வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி
அத்தியாயம் 18
மதிக்கு அவன் செய்ததைப்பார்த்து சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகி விட்டது போலிருந்தது. இருந்தும் ஆதவன் செய்த செயலை நினைத்து உள்ளுக்குள்  ரசித்து சிரித்தாள்.
முதலில் மதி இருக்கும்போது வீட்டிற்கு வந்து செல்பவன் இப்போது மதி இல்லாத போதும் வீட்டுக்கு வந்து சென்றான். சில நாட்கள் மதி காலையில் சமைத்து வைத்து விட்டு சென்ற உணவை சாப்பிட்டுவிட்டு அதற்கு பதிலாக ஹோட்டலிலிருந்து  வாங்கி வந்த  பார்சல் டேபிள் மேல் இருக்கும்.இது நிச்சயம் ஆதவனின் வேலைதான் என்று மலருக்கு உறுதியாக தெரிந்து போனது.”திருட்டுப்பூனை” என்று செல்லமாய் மனதுக்குள் திட்டிக்கொண்டாள்.
ஒரு நாள் மதிமலர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது கதவை திறந்ததும் ஆதவனின் ஷூ முன்னாடி இருப்பதை கண்டாள்.  வீட்டின்  உள்ளே பார்க்க ஹாலில் அவன் இல்லை. யோசனை செய்தபடி அவளது அறையின் கதவை திறக்க அங்கே  கட்டிலில் படுத்திருந்தான் ஆதவன். ஏதோ வித்தியாசமாக தெரிய அருகில் சென்று நெற்றியில் கைவைத்து பார்த்தாள். நெருப்பாய் கொதித்தது அவன் கன்னத்தை லேசாக தட்டி  எழுப்ப முயற்சி செய்ய விழிதிறக்கவில்லை. நேரத்தை பார்த்தவள் அவசர அவசரமாக ரசம் சாதத்தை குழைத்துக்கொண்டு வந்து தலையை உயரமாக வைத்து அவனுக்கு  ஊட்டினாள். கண்ணை மூடியபடியே சாப்பிட்டவன் போதும் என்பதுபோல் மறுப்பாக தலையசைத்தான்.பின்பு அவளிடமிருந்த  பாராசிட்டமால் மாத்திரையை அவனுக்கு கொடுத்தாள் .சிறிது நேரம் கழித்து அறைக்குள்  வந்து அவன் நெற்றியில் கைவைத்து பார்க்க சட்டென்று அவள் கைகளை பிடித்து கட்டிலில் அமரச் செய்து, அவள்  இரு உள்ளங்கைளை அவள்  மடி மேல் வைத்து அதில் தலைசாய்த்து படுத்துக் கொண்டான்.படுத்தவன் தலையை மெதுவாக திருப்பி தன் சுடும் இதழ்களை அவள் உள்ளங்கைகளில் பதித்து “தேங்கியூ மா “என்றான்.
இப்போது மலருக்கு காய்ச்சல் வந்தது போல் நடங்கத்தொடங்கினாள்.கைகளை இழுத்தால் எங்கே தொடையில் இதழ் பதித்துவிடுவானோ என்று அசையாமல் அமர்ந்து கொண்டாள்.அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றபின் அங்கிருந்து வெளியேறினாள்.
இந்த நிகழ்விற்கு பிறகு மதி பகல் பொழுதில் வீட்டில் இருக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டாள். எங்காவது கோயில், பார்க் என்று அமர்ந்து பொழுதைக் கழித்துவிட்டு பிறகு வீட்டுக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டாள்.
ஒரு மாதம் கடந்து இருந்த நிலையில் மாயா  மதியை அழைத்து தனக்கு புதிய வாய்ப்பு வந்திருப்பதாகவும் அதற்காக தான் மும்பை செல்ல இருப்பதாகவும் அதனால் இங்கு தொடர்ந்து தங்க முடியாது  எனவே நீ வேறு இடம் பார்த்துக் கொள்  என்று தயவு தாட்சண்யமின்றி கூறினாள். அவள் பேசிக் கொண்டிருக்கும் போது  அங்கு ஆதவன் வந்தான். 
அவனை மதிமலர் அதிசயமாக பார்த்தாள் இங்கு வந்த நாள் முதல் இன்றுதான் மாயா இருக்கும்பொழுது ஆதவன் வந்திருக்கிறான். அவனிடம் தனது மும்பை பயணம் பற்றி பெருமை யாகக் கூறிக் கொண்டிருந்தாள். இதுவரை மதியை பற்றி யோசிக்காமல் பேசிக் கொண்டிருந்தவள் இப்போது அவனிடம் மதியின்  நிலைமை பற்றி கூறி ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா? என்று அக்கறையாக காட்டிக்கொள்ள கேட்டாள். அவன் மதி மலரைப் பார்த்து “என்ன படித்திருக்கிறாய் “என்று கேட்டான்.
 மதிமலர் தன்னுடைய நிலையை உள்ளது உள்ளபடி அப்படியே கூறிவிட்டாள். தனக்கு ஹிந்தி பேச எழுத தெரியும் ஆனால் சான்றிதழ்கள் இல்லை என்பது வரை.இதையெல்லாம் கேட்டவன் முகத்தில் யோசிக்கும் பாவனை தோன்றியது. ஆதவனுக்கு இந்தத் தகவல்கள் எல்லாம் தனியார் துப்பறியும் நிறுவனத்தின் மூலம் ஏற்கனவே தெரிந்துதான் இருந்தது. “நிரந்தர வேலையை மெதுவாக ஏற்பாடு செய்யலாம்.  தற்சமயம்  ஒரு பெண்மணியை அவர்கள் வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். அவரால் அதிகம் நடக்க முடியாது அதனால்  ஒரு துணை போல வீட்டை நிர்வாகிக்க உதவ வேண்டும். இதைச் செய்ய முடியுமா? சம்பளத்தோடு தான்” என்றான்.
 இதைக் கேட்டுக் கொண்டிருந்த  மதி “மருத்துவ ரீதியான உதவி என்றால்? என்னால் முடியாது சார்” என்றாள். 
” இல்லை அதற்கு நர்ஸ் ஒருவர் கூடவே இருப்பார்” . “ஆனால் இந்த வேலை மூன்றுமாத ஒப்பந்த அடிப்படையில் தான் செய்ய வேண்டும். இந்த நிபந்தனைக்கு நீங்கள் ஒத்துக் கொண்டால் நாளையே அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம்” என்றான்.
ஆதவன் உடல்நிலை சரியில்லாமல் அவளது அறையில் படுத்திருந்த நாளிலிருந்தே ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால் இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தாள் மதிமலர். ஆதவனின் நடத்தையில் தவறாக எதுவும் இல்லை என்றாலும் அவளுக்கு உள்ளூர ஒரு பயம் ஏற்பட்டிருந்ததே அதற்கு காரணம். இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவே மதியும் மகிழ்ச்சியோடு”  நாளை காலையிலேயே சேர்ந்து விடுகிறேன் சார் “என்று முகவரியை வாங்கிக் கொண்டாள் . “சரி நான் அந்தப் பெண்மணியிடம்  உன்னைப்பற்றி சொல்லி வைக்கிறேன்” என்றான். மாயாவும் “நான் கேட்டுக் கொண்டதற்காக மலருக்கு உதவியதற்கு நன்றி” என்றாள். சிறு தலையசைப்போடு பேச்சை முடித்துக்கொண்டு  “நான் கிளம்புகிறேன்” என்று கிளம்பி விட்டான்.
எப்படியோ இனி ஆதவனை சந்திக்க வேண்டி இருக்காது என்று மகிழ்ந்து கொண்டாள் மதிமலர்.
மறுநாள் காலை  பத்து மணிக்கு மேல் அந்த  முகவரிக்கு சென்றாள். அவள் பெயரைச் சொன்னதுமே உள்ளே அழைத்து சென்று காத்திருக்கச் சொன்னார்கள்.
மதி மலர் அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை கண்டு அதன்அழகான  தோற்றத்தை ரசித்துக்கொண்டிருந்தாள். அப்போது ஒரு நடுத்தர வயது நர்ஸ்  வீல்சேரை தள்ளிக் கொண்டு வந்தார். அந்த சேரில் அமர்ந்திருந்த பெண்மணிக்கும் நடுத்தர வயதுதான் இருக்கும் முகத்தில் சாந்தமும் ,கம்பீரமும் புன்னகையும் கலந்து இருந்தது அவரை பார்த்ததும் மலர் எழுந்து நின்றாள். மலரை வரவேற்கும் விதமாக இரு கைகளை நீட்டி “இங்கே வா மா மலர்” என்று பார்வையில் கனிவோடு வார்த்தையில் அன்போடு அழைத்தார்.
மதி மலர் எதுவும் யோசனை கூட செய்யவில்லை உடனே ஓடிச்சென்று அவரது கைகளை பிடித்துக்கொண்டாள். வார்த்தைகளால் உணர்த்த முடியாத ஏதோ ஒரு பந்தம் அங்கு உருவானது. சில நொடி கழித்து “ஆதவன் உன்னை பற்றி சொன்னான்டா உனக்கு இங்கிருப் பதற்கு விருப்பம் தானே” என்று கேட்டார் . 
“ஆமாம்மா என் முழு விருப்பத்தோடு தான் நான் இங்கு வந்திருக்கிறேன்” என்று சிரித்த முகமாய் பதில் சொன்னாள்.
 புதிதாக சந்தித்துக்கொண்ட இருவருக்குள்ளும் எப்படி சுமூகமான மனநிலை வந்தது என்று இருவருக்குமே புரியாத வகையில் இருவரும் இயல்பாக பேசிக்கொண்டார்கள். “முதலில் என்னை நீ எப்படி அழைக்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொள்ளலாமா ?”என்று கேட்டார். சம்மதம் போல் இடவலமாக தலையசைக்க “நீ என்னை அத்தை என்று அழைக்கிறாயா?” என்று கண்களில் ஆவல் மிதக்க கேட்டார். “சரி அம்மா” என்று பதிலளித்தாள் மலர்.  “ம்ம்” என்று மிரட்டுவது போலஅவர் ஒலி எழுப்பவே “சரி அத்தை” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள். மதிய உணவைக் கூட அவரது அறைக்கே வரவழைத்து இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். “மதிமலர் நீ எனக்கு பெரிய உதவி எல்லாம் செய்ய வேண்டியது இல்லை. என்னோடு பேசிக் கொண்டிரு. வீட்டு நிர்வாகத்தில் நான் சொல்வதை மேல் பார்வையிடு அது மட்டும் போதும்” என்றார்.பின்பு  அந்த வீட்டின் சமையல் பொறுப்பில் இருக்கும் யசோதா என்னும் பெண்மணியை அழைத்து மலருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரும் மலரிடம் அன்போடு  நடந்துகொண்டார்.  
மாலையில் தோட்டத்தில் இருந்த ஜாதி மலர்களைப் பறித்து தொடுத்தபடியே அவரிடம் பேசிக்கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த யசோதா மூன்று கோப்பைகளில் தேநீரும் சாப்பிடுவதற்கு சில தின்பண்டங்களையும் கொண்டு வந்து அந்த அறையிலிருந்த டீப்பாயின் மேல் வைத்தார் “என்ன யசோதா  மூன்று டீ கொண்டு வந்திருக்கிறாயே?” என்று கேட்க ,”ஆதவன் தம்பி வந்திருக்கிறார்  அம்மா டீ குடிக்க இங்க வரேன் என்று சொன்னார்  மதி மலரையும் கேட்டார் ஏதோ கையெழுத்து வாங்க வேண்டுமாம் அதனால் தான் இங்கே கொண்டு வந்துட்டேன்” என்றார். “ஓ ” “அதுதான் இங்கே வந்திருக்கிறான் இல்லை என்றால் ஆதவனாவது  அவன் மனைவியை விட்டு விட்டு  இந்நேரத்தில் நம்மை சந்திக்க வருவதாவது” என்று சிரித்தார்.ஆதவன் என்றதுமே அதிர்ந்த மதிமலர்  அவன் மனைவி என்றதும் மூச்சுசடைத்தது போல் உணர்ந்தாள். 
அவள் நிலையை பார்த்து யசோதா என்ன மலர் எனவும், ஒன்றும் இல்லை என்றாள். ஏதோ ஒன்று மனதை அழுத்தியது பின்புதான் கையெழுத்து என்றதை நினைவுபடுத்தி  இலகுவாக மூச்சு விட்டாள். கையெழுத்தை போட்டுவிட்டால்இனி அவரை சந்திக்க வேண்டியிராது என்று அவளாகவே முடிவு செய்து கொண்டாள்.
 “அது என்ன யசோதா ?”என்று சின்ன தட்டை காட்டி கேட்க. “தேன்மிட்டாய் மா தம்பி வாங்கிட்டு வந்தார் “என்றார். தட்டை எடுத்து  மலரிடம் நீட்டினார். முதலில்” வேண்டாம்மா” என்று மறுத்தவள்” எடுத்துக்கொள் மலர்” என்று இருவரும் சொல்லவே கையை கழுவிவிட்டு வந்து அமர்ந்து ஒன்றை எடுத்துக்கொண்டாள்.
எடுத்த ஒன்றை இரு விரலில் பிடித்து அதில் பாதியை கடித்து அதிலிருந்து இதழ்களின் மேல் வழிந்த  சர்க்கரைப் பாகினை நாவினால் தடவி சுவைத்து  மீதியிருந்த பாதியையும் வாயினுள் போட்டு இரு விரல்களையும் ஒவ்வொன்றாக வாயில் வைத்து சுவைத்து கொண்டிருக்கும் போது அவள் பின்புறம் இருந்து வலது தோளின் வழியாக கரமொன்று நீண்டு தேன் மிட்டாய்  இருந்த தட்டுக்களை எடுத்தது. திடீரென்று தோள் புறமாக கரம் வந்து போகவே  பதறி நிமிர்ந்து பார்த்தாள். அவள் அமர்ந்திருந்த இடத்தின் நேர் எதிரில் இருந்த அலமாரியின் கண்ணாடி தட்டை ஏந்தி புன்னகைத்தபடி நின்றிருந்த ஆதவனின் உருவத்தை பிரதிபலித்தது. 
அவனைக் கண்டதும் எழுந்து நின்று வாங்க சார் என்றாள்.
அவளின் பேச்சு குரல் கேட்டு நிமிர்ந்த அந்த வீட்டின் உரிமையாளரும் “வாப்பா ஆதவா டீ சாப்பிடு வா” என்று அழைத்தார்.
புன்னகைத்தபடி தட்டோடு அவரின் எதிரில் அமர்ந்து ஒரு தேன் மிட்டாயை வாயில் போட்டு பார்வையை மதிமலர் முகத்தில் பதித்து இருந்தான்.
ஆதவனையும் மதியையும் ஓரப் பார்வையால் கவனித்துக் கொண்டிருந்த வீட்டின்  உரிமையாளர்” இன்னொரு மிட்டாய் எடுத்துக் கொள் மலர்” என்றார்.
ஆதவனை பார்த்துக்கொண்டிருந்த மதிமலர் பதிலளிக்கும் முன்பு வலது கையின் ஆள்காட்டி விரலை மெதுவாக உயர்த்தி இடவலமாக ஆட்டி மீண்டும் அந்த விரலை கொண்டு எச்சரிக்கை செய்வது போல் அசைத்தான்.
அதை பார்த்துக்கொண்டிருந்த மதிமலர் அவசரமாக “வேண்டாம் அத்தை” என்றாள். மதி மலரின் பதிலுக்கு கண்கள் ஒளிர மெல்லிய புன்னகையை இதழினுள் அடக்கி இன்னொரு தேன் மிட்டாயை எடுத்து கன்னத்தில் அதக்கிக் கொண்டான் ஆதவன்.
தேநீரைக் குடித்து முடித்துவிட்டு கையோடு கொண்டு வந்திருந்த ஒப்பந்தத்தாள்களை  மலரிடம் கொடுத்தான். அதுவரை அவனது பார்வையில் அவதியாக அமர்ந்திருந்த மதிமலர் படித்துப் பார்த்து கையெழுத்திட்டாள். ஆதவனும் ஏதும் பேசாமல் வாங்கிக்கொண்டு அந்தப் பெண்மணி இடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டான்.
மலருக்கு கீழே ஒரு அறை கொடுக்கப்பட்டிருந்தது சகல வசதியுடன் கூடியதாக இருந்த அறை மலருக்கு மிகவும் பிடித்திருந்தது. இரவில் உணவுக்குப்பின் அந்த வீட்டின் முன்புறம் இருக்கும் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள். அப்பொழுது யாரோ நடக்கும் ,சருகுகள் மிதிபடும் ஓசை கேட்டது பயந்த சுபாவம் கொண்ட மதிமலர் வீட்டை நோக்கி நடக்கத் துவங்க ஒரு மரத்தின் பின்புறமிருந்து ஒரு கரம் அவளை இழுத்து மறு கரத்தால் அவள் அலறும் முன்பு வாயை மூடியது.
பயத்தில் கண்களை மூடியிருந்த அவள் மெதுவாக திறந்து பார்க்க அங்கே நின்றிருந்தான் ஆதவன். அவனை அங்கு கண்டதும் அவனிடமிருந்து விடுவித்துக்கொள்ள போராடினாள். சத்தம் போடக்கூடாது என்று எச்சரித்தபடி அவளை விடுவித்தான்.
“நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்?” உங்கள் வீட்டிற்கு செல்ல வில்லையா?” என்று கேட்டாள் . “ஓ இங்கு எப்போது வரவேண்டும் என்று இனி உன்னிடம் அனுமதி கேட்க வேண்டுமா? “என்று அவனும் பதிலுக்கு கேட்டான். “இல்லை அத்தை உறங்கப்போகிறார்கள். என்னிடமும் கையெழுத்து வாங்கி விட்டீர்கள். இனி  இங்கு  என்ன வேலை உங்களுக்கு?” என்றாள். அதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டால் அவன் ஆதவன் இல்லையே அவள் கேட்டதெல்லாம் காதில் விழாதது போல அதிலிருந்து ஒரு வார்த்தை மட்டும் எடுத்துக்கொண்டு “அத்தை ” “உறவு முறை எல்லாம் பலமாக இருக்கிறதே “என்றான்.
இவனிடம் பேச முடியாது என்று வீடு நோக்கி நடக்கத் தொடங்க,  அவளின் பின்னால் ஆதவனும் வந்தான். அந்தப் பெண்மணியின் அறைக்குள் நுழைந்து “அத்தை ஆதவன் சார்  வந்திருக்கிறார்” என்றாள். ஏதோ புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியும் புன்னகை முகமாக ஆதவனை வரவேற்று,  அவனோடு தொழில் சம்பந்தமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார். 
நேரம் செல்வதை இருவருமே கவனித்தது போல் இல்லை. எனவே மதிமலர் “அத்தை” என்றழைத்து, “நேரமாகிறது ஆதவன் சாரும் அவரது வீட்டிற்கு கிளம்ப வேண்டும் இல்லையா? அவரது மனைவி  வேறு அவருக்காக காத்துக் கொண்டிருப்பார்கள்” என்றாள்.
மலர் இப்படி சொன்னதும் பேசிக்கொண்டிருந்த அந்த பெண்மணி கடகடவென்று களங்கமில்லாமல் சிரித்து “டேய் ஆதவா மலரிடம் நீ சொல்ல வில்லையா? இது நம் வீடு நான் உன் தாயாரென்று”  என்று கேட்டு மீண்டும் சிரித்தார்.
                           இசைக்கும்……………..

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *