முகிழும் முத்தங்கள் உன்னோடு
முத்தம் – 24
ஆதவனின் ஒளிக் கரங்கள் பூமிக் காதலியை வருடி ஊடல் முடிந்து கூடல் நிகழ்த்த, இயற்கையின் அழகிய சங்கமத்தில் நாணம் பூண்டு சிவந்தது கீழ் வானம்.
அந்த அழகிய காலைப் பொழுதில் தன் துயில் கலைந்து எழுந்தாள் மிருணாளினி.
தன்னுடைய முகம் அபூர்வனின் மார்பில் புதைந்திருப்பதை உணர்ந்தவள் படக்கென விலக முயல, அபூர்வனின் கரமோ அவளுடைய இடையோடு பயணித்து அவளைத் தன்னோடு இறுகப் பிணைத்திருந்தது.
அவளுடைய ஆடை தாண்டி அவனுடைய கரத்தின் அழுத்தத்தை உணர்ந்தவளுக்கு ஏதோ ஒரு மாய நதியில் மூழ்கியதைப் போல இருந்தது.
உடல் சிலிர்த்தது..!!
அவன் நேற்றைய தினம் தன்னை அணைத்து தாலாட்டுப் பாடி உறங்க வைத்ததை எண்ணி நெகிழ்ந்தவள்,
முதன் முறையாக அவனுடைய கன்னத்தில் தன் கரத்தை ஆசையாகப் பதித்தாள்.
அவன் கேட்ட ஒரே ஒரு முத்தத்தை கொடுத்து விடலாமா..? என எண்ணினாள் அவள்.
அவளுடைய தொடுகையில் விழித்தவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளை காதலோடு பார்த்தான்.
தன் கன்னத்தில் வைத்திருந்த அவளுடைய கரத்திற்கு மேல் தன் கரம் வைத்து அழுத்திக் கொண்டவன் மற்றைய கரத்தால் அவளைத் தன்னோடு இன்னும் இறுக்கிக் கொண்டான்.
“அபூ…” சிணுங்கினாள் மிருணா.
“என்னடி…?” என்றவன் அவளுடைய கழுத்தை வருடினான்.
“ஐ.. ஐ… லைக் யு..” என்றாள் அவள். அந்த வார்த்தைகளில் அவள் காதலே சொல்லியதைப் போல மலர்ந்து மகிழ்ந்து முகிழ்த்தான் அவன்.
தன் மீது கிடந்தவளை படுக்கையில் படுக்க வைத்தவன்,
“இப்போ நான் தேங்க்ஸ் சொல்லணுமே..” என்றான். அவளோ சம்மதமாக விழிகளை மூடிக் கொள்ள, அடுத்த நொடி அவள் மீது படர்ந்தவன் அவளுடைய காதின் மேல் வளைவில் முத்தம் வைத்து, “தேங்க்ஸ் மிரு.” என்க,
அந்த முத்தத்தை ரசித்தவள் அவனுடைய கழுத்தை வளைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டாள்.
“மிரு….?” என அவளுடைய அணைப்பில் அதிர்ந்தவன் அடுத்த நொடியே அவளுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்து குட்டி குட்டி முத்தங்களை கழுத்தில் பதிக்கத் தொடங்கினான்.
அவளின் நெகிழ்ச்சியும் குழைவும் அவனை திக்கு முக்காடச் செய்தது.
அவளுடைய முகத்தைப் பார்த்தவன் துடிக்கும் அவளுடைய இதழ்களை தன் விரலால் அழுத்தமாக வருடத் தொடங்கினான்.
குப்பென முகம் சிவந்தவளின் விழிகளில் முத்தம் வைத்தவன், அடுத்த நொடியே அவளுடைய இதழ்களை கவ்விக் கொள்ள, பெரிய ஆழிப் பேரலை ஒன்றில் சிக்கிக் கொண்டாள் அவள்.
அவளுடைய மார்போ படபடத்தது…!!
வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி சிறகடித்தது..!!
உடல் உதறியது..!!
கரம் நடுங்கியது…!!
இமைகள் மூடித் திறந்து நர்த்தனம் ஆடின..!!
திணறித் தகித்தவளின் இடுப்பை அழுத்தமாக பற்றிக் கொண்டான் அபூர்வன்.
அவளுடைய சிவந்த இதழ்களை மென்று அவளுடைய இதழ் தேனை பருகிக் கொண்டிருந்தவனின் கரமோ ஆடைக்கு மேலாக அவளுடைய அங்கங்களைத் தீண்டத் தொடங்கின.
வயிற்றுக்கு மேலே ஏறிய அவனுடைய கரங்களை பதறிப் பிடித்துக் கொண்டவள் வெட்கம் தாங்காது அவனைத் தள்ளி விட்டு எழுந்து ஓட முயன்றாள்.
அவனோ துள்ளி எழுந்து அவளைப் பின்னால் இருந்து இறுக அணைத்தவன், அவளுடைய பின் கழுத்தில் முத்தம் வைத்துக் கொண்டே இருக்க, சட்டென கூச்சம் தாளாது திரும்பி அவன் முகம் பார்த்தாள்.
அவள் திரும்பியதும் அவனுடைய திண்ணிய மார்பில் கச்சிதமாக மோதிக் கொண்டன அவளுடைய மென்மைப் பிரதேசங்கள்.
“அச்சோ…” என அதிர்ந்து விலக முயன்றவளை ஆழ்ந்து பார்த்தான் அபூர்வன்.
அந்தப் பார்வையில் அவளுக்கோ சகலமும் உருகிக் கரைந்தது.
“எ… என்ன இது..? ஏன் இப்படிப் பார்க்கிறீங்க..?”
“நீயே கண்டு பிடியேன்.” என்றான் அவன்.
“ஏ… ஏனாம்..? நீங்க சொல்ல மாட்டீங்களா..?” எனக் கேட்டாள் அவள்.
“ம்ஹூம்.. என் கண்ணுல என்ன தெரியுதுன்னு நீயேதான் கண்டு பிடிக்கணும் மிரும்மா.” என்றவன் அவளுடைய டீஷர்ட்டை இழுத்தான்.
“அச்சச்சோ…” பதறியவளின் இதழ்களில் மீண்டும் முத்தம் வைத்தவன் அவளைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டான்.
“என்னை எ.. என்ன பண்ணப் போறீங்க.?” திணறினாள் அவள்.
“ஹா… ஹா… கதம் கதம் பண்ணப் போறேன்.” என்றவாறு அவளை சோபாவில் கிடத்தியவன் அவள் மீது படர்ந்தான்.
“இ.. இங்கேயா..? ஏ.. ஏன்.?”
“என்ன மிரு.?”
“சோபால ஏன்.?” என விழிகளை மூடியவாறு கேட்டாள் அவள்.
“பெட் ரொம்ப பெருசா இருக்குடி.. நீ கொஞ்ச நேரம் கூட என்னை விட்டு தள்ளிப் போயிரக் கூடாது மிரு..
சோபான்னா ஒருத்தருக்கு மேல ஒருத்தர் ஒன்னாவே இருக்கலாம்ல.” என கரகரப்பான குரலில் கூறியவன் முத்த வேட்டையை ஆரம்பித்தான்.
அவன் கட்டிலுக்கும் சோபாக்கும் கொடுத்த விளக்கத்திலேயே செங் கொழுந்தாக மாறிப் போனவள் அவனுடைய கரத்தில் வெட்கம் தாங்காது நறுக்கென கிள்ளினாள்.
“ஸ்ஸ் ஆஆஆ..” என அலறிச் சிரித்தவனின் கரம் எல்லை தாண்டியது.
“அபூஊஊ ப்ளீஸ்.” என தவித்தவளை ஆதரவாக அணைத்துக் கொண்டவன்,
“ப்ளீஸ் மிரு ஐ நீட் யு..” என்றான்.
“ம்ம்…” என முனகினாள் அவள். அவள் விழிகளைத் திறக்கவே இல்லை.
அவனுடைய கரம் அவளுடைய டீஷர்ட்டை மேலே உயர்த்துவதை உணர்ந்து அவளுக்கோ உடல் நடுங்கியது.
“ஓ மை மிரும்மா..” என்றவன் சட்டென தன் கையை விலக்கி நடுங்கும் அவளை தூக்கி தன் மார்பில் போட்டுக் கொண்டான்.
“ஈஸிடா.. ஈஸி… ரிலாக்ஸ்..” என அவளுடைய கூந்தலை வருடி விட, அவளுடைய நடுக்கமோ மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.
“என்கிட்ட உனக்கு என்ன பயம் மிரு.?” என அவளுடைய கூந்தலை வருடியவாறே கேட்டான் அவன்.
“ம்ஹூம்..” என்றாள் அவள்.
“ஏய் என்ன கொல்லாத மிரு.. சத்தியமா முடியலை.. நீ இப்பவே வேணும்னு ஒவ்வொரு செல்லும் துடிக்குது. பட் உன்னோட பதற்றம் என்னை தடுக்குது..! நான் என்னடி பண்ணட்டும்.? உனக்கு டைம் தேவைன்னா எடுத்துக்கோ மிரும்மா..” என்றவன் காதலாய் ஓர் கன்னத்து முத்தத்தோடு விலகி எழ,
சட்டென அவனுடைய கரத்தை பிடித்து இழுத்தவள் அவனை வெட்கத்தோடு இறுக அணைத்துக் கொண்டாள்.
அவளுடைய சம்மதம் புரிந்த அடுத்த கணம் அவள் மீது அழுத்தமாக படர்ந்து மூச்சு முட்ட முத்தங்களைக் கொடுத்தவன், அவள் அணிந்திருந்த டீஷர்ட்டின் முதல் இரண்டு பட்டன்களைக் கழற்றியவன், பொறுமை இழந்து அந்த ஆடையை தலை வழியே கழற்ற முயல,
விழி மூடி நாணி இருந்தவளின் நினைவுகளில் முதன் முறையாக சந்தித்த அபூர்வனின் நினைவு மேல் எழுந்தது.
அன்று நடு வீதியில் யாரோ ஒரு பெண்ணை அவன் துரத்திச் சென்று முந்தானையை இழுத்து எடுத்தது நினைவு வர, விதிர் விதிர்த்துப் போனாள் மிருணாளினி.
அடுத்த நொடியே, “ச்சீஈஈ…” என சீறியவள்,
தன்னுடைய டீஷர்ட்டை கழற்றியவனை முழு வேகத்தில் தள்ளிவிட, அவள் இப்படித் தள்ளுவாள் என கிஞ்சித்தும் எதிர்பாராத அபூர்வனோ சோபாவில் இருந்து கீழே விழுந்தான்.
அவன் கீழே விழுந்ததைக் கூட உணராதவள் சட்டென தன்னுடைய ஆடையை அணிந்து கொண்டாள்.
அதன் பின்னரே கீழே தரையில் இருந்த அபூர்வனைக் கண்டு பதறிப் போனாள் மிருணா.
“ஐயோ…” என்றவாறு அவனை நெருங்க முயல, படபடவென கதவு தட்டும் சத்தம் கேட்டது அவளுக்கு.
அபூர்வனின் விழிகளோ கலங்கிப் போயிருந்ததைக் கண்டு துடித்துப் போனாள் மிருணா.
அவள் அபூர்வனை நெருங்க சட்டென விலகி பின்னால் நகர்ந்தான் அவன்.
“அபூ..” என அவனை மேலும் நெருங்க, மீண்டும் படபடவென தட்டப்பட்டது அவர்களுடைய அறைக் கதவு.
சட்டென தன் ஆடையைச் சரி செய்தவள் கூந்தலை அள்ளிக் கொண்டையாக முடிந்து விட்டு தன் முகத்தை அழுத்தி துடைத்த பின் கதவைத் திறந்தாள்.
அபூர்வனோ அவளுடைய செயலில் மொத்தமாக உடைந்து போனான். அவள் இன்னும் தன்னை முழுவதும் ஏற்கவில்லை என்பது புரிய, துவண்டு சோர்ந்த தன் மனதை தேற்ற முயன்றான் அவன்.
உள்ளே யாரோ கத்தியால் பிராண்டியதைப் போல வலிக்க, கலங்கிய விழிகளை இறுக மூடித் திறந்தவன் தன்னுள் பொங்கிக் கொண்டிருந்த உணர்வுகளை அடக்க வழி தெரியாது சிரமம் கொண்டான்.
அதே நேரம் அவனுடைய பர்சனல் எண்ணுக்கு மெசேஜ் வந்த ஒலி கேட்க, அதனை எடுத்து திறந்து பார்த்தவனின் விழிகள் அப்படியே அலைபேசியின் தொடு திரையில் நிலை குத்தி நின்றன.
அவனுடைய தொலைந்து போன பணம் எங்கே எவரிடம் உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட, அவனுக்கோ சரேலென வழிந்தது ஒரு துளிக் கண்ணீர்.
இதயம் உடைந்துதான் போனது.
விழிகள் சிவந்துதான் போயின.
வாய் திறந்து கதறி விடுவோமோ என்ற பயத்தில் அவனுடைய அதரங்கள் அழுத்தமாகி மடிந்தன.
யாருக்கும் கெடுதல் நினைக்காத அந்த அப்பாவி ஆண் மகன் உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மரணித்துக் கொண்டிருந்தான்.
அதே நேரம் தன்னை சீர் படுத்திக் கொண்டு கதவைத் திறந்த மிருணாவோ கலங்கிய முகத்தோடு வெளியே நின்ற ரதியைக் கண்டு திகைத்தாள்.
“உ.. உள்ளே வாங்க அத்த.” என அழைத்தாள் அவள்.
அவருடைய பார்வை அவளுடைய கழன்று கிடந்த டீஷர்ட்டின் முன் இரண்டு பட்டன்களையும் பார்த்து விட்டு திரும்ப, சட்டென பட்டன்களை பூட்டிக் கொண்டவளோ வெட்கிப் போனாள்.
முகம் அவமானத்தால் சிவந்தது. இனம் புரியாத கோபம் அபூர்வனின் மீது தோன்றி மறைந்தது.
ரதியோ அதை எல்லாம் கவனிக்கும் மன நிலையிலேயே இல்லை. அவருடைய முகமோ பதற்றத்தை குத்தகைக்கு எடுத்திருந்தது.
“அபூர்வாஆஆஆ டேய் வெளியே வாஆ..” என உரத்த குரலில் அழைத்தார் அவர்.
தனக்குள்ளேயே மருகி மருகி துடித்துக் கொண்டிருந்த அபூர்வனுக்கு அன்னையின் குரல் செவிதனை எட்டவே இல்லை.
உயிரானவளின் “ச்சீ…” என்ற வார்த்தையில் துடித்துப் போனான் அவன்.
அவளின் சிறு முகச் சுளிப்பே அவனை உயிரோடு கொன்று விடும். அப்படி இருக்கையில் அவள் ச்சீ எனக் கூறி அவனைத் தள்ளியதில் பாதி செத்திருந்தான் அவன்..
இத்தனை நாட்களாக பணத்தை எவனோ ஒருவன் கொண்டோடி விட்டதாக எண்ணி ஏமாந்து பல வலிகளையும் அவமானங்களையும் சந்தித்து துவண்டு போய் இருந்தவனுக்கு தன்னை ஏமாற்றியது யாரோ ஒருவன் அல்ல. தன் கூடப் பிறந்த சகோதரன் எனத் தெரிந்ததும் பழுக்க காய்ச்சிய கம்பியை நேரடியாக தன் இதயத்தில் சொருகி துளை போட்டதைப் போல வலித்தது.
உறவுகள் என்றால் மேன்மை அல்லவா..?
இங்கே உறவுகள்தான் அவனை வலிக்க வலிக்க அடிப்பதை உணர்ந்தவன் இடிந்து போய் அமர்ந்திருந்தான்.
“அண்ணா… ஏன்..? நான் உன்னோட த… தம்பிதானே..? என் மேல உ.. உனக்கு அன்பே இல்லையாண்ணா..? ஏ.. ஏன்டா..?” என தனக்குத் தானே தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் அபூர்வன்.
மன அழுத்தத்தின் உச்சத்தை தொட்டிருந்தான் அவன்.
எதிரிகளாக இருந்தால் வலிக்க வலிக்க கருவறுத்திருப்பான் நம் நாயகன்.
ஆனால் அவனுக்கு தூரோகம் இழைத்தது அவன் அன்பு பூண்ட சகோதரன் அல்லவா..?
உறவுகளால் அவனுடைய உணர்வுகள் அக்கணம் மாண்டு போயின.
உணர்வுகளால் மாண்டு போனவனை உடலாலும் மாள வைக்க, அவர்களுடைய வீட்டின் ஹாலில் காத்திருந்தாள் வீணாவின் தோழி பவித்திரா.
💜💙💙💜
