மையல் கொண்டேன் மாதீரா….

This entry is part 1 of 41 in the series மையல் கொண்டேன் மாதீரா

மையல் கொண்டேன் மாதீரா

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

4

மையல் கொண்டேன் மாதீரா!!
ஜியா ஜானவி ❤️
மெல்ல ராசு வீட்டுக்குள் எட்டிப் பார்த்தான் ஈசா என்ன செய்கிறான் என்று!! அவனோ அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கையில் அமர்ந்திருந்தான்.
ஆனால் ராசுக்குத்தான் அமைதி ஆவியாகி போயிருந்தது காரணம், குறுக்கே வந்து வெட்டுப்பட்ட தஷாவை தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு அதுவும் வெற்று உடம்போடு அவன் நடந்து வருவதை, எவனோ எங்கிருந்தோ போட்டோ எடுத்து வைரல் ஆகி இருக்க.. திருநெல்வேலியே‌ ட்ரெண்ட் ஆனது அந்த போட்டோ!!
இவனுக்கே பலபேர் அந்த போட்டோவை போட்டு பல மீம்ஸாய் அனுப்பியிருந்தனர். அனைத்தையும் பார்த்து ஒதுக்கித் தள்ளிவிட்டு யோசனையோடு அமர்ந்திருந்தான்.
கூடவே அத்தனை போன் கால் வந்திருந்தது… ஈசனின் அம்மாவிடமிருந்து, ஈசனின் அப்பாவின் வலதுகை ராவுத்தர் இடம் இருந்தும்.
எந்த போனையும் அவன் அட்டென்ட் செய்யவில்லை. ஈசனுக்கு தெரியாமல் அவ்வப்போது அவன் நலத்தை அவன் அம்மாவுக்கு தெரிவிப்பான். மற்றபடி ராவுத்தர் எல்லாம் இவனுக்கு போன் செய்து கேட்பது இல்லை. ஈசனைப் பற்றி அனைத்து விவரங்களும் அவர்களுக்கு சென்று விடும். ஆனால் “இன்று ஏன் அழைத்திருக்கிறார்? எதா இருந்தாலும் அண்ணேன்ட்ட சொல்லிடுதிவோம்!!” என்று அவன் தயங்கி தயங்கி மெல்ல எட்டி பார்க்க குளித்து வந்து, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாய் எதிரில் படுத்திருந்தவளை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஈசா.
“அண்ணே…” என்றவனிடம், “சாப்பாடு தானே? ரெடியா அதுக்குள்ள? எடுத்துட்டு வாம்ல” என்றான்.
“அதில்ல ணே…” என்றவன் மறுபடி ஆரம்பிக்கும் முன்..
“ஏம்ல.. இன்னும் ரெடி பண்ணலையா? பரவால்ல நம்ம பாண்டி மெஸ்ஸூல போய் வாங்கிட்டு வாலே” என்றான். ராசுவுக்கும் தெரியும், பசி வந்தால் இவன் மனுஷனாக இருக்க மாட்டான் என்று!!
ஏற்கனவே கோபம் வந்தால் அரக்கன் இதில் பசியும் சேர்ந்து கொண்டால் அவ்வளவுதான்!!! என்று பயந்தவன் சாப்பிட்டதும் சொல்லுவோம் என்று உணவு வாங்கச் செல்ல திரும்பினான்.
“ஏலே ராசு நில்லுவே.. உடம்பு நல்லா இருக்கனும்னா சத்தான ஆகாரமா என்னடே சாப்பிடுறது?” என்று கேட்க…
இவனுங்கள் எல்லாம் உயிருள்ள பூச்சிகளை மட்டுமே விட்டுவைத்து மற்றதை திங்கும் ரகம்!! இவனிடம் வந்து கேட்டால்? என்ன சொல்வான்? போட்டான் பாரு பட்டியலை ராசு!!
“அண்ணே… மீனில் ஒமேகா இருக்காம்!!”
“அது யாருடே ஓமேகா.. புதுசா இருக்கா? புது நடிகையோ?” என்றான் ஈசா.
“அது மீனுல இருக்கும் சத்து ணே.. இந்த நியூட்ரிஷியன் டாக்டர் எல்லாம் சொல்லுவாஇ இல்ல.. அது!!”
“அந்த கருமமா? நமக்கெல்லாம் எங்கடே நேரம் இருக்கு அந்த கருமத்தை எல்லாம் படிக்க!!” என்றவாறு இடது கையால் பிடரியை நீவி கொண்டான்.
“கோழியில பிராய்லர் கோழி ஆகவே ஆகாது ணே!! நாட்டுக்கோழி தேன் நல்லது அதுவும் சூடான உடம்பை குளிர்ச்சியாக்கும்!!”
“சரி அடுத்து…”
“அடுத்து தேன் ரொம்ப முக்கியம் ணே… நல்ல இளசான குறும்பாடு. அதோட தலையை கறி மூளை நம்ம தலைக்கு நல்லது ணே!!” என்றான் ராசு.
“யாரு… நம்ம தல அஜித்துக்கா?” என்றான் நக்கலாக ஈசன்.
“அய்யய்யோ… சாப்பிடுறவங்க தலைக்கு ணே!!” என்றான் அவசரமாக..
“அதோடு ணே.. ஈரல் நம்ம ஈரலுக்கு நல்லது. ரத்த பொரியல் செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்தம் விருத்தியாகும். நல்லி எல்லாம் போட்டு சூப் வைச்சுக் குடித்தால் நம்ம எலும்புகளுக்கு நல்ல வலு சேர்க்கும்” என்று பாண்டி விலாஸ் கடையில் வேலைக்கு சேர்ந்தவன் போலவே அனைத்தையும் இவன் கடகடவென்று சொல்லிக்கொண்டே போனான். எங்கே கேப் விட்டால் இடையில் ஏதாவது பேசி விடுவானோ என்று பயந்து..
“சரி டே.. அப்ப என்ன செய்ற இந்த பொண்ணுக்கு ரத்தம் நிறைய போய் இருக்கு. அதனால ரத்த பொரியல் கை வேற அடிபட்டு இருக்கு கொஞ்சம் கறியில மிளகு தூக்கலா போட்டு சுக்கா வாங்கிக்க.. அப்புறம்தான் மீனுல பொரிச்சது குழம்பில் போட்டுதுனு தனியா… இந்த நாட்டுக்கோழி இருக்குல்ல அதுல சூப்பும் அதுல க்ரேவியும்…” என்று அவனும் ஒரு பெரிய லிஸ்ட் சொல்லி, “இது எல்லாம் அரை மணிநேரத்திலேயே வாங்கிட்டு வர! சரியா லே?” என்றான்.
“சரிதான் ணே.. ஆனா இதெல்லாம்..” என்று கேட்க..
“போய் வாங்கிட்டு வாடே..” அவன் மிரட்டவும் ஓடிய விட்டான் ராசு.
மெல்ல கண் விழித்தாள் தஷா. உடம்பெல்லாம் ஏதோ ராட்சசன் அடித்துப் போட்டது மாதிரி வலி… மெல்ல கையை உயர்த்தி சோம்பல் எடுக்க முயற்சி செய்தாள். வலது கையைத் தூக்க பெரும் கணமாய் கனத்தது. அதோடு கூடிய சுருக்கென்று வழி வேறு.. என்ன ஆனது கைக்கு? என்று மெதுவாக கையை தூக்கி பார்க்க பெரும் கட்டு போடப்பட்டிருந்தது. அப்போதுதான் காலையில் நடந்த நிகழ்வுகள் ஒன்றொன்றாய் அவள் மனதில் படமாய் ஓட.. ‘இப்ப நாம எங்க இருக்கோம்?’ என்று வழக்கமாக மயக்கத்தில் இருந்தவர்கள் எழும் போது கேட்கும் அதே கேள்வியை கேட்டவாறு பார்த்தவள், அதிர்ந்து வலது கையை ஊன்ற முடியாமல் தன் இடது கையால் ஊன்றி எழுந்து அமர்ந்தே விட்டாள்.
முதலில் தன் உடைகளை பார்க்க அப்பாடி என்று பெரும் நிம்மதி!! அவள் இருந்த இடத்தை பார்க்க… அவளுக்கு பிடிக்காத ஒவ்வாத வாசனை அவளது அகராதியில் துர்நாற்றம் வீச.. மெல்ல இடது ஆள்காட்டி விரலால் மூக்கைத் தேய்த்து கொண்டே பார்க்க.. அவள் படுத்து இருந்த திவான் முன்னே இருந்த டேபிளில் பறப்பன ஊர்வன அனைத்தும் கடை பரப்பி வைக்கப்பட்டிருந்தது.
அவையெல்லாம் உயிரோடு இருக்கும்போது மட்டுமே இவள் பார்த்திருக்கிறாள். மற்றபடி இப்படி ஆவியை விட்டு ஆவியாகி கொதித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் பார்த்ததே கிடையாது. எங்கேனும் வழியில் பார்த்தால் கூட மூக்கையும் கண்ணையும் மூடிக்கொள்ளும் பெண்ணின் முன் தலை வாழை இலை பெரிதாக வைத்து வரிசையாக அனைத்தையும் சீர்வரிசை போல அடுக்கி வைத்து இருக்க… அவ்வளவுதான் அரண்டு போய் விட்டாள் இன்னும் அழுத்தமாக மூக்கை பிடித்துக் கொண்டு..
இது கூட சிறு அதிர்ச்சி தான் பெண்ணுக்கு!! ஆனால் அதைவிட
பெரிய அதிர்ச்சி எதிரே அமர்ந்து இருந்தது.
“சாப்பிடு புள்ள போன ரத்தமெல்லாம் உடம்புல ஊறனும் இல்ல.. புடிச்சது கூச்சப்படாம அள்ளி எடுத்து விளாசுல!!” என்று அந்த தலை வாழை இலையின் அடுத்த பக்கம் அமர்ந்து சிரிப்போடு பேசியவனை கண்டவனுக்கு மாயாபஜார் கடோத்கஜன் அமர்ந்து சாப்பிடுவது ஞாபகம் வர மீண்டும் மயங்கினாள்.
அருகில் இருந்த ஜக்கில் இருந்து தண்ணீர் எடுத்து அவன் முகத்தில் தெளித்தான். “இன்னிக்கு வரது எல்லாம் மயக்கம் போட்டு என் உயிர வாங்குதுக.. தாமிரபரணி ஆத்து தண்ணீரே தீர்ந்து போயிடும் போல!” என்று ஆத்திரத்தோடு புலம்பினான்.
கண்ணை மூடிக்கொண்டு எழும் கோபத்தை அடக்கி மீண்டும் அவளை எழுப்ப வேண்டி குனிந்த தருணம் ராசு வந்து நிற்க…
“என்னடே…??” என்று மொத்த கோபத்தையும் அவன் மீது காட்டினான்.
“அண்ணே… அது வந்து அம்மா” என்று இழுக்க, அவனை உருத்து முறைத்தான். ஏன் அம்மாவுக்கும் சொன்னாய் என்று கேள்வி அதில்..
“இல்லண்ணே!!! நான் எதுவும் சொல்லல அம்மாதேன் கேட்டாக.. சாமி சத்தியமா ணே!” என்ற தன் தலையில் கைவைத்து கூறியவன் “அம்மாவா தான் போன் பண்ணாங்க நான் எடுத்து பேச கூட இல்ல. கூடவே இராவுத்தர் ஐயாவும்…” என்கவும் ஈசா என்று தன் இடது கையால் பிடரியை தேய்த்துக் கொண்டான்.
‘அவங்களுக்கு எப்படி அதுக்குள்ள நியூஸ் போச்சு?’ என்று யோசிக்கும் முன் “எவனோ உங்கள போட்டோ எடுத்து டிரெண்ட் ஆகி இருக்கான் அண்ணே” என்று அந்த போட்டோவையும் அதோடு வந்த மீம்ஸையும் ராசு காட்ட இன்னும் வெறி ஏறியது அவனுக்கு.
“இதுவரைக்கும் இது வைரலானது போதும்ல. இனி ஒரு மீம்ஸ் ஒரு கூட இந்த போட்டோ வச்சு வரக்கூடாது. புரிஞ்சுதாம்ல!!” என்று கரஜித்தவன் வெளியே செல்ல திரும்ப, திரும்பி வந்து தசாவை பார்த்தான். ஏற்கனவே அந்த பெண் மருத்துவர் இவளை மருத்துவமனையில் சேர்த்து தையல் போட சொல்லி இருக்க, திரும்பவும் அவளை அள்ளியவன் “கார்…!!” என்று அழுத்தமான வார்த்தைகளில் ஓடிச்சென்று காரை எடுத்தான் ராசு.
பின்பக்கம் தசாவை கிடத்தி அவன் ராசுவை ஒருமுறை முறைக்கு “அண்ணே… நானும் ப்ளீஸ்..” என்றவனை கண்டுகொள்ளாமல் இவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொள்ள வண்டி வேகம் எடுத்தது, மறுபக்கம் ஓடிவந்து ஓடும் காரில் தொற்றிக் கொண்டான் ராசு.
ஒரு பிரபல மருத்துவமனையில் நிறுத்தியவன் அங்குள்ள ஆட்களை கொண்டே ஸ்ட்ரக்சரின் உதவியோடு அனுமதித்தான. பின் ராசுவிடம் “இந்த பொண்ணு விழித்தவுடன் டீடைல்ஸ் கேட்டு அவங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணு” என்றவனின் பேச்சும் தோரணையும் இப்பொழுது முழுதாக மாறி இருந்தது.
அவனை ஈரத்த பெண் தான்!! கொஞ்சமாகச் சலனப்படுத்திய பெண் தான்!! ஆனாலும் அவனுள் ஏதோ ஒரு தயக்கம்.. இப்போது உள்ள சூழ்நிலையா இல்லை அந்தப் பெண்ணின் வாழ்வு முறையா? ஏதோ ஒன்று இனம்புரியாத தவிப்பு அதனை தவிர்க்க அவளை தவிர்த்தான்.
அடுத்து நேராக கார் சென்றது அவர்களது வீட்டுக்கு.. இல்லை இல்லை இப்போது அவனது பெற்றோர்களின் வீடு!!
திருநெல்வேலி எம்எல்ஏ ஆத்மநாதனின் வீடு!!
வீடு என்பதை விட மாளிகை என்று சொன்னால் பொருந்தும். இரண்டு அடுக்கும் மேலே பெரும் மொட்டை மாடியுமாய் அக்கால கட்டக்கலைக்கு சான்றாய்.. இக்கால லக்ஷரி சௌகரியங்கள் அனைத்தையும் தனதாய் கொண்டு கம்பீரமாய் நின்றது அம்மாளிகை!!
பொதுவாக அவ்வீட்டை ‘நெல்லையார் கொட்டாரம்’ என்பர். 
நெல்லையார் என்ற அடைமொழி ஆத்மநாதனை கொண்டு அல்ல.. அவரது மாமனார் சிவஞான ஆதித்தனாரை கொண்டு!!
அந்த நெல்லையார் பட்டத்தைப் பெற தலையால் தண்ணிதான் குடிக்கிறார் ஆத்மநாதன். எங்கே… ம்ஹூம்!! ஆனாலும் நெல்லைக்காரர்களின் பாசம் தனிதான். ஆசையோடு அன்போடு ‘அண்ணாச்சி!’ என்ற அவர்களின் விளிப்பே தனிதான்!!
கதர் வேட்டி சட்டைகளும்.. கரை வேட்டி சட்டைகளும்.. ஜீன்ஸ் பேண்ட்களுமாய் ஆண்களின் கூட்டம் ஒருபக்கம் என்றால்.. அதற்கு இணையாக இல்லை என்றாலும் குறைந்தபட்சமாக பெண்களின் கூட்டம் ஒரு பக்கம்!! இன்று ஆத்மநாதன் எம்எல்ஏ அவர்கள் குடிசை மாற்று வாரியத்திற்காக கட்டப்பட்ட வீடுகளை திறப்பதற்காக செல்கிறார். அதற்குத்தான் தங்கள் அண்ணாச்சியை பத்திரமாக அழைத்துச் செல்ல காலையிலேயே அவரின் பக்தர்கள் கூட்டமும் காசு கொடுத்து வந்த நேசர்களின் கூட்டமும் அவரது வீட்டு மாளிகையை முற்றுகையிட்டு காத்துக்கொண்டிருந்தது. 
உள்ளே நுழையும் போதே வாசலுக்கு வந்து எதிர் கொண்டார் அவனது அன்னை உமையாள்!! மகனைப் பற்றி அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தாலும் கண்கள் நிறைய பார்த்தால் அல்லவா பெற்றோர் மனது நிறையும்?
பல வாரங்கள் சென்று மகனின் வருகை!! அதுவும் வீட்டுக்குள்ளே பரவசத்தில் அன்னை!!
“ஈசா..!!” என்று அழைத்துக் கொண்டு அவனை அனைத்து கண்ணீர்விட…
“ம்ப்ச்.. சும்மா இந்த மாதிரி கண்ணல டேம் தொறந்து விடாதீக.. தாமிரபரணி ஆத்திலே தண்ணி கொஞ்சமாத்தான் இருக்காம். அப்புறம் உங்கள கொண்டு போய் உட்கார வச்சுட்டு போறானுவ.. உங்க நம்ம ஊரு அரசியல்வாதிங்க செம வில்லங்கம் புடிச்சவியங்க” என்று அவன் இரு பொருளில் கூற அவனது புஜத்தில் குத்தினார் அன்னை விளையாட்டாக…
“இரு இரு உங்க அப்பா வரட்டும் சொல்றேன்!!” என்று!!
அந்த அப்பா என்ற வார்த்தையில் அவனது முகம் சுருங்க, “பழசெல்லாம் நினைக்காதே கண்ணு… அம்மாவுக்கு கஷ்டமாக இருக்குல” என்றார் கலங்கிய குரலில் அன்னை.
“சரி.. சரி.. ஒன்னும் பேசல வாங்க” என்று அன்னையை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவனை நேராக டைனிங் டேபிளில் தான் அமர்த்தினார் உமையாள். அது மகன் வருகிறான் என்று தெரிந்தவுடன் அவனுக்கு பிடித்த உணவுகளை பரிமாற ரசித்து சுவைத்து உண்டவன் “என்னதான் சொல்லு உமையா… உன் கை பக்குவத்துக்கு தனி ருசிதாம்ல” என்று அன்னையின் வலது கையைப் பிடித்து முத்தம் கொடுத்தவன் “வைர காப்பே போடலாம்” என்று மீண்டும் உணவை உள்ளே தள்ளினான்.
“என்ன அந்த குண்டன் மட்டும் தனியா உன்னோட சாப்பாடு திங்குறானு கொஞ்சம் பொறாமையா இருக்குலே” என்றான் அண்ணனை பற்றி…
“புள்ளைய கண்ணு வைக்காதடா” என்று பெரிய மகனுக்கு சப்போர்ட் வாங்கினார்.
“அது சரி!!” என்றவன் மீண்டும் ஆட்டுகாலுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தான்.
“அப்பப்போ வந்து அம்மாவை பார்த்து விட்டு போனா என்ன தங்கம்? அம்மா தனியா தானே இருக்கேன். இப்படி ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தீகனா நான் என்ன பண்றது சொல்லு லே? உங்க அப்பாரும் கட்சி ஆபீஸினு இப்படியே சுத்துற ஆளு.. நீங்களும் ஆளுக்கு ஒரு பக்கமா போயிட்டீக.. அம்மாவ நினைச்சு பார்க்க மாட்டீங்களா?” என்று அவன் அருகே அமர்ந்து தாடையை பற்றி தன் பக்கம் மகனை திருப்பி கெஞ்சலாக கேட்ட அன்னையை பார்த்ததும் மனமுருகி போனது மகனுக்கு. ஆனால் அதை வெளியே காட்டிக் கொண்டால் அவன் ஈசாவே இல்லையே?
அவனும் வேண்டுமென்றா அன்னையை தவிக்க விட்டு சென்றான். அவன் தந்தை கூறிய வார்த்தைகளின் அப்படி!! அதன் தாக்கம் இன்னமும் அவன் மனதை நெருடுகிறது. வலிக்கிறது!! இப்போதுகூட தந்தையை ஒருத்தன் தவறாக பேசினான் என்றுதான் அடி வெளுத்து விட்டு வந்திருந்தான். 
“ஆமா… அது என்ன தனியானு சொல்றீக? அதேன உங்க மூத்த புள்ள குண்டன் இருப்பானே?” என்று மீண்டும் அண்ணனை வம்பு வழக்க…
“அவங்க எங்க இருக்கான் இங்க.. அவன் ட்ரெய்னிங் போயிருக்கான்ம்ல” என்றார் மூக்கை உறிஞ்சியபடி..
“என்ன ட்ரைனிங்?” என்று கைகளை கழுவி வந்தவன் அன்னையின் முந்தானையை துடைத்தபடியே கேட்டான்.
“ஏதோ எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணினான். அதுக்கு ட்ரெய்னிங் கூப்பிட்டு இருக்காங்கன்னு டெல்லிக்கு போய் இருக்கான். போய் 15 நாளாவது!!” என்றார் பெருமூச்சு விட்டபடி…
“என்ன அதிசயம்?? பெரிய பிள்ளைய கைக்குள்ளேயே வைத்திருப்பாரே எம்எல்ஏ!! இப்ப எப்படி திடீர்னு விட்டாரு?” என்று சந்தேகத்தோடு கேட்க..
“அவர் எங்கு விட்டார்!! இவன்தான் அடிச்சு புடிச்சு ஏதேதோ சொல்லி போனோன்” என்றார்.
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டே இருக்கும்போது வாயிலில் மீண்டும் சலசலவென்று சத்தம் கேட்க “எம்எல்ஏ வந்துட்டார்!!” என்றான் நக்கலாக… “சும்மா இருடே!!” என்று மகன் அன்னை இருவரும் டைனிங் ஹாலில் இருந்து ஹாலுக்கு வந்தனர்.
உள்ளே நுழைந்தவர் கட்சி ஆட்களுடன் ஏதோ பேசிவிட்டு அடுத்த கட்டு ஹாலுக்கு வந்தார். ஹாலுக்குள் எந்த கட்சிக்காரர்களும் அவ்வளவு எளிதாக வரமாட்டார்கள். அதற்கு வெளியே உள்ள தாழ்வாரம் மிகப்பெரிதாக இருக்கும். அங்கேயே பெரும்பாலும் இருந்து விடுவார்கள். முக்கியமான வெகு சிலரே ஏதும் பேச வேண்டுமென்றால் அவரது அலுவலக அறைக்கு தான் செல்வார்கள். ராவுத்தர் மட்டுமே வீட்டுக்குள் வர அனுமதி.
வீட்டுக்குள் வந்தவர் இரண்டாவது மகனை கண்களா ஸ்கேன் செய்தபடியே நேராக டைனிங் ஹாலுக்கு சென்றார். “எம்எல்ஏ சாப்பிட வந்திருக்கிறாரு உமையா.. அதிசயமா வீட்டுக்கு?” என்று இவன் அன்னையின் காதில் கிசுகிசுத்தான்.
உமையாளுக்கும் பரிமாற அதே ஆச்சரியம் தான் அவரது முகத்திலும்..
“எப்படியும் உன் புள்ள வந்திருப்பான். அவனுக்கு பிடிச்சு தான் ஸ்பெஷலா செஞ்சப்ப.. அப்படியே நெல்லுக்கு பாய்கிறது புல்லுக்கும் பாயட்டுமே தான் சாப்பிட வந்தேன்” என்றார் சிரிப்போடு..
“ஏன் உங்களுக்குனு ஸ்பெஷலா எதுவும் செய்ததில்லையா?” என்று மனைவி கோபித்துக் கொள்ள..
“என்ன இருந்தாலும் மகன்னா ஸ்பெஷல் தானே.. புருசனை விட!!” என்றவாறு சாப்பாட்டை முடித்தார்.
“ஆமா.. உன் புள்ள காலைலேயே பண்ணி வச்சிருக்கிற பிரச்சினையை பார்த்தியா? ஏற்கனவே இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு.. இவன் வேற ஏன் இந்த சண்டித்தனம் எல்லாம் பண்றான்? பெரிய சண்டியருனு ஏதும் நினைப்பா அவனுக்கு மனசுல!” என்று கோபப்பட்டார்.
*அவன் என்ன வேணும்னா செஞ்சான்? உங்களை எவனோ சல்லிபய தப்பா பேசுனான். இவன் போய் லேசா ரெண்டு தட்டு தட்டி விட்டு வந்து இருக்கான்” என்றார் மகனுக்கு வக்காலத்து வாங்கிய படி…
“அது சரி.. லேசா இரண்டு தட்டு!!
அவனை இப்போ ஆஸ்பத்திரில சேர்த்திருக்கானுவோ உடம்பில் பாதி எலும்பு முடிஞ்சிருக்காம்.
அதானே புள்ளைங்க எல்லாம் விட்டு கொடுக்க மாட்டியே நீ!! ஆனாலும் கொஞ்சம் பெருமையா தான் இருக்கு அப்பனுக்கு ஒன்று இருந்தால் பிள்ளைகள் பாய்ந்து வருவது” என்று சிரித்தவர் மீசையை நீவி கொண்டே கைகளை கழுவி வந்தவர், உமையாள முந்தானையில் கை துடைக்க, ‘வெளியில தான் அப்பாவும் பிள்ளையும் உரசுகிறது உள்ளுக்குள்ள பாரு… ஒரு மாதிரி!!” என்று மனதுக்குள் நொடித்துக் கொண்டார்.
“ராவுத்தரே… அவன ஆஃபீஸ் ரூமுக்கு வரச் சொல்லுக!” என்றவாறு இவர் வீட்டின் உள்ளே இருந்த வழியாக ஆபீஸ் அறைக்குச் செல்ல இவனும் அவரை பின் தொடர்ந்து சென்றான்.
ஜார்ஜ் அடித்ததை பற்றி கேட்பார் என்று இவன் என்ன சொல்லலாம் என்று மனதுக்குள் வார்த்தைகளை கட்டமைத்துக் கொண்டிருக்க.. ஆத்மநாதன் கேட்டதோ “யார் அந்த பொண்ணு? எதுக்கு அந்த பொண்ணு எல்லாம் குஸ்தி நடக்குற இடத்துக்கு தூக்கிட்டு போனாராம்? இரும்படிக்கும் இடத்தில் பூக்கு என்ன வேலை?” என்று கேட்டதில் அதிர்ந்துதான் போனான் ஈசா என்ன சொல்லி சமாளிப்பது என்று!!
ஏலே… வருவோம்ல… 
5
மையல் கொண்டேன் மாதீரா…
ஜியா ஜானவி ❤️
காலையில் மகள்களையும் கணவரையும் கல்லூரிக்கும் வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டையும் சற்று ஒதுக்கி வைத்து அப்பாடா என்று டிகிரி காஃபியை குடித்தபடி டிவியில் லயித்திருந்தார் சந்திரமதி. இடையிடையே சீரியல் நாயகிக்காக கண்ணீர் விட்டு.. அவர் பொருட்டு மற்றவர்களுக்கு சாபங்கள் விட்டு.. அந்நாயகி சிரிக்கும்போது சிரித்து.. அழுதும் அழுது.. வீராவேசமாக வசனங்கள் பேசும்போது இவரும் வீறுகொண்டு எழுந்து என்று தன்னை மறந்து அதில் ஒன்றி விட்டார்.
அந்நேரம் பார்த்து கரண்ட் போக “அட ஷண்டாளா!! இப்போவா கரண்ட் போகனும். நிம்மதியா ஒரு‌ சீரயல் பார்க்க விடுறானா.. பாவி!! என்று திட்டி தீர்த்தவர் சட்டென்று தனது போனை எடுத்து அதில் மீதி சீரியலை பார்க்க ஆரம்பித்தார்.
“டீவில் மட்டுமா விளம்பரம்? போனில் பார்த்தாலும் விளம்பரம்தான்!! போடுற ஒரு அரை மணிநேர சீராயலுக்கு 15 நிமிஷம் விளம்பரமே போயிடும் போல.. பெருமாளே!!” என்று புலம்பிக்கொண்டே பார்த்தவருக்கு இடையில் திருநெல்வேலி ட்ரெண்டிங் நியூஸ் என்று வர… 
“திருநெல்வேலியில் அப்படி என்ன ட்ரெண்டிக் நியூஸ்? வெறும் வெட்டும் சண்டையுமா தான் காட்டுவான்!” அதனை ஸ்கிப் செய்ய முயல, முடியாமல் அவரது கை பட்டு திறக்க அங்கே நெடுநெடுவென வளர்ந்து ஆஜானுபாகுவான ஒருத்தன் அதுவும் வெற்று உடம்போடு ஒரு பெண்ணை தோளில் தூக்கிக்கொண்டு போவது போல இருந்தது.
“இதெல்லாம் இவாளுக்கு ட்ரெண்ட்!! ரீல் வீடியோனு கண்ட கருமாத்தையும் போடுறது. லோகம் எதை நோக்கி போறது பெருமாளே!!” என்று திட்டியபடி அடுத்ததுக்கு சென்றவரின் கண்கள் அந்தப் பெண்ணின் புடவை எங்கையோ பார்த்த ஞாபகத்துக்கு வர, சட்டென்று மீண்டும் அதை எடுத்துப் பார்த்தால், அந்தப் புடவை அவரது மூத்த மகள் காலையில் கட்டி சென்ற அதே புடவை தான்!!
“இத பார்க்குறச்ச நேக்கு காத்தலா தஷா கட்டின புடவையாட்டம்னா இருக்கு??” இன்னும் சற்று உற்றுப் பார்க்க ஆமா அதே தான்!! கூடவே உடலமைப்பும் அந்த கால் கொலுசும் நீண்ட பின்னலும் முகம் தெரியாவிடினும் அவரது மகள் என்று கட்டியம் கூற… “தஷா….!!!” என்று கத்தியவரின் கையிலிருந்த டவரா உருண்டு ஓடியது காபியோடு…
தலையெல்லாம் சுற்ற கண்கள் இருட்ட அப்படியே மயங்கி விட்டார் உட்கார்ந்தபடியே.. எங்கையோ போன் அடிக்கும் சத்தம் கேட்டது வெகு நேரமாக… மெல்ல கடினப்பட்டு கண்களை பிரித்த சந்திரமதியின் காதில் சத்தம் விழ,
அப்போது தான் அவர் பார்த்த போட்டோ ஞாபகம் வர, “தஷா…!” என்று கத்தியப்படி வேகமாக எழுந்து போனை அட்டென்ட் செய்தார்.
போனில் சொன்ன செய்திக் கேட்டு வேகமாக அலறி புடைத்து… போகும் வழியில் கணவருக்கு போன் செய்து, விஷயத்தை சொல்லி, மருத்துவமனையை அடைந்தார் சந்திரமதி.
அதற்குள் சந்திரசேகரனும் என்னவோ ஏதோவொன்று பதறி வந்திருந்தார். சந்திரமதி என்ன நடந்தது என்று முழுதாக அவரிடம் சொல்லவில்லை ஏன் அவருக்கு முழுதாக என்ன நடந்தது என்று தெரியவில்லை.
“உங்கள் மகள் தர்ஷா இங்கே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் கையில் காயத்துடன்.. உறைந்து மருத்துவமனை வாருங்கள்!!” என்றவுடன் போட்டது போட்டபடி அழுது புலம்பி கிளம்பி விட்டார்.
“அந்த ஷண்டாளன்… அரக்கன்… என் பொண்ண தூக்கிட்டு போனானே… என்ன செய்தானோ தெரியலையே? பெருமாளே!! அடிபட்டு இருக்குனு ஃபோன் பண்ணி சொன்னாளே. என்ன பண்ண தெரியலையே? வெறும் அடி மட்டும்தானா அதற்குமேல்….” என்று நினைக்கவே பயமாக இருந்தது அவருக்கு. இந்த ஊருக்கு வரவே அப்படி பயந்தவர், இப்பொழுது பெண்ணுக்கு இப்படி ஒரு நிலை என்றதும் நிலைகுலைந்து விட்டார். உள்ளுக்குள் அவ்வளவு நடுக்கம்!! எவ்வளவு கேள்விப்படுகிறார் அல்லவா அதெல்லாம் எதுவும் நிகழ்ந்திருக்க கூடாது என்று
போகிற வழியில் அத்தனை பிராத்தனை கண்ணில் கண்ட கோவில் எல்லாம். மத வேறுபாடு இன்றி பெண்ணுக்காக வேண்டிக் கொண்டே சென்றார்.
அந்த பக்கம் சந்திரசேகரனும் வெளியில் திடமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் மருகிக் கொண்டே வந்து கொண்டிருந்தார்.
பத்து மாதம் சுமந்து பெற்கவில்லை என்றாலும் இருபத்தி ரெண்டு வருடங்களாக தோளில் சுமந்தவர் அல்லவா?
மருத்துவமனை வாயிலேயே கணவனுக்காக காத்திருந்தார். உள்ளே போக அவரது கால்கள் வரவே இல்லை. அவ்வளவு நடுக்கத்தோடு நின்றிருந்தார், சந்திரமதி வாயிலைப் பார்த்தபடி…
சந்திரசேகரன் வண்டி மருத்துவமனை வளாகத்தில் நுழைந்ததும் வயதையும் மறந்து ஓடியே சென்றார்.
“னா… னா… நம்ம பொண்ணு… என்ன.. என்னன்மோ சொல்றா. நேக்கு.. நேக்கு படபடவென வர்றது னா” என்று ஸ்பி கொண்டே பேசி அவரை தோளோடு அணைத்து உள்ள பேய் விவரமாக கேட்கலாம் என்று அழைத்து சென்றார்.
இருவரும் னனதும் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டே இருந்தது. அவர்களது பெண்ணை கண்களால் பார்க்கும் வரை…
பத்து மாதம் சுமந்து பெற்று… பாராட்டி சீராட்டி வளர்த்து.. தளிர் நடை போடும் போது மகிழ்ந்து.. கண்ணக்குழி சிரித்தால் தாங்களும் சிரித்து.. பாவாடை கட்டும் வயதில் அகமகிழ்ந்து… பெண் தாவணி அணியும் தருணத்தில் கொஞ்சம் பெருமையுடன் பார்த்து… கண்ணுக்கு அழகாக அதுவும் நல்ல அறிவோடு குணத்தோடு பெண் பிள்ளைகள் வளர்ந்து நிற்கும் எந்த பெற்றோருக்கும் உள்ளே கர்வத்தோடு கூடிய பயம் இருக்கத்தான் செய்யும்!! இப்பெண்ணை நல்லபடியாக ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுக்க வேண்டுமே என்று!!
அதற்குள்ளே தான்…. 
எத்தனை எத்தனை இடர்பாடுகள்!!
எத்தனை எத்தனை துன்பங்கள்!!
எத்தனை எத்தனை தடைகள்!! 
எத்தனை எத்தனை பேச்சுக்கள்!!
எத்தனை எத்தனை இராவணன்கள்!!
எத்தனை எத்தனை பிள்ளை சதைதின்கும் ராட்சதர்கள்!!
எத்தனை எத்தனை காதல் பெயரில் கற்பை சூறையாடும் காமுகர்கள்!!
எத்தனை எத்தனை அன்பை ஆயுதமாக்கி ஆடையை பறிக்கும்
அரக்கர்கள்!!
இவையெல்லாவற்றையும் தாண்டி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்தால் அங்கேயும் உறவுகள் என்ற பெயரில் அத்தனையும் அரிதாரம் பூசிய அழுக்கு முகங்கள்!!
அங்கே இங்கே சில விதிவிலக்குகள் மட்டுமே!!
பிறந்தது முதல் இவ்வளவு துன்பங்களையும் தாண்டி வரும் பெண்கள் கொஞ்சம் காலம் சிறகு விரித்து பறப்பது அவர்கள் தாய் வீட்டில் இருக்கும் திருமணத்துக்கு முந்தைய காலம் தான்!!
கணவனும் மனைவியும் தம் இணைகளின் கைகளை அழுத்தமாக பற்றிக்கொண்டு ஐசியு அறையின் வெளியில் அமர்ந்து இருந்தனர் மருத்துவரை பார்க்க… ஏற்கனவே தையல் போட்டு மருந்தெல்லாம் கொடுத்ததுதான் அவளை ஐசியூவில் வைத்திருந்தார்கள். இடையில் அவள் கண்விழித்தபோது அவள பற்றிய விவரங்களை அறிந்து மருத்துவமனை மூலம் தகவல் கொடுத்திருந்தனர்.
இப்போது மருத்துவர் என்ன சொல்வரோ, ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்குமா? பெருமாளே அப்படியெல்லாம் எதுவும் இருக்கக் கூடாது என்று பலத்த வேண்டுதலோடும் பயத்தோடும் அன்னையும் தந்தையும் காத்திருக்க… “டோன்ட் ஒரி கைல கொஞ்சம் வெட்டுக்காயம் மட்டும்தான். மத்தபடி ஷீ இஸ் ஆல்ரைட்!! ஃபுல் பாடி செக்கப் பண்ணியாச்சு. எந்த ப்ராப்ளமும் இல்லை. ஒரு த்ரீ டேஸ் இங்க இருந்துட்டு நீங்க டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். அப்புறம் ஒரு டென் கழிச்சு வந்தா போதும். பாத்துக்கோங்க…” என்றுவிட்டு மருத்துவர் சென்றுவிட்டார்.
அங்கே நின்ற செவிலியரை பார்த்து “சிஸ்டர் எங்க பொண்ண ஒரு தரம் பார்த்துட்டு வந்துடலாமா.. ப்ளீஸ்!!” என்று கேட்க, “ஒவ்வொருத்தரா போய் பார்த்துட்டு வாங்க மா. ரொம்ப நேரம் நிக்காதீங்க. இன்ஃபக்ஷன் ஆகிடும்” என்றவள், அங்கே சற்று தள்ளி அமர்ந்து இருந்த ராசுவைக் காட்டி “அவர் தான் உங்க பொண்ணை கொண்டு வந்து அட்மிட் செய்தது” என்றாள்.
முதலில் பெண்ணை பார்த்துவிட்டு வருவோம் என்று உள்ளே நுழைந்த சந்திரமதி தனியாக அக்கோலத்தில் மகளை காண தைரியமில்லை. கதவை வரை வேகமாக சென்றவர், கணவனை திரும்பிப் பார்த்த பார்வையின் பொருளை உணர்ந்த சந்திரசேகரனும், செவிலியர் அந்தப்பக்கம் சென்றதும் மனைவியோடு சேர்ந்து மகளை சென்று பார்த்தார்.
காலையில் புத்தம் புது மலராய் வேலைக்கு கிளம்பிய மகளின் முகமோ பிடிங்கி போட்டு கொடியாய் வதங்கி இருந்தது.
“எப்படி இருக்கா பாருங்கோ னா.. நம்ம பொண்ணு” என்று வெடித்துக் கிளம்பிய அழுகையை வாயை பொத்தி அடக்கிக் கொண்டார் சந்திரமதி.
“சந்திரா அழுகாத.. அழுகாத டி! இந்த மட்டில் தப்பித்தாளேனு சந்தோசப்படு! வேறு ஏதும் பெருசா ஆகாம இருந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லுவோம்” என்றார்.
“இதுக்கு மேல ஆகு என்ன இருக்குன்னா?” என்று கண்ணை துடைத்துக்கொண்டு கேட்டவரிடம் “எத்தனையோ கொடுமைகள் எல்லாம் இருக்கு டி! அந்த மட்டுல்ல தப்பிச்சாளே நம்ம தஷானு சந்தோசப்படனும். வா வெளியில் போய் உட்காரலாம்” என்று அழைத்து வந்தார்.
வந்த உடனேயே இருவருக்கும் சூடாக டீ கொண்டு வந்து ராசு கொடுக்க.. அவனை பார்த்தவுடன் எழுந்த இருவரும் கைக்கூப்பி “நாங்க தான் சார் முதல்ல உங்களுக்கு நன்றி சொல்லணும்” என்று ஆரம்பித்த சந்திரசேகரனை “பரவால்ல சார் முதல் டீயை குடிங்க.. ரெண்டு பேருமே ரொம்ப களைத்துப் போய் இருக்கீக” என்றான்.
டீ குடித்து முடித்தவுடன் சந்திரமதி தன் எஃப்எம் வாயை ஆரம்பித்துவிட்டார். “நல்லா இருப்பானா அந்த ஷண்டாளன்? நாசமா போக!! எப்படி இருந்த என் பொண்ணை இப்படி ஆகிவிட்டானே அவன் கை கால் விளங்காமல் போக… போகும்போது குப்பை லாரியில் அடிபட்டு போக… ட்ரான்ஸ்மரம் அவன் மண்டையில் விழ.. விழுந்து இடத்திலேயே அவனும் போக…” இப்படி சாபங்களை அவர் வாரி இறைத்துக் கொண்டிருக்க, ராசுவுக்கு யாரை சொல்கிறார் என்று புரியாமல் முழித்தவன் “மாமி யாரை சொல்றீங்க?” என்று கேட்டான் மெதுவாக..
“வேற யாரு? அந்த கிராதகன் படு பாதகன் என் பொண்ணை வெட்டினதும் இல்லாம தூக்கிட்டு வேற போனானே படுபாவி அவனுக்கு தான் சொல்றேன்” என்றதும் திக்கென்றது ராசுவுக்கு.
‘அட!!! இவங்க நம்ம அண்ணன் இல்ல சொல்றாங்க? இவ்வளவு நேரம் நாமளும் மண்டைய ஆட்டிக்கிட்டு இத கேட்டு இருந்தோமே? எவ்வளவு திமிர் இருக்கும் எங்க அண்ணனை பேச?’ என்று கோபத்தில் கொதித்தான்.
திரும்பவும் அவரது எப்எம் ஸ்டார்ட் பண்ணும் முன், “மாமி செத்த நிறுத்துறேளா?” என்று அவன் குரலை உயர்த்தியதும் மலங்க மலங்க விழித்தபடி ராசுவை பார்த்தார்.
“இவ்வளவு நேரம் நீங்க பேசிட்டு இருந்தது யார் தெரியுமால? திருநெல்வேலி எம்எல்ஏ ஆத்மநாதன் அண்ணாச்சியோட பையன்.. எங்க அண்ணன் குஸ்தி சாம்பியன்… இந்த நெல்லையின் மன்னன் பிரகதீரேஸ்வரனை பத்தி!!”
அவன் கூற ஆரம்பித்ததுமே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்னமோ எங்க அண்ணே தேடி போய் உங்க பொண்ணு இருக்கிற இடத்துல அவங்க கைய புடிச்சி வெட்டுனது போல பேசுறீங்க? அவரு எங்க ஐயாவ பேசுன் அந்த நாதாரி ஜார்ஜ்க்கு சம்பவம் பண்ணிட்டு இருந்த இடத்துல உங்க பொண்ணு ஏங்க குறுக்க போச்சு? அப்படியே குறுக்கு போய் அடி பட்டு விழுந்ததும் விட்டுட்டு வந்தாரா எங்க அண்ணே? கையில் ரத்தம் பார்த்த்தும் பாவப்பட்டு இரத்தம் போகக்கூடாதுன்னு தன் சட்டையை கழட்டி கையில் கட்டு போட்டு தூக்கிட்டு வந்து வைத்தியம் பார்த்தா… இதுவும் சொல்லுவீங்க இதுக்கு மேலயும் சொல்லுவீங்க? போதாக்குறைக்கு என்னையும் காவலுக்கு வைச்சிட்டு போயிருக்கார். இது எவ்வளவு பெரிய ஹாஸ்பிடல் தெரியுமா? இந்த ஹாஸ்பிடல்ல உங்க பொண்ணுக்கு ஆன மொத்த செலவு அவர்தான் ஏத்துட்டு இருக்கார். அப்படிப்பட்டவர எங்க கலியுக கர்ணன.. தப்புத் தப்பா பேசுறீங்க!! இனி ஒரு தரம் பேசுனீங்க?” என்று சடசடவென்று பொரிந்தவன் வேகமாக கிளம்பி செல்லலாம் இல்லை அவர்களுக்கு எதிரே அமர்ந்து கொண்டான். கைகளை இறுக்கக் கட்டிக் கொண்டு!!
பின்னே அவன் அண்ணனின் வாக்கு.. அவனுக்கு வேத வாக்கு அல்லவா? தஷா டிஸ்சார்ஜ் ஆகும் அந்த மூன்று நாட்களும் அவன் அங்கே தான் இருந்தான்.
கோதை மாலை போல வந்து பார்க்க உடனே அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார் சந்திரமதி. ஒரு நாள் மட்டுமே ஐசியூவில் இருந்தாள் தஷா. மறுநாள் சாதாரண வார்டுக்கு அவளை மாற்றிவிட.. இரண்டு நாட்களில் வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்து விட்டனர்.
மூன்று நாளும் மகளிடம் கூட சாதாரணமாக பேசவில்லை சந்திரமதி. ஏதேனும் ரூமுக்குள்ளேயே கண்காணிப்பு கேமரா வைத்திருப்பார்களோ என்ற பயத்தோடு இருந்தார். மகளாக எது கேட்டாலும் கூட வீட்டுக்கு போய் பேசிக்கலாம் என்று அடக்கி விட்டார் சந்திரமதி.
இவர்கள் டிஸ்சார்ஜ் செல்லும் பொழுது பணம் கட்டண ரசீது முதல் அனைத்தையும் அவர்கள் கையில் வைத்த ராசு ஒரு கூடை ஆப்பிளையும் வாங்கி அவர்கள் காரில் வைத்து விட்டு வந்தான்.
சந்திரமுகி தான் பொசபொசவென்று கோபம் பொங்கியது. இவர்களாக பில் கட்ட சென்றாலும் அங்கே முதல் ஆளாக நிற்பான் தெரியாமல் சந்திரசேகரன் கட்ட சென்றாலும் ஏற்கனவே கட்டியாகி விட்டது என்பார்கள். ஒத்த ரூபாய் செலவு கூட அவர்களுக்கு வைக்கவில்லை. மூவருக்கும் அன்ன ஆகாரம் அனைத்தும் அவர்களது அறைக்கே வந்தது. அனைத்தையும் பின்னிருந்து ஆட்டி வைத்தான் ஈசா!! ஆனால் அவளை கவனித்துக் கொண்டுதாான்இருந்தான். தன்னால் வீணாக அவளுக்கு பிரச்சனைகள் வரக் கூடாது என்று தள்ளியே இருந்தான். ஆனால் தள்ளி வைக்கவில்லை அவளை மனதிலிருந்து….
ராசுவின் செயல்களில் கோபம் கொண்டாலும், அவர்கள் பெரிய இடம் வீணாக வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் என்று அமைதி காத்துக் கொண்டார் சந்திரமதி. அதே தான் சந்திரசேகரனும்… இதே மற்ற விஷயமாக இருந்தால் நீதி.. நேர்மை.. கடமை.. கண்ணியம் என்று போர்க்கொடி உயர்த்தி இருப்பார். இது அவருடைய பெண்ணைப் பற்றியது. இவர்களோடு மோதினால் எங்கே பெண்ணின் வாழ்க்கையில் பிரச்சனை வந்துவிடுமோ என்று அமைதி காத்து விட்டார்.
சதா சந்திரமதி ஏதோ யோசனையிலேயே உழன்று கொண்டிருந்தார். அன்று கட்டு பிரித்து வந்த அயர்வில் தூங்கிக் கொண்டிருந்தாள் தாட்சாயணி!!
மகள் தூங்குவதை உறுதி செய்து கொண்டு மனைவியை பார்த்து “என்ன சந்திரா ஒரே யோசனையில் இருக்க?” என்று கேட்க..
“சீக்கிரம் நம் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் னா!” என்றதும் அவரும் அமைதியாக கேட்டுக் கொண்டார்.
துஷ்டனைக் கண்டால் தூர ஒதுங்கு என்று இவர்கள் ஒதுங்கி இருந்தனர்.
அப்படி எல்லாம் விட்டு விடுவோம் என்று வந்து இறங்கினார் சிங்காரம்!
சிங்காரம் அதே தொகுதியில் இரண்டு முறை ஆத்மநாதனல எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த எதிர்கட்சியௌ சேர்ந்தவர்.
அதுவும் வெட்டப்பட்ட அந்த ஜார்ஜுக்கு இவளை பெண் கேட்டு!!
அரசியல் சதிராட்டத்தில் பகடிக்காயா தாட்சாயணி??
ஜார்ஜ்கும் சிங்காரத்துக்கும் என்ன சம்பந்தம்?
இதில் ஏன் தஷா உருட்டப்படுகிறாள்?
ஏலே… வருவோம்ல…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *