மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

This entry is part 34 of 41 in the series மையல் கொண்டேன் மாதீரா

மையல் கொண்டேன் மாதீரா

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

18

மையல் கொண்டேன் மாதீரா பாகம்2…

ஜியா ஜானவி ❤️

ஈசன் சிங்கப்பூர் செல்கிறேன் என்று சொன்னவுடன் யாருமே முதலில் அவனை செல்ல அனுமதிக்கவில்லை. ஆனாலும் ஒரு முறை செக்கப் செய்துவிட்டு வருகிறேன் என்று அவன் அழுத்தமாக சொல்ல.. அதை சில நிபந்தனைகளோடு ஆதரித்த பிரபஞ்சன் ராசுவையும் சங்கரையும் துணைக்கு அனுப்பினான். ஆரோன் சற்று முரட்டுத்தனமானவன், சட்டென்று கோபப்படுவான் என்பதை அறிந்தவன், இம்முறை சங்கரிடம் “போன முறை உங்க சின்ன நெல்லையார் எதுக்கு சிங்கப்பூர் போனார்னு எனக்கு தெரியும்லே!! எதனால அவனுக்கு ஆக்சிடென்ட் ஆச்சுன்னு எனக்கு தெரியும்லே!!” என்றதும் அதிர்ந்து அவனைப் பார்த்தான் சங்கர். கூடவே ராசுவும் தப்பு செய்தவன் போல முகத்தை தொங்க போட்டுக் கொண்டே நின்றான்.

“இந்த முறை அவனுக்கு ஞாபகம் இல்லைன்னாலும் எந்தவித அசம்பாவிதமும் நடக்கக்கூடாது!! முக்கியமா அந்த பொண்ண பார்க்க இவன் போனா கூடவே நீங்களும் இருக்கணும்… இரண்டு வார்த்தை பேசின உடனே கையோட கூட்டிட்டு வந்துடனும்!! ஒரு வாரத்துக்கு மேல அங்க தங்கவே கூடாது!! அப்புறம் டெஸ்ட் எதுவும் எடுக்கிறோம்.. தங்க சொன்னார்கள்னு எல்லாம் சொல் கூடாது!! அதெல்லாம் சென்னையில் பார்த்துக்கொள்ளலாம்… இங்கேயும் அதே போல அட்வான்ஸ்டு ஃபெசிலிட்டி உள்ள ஹாஸ்பிடல் இருக்கு!! புரிஞ்சுதா?” என்று கிட்டத்தட்ட மிரட்டியை அனுப்பி வைத்திருந்தான் இருவரையும் ஈசனுக்கு காவலாய்?!

ஒரு பக்கம் பிரபஞ்சனின் மிரட்டல்… இன்னொரு பக்கம் ரதியை பற்றி உண்மை தெரிந்ததாலும்‌ ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கோபம்… கூடவே ஈசனுக்கு அனைத்தும் மறைந்து போயிருக்க அந்த வருத்தம்… எல்லாம் ஆனால் ஒருவித கவலையில் ஆழ்த்தியது அவர்கள் இருவரையும்!!

மூவரும் சிங்கப்பூர் வந்து சேர… நட்சத்திர அந்தஸ்து உள்ள ஒரு ஹோட்டலில் மூவருக்கும் இரண்டு அறைகளை ஏற்கனவே பிரபஞ்சன் புக் செய்திருக்க.. அதிலேயே சென்று தங்கினர்.

இவர்கள் வந்து சேரும் போது மதியம் ஆகி இருந்தது. உணவை முடித்து சிறிது நேரம் இளைப்பாறி மருத்துவர் பிரகாசத்தை காண சென்றார்கள்.

“வாங்க ஈசன்!!  முதல்ல இந்த டெஸ்ட் எல்லாம் ஒரு வாட்டி எடுத்துட்டு வந்துடுடலாம்” என்று ஈசனை செவிலியரோடு அனுப்பி வைத்தார். இரண்டு மணி நேரத்தில் அனைத்து பரிசோதனைகளையும் முடித்து ரிப்போர்ட்ஸோடு அவன் டாக்டரை பார்க்க வந்தான. “நல்ல இம்ப்ரூவ்மெண்ட்!! ஆனாலும் மூளையில் அடிபட்ட அந்த நியூரான்ஸ் மீண்டு வருவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும். மத்தபடி யூ ஆர் பர்ஃபெக்ட்லி பிட்!!” ஆனால் அவரின் பேச்சில் முன்னே இருந்து ஏதோ ஒன்று இன்று இல்லாததாய் தோன்றியது ஈசனுக்கு!!

ஒரு மருத்துவராய் அவரின் பார்வை அப்படித்தான் இருக்கும். ‘அன்போடு ஆறுதலோடு சொல்ல அவர் என்ன உனக்கு மாமனாராடா?’ என்று மனம் எள்ளி நகையாட… அவர் சொன்னவற்றுக்கு எல்லாம் தலை அசைத்தான் ஈசன் மனதில் சிரித்துக் கொண்டே..

“இனி நீங்க ரிவ்யூக்கு இங்க வர்ற மாதிரி இருக்காது!! எமர்ஜென்சினா லாஸ்ட் டைம் மாதிரி கான்ஃபரன்ஸ் கால்ல நாம பாத்துக்கலாம்!!” என்றார் பிரகாசம்.

‘என்னடா.. அவனவன் மருத்துவமனைக்கு திரும்ப திரும்ப வர தான் சொல்லுவான்.. இவன் என்ன என்னை துரத்தி விடுவதிலேயே குறியா இருக்கான்!! அதுவும் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு இவன் மார்க்கெட்டிங் பண்றான்??? ஒருவேளை இரண்டாவது இன்னிங்ஸ் அங்க ஓபன் பண்ணி இருப்பானோ??’ என்று சந்தேகத்தோடு பிரகாசத்தை பார்த்து விட்டு வெளியே வந்தான்.

இவன் வெளியே வருவதற்கும் ரதி இவனை கடந்து உள் நோயாளிகள் இருக்கும் பிரிவுக்கு செல்வதற்கும் சரியாக இருந்தது. அவளின் ஒரு பக்கம் மட்டும் பார்த்து “ரதி…!!” என்று சத்தமாக அழைக்கவும் ஈசனுக்கு தயக்கமாக இருந்தது.

அவள் வெளியே வரும் வரை அங்கிருந்து இருக்கையில் அமர்ந்து காத்திருந்தான். அதன் பிறகு ஒரு சிசேரியன் கேஸ் என்று அவசரமாக அவள் செவிலியர்களோடு செல்வதை பார்த்தவன் அப்பொழுதும் கூப்பிட முடியாமல் செவிலியரோடும் பிரசவலியில்  துடிக்கும் பெண்ணோடும் அவள் செல்வதை.. சற்று தூரத்தில் இருந்து பார்த்தவன், ‘இனி அவளை இங்கே பிடிப்பது கஷ்டம் வீட்டுக்கு தான் செல்ல வேண்டும்!! ஆனால் இந்த 007 ஜேம்ஸ் பாண்டுகளாய் தன்னை பின் தொடரும் இருவரையும் தவிர்த்து எப்படி செல்வது?’ என்று பெரும் யோசனையோடு தங்கள் அறைக்கு திரும்பினர்.

ஒரே நாளில் ஒரே மருத்துவரை மட்டும் காண இயலாது. இவன் அடிபட்டதற்கு ஒவ்வொரு ஸ்பெஷலிஸ்டையும் பார்க்க வேண்டும். அதனால் தான் இரண்டு மூன்று நாட்கள் இங்கு ஹாஸ்பிட்டலில் செலவாகலாம் என்று ஒரு வாரத்திற்குள் செக்கப் முடித்து வந்துவிட வேண்டும் என்று கொஞ்சம் மிரட்டியே சொல்லி அனுப்பி இருந்தான் பிரபஞ்சன் ஈசனிடம்.

அன்று பிரகாசத்திடம் மட்டும் தனது உடல்நிலை பற்றிய ஒப்பினியனை கேட்டவன், அடுத்து ஆர்த்தோ டாக்டருக்காக மறுநாள் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து விட்டு வந்து விட்டான். அடுத்து நியூரோ ஸ்பெஷலிஸ்ட்!!

ராசு சங்கர் இவன் அறையில் ஒரு ஓரமாகத்தான் அமர்ந்திருந்தனர். “போய் தூங்குங்க டே!!” என்றவனிடம்,

“பரவால ணே!! நீங்க தூங்குக.. சத்தம் போடாம இங்கன ஓரமா இருக்குதியோம்!!” என்றதும் அவன் முறைக்க… அவர்கள் இருவரும் அப்பவும் அமைதியாக இருக்க…

“நான் என்ன செய்கிறேனு உளவு பார்த்து அந்த குண்டனுக்கு சொல்ல வேண்டாம்டே!! உங்களை தவிர அவன் வேற ஆளையும் நம்மள கண்காணிக்க வைத்திருப்பான். அதுவுமில்லாம நான் செய்யனும்னு நினைக்கிற காரியத்தையும்.. பாக்கணும் நினைக்கிற ஆளையும் யார் நினைத்தாலும் தடுக்க முடியாதுடே!! நான் ஈசன்!! அப்படி நான் போகும்போது கண்டிப்பா உங்களையும் கூட்டிட்டு தாம்லே போவேன்!! அதனால இப்ப போய் ரெஸ்ட் எடுங்க!!” என்று இருவரையும் அனுப்பி வைத்தவன், மாலை போல அவர்களை கிளம்பி வர சொன்னான்.

மெத்தையில் படுத்து கண்களை மூடிய ஈசனுக்கு ரதியின் நினைவு இன்னும் அதிகமாக வந்தது. அவன் கண்களை மூடி தூங்கத்தான் முயன்றான். ஆனால் அவளின் நினைவுகள் அதிகமாகி அவன் மனதைக் கொஞ்சம் வதைத்தது. அவளின் அழகு முகம் அடிக்கடி வந்து அவனை ஏங்கச் செய்தது. 

தூக்கம் பிடிக்காமல் கொஞ்ச நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். இடையிடையே பெருமூச்சுக்களை வெளியேற்றிக் கொண்டிருந்தான். அவளின் நினைவில் இருந்து அவன் மீள்வது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கப் போவதில்லை என்பதை அவன் நன்றாகவே உணர்ந்திருந்தான்!! ஏன் மீள வேண்டும்? மீள முடியா பாதையில் சென்று விட்டதை அறிந்தவன் அதில் மந்தகாச புன்னகை!!

இவர்கள் இங்கே வந்தால் உபயோகப்படுத்த என்று இருக்கும் காரில் தான் ரதியின் அப்பார்ட்மெண்ட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

முன் சீட்டில் டிரைவரோடு ராசு அமர்ந்திருக்க.. பின்னே ஈசனோடு தயக்கத்தோடு அமர்ந்திருந்தான் சங்கர். இருவரும் ஈசன் எங்கே எதற்காக செல்கின்றான் என்று தெரிந்ததால் முகத்தை தூக்கி வைத்தவாறு அமர்ந்திருந்தனர்.

“ஏம்லே.. ரெண்டு பேரும் இப்படி மூஞ்ச தூக்கி வச்சு இருக்கீதிய… நல்ல நாளுலே பார்க்க சகிக்காது!!” என்று வேண்டுமென்றே வம்பு இழுக்க.. அவர்கள் அப்பவும் அமைதியாகவே இருந்தனர்.

ஒரு பெரும் மூச்சு விட்டவன் “புரியுதுலே!! நான் செய்வது உங்களுக்கு பிடித்தமில்லை. ஆனால் அது ஏன் தான் எனக்கு தெரியல? நான் எது செய்தாலும் எப்பவும் நீங்க எல்லாம் எனக்கு துணையாய் இருந்துதான் நான் பார்த்து இருக்கேன். அப்போ இப்ப நீங்க அப்படி இருக்கலைன்னா நான் செய்வது தப்பா? இல்லை நீங்கள் என்னைய புரிந்து கொண்ட விதம் தப்பா? நினைக்க நினைக்க எனக்கு தாம்லே தலை வலிக்குது!!” என்று சொன்னவுடன் இருவரும் பதறி “இல்ல ணே!!  இல்ல ணே!!  நாங்க ஒன்னும் சொல்லவே இல்ல.. நீங்க டென்ஷன் ஆவாதிய!!” என்று அமைதியாக்கினர்.

மற்றது எல்லாவற்றையும் விட ஈசன் அவர்களுக்கு மிக மிக முக்கியம்!! அதுவும் அவனின் உடல்நிலை அதி முக்கியம்!! என்பதால் முகத்தில் கூட இனி எதையும் காட்டக்கூடாது என்று முடிவெடுத்தனர் இருவரும்!!

அப்பார்ட்மெண்ட் வெளியில் இறங்கியவன் இவர்களும் கூட இறங்கியதை பார்த்து முறைத்து “அப்படியே கார தூக்கிட்டு போயிடுங்கடே… நான் சொல்லும் போது மட்டும் நீங்க வந்தா போதும்!!” என்றதும் அவர்கள் தயங்கி நிற்க இவனும் முறைத்துப் பார்க்க சரி என்று கிளம்பி விட்டனர்.

‘நான் இன்னைக்கு செக்கப் வந்தது அவளுக்கு தெரிந்திருக்குமா? தெரிந்தும் என்னை தவிர்க்கிறாளா? ஏன்? அந்த இரண்டு மாதங்கள் அவள் காட்டி அன்பு பொய்யா? அவள் கண்களில் நான் கண்ட அந்த நேசம் பாசம் அனைத்தும் கானலா? இல்லை கண்ணில் இருந்து மறைந்த உடன் எனக்கான அன்பும் அவளிடம் இருந்து மறைந்து விட்டதா?’ என்று யோசனையோடு தான் அவளின் தளத்தே நோக்கி லிப்ட்டில் பயணித்தவன், ஒரு பெரும் மூச்சை இழுத்து விட்டு அவள் வீட்டில் முன்னே நின்று காலிங் பெல்லை அழுத்தினான்.

ஆனால் காலிங் பெல்லினால் எந்தவித ரியாக்ஷனும் அவ்விடத்தில் இல்லை.  ஏன் என்னாச்சு? காலிங் பெல் வேலை செய்யலையா? என்று யோசித்தவாறு கதவில் கை வைக்க… அதுவோ திறந்து  கொண்டது.

“கதவை திறந்து போட்டுட்டு இவ என்ன பண்றா?” என்றவாறு இவன் உள்நுழைந்து கதவடைத்தான்.

ரதியும் சமையல் அறையில் தான் இருந்தாள். கைப்பாட்டுக்கு ஏதோ கிண்டி கொண்டிருக்க.. நினைவுகளோ கொஞ்சமும் இங்கு இல்லை. மெல்ல தான் நடந்து சமையலறையில் நுழைந்தான். இதே மற்ற நேரமாக இருந்தால் அந்த மெல்லிய ஓசையை கூட கேட்டிருந்திருப்பாள் ரதி!!

ரதி ஏதோ யோசனையிலேயே உழன்று கொண்டிருக்க.. அவளுக்கு வெகு அருகில் சமையலறையில் சுவரில் சாய்ந்த வண்ணம் கைகளை கட்டிக்கொண்டு அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஈசன்.

கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு மேலாக கடந்திருக்க … ‘அப்படி என்னத்தைக் கிண்டி கொண்டிருக்கிறா? நானும் வந்து நின்னு இவ்வளவு நேரம் ஆகுது? அவளது ஞாபகம் இங்க இல்லையே!!’ என்று நெற்றி சுருங்க யோசித்தவன், பின் இரண்டேட்டில் அவளை நெருங்கி “ரதி…!!” என்று சத்தமாக அழைக்க.. அவ்வளவுதான் சாதம் சிதறி அவளது கைகளில் விழ… ஸ்ஸ்ஆஆஆ என்று அனிச்சை செயலாய் எரிச்சலில் அலறினாலும் அருகில் நின்றவனின் உருவத்தை இடது கையால் வருடினாள் நிஜமா? நிழலா? என்று!!

“நான் நிஜம் தான்!!” என்று புன்னகைத்தவன் அவளது வலது கையை பிடிக்க… மீண்டும் ஆஆஆ என்று அலற… அப்பொழுதுதான் பார்த்தான், கொதிக்கும் கஞ்சி அவள் கைகளில் பட்டு இருப்பதை… சட்டென்று அவளை இழுத்துக் கொண்டு அருகில் இருந்த தண்ணீர் குழாயில் காட்டி “உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லலே!! இப்படித்தான் கனவு கண்டுகிட்டு சமைப்பியோ? கையில காஞ்சி பட்டதால் சரியா போச்சு.. இதுவே அந்த கஞ்சி வழிந்து அடுப்பில் ஐற்றி அடுப்பு அணைந்து இருந்தால்? கேஸ் முழுவதும் இந்த வீடு முழுக்க பரவி இருந்தால்?” என்று காட்டத்தோடு அவன் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் அவளுக்கு காதல் மொழிகளாகவே காதில் கேட்க… கனிந்த முகத்தோடு கண்ணிமைக்காமல் கண்ணாளனையே பார்த்துக் கொண்டிருந்தாள் காரிகை!!

தான் பேசுவது எதையும் அவள் செவியில் ஏறினாலும் புத்திக்குள் ஏறவில்லை என்பதை அறிந்த ஈசன் “ரதி..!!” என்று சத்தமாக கூப்பிட… அந்த திடீர் அழைப்பில் அவளது உடம்பு ஒரு நடுக்கம் கொள்ள… அதே நேரம் கீழே இருந்த ஈசனின் வலது கையில் மெல்லிய ஸ்பரிசம்!!

விளங்க இயலா உணர்வோடு…

புரிந்தும் புரியாத புத்தியோடு…

மனதின் நெகிழ்ச்சியோடு…

மெல்ல விழிகளை கீழ் நோக்கி பார்த்தான் ஈசன்!!

ஈசனின் சத்தத்தில் பயந்தது அவள் மட்டுமல்ல… அவள் சூல் கொண்டிருந்த வயிற்றின் கருவும்!! 

ரதி… என்று அழைத்தவனின் குரல் தொண்டையில் இருந்து எழும்பவே இல்லை!!

கண்கள் அகல விரித்தப்படி நம்ப முடியாமல் சூல் கொண்டிருந்த பெண்ணவளின் வயிற்றை தான் பார்த்திருந்தான்!!

இரு கைகளாலும் பெரிய வயிற்றை பிடித்தப்படி  வெண்ணெய் திருடி மாட்டிக் கொண்ட கண்ணனாய் அவள் திருதிருக்க… 

முதலில்  எப்படி இப்படி ஒரு நாள் இரவில்.. உறவில்.. என்று அதிர்ச்சி!!

அதன் பின் என் குழந்தை என்ற பேரூவுவகை!! 

இவ்வளவு நாட்களாக.. என்னிடம் இருந்து மறைத்து விட்டாளே என்ற கோபம்!!

கூரிய பார்வையும் அழுத்தமான காலடிகளுடன் அவளை நெருங்கியவன், “ஓஹ்… இதனால் தான் கொஞ்ச நாளா என்கிட்ட நீ சரியாவே பேசல… அப்படித்தானே!! ஓடி ஒளிஞ்சிருக்க இல்லையா? அப்படி என்ன செய்விடுவேணு என்கிட்ட இருந்து மறைச்ச என் புள்ளைய?? சொல்லு டி!!” என்றவனின் கர்ஜனையில் மீண்டும் ஒரு‌முறை அவளது உடம்பு பயத்தில் உலுக்கி போட.. கூடவே பயத்தில் குழந்தையும் அசைய… அணைவாக அரவணைப்பாக.. ஆதரவாக நானிருக்கிறேன் என்று இரு கைகளால் பிடித்துக் கொண்டாள் தன் பெருத்த வயிற்றை!!

அவளின் இந்த செய்கையில் அவனின் மனம் அடிப்பட்டது!! கண்களை இறுக்க மூடி தன் வலியையும் வருத்தத்தையும் மறைத்தவன், கண்கள் திறக்க அத்தணை சிவப்பு அதில்!! அது கோபத்தாலா?? அல்லது இயலாமையாலா?? 

“முழு பூசணிக்காயை மறைக்க முடியுமா என்ன?” என்று அவளின் பெருத்த வயிற்றை 

சுட்டிக்காட்டினான்!!

உதட்டு கடித்து சிரிப்பை விழுங்கியவளின் கண்கள் சிரிப்பில் மின்ன…

“ப்ராடு… ப்ராடு…” என்று அவளின் காதை பற்றி திருகினான்.

“சாரிங்க… அது வந்து… எதனால சொல்லைலைன்னா… அது..” என்று இழுத்தவளிடம் ஒற்றை கையை தூக்கி நிறுத்து என்று காட்டியவன், அவள் உதட்டில் ஒற்றை விரலை வைத்து உஷ்ஷ் என்றான்.

மெல்ல அவள் முன் மண்டியிட்டவன் அவளது மணி வயிற்றில் தன் முத்தத்தை பதித்தான். சொல்ல முடியா சிலிர்ப்பு… ஈசனிடத்தில்!!

சற்று தள்ளி நின்று அவளது முழு உருவத்தையும் கண்களால் பருகினான். முன்னை விட சற்றே உடம்பு கூடியிருக்க.. இளமை பொழிவு தாய்மையில் மிளிர்ந்தது!! நேற்று வரை சோகத்தில் இருந்த அவளின் முகம் இன்று தேஜஸில் மின்னியது!!

ஏதேதோ அவளிடம் பேச வேண்டும் என்று கற்பனையில் இங்கே வந்தவனுக்கு வார்த்தைகள் பஞ்சமாகி போக.. அவளையே பார்த்து அப்படியே நின்று இருந்தவனின் தலைக்குள் மின்னல் என ஒரு உருவம் இதே சூல் கொண்ட வயிற்றோடு வந்து போக…

“ஸ்ஸ்ஆஆஆ..” என்று தலையை லேசாக பிடித்தான். அதற்குள் அவள் பதறி வர…

“ஒன்னுமில்ல… எல்லாம் உன்னால தாம்லே… இப்படியா டென்ஷனாக்குவ? எப்படி டி அப்பனுக்கே சொல்லாம இருப்ப?” என்று மீண்டும் அவன் கர்ஜிக்க அவளோ இரு கைகளால் வயிற்றைப் பிடித்துக் கொள்ள “தீரா… ப்ளீஸ்!! சத்தம் போடாதீங்க பேபி பயப்படும்!!” என்றாள் கலங்கிய குரலில்…

“என்னது பேபி பயப்படுமா? நெல்லை சீமக்காரன்டி நான்!! என் புள்ளைய இந்த ஈசன் மாதிரி தைரியமா வளர்க்காம… உன்ன போல பயந்தாங்கொள்ளியா வளர்த்து வச்சிருக்க??? என்ன… ம்ம்ம்..  இதுக்கே உன்னை வெளுக்கணும் டி!!” என்று மீசையை முறுக்கியவாறு அவளை நெருங்கியவனை கண்டவளின் கண்களில் அத்தனை காதல்!! 

அவனும் அவனது கோபத்தை காட்ட முடியாமல்.. அதனை தாபமாக மாற்ற.. அவனின் உதடுகள் கொஞ்சம் பலமாகவே அவள் உதடுகளில் உட்புக..

இந்த அழுத்தத்தால் ஏற்கனவே கொஞ்சம் விலகி இருந்த  ரதியின் தேன் உதடுகள் மேலும் கொஞ்சம் விலக…. விலகிய அந்த உதடுகளில் ஒன்றை மெல்ல கவ்வி சப்பி நாக்கால் அவளது வெண் பற்களை வருடியபடி….. நாக்கால் பதப்படுத்த உண்மையிலேயே சொக்கி தான் போனாள் ரதி, சொக்கனின் மீனாளாய்… வெகு நாள் கதைத்து அவனின் தீண்டலில்… ஸ்பரிசத்தில்!!

இருவர் உடல்களும் காமனின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. மோக வேட்கையின் தவிப்பில் இருவரும் ஒருவரை ஒருவர் கொன்று தின்று விடும் வெறியில் இருந்தனர் .

நீண்ட நெடிய முத்தத்திற்கு பிறகு அவளை விடுவித்தான்!!

சிறிது நேரம் அமைதியாகச் சென்றது. மனதைக் கட்டுப்படுத்த முயன்றான் ஈசன். ஆனால் அது பலனளிக்கவில்லை.  அவனுக்கு  அவள் மீது ஆசையும், மோகமும் இருந்த அளவிற்கு வருத்தமும் கோபமும் பெருகியதே தவிர சிறிதும் குறையவில்லை!!

“ரொம்ப கோபமா இருக்கீங்களா?” என்று ரதி மெல்லிய குரலில் கேட்க.. அவனோ முறைத்தான், தன்னருகில் அவளை சோஃபாவில் அமர்த்தியபடி…

“தெரியுது..!! தெரியது!! மூஞ்சிய பார்த்தாலே..!!  பேச மாட்டீங்களா. .?? இந்த மாதிரி நேரத்துல என் மேல நீங்க கோபப்படக்கூடாது!!” என்றாள் கேலி குரலில்…

”நான் ஒன்னும் சொல்லலயே.. ??” என்றான் கைகளை இறுக்கமாக கட்டியபடி.. அதிலேயே அவனது கோபம் நன்றாக தெரிந்தது.

”சொன்னாத்தானா.. ?? அதான் உங்க மூஞ்சியே சொல்லுதே..??” என்று பக்கத்தில் நெருங்கி அவன் மேல் உரசிக் கொண்டு சொன்னாள்.

அவளை உற்றுப் பார்த்து  உஷ்ணமானான்!! பொறுமை!! பொறுமை!! என்று அவனுக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

“உண்மைய சொல்லணும்னா..  உன் மேல செம கோபமா இருக்கு!! ரெண்டு அடி போடனும் போல இருக்கு.. ஆனா என்னால செய்ய முடியல!!” அவளை இழுத்து தன் மடியில் உட்கார வைத்தான். அவள் இடுப்பை சுற்றி கை போட்டு வளைத்து, அப்பெரிய வயிற்றை மெல்ல வருடியப்படி.. அவள் கன்னத்தில் தன் மூக்கால் உரசினான். அவனின் வருத்தம் அவளையும் வருந்தச் செய்தது.

“வேற என்ன சொல்றது.. !! சரி நான் கிளம்பட்டுமா..??” என்று கேட்டான். இதற்கு மேல் இங்கே அமர்ந்தால் அவளை நோகும்படி ஏதும் பேசி விடுவானோ என்று பயம்!! அதுமட்டுமல்லாமல் வேறு ஒரு உருவமும் அவனுள் வந்து இம்சித்துக் கொண்டிருந்தது!! தலைவலி மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது!!

”ஒன்னுமே  சாப்பிடாமலா ??” என்று கேட்டாள் தன் வருத்தத்தை மறைத்தபடி!!

”மனசு.. வயிறு எல்லாமே நெறஞ்சு போய் கெடக்கே.. இதுக்கு மேல என்ன வேணும் டி??” என்றான் குழந்தை தாங்கிய வயிற்றை மெல்ல வருடியபடி… அத்தனை வலி தொணித்தது அவனது குரலில்!!

”கொல்லாதிங்க தீரா… சரியா.. ??” சட்டென எழுந்து போய் கதவை சாத்திவிட்டு வந்தாள். அவனுக்கு வலித்தால் அது அவளுக்கும் தானே??? அவனுக்காக தானே இத்தனை யோசித்து அனைத்தையும் மறைத்தாள்!!

“எழுந்துருங்க.. !!” என சொல்லிக் கொண்டே அவன் கையை பிடித்து இழுத்து எழ வைத்தாள்.

”ஏய்.. இப்ப என்னலே பண்ண சொல்ற.. ??” 

”ஆமா .. ஒன்னும் பண்ணவே தெரியாது. பச்ச புள்ள நீங்க??  மனசுல ஆசை இல்லாமதான் என்னை பார்க்க வந்தீங்களா!? எல்லாம் வச்சிருந்தாலும் ஒன்னத்தையும் காட்டுறது கிடையாது!! என்ன சொல்றது இந்த ஆம்பளைங்களே இப்படி தான்.. பொண்ணுங்க மனச கொஞ்சம் கூட புரிஞ்சுக்கிறதே இல்ல… !!” என்று அவனை கடிந்துக் கொண்டே கட்டிப்பிடித்து கொண்டாள். 

அவன் நெஞ்சில் அவள் மென்மைகள் அழுந்த இறுக்கினாள்.  அவள் மூக்கை அவன் மார்புச் சட்டையில் தேய்த்தாள். அவன் மார்புக்கு மேல் முத்தம் கொடுத்தாள். இருவருக்கும் இடையில் பாந்தமாய் அவர்களது மகவு!!

அவளை அணைத்துக் கொண்டவன்.

”ஆமாடி.. நீங்கள்ளாம் அப்படியே தெறந்த மனசுக்காரிக.. எல்லா விஷயத்தையும் மனசு விட்டு பேசிர்றீங்க பாரு..?? உங்க மனச புரிஞ்சுக்காம போறதுக்கு.. ?? போடி!! நல்லா வந்திடும் வாயில்!! பேசறது ஒரு மாதிரி.. நடந்துக்கறது ஒரு மாதிரி.. இந்த லட்சணத்துல இவளுக மனசவே புரிஞ்சுக்கறது இல்லையாமா.. ??” என்றவன் அவளது கீழ் உதட்டை இரு விரல்களால் பிடித்து இழுத்தான்.

”சரி.. சரி.. போதும் பேசினது..!! பெரிய இவரு மாதிரி பேசியே கொல்லாதிங்க..!! ஏதாவது சாப்பிடறிங்களா.. ??”

”சாப்பிட்டதும்.. நேரா வரேன்.. !!” என்றான்.

“ஆனா நான் சாப்பிடலையே??” என்று அவள் சொன்னதும்  அவளை முறைத்தான்.

“உன்னைத் தொட்ட நாள் முதலாய் எனக்கும்தான் அகோர பசி!!” என்றவனின் பார்வை தாபமாய் அவளை ஏறிட்டது!!

19

தன்னவனின் தாப பார்வையை கண்டவளுக்கு உடலெங்கும் நாணிச் சிவக்க.. சிலிர்க்க.. அவன் கழுத்து வளைவிலேயே முகத்தை புதைத்துக் கொண்டாள்.

முகத்தை மூடிக்கொண்டாலும் அவனது பார்வையை புரிந்தவள் பேச்சை மாற்ற எண்ணி..

“பசிக்குதுங்க.. ” என்று ரதி சொல்ல.. அவளை தள்ளி அமர வைத்த ஈசன், “இன்னும் சாப்படலையா? உன்னை எல்லாம்… அதுவும் வயித்து பிள்ளையோட??” என்று கோபம் கொண்டவன், “தயிர் சாதம் ஓக்கே வா?” என்றான்.

“ஓகே.” என்றவுடன், வேகமாக சமையல் அறையில் சென்றவன் அவள் பாதியில் விட்டு வைத்திருந்த சாதத்தை பார்க்க அதுவோ நன்றாக குழைந்து பொங்கலை போல் இருந்தது. அதை நன்றாக வடித்து எடுத்தான். ஃப்ரிட்ஜை ஆராய அவள் வைத்திருந்த தயரை அதில் கலந்து சிறிது பாலும் விட்டு தாளித்துக் கொட்டி, அதன் மீது மாதுளம் முத்துக்களை பிரித்து போட்டு கப்பில் வைத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.

ஆச்சரியமாக அவனை பார்த்தவள்.

வேகவேகமாக சாப்பிட… அசையாமல் அவள் முன் நின்று கொண்டிருந்த ஈசனை பார்த்தாள். “வேணுமா?” என்றவள், ஒரு உருண்டை சத்தத்தை எடுத்து அவன் உதட்டில் திணித்தாள்.

அவள் ஊட்டிய கையை பிடித்த ஈசன்.. அவள் விரல்கள் ஒவ்வொன்றாக சப்ப… சப்ப… அவள் கையின் பூனை முடிகள் கூட சிலிர்க்க கண்களை மூடினாள். அடங்கிய மோகம் மீண்டும் எழ ஆரம்பித்தது. 

‘இது தான்.. இது தான்… இவன் தொட்டாலே நான் உருகி காணாமல் போய்விடுவேன்?? இதுக்கு தான் இவன் தள்ளி வைத்தேன் இவ்வளோ மாதங்களா… ஆனால்… 

ஒற்றை பார்வையில்.. 

ஒற்றை விரல் ஸ்பரிசத்தில்…

எனை ஆட்கொண்டு விட்டான் இவன்!! எனை ஆளும் ஈசன்!!’ என்று அவளது எண்ண ஓட்டங்கள் அவனை சுற்றியே ஓட… 

அவளது நினைவு இங்கு இல்லையென்று உணர்ந்தவன் “ம்க்கும்… மறுபடியும் கற்பனையா? ஒழுங்கா சாப்பிடு டி!!” என்று அதட்டினான். 

அவளோ இதழ் பிரிக்கமாலே மோகன புன்னகை சிந்த…

அவளின் செவ்விதழில் தயிர் படர்ந்திருக்க… 

மெதுவாக குனிந்த ஈசன்.. தயிர் படர்ந்த கீழ் உதட்டை கவ்வினான், பால் வாசனையோடு!! அவள் இதழை சப்பி சுவைத்த பின் மெதுவாக அவன் விடுவிக்க.. மெதுவாக கண்ணைத் திறந்தவள், “பசி அடங்கிருச்சா தீரா?” என்று கண்கள் சிமிட்டி கேட்டாள்.

“ம்ஹும்.. உன்னை தொட்டதிலிருந்து அகோர பசி!! உனக்கு?” என்று சரசமாக கேட்டான்.

“இல்லை…” என்று தலையாட்ட… ரதிவின் பின்னால் வந்தவன், அவள் தோளில் கை பதித்து மெதுவாக வருட வருட.. திரண்டு உருண்ட கனிகள் அவன் கண்முன்னே விருந்தாக!! 

“இல்லையா??” என்று கேட்டவனின் குரலில் இருந்த நக்கலை கண்டு அவள் இதழ் கடிக்க… ஆனாலும் அமைதியாக இருந்தாள். அவனோ அவனது பின் கழுத்தில் விரல்களால் கோலமிட… உணர்ச்சிமிகு இடத்தில் அவனின் விரல் செய்த சரச விளையாட்டில்.. இன்பமாய் சிலிர்த்து சிணுங்கினாள் பெண்!!

கொஞ்சம் கொஞ்சமாக அவளது பின் கழுத்து.. காது மடல்.. கழுத்து என்று வருட.. வருட..  ஆழியென உணர்வுகள் பொங்கி எழுந்தது அவளுள்!! அதில் இரத்தம் சூடாகி ஒவ்வொரு அணுவுக்குள் பரவி விரவ… தாப ஊற்றுக்கள் பெருக.. அதில் பெண்ணவள் சிவந்தாள் அந்திவானம் போல!!

கிறங்கிய நிலையில் அந்த இருக்கையிலே சாய்ந்து அமர்ந்தவளின் தோற்றம் அவனை ஈர்த்தது. சிவந்த கனிந்த கன்னங்களும்… பெருமூச்சு விடும் மூக்கும்.. சொக்கி நிற்கும் கண்களும் அவனை முத்தாட அழைத்தன. அவளின் மெல்லிய இதழ்களின் ஈரத்துளியை உறிஞ்சி சுவைக்கும் எண்ணம் எழுந்து மனதை பரிதவிக்க வைத்தது. அவன் பார்வையின் பொருளுணர்ந்த அவளிடமும் மெலிதான ஒரு படபடப்பு எழுந்திருந்தது. இருவருக்குமான அந்த  மெல்லிய கோடு எப்போது வேண்டுமானாலும் உடைபடும் போலிருந்தது!!

“நீங்க.. ஏன் .. ஏன் இப்படி? பார்வையாலேயே சாப்பிடுறிங்க” என்றாள் வெளிவராத குரலில்..

“பார்வையால.. சாப்பிட கூடாதாமாம்!!” கள்ள சிரிப்பு அவனிடம்!!

“ஏனாம்?” வெட்க புன்னகை அவளிடம்!!

“இதழ் கொண்டே இளைப்பாற‌ வேண்டுமாம்.. இவ்விடத்தில்…” என்றவன் பார்வை சொன்ன விதத்தில் எச்சில் விழுங்க அமர்ந்திருந்தாள் ரதி!! அவளின் ஏறிய இறங்கிய தொண்டை குழியை ரசிப்புடன் கவ்வினான் கண்களால்!

“சொன்னேன் நான் அப்பவே போறேன்னு?” என்றான் சிகை கோதி!!

“ஏன்?” பார்வை மட்டுமே பெண்ணிடம்!!

“இந்த தனிமை, உன் அழகு, நம் காதல்… ம்ஹூம்… பழி வாங்குற டி!!” என்று சலித்தான், அவளை நெருங்க முடியா நிலையை சபித்தபடி!!

பற்கள் மின்னிப் பளிச்சிட சிரித்தாள். இதழ்களின் ஓரம் மெலிதான சுழிப்பு. பின் நா நீட்டித் துலாவித் தன் உதட்டை துடைத்தாள். அவளின் செழித்த கொழு கொழு கன்னங்கள் குழைந்து கண்கள் மினுக்கின.

“நீங்க அவ்வளோ வீக்கா என்ன?” என்று புதுசாய் கேட்பது போல மெல்லிய குரலில் கேட்டாள். 

“தெரியல லே!! ஆனா…  உன் அழகு எனை பித்தாக்குது!! அழகுன்றது உடல் உருவத்துல மட்டும் இல்லேன்றது என் கணிப்பு. நீ காட்டுற அன்பு.. பாசம் அது தான் அழகு!! நீ இப்படி தாய்மையோட மிளிர்றதே தனி அழகுதான்!! தெய்வீக அழகு!! அதுதான் ஆராதிக்க தோணுது!!” என்றான் மென்மையான குரலில்!!

“இருந்தாலும் உங்க மனசை பாதிக்கிற அளவுக்கா நான் அழகா இருக்கேன்?” என்று தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டாள் குனிந்து..

“நான் மட்டும் அழகா என்ன? நானும் சராசரி ஆண்தானே? என்கிட்ட அன்பா பழகற உன்கிட்ட என் மனசு தடுமாறி விழுந்திட்டு!! உன் இளமையை.. அழகை பார்த்து மட்டும் இல்லலே ரதி. உடம்போட அழகு நிரந்தரமில்ல லே!! ஆனா நாம ஒருத்தர் மேல காட்ற நட்பு நேயம் காதல் பாசம் எல்லாம் நாம எவ்வளவு மோசமாருந்தாலும் நம்மை அழகாக்கி காட்டிரும். அந்த வகைல நீ எனக்கு பேரழகிதான்!! “

“ப்ப்பா.. தாங்கல!! பார்றா எம்எல்ஏ உரையாற்றுறாரு!! ஆனா இது சட்டசபையும் இல்ல.. மேடையும் இல்ல..!!” சிரித்தாள் ரதி!! 

“சோ… இந்த பேரழகியை நான் விரும்பறது என் வரைல தப்பில்ல லே” என்றவனின் பார்வை மட்டும் அல்ல.. அவனின் விரல்களும் அவளிடம்‌ பேசிக் கொண்டிருந்தன.. அது பாஷையில்.. தீண்டி.. தீண்டி!!

கொஞ்சம் கொஞ்சமாய் அவனிடம் தொலைந்துக் கொண்டிருந்தாள்.  அவனின் சூடான மூச்சுக் காற்று..  பின்னங்கழுத்தின் பிடி.. இடை வருடிக் கொண்டிருக்கும் விரல்கள் இப்படி ஈசன் அவளை முழுமையாக ஆட்கொண்டிருந்தான். 

நேரம் இரவை நெருங்கிக் கொண்டிருக்க அவனின் சுகமான வருடலில்.. மெல்ல கண்ணை அயர்ந்தவளே மெத்தையில் படுக்க வைத்தவன், அவளின் பெரிய வயிற்றை மறைத்திருந்த கவுனை விலக்கி தன் உதிரத்தின் அசைவுகளை அவதானித்தான். 

மெல்ல அதில் முத்தங்களை அவன் வைக்க… முதன் முறை கண்ட தந்தையின் ஸ்பரிசத்தில் அவனின் மகவும் மெல்ல அசைய… அது அசையும் இடத்தில் இவன் இதழ் பதிக்க… மீண்டும் அசைவு.. இதழ் பதிவு… என்று மகிழ்வோடு மகவோடு சிறு விளையாட்டை அவன் நடத்த… ஒரு நிலைக்கு மேல் அவன் இதழ் விளையாட்டை தாங்க முடியாத ரதி ஈசனின் தலை முடியை பிடித்து மேலே இழுத்தாள்.

“பொறாமைடி உனக்கு!!” என்றவன் அவள் அருகில் துயில் கொண்டான்

“ரதி… நம் மரணத்தை விட கொடியது எது தெரியாம்லே.. நம் நினைவு சாவது!!” என்றதும் அதிர்ந்து அவனை பார்த்தாள் அவள்!!

அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன், “இதுவரைக்கும் யார் நமக்கு உயிராக இருந்தாங்க… யார் நம் உயிரை எடுக்க இருந்தாங்க… உற்றவன் யாரு? நல்லவன் யாரு? முதுகுல குத்தினவன் யாரு? தோள் கொடுத்தவன் யாரு?? தேளாய் கொட்டுனவன் யாரு?? இப்படி எதுவும் தெரிந்தும் தெரியாத நிலை மிக துயரம்டி!!”

“அச்சச்சோ… ஏன் இப்படி யோசிக்கிறிங்க? ப்ளீஸ் தீரா… எதுவும் யோசிச்சு… டென்ஷன் ஆகாதிங்க.. உங்களுக்கு அது நல்லதல்ல!!” என்று மருத்துவராய் மட்டுமல்ல மனைவியாய் கூட கவலை கொண்டாள் ரதி!!

“சும்மா பேச்சுக்கு நிறைய பேர் சொல்லுவாங்க லே… டென்ஷன் ஆகாத… ஸ்ட்ரெஸ் எடுக்காதேனு..

ஆனா அது அனுபவிச்சவனுக்கு 

தான் தெரியும் அந்த வலியோட வலி தெரியும்லே!!” என்றவன்,

“உயிரோட கொன்னுடும் மனுஷன… திடமான ஆளையும் புரட்டி எடுத்திரும்!! எப்போ டா.. எப்படி டா இதிலிருந்து வெளிய வரபோறோம்னு தெரியாம மனசை போட்டு சின்னாபின்னமாகி ஒரு மாதிரி ஆக்கிடும்.  ஏறக்குறைய சட்டையை கிழிச்சிட்டு பைத்தியம் பிடிக்காத குறை!! அதேன் என் நிலை!!” என்றவனை தாவி அணைத்துக் கொண்டாள் மாது!!

“உயிர் உடம்பிலிருந்து போறது கூட பெரிய வலி இல்லை!! ஆனா.. இந்த அம்னீஷியா.. உணர்வுகளை புதைத்து செய்யுற கொலை அது!! 

இதுவுமே ஒரு விதமான வலி தானே!!” என்றவனின் கண்களில் வலியை தேக்கி பேசுபவனை கண்டவள் தாமும் அவனை தள்ளி வைத்து வலியை கொடுத்து விட்டோமோ  என்று நினைத்து அவனுக்கு வலியை கொடுத்து விட்டோமோ என்று மருகினாள்.

“கோபம் கோபமா வரும்லே ரதி… ஆனா.. அதை யார்கிட்ட காட்டனும்னு தெரியாம.. யார்கிட்ட எப்படி பேசனும்னு தெரியாம.. தவிக்கிற‌ தவிப்பு இருக்கே?? ஓராயிரம் மரணத்திற்கு சமம்!! 

இருண்ட அடர்ந்த  காட்டுக்குள்.. திக்குத் தெரியாத திசையில்.. பயணிக்கும் போது வருமே ஒரு பயம்!! அது தான்.. எனக்கும்!! இதிலிருந்து மீட்க  ஒரு கை வரதா?

என்னை அரவணைத்து கொள்ள ஒரு மடி இருக்காதான்னு ஏங்கி ஏங்கி… ” என்று அவன் முடிக்கும் முன் இனி பேசாதே.. என்னால் தாங்க இயலாது என்றவாறு இறுக்க.. மிக இறுக்கமாக அணைத்தாள் அவனின் இதழ்களை தன் இதழ்கள் கொண்டு!!

மூச்சு முட்ட பிரிந்தவள் அவனை அணைத்து வாகாக தோளில் சாய்ந்து கொள்ள… “எதற்கும் அதிகம் ஆசைப்படாதவள் நான் தீரா..

எதையும் அதிகம் விரும்பாதவளும் கூட!! எதையும் எனக்குள் அனுமதிக்க விரும்பாத ஜீவன் நான்!!

எந்த குழப்பமும் இல்லாமல் மிக தெளிவாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த என்னுள்..

எப்போது.. எந்த கணத்தில் நீ உள் நுழைந்தாய்னு தெரியல??

என்னை கேட்காமல்

என் அனுமதி பெறாமல்

என் விதிகளுக்கு அப்பாற்பட்டு 

என்னிடம் வந்து பச்சக்கென்று ஒட்டிடீங்க இங்க… 

ஏன் வந்தான்? எப்படி வந்தானு? என்னுள் தோன்றிய கேள்விகளுக்கு நான் பதில் யோசிக்கும் முன்னரே  என் மனமென்னும் சிம்மாசனத்தில் வந்து ஜம்பமாக அமர்ந்துட்டுங்க!

என் இதய சுவர்கள் பலமுள்ளவை

எதற்கும் அசையாது என்று இறுபாப்பிலியிருந்த வேளையில்

அதை தூள் தூளாக்கி விட்டு  

எந்த நிசப்தமின்றி  வந்து சேர்ந்திட்டுங்க!! நீங்க வந்ததும் நான் தனியானேன்… என்னை என் உறவுகளிடமிருந்து  ஓட வைத்திங்க!! ஆனா.. கானல் நீர் கற்பனை என்று உங்களை நினைத்திருக்க.. இல்லை நிஜம் என்று என் முன்னே நீங்க..  உன் அன்பு.. உன் நேசம் அதற்கு சாட்சியாய்…!!” என்று அவளின் பெரிய வயிற்றை தடவ… நெற்றி சுருங்க பார்த்த ஈசனின் மனதினில் எண்ணற்ற கேள்விகள்!!

 

‘இவள் கூறுவதை பார்த்தால் இவளகன் இந்த அன்பு நேசம் எல்லாம் நான் அடிபட்ட பிறகு என்னை கண்டு வந்ததல்ல.. அதற்கு முதலே என்னை இவளுக்கு தெரிந்திருக்க வேண்டும்!! என் கடந்த காலத்தை இவள் அறிந்திருக்க வேண்டும்!! அதனால் தான் ஓடி வந்தேன் என்கிறாள். ஆனால் ஏன்? எதற்காக?’ என்று கேள்விகள் அனைத்திற்கும் விடையறிய முயலவில்லை அவன்!!

காதலையும் தாண்டி காமம் இல்லா இரவாக.. அவ்விரவு நீண்டது.. அவர்களுக்குள்ளே!!

மறுநாள் காலை ரதி எழுந்து வந்தபோது ஹாலில் அமர்ந்திருந்தான் ஈசன். ஒரு பொன் சிரிப்போடு அவளுக்கு பாலும் இவனுக்கு காஃப்பியும் எடுத்துக் கொண்டு வந்து அமர.. பேச்சற்ற மௌனங்களாய் கழிந்தது அந்நேரம்!!

“நான் இன்னும் ஒரு வாரம் இங்க இருப்பேம்லே.. செக் அப்க்காக வந்தேன். நான் போகும்போது தனியா போக போறது இல்ல.. நீயும் என் கூட வர!!” என்றவனின் அழுத்தமான வார்த்தைகளில் கையில் வைத்திருந்த பாலை தவறவிட்டாள் ரதி!!

கண்கள் கலக்கத்துடன் அவளை பார்க்க.. அவளோ பதட்டத்துடன் “இப்போ.. இப்போ… எதுக்கு? அங்க எல்லாம் வேண்டாமே!! நான் இங்கே இருக்கனே ப்ளீஸ்!!” என்றாள்.

“இங்கே இருக்கிறேனு சொல்றியா? இல்ல இப்படியே இருக்கிறேன் சொல்றியா?” என்று கூராய் வந்த அவன் கூற்றின் அர்த்தத்தை சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல்…

“இங்கே.. இப்படியே இருந்துடுறேனே  தீரா!!” என்றால் இறைஞ்சதலாக…

“அதாவது எனக்கு பொண்டாட்டிய என் கூட நீ வர மாட்ட.. ஒரு லிவிங் இன் ரிலேஷன்ஷிப்ல, இன்னும் பட்டவர்த்தனமா சொன்னா கீப்பா இப்படி இருக்கேன்னு சொல்லற!! அப்படித்தானே??” என்று அவனின் குற்றச்சாட்டில் அதிர்ந்து விழித்தவளின் கண்களில் அருவிய என கண்ணீர்!!

அவளின் ஒவ்வொரு துளி கண்ணீரும் அவளின் மன ரணங்களை காட்ட.. இலகும் மனசு இறுக்கி பிடித்து அவளை முறைத்தான் ஈசன்!!

‘வந்த முதல் நாளே இப்படி இவளை அழ வைக்கணுமா?’ என்று நெற்றியை தேய்த்தவன், “சரி நான் ஊருக்கு போறதுக்கு இன்னும் டைம் இருக்கு. அதுவரைக்கும் யோசிக்கலாம்!! இப்ப இந்த பேச்சை விடு” என்றவன், அடுத்த மூன்று நாட்கள் ஹாஸ்பிடலுக்கு செக்கப் செல்வதை தவிர மற்ற நேரங்கள் அனைத்தும் அவனுக்கு ரதியோடுதான் கழிந்தது.

மருத்துவமனை செல்லும் நேரங்கள் மட்டுமே சங்கரையும் ராசுவையும் அவன் அழைத்துக் கொண்டான். மற்றபடி ரதி அப்பார்ட்மெண்டில் விட்டு விட்டால் அவர்களை போக சொல்லி விடுவான். இவளையும் ஐந்து நாட்களுக்கு மருத்துவமனைக்கு லீவு போட செய்து தன்னுடனே வைத்துக் கொண்டான். 

கெஞ்சுதலாக.. 

மிஞ்சுதலாக… 

கொஞ்சுதலாக.. 

விதவிதமாக.. வித்தியாசமாக.. என்னென்னவோ முயன்று பார்த்தும் ரதி தன் நிலையில் இருந்து இறங்கவே இல்லை. அவனோடு வருவதையே அவள் மறுத்துவிட்டாள்!!

“நீ என்கூட வர வேண்டாம்!! இப்படியோ இருந்துக்கோ… என் சாவுக்கு கூட நீ வந்துடாத!!” என்று பெரிய வார்த்தை சொன்னவன் அதிர்ந்த விழித்தவளின் இதழ்களில் வன்மையாக ஒரு முத்தத்தை பதித்து விட்டு சிங்கப்பூர் விட்டு சென்றான்!!

ஈசன் சென்று ஒரு வரம் ஆகிவிட்டது. அதுவரை அவனை நினைத்து நினைத்து ஏங்கி பகல் கனவு கண்டு வாழ்ந்தவள். அவனோடு வாழ்ந்த அந்த நான்கு நாட்களை எண்ணி அடுத்து வந்த நாட்களில் இன்னும் அவன் நினைவுகளால் அவதியற்றாள். அதோடு தாய்மை நேரத்தில் ஹார்மோன்களின் சதிராட்டத்தில் இன்னும் இன்னும் தன்னவனை தேடினாள்.

அவனை நெருங்கியும் போக முடியாமல்.. விட்டு விலகியும் இருக்கவும் முடியாத தன் நிலைமை நினைத்து அவளுக்கு கண்ணீர் மட்டும் தான் வந்தது. சஞ்சனா கூட இவள் நிலைமை பார்த்து ஒரு முறை அன்பாக பேசினாலும்.. அடுத்த முறை அரவணைத்துக் கொண்டாலும்… அதிக முறை திட்டி தான் சென்றாள்.

இவள் எப்படி இருந்தால் இவளும் மெலிந்து பிள்ளையையும் ஒரு வழியாக்கி விடுவாள் என்பதை உணர்ந்து சஞ்சனா “பாகீ.. நீ இப்படி இருந்தா கொஞ்சம் கூட நல்லா இல்ல.. நீ என்னவாவது போ!! அதுக்காக வயித்துல இருக்குற பிள்ளையை தண்டிப்பியா?” என்றதும் வழக்கம் போல முகம் திருப்பி அமர்ந்து கொண்டவளை வலுக்கட்டாயமாக தன் முகத்தை பார்க்க செய்தாள் சஞ்சனா.

“உன் நியாயம் என்ன வேணாலும் இருக்கட்டும்!! நீ தாட்சாயணிக்கு நியாயம் செய்வதாக இருக்கட்டும்.. ஈசன் அவன் மனைவி மீது கொண்ட காதலுக்கு நியாயம் செய்வதாக இருக்கட்டும்.. இல்லை என்ன கண்றாவி எதுவானாலும் இருக்கட்டும்… ஆனால் உன் பிள்ளைகளுக்கு நீ நியாயம் செய்கிறாயா? தாய் இருந்தும் இல்லாமல் வளரும் மானஸாவுக்கும் இதோ உன் வயிற்றில் வளரும் இந்த குழந்தைக்கு நியாயம் செய்யல பாகீ நீ!! சரி நீ போகல இங்கே இருந்து சிங்கிள் பேண்டா இந்த குழந்தை வளர்க்கற.. ஆனா நாளைக்கு அப்பா யாருன்னு கேட்கும்போது ஈசனை சொல்லுவியா மாட்டியா? அப்புறம் என்ன ஈசன் சொல்லலைன்னா இந்த பிள்ளையை எல்லாரும் என்ன சொல்லுவாங்க யோசிச்சியா? நம்ம வெளிநாட்டில் தான் வாழறோம்.. ஆனா வெளிநாட்டுக்காரவங்களா வாழல… அவங்களோட சமூகம் பார்வை அதன் கோணம் எல்லாம் வேறு!! ஆனால் நம் சமூக பார்வை கோணம் எல்லாம் வேற!!” என்றதும் ரதியின் முகத்தில் அத்தனை யோசனை இறுக்கமாக தன் வயிற்றைப் பற்றிக் கொண்டாள்!!

“எல்லாம் விடு உன்னை இத்தனை வருஷம் வளர்த்தாரு உன் அப்பா.. அவருக்கு என்ன நியாயம் செய்த நீ? இத்தனை வருடமா ஈசனுக்காக அவரை பிரிந்து இருந்த.. இப்போ இப்படிப்பட்ட நிலையில் இருந்தா அவரோட மனநிலை யோசிச்சு அவருக்காகவும் ஈசனோடு சேர்ந்து வாழ முயற்சி எடு பாகீ!! இதுக்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை!!” என்று சஞ்சனா சென்று விட்டாள்.

தனக்காக தியாகம் செய்ய நினைத்தவள் தான்‌ பெற்றுக்கொள்ள போகும் குழந்தைக்காகவும் தன்னை பெற்றவருக்காகவும் மனதை மாற்றி அடுத்த இரண்டு நாட்களில் மதுரையில் வந்து இறங்கினாள். அங்கிருந்து திருநெல்வேலிக்கு காரில் பயணமானவள் இடையில் கடத்தப்பட்டாள்!!

வருவோம்ல…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *