மையல் கொண்டேன் மாதீரா
மையல் கொண்டேன் மாதீரா பாகம்2!!
ஜியா ஜானவி ❤️
13
விடியற்காலை 4:00 மணி போலத்தான் தன் வீட்டுக்கு வந்த ஈசனுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை குளித்து வந்தவன் கருக்கலை (விடியும் முன்) வெறித்தவாறு நின்று இருந்தான். ஏனோ மனம் நிலைக் கொள்ளாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது!! ஏதோ தவறு செய்தவன் போல தவித்துக் கொண்டிருந்ததான்!!
சட்டென்று முகிழ்த்த ஒரு கோபத்தில் ஆத்திரத்தில் அவளை ஆண்டு முடித்து விட்டான் தான். ஆனால் அது தப்பு என்று மனது அடித்துச் சொன்னது!!
‘தப்புதான்!! பெரிய தப்புதான்!! வரம்பு மீறி அவளிடம் நடந்து இருக்க கூடாது!! அவள் சொல்வதும் உண்மை தானே… நாளைக்கு எனக்கு ஞாபகம் வந்து இவளை நான் மறந்தால்…???’ அவற்றை நினைக்கவே மனம் அமைதியின்றி தவித்தது. அப்பெண்ணுக்கு பெரிய பாவம் புரிந்து விட்டாய் என மனசாட்சி அவனை குத்தியது!!
அப்பெண்ணுக்கு மட்டும் தானா பாவம் இழைத்தானா??
சற்று நேரம் இருளை வெறித்து நின்றவன், நடந்தததைப் பற்றி யோசிப்பதில் பயன் ஒன்றும் இல்லை. காலையில் அவளிடம் பேச வேண்டும் என்று யோசித்தவன் படுக்கையில் படுத்து கண்களை மூட… கண்களின் கருமை இருளை கிழித்துக்கொண்டு மின்னல் என வந்து நின்றது முன்னால் கண்ட அந்த இரு நீள விழிகள், ஆனால் இன்று சற்றே கோபத்தோடும்!! குற்றச்சாட்டியப்படி கண்ணீரை சுமந்தபடி…
படக்கென்று கண்களை திறந்தவன் “என்ன இது? ஏன் அந்த கண்கள் என்னை குற்றம் சாட்டுகின்றது?” என்று புரியாமல் வேர்த்து விறுவிறுத்த உடம்பை கூட துடைக்க முற்படாமல் இங்கும் அங்கும் நடந்தான் தூக்கம் வராமல்… எங்கே கண்களை மூடினால் அந்த கண்கள் வந்து குற்றம் சாற்றுமோ என்று உள்ளுக்குள்ளே லேசான நடுக்கம் கூட!!
நடுக்கமே தான்!! அந்தக் கண்களை நேருக்கு நேர் காண முடியாமல் போக… நடந்து நடந்து அலுத்தவன் ஓய்ந்து போய் சோபாவில் அமர.. பலமான யோசனையில் அவனுக்கு மீண்டும் தலை வலிக்க ஆராம்பித்தது. மெதுவாக ஆரம்பித்த தூறல் பெண் கனமழையாக பெய்வது போல அவனை தலை கொள்ளும் பல இடி மின்னல்கள்.. அவற்றை தாள முடியாமல் அப்படியே சாய்ந்து விட்டான் மயக்க நிலையில்…
மறுநாள் காலையில் நேரம் சென்றே விழித்தார்கள் தூக்க மருந்தின் உதவியால் உறங்கிக் கொண்டிருந்த ஆரோனும் ராசுவும்.
“என்னடே… இவ்வளவு நேரம் தூங்கிட்டோம்” என்று மணியை பார்த்த ராசு, அருகில் இருந்த ஆரோனிடம் “இவ்ளோ நேரம் தூங்கிட்டோமா? அண்ணன நைட்டெல்லாம் அப்பப்ப போய் பார்ப்போமே!! இன்னைக்கு பார்த்த மாதிரி தெரியலலே? எழுந்து அண்ணன முதலில் பார்ப்போம்” என்று வேகமாக இவர்கள் ஈசனின் அறையை திறந்து பார்க்க அங்கு மயங்கி சோஃபாவில் கிடந்தான் ஈசன்.
அதன் பிறகு அவசரமாக பிரகாசத்துக்கு அழைக்க அவர் தனது மருத்துவக்குழுவை அனுப்பி வைப்பதாக கூறி, அதற்கு முன்னே ரதிக்கு சென்று அழையுங்கள் என்றார்.
வீரியமா காரியமா? அண்ணன் உடல்நலைய அவள் மீது உள்ள கோபமா? என்று பார்க்கையில்… அண்ணனின் உடல் நிலையே என்று முடிவெடுத்த விழுதுகள் விரைவாய் சென்று ரதியை அழைத்து வந்தனர்.
பதறி அடித்து வந்த ரதி வைட்டல்ஸ் பார்த்து “அனைத்தும் சரியாக இருக்கிறதே!! திடீர்னு மயக்கம் வர காரணம் என்ன? நீங்க ரெண்டு பேரும் அவரோடு தானே இருக்கீங்க.. நைட்டு ஏதும் தலை வலிக்குதுன்னு சொன்னாரா? இல்ல வேற ஏதாவது பண்ணுதுன்னு சொன்னாரா?” என்று மாற்றி மாற்றி அவள் கேட்ட கேள்விகளுக்கு ஒன்றுக்கு கூட பதில் அளிக்க முடியாமல்… அசந்து தூங்கிய தங்கள் மடத்தனத்தை எண்ணி தலை குனிந்து நின்றிருந்தனர்.
அதற்குள் மற்ற மருத்துவர்கள் வந்து ஈசனை சோதித்து நார்மலாக இருக்கிறான் என்றுதும் தான் மூவருக்குமே சரியாக மூச்சு வந்தது.
காலையில் அவனுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் அனைத்தையும் கொடுத்துவிட்டே சென்றாள் ரதி.
இவள் வீட்டுக்குள் நுழையும்போது தன் வீட்டிலிருந்து கதவை திறந்து சஞ்சனா கேள்வியோடு பார்க்க ரதியை பார்க்க.. “அது.. அது… அவருக்கு உடம்பு சரியில்லை. பார்க்க போயிருந்தேன்!!” என்றவளின் முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை சஞ்சனாவுக்கு தெரியும் ஈசன் தான் ரதியின் தீரா என்று!!
ஈசன் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த சமயத்தில் வெறித்து பார்வையோடு இரண்டு நாட்கள் மருத்துவமனையிலே அமர்ந்தவளை தேடி வந்துவிட்டாள் சஞ்சனா. அவளிடம் காரணம் கேட்டு அவளை அணைத்து ஆறுதல் படுத்திய தோழியின் தோளில் சாய்ந்து அனைத்தையும் கூறி கதறி தீர்த்து விட்டாள் ரதி. அது முதல் அவ்வப்போது வார்த்தையால் சீண்டவும் செய்வாள் சஞ்சனா ரதியை..
“காலையிலேயே வா??? நடத்து!! நடத்து!!” என்றப்படி மீண்டும் வீட்டுக்குள் சென்று விட… உதட்டை கடித்து தன் நாணச் சிவப்பை மறைக்க முயன்று தோற்றவள் வீட்டுக்குள் ஓடியே விட்டாள்.
நேற்று ஈசன் நடந்து கொண்டதில் அவ்வளவு திகைப்பு தான் அவளுக்கு!! திகைப்பு என்பதை விட அதிர்ச்சி.. பேரதிர்ச்சி!! ஆனால் உள்ளுக்குள் காதல் கொண்ட மனம் என்று ஒன்று இருந்ததே… தவறுதான் என்றாலும் தீண்டியவன் தன்னவன் என்பதால் அனைத்தையும் மறந்து அவனை மடித் தாங்கிக் கொண்டாள்.
குளியலறைக்குள் நுழைந்த ரதியின் இதயம் தன் துடிப்பை சற்றே அதிகரிக்க… கண்ணாடி முன் நின்றாள். கழுத்தில் கன்னத்தில் அங்கே இங்கே என்று இளஞ்சிவப்பாய் கன்றி இருந்தது. இது எல்லாம் ஈசனின் சித்து விளையாட்டு தான்.. இல்லையில்லை அவனின் சிற்றின்ப விளையாட்டு!! ரதியின் உதட்டில் பொன் சிரிப்பு.
ஈசன் அவளுக்கு பின்னல் நிற்பது போல் ஓர் உணர்வு, அவளை அறியாமல் அவள் கை, பின் கழுத்தை வருடியது. அவளுடைய விரல்கள் கீழ் நோக்கி நகர்ந்து கழுத்தில் நடுவே வந்தது. மோக சூட்டில் உடல் கொதித்தது. அவள் கண்கள் சொருக, வலது கால் பாதத்தால் இடது காலை வருடினாள்.
“ரதி… வேணாம்… தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்க…” என்று மனசாட்சி பாடாய் படுத்த, ஷவரை திறந்து விட்டாள். ஆசையாமல் நின்றாள். உடல் சூடு குறைய…
“ம்ஹும்ம்… இன்னைக்கு அவன பாக்கபோறது இல்ல…. ” என்று வெட்கம் கொண்டு பைத்தியம் போல் தனக்கு தானே பேசியப்படி தலையை துவட்டி விட்டு டவலுடன் ஹாலுக்குள் நுழைய.. அங்கே சஞ்சனா நின்றிருந்தாள்.
“என்ன ரதி… உன் ஆளு ஞாபகம் வந்துருச்சோ? இப்படி அரைகுறையா வந்து நிக்குற?” என்று நக்கலாக சிரித்து தலையில் அடித்துக் கொண்டாள்.
“ச்சீ…போடி!!” என்ற ரதி அதன் பின்னே ஹாலுக்குள் வந்து விட்டதை நினைத்து வெட்கம் கொண்டு, தன் அறைக்குள் வந்து கண்ணாடி முன் நின்றப்படி, நாக்கை சுழட்டி இதழை ஈரப்படுத்த, ஈசன் அவள் உதட்டை கடித்து இழுத்து பாடாய் படுத்தியது ஞாபகம் வர, இதழுக்குள் சிரித்தாள். வெட்கத்தில் அவள் கன்னங்கள் மட்டுமின்றி மூக்கும் சிவந்தது.
ரதியின் உதடுகள் பொய் சொன்னதே தவிர… ரதியின் எண்ணம் முழுவதும் அவனே நிறைந்திருந்தான். உடை மாற்றியவள் ஹாலுக்கு வர அங்கே அவளை குறுகுறு பார்வையோடு பார்த்து இருந்தாள் சஞ்சனா.
“ம்ம்ம்…. நீ ரொம்ப மாறிட்ட ரதி…. ” என்றப்படி தான் கொண்டு வந்திருந்த உணவை இருவருக்கும் பரிமாறினாள் சஞ்சனா.
“நானா???” என்றவள், சஞ்சனாவின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட,
“ச்சீ… தள்ளுடி எரும… இது என்ன? புது பழக்கமா இருக்கு… வர வர உன் சேர்க்கையே சரியில்ல” என்று கன்னத்தை துடைத்து விட்டு சாப்பிட அமர்ந்தாள் சஞ்சனா. அவளுக்கு அருகிலேயே சிரிப்போடு அமர்ந்திருந்தாள் ரதி.
வெகு நாளைக்குப் பிறகு அவளது சிரிப்பு கண்களையும் எட்டிருக்க பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தாள் ரதி. “இத்தனை வருஷத்துல நீ மனம் விட்டு சிரிக்கிறத இப்பதான் பார்க்கிறேன் டி!! உன் சிரிப்பு பேரளவில் உதட்டோடு மட்டுமில்லாமல் உன் கண்களிலும் தெரிது. நீ எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாய் என்று எனக்கு புரியுது. இந்த சந்தோஷம் உனக்கு என்னைக்கும் நிலைக்கும்னு!!” என்று மனதார தோழிக்காக ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டாள் சஞ்சனா.
ஆனா இது கானல் நீர் தான் என்று இருவருக்குமே அப்பொழுது தெரிந்திருக்கோதைல்லை!!
“ஓகே. நான் ஆபீஸ் போறேன் ஈவினிங் மீட் பண்ணலாம்!!” என்று சஞ்சனா சென்று விட, தூக்கம் தொலைந்து நேற்றைய இரவின் மிச்சங்கள்.. இன்று கண்களை சுழட்ட அப்படியே படுக்கையில் படுத்து கண்களை மூடினாள் ரதி.
ஒரு பத்து நிமிடம் கடந்திருக்கும்…. ரதி கண்களை மூடி இருந்தாளே தவிர, கரு விழிகள் இரண்டும் அங்கும் இங்கும் உருண்டு கொண்டிருந்தது. நேற்றிரவு ஈசனுடனான அவளது அந்தரங்கம் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருக்க..
“ஐயோ.. கடவுளே…. எதுக்கு என்னை இப்படி படுத்துற…” என்று முனகியப்படி குப்புற படுத்தாள்.
“காதலா? இது மோகமா? இல்லை வெறும் உடல் தேடலா?.. அதுவும் பெயரில்லா இவ்வுறவில்.… ” என்று ரதியின் மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் தறிகெட்டு ஓட… தலையணையில் முகத்தை அழுத்தி தூங்க முயன்றாள்!!
மனம் சஞ்சலத்தில் இருக்க அன்று மருத்துவமனைக்கு விடுப்பு சொல்லிவிட்டு அறைக்குள்ளே அடைந்து கிடந்தாள் பாகீரதி!! பிரகாசம் போன் செய்து விசாரிக்க.. நேற்று இரவு இருந்த காய்ச்சலை காரணம் கூறி விடுமுறையை நீடித்துக் கொண்டாள்.
ஈசனை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்ப பிரகாசம் அனைத்து வேலைகளையும் முடக்கிவிட.. அதன்படி அடுத்த இரண்டு நாட்கள் இவள் சகஜமாவதற்குள் வந்து சேர்ந்தான் பிரபஞ்சன் தன் மனைவி கோதையோடு ஈசனை அழைத்துச் செல்ல…
“எப்படி என் தீரனை எதிர்கொள்ள? அதுவும் அன்றே இரவுக்கு பிறகு?” என்று இவள் சஞ்சலப்பட்டு கொண்டு அடுத்து இருந்த நாட்கள் பகுதி நேரம் மட்டுமே மருத்துவமனை சென்று வீடு திரும்ப.. பிரகாசமோ இவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தவறாக புரிந்து கொண்டார். அதனால் அவரும் தொந்தரவு செய்யவில்லை.
அதேபோல ஈசனும் ஒரு குற்ற உணர்வோடு தான் இரண்டு நாட்களாக ஒரே யோசனையில் இருந்தான். அவன் செய்தது அதீத தவறு என்று அவனுக்கு தெரிந்துதான் இருந்தது. மனது முழுக்க தன் மீது நேசத்தை சுமந்து கொண்டு அதை கூறவும் வழி இல்லாமல்… வாழவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு தான் இளைத்தது துரோகமே என்று அவன் மனமும் அவனை பாடாய்படுத்தி எடுத்தது.
மறுநாள் காலை வழக்கம் போல ரதி அவனுக்கு வைட்டல்ஸ் செக் செய்து மருந்து கொடுக்க வந்தாள். இடையில் இரண்டு நாட்கள் அவள் வரவில்லை. இவள் வரும் வேளையில் பிரபஞ்சனும் கோதையும் வந்திருக்க… அவர்களின் ஹனிமூன் சூட் எப்படி இருந்தது என்று கோதைவிட ரகசியமாக விசாரித்தாள்.
கோதையின் நாணச் சிவப்பே சொன்னது அவர்களின் சந்தோசத்தை… உமையாளும் ரதிதான் அதை ஏற்பாடு செய்து கொடுத்தது என்று கூறியிருந்ததார். அவளிடம் நன்றி கூறினாள் கோதை.
கோதையோடு பேசிக் கொண்டிருக்கும் ரதியின் முகத்தை தான் யோசனையோடு அவ்வப்போது தொட்டு தொட்டு மீண்டது ஈசனின் கண்கள். அவளுக்கு முதலில் எதும் புரியவில்லை அங்கே நடந்தது.
பின்பு தான் ஆரோன் வந்து “அண்ணே… எல்லா ரெடியாயிடுச்சு மதியம் இரண்டு மணிக்கு கிளம்பலாம். சரியா இருக்கும்” என்றதும் தான் திடுக்கிட்டு திரும்பியவள் பிரபஞ்சனையும் ஈசனையும் மாறி மாறி பார்த்தாள்.
அதன்பின் ஈசனிடம் தனிமையில் பேச அவளுக்கு சந்தர்ப்பமே வாய்க்காமல் அனைவரும் சுற்றி இருக்க.. தன் வலித்த மனதை கண்களில் வழியே காட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள் பேதை!!
இவளுக்கு சற்றும் குறையாது வருத்தத்தோடு தான் இருந்தான் ஈசனும். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவன் தவியாய் தவித்து இருக்க…
‘இனி சென்றால் எப்போது திரும்புவான்? திரும்பும்போது அவனது ஞாபகமும் திரும்பி இருக்குமோ? அப்பொழுது நான்.. என் ஞாபகம்…???’ என்று பதைப்பதைத்தது பாவையின் நெஞ்சம்!! கூடவே மானசாவை பற்றியும் எண்ணங்கள். ஈசன் வேறு திருமணம் செய்து கொள்வானா? அப்படி செய்து கொண்டால் மானஸாவின் நிலை??
இதுவரை அப்படி ஏதும் நடக்க வாய்ப்பில்லை என்று ஸ்திரமாக இருந்தாள். அதனால் ஈசனின் நினைப்பே முன்னிருக்க.. மானஸாவை பற்றி கவலைப்படவில்லை!! ஆனால்… இப்பொழுது அந்த திடம் குலைய.. குறைய.. தொடங்கியிருந்தது. தீராவும் மானஸாவும் இரு கண்களாகிப் போனார்கள் அவளுக்கு.
இதுவரை அவ்விரு கண்களையும் அன்போடு அரவணைத்துக் கொண்டிருந்த தாட்சாயணியின் கைகள் தானே?? இப்போது இல்லையே… இன்று யாரோ தெரியாத ஒரு கைகளுக்கு இவர்களை தாரை வார்த்துக் கொடுக்க அவளுக்கு விருப்பமில்லை.
ஆனால்… ஈசனின் வாழ்க்கையில் இவளுக்கு இடம் இருக்குமா?
அடுத்த சிறிது நேரத்தில் ஆரோனும் ராசுவும் லக்கேஜ்களை லிப்ட் மூலம் கீழே எடுத்துச் செல்ல… ஈசனின் மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த ரதியின் அருகில் வந்த ஈசன் ஏதோ சந்தேகம் கேட்பது போல யாரும் கேட்காதவாறு.. “ரதி… என்ன இருந்தாலும் அன்னைக்கு நைட்… நான் அப்படி…” என்று அவன் முடிப்பதற்குள், யாரும் அறியா வண்ணம் அவனது வாயை விரல்கள் கொண்டு அடைத்து வேண்டாம் என்று தலையசைத்தாள்.
மற்றொரு அறையில் இருந்த பிரபஞ்சன் “கோதை…!!” என்று எதற்கு அழைக்க.. ஹாலில் சற்று தள்ளி இலக்கேஜை சரி பார்த்துக் கொண்டிருந்த கோதையும் விரைந்து அவனிருந்த அறைக்கு செல்ல.. அந்த இடைப்பட்ட சில நிமிடங்களில் தன் கழுத்தில் அணிந்திருந்த அவன் தாத்தா நெல்லையார் கொடுத்த செயினைக்கழட்டி அவள் கழுத்துக்கு மாற்றி விட்டிருந்தான் ஈசன்.
அதில் பி என்ற ஆங்கில எழுத்து போல் தெரிந்தாலும், அது அந்த ஆதி சிவனின் சூலத்தை ஒத்த வடிவில் இருக்கும்.
இவனுக்காக பிரத்தியேகமாக ஆசை ஆசையாக அதை செய்து கொடுத்திருந்தார் அவர். இந்நாள் வரை பெரிதாக வளர வர செயினை மட்டும் மாற்றி இருந்தானே ஒழிய அந்த டாலரை மாற்றியது இல்லை. அதை தான் இப்பொழுது ரதிக்கு மாற்றி விட்டிருந்தான் அவர்களின் உறவுக்கு அடையாளமாக!!
“நீ சொன்னது போல எனக்கு ஞாபகம் வந்து விடப்பட்ட காலத்தில் உன்னைய மறந்தாலும் இது சொல்லும் நீ யார் எனக்கு என்று!!” என்றான்.
“ஈசா.. கிளம்பலாமா?” என்றபடியே வெளியே வந்து பிரபஞ்சனோடு சேர்ந்து கொண்டு இவளிடம் தலையாட்டினான். பிரபஞ்சனும் கோதையும் அவ்வளவு நன்றி கூறினார்கள் ரதிக்கு. அனைத்தையும் ஒரு மென் புன்னகையோடு கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் மனதில் அத்தனை ரணமாக வலித்தது!! அவனை மீண்டும் பிரிவது!!
ஈசன் திருநெல்வேலிக்கு திரும்பி ஆறு மாதங்கள் கடந்து விட்டது முதல் இரண்டு நாட்கள் அவன் நெல்லையாரின் கொட்டாரத்தில் இருந்தவன் அதன்பின் தன் பழைய குஷ்டியிடம் இருக்கும் குடிலுக்கு செல்ல விரும்ப… உமையாளும் பிரபஞ்சனும் அவனைத் தடுத்து உடம்பு சரியாகும் வரை அங்கே இருக்க சொன்னார்கள்.
அவர் எங்கே என்று ஆத்மநாதனை பற்றிய அவனின் தேடலுக்கு அன்னையின் வெற்றி நெற்றியிலும் தாலிக்கொடி இல்லாத கழுத்திலும் விடை கிடைத்தது. மானஸாவை இருவரையும் பா என்று அழைக்க வைத்திருந்தான் பிரபஞ்சன். அதனால் அவள் பா என்றால் பெரிசா வித்தியாசம் இன்றி இருந்தான் ஈசன்.
“அந்தாளுக்கும் எனக்கும் இடையில் எவ்வளவு சண்ட இருந்திச்சு… இப்படி பொசுக்குன்னு அவரு போயிட்டா அதையெல்லாம் நான் யாரிட்ட போய் பிடிக்கிறது.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை!!” என்று இவனாக பேசிக் கொண்டான் அவரை அப்படி அனுப்பி வைத்தவனே இவன் தான் என்று அறியாமல்!!
அதன் பின் தான் அவனது சோதனை காலம்!! “ஆத்மநாதன் அண்ணாச்சி… இறந்தவுடன் உங்களைத்தான் தேர்தலை நிக்க வச்சு எம்எல்ஏ ஆக்கணும்ணே!!” என்று அவனை அலுவலகத்தில் அமர வைத்து சுற்றிலும் ரஃபிக் சங்கர் ராசு ஆரோன் என்று அவனது விழுதுகள் நின்று அவனுக்கு நிதர்சனத்தை புரிய வைக்க…
“என்னடே??? என்னைய அரசியல்வாதி ஆக்கிட்டீகளா? யாரை கேட்டுடே செஞ்சீக?? அதெல்லாம் விட இந்த நெல்லை மக்கா எப்படிடே என் மூஞ்ச பாத்து ஓட்டு போட்டானுக?” அதிர்ந்து கேட்டவனின் கேள்வியில் அவர்கள் வாய் பொத்தி சிரிக்க.. “என்னடே நக்கலா சிரிக்கிறீக? உடம்பு எப்படி இருக்கு? இன்ஸூரன்ஸ் போடுனுமோ?” என்றவனின் எகத்தாளத்தில் அமைதியாகி விட்டனர்.
இப்போதைக்கு மற்றதை விட தொகுதியை பார்க்க வேண்டும். அதிலும் ஈசனுக்கு ஞாபகம் இல்லை என்றது தெரிந்தால் மீண்டும் எதிர்க்கட்சிகள் பிரச்சினை பண்ண கூடும் என்று தீவிரமாக யோசித்த பிரபஞ்சன், அவனுக்கு அடிபட்டு உடல்நிலை சரியாக அவகாசம் கேட்டு ஈசனது கட்சியின் மேல் இடத்திற்கு அனுப்பி வைத்தான் சம்பிரதாயமாக ஒரு மெயில் அனுப்பினான். அந்த இடைப்பட்ட காலத்தில் தினமும் ஈசனுக்கு அரசியல் பாடம் தான்!!
தூங்கி வழிபவனை கூட முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பி அமர வைத்து பிரபஞ்சன் பாடம் எடுக்க… அவனோ “டேய் குண்டா… ஒரு அரசியல்வாதிக்கு தேவை என்ன தெரியுமா டே? சட்டசபையில வேட்டை அவுக்கிறது… மக்கள் மத்தியில் பொய்யா நாலு வாக்கு உறுதிகளை கொடுக்கிறது… எந்த குற்றம் குறை சொன்னாலும் அது எதிர்க்கட்சி செய்த சதி என்று அறிக்கை விடுவது… அதை விட்டுட்டு ஏன்டா புரியாத சப்ஜெக்ட் எல்லாம் எடுத்து அடிபட்டு ஆறி வர என் மூளைய திரும்பவும் ஃபயர் பண்ற!!” என்று எரிந்து விழுவான்.
இவனுக்கு மூளைக்கு அதிகம் வேலை வைக்க கூடாது. அதே சமயம் இங்கே அவனது தொகுதியிலும் இவன் எதையும் மறந்தது போல காட்டிக் கொள்ளக் கூடாது என்று அவனை தயார்படுத்த பிரம்ப பயத்தனம் பட்டது என்னவோ பிரபஞ்சன் தான், கூடவே ஈசனது விழுதுகள்!!
இவனைப் பார்க்க யாரேனும் தொகுதியில் இருந்து உடல்நலம் விசாரிக்க வந்தால்.. அவர் வரும் முன்னை அவரைப் பற்றி அனைத்து டேட்டாக்களையும் இவன் காதில் ஒப்பித்து விடுவார்கள். பற்றாக்குறைக்கு அவன் காதில் ஒரு ஹெட் பேட்டை பொருத்திவிட்டு சற்று தள்ளி நின்று கொள்வான் சங்கர். ஏதாவது இடைப்பட்ட காலத்தில் அவர்கள் கேள்வி கேட்டால் இவன் மாட்டிக்கக் கூடாது என்பதற்காக!!
அப்படியே தெரியவில்லை என்றாலும் யோசிப்பது போல “பிறகு பார்க்கலாம்!!” என்பது போல சமாளித்து அனுப்பி விடுபவன், அவர்கள் சென்ற பிறகு வாங்கு வாங்கு என்று வாங்கி விடுவான் விழுதுகளையும் உடன் பிறந்தவனையும்!!
முதலில் மூன்று மாதத்துக்கு ஒரு முறையும் பின்பு ஆறு மாதத்துக்கு ஒரு முறையும் வந்து ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிரகாசம் சொல்லி அனுப்பி இருந்தார். மூன்றாவது மாதத்திற்கான பரிசோதனையை சென்னையில் பிரபல மருத்துவமனையிலேயே செய்து கொண்டான் ஈசன். பிரபஞ்சன் அவனை சிங்கப்பூர் அனுப்பவில்லை.
இடையிடையே அவனுக்கு ரதியின் நினைவுகள் தோன்றும் முக்கியமாக அவளுடன் கூடி கழித்த அந்த நிகழ்வை எண்ணி இவனுக்கு ரா தூக்கம் போகும். அப்போதெல்லாம் செல்போன் வழியே அவளிடம் சிறிது நேரம் பேசுவான். ஆனால் அதை ரதி ஆதரித்ததில்லை பெரும்பிரபஞ்சன் ன நேரத்தில்!!
காரணம் அங்கே யாருக்கேனும் இவர்களின் உறவு தெரிய வந்தால் அதன் பெரும் பிரச்சினையாக விடும் ஈசனின் வாழ்வில்.. உடல்நிலையில்.. மேலும் அவனை தப்பாக சித்தரிக்கவும் நிறைய காரணங்கள் உண்டே.. அதன் பொருட்டே!! எக்காரணம் கொண்டும் தன்னால் ஈசனுக்கு ஒரு அவப்பெயர் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்.
ஆனால் விதி யாரை விட்டது??!! அந்த ஈசனையும் விட்டத்தில்லையே??
14
மீண்டும் அந்த பனிமலர் பிரபஞ்சனை சந்திக்க வந்திருந்தாள். இடையில் ஒரு இரண்டு முறை அவள் வந்த பொழுது அங்கிருந்த ஏட்டு ஒருவர் “இங்க பாரு புள்ள.. கமிஷனரோட தம்பிக்கு அடிபட்டு சிங்கப்பூர் சிகிச்சை செய்து இருக்காப்புல.. அதனால சார் அடிக்கடி அங்கன போயிட்டு போயிட்டு வராரு. உன்னைய பாக்குறது கஷ்டம். ஒரு ரெண்டு மூணு மாசம் பிறகு வா” என்று அனுப்பி வைத்து விட்டார். ஆனாலும் அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டிருந்தவள் இன்று தான் பிரபஞ்சனை பார்க்க நேரிட்டது.
ஈசனின் விபத்து அதனைத் தொடர்ந்து அவனது கல்யாணம் என்று நேரம் சரியாக இருந்த பிரபஞ்சனுக்கு இந்தப் பெண்ணின் கேஸை மறந்து விட்டோமே என்று நெற்றியை தேய்த்துக் கொண்டவன், அவளை அழைத்தான். “ஒரு மாசத்துக்குள்ள உன் அம்மைய கண்டுபிடிச்சிடுவோம்ல.. சரியா?” என்று அனுப்பி வைத்தவன், உடனே அந்த ஜார்ஜ் யாரு? எந்த அரசியல்வாதி இடம் இருந்தான்? என்று அனைத்து தகவல்களும் தனக்கு வரும்படி ஆணையிட்டு இருந்தான் தன் கீழ் உள்ளவர்களிடம்..
அதன்படி அடுத்த ஒரு வாரத்தில் ஜார்ஜின் ஜாதகம் அவன் கையில்!!
“சரியான சல்லிப்பய சார் அவேன்.. ஊர் சுத்திட்டு இருந்தவன அந்த சிங்காரவேலன் தான் தனக்கு கீழே வைச்சிக்கிட்டார். அப்படி ஒன்னும் நல்ல எண்ணத்தோடலாம் கிடையாது. சிறுபான்மையனரோட ஓட்டு வேணும்னு இவன் மூலமா ஓட்டு வாங்க தான்!! இவனும் காசுக்காக என்ன வேணாலும் செய்வான். ஏன் ஒரு தடவை உங்க அப்பாவையே ஏதோ பேசினானு உங்க தம்பி நடுரோட்டில் போட்டு அவனை அடி வெளுந்துட்டாப்புல இல்ல… ஒரு மாசம் ஆஸ்பத்திரில தான் கிடந்தான்” இந்த செய்தியும் அவன் கேள்விப்பட்டிருந்தான் பிரபஞ்சன். ஆனால் அது ஜார்ஜ் என்று அவனுக்கு தெரியாது!!
“அப்புறம் என்ன ஆனானு எங்கன போனானு தெரியல சார்? அப்பப்போ தூத்துக்குடி பக்கம் போய் ஏதோ சரக்கு மாத்துற வேலை பார்க்கிறதா கேள்வி!! அங்கன போன மாச கணக்காக வரவே மாட்டானாம்!! ஆனால் அதுக்கப்புறம் ஆள் என்ன எங்கன்னு ஒன்னும் தெரியல!!” என்றார் ஏட்டு தங்கதுரை.
“அந்த சிங்காரவேலன் என்ன ஆனான்??”
“இடையில ஒருதரம் உங்கள் தம்பியையைம் அவரு மனைவியையும் ஆள போட ப்ளான் பண்ணி… செஞ்சாங்களே.. அதுல கூட அவர் பொண்டாட்டி கர்ப்பம் கலைஞ்சதே சார்.. அதுவும் அந்த சிங்காரத்தோட வேலை தான்!!
உங்க தம்பிய மாட்டி விடுறதுக்கு நிறைய சதி செஞ்சாப்படி.. ஆனா எல்லாத்தையும் அவர் சர்வ சாதாரணமாக முறியடிச்சு.. கடைசியா எம்எல்ஏ ஆனாரு!! அப்புறம் ஏதோ அவரு இருந்த தேசிய கட்சி சேர்ந்த ஒரு எம்பியோட போய்டாப்படி!!” என்று முடித்து விட்டார்.
“ஈசனைத் தவிர வேறு யாரெல்லாம் அவனுக்கு எதிரிங்க?” என்ற பிரபஞ்சன் கேள்விக்கு..
“யாருக்கு கேக்குதிய சார்? அந்த சிங்காரத்திற்கா இல்ல? ஜார்ஜ்க்கா?”
“இப்போதைக்கு.. இந்த கேஸ்ல
ஜார்ஜ் பத்தியதானுவே!! அதனால அவேனுக்கு சொல்லுங்க?”
“யாரு எதிரி இல்லன்னு கேளுங்க? தெரு ஆட்களில் இருந்து ஊரு முழுக்கவே அவேனுக்கு எதிரிங்க தான்!! இதுல சரக்கு மாத்துற எடத்துல ஏதோ வெட்டு குத்துனு கேஸ் எல்லாம் நடந்து தூத்துக்குடி போலீஸ் அவனை கைது பண்ணி இருக்காங்க.. இது அதற்கான ரிப்போர்ட்ஸ்!!” என்று சில ஃபைல்ளை அவன் முன்னே தள்ளி வைத்தார்.
“தூத்துக்குடியில் ஒரு பெரும் புள்ளியையும் பணத்துக்காக கொலை பண்ணிட்டானு தூத்துக்குடி போலீஸூமே அவனை தேடிட்டு தான் இருக்கு!!” என்றார் முத்தாய்ப்பாக!!
‘இந்த ஜார்ஜ் கேஸூ ரொம்ப தலைவலியா இருக்கே!!’ என்று யோசித்தான். எங்கோ ஏதோ அவனுக்கு புரியும் புரியாதது போல சில முடிச்சுகள் விளையாட்டு காட்டிக்கொண்டே இருந்தது பிரபஞ்சனுக்கு இந்த வழக்கில்!!
அது அவன் தம்பி ஈசன் தான் என்று அறிந்தால்???
சிங்காரவேலன் பற்றி கேட்கும் போது அவன் கொடுத்த ஒவ்வொரு அடிக்கும் ஈசன் கொடுத்த பதிலை கண்டு சிரித்துக் கொண்டான். அது ஆத்மநாதனுக்காக.. அவன் இறங்கி செய்த செயல்களில் எல்லாம் அப்படி ஒரு நெகழ்ச்சி தம்பியின் மீது!! அப்பாவின் மீது கொண்ட பாசத்தால்…
அவன் அறிந்த வரை ஆரோக்கியராஜ் தானே ஈசனின் தந்தை!! ஆத்மநாதன் அவனை வளர்த்தவர். வளர்த்தவருக்காக இவ்வளவு செய்ய முடியுமா? என்று அத்தனை பெருமிதம் தம்பியின் மீது!!
வீட்டுக்கு இவன் செல்ல அங்கே கட்சி அலுவலகத்தை குஸ்தி களமாக்கி இருந்தான் அவனது தம்பி!!
ஒரு நாள் அதே குஸ்தி களத்தில் தம்பியோடு மோத போவதை பிரபஞ்சனும் அப்போது அறியவில்லை!!
வட்டம் மாவட்டம் எல்லாம் ஏன் சதுரம் கூட அவனுக்கு அஞ்சு நடுங்கி ஓரமாய் தங்களது கதர் வேஷ்டியை கெட்டியமாக பிடித்தபடி நின்றிருந்தனர். அதனையும் உருவி நம்மையும் கோதாவில் இறக்கி விட்டு விடுவானோ என்று அத்தனை பயம் அவர்களது கண்களில்…
ராசுவம் சங்கரும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க.. பல வருடங்களுக்கு பிறகு குஸ்தியில் தனது வலிமையை காட்டிக்கொண்டிருந்தான் ஈசன். புரண்டு திரண்ட புஜங்களோடும்.. விரிந்த பரந்த திண்ணிய மார்போடும்.. அதில் வேர்த்து வழிய.. வியர்வையை சிறிதும் சட்டை பண்ணாதவனாய் தன் முன்னை இருந்தவனை போட்டு எடுத்து கும்மு கும்முனு கும்மி கொண்டிருந்தான் ஈசன்!!
“ஈசன் பேக்!!” என்று சிரிப்போடு அங்கே வந்த பிரபஞ்சனை பார்த்த ஈசன்… “ஏய் குண்டா… வரியாலே?? நாம ஒரு கை போடலாம்!!” என்றதும் ‘வேண்டாம் டே… இப்பதான் கல்யாணம் ஆனவன் நான்.. உன் கைல சிக்குனேன் என்னை வைத்து செய்வடே..” என்று மனதுக்குள் நினைத்தவன், சிரித்துக் கொண்டே “ஆளை விடுலே.. செம டயர்ட் நான்!!’ என்றவன் சங்கரை கண்களால் அழைத்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
“என்னடே… உங்க அண்ணாச்சி இப்ப எப்படி இருக்கான்? பழசு ஏதாவது ஞாபகம் வந்ததா? வந்த கட்சி ஆளுங்க கிட்ட ஏதாவது பேசினானா? கட்சி விவகாரமா ஏதாவது சொன்னானா?” என்று கேள்விகள் கேட்க..
“நீங்க வேற ணே.. அவர பார்க்க வந்தா… முதல்ல அவர் கூட ஒரு குஸ்தி சண்டை போட்டா தான் பேசவே ஆரம்பிப்பேனு காலையிலிருந்து ஒரே அடம்!! அங்கன பாத்தீகளா வட்டம் மாவட்டம் எல்லாம் வேட்டிய புடிச்சுகிட்டு நடுங்கிக் கொண்டே நிக்குறத!!” என்று சிரிப்புடன் சொல்ல.. தம்பியின் செயலில் சிரிப்பு வந்தாலும், சங்கரை பார்த்து முறைத்தான் பிரபஞ்சன்.
“இதுக்கு தான் உங்களையெல்லாம் அவேன் கூடவே வச்சிருக்கேனா டே… அவனுக்கு மறந்தத எல்லாம் அப்பப்போ எடுத்து சொல்லி அவனை அந்த ஞாபகத்தில் வைச்சிருக்கிறத விட்டுட்டு.. அவன குஸ்தில இறக்கிவிட்டு இருக்குதிய.. ஒரு எம்எல்ஏ செய்யுற வேலையா டே அது? எவனாவது போட்டோ புடிச்சு வைரல் நியூஸாக்கினா என்னலே பண்ணுவிய?” என்று சிறு அதட்டலோடு கேட்டதும் தான் தலையை சொரிந்தவாறு பிரபஞ்சனை பார்த்து தலை குனிந்து நின்றான் சங்கர்.
“சரி.. சரி.. போ வே” என்றவன் ஏதோ யோசித்தவன், “ஏம்லே.. அந்த ஜார்ஜ உனக்கு தெரியுமாடே?” என்றதும் மனதிற்குள் திடுக்கிட்டவன் “எந்த.. எந்த ஜார்ஜ ணே சொல்லுதிய?” என்றான் பதட்டத்தை காட்டாதவாறு..
“அதாம்லே அந்த சிங்காரவேலன் கிட்ட இருந்த ஜார்ஜ் பய.. ஒரு தடவ ஈசன் கூட அவன அடிச்சதா சொல்லுக்கிறானுவ?” என்று கேட்டான் பிரபஞ்சன்.
‘இவருக்கு எது வரைக்கும் தெரியும்? எதுவரைக்கும் தெரியாதுனு நமக்கு தெரியலையே?’ என்று யோசித்தவன் ‘எதுக்கும் பொத்தாம் பொதுவாக சொல்லி வைப்போம்!’ என்று ஊர் உலகத்திற்கு இவர்கள் என்ன சொன்னார்களோ.. அதே விஷயத்தை மட்டுமே பிரபஞ்சனிடம் கூறினான் சங்கர். மற்றது அனைத்தும் ஈசனும் அவன் விழுதுகள் மட்டுமே அறிந்த ரகசியம்!!
ரகசியம் காக்கப்படுமா அல்லது அம்பலமாகுமா?? அம்பலவாணனின் அம்பலத்தில்???
இப்படியாக ஆறு மாதங்கள் சென்ற நிலையில்… வெகுவாக ரதியடனான பேச்சுவார்த்தைகள் குறைந்தது ஈசனுக்கு. பெரும்பாலும் இரவில் தான் ஒன்று அவள் அழைப்பாள்.. இல்லை இவன் அழைப்பான்!! இப்போதெல்லாம் அவனுக்கு அதிக களைப்பின் காரணமாக சீக்கிரமே உறங்கியிருந்தான். என்னதான் அவன் குஸ்தி தொகுதி என்று சுற்றினாலும் அவனது ஆரோகியத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர் ஈசனின் குடும்பத்தாரும் அவனின் விழுதுகளும்!!
ஆடி மாதத்திற்கு என்று பெண்ணை அழைக்க வந்தனர் சந்திரசேகரன் சந்திரமதியும்!!
“வாங்க..!!” என்று பொதுவாக அழைத்த ஈசன் அன்னையிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க.. அவனின் எதிர்க்க எப்படி கூறுவது? ஈசனை பொருத்தவரை இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது. இப்போதுதான் ஆடிக்கு கூட்டி செல்வது எப்படி சொல்வது? என்று யோசனையுடன் மனைவியை பார்த்தார் சந்திரசேகர். சந்திரமதி கண்ணை மூடி திறந்து தான் பார்த்துக் கொள்வதாக கூறினார்.
“மன்னி… ஆடி மாசம் வீட்டில பூஜை வச்சிருக்கேன். அதனால கோதையை நான் அழைச்சிண்டு போகட்டுமா?” என்று கேட்டதும் திரும்பிய ஈசன்… “அது எப்படி மாமி எங்க வீட்டிலேயே ஆடி மாசம் அம்மா கோவிலுக்கு எல்லாம் வேண்டுதல் வைப்பாங்களே? அப்போ அண்ணி இருக்கணும் தானே?” என்றான்.
ஏற்கனவே இவனிடம் வாய் கொடுத்து மீள முடியாது. இப்பொழுது ஃபுல் ஃபார்ம் ஆக இருப்பவனிடம் என்ன சொல்லி புரிய வைத்து கோதை அழைத்து செல்வது என்று புரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தார் சந்திரமதி.
உமைமாளுக்கு அவரை நிலை புரிய “அதில்டே. ஈசா… உங்க அப்பா தவறியதில் இருந்து அதெல்லாம் நான் விட்டுட்டேம்லே” என்று அவர் பொதுவாக சொல்ல… “அதை நானும் கேட்கிறேன் எதுக்கு விட்டீக? அதான் இப்ப குடும்பத்துக்கு மருமக இருக்காங்க தானே? அவகள விட்டு செய்ய வை உமை!! எதுக்கு நம்ம பழக்க வழக்கம் சம்பிரதாயத்தை எல்லாம் விடனும்?” என்று அவன் கேட்ட கேள்வியில் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் மூவரும் கை பிசைந்து கொண்டு நிற்க… டூட்டியில் செல்ல வந்திருந்த பிரபஞ்சன் மூவரும் தவிப்புடன் நிற்பதை கண்டவன் “என்ன??” என்று கேட்டான்.
“இல்லை மாப்பிள்ளை வீட்ல ஒரு பூஜை அதுக்காக கோதையை அழைச்சிண்டு போகணும்” என்றார் சந்திரமதி.
“அவ்ளோதானே!! கூட்டிட்டு போயிட்டு வாங்க மாமி. என்னலே ஈசா இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் எதுக்கு நாம தலையிடனும்?” என்றவன் அவனுக்கு அவனே ஆப்பு அடித்துக் கொண்டதை அந்நேரம் அறியவில்லை!!
“என்னமா போங்க!!” என்று ஈசன் சென்று விட, அனைவரிடமும் சொல்லிக்கொண்டு டூயூட்டிக்கு சென்று விட்டான் பிரபஞ்சன்.
அதன் பின் கோதையையும் மானஸாவையும் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர் கோதையின் பெற்றோர்.
இரவு தான் வீடு திரும்பியவன் அன்னை ஈசனும் டைனிங் டேபிளில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள் இவனை அழைக்க….
“இல்லம்மா.. நீங்க சாப்பிடுங்க நான் கோதையோட கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுகிறேன். மானு குட்டி சாப்பிட்டாளா? தூங்கிட்டாளா?” என்று சோபாவில் தலையை சாய்த்தவாறு அவன் விசாரித்து கொண்டு இருக்க… நமட்டு சிரிப்போடு அன்னையைப் பார்த்த ஈசனோ “உன் பொண்டாட்டி கூட நீ சாப்பிடணும்னா… அதுக்கு நீ உன் மாமியார் வீட்டுக்கு தான் போகணும் டே குண்டா” என்க, விசுக்கென்று அவன் புறம் திரும்பியவன் “ஏம்லே..?” என்றான்.
“அதான் காலைல ஏதோ பூஜை விரதம் சொல்லி கூட்டிட்டு போய்ட்டாங்களே… உன் பொண்டாட்டி வரதுக்கு 21 நாள் ஆகுமாம்” என்றதும் திடுக்கிட்ட பிரபஞ்சன் அன்னையை பார்க்க அவரும் ஆமாம் என்று தலையசைத்தார்.
‘அவசரப்பட்டு வாயை விட்டுடுமோ?’ என்று இவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே… ஈசன் கடகடவென்று சிரித்தவன் “என்னால… அவசரப்பட்டு அனுப்பி வச்சிட்டோம்று பீல் பண்றியா? இனி நைட்டு தூக்கம் எல்லாம் மொட்டை மாடியில் தான்.. வா வா நான் வெயிட் பண்றேன்” என்றவன் சென்று விட ஈசன் அறைக்குள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட பிரபஞ்சன் அன்னையிடம் வந்து “என்னமா இது?” என்று பல்லை கடித்தான்.
“ஆடி மாசம் அழைக்க வந்திருந்தாங்க.. ஈசனை பார்த்து பூஜை என்று சொன்னாங்க.. அவன் இங்கே பண்ணட்டுமே சொல்லிட்டு இருக்கும்போது தான் நீ வந்து ஆட்டையை கலைத்து விட்ட.. இப்ப என்ன பண்ண சொல்ற என்னைய?” என்றவர் சாப்பிட்டுக் கொண்டிருக்க கோபத்தோடு அருகில் அமர்ந்தவன் அடுத்த வாய் உமையாள் தன் வாயக்கு கொண்டு செல்ல அவசரமாக அதை தன் வாயில் வைத்தவன் “ஊட்டி விடு!!” என்றான் கடுப்போடு!!
“இப்பதேன் கொஞ்ச நேரம் முன்னாடி சாப்பிடுவதற்கு என் பொண்டாட்டி கூட தான் சாப்பிடுவேன் சொன்ன..!!” என்று உமையாளும் வார…
“அதான் எனக்கு நானே ஆப்பு அடிச்சிகிட்டேனே!! ஒரு மாசம்… ஐயோ ஒரு மாசம்… எப்படி இருப்பேன்???” என்று அவன் புலம்பிக் கொண்டிருக்க அவனுக்கு சிரித்துக் கொண்டே ஊட்டி விட்டார் உணவை உமையாள்.
ஆனாலும் மனைவியின் மதிமுகம் வந்து மதியை இம்சிக்க.. யாருக்கும் தெரியாமல் மனைவியை காண கிளம்பி விட்டான் பிரபஞ்சன்.
காலையில் கணவன் அப்பாவோட போ என்று சொன்னது பெருத்த ஆச்சரியம் தான் கோதைக்கு. அதன் பின் தான் அவனுக்கு விஷயம் இவ்வாறாக சொல்லப்பட்டது என்று தெரிந்தவுடன் வாய்க்குள்ளே சிரித்துக் கொண்டாள். ‘வந்து இரவு தேட போகிறான்.. தேடட்டும்!! தேடட்டும் நல்லா!!’ என்று தன் அறையில் அவள் உறங்காமல் தான் விழித்திருந்தாள்.
மெல்ல கேட் திறக்கும் சத்தம் அவள் காதில் தெள்ள தெளிவாக கேட்டது.
“அவன் தான்… அவனே தான்…. போவோமா? வேண்டாமா?” என்று மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் கோதைக்கு. அவளை அறியாமல் அவள் பார்வை அருகில் உறங்கும் மானஸாவை பார்த்தது. மகள் தூங்குவதை உறுதி செய்து விட்டு, அருகில் அணைவாக தலையணை வைத்து விட்டு, மெதுவாக கால்களை தரையில் வைக்க, அவள் காலில் இருந்த கொலுசு ஜல் ஜல் என்று சத்தம் எழுப்ப, இரு நிமிடம் அசையாமல் உட்கார்ந்தாள்.
மெதுவாக தரையில் அமர்ந்து கொலுசை கழட்டி கட்டிலுக்கு கீழே வைத்தாள்.
அவளுடைய ஹார்ட் பிட் லப் டப் லப் டப் என்று வேகம் எடுக்க, ஹாலில் எரிந்த நைட் லாம்ப் வெளிச்சத்தில் சமையலறைக்குள் நுழைந்தாள். அங்கே லைட்டை போடாமல், ஜன்னல் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தாள். நெருப்புத் துண்டின் வெளிச்சம் கண்ணில் பட, அவளுடைய இதயத்துடிப்பு அதிகரிக்க ஆரம்பிக்க, உடல் முழுதும் சூடு ஜிவ் என்று பரவ, தண்ணீரை எடுத்து மட மட வென குடித்தாள்.
ஐந்து நிமிடம் கடந்திருக்கும்.. கோதை பயத்தில் கதவைத் திறப்பதா? வேண்டாமா? குழப்பத்தோடு அவள் நின்றிருக்க… வெளியே கோடைமழைக் காற்று பலமாக வீச துவங்கியது. குளிரில் நடுங்கும் தன்னவனை பார்த்து மனம் இறங்க…
மெதுவாக ஜன்னலைத் திறந்தாள். அவனோ தம்மை போட்டு விட்டு கோதையை பார்க்க..
இவள் சன்னமான குரலில், “ஏன்னா…. எதுக்கு இப்படி அர்த்த ராத்திரியில் வந்தேள்…. படுத்தாதீங்கோ”
“என்னது படுத்துறேனா? சொல்லுவலே சொல்லுவ? சொல்லாம கொள்ளாம இங்கே வந்து உட்கார்ந்துகிட்டேன்னா.. அங்கன நான் எப்படி நீ இல்லாமல தனியா தூங்குறது?” என்று கோபத்தோடு கேட்டான் பிரபஞ்சன்.
“அதுக்கு… ??” என்று இவள் புருவத்தை ஏற்றி முறைக்க..
வீரியத்தை விட காரியமே சிறந்தது!! மனைவியிடம் தோற்பது அந்த மகேசனையை சரணடைவது என்பதை உணர்ந்த பிரபஞ்சன் “அதில்ல கோத… சும்மா உன்னைய பாக்கணும் போல இருந்துச்சுலே.. அதேன் வந்துட்டேன்!! அதுவும் அந்த குளுருல ரொம்ப நேரம் நிக்குதேனா… குளிர போக்கு ஒரு சின்ன தம்!!” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான்.
“சரி… பாத்தச்சுல்ல…. கிளம்புங்கோ….” என்றாள் விடாகண்டியாக!!
“ஏய்…. எவ்வளவு ரிஸ்க் எடுத்து வந்துருக்கேன்… உடனே போக சொல்லுத? வந்ததுக்கு மொதல உன் முகத்தயாவது ஒழுங்கா காட்டுலே வெளிய வந்து!!” என்றான் கொடாகொம்பனாக…
“உங்களை நேக்கு தெரியாது… திருட்டு படவா நீங்க… அம்மா பார்த்தா கொன்னே புடுவா….”
“அடியே சில்கு.. நமக்கு கல்யாணம் ஆச்சுடி…. லூசு… இப்போதும் ஸ்கூல்புள்ள மாதிரி அம்மைக்கு பயப்படுறவ?” என்றான் கேலியாக… அவள் முறைக்க..
“சரி..சரி.. ஒரே ஒரு முத்தம் தா… கெளம்பிருவேன்…” என்றான்.
அவளுக்கும் ஒரு முத்தம் கொடுக்க ஆசைதான். ஒத்த முத்தம் கொடுத்தா மொத்தமா என்னை சுருட்டி கொள்வானே என்று வெட்கம் கலந்த பயமும் இருந்தது.
காதலனை போல திருட்டுத்தனமாக வந்து கொஞ்சுவது பிடித்து போக… இன்னும் கொஞ்ச நேரம் அவனை கதற விட முடிவு செய்தாள். வெளியே வந்தவள், அவன் கைகளால் அவளை எட்டி புடிக்க முடியாத படி தள்ளி நின்றாள்.
“நீங்க முத்தம்னு தான் ஆரம்பிப்பேள்…. அப்பறம்… அங்க தொட்டு… இங்க தொட்டு… ம்ஹும்…. இது ஆவாது… ” என்றாள் சற்றே பயத்தோடு!!
“உனக்கு கண்ட்ரோல் இல்ல வே…. எதுக்கு என்மேல பலி போடுறவ…” என்றான் சிரிப்பை உதட்டுக்குள் மறைத்து.
“எனக்கா? என்ன பயமா?” என்ற கோதையின் கண்கள் அகண்டு விரிய.. சண்டைப் போடும் நோக்கோடு அவனை முட்டி நின்றாள் மாது!! அதுவும் அவள் திண் நெஞ்சில் இவளது மென்மைகள் மென்மையாக முட்ட… ‘இதுக்கு தானே ஆசைப்பட்டாய் பிரபஞ்சா..!!’ என்று மனது குத்தாட்டம் போட… அவன் கண்கள் சிரிப்பில் அதை கண்டு கொண்டவள் தள்ளி நின்று கொண்டாள்.
“ப்ளீஸ் டி கோத… எப்படி குளுருது பாரு… கொஞ்சம் கூட இரக்கம் இல்லாம கல்லு மாதிரி நிக்குறவ…”
“அதுக்கு நான் என்ன பண்ணுறதுனா…” என்று இதழுக்குள் சிரித்தப்படி, பிரபஞ்சனை பார்த்து உதட்டை சுளித்தாள். அவளுக்கும் ஆசை தான், “இந்த குளுரில் அவனை அணைத்து படுத்தால்…” என்று நினைக்கும் போதே, ஜிவ் என்று உடல் முழுதும் சூடு பரவியது.
கரு கரு இருட்டில், ஒற்றை மூக்குத்தியின் ஒளியில் அவள் முகம் அவனை வசீகரிக்க, பிரபஞ்சன் கிறங்கித் தான் போனான்.
“ப்பா, எப்படி டி, இருட்டுல கூட தக தகன்னு இருக்க…” என்று மெல்ல நெருங்கினான்.
“ ஜொல்லு விழியுதுனா.. இந்தாங்க தொடைச்சுக்கோங்க… ” என்று கோதை சிரித்தாள்.
“கல் நெஞ்சக்காரி… ” என்று பிரபஞ்சன் முறைக்க,
“சரி..சரி.. இவ்வளோ ரிஸ்க் எடுத்து வந்திருக்கேள்!! பொழச்சு போங்கோ… ஒரே ஒரு முத்தம் தான்..” என்றப்படி கோதை அவனை நெருங்க, பிரபஞ்சன் வலது கையால் அவளை வளைத்தவன், இடது கையால் அவளது தாடையை பற்றினான்.
அவளோ அவனின் உள்ளங்கையில் அழுத்தி முத்தமிட்டாள். கோதையின் உதட்டை அழுத்தி பிடித்தவன், தன் இதழுக்குள் அடைக்கலம் கொடுத்தான்.
அவளுடைய சூடான மூச்சு காற்று பிரபஞ்சனின் கைகளில் பரவியது. அவனின் சூடான இதழ் அவளின் உதட்டை கொய்ய, அவள் உடலில் இருந்த ரோமங்கள் சிலிர்த்து எழுந்தது.
“இப்படி சிலிர்க்குது சில்கு… ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி நடிக்கிற…..” என்ற பிரபஞ்சன் கோதையின் கண்களை பார்க்க..
“ஏன்னா… சொன்ன கேளுங்கோ.. கெளம்புங்கோ… போதும்!!”
“லூசு, நான் வெளியே தானே இருக்கேன்… ஒரு ஒரு முத்தம்… ” என்றவாறே கோதையின் கையை பிடிக்க,
“ஏன்னா…” என்றவள் வார்ததௌகள் அனைத்தும் அவனின் இதழ்களில் உதிர்ந்து கரைந்து போனது. அதன் சுகத்தில் கண்களை மூடினாள் கோதை.
கோதை கண்களை மூடி இருக்க, பிரபஞ்சனின் கைகள் இரண்டும் அவளின் மெல்லிடையை மென்மையாக அழுத்தி பிடித்தது.
“ஏன்னா… என்ன பண்ணுறேள்… ப்ளீஸ் கைய எடுங்கோ… ” என்ற கோதை பதட்டத்துடன் இடுப்பில் இருந்த அவனின் கைகளை அசைய விடாமல் அழுத்திப் பிடித்தாள்.
“பிடிக்கலைனா சொல்லு எடுத்துருறேன்…. ” விசுக்கென்று கையை எடுக்க, பிரபஞ்சனின் கைகளை அழுத்தி பிடிப்பது கோதையின் முறையானது. இருவரது கைகளும் பின்னி பிணைய, அதில் பெண்ணவள் “போதும்னா…” என்று சிணுங்கினாள்.
“ஒரே ஒரு லிப் கிஸ்… அவ்வளவு தாம்லே…” என்றவன், ஒன்று ஒன்று என்று கூறியே மொத்தமாய் அவளை கொள்ளை கொள்ள முயன்று கொண்டிருந்தான்.
“ஏன்னா…. ” என்று சிணுங்கிய படி அவனது கைக்குள் அவள்!!
நள்ளிரவு நேரம்..
முழு நிலா…
குளிர் காற்று…
காதல் கிளிகள் இரண்டு!!
பிரபஞ்சனின் கைவளைவில் சுவற்றில் சாய்ந்த படி நின்று கொண்டு இருந்தாள் கோதை.
மீண்டும் இழுத்து அவள் வயிற்றை சுற்றி அணைத்து கொள்ள, அவள் மறுக்கோதைல்லை. கோதை அவனின் உடலுக்குள் அடங்கினாள்.
“அம்மா.. முழிச்சிற போறா…விடுங்கோ” என்று கோதை சிணுங்க… அவன் பதில் பேசாமல், அவளின் உதட்டில் உதட்டை பிணைத்தான்.
இருவருக்குள்ளும் நிசப்தம் நிலவ, அவளை பிரித்தான் அவன். அவளோ இப்போது பிரபஞ்சனின் மார்பின் மேல் அழுந்தி அவன் உதட்டை நெருங்கினாள். அவ்வளோ தான் அவளை அள்ளிக் கொண்டு அவள் அறைக்கு சென்று விட்டான் பிரபஞ்சன்.
தனிமையில் இருவரும் இருந்திருக்கிறார்கள் தான் அப்போது இல்லாத ஒரு பதட்டம் இப்பொழுது இருவருக்குள்ளும்!!
இருவருக்கும் இதய துடிப்பு வேகம் எடுக்க, பிரபஞ்சனின் முதுகை கைகளால் பின்னிக் கொண்டாள். கோதை கீழ் உதட்டை கடித்து ஈரப்படுத்த, அது அவனை கிளர்ச்சியடைய செய்ய.. பிரபஞ்சன் கைகள் கோதையின் இடுப்பை மெதுவாக வருடியது.
சற்று குனிந்த பிரபஞ்சன் , கோதையின் மூக்கோடு மூக்கு உரச, கோதையின் உதடுகள் மோகத்தில் துடிக்க, பிரபஞ்சனின் உதட்டை தீண்டினாள். பிரபஞ்சனின் கரு உதடுகள் கோதையின் செவ் இதழ்களை பற்றிக் கொண்டது!!
“ஆஹ்ஹ்… பிரபா.. …” என்ற கோதை, அவன் கீழ் உதட்டை கடிக்க, அவளின் மேல் உதடு பிரபஞ்சனின் வாய்க்குள் நுழைந்தது. இருவரையும் வேகமாக சப்பி உறிய, கோதை தரையில் நிற்க முடியாமல் துள்ளலிட்டாள்.
ஐந்து நிமிசத்துக்கு மேல் இருவரும் முத்த மழை பொழிந்து காமத்தில் தவத்து.. மோகத்தில் திளைக்க… அதன்பின் அங்கே காம களியாட்டம் களைக்கட்டியது!!
காலையில் கோதையின் அறையைத் தட்டிய சந்திரமதி, கதவை திறந்த பிரபஞ்சனை கண்டு அதிர்ந்தார் என்றால், அவனோ “நோ காஃபி மாமி… டேரக்டா டிபனுக்கு எழுப்புங்க!!” என்று கதவடைத்து கொள்ள…
“எதே!!” என்று வாயை பிளந்தார்!!
வருவோம்ல…
