என் மனம் கொய்தவளே

This entry is part 14 of 27 in the series என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

18 என் மனம் கொய்தவளே 

இருளை களைந்து வெளிச்சத்தை உலகுக்கு பரட வைத்தான் பகலவன். ருத்ரன் மார்பில் சாய்ந்து உறங்கும் ராகினியை சற்று தள்ளி படுக்க வைத்து விட்டு  குளியலறை சென்றான். ராகினி மெல்ல மெல்ல கண் திறந்து எழ பார்த்தாள். அவளிருக்கும் கோலத்தை பார்த்து வெட்கம் கொண்டு அவள்மேல் போர்த்தியிருந்த போர்வையால் அவள் உடலை மறைத்து கொண்டு குளியலறையை  சென்றாள்.

ருத்ரன் அப்போதுதான் குளியலறையிலிருந்து வெளியே   வந்த ருத்ரன் ராகினியின் கோலத்தை  பார்த்து சிரித்து விட்டான்.

ராகினி ருத்ரன் சிரிப்பதை பார்த்து “ஏன் இப்படி பித்து பிடித்த மாதிரி சிரிக்கிறீங்க மாமா என்று கேட்டுக் கொண்டே  அவன் அருகில் வர.. ருத்ரன்  அவளை தூக்கிக் கொண்டு மறுபடியும் அவளை கட்டிலில் சரித்து மீண்டும் ஒரு கூடலுக்கு வழி வகுத்தான்.  அவளை பேசவே விடவில்லை..காலை 8 மணியாகியது. கூடல் முடித்து ராகினி மெதுவாக எழுந்து குளியலறை சென்று குளித்து விட்டு  அம்மாவிடம் சென்றாள். பிரபாவதி தன் மகளின் முகத்தில் இருக்கும் சந்தோசத்தை வைத்து அவர்கள் சேர்ந்து விட்டனர் என்று எண்ணிக்கொண்டார். அதே நேரம் தாமரையை நினைத்து தாயின் மனது கவலைப்பட்டது.

“மாப்பிள்ளைக்கு டீயை கொண்டு போய் கொடுமா” என்று ராகினியிடம் கொடுக்க.. அவள் டீயை  எடுத்து கொண்டு அவளறைக்கு சென்றாள். ருத்ரன் குளித்து விட்டு அங்கு கட்டிலில் அமர்ந்திருந்தான்.  அவள் டீயை கொடுக்க வாங்கிக் குடித்து விட்டு.. “நாம மதியம் போல வீட்டுக்கு கிளம்பலாம்”என்று கூறினான் .

“சரிங்க” என்று எழபார்க்க அவளை இழுத்து உதட்டில் அழுந்த முத்தமிட்ட பிறகே அனுப்பி வைத்தான். 

“நீங்க ரொம்ப மோசம் மாமா” என்று சிணிங்கி கொண்டே சென்றாள் ராகினி 

ராஜதுரை மட்டன், சிக்கன், மீன் என்று அனைத்து வகை அசைவமும் எடுத்து வந்திருந்தார். பிரபாவதி தன் கைபக்குவத்தில் ருசியாக சமைத்து வைத்து ராகினியையும் ருத்ரனையும் சாப்பிட அழைக்க, அவர்களிருவரும் சாப்பிட வந்தனர்.  ருத்ரன் வகை வகையாக சமைத்து வைத்த பதார்த்தங்களை பார்த்து மலைத்து போய்விட்டான். 

“அத்த என்ன இவ்வளவு ஐட்டம் செய்திருக்கீங்க” என்று கேட்க..

புதுமாப்பிள்ளைக்கு எங்க ஊர்ல இது மாதிரி செய்வதுதான் வழக்கம்” என்று கூறினார்.

பிரபாவதி இருவருக்கும் மட்டன் வறுவல், சிக்கன் குழம்பு, மீன் பிரை போன்றவற்றை பரிமாற இருவரும் சாப்பிட முடியாமல் சாப்பிட்டனர். ஹாலில் ராஜதுரை அமர்ந்திருந்தார்.  ருத்ரன் ராஜதுரையின் அருகே சென்று “மாமா நாங்க மதியம் ஊருக்கு கிளம்புறோம்” என்று சொல்ல, 

“சரி நீங்க கிளம்பறதுக்கு முன்னாடி என்னை வந்து பாருங்க” என்று சாப்பாட்டு மேஜைக்கு சென்று விட்டார்.

ருத்ரன் ராகினியை அழைத்துக் கொண்டு தோட்டத்தில் சிறிது நேரம் நடைபயின்றான்.  மதியமானது.. ராஜதுரையிடம் நாங்க ஊருக்கு கிளம்புறோம் என்று சொல்ல..

ராஜதுரை பிரபாவதியை அழைத்து தாம்பூலத் தட்டில் தேங்காய் பழம், வெற்றிலை பாக்குக்குடன் பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டுப்புடவை, அதற்கு மேல் 5 லட்சம் பணத்தை வைத்து ருத்ரனிடம் கொடுத்தார்.

ருத்ரன் ராகினியை பார்க்க அவள் “அப்பா எங்களுக்கு பணமெல்லாம் வேண்டாம்” என்று சொல்ல.   “இது உனக்கு கொடுக்க வேண்டிய சீர்.. வேண்டாம்னு  சொல்லாம அப்பா கொடுக்கறதை வாங்கிக்கோ என்று ஆணையிடுவது போல சொன்னார் பிரபாவதி .

ருத்ரன் இதற்குமேல் வாங்காமல் இருந்தால் மரியாதையாக இருக்காது என்று நினைத்து “அத்தை நீங்களும் மாமாவும் சேர்ந்து நில்லுங்க” என்று இருவர் காலிலும் விழுந்து வணங்கி விட்டு வாங்கி கொண்டனர் . சிறிது நேரம் இருந்து விட்டு மதியத்துக்கு  ருத்ரன் வீட்டுக்குச் கிளம்பிச் சென்றனர்.

லண்டனில்  மாலையானது.. ஆதவ் கபிலிடம் சொல்லி மீட்டிங்கு ஏற்பாடு செய்திருந்தான். மீட்டிங் ஹாலில் அனைவரும் காத்திருக்க ஆதவ்வும் கபிலும் சேர்ந்து வந்தனர். ஆதவ் நாற்காலியில் அமர கபில் அவனுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டான். மீட்டிங்கில் ஆதவ் பேச ஆரம்பித்தான்.

ஆதவன் முதலில் இந்தியாவில் உள்ள அவர்களது நிறுவனத்தைப் பற்றியும் அதை தன் ராகவன் திறம்பட நடத்திக் கொண்டிருப்பதையும் எடுத்துக் கூறி..  இந்தியாவில் உள்ளதை விட நாம லண்டனில் சிறப்பாக கம்பெனியை முன்னுக்கு கொண்டு வரணும் .  அதற்குரிய சில புதிய உத்திகளை கையாள வேண்டும். அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு எனக்கு தேவை.. நீங்க கொஞ்சம் நாட்கள்.. காலம் நேரம் பார்க்கமால் கம்பெனியின் முன்னேற்றத்துக்கு  வேலை செய்து தரணும் .அதற்கு  நீங்கள் எக்ஸ்ட்ரா உழைக்கும் நேரத்திற்கேற்ப ஊதியமும் வழங்கப்படும் என்று கூற. அவர்கள் அனைவரும் ஆதவ்க்கு உதவுவதாக உறுதி கொடுத்து சென்றனர்.


கபில் ஆதவனை வெகுவாக பாராட்டினான்.

“டேய் உன் அண்ணணை போலவே நீயும் எல்லாத்தையும் பேசியே மடக்கிவிடுற” என்று அவனை லேசாக தோளோடு அணைத்துக் கொண்டான் கபில்

ஆதவ் ஒவ்வொரு நாளும் புதிய உத்திகளை தொழிலாளர்களிடம் செயல்படுத்த தொடங்கினான்.

ராகவன் அன்றிரவு வீட்டிற்குள் நுழைந்ததும் சண்முகமும் பானுமதியும் ஹாலில் அமர்ந்திருந்தனர். தாமரையை பானுமதி தன்  மடியில் படுக்க வைத்திருந்தார். தாமரையை தன் மகளை போல பார்த்துக்கொண்டார். 

“ஹாய் டாட்” என்று சண்முகத்தின் அருகில் வந்தமர.. பானுமதி வாயில் விரலை  வைத்து “தாமரை இப்பதான் சாப்பிட்டு அசந்து தூங்கறா.. நீ சத்தமா பேசாத” என்றார். 

“உத்தரவுங்கம்மா என சிரித்து அறைக்கு சென்று குளித்து வந்தான் ராகவன்.

அப்போதும் தாமரை தூங்கிக் கொண்டிருக்க பானுமதி ராகவனிடம் நீயே டிபனை போட்டு சாப்பிடு என்று சொன்னார். 

“மருமகள் வந்துட்டா இப்பயெல்லாம் மகனை கவனிக்க மாட்டேன்கிறீங்க” என்று கூறி சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து அவனே போட்டு சாப்பிட்டு முடித்து வந்து

 “அம்மா எவ்வளவு நேரம் தாமரையை மடியில  வச்சிருப்பீங்க. நான் அவளை தூக்கிக் கொண்டு போய் அறையில படுக்க வைக்குறேன் ” என்று சொன்னான்

“டேய் உன் பொண்டாட்டியை தூக்குவதற்கு இதுதான் சந்தர்ப்பம்” என்று சொல்ல.

 “உங்களுக்கு எப்போதும் கிண்டல் பண்ற வேலைதான்” என்று அவரை போலியாக முறைத்து ராகவனிடம் “தாமரையை தூக்கி போ” என்றார்

தாமரையை பூவை போல மெதுவாக தூக்கி அறைக்கு வந்து கட்டிலில் மெதுவாக அவள் தூக்கம் கலையாதவாறு படுக்க வைத்து தாமரை அருகில் அமர்ந்து  சிறிது நேரம் அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

தாமரையின்  குண்டு கன்னத்தை பார்க்கும்போது முத்தமிட ஆசை வந்தது. அவனையுமறியாமல் அவள் முகத்தருகே குனிந்து அவளின் கன்னத்தில் தன் முதல் முத்த அச்சாரத்தை பதித்தான். தாமரை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

ராகவன் அலுவலக வேலை இருந்ததால் லேப்டாப்பை வைத்துக் கொண்டு  12 மணி வரை அதில் வேலை செய்தான். தாமரைக்கு லேசாக விழிப்பு வந்து கண்ணை திறந்து பார்க்கும் போது ராகவன் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். தாமரை இவங்க எப்ப வந்தாங்க என தெரியலையே என்ற எழுந்து உட்கார்ந்தாள்.

ராகவன் தாமரை எழுந்து உட்காருவதை பார்த்து “ஏய் என்ன எழுந்திரிச்சுட்ட படுத்து தூங்கு” என சொல்ல.. 

“நீங்க சாப்பிட்டிங்களா” என்று கேட்டாள். என்ன அக்கறையுடன் தன்னை சாப்பிட்டத கேட்குறா என்று மனதிற்குள் சந்தோசப்பட்டு
“மணி என்ன ஆகுது இன்னும் சாப்பிடாம இருப்பேனா” என்று லேப்டாப்பை அணைத்து விட்டு தாமரையின் அருகில் வந்து அமர்ந்தான்.

தாமரை சற்று தள்ளி அமர பார்த்தாள். ஆனால் ராகவன் தாமரை நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று எ சொல்லி அவளுடன் தோளோடுதோள்  உரசும்படி அமர்ந்தான்.  தாமரை அவன் முகத்தை தயக்கத்துடன் என்ன என்பதை போல பார்த்தாள்.

 “தாமரை முதல்ல என்னை பார்த்து பயப்படாத நானும் மனுசன்தான்.. பூச்சாண்டி இல்ல ” என்று சொன்னதும் தாமரை முகத்தில் சிரிப்பு வந்தது. 

“அப்பாடா இப்ப தான் சிரிக்கவே ஆரம்பிச்சிருக்கே” என ராகவன்  முகத்திலும்  புன்னகை பூத்தது

 “இங்க பாரு.. தாமரை நீ படிக்கற பொண்ணு நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.  ஆனா உன்னோட ப்ரெண்ட்ஸ் கிட்ட பேச மாதிரி கூட என்கிட்ட  பேச மாட்டேன்கிற.. என்னை பார்த்ததும் மயங்கி விழற.. நான் என்ன அவ்ளோ அசிங்கமாவா இருக்கேன்” என்று கேட்டான்.

“அச்சோ  இல்லிங்க எனக்கு உங்கள பார்த்தா கொஞ்சம் பதட்டமா இருக்கும் அதுதான் என்று பூசி முழுகினாள். 

“நாம ரெண்டு பேரும் இன்னையிலிருந்து ப்ரெண்ட்ஸ்” என்று கையை நீட்டினான்.

 “ப்ரெண்ட்ஸ்” என்று  உதட்டை லேசாக விரித்து கூறி கைகுலுக்கினாள்.

“இனிமேல் என்கிட்டே சகஜமா பழகணும்” என்று கூறி.. அவளை அணைத்து கொண்டான். தாமரை கொஞ்சம் சங்கடப்பட்டு நெளிந்தாள். அவளை விடுவித்த ராகவன்  “நீ எப்பவும் சிரிச்சிட்டேயிருக்கணும் தாமரை” என்று அவள் கன்னத்தில் தன் விரல்களால் தட்டினான். 

” ரொம்ப நாளலெல்லாம் ப்ரெண்ட்ஸா இருக்க முடியாதும்மா. என்னால அவளோ நாளெல்லாம் தாக்கு பிடிக்க முடியாதுமா..  நீ படிப்பை முடிக்கறவரை தான் அதுக்கப்புறம் பெண்டாட்டிதான் என்று சொல்லி.. கட்டிலின்  மறுபுறம் படுத்துக் கொண்டான் ராகவன்.

“தாமரை யோசனையில் இருக்க.. அவள் தூங்காமல் இருப்பதை கண்டு தாமரை ரொம்ப யோசிக்காதமா எல்லாம் நல்லபடியா நடக்கும் இப்ப வந்து தூங்கு” என்று கண்ணை மூடித் தூங்கி விட்டான்.

தாமரைக்குதான் தூக்கம் கலைந்து போனது. ராகவனை நினைத்து தாமரைக்கு பெருமையாக இருந்தது.  படிக்கறவரை ப்ரெண்ட்ஸ் இருப்போம் என்று கணவன் சொன்னதை நினைத்து மனதை சமாதானப்படுத்தி கொண்டு தூங்கினாள்.

லண்டனில்  ஆதவனுக்குதான் தூக்கம் தொலைந்து போனது. தாமரையின் நினைவு வரத்தொடங்கியது அவள் தன் அண்ணனுடன் நல்லபடியா வாழணும் என்று  கடவுளிடம் வேண்டிக் கொண்டான். அவனுக்கு வேற வழி தெரியவில்லை.

“என்ன ஆதவ் ஏன் சோகமா இங்க நின்னுட்ட உன் அப்பா அம்மா ஞாபகம் வந்துருச்சா” என்று கேட்டான் கபில் 

“ஆமாங்கண்ணா” என்று சமாளித்து அவனுடன் சேர்ந்து உறங்கி விட்டான்.


அன்றிலிருந்து ராகவனிடம் தாமரை நண்பனாக நினைத்து பேச ஆரம்பித்திருந்தாள். நாட்கள் மாதங்களாக உருண்டோடின. தாமரை 2 ஆம் வருட படிப்பை முடித்திருந்தாள். 

“ஏதாவது டவுட் இருந்தா என்கிட்ட கேளு” என்று சொன்னது தான் தாமதம் . தாமரை அவன் அலுவலகத்திலிருந்து வந்தால் போதும் அவனை பாடத்தில் சந்தேகம் கேட்டு அவனை  படுத்தி எடுத்தாள். ராகவனுக்கு போதும் போதும் என்று ஆனது. ஆனாலும் இதுவும் அவனுக்கு சந்தோசமாக இருந்தது.

ராஜதுரையும், பிரபாதேவியும் இடையில் தன் மகளை பார்க்க வந்தனர்.தன் மகளின் முகத்தில் இருந்த தெளிவும், மலர்ச்சியையும் பார்த்து அவள் சந்தோசமாக இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டனர்.

 “மாப்பிள்ளை தாமரை சின்ன பொண்ணு அவ தெரியாம தப்பு பண்ணினா அதை நீங்க பெரிசா எடுத்துக்க கூடாது” என்று ராகவின் கையை பிடித்துக்கொண்டார்.

“அச்சோ மாமா.. என்ன பண்றீங்க.. தாமரையை  நல்லாப் பார்த்துப்பேன். அவள் என்னுள் சரிபாதி.. அவளை நான் தங்கமா பார்த்துப்பேன்.. நீங்க தாமரையை பத்தி கவலைபடாம இருங்க மாமா” என்று கூறி அவரை சந்தோசப்படுத்தினான்.

பரந்தாமன் பருந்து போல காத்திருந்தார். எப்போது அவர்களை வீழ்த்தலாம் என்று.. அதற்கு சமயமும் வந்தது. ஒரு பெரிய ப்ராஜெக்ட் டெண்டர் நடந்தது. அது அவருக்கு கிடைக்க வேண்டும் எண்ணி சில தில்லு முல்லு வேலைகளை செய்தார்.

இந்த முறை டெண்டர் நடக்கும் இடத்துக்கு ராகவனுடன் சண்முகமும் சென்றார். “இந்த டெண்டர் நமக்கு கிடைக்காதுப்பா” என்று அவர் அனுபவத்தில் சொன்னார். ராகவன் “எப்படிப்பா சொல்றீங்க” என்று கேட்டான்.

பரந்தாமனை பற்றி சண்முகத்திற்கு தெரியும் அல்லவா.. பரந்தாமன் செய்த தில்லு முள்ளு அவர் காதுக்கு வந்துவிட்டது. ராகவன் லண்டனில்  உள்ள கம்பெனிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த டெண்டரில் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துவிட்டான்.


பரந்தாமன் தன் மகன் வசந்துடன் வந்திருந்தார். இது ஒண்ணும் அவ்வளவு பெரிய டெண்டர் எல்லாம் இல்லை. சண்முகம் நினைத்து போலவே இந்த டெண்டர் பரந்தாமன் டெக்ஸ்டைல்ஸ்கே கிடைத்தது.

ராகவனுக்கு சற்று மனம் வருத்தம் தான்,  சண்முகம் தான் அவனை தேற்றினார்.. “எப்போதும் நமக்கே எல்லா டெண்டரும் கிடைக்காது ராகவா” என்று அவனை அழைத்து செல்ல பார்க்க.. வேண்டுமென்றே ராகவனை வெறுப்பேத்த வசந்த  அவர்கள் அருகில் சென்று, “அப்பா எல்லா டெண்டரும் அவங்களுக்குதான் கிடைக்கும் என்று ஜம்பம் பேசினாங்க.. இப்ப எங்க கொண்டு போய் அவங்க முகத்தை வச்சிப்பாங்க”..என்று நக்கல் நைய்யாண்டி செய்தான்.

ராகவனுக்கு கோபத்தில் கண்கள் சிவந்து தன் கையை முறுக்கினான்.

சண்முகம் ராகவனை பார்த்து “இப்ப எதுவும் பண்ணவேண்டாம்.. அதற்கென்று சமயம் வரும் அப்போது பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லி விட்டு,  பரந்தாமனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டு.. அவர் அருகில் வந்து “இப்ப என் பையனை சும்மா இருக்கச் சொல்லியிருக்கேன். இல்லைண்ணா உன் பையன் பேசியதற்கு என் மகன் ராகவன் இன்னேரம் உன் மகன் மூக்கை உடைத்திருப்பான்” என்று கோவத்துடன் பேச..

“உங்க பரம்பரையே இல்லாம பண்றேன்டா” என்று கோபப்பட, 

“உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ” என்று ராகவனை அழைத்து சென்றுவிட்டார் சண்முகம்

 “அப்பா அவங்களை ஏன் சும்மாவிட்டிங்க.. என் கையையும் வேற கட்டிபோட்டுவிட்டீங்க” என்று கோவம் கொண்டான் ராகவன்

 “ஆத்திரம் படாதே ராகவா .. அவன் குரைக்கிற நாய்.. அவனால் நம்மளை ஒண்ணும் செய்யமுடியாது” என்று கூறினார் .

“அடுத்த ப்ராஜெக்ட் அவங்க கைக்கு போகாம பார்த்துக்க” என்று மகனை  சாந்தப்படுத்தினார். பரந்தாமன் தங்களின்  காலை சுற்றின பாம்பு என்பதை பாவம் சண்முகம்  அறியவில்லை.

19 என் மனம் கொய்தவளே 

ஆதவன் லண்டன் ஆபிஸில் விடிய விடிய கண் விழித்து தொழிலாளர்களுடன் தீயாய் வேலை செய்து கொண்டிருந்தான். பெரிய கம்பனிகளிலிருந்து நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. அவர்கள் கொடுத்த நாட்களுக்கு முன்னரே நேர்த்தியான முறையில் ஆடைகளை உற்பத்தி செய்து கொடுத்தான்.

ஆதவன் லண்டனில் தொழில் வட்டாரத்தில் நல்ல பெயர் எடுக்க ஆரம்பித்தான்.. பெரிய பெரிய நிறுவனங்கள் கூட ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பித்தன.. ஓவர் டைம் போட்டு வேலை செய்யும் அளவிற்கு கம்பெனியை உயர்த்தி விட்டான்.. கபில் இங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுவையும் ராகவனுக்கு அவ்வவ்போது போனில் தெரிவித்துக் கொண்டிருந்தான்.

ஆதவன் லண்டன் சென்று 1 வருடம் ஆனது.. தாமரையை பற்றிய எண்ணங்களை தவிர்க்கவே செய்தான். கபில் அவனுக்கு பெரிதும் உதவியாக இருந்தான்.. அங்கும் பானுமதி டெக்ஸ்டைல்ஸை  லண்டன் தொழில் வட்டாரத்தில் கொடிக்கட்டி பறக்க செய்தான் ஆதவ்..  ராகவன் தன் தம்பி தன்னிடம் எந்த உதவியும் கேட்காமல் இந்தளவு முன்னேறியிருக்கிறான் என்று சந்தோசப்பட்டான்.

ராகவன் ஆதவ்க்கு போனில் அழைக்க அவன் போன் பிசியாக இருந்தது..  மீண்டும் அழைக்க தன் அண்ணன் எண் அதில் வருவதை பார்த்து..பேசிக்கொண்டிருந்த போனை கட் செய்து ராகவனின் காலை அட்டண்ட் செய்து “சொல்லுங்க அண்ணா” என்று ராகவனிடம் கேட்க.. “ஆதவ் என்னடா உன் போன் எப்பவும் பிசியாவேயிருக்க” என்று கிண்டல் செய்ய ஆதவ் லேசாக வெட்க பட்டான்

“அப்படியெல்லாம் இல்லண்ணா  எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்தது” என்று சொல்ல.

“சரி.. சரி.. அம்மா உன்கிட்ட பேசணும் சொல்லிட்டு இருந்தாங்க இன்னிக்கு நைட் வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணுறேன்” என்று சொல்ல

“ அண்ணா எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு அதை முடிச்சுட்டு அம்மாகிட்ட  நான் போனில் பேசுறேன் எனக்கு மீட்டிங்க்கு நேரம் ஆச்சு.. நான் போன் வைக்குறேன்” என்று போனை வைத்து  விட்டான்.

இரு நாட்களுக்கு முன்பு சண்முகத்திடம் சுபா போனில் பேசியிருந்தார் .  கமலி இந்த வருஷம் படிப்பை முடிக்கறா தம்பி நம்ப ஆதவ்க்கு கமலியை கல்யாணம் செய்து வைக்கலாமா என்று சண்முகத்திடம் கேட்டார்..

“அக்கா எனக்கு கமலி நம்ம வீட்டு மருமகளா வர விருப்பம்தான் .. ஆதவனை ஒரு வார்த்தை கேட்டு சொல்லுறேன்..ஏன் சொல்லுறேனா கல்யாணம் பண்ணிக்க போறது ஆதவ் தானே ” என்று சொன்னார்.

“சரி தம்பி ஒரு நல்ல முடிவா எனக்கு சொல்லு ”

பானுமதியிடம் சுபா கூறியதை சொல்ல.. பானுமதி  யோசனையுடன்  சண்முகத்தை பார்த்தார் ..

சண்முகன் என்னவென்று வினவ  “கல்யாணம் பண்ண போற  மாப்பிளையும், பொண்ணும் மனசார முழு சம்மதம் சொல்லணும்.. நாம ஆதவ் கிட்டயும் கமலிக்கிட்டயும் கல்யாணத்துக்கு சம்மதமா  என்று கேட்டு முடிவு செய்யணும்” என்று பானுமதி கூற

சண்முகமும், பானுமதியும் ராகவனை வைத்துக் கொண்டுதான் ஆதவ்விடம் பேசவேண்டும் என்று தன் பெரிய மகன் வரைவை எதிர்நோக்கியிருந்தனர். அவன் இரவு வீட்டிற்கு வந்ததும் ராகவனிடம் பானுமதி நீ போய்  பிரஸாகி தாமரையையும் கூட்டி ட்டு வா நாம  ஆதவ்கிட்ட பேசலாம் என்று கூற ..

“மாம் 2 நிமிஷம் நான் பிரஸாகி தாமரையையும் கூட்டி வரேன்” அறைக்கு  சென்றான்.

தாமரை துவைத்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். ராகவன் தாமரையின் பின்னால் மெதுவாக சென்று அவளை பின்னிருந்தவாறு  கட்டியணைத்தான்.. தாமரைக்கு திக்கென்று இருந்தது. அவளின் தோள்பட்டையில் தன் முகத்தை வைத்து கொண்டு “என்ன மேடம் பண்ணுறீங்க” என்று கொஞ்சிக் கேட்டான்.

தாமரை தன்னை அவனிடமிருந்து விடுவிக்க பார்த்தாள். ஆனால் அவன் அவளை விடுவிக்காமல் அப்படியே திருப்பி அவள் முகத்தை புன்னகையுடன் பார்த்தான். தாமரை வெளிறிப் போன முகத்துடன் நின்றிருந்தாள்.. ராகவன் அவள் வெளிறிய முகத்தை பார்த்து “என்னாச்சுடா” என்று கேட்டான்.

  “ஒண்ணுமில்லைங்க நீங்க திடீரென்று பின்னால வந்து என்ன தொட்டதால கொஞ்சம் பயந்துட்டேன் அதுதான்” என கூறி சமாளித்தாள்.


“நீங்க என்ன ரொம்ப ஹேப்பி யா  இருக்கீங்க” என்று கேட்க

“இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கே தெரிஞ்சுடும்டும்” என்று அவசரமாக குளியலறை சென்று குளித்து விட்டு கை இல்லாத ஒரு பனியன், ட்ராக்பேண்ட் அணிந்து வெளியே வந்து
தாமரையின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கீழே ஹாலுக்கு சென்றான் தாமரை இவர் எதுக்கு இவ்வளவு வேகமாக என்னை இழுத்துட்டு போறார் என்று மனதில் நினைத்துக்கொண்டே அவன் வேகத்துக்கு ஈடு கொடுத்து  அவனுடன் சென்றாள்.

சண்முகமும் பானுமதியும் அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிரில் இருந்த இருக்கையில்  தாமரையை அமர வைத்து், தானும் அவள் பக்கத்தில் அமர்ந்தான் ராகவன்.. 

போனை எடுத்து எல்லாரும் கேட்கும்படி ஸ்பீக்கர் மோடில் போட்டு ஆதவனுக்கு அழைத்தான். ஆதவ்வும் போனை ஆன் செய்து “சொல்லுங்கண்ணா” என்று சொன்னான்

“ஆதவ் எப்படியிருக்க” என்று சண்முகம் கேட்க

“பைன் டாட்”

பானுமதி தான் ஆதவிடம் “ஆதவ் லண்டன் போன பிறகு அம்மாவோட நினைப்பு உனக்கு இருக்கா” என்று செல்லமாக கோபித்துக் கொண்டு பேச.. அவன் பானுமதியிடம் “அம்மா நான் இங்க வேலையில கொஞ்சம் பிஸியாஇருக்கேன் மா” என்று சொன்னான்.

சண்முகம் ஆதவ்விடம் “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்பா” என்று சொல்ல அவன் “சொல்லுங்கப்பா” என்று கூறினான்.

சண்முகம் உனக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று இருக்கிறோம் என கூற ஆதவ் அதிர்ந்து போனான். “டாட் எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்” என்று கொஞ்சம் கோபமாக பேசினான்.

ராகவன் “டேய் ஆதவ் இப்ப கல்யாணம் பண்ணாம கிழவனான பிறகா கல்யாணம் செய்வது என்று கிண்டலடித்தான். 

“அண்ணா அவங்க தான் புரியாம பேசுறாங்கனா நீங்களுமா.. நான் இன்னும் பிஸ்னஸ்ல சாதிக்கணும் கொஞ்ச நாள் போகட்டும்” 


 “டேய் ராகவன் கல்யாணம் செய்துட்டுதானே பிஸ்னஸ் பண்றான். அதேபோல நீயும் கல்யாணத்த பண்ணிட்டு பிஸ்னஸ்ல சாதிக்க பாரு” ஆதவ் நீ குடும்பத்தை விட்டு தனி ஆளா லண்டனில் கஷ்டப்படுற.. அது என் மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.. உனக்கு கல்யாணம் செய்து வைச்சா உனக்குன்னு ஒருத்தி வந்துவிடுவா.. நானும் இங்க நிம்மதியா இருப்பேன் என்று  பானுமதி குரல் கம்ம பேசினார்.


 “அம்மா வருத்த படாதீங்க நன் உங்க விருப்பப்படியே நான்  கல்யாணம் செய்துக்குறேன் ” என் பானுமதியை சமாதானப்படுத்தினான் ..   

“எனக்கு தெரியும் ஆதவ்.. நான் சொன்னா  நீ அதை தட்ட மாட்டா” என்று எனக்கு தெரியும் என்று சந்தோசத்துடன் கூறினார் 

“சரிங்கம்மா பொண்ணு பார்த்துட்டு எனக்கு சொல்லுங்க” என்றான் ..

ராகவன்   “டேய் ஆதவ் பொண்ணு எல்லாம் ஏற்கனவே பார்த்தாச்சு.  வேற யாருமில்ல நம்ம கமலிதான்” என்றான் .

 “ ஆதவ்  சுபா அத்தை  உனக்கு கல்யாணம்  செய்து வைக்க அவங்களோட விருப்பத்தை என்கிட்டே சொன்னாங்க.. நான் உன்னோட விருப்பம்தான் முக்கியம் .. உனக்கு கமலிய கல்யாணம் செய்துக்க சம்மதம்னா மட்டுமே நான் மேற்கொண்டு சுபா அத்தையிடம் திருமணத்தை பற்றி பேசுவேன் .. நீ உன்னோட விருப்பத்தை யோசித்து சொல்லு” என்றார் சண்முகம்.

“உங்களுடைய விருப்பம்தான் என்நோட் விருப்பம் கமலிய உங்களுக்கு பிடிச்சிருந்தா  எனக்கு சம்மதமே” என்று கூற..

ஆதவன் கூறியதை கேட்ட சண்முகம், பானுமதி இருவர் முகத்திலும் சந்தோசத்தில் ஒளிர்ந்தன . 

“கல்யாணத்துக்கு நல்ல நாள் பார்த்து உன்கிட்ட சொல்றோம் ஆதவ் ” என்று கூறி போனை வைத்தார் பானுமதி 

இவர்கள் பேசுவதை கேட்டு தாமரையின்  மனம் கோபமும் படவில்லை, சந்தோசமும் அடையவில்லை. இனி என் வாழ்வில் ஆதவ் என்று ஒரு அத்தியாயம் இல்லை..அது என் கல்யாணத்தன்றே முடிச்சு போச்சு . . ஆதவ் கமலிய திருமணம் செய்து சந்தோசமாக வாழட்டும்.. இனி என் வாழ்வு ராகவ்வோட தான் என்று எண்ணிக்கொண்டாள்.

மூவரும் சந்தோசமாக இருக்க.. பானுமதி தாமரை எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்து “என்னம்மா என்று கேட்க..

தாமரை  லேசாக சிரிந்து நம்ப வீட்டில் கல்யாணம் முடிவாகி இருப்பது சந்தோசம் அத்தை என  அறைக்கு சென்றாள்

லண்டனில் ஆதவ் தான் எப்படி கமலியை மணப்பது என்று மனதை போட்டு கசக்கிக்கொண்டிருந்தான். அண்ணாவும் தாமரையும் சந்தோசமாக இருக்கணும்னா   நாம கல்யாணம் செய்தா தான் இதுக்கு ஒரு முடிவு வரும் என்று எண்ணி கமலியை திருமணம் செய்ய முடிவெடுத்தான்.

சண்முகம்  சுபாவிவிற்கு  போன் செய்து “அக்கா நம்ப  ஆதவ் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்டான்.. நீங்க வேணா ஒரு தடவை ஆதவ்கிட்ட பேசுறீங்களா” என்று கேட்க.. 

“நான் என்ன பேசறது தம்பி.. நீயே பேசிட்டல.. அதுவே போதும்… கமலி வேணா ஆதவ்கிட்ட பேசட்டும்” என்று சொல்லி சந்தோசத்துடன் போனை கட் செய்தார் சுபா 

சுபாவிற்கு ஒரே சந்தோசம் தன் ஆசை மருமகனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைப்பது.. கமலியிடம் விசயத்தை சொல்ல.. அவளுக்கு ஏற்கனவே ஆதவ்வை ரொம்ப பிடிக்கும் இப்போது கேட்கவும்  வேண்டுமா..  “நீங்க சொன்னா சரிங்கம்மா” என்று நல்ல பிள்ளையை போல  தலையை ஆட்டினாள் .. சுபா கமலியிடம் நீ ஆதவ்விற்கு  போன் செய்து பேசு என்று சொல்லி சமையலறை சென்றுவிட்டார்.

கமலி உடனே ஆதவை போனில் அழைத்தாள்.. ஆதவ் புதிய எண்ணாக இருப்பதை பார்த்து போனை ஆன் செய்து காதில் வைத்தான்

“ஹாலே மாமா” என்று கமலியின் குரலை கேட்ட ஆதவ்..  ஒரு நிமிடம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு  “சொல்லு  குட்டிமா” என்றான் .


 “மாமா நல்லா இருக்கீங்களா” 

“ஐ அம் பைன்டா ” என்று கூறினான்..

  “மாமா என்னை உங்களுக்கு கல்யாணம் செய்து கொள்ள உங்களுக்கு விருப்பம்தானே” என்று  தயக்கத்துடன் கேட்டாள் கமலி..

ஆதவ் சற்று தாமதித்து..”எனக்கு சம்மதம்தான் கமலி” என்று சொல்லி போனை வைத்து விட்டான் .. கமலி சந்தோசமாக போனை வைத்தாள். ஆதவ் மனதில் பாரம் ஏறியது .

ராகவன் அன்றிரவு கொஞ்சம் தாமதமாக வீட்டுக்கு வருவதாக சொல்லி விட்டான். எனக்காக யாரும் காத்திருக்க வேண்டாம் சாப்பிட்டு தூங்குங்க என்று பானுமதியிடம் போன் போட்டு சொல்லியிருந்தான். தாமரை மாலை கல்லுரியிலிருந்து வந்ததும் அவள் வேலைகளை முடித்து விட்டு கிழே ஹாலுக்கு வந்தாள்.

பானுமதி தாமரையிடம் ராகவன் இன்னிக்கு லேட்டா வருவதை சொல்லிவிட்டு நீ            ராகவனுக்காக காத்திருக்காம சாப்பிட்டு தூங்க போ என்றார்.

சண்முகமும் பானுமதியும் கொஞ்சம் அசதியாக இருந்ததால் இருவரும் தூங்க சென்றனர். ஆனால் தாமரை ராகவனுக்காக காத்திருந்து சாப்பாடு மேஜையிலேயே தலை வைத்து  உறங்கிவிட்டாள்.

ராகவன் வீட்டுக்கு வரும் போது கதவு சாத்தி இருந்தது.. தன்னிடம் உள்ள சாவியை கொண்டு  கதவை திறந்தவன் டைனிங் ஹாலில் லைட் எரிவதை பார்த்து அங்கே சென்றான்.. ராகவன் அங்கு தாமரையை எதிர்பார்க்கவில்லை. அவள் உறங்கி கொண்டிருந்த கோலத்தை பார்த்து  நான் தான் அம்மாகிட்ட எனக்காக காத்திருக்க வேண்டாம்னு சொல்லிருந்தேனே.. அனாலும் தாமரை  நமக்காக இங்க வெயிட் பண்ணுறாளே என்று மனம் வாடினான்.

டைனிங் ஹாலில் லைட் அணைக்கப்பட்டு கொஞ்சம் இருளாக இருந்தது. .ராகவன் தாமரையின் அருகில் சென்று அவள் தோளை தொட்டான்.. தூக்கத்தில் இருந்த தாமரை யாரோ தன்னை தொடுறாங்க என்று பயந்து ராகவனை கண்டதும் இறுகக் கட்டிக்கொண்டாள்.


தாமரை பயந்துட்டா என்பதை அறிந்து ராகவன்  அவளை அணைத்து கொண்டு “ஏய் தாமரை பயப்படாதே” என்று அவள் முதுகை ஆதரவாக நீவிவிட்டான். தாமரை அப்போதுதான் அவனை அணைத்துக் கொண்டு நிற்கிறோம் என்று தெரிந்து அவனை விட்டு விலகி நின்றாள்.


“நான்தான் உன்னை தூங்க சொல்லி.. அம்மாகிட்ட
சொல்லியிருந்தேனே நீ எதுக்கு இங்க உட்கார்ந்து இருக்க”

“அத்தை என்னை தூக்கத்தான் சொன்னாங்க.. நான்தான் உங்களுக்காக வெயிட் பண்ணினேன்” 

 “நான் சாப்பிட்டு வந்து விட்டேன். நீ சாப்டியா என்று கேட்க

நான் அத்தை மாமாவுடன் சேர்ந்து சாப்ட்டேன் என்று சொன்னவுடன் இருவரும்  அறைக்கு சென்றனர் ..  ராகவன் இரவு உடைக்கு மாறி வருவதற்குள் தாமரை தூங்கியிருந்தாள். அவனும் கட்டிலின் மறுபுறம் படுத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தான்.

ராகவன் தன் மீது ஏதோ மேலே விழுவது போல இருந்தது என்ன என்று விழித்துப் பார்க்க தாமரை  கையை ராகவனின் மீது அணைத்தாற் போல போட்டிருந்தாள்.

ராகவன் அதை சாதகமாக்கி அவனும் அவளை நெருங்கி அணைத்துக் கொண்டு படுத்து தூங்கினான்.. அதிகாலையில் ராகவனுக்கு விழிப்பு வந்துவிட்டது.. தாமரை ராகவனின் அணைப்புக்குள் குழந்தையை போல உறங்கிக் கொண்டிருந்தாள்.. தாமரை கண் விழி அசைவது போல தெரிந்ததும் ராகவன் நல்ல பையனை போல திரும்பி படுத்துக்கொண்டான்.. ராகவன் இன்னும் எத்தனை நாள் என்னை சோதிக்கப் போறாளோ என்று எண்ணி கொண்டான்.. அந்த நாள் விரைவில் வரபோகிறது என்று ராகவன் அறியவில்லை.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *