முகிழும் முத்தங்கள் உன்னோடு
முத்தம் – 19
எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டு என்னை முத்தமிட்டதும் இல்லாமல் ‘நான் கெட்டவன்தான்’ எனக் கூறிச் சென்ற அபூர்வனை எண்ணி அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
அவன் தன் தலை முடியை அழுந்தக் கோதியவாறு செல்ல, அந்த கேசத்தை தன் கரங்களால் பிய்த்து எறிய வேண்டும் போல இருந்தது அவளுக்கு.
அவன் செய்த செயலில் அவன் மீது அளவு கடந்த வெறுப்பு உண்டாகியது.
அவன் கொஞ்சும் அழகில் அவன் மீது அளவு கடந்த விருப்பும் உண்டாகியது.
வெறுப்புக்கும் விருப்புக்கும் இடையே நின்று திண்டாடும் நிலையில் இருந்தாள் மிருணாளினி.
நான் கண்ணீர் சிந்தினால் அவனுக்கு வலிக்கிறதாமே..!
சட்டென தன் விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள் அவள்.
அவனுடைய இதழ்கள் தீண்டிய தன்னுடைய செவ்விதழ்கள் குறுகுறுக்க, புறங்கையால் அழுத்தி துடைத்து அவனுடைய முத்தச் சுவட்டை அழிக்க முயன்றாள்.
இதயம் தீண்டிய அவனுடைய முத்தத்தின் சுவடு அத்தனை இலகுவில் அழிந்து விடுமா என்ன.?
அதிலும் முயன்று தோற்றுத்தான் போனாள் பேதை.
அவளை இந்த நிலையில் கொண்டு வந்து விட்டவன் பஞ்சு மெத்தையில் படுத்து சொகுசாக உறங்குவதைக் கண்டதும் வெகுவாக சினம் உதித்தது அவளுக்குள்.
‘என்னை நீங்க என்ன பண்ணி வெச்சிருக்கீங்க அபூர்வன்.? என்னோட பலவீனம் அன்புன்னு தெரிஞ்சு அதை அள்ளிக் கொடுத்து என்னை ஏமாத்தப் பார்க்கிறீங்களா.?’ என எண்ணியவள் அவன் மீது மீண்டும் கோபத்தில் தகித்தாள்.
இன்று இரவு முழுவதும் அவள் வெந்து தணிந்து ஏமாற்றத்தின் வலியில் மாளப் போவது உறுதி என எண்ணியவாறு வெறுப்போடு சோபாவில் இருந்து எழுந்தவளை, “மியாவ்….” என்ற ஒலி தடுத்து நிறுத்தியது.
அப்படியே நின்று விட்டாள் மிருணாளினி. தன் அறையை சுற்றிலும் பார்த்தவள் அபூர்வனையும் பார்த்தாள்.
அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
பெரு மூச்சோடு பால்கனி நோக்கி நடக்க முயன்றவள் மீண்டும் கேட்ட, “மியாவ்… மியாவ்…” என்ற சத்தத்தில் உள்ளம் துள்ள அப்படியே நின்றாள்.
“மியாவ்வா…????? ஹே பூனைக் குட்டியா…?” என தன்னை மறந்து கத்தியவள் சட்டென தன் கரங்களால் தன் வாயை இறுக மூடிக் கொண்டு அபூர்வன் எழுந்து விட்டானா எனப் பார்த்தாள்.
அவனோ அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். பின் சத்தம் வந்த திசைப் பக்கம் பார்க்க, அங்கே இருந்த ஒரு ப்ளாஸ்டிக் கூடையைப் பார்த்தவள் குடுகுடுவென அதனை நோக்கி ஓடத் தொடங்கினாள்.
மேலே பரிசுப் பொதி போல சுற்றிக் கட்டியிருந்த நீல நிற ரிப்பனை கழற்றியவள் முகம் முழுக்க புன்னகையோடு அந்தக் கூடையைத் திறந்தாள்.
உள்ளே உருண்டைக் கண்களோடு வெள்ளை, சாம்பல், தங்க நிறம் என பல வர்ணங்கள் கலந்த கலவையில் புசு புசுவென்ற அடர்த்தியான முடியோடு அவளைப் பார்த்துக் கத்தியது ஒரு அழகான பூனைக் குட்டி.
பார்த்ததும் சொக்கிப் போய் கன்னத்தில் கை வைத்தவாறு நின்றே விட்டாள் நம் நாயகி.
“வாவ்… ஐ கான்ட் ப்லீவ் திஸ்…” என சிலிர்த்தவாறு அந்த பூனையைத் தொட முயன்றவள்,
“ரோட்ல இருக்க பூனையைத் தூக்கிட்டு வந்தீன்னா அதை அடிச்சே கொன்னுருவேன் ஜாக்கிரதை..” என பள்ளிப் பருவத்தில் தன் தந்தை மிரட்டியது நினைவு வர, சட்டென தன் கையை இழுத்துக் கொண்டாள் அவள்.
அந்தப் பூனைக் குட்டியோ “என்னைத் தூக்கேன்…” என்றவாறு அவளைப் பார்த்துக் கத்த,
“இங்கேதான் நம்ம டாடி இல்லையே.” என குதூகலித்தவள் அள்ளி அணைத்துக் கொண்டாள் அந்த தங்கக் குட்டியை.
“அச்சோ தங்கமே புசு புசுன்னு இருக்கியேடா பட்டு பட்டு பேபி… ஆவ்…” என அதனை அணைத்து கொஞ்சிக் கொண்டிருந்தவளை தூங்குவது போல பாவ்லா செய்து கொண்டிருந்த அபூர்வனோ இமை சிமிட்டாது ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“டேய் பட்டு பேபி… நான்தான் உனக்கு மம்மி ஓகேவா..? என்கூட விளையாடுவீங்களா பேபிமா.” என அதனுடைய மூக்கை தொட்டு பேசிக் கொண்டிருந்தவளின் அழகில் அபூர்வனுக்குள் ஏகப்பட்ட இரசாயன மாற்றங்கள்.
அவளுடைய பேச்சு அவனுக்கு சிரிப்பையும் ஒருங்கே வர வைத்தது.
‘உன்னோட பட்டு பேபிக்கு நீ அம்மான்னா நான் அப்பாவா..?’ என எண்ணியவனுக்கு இதழ்கள் சிரிப்பில் துடித்தன.
“டேய் பட்டு பேபி நீ ஆம்பிள பூனைக் குட்டியா..? இல்ல பொண்ணா..? எப்படி கண்டு பிடிக்கிறதுன்னு தெரியலயே..” என்றவாறு பூனையைத் தூக்கி புரட்டிப் பார்க்க, குபீர் என சிரித்தே விட்டான் அபூர்வன்.
அவனுடைய சிரிப்பில் அதிர்ந்து அவனைத் திரும்பிப் பார்த்தவள் முறைத்தாள்.
‘இவர் தூங்கவே இல்லையா..? சரியான பிராடு.’ என மனதுக்குள் திட்டியவள் தன்னுடைய பட்டு பேபியை கையில் தூக்கிக் கொண்டு வந்து படுக்கையில் அமர்ந்தாள்.
“மம்மி கூட பெட்ல தூங்குங்க..” என்றவளை “எதே…” என்றவாறு பார்த்தான் அவன்.
அதுவோ அவர்களுடைய படுக்கையில் துள்ளி குதித்து அங்கும் இங்குமாக ஓடித் திரிய, இத்தனை நேரமும் அவளுடைய முகத்தில் இருந்த ஏமாற்றமும் வலியும் மறைந்தே போயிருந்தது.
அதை உணர்ந்து நிம்மதி கொண்டவன்,
“பிடிச்சிருக்கா மிரு…?” எனக் கேட்டான்.
“ரொம்ப… ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றவள் அவனை சந்தேகமாக பார்த்தாள்.
“எனக்கு பூனைக் குட்டின்னா பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்.?”
“நீதான் காலேஜ்லையே…” என்றவன் சட்டென தன் பேச்சை மாற்றினான்.
“காலேஜ்ஜா…? என்ன காலேஜ்..?” என புருவம் உயர்த்தினாள் அவள்.
“நத்திங் மிரு.. அன்னைக்கு உங்க அப்பா கூட பேசும் போது பூனை பிடிக்கும்னு சொன்னேல்ல அப்போதான் தெரியும்.” என்றான் அவன்.
“ஓஹ்….”
“ம்ம்…”
“தேங்க்ஸ் அபூ…” என்றவாறு படுக்கையில் சரிந்தவளின் இரு பக்கமும் கரத்தை ஊன்றி அவளுடைய முகத்தை ஆழ்ந்து பார்த்தான் அபூர்வன்.
“எ… என்ன…? தள்ளிப் போங்க.” என்றாள் அவள்.
அவனது ஆழ்ந்த பார்வையில் அழையா விருந்தாளியாக பதற்றம் வந்து ஒட்டிக் கொண்டது அவளுக்கு.
“நீ தேங்க்ஸ் சொன்னது தெளிவா கேக்கலை மறுபடியும் சொல்லு.” என்றான் அவன்.
“ஹாங்…!!!??” என விழித்தாள் அவள்.
“ஒரே ஒரு தேங்க்ஸ்தானே சொல்லிரு மிரு…” என்றான் அவன்.
“தே… தே… தே….”
“என்ன தேனா…?”
“ப்ச் இ… இல்ல தே… தேங்…”
“என்ன தேங்காயாஆஆ…?” என நகைப்போடு கேட்டவனை முறைத்தவள்,
“ம்ஹூம் தே… தே.” என மீண்டும் அவனுடைய அதி நெருக்கத்தில் திணற, சிரிப்போடு அவளைப் பார்த்தவன் தன் இதழ்களை தொட்டுக் காட்டி,
“உன்னோட தேங்க்ஸை என்னோட லிப்ஸ் உணரணும்..” என்றான்.
“ஹாங்…” மீண்டும் பதறி விழித்தாள் அவள்.
“ஏன்டி டென்ஷன் ஆகுற…?”
“வாடி போடீன்னா பல்லைப் பேத்திருவேன்..” சீறினாள் அவள்..
“இத மட்டும் நல்ல வக்கனையா பேசு.. ஒரு தேங்க்ஸ் சொல்லத் தெரியல.” என கேலி செய்தான் அவன்.
“நான் கோபமா இருக்கேன். போங்க.” என சீறியவாறு எழ முயன்றவளின் வயிற்றில் தன் உள்ளங்கையை பதித்து அவளை மீண்டும் படுக்கையில் படுக்கச் செய்தவன், அவளுடைய விழிகளை ஆழ்ந்து பார்க்க, அவளுக்கோ கூசிப் போனது.
“ப்ளீஸ் கையை எடுங்க… கூ… கூசுது.” என நெளிந்தாள் அவள்.
அவனுடைய முகமோ கிறங்கிப் போயிருந்தது. அவளுடைய வயிற்றில் மென்மையாக வருடியவன் அவள் அணிந்திருந்த டீஷர்ட்டின் உள்ளே கை நுழைத்து அவளுடைய வெற்று வயிற்றை வருட, அவளுக்கோ உடல் தூக்கிப் போட்டது.
அவனுடைய விரல்கள் வயிற்றிலும் இடுப்பிலும் வருடி… இஞ்ச் இஞ்ச்சாக அந்த இடத்தை தொட்டு உணர, அவனுடைய கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள் மிருணா.
“வ்வேணாம்… ப்ளீஸ்…” என முணுமுணுத்தவளின் மேல் பட்டும் படாமலும் படர்ந்தவன்,
“உன்னோட பட்டு பேபியை மட்டும்தான் அணைச்சிப்பியா மிரு…? அவனை மட்டும்தான் கொஞ்சுவியா..?
என்னைலாம் ஹக் பண்ண மாட்டியா…? எனக்கு சின்ன தேங்க்ஸ் கூட இல்லையா ம்ம்…?” எனக் கேட்டவனுடைய மீசை அவளுடைய கழுத்து வளைவில் உரச, அவனுடைய நெருக்கத்தில் திக்கித்துப் போனாள் அவள்.
அவளுடைய கழுத்து வளைவில் தன்னுடைய கன்னத்தை இழைத்து அதிலேயே கிறங்கிப் போனான் அவன்.
அவனுடைய கரம் வேறு ஆடைக்குள் நுழைந்து அவளை படுத்தி எடுக்க, விழிகளை இறுக மூடிக் கொண்டாள் அவள்.
“மிரு….”
“ம்ம்….?”
“ஓபன் யுவர் ஐஸ்…”
“நோ…”
“ப்ளீஸ்…”
“மாட்டேன்…”
“நீ கண்ணைத் திறக்கலைன்னா நான் தேங்க்ஸ் சொல்லிருவேன்.” என்றதும் படக்கென விழிகளைத் திறந்தாள் அவள்.
“வாவ் நான் சொன்னதும் திறந்துட்டியே. இதுக்கு நான் தேங்க்ஸ் சொல்லியே ஆகணுமே…” என்றவாறு அவளுடைய இதழ்களை நோக்கிக் குனிந்தவனைப் பார்த்து
“ஐ ஹேட் யு அபூர்வன்…” என்றாள் மிருணா.
முத்தமிட முயன்றவனோ அந்த வார்த்தைகளின் தாக்கத்தில் அப்படியே அசைவற்றுப் போனான்.
“மிரூஊஉஉ…” என்றவனின் குரல் உருக்குலைந்து போய் வெளிப்பட்டது.
“எனக்கு உங்களை சுத்தமாப் பிடிக்கலை.” என அழுகையோடு கூறியவள் தன் வயிற்றில் இருந்த அவனுடைய கரத்தை தட்டி விட்டாள்.
“வேணாம் மிரு… தாங்க மாட்டேன்டி.” என்றவனின் விழிகள் கலங்கிப் போயின.
💜💙💙💜
அந்தக் கூடையில் இருந்தது பூனைக்குட்டின்னு சூப்பரா கண்டு பிடிச்சிட்டீங்களே
செம தங்கம்ஸ்
இச்சாஸ் 😍😍😍💜😘
உங்க கமெண்ட்ஸ்லாம் படிச்சு எனக்கும் நம்ம அபூர்வனோட ஸ்டைல்ல நன்றி சொல்லணும் போல இருக்கே 😍😍
ஹி ஹி
கமெணட்ஸ் பண்ண தங்கங்களுக்கு நன்றி நன்றி 😘🙈🙈
