வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி

வேங்குழலின் நல்லிசை நீயடி
அத்தியாயம் 10
    ஆதவன் உள்ளே வந்து பைகளை கட்டில் மேல் வைத்துவிட்டு” உதயா குட்டி” என்று குழந்தையை பார்த்து பேசியபடியே” இரு வருகிறேன்” என்று பாத்ரூம் நோக்கி சென்றான் உடைகளை மாற்றி தூய்மை செய்து கொண்டு வந்தவன் உதயாவின் அருகே கீழே படுத்து விளையாட ஆரம்பித்துவிட்டான் அப்படியே நின்று கொண்டிருந்த மதியை நிமிர்ந்து பார்த்து என்ன பார்க்கிறாய் மதி? “ஓ நான் நிம்மதியாக தூங்க வேண்டும் என்று சொன்னதை நினைத்துக்கொண்டிருக்கிறாயா?”    பின் “உண்மையைத்தான் சொன்னேன்.கண்ணம்மா வயதானவர் தான் என்றாலும் எனக்கு அதிகமாகப் பழக்கம் இல்லை அதனால் கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. அதைத்தான் அப்படிச்சொன்னேன் நீ என்ன நினைத்தாய்? “என்று குறும்பாகச்சிரித்தான்.மதி நினைத்து பயந்ததை வெளியில் சொல்லவா முடியும்? பேசாமல் நின்றவளைப் பார்த்து “மதி தலை ரொம்ப வலிக்கிறது ஒரு டீ கிடைக்குமா?” என்றான். ஏற்கனவே அங்கிருந்து நகர்ந்து விட வாய்ப்பைத் தேடி கொண்டிருந்தவள் இப்பொழுது அங்கே நிற்பாளா ?உடனே டீ போட  உள்ளே சென்றுவிட்டாள். அவள் டீ யை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது முன்னாலிருந்து ” பாப்பா” என்று சத்தம் கேட்டது வீட்டின் முன்பு தோப்புக்கு காவல் இருக்கும் வேலு நின்று கொண்டிருந்தான் அவன் ஆதவனை பார்த்து “வணக்கம் ஐயா” என்றான்.  “என்ன வேலு என்ன விஷயம்” என்றான் “ஒன்னும் இல்லைங்க சும்மாதான் கண்ணம்மா பாப்பா தனியா இருக்குன்னு சொன்னாங்க. வண்டி சத்தம் கேட்டது  அதான் யாருன்னு பார்க்க  வந்தேன் “என்றான். ” சரி வேலு நான் பார்த்துக் கொள்கிறேன் நீ போ” என்றான்.இருந்தும் வேலு மதியின் முகத்தை ஒரு ஆராய்ச்சியோடு பார்த்தான். ஏதோ தவறு செய்தவள் போல தலை குனிந்தாள் மதி . அவன் சென்றதும் உதயாவோடு விளையாடிக்கொண்டிருந்தவனைப் பார்த்து “ஏன் இப்படி செய்கிறீர்கள்? அவன் நம்மைப் பற்றி என்ன நினைப்பான் “என்று கேட்டாள் மதி. நிமிர்ந்து மதியைப் பார்த்து” மதி மதியம் இங்கு சாப்பிட்டது தான் ரொம்ப தலைவலி வேறு, இப்போதுதான் டீ குடித்தேன் ரொம்ப பசிக்குது மதி எனக்கு சாப்பிட ஏதாவது தருகிறாயா?”  என்று கேட்டான். அவன் பசி என்று சொன்னபிறகு நின்று கொண்டு இருப்பாளா? உடனே சமைப்பதற்கு ஏற்பாடு செய்யத் தொடங்கிவிட்டாள். அவன் சாப்பிட்ட தொடங்கிவிட்டு “நீயும் சாப்பிடு “என்றான் . “இல்லை  முதலில் நீங்கள் சாப்பிட்டுங்கள் பின்பு நான் சாப்பிட்டுக் கொள்கிறேன் ” எனவும் சாப்பிட்டு முடித்து” நீ சாப்பிடு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது” என்று உதயாவை தூக்கிக்கொண்டு வெளியில் பந்தலின் அடியில் அமர்ந்து கொண்டான். அவள் சமையலறை வேலைகளை முடித்துக் கொண்டு வந்து உதயாவை வாங்கிக் கொண்டாள். அவள் உதயாவை தூங்க வைத்துப் விட்டு எட்டிப் பார்த்தபோது அவன் வெளியில்  அமர்ந்து அவனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான். பின்பு உள்ளறையில் வந்து மதி படுத்துவிட்டாள் அங்கு அவளுடைய டேபிள் ஃபேன் ஓடும் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. எப்போது தூங்கினாள் என்று தெரியாது உதயா பசிக்கு விழித்து அழவும் எழுந்தாள். மகளை எடுத்து மடியில் பசியாற்ற தொடங்கவும் வழக்கம்போலவே உப்புசத்திற்கு உதயா அழத் துவங்கினாள் அப்பொழுதுதான் கவனித்தாள் அந்த அறையில் இருந்த  டேபிள் ஃபேன் ஓடாமல் நின்றிருப்பதை. சந்தேகத்தோடு இருமுறை பட்டன்களை அழுத்திப் பார்த்தும் பலனில்லை. அது பழுதடைந்து விட்டது என்பதை புரிந்து கொண்டாள்.  பனைவிசிறி வேறு முன்னறையில் ஆதவன் தலையணைக்கு அடியில் இருந்தது.
சாதாரண நாட்களிலேயே மகளை கையாள்வது சிரமம் இனி  உப்புசத்தில் எப்படி என்று தவித்துப் போனாள். உள்ளறையில் அமர்ந்தபடியே பசியாற்ற முயற்சி செய்த மதியின் பாடெல்லாம்  வீணாய் போனது. உதயா பசியோடு இரவு தூக்கத்திற்கும் வீறிட்டு அழத் தொடங்கினாள். மகளை சமாதானப்படுத்தியபடி வெளியே வர ஆதவன் ஆழ்ந்த தூக்கத்தில்  இருப்பது போல் தோன்றியது வேறு வழியில்லை என்று நினைத்தபடி அவனுக்கு முதுகு காட்டியபடி முன் அறையில் அமர்ந்து மகளுக்கு பசியாற்ற தொடங்கினாள். இருப்பினும் தயங்கித் தயங்கி திரும்பி திரும்பி அவனைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். ஆதவன்  கண்களை கைகளால்  மறைத்தபடி விழித்துக் கொண்டுதான் படுத்திருந்தான். பசியாறி கொண்டிருந்த உதயா வழக்கம் போல் சேலையால் மறைக்க இழுத்து குறும்பு செய்ய அவள் கால்களை மெல்லமாக தட்டி போக்கிரி என்று கொஞ்சிக் கொண்டிருந்தாள். லேசாக திரும்பி படுத்தபடி நிழல் உருவமாய் அவர்களை கவனித்துக் கொண்டிருந்த ஆதவனுக்கு உதயா செய்யும் குறும்பு இப்பொழுதுதான் புரிந்து  மெதுவாக புன்னகைத்துக் கொண்டான். இவன் உறங்குகிறான் என்று எண்ணிக்கொண்டு தாயும் மகளும் அவர்கள் உலகத்தில் தனித்து மகிழ்ச்சியில் திளைத்தனர். இதைப்பார்த்த ஆதவனுக்கு இப்பொழுதே அந்த உலகத்தில் தானும் இணைந்து கொள்ள வேண்டும் என்று அத்தனை ஆசையாக இருந்தது. 
மதியின் வாய்மொழியாக கதிரவனைப் பற்றி எதுவும் அறிந்துகொள்ள முடியாது இனி தானே அதிரடியில் இறங்கினால் ஒழிய என்று முடிவு செய்து கொண்டான். இவன் இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே உதயாவை தூக்கிக்கொண்டு மதி உள்ளறைக்கு சென்றாள். அவளுக்கு பாத்ரூம் போக வேண்டியிருந்தது உதயாவை கீழே படுக்க வைத்தால் அழ துவங்குவாள் அல்லது நகர்ந்து நகர்ந்து டேபிள் ஃபேனில் கைவைக்க பார்ப்பாள் எனவே மதி தொட்டிலில் போட்டாள். காற்றும் இல்லாமல் அந்த இரவில் உதயா வீறிட்டு அழத் தொடங்கினாள். அப்போது முன்னறையில் வெளிச்சம் ஏற்பட்டது ஆதவன் விழித்து விட்டான் போல என்று நினைக்கும்போதே அவன் உள்ளறையில் நின்றுகொண்டிருந்தான் தொட்டிலை விலக்கி உதயாவை தூக்கிக்கொண்டு “என்ன செய்கிறாய்?” என்றான். 
விழிகளில் பயத்துடன் ஃபேன் ஓடவில்லை அதனால் உதயாவை தொட்டிலில் போட்டுவிட்டு என அவள் பேசிமுடிக்கும் முன்பு “அதற்கு ஏன் தொட்டிலில் போட வேண்டும் “என்று கேட்டான்.
“கீழே  படுக்க வைத்தால் டேபிள் ஃபேன்னில் விளையாடத் தொடங்குவாள். மேலே இழுத்து போட்டு கொள்வாளோ என்று பயம் எனக்கு” என் அவள் முடிக்கும் முன்னே அதற்கு  “குழந்தையை இப்படித்தான் அழ விடுவாயா?”  என்றான் உதயாவை தோளில் போட்டு தட்டியபடி.
“எனக்கு அவசரமாக” என்று தடுமாறினாள் மதி.
“அப்படி என்ன அவசரம் இந்த நடுஇரவில் பேய்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டி இருக்கிறதா? “என்றான் நக்கலாக. மதி  வந்த சிரிப்பை அடக்கியபடி முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு  பேய்களோடு பேச்சுவார்த்தையா? இவன் ஒருவனோடு  போராடுவதே பத்து பேய்களோடு போராடுவது போலத்தான் இருக்கிறது என்று நினைத்தபடியிருக்க.
” என்ன என்னை பேயாக நினைத்து சிரிக்கிறாயா?” என கேட்க.இல்லை என்பது போல் அவசரமாக தலையாட்டி, “எனக்கு அவசரமாக பாத்ரூம் போகவேண்டும் வழியை விடுகிறீர்களா?” என்றாள். பின்பு நகர்ந்து வழி விட்டான். மதி பாத்ரூமில் இருந்து திரும்பி வந்தபோது முன்னறையில் அவளது படுக்கை போடப்பட்டிருந்தது.
” ஃபேன் இல்லாமல் உள்ளே எப்படி தூங்க முடியும்? இங்கு படு” என்றான் விரித்திருந்த படுக்கையை சுட்டிக்காட்டி. “இல்லை நான் உள்ளே” என்று மதி தொடங்கவும்” இன்று இரவு நான் என்ன சாப்பிட்டேன் என்று தெரியுமா?என்று கேட்டான் .என்ன இப்படிக் கேட்கிறான் என்று விளங்காத பார்வையாக அவனைப் பார்த்தபடியே “இட்லி நான் தானே சமைத்து கொடுத்தேன் “என்றாள்.
“கொடுத்தாய் அல்லவா?” எப்பொழுதும் ஐந்து சாப்பிடுவேன். “இன்று நன்றாக இருக்கிறது பசியும் கூட என்று ஏழு சாப்பிட்டேன் புரிந்ததா? “என்றான்.
அப்பொழுது மதிக்கு புரியவில்லை அவன் முகத்தை ஆராய்ச்சியாக பார்க்க “இதற்கு மேல் உன் சுண்டு விரலைக்கூட கடித்து சாப்பிட என் வயிற்றில் இடம் இல்லை எனவே உன்னை கடித்து தின்று விட மாட்டேன் இங்கேயே படுத்து தூங்கு” என்றான் முகமெல்லாம் தோன்றிய புன்னகையை அடக்கியபடி.
உதயா என்று அவள் இழுக்க அவள் “தூங்கும் வரை என்னுடன் இருக்கட்டும்” என்று கட்டிலில் படுத்தபடி நெஞ்சின் மேல் உதயாவை அமர்த்திக் கொண்டான். கொஞ்சம் சங்கடமாக இருந்தபோதும் உள்ளறையில் ஃபேன் இல்லாமல் உதயா தூங்க மாட்டாள், என்பதை புரிந்து கொண்டு விளக்கை அணைத்துவிட்டு அவனுக்கு முதுகு காட்டி சுவற்றைப் பார்த்தபடி படுத்துக் கொண்டாள் மதி. உதயா மழலையில் பிதற்ற அவளை கொஞ்சி கொண்டிருந்தான் ஆதவன் இதை காது கொடுத்து கேட்டபடியே மதி உறங்கி போனாள். அவன் மேல் சாய்த்து மெதுவாக தட்டிக் கொடுக்க உதயாவும் உறங்கிப் போனாள். உதயாவை தூக்கி மதியின் அருகே படுக்க வைத்துவிட்டு மதியை பார்க்க அவள் புடவையில் முடிந்திருந்த சாவியை இறுகப்பிடித்தபடியே  உறக்கத்தில் இருந்தாள். மதிநன்கு ஆழ்ந்து உறங்குவதை உறுதி செய்துகொண்டு நேற்று செந்தில் கொடுத்த சாவியையும், அவனின் லேப்டாப் பேக்கிலிருந்து கத்தையாக வெற்றுக் காகிதங்களையும் எடுத்துக் கொண்டு உள் அறைக்கு சென்று செல்போன் டார்ச் லைட்டை பயன்படுத்தி மதியின் அலமாரியைத் மெதுவாக சத்தமிடாமல் திறந்தான். அங்கு இருந்த பைலில் இருந்ததெல்லாம் எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக வெற்றுக் காகிதங்களை அந்த பைலில் திணித்தான். இந்த வேலையை செய்து முடித்துவிட்டு அவனுக்கு அப்படியொரு சந்தோஷம் சிறுவனைப் போல குதூகலித்துக் கொண்டு அவன் தோள்களில் அவனே தட்டிக் கொடுத்து கொண்டான். பின்பு அறையிலிருந்து வெளியே வந்தவன் உறங்கும் மதியைப் பார்த்து இனிதான் என் விளையாட்டு ஆரம்பம் என்று நினைத்துக்கொண்டான். எடுத்துவந்த தாள்களை எல்லாம் அவனது லேப்டாப்பையினுள் பத்திரப்படுத்தி விட்டு குழந்தையின் அருகில் கட்டிலிலிருந்து போர்வையை எடுத்து விரித்து கீழே படுத்து விட்டான். படுத்தவனுக்கு அப்படி ஒரு நிம்மதி அப்படி ஒரு சந்தோசம் அப்படியே உறங்கிப் போனான்.           
காலையில் விழித்த மதிக்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. பின்புதான் இரவு நடந்தது நினைவு வந்தது திரும்பி கட்டிலை பார்க்க அங்கு வெற்றிடம். சட்டென எழுந்து பார்க்க அவள் அருகில் உதயாவும் அதற்கடுத்து ஆதவனும்  அழகாக உறங்கிக் கொண்டிருந்தனர். இந்தக் காட்சியை கண்களில் வாங்கி இதயத்தில் பதிவு செய்வதுபோல் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆதவன் திரும்பிப் படுக்க அசையவே சட்டென எழுந்து அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அவள் வழக்கமான வேலையை தொடங்கவும் கண்ணம்மா வரவும் சரியாக இருந்தது. “சின்னையா நைட்டே வந்துட்டாங்களா கண்ணு” என்றார் கண்ணம்மா. “ஆமாம்மா ராத்திரியே வந்துட்டாங்க “என்றாள். அதற்கு கண்ணம்மா சாதாரணமாக பார்த்தால் கூட தன்னை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது போலவே இருந்தது மதிக்கு. வழக்கமான நடைக்கு சென்றவள் வேலுவின் பார்வையில் இன்னும் கூசிப் போனாள் எப்படி புரியவைப்பது? இவர்களெல்லாம் என்னைப்பற்றி தவறாகத்தானேநினைப்பார்கள். இந்த சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்றே மதிக்கு விளங்கவே இல்லை. தோப்பில் வேலை செய்யும் ஆட்கள் கூட தன்னை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது போலவே இருந்தது எனவே வழக்கமான நடையை வேகமாக முடித்துக்கொண்டு வீட்டிற்கு விரைந்து வந்து விட்டாள்.
காலை உணவை முடித்துக் கொண்டு ஆதவன் கோவை அலுவலகம் செல்ல தயாராகினான். கிளம்பும் முன் மதியை அழைத்து” நான் கோவைக்கு சென்று விட்டு காரை திருப்பி அனுப்புகிறேன். உன் வேலை விஷயமாக பேசி முடிவெடுக்க வேண்டியிருக்கிறது நான் சொல்லும் நேரத்திற்கு குழந்தையையும் தூக்கிக் கொண்டு கோவை அலுவலகத்திற்கு வந்து விடு” என்று சொல்லிக் கிளம்பத் தயாராக, அவனைப்பார்த்த மதி “என்ன பேச வேண்டும் இங்கேயே பேசி முடிவு எடுத்து விடலாமே” என்றாள். 
“சொல்வதை மட்டும் செய்தால் போதும் நான் சொல்லும் நேரத்திற்கு அங்கு இருப்பதுபோல் பார்த்துக் கொள்” என்று  சொல்லிவிட்டு விரைந்து விட்டான்.
அது என்ன சொல்லும் நேரத்திற்கு வருவது ,வேலையைப் பற்றி பேசுவதற்கு கூட நல்ல நேரம் பார்த்து தான் வரவேண்டுமா? என்று சலித்துக் கொண்டாள். அவளுக்கு என்ன தெரியும் உண்மையில் ஆதவன் அவளும் உதயாவும் கோவை அலுவலகம் வருவதற்கு நல்ல நேரத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
மதியத்திற்கு மேல்  அவனிடமிருந்து தோப்பு வீட்டு தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. கார் அனுப்பி இருக்கிறேன் இன்னும் அரை மணி நேரத்தில் அங்கு வரும் ,அதில் புறப்பட்டு  இங்கு வருமாறு கட்டளை இட்டுவிட்டு வைத்துவிட்டான். கட்டளையிட்டு இருப்பது முதலாளி ஆயிற்றே எப்படி மறுக்க முடியும் அங்கு உதயாவோடு செல்ல தயாரானாள் மதி. இதெல்லாம் முடிவுக்கு வராதா என்று இருந்த மதிக்கு இன்று ஏதோ தெளிவு பிறக்கும் என்று தோன்றியது. 
எளிமையும் அல்லாது பகட்டும்அல்லாது  கௌரவமான தோற்றத்தில் உடை அணிந்து, ஆதவன் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே உதயாவோடு தயாராகி நின்றுகொண்டாள். வீட்டின் அருகில் இருந்த செடியில் பூத்திருந்த மல்லிகை அரும்புகளை தொடுத்து  மதியின் கூந்தலில் அழகாக வைத்துவிட்டார் கண்ணம்மா. “போயிட்டு வா கண்ணு எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று ஆசீர்வதித்து காரில் வழி அனுப்பி வைத்தார். படபடக்கும் தனது இதயத்தை மறைத்தபடியே வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தாள். அலுவலகம் வந்து கார் நிற்கவும் அவள் திறக்கும் முன்பாகவே செந்தில் அவளுக்கு கதவைத் திறந்துவிட்டு “வாங்க மேடம் “என்று வணக்கம் வைத்தான். அவன் குரலில் அத்தனை ஒரு மரியாதையும், பவ்யமமும் வெளிப்பட்டது.அத்தோடு இல்லாமல் “வாங்க மேடம் சார் அவருடைய பர்சனல் ரூமில் இருக்கிறார் நான் அழைத்துச் செல்கிறேன்” என்று வழிகாட்டி முன்னே நடந்தான். எப்படி இதெல்லாம் சாத்தியம் என்று யோசித்தபடியே தலையை நிமிராமல் செந்திலை பின்பற்றி நடந்தாள். இதுபோல மாயங்கள் எல்லாம் நிகழ்த்துவதில் ஆதவன் வல்லவன்  ஆயிற்றே. செந்தில் பர்சனல் ரூமின் முன்பு நின்று” சார் உள்ளே இருக்கிறார் போங்கள் ” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே உள்பக்கம் இருந்து கதவைத்திறந்து “வா மதி “என்று சிரித்தபடி அழைத்தான் ஆதவன். “நீங்கள் போங்கள் செந்தில் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவர்களை உள்ளே அழைத்துக்கொண்டு கதவை அடைத்து விட்டான். மதியை அமரச் சொல்லியவன் உதயாவை வாங்கிக்கொண்டு “சாப்பிட ஏதாவது வேண்டுமா? வரவழைக்கிறேன்” என்றான். வேண்டாம் என்று தலையசைத்து அப்படியே சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் மதி. அவளை அழைக்கும்  விதமாக “ம்ம்க்கும் “என்று செருமினான் ஆதவன். என்ன என்பது போல் அவனை பார்க்க அவளின் முன்பு ஒரு கவரைஎடுத்து வைத்தான். அவனைப் பார்த்துக்கொண்டே அதை பிரித்து எடுத்து பார்த்தவள் அதில் எழுதியிருந்ததை வாசித்து அதிர்ந்து எழுந்து நின்றாள்.
                          இசைக்கும்……………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *