழுதாள்.
மலருக்கு உண்மையாகவே அவரது இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேற்று மதியம்வரை தன்னோடு பேசிக்கொண்டு இருந்த நபர் இன்று இல்லை என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.அதுவும் கடைசியாக அவர் தன்னிடம் பேசியது  ஆதவனின் வாரிசுகளை குறித்தும் ,தனக்கு பரிசாக கொடுத்த வளையல்களைப் பற்றியுந்தான்.
அவள் கதறலை காதல் கணவனாக கண்கொண்டு பார்க்க முடியாமல், ஒருவேளை  அவளை அணைத்துக் கொண்டால் தனக்கும் ஆறுதல் கிடைக்குமோ? என்று எண்ணியவனாக “மலர்” ” மலர்” என்று அவளை அசைத்து எழுப்பி அவனோடு சாய்த்து அணைத்துக் கொண்டான். இந்த துயர நொடிகளை ஆதவனுமே அவளை கைவளைவில் வைத்து கடக்க முயன்றான்.
சிறிது நேரம் மௌனமாக  அவளின் முதுகை நீவி ஆறுதல் படுத்தி நிமிர்த்திப் பார்க்க அவன் தோள்களில் சாய்ந்து மயங்கி இருந்தாள் மலர்.
பதறிய படியே அவளை கைகளில் அள்ளி அருகிலிருந்த சோபாவில் படுக்கவைத்து “நர்ஸ் இவளைப் பாருங்கள்” என்றான்.
உடனடியாக சோதித்த அவரும்” ஒன்றும் இல்லை சார் அதிர்ச்சி மயக்கம்தான்” என்றவுடன், “சரி பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று அடுத்த செய்ய வேண்டிய வேலைகளை கடகடவென்று தொடங்கினான்.
சிறிது நேரம் கழித்து கண்விழித்த மலரின் மனநிலை விரக்தியின் விளிம்பில் இருந்தது அவளது எதிர்காலமே கேள்விக் குறியாய் போனது. யார் மனம் நோகக் கூடாது என்று ஆதவனை திருமணம் செய்து கொண்டாளோ, அந்த ஜீவன் இவ்வுலகில் இல்லை என்பதை அவளது மனம் ஏற்க மறுத்தது.
அவளின் வாடிய தோற்றத்தைப் பார்த்த ஆதவன்  யசோதாவை தனியாக அழைத்து , அவள் நேற்று இரவில் இருந்து ஏதும் சாப்பிடவில்லை. ஜூஸ் மட்டுமாவது அவளை குடிக்க வையுங்கள் என்றான்.
அவர் மலரிடம் சொல்லிப் பார்த்து முடியவில்லை என்று அவனிடமே வந்து நின்றார். “சரி” என்ற ஆதவன் “ஜூசை அலுவலக அறைக்கு அனுப்புங்கள்”. “நான் அழைத்தேன் என்று மலரையும் வரச்சொல்லுங்கள்” என்றான்.
உள்ளே வந்த மலரை கை பிடித்து அழைத்து சேரில் அமர வைத்து அவளுக்கு அருகில் டேபிளின் மேல் சாய்ந்தபடி நின்றுகொண்டு ஜூசை எடுத்து அவளது கைகளில் கொடுத்தான். அழுது அழுது கண்கள் சிவந்து இருக்க வேண்டாம் என்பதுபோல் அவனைப்பார்த்து தலையசைத்தாள். ஜூஸ் டம்ளரை டேபிளின் மேல் வைத்தவன் அவளது இரு கன்னம் தாங்கி “மலர் இப்பொழுது நாம் இருவரும் தைரியமாய் இருக்க வேண்டிய நேரம்”. ” நீ இப்படி ஓய்ந்து போனால், நான் உன்னை பார்ப்பேனா? வெளி வேலைகளை பார்ப்பேனா?. “எனக்கும் பசிக்கிறது. நீ பாதியாவது குடித்தால் நானும் குடிக்கிறேன். இல்லையென்றால் எனக்கும் வேண்டாம்” என்றான்.
அவனுக்கும் பசி என்றவுடன் மெதுவாக கைகளை நீட்டி  டம்ளரை எடுக்கப் போனாள்.அவளது கைகள்  நடுங்க தொடங்கவே டம்ளரை அவனே எடுத்து அவளது தாடையின் கீழ் இடதுகையைப் பதித்து மெதுவாக அவளைப் பருகச் செய்தான்.
பாதி குடித்தவளுக்கு உண்மையாகவே அதற்குமேல் ஒரு மிடறு கூட விழுங்க முடியவில்லை. அவன் கையை பிடித்து தடுத்து வேண்டாம் என்பதுபோல் சொல்ல, அவள் மிச்சம் வைத்ததை அவன் வாயில் சரித்துக் கொண்டான். “சரி வா” என்று மெதுவாக அவள் கன்னம் தட்டி எழுப்பி அழைத்து வந்து யசோதாவிடம் ஒப்படைத்துவிட்டு வேலைகளைப் பார்க்கச் சென்றான்.
கீர்த்தனா ஏற்கனவே தொழிலை நடத்திக் கொண்டிருந்ததால் அவர்களின் தொழில் வட்டத்தில் அவருக்கு தெரிந்த அனை வருமே கீர்த்தனாவின் இறப்பிற்கு வந்திருந்தனர்.
அந்தவகையில் கீர்த்தனா மில்லின் விளம்பரங்களை எடுத்த படக்குழு வினரும் வந்திருந்தனர் அவர்களோடு மாயாவும் வந்திருந்தாள். திறந்து வைத்திருந்த அலுவலகக் கதவின் நேர் எதிரில் நின்றிருந்த அவளுக்கு உள்ளே நடந்தவை அனைத்தும் தெளிவாக தெரிந்தது.
முதலில் மலரை அங்கு பார்த்ததும் அதிர்ச்சி கொண்டாள் இவள்  எங்கே இங்கு? என்று. அவளது கேள்விக்கு அக்கம்பக்கத்தில் நின்றிருந்தவர்கள் மூலம் பதிலைத் தெரிந்து கொண்டாள்.
அவள்தான்  ஆதவனின் மனைவி என்று.
அந்த இரண்டு அதிர்ச்சிகளையே தாங்க முடியாமல் பார்த்துக் கொண்டி ருந்தவளுக்கு, அலுவலக அறையினுள் ஆதவனின் நடத்தை அதிர்ச்சிகளை அவள்மேல் கொட்டியது என்றே சொல்லலாம்.
ஆதவனை போன்ற தொழிலதிபன் தனக்காக செய்து கொடுத்த வசதிகளைப் பார்த்து தன் அழகில் கர்வம் கொண்டிருந்தாள். அவளது மும்பை வாய்ப்பு கூட கீர்த்தனா மில்ஸின் எம்டியின் சிபாரிசு என்று தெரிந்தபோது மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்தாள். 
நேற்று மும்பையில் இருந்து திரும்பி வந்திருந்தவள் இன்று ஆதவனை காண ஆவலாக இருந்தாள். அவனின் தாயாரின் இறப்பு செய்தியை கேட்டதும் அவனை சந்தித்து ஆறுதல் கூறுவது போல் இன்னும் உறவை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தாள்.
அப்படி நினைத்து வந்திருந்தவளுக்கு இங்கே மலரு ஆதவனும் இருந்த நிலையை கண்டதும் பொறாமையில் ஆத்திரம் கொண்டாள். அடுத்த வேளை சாப்பாட்டிற்கும் வழியில்லாமல், இருக்க இடமும் இல்லாமல் இருந்த மலருக்கு அங்கு கிடைத்த ஆதவன் மனைவி என்ற அங்கீகாரமும், மரியாதையும், கவனிப்பும் எரிச்சலை ஏற்படுத்தியது.
இருந்தும் மெதுவாக நகர்ந்து மலரின் அருகில் சென்று அவளுக்கு ஆறுதல் சொல்வது போல் சில வார்த்தைகளைக் கூறி விட்டு, “ஆமாம் நீ ஒப்பந்த அடிப்படையில் தானே வேலைக்கு வந்தாய். ஒப்பந்தம் முடிந்து விட்டதா?” என்று மலரிடம் கேட்டால் மாயா.
குழப்பத்தில் இருந்த மலரும் அவள் எதற்காக கேட்கிறாள்? என்று எதுவும் யோசிக்காமல்” இன்னும் பத்து நாட்களில் முடியப்போகிறது” என்று பதிலளித்தாள். அப்போது மலரின் முகத்தில் முதலில் தென்பட்ட அதிர்ச்சி சோகம் கவலை பயம்  இதெல்லாம் மாயாவுக்கு எதையோ உணர்த்தியது.
உண்மையாகவே அவள் ஆதவன் மனைவியாக இருந்திருந்தால் ஒப்பந்தத்தைப் பற்றி எல்லாம் யோசித்து இருக்கவே மாட்டாள். இன்னும் சொல்லப்போனால் அது எல்லாம் மாயாவிடம் பகிர்ந்து கூட இருக்க மாட்டாள். ஏதோ விஷயம் இருக்கிறது என்று  ஓரளவு ஊகித்து தெளிவு படுத்திக் கொண்ட மாயா, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விரும்பினாள்.
விளையாடிப் பார்ப்பது கிடைத்தால் பரிசு இல்லையா? தோல்வி மட்டும் தானே என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள், இன்னும் இரண்டு நாட்கள் கழித்து அவனை சந்தித்து தனது திட்டத்தை செயல்படுத்த வேண்டும்  என்று நினைத்தாள்.
 பின்பு தான் இரண்டு நாள் கழித்து என்ன செய்ய வேண்டும் என்று மனதுக்குள்ளாகவே அத்தனை திட்டங்களையும் தெளிவாக வகுத்துக் கொண்டாள். திட்டத்தை தீட்டி முடித்து இதைத் தெளிவாக செயல்படுத்தி விட்டால் ஆதவன் அவளுக்குத்தான் என்று இறுமாப்புக் கொண்டள். பின்பு தனக்கு கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் இத்தனை அந்தஸ்தோடு, ஆளுமையான கணவன் மலருக்கு கிடைக்கவே கூடாது. அதற்கு நான் விடமாட்டேன் என்று மனதில் சூளுரைத்துக் கொண்டாள்.
கீர்த்தனாவின் காரியங்கள் முடிந்த பின்பும் மலர் அவரது அறையிலேயே தங்கியிருந்தாள். ஆதவனுக்கு மலரை அவர்களது அறையில் அவனது கை அணைப்பிலேயே வைத்துக் கொள்ள ஆசையாக இருந்தது. இருந்தும் அன்று அவன் கைகளில் மயங்கி சரிந்தவளை நினைத்தவன், அவளுக்காக நேரம் ஒதுக்கி அவளைக் கவனித்துக் கொள்ள முடியாமல் வேலைப்பளுவில் திண்டாடினான். மலருமே ஏதோ ஒரு விதத்தில் அவனை தவிர்ப்பதை புரிந்துகொண்டான்.
அவளுக்குமே அடுத்தடுத்து அதிர்ச்சி இருக்கட்டும் என்று அவனும் தள்ளியே இருந்தான். ஓரிரு நாட்களில் எல்லாம் சரி செய்து விட்டு  அவளை அணுக வேண்டும்  என்று நினைத்திருந்தான். இருந்தாலும் அவளை பார்த்துக் கொள்ளும் முழு பொறுப்பையும் யசோதையிடம் ஒப்படைத்தான்.
கீர்த்தனா இறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு மதியம் ஆதவனை சந்திக்க மாயா அவனது அலுவலகம் வந்தாள். தன் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை  ஏற்படுத்த போகிறவள் என்று தெரியாமலேயே அவளை  வரவேற்றான் ஆதவன்.
எண்ணத்தின் விஷங்களையெல்லாம் வேஷமிட்டு மறைத்து. இதழ்களில் புன்னகையை விதைத்து “மலர் எப்படி இருக்கிறாள் ஆதவன்?. எனக்கு அவளை தனியாக சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. “அவளுடைய மென்மையான மனதால் இதையெல்லாம் தாங்கிக் கொள்ளவே முடியாது. சிறு குழந்தை போல் அவளை தேற்ற வேண்டும்”என்று மலரின் மேல் அக்கறை உள்ளவள் போலவும், அவளை நன்றாகப் புரிந்து வைத்திருப்பவள் போலவும், ஆதவனிடம் அழகாக நடித்தாள்.
                                  இசைக்கும்………….

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *