மையல் கொண்டேன் மாதீரா
20
மையல் கொண்டேன் மாதீரா பாகம்2!!
ஜியா ஜானவி ❤️
ஈசன் சிங்கப்பூரில் இருந்து வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. அன்று இரவு இரு மகன்களுக்கும் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த உமையாள், “தடி தடியா இரண்டு தடியன்கள வச்சி என்ன பிரயோஜனம்லே.. பாரு வயசான காலத்துல நான் உங்களுக்கு பரிமாற வேண்டியதாயிருக்கு!!” என்றதும் விசுக்கென்று நிமிர்ந்தான் பிரபஞ்சன், ‘என் பெண்டாட்டிய ஆடிக்கு அனுப்பி வைத்துவிட்டு பேச்சை பாரு.. தாய்கிழவி!!’ என்று கண்களால் குற்றம் சாட்டினான்.
“ஏம்லே ஈசா… பொண்டாட்டி பிரிஞ்சு இருக்கிற நானே இவ்வளவு வருத்தப்படல.. நீயி என்னடே நெல்லையே தாமிரபரணி ஆத்துல முழுகுன மாதிரி இவ்வளவு சோகமா கப்பல் விட்டுகிட்டு இருக்க?” என வம்பிழுத்தான் சாப்பிட்டபடி….
அண்ணனை நிமிர்ந்து பார்த்து ஈசனின் கண்களில் என்ன உள்ளது? அந்த பாவனை அவனுக்கு புரியவில்லை. “என்னலே??” என்று இவன் அக்கறையாக கேட்க.. அவனோ “பொண்டாட்டியை பிரிந்து இருக்கிறனே எல்லாம் சொல்லாதடே நீ!! அம்மா இருக்காங்கன்னு பார்க்கிறேன்.. இல்ல வாயில நல்லா வந்துரும்!!” என்றபடி அவன் எழுந்து செல்ல.. செல்லும் தம்பியை பார்த்துக் கொண்டே இருந்தான் பிரபஞ்சம் சாப்பிடாமல்..
“ஏன் டே… உன்ன வழக்கம் போல கிண்டல் பண்ணிட்டு போறான் அவேன். நீ சாப்பிடு!!” என்று உமையாள் சொல்ல… இல்லை என்ற தலை ஆட்டியவன் “அவேன் பேச்சை மாத்திட்டு போறான் அவன் முகமே சரியில்லை.. இந்த சிங்கப்பூரில் என்ன நடந்ததுனு தெரியல?” என்று தனக்குத்தானே சொன்னானா? இல்லை அன்னைக்கு சொன்னானா? சாப்பிட்டு முடித்தவன் ஈசனை காணச் செல்ல அவனோ அங்க உறங்கிவிட.. சற்று நேரம் தம்பி அறையின் வாசலில் நின்றவன் பிறகு வந்து விட்டான்.
அவன் சென்றதும் மெல்ல விழிகளை திறந்து பார்த்த ஈசன் ஒரு பெருமூச்சு விட்டபடி புரண்டு படுத்தான்.
“கோதம்மா…. நாளைக்கு லீவ்.. நாம விளையாடுவோம் வா!!” என்று அழைக்கும் மகளை அசதியோடு பார்த்தாள் கோதை!! பிரபஞ்சன் மானஸாவிடம் “நான் அப்பா னா.. கோதை உனக்கு அம்மாலே.. சோ.. அம்மானு கூப்பிடு!” என்று அவன் வசதிக்கு ஈசனை நினைத்து கூறி இருக்க.. மானஸாவோ அவள் வசதிக்கு கோதம்மா என்று மாற்றி இருந்தாள்.
இரண்டு நாள் முன்பு தான் நெல்லையார் கொட்டாரத்திற்கு வந்திருந்தார்கள் கோதையும் மானஸாவும்.. ஆடியை இடையில் ஆஃப் செய்து கிட்டதிட்ட கடத்தி வந்திருந்தான் பிரபஞ்சன் தன் மனையாட்டியை!!
சந்திரமதியும் சந்தோஷமாகவே அனுப்பி வைத்தார். வேற வழி மாப்பிள்ளை பற்றி அறிந்து அதற்கு தக்க நடந்துக் கொண்டார்.
கல்லூரி முடித்து வந்திருந்தவளுக்கு அப்படியொரு அசதி!! தூங்கி எழுந்தால் தேவலாம் என்றிருக்க.. மகளோ விளையாட அழைத்தாள்!!
மகளின் முகம் சோர்வுறுவதை கண்டவள், அவளை வாரி அள்ளி கொஞ்சி… “ஓகே வா!!” என்றாள்.
இரண்டு பேரும் இருபது நிமிடம் யோசித்து.. கடைசியாக அது வேண்டாம் இது வேண்டாம் என்று சண்டையிட்டு ஒரு வழியாக கண்ணாமூச்சி விளையாடலாம் ஒரு மனதாக முடிவு எடுத்தனர்.
அதன்படி முதலில் கோதை சென்று ஒளித்துக்கொள்ள, அவள் புடவை முந்தானை வைத்து சீக்கிரம் கண்டுபிடித்து விட்டாள் மானஸா..
“இந்த விடுத்தான் கூட என்ன கண்டுபிடிச்சிட்டாளே!!” என்று நொந்தவாறு இவள் கண் மூடிக்கொள்ள இம்முறை மானஸா சென்று ஒளிந்து கொண்டாள்
“மானு… மானு… எங்க இருக்க? பட்டுனா நீ.. அம்மாவ அலைய வைக்காதடி ராஜாத்தி!! எங்க இருக்க பாப்பா.. தங்கம் சொல்லு?” என்று விதவதிமாக அழைத்துக் கொண்டே மானஸாவை தேடினாள்.
அவளோ கபோர்டுக்கும் அருகில் இருந்த மோடாவுக்கும் இடையில் இருந்த இடத்தில் ஒளிந்திருந்தாள்.
“எங்க போனா இவ? ரூம்ல காணுமே?” என்று யோசித்துக்கொண்டே பால்கனியில் நின்று வெளியில் தோட்டத்தில் இருக்கிறாளா என்று பார்த்தவளின் இடை வேகமாக இழுக்கப்பட்டு திறந்த மார்போடு நச்சென்று மோதி நின்றது.
வேறு யார் அவளின் மணவாளன் அல்லாது??
அதிர்ந்து விழி விரித்தவளின் தலையை சாய்த்து வெண் சங்கு கழுத்தை கவ்வி முத்தமிட்டான் பிரபஞ்சன்.
“என்னை தவிர வேற யாருலே வரப்போறா? இப்படி பதறுறவ?” என்று கடிந்துக் கொண்டே கடித்து வைத்தான் அவள் கழுத்தில்!!
“அச்சோ… விடுங்கோன்னா…” என்றவளின் வார்த்தைகள் எல்லாம்
அவன் காதிலே வாங்கவில்லை. வாகாக வஞ்சியவளை வளைத்து
கொஞ்சிடவே பார்த்தான்.
அவள் கழுத்து வியர்வையின் வாசத்தை முகர்ந்தவன், அதன் ஈரத்தையும் சுவைத்துப் பார்த்தான். மீண்டும் மீண்டும் அவள் கழுத்தில் அழுத்தி அழுத்தி முத்தமிட்டான். தன் நுனி நாக்கை நீட்டி அவள் கழுத்தில் ரங்கோலி கோலமிட.. அவளோ உணர்ச்சிப்பெருக்கில் அவன் கேசத்திற்குள் விரல்களைவிட்டு நெறித்தாள்.
“சில்கு… செம ஷாப்ட் டி!!” அவள் கழுத்தில் மெல்ல கடித்து சுவைத்தான் பழத்துண்டுகள் போல..
அவளோ சிலிர்த்து சிணுங்கி அவனின் கழுத்தை இறுக்கினாள். மெல்ல மெல்ல அவனது கடித்தலும் முத்தமிடுதலும் சுவைத்தலும் நிற்காமல் சென்றுகொண்டே இருந்தது, அவள் கழுத்தில் இருந்து மெல்ல மெல்ல முகத்தை நோக்கி.. அவளின் விரல்களோ அவனது கழுத்திலிருந்து முதுகில் நங்கூரம் இட்டது நகக்கண்கள் அழுந்த பதிய..
“உன்னோட ஒடம்புலருந்து வர்ர ஸ்மெல் ரொம்ப இனிமையா இருக்குடி சில்கு.. உன்னை மாதிரி… ” என்றவாறு. . அவள் கழுத்தருகே முகம் வைத்து அவளது பிரத்யேக வாசணையை நுகர்ந்தான்.
அவள் கழுத்தில் பட்ட அவனது மூச்சுக் காற்றின் வெப்பம்.. அவள் பெண்மையை கிறக்கியது. நடுங்கும் தன் உதடுகளை வாய்க்குள் இழுத்து கவ்வியபடி.. நாணத்தில் கண்களை மூடினாள் கோதை!!
உடனே அவளின் மூடிய கண்களில் முத்தமிட்டான், அவள் கண் இமைகள் துடித்து அடங்கின. அவளின் கண்கள் மட்டுமல்ல கனிந்த கன்னங்கள், சிவந்த மூக்கு.. துடிக்கும் உதடெல்லாம் முத்தமிட்டான்.
“டியூட்டில இருந்து வந்துட்டு இன்னும் குளிக்க கூட இல்லை.. என்கிட்ட வந்து கொஞ்சல் என்ன வேண்டி கிடக்கு? போங்கோ.. போங்கோ… குளிச்சிட்டு வாங்கோ!!” என்று அவனை நகர்த்தினாள்.
“நீயும் இன்னும் ரெப்ஃரெஷ் பண்ணல இல்ல.. வா என்னோட.. இரண்டு பேரும் சேர்ந்து பண்ணுவோம்” என்று அவளை அள்ளிக் கொள்ள முயல.. அவனிடம் இருந்து துள்ளி விலகியவள், “நானே ரொம்ப டயர்டா இருக்கேன்னா.. இன்னைக்கு என்னன்னு தெரியல ஒரே அசதியா இருக்கு.. தலையெல்லாம் ஒரு மாதிரி சுத்துற மாதிரி இருக்கு.. நீங்களும் என்னை போட்டு படுத்தாதீங்க னா..” என்றாள் அருகில் இருந்து டேபிளில் சோர்வாக சாய்ந்து படி..
“சோர்வா இருக்காம்லே கோத..??”
“ஆமா னா!!”
“தலையெல்லாம் ரொம்ப பாரமா சுத்துற மாதிரி இருக்கா கோத??”
“அட!! ஆமா னா…!!”
“இந்த வாமிட் சென்சேஷன்லாம் இருக்கா?” என்று கேட்க.. அவளோ சற்று யோசித்தவள், “லேசா கொமட்டுற போல இருக்கு மத்தபடி ஒன்னும் இல்லனா!!” என்றாள் இன்னும் கண்களை மூடியப்படி!!
சட்டென்று அவளை இறுக்கி தூக்கிக் கொள்ள.. அளோ அதிர்ந்து இரு கைகளால் அவனது தோளை இறுக்கமாக பற்றிக்கொண்டு “என்னாச்சு னா.. இப்படி திடீர்னு என்னை தூக்கி பயமுறுத்துறேள்??” என்றாள் அதிர்வோடு!!
“நான் அப்பாவாகிட்டேன் டி கோத!! அந்த சந்தோஷத்தில் திக்கு முக்காடி போய் இருக்கேன்!!” என்று கத்தியவன், “நான் அப்பா!! பிரபஞ்சன் அப்பா ஆகிட்டான்!!” என்று இன்னும் சந்தோசமாக சத்தத்தை உயர்த்தி கத்த.. அவளோ சட்டென்று அவனது உள்ளங்கையில் வாயை மூடி “கத்தாதேள்!! என்னைய கீழ இறக்கி விடுங்கோ.. நான் விவரமா சொல்றேன்” என்றாள்.
“அதெல்லாம் இல்ல.. உன்னை இனி நடக்க விடமாட்டேன். முதல்ல நாம போய் டாக்டர் செக் பண்ணிட்டு வருவோம்”
“முதல்ல இறக்கி விடுங்கோ னா!!” என்றாள் உத்தரவிட்டபடி..
மெல்ல அவன் இறக்கிவிட *டாக்டர் எல்லாம் ஒன்னும் போக வேண்டாம்!!”
“அப்போ உனக்கே தெரியுமா? டெஸ்ட் பண்ணிட்டியா? ஆனாலும் டாக்டரை பார்க்க தான் வேணும்!!” என்று ஆர்வம் தாங்காமல் ஆசை ஆசையாக கேட்டான் பிரபஞ்சன்!!
“அது எனக்கு தெரியும் னா!!”
“ஏய் சில்கு… சொல்லவே இல்ல பார்த்தியா!! என்னடா எட்டு மாசம் ஆயிடுச்சு ஒன்னும் வரலையேனு யோசிச்சேன். பிரச்சனையோனு நான் கூட யோசிச்சிட்டு இருந்தேன் பாரேன்.. ஒரு குட்டி பிரபஞ்சன் உதயமாகிட்டான்!!” என்று தந்தையாக போகிறோம் என்று ஆனந்தத்தில் அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருந்தான் பிரபஞ்சன்.
கோதைக்கோ தவிப்பாக இருந்தது. இவ்ளோ நாட்களாக இருவரும் குழந்தையை பற்றி எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. ஆனால் இன்று குழந்தை என்று தெரியும் முன்னமே இவ்வளவு பரவசத்தோடு இருக்கிறவனுக்கு எப்படி இல்லை என்று சொல்ல முடியும் ? என்று வெகுவாக கலங்கினாள். அதுவும் தான் செய்த காரியத்தை கூறினால் என்ன சொல்வானோ என்று பயத்தோடு அவள் நின்றிருக்க சட்டென்று அவள் கையை பிடித்து இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
“தேங்க்ஸ் டா!! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்… மனசுக்குள்ள ரொம்ப நாளா ஒரு சின்ன வலி. என்னதான் உமையாள்மா என்னை பெத்த புள்ள போல பார்த்தாலும்.. நெல்லையார் தாத்தா என்னை சொந்த பேரனாக பார்த்தாலும்.. இவங்க என் சொந்தம் இல்லைனு மனசு ஏங்கும். நீ நான் நம்ம குழந்தை அதுதான் நம்ம குடும்பம் நினைக்கவே ஜிவ்வுன்னு இருக்கு!! அதுக்காக ஈசனையும் மானஸாவையும் அப்படியே தள்ளி வைக்கிறதா நினைப்பு இல்ல.. ஆனா.. இது என்னோட குடும்பம் எனக்குன்னு இருக்குங்குற ஒரு மன நிறைவு!!” என்றதும் இன்னும் தவித்து போனாள் கோதை!!
“நாம் சொல்லாமல் போனால்.. இன்னும் ஏதேதோ கற்பனையில் மிதந்து, மகிழ்ச்சியில் திளைத்து, வானத்தில் பறந்து, அவை ஒன்றும் இல்லை என்று நிலை வந்தால்… அவனது அடி பலமாக இருக்குமே!!’ என்று பிரபஞ்சனுக்காக கலங்கினாள் கோதை.
“இங்க பாருங்க னா… எனக்கு நல்லா தெரியும் இது குழந்தைக்கான சிம்டம்ஸ் இல்ல.. ஜஸ்ட் ஏதோ டயர்டா இருக்கேன். அதுதான்!!” என்றதும்..
“இல்ல கோத.. நான் கூட கவனிச்சேன் இன்னும் உனக்கு நாள் வரல தானே?” என்றதும், ‘அடப்பாவி!! இவன் என்ன இவ்வளவு தூரம் என்னை கவனித்திருக்கிறான்?’ என்று ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பெருமையாக இருந்தது கணவனின் இந்த கவனிப்பு. எத்தனை கணவன்களுக்கு தெரியும் மனைவிமார்களின் மாதவிலக்கு பிரச்சனையும்.. அதனால் அவர்களுக்கு உண்டாகும் வலியும்.. மனவேதனையும்.. எரிச்சலும்.. எல்லாம்!! ஆகா.. என் கணவன் கணவானே என்று பெருமிதம் வழிந்தது கோதைக்கு!!
‘ஆனால் நாம் செய்திருப்பது தெரிந்தால்…??’ என்று சற்று நடுக்கம் கூட.. அவளோ “பாருங்கோ னா.. என்ன கொஞ்சம் முழுசா பேச விடுங்கோ!! இது குழந்தை இல்லைன்னா” என்றாள் அவள் தெளிவாக.. முடிவாக!!
“ஏன் கோத.. நாம் அப்படி நெகட்டிவா எடுத்துக்கணும்! குழந்தையாகவே இருக்கலாம் இல்லையா?” என்றான் கொஞ்சம் தவிப்போடு..
“இல்லை னா!! எனக்கு தெரியும் இது கண்டிப்பா குழந்தை இல்லை.. இல்லை!!” என்றாள் சற்று கோபத்தோடு..
“ஏன் இப்படி கோபப்படுற? நமக்கு தெரியாம கூட இருக்கலாம் இல்லையா? நாம் எதுக்கும் போய் ஒரு தடவை டாக்டரை கன்சல்ட் பண்ணிட்டு வருவோம்!!” என்றான் விடாப்பிடியாக..
“எல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் தான் சொல்றேன் இல்லையா… எதுக்கு இல்லைன்னு சொன்னா.. ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறேள்?? எனக்கு தெரியாதா? ஒரு பெண்ணுக்கு தான் சூல் கொண்டிருக்கோமா இல்லை என்கிறது கண்டிப்பா தெரியும் னா!! நான் உறுதியா சொல்றேன் இது குழந்தை இல்லை.. வேறு ஏதோ ஒரு சோர்வு அவ்வளவுதான்!!” என்றாள் அழுத்தமாக!!
‘ஏன் இவ்வளவு வருத்தமாக கோபமாக படபடப்பாக இருக்கிறாள்?’ என்று யோசித்தவன் அனைத்தையும் கைவிட்டு தனது ஆறு அடிக்கும் ஆக நிமிர்ந்து கைகட்டி நின்றவன் “சொல்.. குழந்தை இல்லைனு எப்படி அவ்வளவு தெளிவாக சொல்லுற?”
பதட்டத்தில் இருந்தவள் அவன் பேச்சின் பேதம் அறியாமல், “ஆமா தெரியும் தான்.. இது குழந்தை இல்லை!!” என்றாள்.
“பின்ன எப்படி உனக்கு தெரியும்?” என்றதும்.. அவள் உதட்டை இறக்கி நின்றாள்.
“கோதை நாயகி!!” என்று பல்லைக் கடித்து அவன் உறும..
“நான் மாத்திரை.. மாத்திரை எடுத்துக்கிட்டு இருக்கேன். அதனால.. அதனால.. குழந்தை தரிக்க வர வாய்ப்பில்லை!!” என்று திக்கி திணறி கூறி விட்டாள். மனைவியை வலி மிக பார்த்தவன் தள்ளாட்டமாக நகர்ந்து கட்டிலில் வேதனையோடு இரு கைகளால் தலையை இறுக்க பிடித்துக் கொண்டான்.
‘ஏன் இப்படி செய்தாள்? நான் அவளுக்கு நல்ல கணவனாக தானே இருந்தேன்!! கூடலில் கூட வன்மையை காட்டாமல் காதலனாகத்தானே இருந்தேன். ஏன் இப்படி? என் குழந்தையை பெத்துக்க அவளுக்கு விருப்பம் இல்லையா? ஏன்? ஏன்? ஒரு வேலை மானஸாவுக்காக…’ என்று கொஞ்சம் சரியான பாதையில் திரும்பியது அவனது புத்தி. ஆனால் அப்போதும் அவள் மீது கோபம் கொண்டது!! அவ்வளவு சொல்லி இருக்கேன் திரும்பவும் இப்படி யோசிக்கிறாளே என்று அவளை உக்கிரத்தோடு பார்த்தான்.
“அப்படியெல்லாம் பாக்காதீங்க னா… நான் உங்க.. உங்க மேல.. சந்தேகப்பட்டுண்டோ.. நம்பிக்கை இல்லாமலோ.. இப்படி எல்லாம் பண்ணலனா!! அன்னைக்கு நீங்க சொன்னேள்ளே.. நானும் அதை திரும்பி சொல்லுறேன்.. உங்களை நேக்கு தெரியாதா? இது.. இது.. அத்திம்பேரோட லைஃப் இப்படி இருக்குறச்ச… நாம மட்டும் குழந்தை குட்டி இருக்க.. என்னால முடியலனா.. அட்லீஸ்ட் அவருக்கு குணமாகுற வரையாவது கொஞ்சம் தள்ளி போடலாம்னு தான்!! உங்களாண்ட சொன்னா நீங்க என்ன சொல்வேளோன்னு ஒரு பயம் நேக்கு!! அதுதான் நானே முடிவெடுத்து…” என்று அவள் பேச பேச ஏறெடுத்து பார்த்தவன் ஒன்றும் கூறாமல் விடு விடுவென்று அவர்கள் அறையை விட்டு வெளியே சென்றான்.
கோபமாக இருந்தவன் அவர்களது அறையிலிருந்து சற்று தள்ளி இருக்கும் அவனது உடற்பயிற்சிக்கு சென்று வேக வேகமாக, அவன் ட்ரெட்மிலில் ஓட.. இவளோ அவன் பின்னால் ஓடி வந்து “ஏன்னா நான் சொல்றது உங்களுக்கு புரியலையா?” என்று கண்ணீர் விட்டாள்.
முதலில் கோபமாக இருந்தாலும் பின் அவனுக்கு புரிந்தது. அவள் தனக்காகவும் பார்த்து தான் தள்ளியும் இருக்க முடியாமல் இம்மாதிரி மாத்திரை எடுத்துக் கொள்கிறாள் என்று!! இதனால் அவளுக்கு எத்தனை உடம்பு உபாதைகள்.. பின் விளைவுகள் வரும்.. என்று புரிந்து கொண்டவன், சற்று நேரம் தனிமையில் இருக்க விரும்பிய இந்த உடற்பயிற்சி அறைக்கு வந்தான்.
விடாமல் துரத்தும் அவளை என்னதான் செய்வது? வேகமாக த்ரெட்மில்லில் இருந்து குதித்து “என்னடி செய் சொல்லுற? ஆமா நான் கோவமா தான் இருக்கேன்!! ரொம்ப ரொம்ப கோவமா இருக்கேன்!! கோபத்தை குறை…” என்று அவன் கைகட்டி நின்றான்.
‘எதே… கோபத்தை குறைக்கிறதா? அதிகப்படி குறைக்க? அதுக்கு ஏதாவது மிஷின் ஏதாவது இருக்கா என்ன?’ என்று அவள் தீவிரமாக யோசிக்க.. அவளின் முக பாவைனையில் சிரிப்பை மீசைக்கு அடியில் அடக்கியவன்..
“அது உனக்கு தாம்லே தெரியணும் கோத!!* என்று அவளை இழுத்து தன் அருகில் நிற்க வைத்தான் வெகு அருகில்…
அப்போதுதான் கவனித்தாள், அவன் சட்டையோ பனியனோ அணியவில்லை. வெற்று மார்புடனே இருந்தான். சுருள் ரோமங்கள் அடர்ந்த அவனின் திரண்டு விரிந்த மார்பில் அவள் விழிகள் லயித்து மீண்டன.
அவளின் சூடான உள்ளங்கையை அவனின் நெஞ்சில் அழுந்தப் பதித்து மெதுவாக தேக்கு மர தேகத்தை தடவ… கிறங்கினான் பிரபஞ்சன்!!
அவன் மார்பிலிருந்த அவள் கைகள் அவனின் தேகம்தனை விரல்கள் கொண்டு அதன் வலிமையை சோதிக்க.. அவனது உடலில் உஷ்ணம் எக்கு தப்பாக ஏறியது. அதில் கீழ் உதடு மடித்து பற்களால் கடித்து தலையை பின்னால் சாய்த்து கொண்டான் கோமகன்!!
சூடாக தேய்த்தப்படி மேலே கொண்டுச் சென்ற அவளது தளிர் விரல்கள் அவன் பின் கழுத்தில் முற்றுகை இட்டு நின்றது. அதில் தேகம் சிலிர்த்தது ஆணவனுக்கு!!
”சில்கு!! கொல்றடி!!” கிறங்கினான் தலைவன்.
ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் உணர்ச்சிகளை பொங்க வைக்கும் இடங்களில் பின்னங்கழுத்து அதி முக்கியம்!! அதுவும் வெறும் விரல்கள் கொண்டே அவனின் தாபத்தை ஏற்றிக் கொண்டிருந்தாள்!!
ஆணவனின் திறந்துக் கிடந்த வெற்று நெஞ்சில் இதழ் பதித்தாள் வஞ்சி!
அந்த சுக உணர்வு கொடுத்த மயக்கத்தில் கிறங்கினான் பிரபஞ்சன்!!
சில நிமிடங்கள்.. பொறுமையாகவும் நிதானமாகவும் மென்மையாகவும் அவனின் நுண்ணிய மார்பு நரம்புகளை முறுக்கேறச் செய்தாள்!!
பேச்சு மூச்சற்றுப் போனான் பிரபஞ்சன்!! பெண்ணவளின் புதிய பரிமாணத்தில்…
தன் நெஞ்சை பதம் பார்த்துக் கொண்டிருந்த அவள் கையை இழுத்து, தன்னோடு நெருக்கி இன்னொரு கையை அவள் முதுகில் போட்டு வளைத்து அணைத்தபடி அவளின் சிவந்த உதடுகளை முத்தமிட்டு மெல்லக் கவர்ந்தான். அவளோ சற்று முரண்டு பிடிக்க..
மெல்ல அவள் கீழ் உதட்டை கவ்வி இழுத்தான். அவள் உதடுகள் பிரிய.. பின் சுலபமாக அவன் வசம் சென்றது அவளது சிவந்த இதழ்கள்!! அவனகன் முரட்டு உதடுகள்.. மெல்லிய சிவந்த அவள் அதரங்களை உறிஞ்சி சுவைத்தன. பெண்மையின் பலமான உணர்ச்சி தாக்குதலை எதிர்க்க முடியாமல் கண்கள் இரண்டையும் இறுக்கி மூடினாள் கோதைநாயகி !!
மெல்ல… மெல்ல… அவளைத் தன்வசமாக்கினான். அவள் முகத்தை தனது உதட்டு எச்சிலால் முத்தமிட்டு நிறைத்தான். அவள் கழுத்தில் முத்தமிட்டு சிலிர்க்க வைத்தான்.பின் அவள் வெண்ணிற பிறை நிலவில் மாறி.. மாறி முத்தம் கொடுத்தான்.
இவர்கள் இருவரும் இங்கே உடற்பயிற்சி அறையில் தங்களுக்குள் சல்லாபித்துக் கொண்டிருக்க மானஸாவை மறந்தனர்.
பள்ளியில் இருந்து வந்து ரொம்ப நேரம் ஆகிறதே.. பேத்திக்கு ஏதாவது குடிக்க கொடுப்போம் என்று அவளை தேடி வந்த உமையாள் கோதை ரூமில் மயங்கி கடந்த பேத்தியை பார்த்து “மானு…?!” என்று அலற..
அந்த சத்தத்தில் காதல் கிளிகளாய் கொஞ்சி குலாவி கெண்டிருந்த இருவரும் வேகமாக விலகி பிரபஞ்சன் அறையை நோக்கி ஓடினர்.
மயங்கி கிடந்த பேத்தி மடியில் போட்டு அலறிக் கொண்டிருந்தார் உமையாள். அவருக்கு என்ன செய்வது? ஏது செய்வது? என்று புரியவில்லை. வேகமாக ,முன்னால் இந்த பிரபஞ்சன் அவள் நிலைமை பார்த்து அவசரமாக நெஞ்சில் கை வைத்து அழுத்தி செயற்கை சுவாசம் மூட்ட.. அதற்குள் கோதை சங்கரை ஃபோனில் பிடித்து, உடனடியாக காரை எடுக்க சொன்னாள். அதுவும் சைரன் சைத்த எம்எல்ஏ காரில் அவசரமாக மானஸாவை அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மானஸாவை முழுவதுமாக பரிசோதித்த இதய மருத்துவர் ஜான் அம்பேத்கர், அவ்வளவு கோபமாக பிரபஞ்சனிடம் கத்தினார். “உங்களிடம் ஏற்கனவே சொல்லி இருக்கேன் தானே.. அவளுக்கு மயக்கம் வர மாதிரி விட்டுறாதீங்கனு!! எப்படி.. எப்படி இப்படி கேர்லஸா இருந்தீங்க? முதலில் அவ பிளட் குரூப் வேற வெரி வெரி ரேர்!! உடனடியா ஆப்ரேஷனும் செய்ய முடியாது. நீங்க எல்லாம் படிச்சு ஆளு வேற??” என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே விஷயம் கேள்விப்பட்டு அரக்க பறக்க ஓடி வந்தான் ஈசன்!!
ஈசனைப் பார்த்த ஜான் ஆபிரகாம் எம்எல்ஏ என்றும் பாராது அவனையும் ஒரு வாங்கு வாங்கிவிட்டு சென்றான். இன்னும் வெளியில் யாருக்கும் ஈசனின் நிலை தெரியாததால், பிரபஞ்சன் அமைதியாகவே கேட்டுக் கொண்டிருந்தான்.
பிரபஞ்சனையும் ஈசனையும் திட்டி விட்டு மீண்டும் மானஸா அனுமதிக்கப்பட்டிருந்த ஐசியூ அறைக்குள் திரும்பிய ஜான் அம்பேத்கரை பார்த்த ஈசன், “ஜான்.. நீ ஆபரேஷனுக்கு ரெடி பண்ணு பிளட் கிடைத்திடும்!!” என்று ஈசனை ஜான் சந்தோசமாக பார்த்தான் என்றால் பிரபஞ்சன் அதிர்ச்சியோடு பார்த்தான்.
‘அப்படி என்றால்.. அப்படி என்றால்… பழசு ஞாபகம் எல்லாம் இவனுக்கு வந்து விட்டதா?’ என்று தம்பியின் கண்களை பார்த்து கண்டறிய முனைய. அதுவோ வெறுமையையும் வலியையும் வருத்தத்தையும் குரோதத்தையும் ஒருங்கே கொண்டு வெறித்துக் கொண்டிருந்தது ஐசியூ கதவை!!
“டேய்…. யாராவது இருக்கீங்களா? ப்ளீஸ்… என்னை விடுங்க… விடுங்க டா!!” என்று நெல்லையை தாண்டி வெகு தொலை தூரத்தில் பூட்டிய வீட்டுக்குள் இருந்து கேட்ட ரதியின் அலறல்… இங்கே ஒருவருக்கும் கேட்கவில்லை!!
அந்தோ.. பாவம்!!
வருவோம்ல…
