மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

This entry is part 38 of 41 in the series மையல் கொண்டேன் மாதீரா

மையல் கொண்டேன் மாதீரா

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

23

மையல் கொண்டேன் மாதீரா பாகம்2…

ஜியா ஜானவி ❤️

ரதி மதுரை ஏர்போர்ட்டில் இறங்கி கால் டாக்ஸிக்காக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் அவளை ஒருத்தன் அணுகி “மேடம் லாங் டிராவலா?? என் கார்ஸ் வசதியாக இருக்கும்.. பேக் கேஜ் கூட இருக்கு…” என்று தன் திறமையான பேச்சால் அவளை சம்மதிக்க வைத்து அவளை அழைத்து சென்றான். போகும் வழியில் அவளுக்கு தேவையானவற்றை  பார்த்து பார்த்து வாங்கி கொடுத்து நயமாக பேச.. அவளும் நம்பினாள். ஆனால் நேரம் செல்ல செல்ல அவள் அப்படியே உறங்கிவிட விழித்துப் பார்க்கும் நேரத்தில் சேரில் கட்டப்பட்டிருந்தாள்.

“யாருடா நீங்க?? என்னை ஏன்டா கட்டி இருக்கீங்க?? அவுத்து விடுங்கடா… டேய்!!! ரொம்ப நேரம் என்னால இப்படி உட்கார்ந்து இருக்க முடியாதுடா!!” என்று அவள் என்னென்னமோ கூறியும் வெகு நேரம் கழித்து உள்ளே நுழைந்தாள் தாதி ஒருத்தி.

“என்ன அடிச்சு போட்டுட்டு வெளியில் ஓட முடியாது மா .. வெளியில் பூட்டி இருக்காங்க” என்றவள் அவளுக்கு கைக்கட்டை அவிழ்த்து விட்டு சிரமதனங்களை முடித்து வர சொல்லி உணவையும் கொடுக்க… அந்த தாதி முகத்திலேயே உணவை விசிறிக்க தான் அவ்வளவு கோபம் ரதிக்கு‌‌. ஆனால் தனக்காக விடனும் வயிற்றில் வளரும் தன் தீராவின் மகவுக்காக எதுவும் பேசாது உண்டாள். மீண்டும் அந்த தாதி பெண் கட்டி வைத்து விட… “ஐயோ என்னால் ரொம்ப நேரம் இப்படியே உட்கார்ந்து இருக்க முடியாது!! ப்ளீஸ்… கொஞ்சம் கருணை காட்டுங்க… ஹெல்ப் பண்ணுங்க!!” என்று கெஞ்சினாள்.

ஆனால் வந்திருந்த தாதி பொண்ணு சிறிதும் அவளிடம் வேறு பேச்சு பேசாமல் இரவுவரை இப்படித்தான் என்று விட்டாள். அதன்பின் இரவு வந்தவள் மீண்டும் அவளது கை கட்டுகளை அவிழ்த்து விட கழியறையை நோக்கி சென்றவள், வந்து பார்க்கும்போது கட்டில் ஒன்று அந்த அறையின் ஓரம் இருந்தது. அதன் பின் தூங்க மட்டுமே அந்த கட்டில் அனுமதிக்கப்பட்டாள். மற்ற நேரம் அதே இருக்கையில் தான் கட்டி போடப்பட்டிருந்தாள். அவ்வப்போது அவள் மூச்சு விடுவதற்கு சிரமப்படும் போது உடனே அந்த தாதி வருவாள் சிறிது நேரம் அவள் இங்கு இங்கு நடைபயிலுவாள். இரண்டு நாட்கள் அப்படி போக…

“நீங்க இங்க இருந்து தப்பிக்க மாட்டீங்கனு அவங்களுக்கு உத்தரவாதம் தந்தா.. உங்கள அவங்க ஃப்ரீயா விடுவாங்க மா!!” என்று போகிற போக்கில் தாதி அவள் காதில் முணுமுணுத்து சொல்ல…

கண்டிப்பாக இந்த அறையில் ஏதோ கேமரா வைத்து தான் தன்னை கண்காணிக்கிறார்கள் என்று புரிந்தவள், “டேய்… கடத்தல்காரா!! உங்களுக்கே இது ஓவரா இல்லையா? நானே ப்ரக்னன்ட்!! எட்டு மாசம்… இந்த வயித்து வைத்துவிட்டு உங்களிடம் ஸ்டாண்ட் பண்ணி ஏன் ஓட போறேன்? ஏதோ ஒரு காரணத்துக்காக அழைச்சிட்டு வந்திருக்கேனு தெரியுது. நீங்களா பேசுற வரைக்கும் ஓட மாட்டேன்” என்று அவள் கோபமாக கத்த, அதன் பின் கை கட்டுதல் இல்லாமல் அந்த அறையில் சுதந்திரமாக உட்காரவும் நடக்கவும் நிற்கவும் அனுமதிக்கப்பட்டாள்.

ரதி ஊருக்கு சென்றது சஞ்சனாவுக்கு மட்டும்தான் தெரியும். இரண்டு நாட்களாகியும் தன்னை தொடர்பு கொள்ளவே இல்லையே என்று முதலில் வருத்தப்பட்ட சஞ்சனாவுக்கு.. அடுத்தது பயம் பிடித்தது. செல்லும் வழியில் ஏதாவது ஆகிவிட்டதா ஒன்றும் புரியாமல் தவித்தவள், வேறு வழி இன்றி ரதி வேலை பார்த்த மருத்துவமனையில் இருக்கும் பிரகாசத்திடம் சொல்ல.. அவரோ இருவரையும் கடிந்து பேசிவிட்டு ரவீந்திரனை அழைத்தார்.

ஏற்கனவே மகள் தன்னோடு வரவில்லை என்று வருத்தம், இங்கு தொழில்களையும் விட்டுவிட்டு போக முடியாது.. எப்படியும் ஒன்பதாவது மாதம் வீட்டோடு வளைகாப்பு போடுவதாக கீதாவிடம் பேசி இருந்தார், அதன் பின் மகளுடன் கூற்று காலம் இருக்க வேண்டும் என்று அவர் இங்கே உள்ள வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்…

மகள் காணவில்லை அதுவும் இந்தியா சென்றவளிடம் இருந்து தகவல் இல்லை என்று தெரிந்ததும் உடைந்தே போய்விட்டார். ஆனால் அதெல்லாம் சிறிது நிமிடங்கள் தான் அதற்கு பின் வேகமாக அவர் செயல்பட்டதிலிருந்து பெண் மதுரை வரை வந்திருக்கிறாள் மட்டுமே தெரிந்தது. அதன் பின் கண்டுபிடிக்க முடியவில்லை அவரால்.

என்ன செய்வது என்று இவர் புலம்பித் தவிக்க நண்பனின் இந்த துயரமான நேரத்தில் அவரோடு இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த பிரகாசம் கீதா தம்பதியினர் ரதி கடத்தப்பட்ட மூன்றாம் நாள் இரவு இந்தியா வந்து சேர்ந்தனர்.

ரதி கொண்டு வந்து பெட்டியில் இருந்து துணியை மட்டும் அந்த தாதியின் மூலம் இவளிடம் ஒப்படைத்திருந்தார்கள் இவளை கடத்தி வந்தவர்கள்.. கடத்தி வந்தவர்கள் யார் என்று எதுவும் ரதிக்கு தெரியாது அந்த தாதி ஒருத்தியை தவிர… கர்ப்பிணி பெண்களுக்கான கவுன் போன்ற அமைப்புடைய உடையை தான் உடுத்தி இருந்தாள் ரதி!!

“என்னங்கடா உங்களுக்கு வேணும்? ஏன்டா இப்படி பண்றீங்க… நானே என் ஆள பாக்க ஆசையே போனேன் இப்படி கடத்தி வச்சிருக்கீங்களே டா!! பணம் வேணும்னா சொல்லி தொலைங்களேண்டா… எங்க அப்பா கிட்ட சொல்லி வாங்கி தரேன்!! இங்க பாருங்க என் ஆள் வந்து சாதாரண ஆள் கிடையாது.. குஸ்தி மாஸ்டர்!! கூட அரசியல்வாதி வேற… வச்சு செஞ்சுருவாரு உங்க எல்லாத்தையும்!!” என்று கடத்த சொன்னவனே அவன் தான் என்று அறியாமல்… அவனின் பிரதாபங்களை அளந்து கொண்டிருந்தாள் ரதி. இல்லை இல்லை அவற்றையெல்லாம் சொல்லி அவர்களை மிரட்ட பார்த்தாள்.

இவளை விட அவர்களுக்கு அவனைப் பற்றி அதிகம் தெரியுமே அவர்கள் எங்க பயப்பட…??

இப்படியாக சாப்பிடுவதும் நடப்பதும் தூங்குவதும் அவ்வப்போது அவர்களை மிரட்டுவதுமாக ஐந்து நாட்கள் கடந்தது.

ஆறாம் நாள் விடியல் தான் ஏகப்பட்ட அதிர்ச்சிகளை அவளுக்கு வைத்து காத்துக் கொண்டிருந்தது.

ரதிக்கு முதலில் தான் இருப்பது எந்த இடம் என்று தெரியாது. “ஒழுங்கா தீரன் கிட்ட சொல்லிட்டே வந்திருக்கலாம்… இப்போது நான் கடத்தப்பட்டு இருப்பதே அவருக்கு தெரியாது!! பாவம் தெரிந்தால் கஷ்டப்படுவார்!!” என்று அவ்வப்போது அவனுக்காக இவள் வருத்தம் கொள்வாள். ஆனால் அவனுக்கு பழைய நினைவு வந்தது இவளுக்கு இன்னும் தெரியவில்லை. அதேபோல சஞ்சனா மூலம் விஷயம் கேள்விப்பட்டு ரவி ஒரு படையை விட்டே இவளை தேடிக் கொண்டிருக்கும் விஷயமும் அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

காலையிலிருந்து மனது சரியில்லை அவளுக்கு. ஏதோ ஒரு ஒவ்வாமை விரும்பத்தகாத செயல் நடப்பது போல.. என்ன ஏது என்று தெரியவில்லை. அவளால் சரியாக அன்று உண்ணவும் முடியவில்லை. அவளுக்காக அங்கு இருந்த தாதியும் “எதுவும் உடம்பு சரியில்லையா பாப்பா?” என்று விசாரிக்க… “அதெல்லாம் ஒன்னும் இல்ல.. என்னவோ ஒரு மாதிரியா இருக்கு!!” என்றாள்.

சிறிது நேரம் தூங்குவோம் என்று படுத்தால் கூட தூக்கம் வர மறுத்தது. விழிப்பதும் நடப்பதும் அந்த இருக்கையில் அமருவதுமாக அந்த அறையையே சுற்றிக் கொண்டிருந்தாள்.

வெளியில் இவளுக்கு காவல் இருந்தவர்களிடம் “தம்பிகளா அந்த பொண்ணு…  புள்ளதாச்சி பொண்ணு!! எப்போ என்ன மாதிரி இருக்கணும்னு நம்மளால கணிக்க முடியாது. எதுக்கும் பத்திரமா பாத்துகுங்க.. நாள பின்னே ஏதாவது ஆயிடுச்சின்னா அதெல்லாம் பெரிய பாவம்!!” என்று அவர் எவ்வளவோ கெஞ்சியும் அவர்களும் காதில் விழா மரம் பொம்மைகளாக நின்றிருந்தனர்.

‘அவங்க பெரிய இடம் ஏழை சொல்லா அம்பலமா ஏறப்போகுது?’ என்று முடிவோடு அவர் தன் வேலையை தொடர்ந்தார்.

இப்படியாக அன்று முழுவதும் ஏதோ ஒரு வித அவஸ்த்தையில் இருந்தாள் ரதி. அது எல்லாம் ஒரு முடிவுக்கு வந்தது இரவு ஏழு மணி போல…

காலையிலிருந்து அதிகம் அவள் சாப்பிடாததால் “பாப்பா நேரமாகவே சாப்பிடு!!” என்று அவளிடம் இட்லி கொடுக்க… டேபிளில் வைத்து அவள் சாப்பிட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் தான்… அதிரடியாக உள்ளே நுழைந்தான் ஈசன்!!

அவன் உள்ளே நுழைந்த வேகத்தில்.. அவனைப் பார்த்து மாத்திரத்தில்… இதுவரை இருந்த வருத்தங்கள் போக “தீரா.. !!” என்று அவனிடம் ஓட முயன்றாள். ஆனால் சட்டென்று அந்த இருக்கையில் இருந்து அவளால் எழ முடியவில்லை. கையை ஊன்றி எழ முயற்சிக்கும் போதே இவள் அருகில் நின்றிருந்த  தாதி ஈசனின் ஒரு பார்வையில் அவனிடம் வணக்கம் வைத்துவிட்டு வெளியே செல்ல… அதிர்ந்து விளிவிளித்து பார்த்தாள் அதனை!! தான் கண்டது கனவா? இல்லை நனவா இருக்காது… அப்படி இருக்காது!! அதற்குள் வெளியில் இருந்த வந்தான் சங்கர்.. இவன் அந்த டிரைவர் இல்லை என்று அவள் யோசிக்கும் போதே…

“அண்ணே…!!” என்று வந்தவன் ஏதோ அவனிடம் சொல்லிவிட்டு சற்று தள்ளி நிற்க.. அங்கிருந்தவர்களை மீண்டும் ஈசன் தன் பார்வையில் எரிக்க அனைவரும் கதவடைந்து விட்டு வெளியே சென்றனர்.

தன் கண்களால் கண்டது நிஜமா என்று புரியாமல் கண்களை வெறித்தபடி ஈசனை தான் பார்த்து இருந்தாள் ரதி!!

என் தீரனா?? ஏன் என்னை கடத்த வேண்டும்?

தன் முன்னால் அமர்த்தலாக அரச தோரணையோடு அமர்ந்திருக்கும் ஈசனை கண்டவளின் காதல் மனது அவனின் இந்த தோற்றத்தை ரசித்தாலும், அவன் கண்களில் தெறியும் அந்தப் பாவனை அவளுக்கு சற்று எச்சரிக்கை விடுத்தது.

இது தீரன் அல்லவே… ஈசன்.. பிரகதீரனேஸ்வரன்!!

“ஆண்டவா.. அப்போ அவனுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வந்து விட்டதா?

அப்படி என்றால் முழுமையாக குணமாகி விட்டான்!!” என்றதும் அவள் மனதில் பெரும் ஆசுவாசமும் நிம்மதி!! அப்படி என்றால் என்று மனதில் லேசாக கலங்கியது. மெல்ல அவன் அறியாமல் தனது சூழ் தாங்கிய வயிற்றை வருடினாள்.. இனி எப்போதும் அவனின் அந்த அன்பு நேசம் உரிமை இதை எதையும் அவன் கண்கள் காட்டாது!! இனி அவளின் இடம் எது என்று தெளிவாக உணர்த்த… ‘கிளம்பி வந்திருக்கவே கூடாது! சிங்கப்பூரில் இருந்தாவது அவனின் நினைவுகளோடு இருந்திருக்கலாம்!!’ என்று நினைத்தாள் கலங்கிய முகத்தோடு!!

ஆனால்.. அவன் கண்களில் தெரியும் இந்த கோபம் குரோதம் இது ஏன்? எதற்காக? எதற்காக என்னை இவன் இங்கு கடத்திக் கொண்டு வந்திருக்கிறான்? என் மீதான கோபம் தான் ஏன்?? என்று நிறைய கேள்விகள் அடுக்கடுக்காக அவள் மனதில் அணிவகுத்து நிற்க..  ஈசனையே பதிலுக்காக வேண்டி பார்த்தாள்.

“தீ… ம்ம்ம் ஈசன்…!!” என்று அவள் மெதுவாக அழைக்க…

“அந்த பேர சொல்ல கூட உனக்கு தகுதி இல்லலே.. உரிமையும் இல்லை!! கால் மீ சார்..!!”  என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கூறிய விதத்தில் அரண்டு போனாள் ரதி!!

மெலிதாக எச்சில் விழுங்க பயததில் அது கூட தொண்டையை நனைக்க முடியவில்லை. ஏதோ தவறுதலாக நடக்க போகுது என்று காலையிலிருந்து அவள் உள்ளுணர்வு சொன்னது போல இப்போது நடந்து கொண்டு இருப்பதை கண்டவளுக்கு பயப்பந்து உருண்டு தொண்டையை வந்து அடைத்தது. பயத்தோடு அவனை பார்த்தாள்.

“வெல்.. மிஸ் பாகீரதி… இல்ல இல்ல டாக்டர் பாகீரதி!! எங்களோட விருந்தாளியா நீங்க ஏன் இங்க வந்து இருக்கீங்கன்னு உங்களுக்கு கொஞ்சமாவது யோசனை இருக்கா?” என்று அதிகாரமாக அவன் கேட்டதில் இன்னும் நடுங்கத்தான் செய்தது உள்ளுக்குள், மெல்ல இல்லை என்று இடது வலமாக தலையாட்டினாள்.

“அஞ்சு நாளா நல்ல தின்னு தின்னு உடம்ப பாத்துக்கிட்டிங்களா?” என்றதும் அவளுக்கு கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.

“ஏன்னா இனி உங்க உடம்புல இருக்குற ஒவ்வொரு ரத்தமும் உங்களுக்கு சொந்தமில்லை.. அது என் பொண்ணுக்கு!!” என்றதும் அவள் அதிர்ந்து பார்க்க….

“யூ டாமிட்!! யாரை கேட்டது என் மனைவி தாட்சாயணிக்கு டெஸ்ட் டியூப் பண்ணும் போது உன் ஓவத்தை கொடுத்த.. யாரை கேட்டுக் கொடுத்தலே?” என்று அமர்ந்திருந்த நாற்காலியை பின்னால் தள்ளி விட்டு எழுந்து நின்று கர்ஜித்தவனின் அந்த ரௌத்திரத்தில் அரண்டு போய் இருக்கையில் பின்னால் சாய்ந்து கொண்டாள். 

அதே நேரம் அவளின் அந்த பயம் நடுக்கம் எதிரில் இருக்கும் ஈசனின் அந்த ரௌத்திரம் கலந்த கர்ஜித்தல் அனைத்தும் குழந்தைக்கு கடத்தப்பட. உள்ளுக்குள் அது உதைக்க தொடங்கியது. இரு கைகளாலும் இறுக்க பற்றிக் கொண்டு “பேபி… ஆல் இஸ் வெல்!! ஒன்னுமில்ல.. ஒன்னுமில்ல!! டோண்ட் பேனிக்!!” என்று முணுமுணுத்தாள்‌.

“சொல்லுடி.. சொல்லு!! அதனால எவ்வளவு அர்த்தங்கள் தெரியுமா? ஏன் இந்த துரோகத்தை பண்ண? யாரும் கேட்டு இப்படி செஞ்ச?? அப்படின்ன உனக்கு என் தலா மேல குரோதம்.. வெறுப்பு?” என்று அவள் முன்னால் இருந்த மேசையின் மீது அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாத்திரங்களை வேகமாக தட்டி விட்டவன், குனிந்து அவள் புறம் கூர்ந்து பார்த்து கேட்க.. அவனின் அந்த கோபம் மிகுந்த பார்வையில் உடம்பெல்லாம் உதறத் தொடங்கியது அவளுக்கு.

ஈசனின் கோபத்தை ரௌத்திரத்தை எட்டி இருந்து தூர இருந்து பார்த்திருக்கிறாள். அப்போதெல்லாம் ஒரு அநியாயத்தை கண்டு பொங்கும் அவனின் அந்த ஆளுமையும் தோரணையும் மட்டுமே அவளுக்கு தெரிந்திருக்க.. அந்த கோபத்தின் தீயை இன்று அருகில் கண்டவளால் தாங்க முடியவில்லை. அந்த பரமேஸ்வரனின் மூன்றாவது கண் திறந்தது போல அவனது கோபம் இவளை கொஞ்சம் கொஞ்சமாக எரித்துக் கொண்டிருந்தது.

“சொல்லுடி.. சொல்லு!!” என்று வேக வேகமாக அவன் நல்ல மேசையில் தட்ட…

“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க!!” என்று மெல்லிய குரலில் கெஞ்ச..

“இன்னும் நீ சொல்ல ஒன்னுமே இல்ல!! வாயைத் திறக்கவே கூடாது நீனு” என்று உறுமினான்.

அங்கே இங்கே வேகமாக அந்த அறையிலேயே அவன் நடைப்பயின்று கொண்டிருக்க… மெல்ல அந்த இருக்கையில் இருந்து எழ முயன்றாள். ஆனால் அவளால் சட்டென்று எழ முடியவில்லை மெதுவாக திரும்பி நிமிர்ந்து அமர்ந்தாள்.

“ஈசன் சார்… கொஞ்சம் நான் சொல்றதை காது கொடுத்து கேளுங்களேன்.. ப்ளீஸ்!!” என்றதும் அவளை உக்கிரமாக முறைத்தான்.

“சார்.. அந்த டைம்ல அவங்க ஏற்கல கண்டிப்பா ஒரு குழந்தைக்கு தாயாக முடியாது என்று உங்ககிட்ட சொல்லி இருந்தேனே… நானும் என்னோட எல்லா உழைப்பையும் கொடுத்து தான் ட்ரை பண்ணுனேன். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வி!! அடுத்த ஒரு தோல்வியை அவங்களால தாங்கிக்க முடியாது நினைச்சு தான் எப்படியும் ஒரு டோனர் கிட்ட இருந்து பண்றோம் அது ஏன் நானா இருக்கக்கூடாதுனு…” என்று கடைசி வரிகளை அவள் மென்று விழுங்க.. அவன் பார்த்து பார்வையில் தானாகவே தலை குனிந்தாள் ரதி.

“நான் அவங்களுக்கு நன்மை தானே செய்தேன்!! ஆனால் ஏன் இப்படி என்னை இங்கு… எனக்கு… ஒன்னும் புரியல.. உங்களுடைய இந்த கோபம் ரௌத்திரம்…” என்று கலங்கிய குரலில் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் பேச.. அவளையும் மீறி கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

“எது நன்மை?? எது நன்மை?? நீ கொடுத்தது உன்னோட ஓவர் மட்டுமல்ல… உன்னுடைய பிளட் குரூப்பையும் என் பொண்ணுக்கு கொடுத்து இருக்க..” என்றவனின் பேச்சு அவளுக்கு சுத்தமாக புரியவில்லை. அப்பாவினுடைய ப்ளட் குரூப் குழந்தைகளுக்கு போவது போல.. சில சமயம் அம்மாவின் ப்ளட் குரூப்பும் போவது இயற்கையே!! அதிலும் பயாலஜிக்கல் மதராக மானஸாவுக்கு இவள் இருக்க.. இவளின் குரூப் போனால் என்ன பாதிப்பு என்று புரியாமல் அவனைப் பார்த்தாள். அவளுக்கும் தெரியும் அவளின் இரத்த வகை அரிதென்று!!

“பிளட் குரூப்… உன்னோடது வெரி வெரி ரேர்…” 

“சோ?? வாட்??” என்றாள்.

“அதோடு சேர்ந்து அவளுக்கு காண்ஞைட்டல் ஹார்ட் டிஸிஸூம் இருக்கு பிறந்ததிலிருந்து…”

என்றதும்,

“என்ன…??* என்று அவள் திகைத்து எழுந்து நிற்க.. 

எழுந்த நின்றவளை கோபத்தில் எரித்தவன் பார்வை.. அவளது பெரும் வயிற்றில் பதிய.. தன் பார்வையை வம்படியாக திருப்பிக் கொண்டான்.

“ராட்சசி!! உன்ன மாதிரி ஒரு அரக்கியை நான் பார்த்ததே இல்லை” என்று மேலும் அவள் மீது கோபத்தை வளர்த்துக் கொண்டான்.

அவன் திட்டியதையும் கோபத்தையும் பொருட்படுத்தவில்லை. மானஸாவுக்கு இதய கோளாறு என்றவுடன் பதைப்பதைத்தது அவளது உள்ளம். மெல்ல “அவளுக்கு என்ன நடந்தது? எனக்கு ஒன்னும் புரியல கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்!!” என்று கிட்டத்தட்ட கதறினாள்.

அவன் வரும்போது எடுத்து வந்திருந்த மானஸாவின் மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்து அவள் மூஞ்சிலேயே விசிறியடித்தான்.

அவன் தன்னை அவமானப்படுத்தியது தன்னிடம் கோபமாக நடந்து கொண்டதெல்லாம் அவளுக்கு பொருட்டாகவே இல்லை மனசின் உடல்நிலை முன்பு!!

அவசரமாக அதை பிரித்து படித்தவள் அதிர்ந்த பார்வையோடு அவனைப் பார்க்க..  விட்டால் அவளை அடித்து நொறுக்கி விடுபவன் போல அத்தனை கோபத்தோடு பார்த்தான்.

அந்த கோப்பில் மானஸாவுக்கு பெருநாடியின் ஒருங்கிணைப்பு நோய் என்ற நோய் என்று குறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இருப்பவர்களுக்கு… பெருநாடியின் ஒரு பகுதி மிகவும் குறுகியதாக இருக்கும். இது உடலுக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கலாம் அல்லது தடுக்கலாம். இதயத்திலிருந்து இரத்தத்தை வெளியேற்ற இதய தசைகள் கடினமாக உழைக்க வேண்டும். இதயத்தில் ஏற்படும் இந்த கூடுதல் மன அழுத்தம் இதய தசையை பலவீனப்படுத்தி மற்ற இதய பிரச்சனைகளை ஏற்படுத்தும். COA உடைய குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். COA உள்ள பல குழந்தைகள் தங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க மருந்து எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.. இதில் எப்போதும் அவளை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். 

அறுவை சிகிச்சை கூட பெரிய பிரச்சனை இல்லை ஆனால் மானஸாவின் அந்த பிளட் குரூப்பை பார்த்ததும் தான் திகைத்து விட்டனர் மருத்துவர்கள்.

மானஸாவின் ப்ளட் குரூப் அவளது பயாலஜிக்கல் அம்மாவான ரதியின் பிளட் குரூப்பை ஒத்திருந்தது.

அது கோல்டன் ப்ளட் என்ற வெகு அரிய வகை!!

வருவோம்ல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *