என் மனம் கொய்தவளே
39. என் மனம் கொய்தவளே
ஆதவன் கமலியிடம் தன் காதலை சொல்லாவிட்டாலும் உன் மேல் எந்த அளவுக்கு காதலும் ஆசையும் வச்சிருக்கேன் பாருடி என்று காட்டுவது போல இருந்தது ஆதவனின் ஆழ்ந்த முத்தம்.. ஆதவன் நினைவில் இருந்ததெல்லாம் கமலி கமலி கமலி மட்டுமே.. 20 வயதே ஆன சின்னஞ்சிறு பெண் ஆதவனின் வன்மையான இதழ் முற்றுகையில் அவளின் உடல் துவழ்ந்து போக கமலியின் தளிர் மேனியில் ஆதவனின் ஸ்பரிச்சத்தால் எழுந்த சிலிர்ப்பை உணர்ந்தவன்.. இத்தனை நாளாய் தான் இழந்தது அவளது காதலை என்பதை அறிந்து கொண்டான் ஆதவன்.
நீண்ட நேரம் அந்த முதல் இதழ் முத்தத்தில் கமலிக்கு மூச்சிறைக்க, அவளின் தடுமாறலை அறிந்தவன் அவளது இதழ்களை தன் இதழ்களிடமிருந்து விடுவித்தவன் அவளது கழுத்திற்கு இறங்கவும், அவனின் கைகள் அவளின் இடையை அழுத்தமாக பிடித்து தன்னுடன் இறுக்கி அணைத்ததில் அவளின் மென்மை அவன் நெஞ்சில் அழுத்தவும் தனது சுயநிலையை இழந்தான் ஆதவன்.
“மாமா வேண்டாம்” என்று கமலி ஆதவனிடம் கெஞ்சினாலும் தனக்குள் இருந்த தன் மனைவியிடம் தன் காதலின் வேகத்தை இப்பொழுதுதே உணர்த்திவிடும் எண்ணத்தில் ஆதவனின் கைகள் அத்துமீற துவங்க, கமலியின் கழுத்திற்குள் ஆழ புதைத்திருந்த அவனின் இதழ்கள் கீழிறங்குவதை தொடர, ஆதவனின் தொடுகையும், அவனின் முரட்டு இதழ்களின் ஸ்பரிசமும் கமலியை தடுமாறச் செய்தது..அதே நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
இவ்வளவு நாள் தன் ஆசை குட்டிபொண்ணு அருகில் இருந்தும் அவளை அடையாத ஏக்கம் ஆதவனின் வெறியை கூட்ட கதவு தட்டும் சத்தம் அவனின் காதுகளில் விழவில்லை.. கமலி ஆதவனின் கைகளின் முரட்டு பிடியிலிருந்து வெளிவர முடியவில்லை.. தயங்கியவாறே மெல்லிய குரலில்.. மா.. “மாமா ராகவ் மாமா கதவை தட்டுறாங்க போல… ப்ளீஸ் விடுங்க கதவை திறக்கணும்” என்றாள்.
கமலியின் வார்த்தைகள் மதி மயங்கியிருந்த
ஆதவனின் காதில் விழுந்தால் தானே… ஆதவனின் கைகள் தன்னை மேலும் கட்டியணைத்ததில் அவன் தன்னை விடுவிக்கும் எண்ணமே இல்லை என் பதை உணர்ந்தவள் ” மாமா ப்ளீஸ் விடுமா” என்று சிணுங்க. ஆதவன் தனது பிடியை தளர்த்தினான்.
கணவனது அணைப்பில் கமலி விலகியதும் குழந்தையிடம் இருந்து ஜஸ்கீரிம்மை பிடுங்கினால் குழந்தை கோபப்படுவதை போல கோபமும்.. தாபம் வழிந்தோடும் உடலின் உணர்வுகள் தடைபெற ஆண் மகனுக்கே உரிய தன் உரிமை பறிக்கப்பட்டது தோன்றியது ஆதவனுக்கு.
ஆதவன் கமலியை முழுவதுமாக எடுத்துக்கொள்ள துடித்த, தன் தவிப்பை கமலிக்கு உணர்த்தும் வகையில் அவளை ஏறிட்டு பார்த்தவன்.. என்ன நினைத்தானோ தெரியவில்லை சட்டென்று தன்னுடைய மோன நிலையிலிருந்து விலகினான்.
ஆதவன் கமலியை விட்டு விலக்கியவுடன் கமலியின் உடைகள் களைந்திருந்த நிலை அப்பட்டமாக தெரிந்தது. கமலியை முதல் முறையாக அந்த தோற்றத்தில் கண்டவன் தன் உணர்ச்சிகளுக்கு மீண்டும் அடிமையாக தவித்த மனதை அணை போட்டு அடக்கி கட்டுப்படுத்தினான்.
ஆதவன் கமலியை விட்டு இரண்டு அடி தள்ளி நின்றான்.. ஆதவனின் பார்வை சென்ற இடத்தை கண்டவள் உடனே தன் புடவையை இழுத்து தன் மார்ப்பை மூடினாள்.. கமலியின் செயலை கண்டவன் உதட்டில் மென்நகை புரிந்தான்.. அவள் கதவை திறக்க முற்பட.. ஏய் கமலி தலை முடியையும் சரிசெய்து ட்டு போ என்றான்.
ஆதவன் சொன்னதும், கமலி தன் தலை முடியைச் சரி செய்தவள் கண்களில் நாணத்துடன் ஆதவனின் கண்களை சந்திக்க, தன் விரல்களால் அவளின் பட்டுக் கன்னங்களை லேசாக தடவினான்.. அதற்கு மேல் அங்கு நிற்க வெட்கம் பிடுங்கி தின்றது..கமலி புள்ளிமானை போல் அறைக் கதவை திறந்து செல்லவும்.. ஆதவன் தன் தலையை அழுந்த கோதி தன்னிலையை அடக்கி கமலியை பின் சென்றான்.
கமலி கதவை திறக்க ராகவன் வெளியே சங்கடத்துடன் நின்றிருந்தான்.. ஆதவன் கமலியின் முன்று நின்று ராகவனை ஒரு மெச்சுதல் பார்வை பார்த்து “என்னங்க அண்ணா” என்றான்.
ராகவனுக்கு ஆதவன் முகத்தில் இருந்த தேஜஸ்ஸை கண்டதும்.. இருவரும் சந்தோசமாக இருக்கின்றனர் என்று பூரித்து போனான்.
“நான் இந்தியா கிளம்புறேன் ஆதவ்” என்று கூற
கமலி இருவருக்கும் காபி போடுவதற்கு சமையலறை சென்றாள்.
கமலி சென்றவுடன் “ஆதவ் என் மேல் கோவமாடா” என தம்பியின் தோள் தொட.
அப்படி இல்லீங்கண்ணா.. இந்த ஒரு மாசத்துல கமலி இல்லாம.. என்னால் இருக்க முடியாதுன்னு புரிஞ்சுகிட்டேன் அதை புரியவைச்சது நீங்கதான்” என்று ராகவனை கட்டிக்கொண்டான்.
கமலி இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுக்க வந்தாள்.. ராகவ் காபியை அருந்திவிட்டு ஆதவனையும், கமலியையும் அருகில் அழைத்து இருவரையும் கட்டிக்கொண்டு “சந்தோசமா இருங்க” என இந்தியா கிளம்பினான்.
ஆதவனுக்கு கபில் போன் வர.. போனை ஆன் செய்து “சொல்லுங்கண்ணா”
“டேய் ஆபீல சைன் போடுறது நிறைய இருக்கு நீ ஆபீஸுக்கு வரியா” என்று கேட்க.. “வரேன்ணா” என போனை வைத்தான்
கமலி ஆபீஸ் வேலையிருக்கு .. ஈவ்னிங் சீக்கிரம் வந்துடுறேன் என்று கமலியின் கன்னத்தில் முத்தத்தை பதித்து சென்றான்.. ஆதவன் ஆபிஸுக்கு போய் ஒரு மாதம் ஆனதால் தேங்கியிருந்த கோப்புகளில் கையெழுத்திட்டு கபிலிடம் கொடுத்தான்.. அதன் பிறகு கபிலிடம் மீட்டிங்களையும் முடிப்பதற்குள் இரவு ஏழு மணி ஆகிவிட்டது.
எல்லா வேலைகளையும் முடித்தவன் வீட்டுக்கு கிளம்பினான்.. கமலி கொடுத்த இதழ் ஒற்றல் ஆதவனை மனதில் தோன்றி அவனை இம்சை படுத்தியது. ஆதவனின் நேரமோ என்னமோ அன்று ட்ராபிக் ஜாம் நிறைய இருந்தது.
ஆதவன் காரிலிருந்து இறங்கி வீட்டிற்கு சென்றதம் கமலி சமையலறையில் சமைத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள்.. ஆதவன் உள்ளே நுழைந்ததும் “குளிச்சிட்டு வாங்க மாமா சாப்பிடலாம்” என்றாள் கமலி.
கமலியின் கன்னத்தில் முத்தமிட்டு குளிக்க சென்றான்.. குளித்து முடித்ததும் சாப்பாட்டு மேஜைக்கு வந்தான்.. கமலி இருவருக்கும் தட்டில் பரிமாறி விட்டு இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு “கமலி சீக்கிரம் வந்துடு” என கண்ணடித்து அறைக்குச் சென்றான்..
கமலி வெட்கத்துடன் “சரி”என்று தலையசைத்து வேலைகளை முடித்து பாலை கையில் எடுத்துக்கொண்டு மெல்ல படி ஏறினாள்.
கமலி கதவை திறந்து கொண்டு உள்ளே மெல்ல நுழைந்தாள்.. அங்கு கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவன் கமலியின் கொழுசொலி கேட்டு நிமிர்ந்து பார்த்தான்.
கமலி தான் கொண்டு பாலை ஆதவிடம் வெட்கப்பட்டுக்கொண்டே கொடுக்க.. முதல் இரவில் பெண்கள் கணவனுக்கு கொண்டு வருவார்களே அது போல பாலை ஆதவிடம் கொடுக்க அவன் குடித்து விட்டு மீதியை அவளிடம் கொடுக்க குடித்து விட்டு பால் டம்ளரை டேபிளிலில் வைத்து விட்டு ஆதவனிடம் திரும்பினாள்.
ஆதவன் கமலியை உச்சி முதல் பாதம் வரை தாபத்துடன் பார்த்தான்.. ஆதவன் கமலியை பார்த்தவாறே எழுந்தவன் அறையின் கதவை அடைத்துவிட்டு அழுத்தமான காலடிகளுடன் கமலியின் அருகில் வந்தான்.
ஆதவன் கதவை சாத்தும் சத்தமும்
அழுத்தமான காலடி சத்தமும் அவள் நெஞ்சை படப்படக் செய்தது.. ஆதவன் கமலியின் அருகில் நின்று தன் உடல் முழுவதும் அவள் மீது உரசுமாறு நின்றவன் அவளின் கழுத்தில் கை வைத்து முடிகளுக்கு தன் இரு கை விரல்களை நுழைத்தவன் அவளின் பிறை நெற்றியில் முத்திமிட்டு.. கமலியை இறுக்கி அணைத்து.. அவள் முகம் பார்த்து கமலியின் சம்மத்தை வேண்டி நின்றான்.
.
ஆதவன் கமலியின் இதழலில் முத்தமிட்டு அதற்கு மேலும் தாமதிக்காமல் அவள் மீது படர்ந்து கிறக்கத்துடன் குட்டி பொண்ணு என்று அழைத்து இதழ்களும், கைகளும் தாபத்துடன் அவளின் மேனியில் அத்து மீறின.. ஆதவன் தன்னவளுக்குள் புதையல் எடுக்கத் துவங்கினான்.
கமலி வெட்கப்பட்டு விலகினாலும் ஒரு நொடி சமாளித்தவன் அவளுள் முழ்க அவளின் வயதிற்கே உரிய பயம் சில நேரம் தலை தூக்கிய போது அவளை இறுக அணைத்து அவளின் அச்சத்தை போக்கி அவளை மென்மையாக கையாள ஆரம்பித்தான். அறை முழுவதும் இதழ் ஒற்றல்களும், மெல்லிய முனகல்களுமாக ஆதவனும் கமலியும் இல்லறத்தை ஆரம்பித்தனர்.
