என் மனம் கொய்தவளே

This entry is part 27 of 27 in the series என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

அத்தியாயம் 41




பகலவன் புலர்ந்து தன் வெளிச்சத்தை உலகுக்கு படர விட்டது.. கமலி ஆதவனின் மார்பில் முகம் புதைத்து உறங்கிக்கொண்டிருந்தாள்.. முதலில் கண் விழித்தது ஆதவன்தான்..


ஆதவன் கண்விழித்து தன் மார்பில் தலை வைத்து உறங்கும் மனைவியின் குழந்தை தனமாக முகத்தை உற்று நோக்கி.. “ஏய் குட்டிபொண்ணு  என் மனசுக்குள்ள எப்படி வந்தனு தெரியலடி.. என் உசர காப்பாத்த.. உன் உயிரை கொடுக்க துணிந்துட்ட.. அவ்ளோ  காதல் என் மேல் வைச்சுருக்கியாடி” என அவள் தூக்கம் கலையாதவாறு அவள் நெற்றியில் முத்தமிட்டு.. என் மனச மனம் கொத்தி பறவை போல கொய்தவளே  நீ தாண்டி என்று கமலியை தன் மார்பிலிருந்து மெதுவாக அள்ளி எடுத்து தலையணையின் மீது படுக்க வைத்து அவள் மீது போர்வையை போர்த்தி விட்டுச் சென்றான்.


ஆதவன் குளித்து விட்டு வந்த போதும் தூக்கம் கலையாது தூங்கிக் கொண்டிருக்கும் கமலியை தொந்தரவு கொடுக்காமல்.. ஆதவனே சமையலறைக்குச் சென்று குளிர்சாதன பெட்டியிலிருந்து பாலை எடுத்து காய வைத்து இரு கோப்பைகளில் ஊற்றி கொண்டு அறைக்குச் சென்றான்


ஆதவன் கையில் பால் கோப்பையுடன் உள்ளே சென்றான் .. கமலி கண்ணை விழிக்க முடியாமல் மெல்ல விழிதிறந்து பார்த்தாள்.. கமலியின் முன்னே  ஆதவன் பாலுடன் நின்றிருந்தான்.. அவள் ஆதவன் பாலுடன் வந்ததை பார்த்து பதறி.. அவள் உடையில்லாமல் இருப்பதை மறந்து எழுந்து விட்டாள்.. ஆதவன் பார்வை அவள் மேல் விழ கமலி வெட்கப்பட்டு போர்வையை போர்த்திக் கொண்டாள்.. கமலியின் செயலால் சிரிப்பு வந்து விட்டது.


ஆதவன் கொண்டு வந்த பாலை கமலியை குடிக்க வைத்தான் கமலி பாலை குடித்து விட்டு  “மாமா தள்ளுங்க நான் குளிச்சிட்டு உங்களுக்கு டிபன் செய்யுறேன்” என எழும்ப


ஆதவன் கமலியை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு அவள் தோளின் மீது தலை சாய்த்து “ஏய் குட்டிபொண்ணு நேற்று நைட் நான் உன்கிட்ட ஹார்சா நடத்துக்குட்டேனாடி.. ஏதாவது பெயின் இருக்கா.. அப்படி இருந்தா சொல்லு கைனகாலஜிஸ்ட் கிட்ட  கூட்டிட்டு போறேன்” என்று தன்னவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டான்.


கமலி ஆதவனின் முகத்தை தன் முகம் பார்க்கச் செய்து ஆதவனை கழுத்தோடு கட்டிக்கொண்டு “மாமா எனக்கு எங்கயும் வலி இல்லை.. வலி இல்லாத மாதிரி தானே என்னை பூவை போல நடத்துனீங்க” என்று ஆதவனை கட்டியணைத்து கொண்டாள்.. அதற்கு மேலும் ஆதவன் சும்மாயிருப்பானா.. மீண்டும் ஒரு கூடலை நடத்தி இருவரும் சேர குளித்து வெளியே வர பகல் பன்னிரெண்டு மணியானது.. ஒருவழியாக இருவரும் குளித்து முடித்து ஹாலுக்கு வந்து அமர்ந்தனர்..


“மாமா புட் ஆர்டர் பண்ணுங்க எனக்கு பசிக்குது” என்றாள்..


ஆதவன் ஒரு நிமிடம் செல்லக்குட்டி என்று அவள் நெற்றியில் தன் நெற்றியை முட்டிவிட்டு.. சமைலறை சென்று அவன் காலையில் செய்த பிரியாணியை தட்டில் போட்டு கொண்டு வந்தான்.. கமலி ஆச்சர்யமாக “எப்போ மாமா செய்தீங்க” என்றாள்..


“ம்ம்.. நீங்க தூங்கிட்டுயிருந்தீங்க மேடம் அப்போதான் நான் செஞ்சேன்” என் கமலிக்கு ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டு முடிந்து.. கமலியை தூங்க வைத்து ஆபீஸ் கிளம்பினான் ஆதவன்.


இந்தியாவில் அருண் பூஜா என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாமா?


அருண் பூஜாவை கட்டிக்கொண்டு உறங்கிகொண்டிருந்தான்.. பூஜா மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள்.. அருணின் அணைப்பில் இருப்பது தெரிந்து அவனை விட்டு விலக எத்தனிக்க அருண் பூஜாவை எழ விடாமல் இறுக்கினான்.. “விடுங்க அருண் நேரம் ஆச்சு.. அத்தை என்ன நினைப்பாங்க எழுந்திரிக்கணும்ல” என்று அவனை விட்டு விலகி எழுந்து குளியலறைச் நோக்கி சென்றாள்.


அருண் பூஜாவிற்கு முன்னே எழுந்து சென்று வாஷ்ரூம் கதவை திறந்து பூஜாவை தூக்கிச் கொண்டு சென்றான்.. இருவரும் குளித்துவிட்டு ஹாலுக்குள் வந்தனர்.. செல்வி சமைலறையில் சமைத்துக்கொண்டிருந்தார்.. பூஜா சங்கடப்பட்டுக்கொண்டே சமையலறைக்கு சென்றாள்.. அங்கே செல்வி இருவருக்கும் காபி போட்டு விட்டு திரும்ப.. அங்கு பூஜா நின்றிருந்தாள்..  “அத்த நான் எழும்ப நேரம் ஆச்ச”ு என்று தயங்கியபடியே கூற..


மருமகளின் கன்னத்தை பற்றி நீ என்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் நானும் கல்யாணம் பண்ணி ஒரு பையனை பெத்தவ அதுமட்டுமல்லாமல் என்னை நீ அன்னியமா நினைக்காதே” என அவள் கன்னம் கள்ளி அவளின்

சோர்வைக்கண்ட  ” என்னம்மாஅருண் ரொம்ப கஷ்டப்படுத்திடானா ஏதாவது பெயின் இருக்கா ஹாஸ்பிட்டல் போலாமா” என்று பூஜாவிடம் கேட்க.. பூஜா அத்தை என்று கண்கள் கலங்க செல்வியை அணைத்துக்கொண்டாள்..


அருண் காபி வரும் என்று பொறுத்து பார்த்து சமையலறைக்கு சென்றான்.. மாமியாரும் மருமகளும் கட்டியணைத்து நின்றிருந்தனர். அவர்களை பார்த்து சந்தோசப்பட்டு.. “பூஜா உன்ன காபி கொண்டுவரச் சொன்னா.. இங்க இரண்டுபேரும் கட்டி பிடிச்சு நிற்கிறீங்க என்று கிண்டலாக கேட்டான்


அருண் கேட்டவிதம் இருவருக்கும் சிரிப்பைக் கொடுத்தது.. செல்வி காபி டம்ளரை அருணிடம் நீட்டினார்.. அருண் காபியை அருந்திக்கொண்டிருக்கும் வேளையில் ராகவனின் குரல் ஒலிக்க மூவரும் ஹாலுக்கு வந்தனர்.


சாரதா ராகவ் ஆபீஸ்க்கு சென்று ராகவ் என பூஜாவை பார்க்கணும் போல இருக்கு நீ கூட்டிட்டு பெரியப்பா. என கேட்க 


ராகவன் பூஜாவின் அம்மா சாரதாவை அழைத்து வந்திருந்தான்.. பூஜா சாரதாவை கண்டதும் ஓடி வந்து அம்மா என்று அணைத்துக்கொண்டாள்.


சாராதா கழுத்தில் மஞ்சள் கயிற்றுடன் நிற்கும் தன் மகளை ஆசை தீரப் பார்த்து மகிழ்ந்தார்..அருணும், பூஜாவும் சாரதாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.. சாரதா தன் பரம்பரை செயினை, பூஜாவின் கழுத்தில் போட்டு விட.. 


“அம்மா இந்த செயின் எனக்கு போட்டு விட்டா அப்பா உங்களைதான் திட்டுவாரு ” என தன் அப்பாவின் குணம் அறிந்து சாரதாவிடம் கூற.


 “இது உங்க பாட்டியின் நகைடா.. அது உனக்குதான் சேரணும்”  என்று பூஜாவின்  நெற்றியில் முத்தமிட்டு.. நான் கிளம்புறேன் உடம்ப பார்த்துக்கோ ” என்றார்.


சாரதாவிடம்இருங்க அண்ணி சாப்பிட்டு போகலாம் என்று  கூறினார் செல்வி..


“இப்பகூட நான் அவருக்கு தெரியமாதான் வந்திருக்கேன்.. இன்னொரு நாள் வந்து விருந்தே சாப்பிடுறேன் செல்வி” என்று சாரதா ராகவனுடன் கிளம்ப ஆயத்தமானார்.


ராகவன் பூஜாவின் அருகில் வந்து அவள் தலையை வருடி உங்க அப்பாவும் உன்னை பார்க்க வருவாருடா.. அந்தநாள் விரைவில் வரும் அதுவரைக்கும் வெயிட் பண்ணு என்று கூறினான்.


“அருண் ஆபிஸ்ல பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு.. அதற்கு அனுப்ப வேண்டிய கொட்டேசனை ரெடி பண்ணணும் மதியம் போல வரியா” என்று கேட்க


 “டேய் நேத்து தான் எனக்கு கல்யாணம் ஆகியிருக்கு இன்னிக்கு என்னை ஆபீஸ் வரசொல்லுறீயே”  இது நியாயமா என்று அவனிடம் போலியாக கோவித்துக் கொண்டான்.


இவர்கள் பேசுவது பூஜாவின் காதிற்கு நன்றாகவே விழுந்தது.. “அண்ணா அருணை கம்பெனிக்கு புறப்பட்டு வரசொல்றேன்.. நீங்க அம்மாவை விட்டு ஆபீஸ் கிளம்புங்க என்றாள்..


“கிராதகி எனக்கு வில்லன் வெளியில இல்ல.. வீட்டுக்குள்ளேயே இருக்குறா” என்று அவளை முறைத்தான்.


ராகவனும், சாரதாவும் கிளம்பிச் சென்ற பிறகு.. செல்வி இருவருக்கு உணவை பரிமாறினார்.. இருவரும் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் கழித்து அருண் ஆபிஸ் கிளம்பிவிட்டான்.


ராகவன் கணினியில் டெண்டருக்காக கொட்டேசனை டைப்பண்ணிக் கொண்டிருந்தான்.. அருண் கதவை தட்டிக்கொண்டு உள்ளே சென்று ராகவனின் எதிரே அமர்ந்தான்..


ராகவன் அருணை பார்த்து சிரித்து “என்ன நைட் எல்லாம் செம ஜாலியா என்ஜாய் பண்ணுனியா” என்றான்.


“அருண் அதைத்தான் நீ சிவா பூஜையில கரடியா வந்து என்னை ஆபிஸ் வரவைச்சுட்டியே” என்று கன்னத்தில் கைவைத்து சோகமாக சொன்னான்.


ராகவன் அருணிடம் கொட்டேசனை நீட்டி “இதை மட்டும் சரியா இருக்காணு பார்த்துட்டு கிளம்பு” என்றான்..


“அப்படியெல்லாம் இல்லடா இது எவ்வளவு முக்கியமான டெண்டர்னு எனக்கு தெரியும்.. அதுதான் நான் வந்துட்டேனே” என அவன் நீட்டிய கொட்டேசனை வாங்கி சரிபார்த்து சில கரெக்சன்களை கூறினான்.


ராகவனும் அருண் கூறிய அமௌண்ட்களை போட்டு பிரிண்ட் அவுட் எடுத்து அதை போஸ்ட் செய்யுமாறு அருணிடம் நீட்டினான்.. அதன் பிறகு லண்டனுக்கு போன் செய்து கபிலிடம் அருண் கான்ஸ்ப்ரன்ஸ் மீட்டிங் போட.. ஆதவன் அந்த மீட்டிங்கில் கலந்து கொண்டான்.


 “என்னடா பெண்டாட்டி கூட சமாதானம் ஆகிட்டியா” என்று கேட்டான்.. ஆதவன் முகம் சிவந்து விட்டது.. போங்கண்ணா என்று சிணிங்கிக் கொண்டான்.. அதன் பிறகு அனைவரும் கம்பெனியை பற்றி டிஸ்கஸ் செய்தனர்.. மீட்டிங் முடிந்ததும் ராகவன் ஆதவனிடம் “கமலி எப்படி டா இருக்கா” என்றான்..


“என் பொண்டாட்டி ரொம்ப நல்லாயிருக்கா” என்று அழுத்தி சொல்ல ஆப் லைனுக்கு சென்று விட்டான்.


“ராகவ் நான் கிளம்புறேன்டா” என்று கிளம்பிவிட


அருண் இல்லாததால் ராகவனுக்கு வேலை அதிகமாக இருந்தது. அதையெல்லாம் முடித்துவிட்டு கிளம்புவதற்கு இரவு பத்து மணி ஆகிவிட்டது.


ராகவன் காரை வீட்டின் வாசலில் நிறுத்த தாமரை ராகவனுக்கு போனில் அழைத்தாள்.. ராகவனின் போனில் தாமரையின் எண்ணை பார்த்து ஆன் செய்து “சொல்லுடா” என்றான்..


“எப்போ வருவீங்க” 


“இதோ வந்துவிட்டேன்” என்று கதவை தள்ளிக்கொண்டே உள்ளே வந்தான்


சண்முகமும், ராஜதுரையும், பிரபாவதியின் பக்கத்தில் தாமரையும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.. அவர்களை பார்த்த ராகவன் புன்னகையுடன்  “வாங்க மாமா வாங்க அத்தை” என்று கூறி சண்முகத்தின் அருகில் அமர்ந்தான்..


“மாப்பிள்ளை தாமரைக்கு ஏழு  மாதம் ஆரம்பிருச்சாச்சு.. அவளுக்கு வளைகாப்பு போடணும்ல அதான் உங்ககிட்ட பேசணும்னு வந்தோம்” என்றார்.


ராகவன் சண்முகத்தை பார்க்க..  சம்மந்தி சொல்றது போல செய்துடலாம்” என்று கூற. பானுமதி அனைவரையும் சாப்பிட கூப்பிட்டார்.


 அனைவரும் சாப்பிட்டு அறைக்குச் சென்று படுத்தனர்.


தாமரை பாலை எடுத்துக்கொண்டு அறைக்குச் செல்ல.. ராகவன் லேப்டாப்பில் அன்றைய வெளிநாட்டிலிருந்த வந்திருந்த மெயில்களை செக் செய்து கொண்டிருந்தான்.. தாமரை வந்தது தெரிந்து “தாமரை திரும்பி நீ தூக்கம் வந்தா தூங்குடா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. அதை முடிச்சுட்டு வரேன்” என்றான்.


தாமரைக்கு கோவம் வந்துவிட்டது.. “ஆமாமா நான் எப்போதும் தூங்கிகிட்டே இருக்கேன்.. இந்த கதையை படிக்கிறவங்க கூட.. என்ன எப்ப பார்த்தாலும் இந்த தாமரை பொண்ணு ரெஸ்ட் எடுத்துட்டே இருக்குனு கமெண்ட்ஸ் போடுறாங்க” என்று முதன்முறையாக ராகவனிடம் கோபப்பட்டு பேசினாள்.


ராகவன் லேப்டாப்பை உடனே முடி வைத்துவிட்டு எழுந்து தாமரையை கையை பிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமரவைத்து தானும் அவள் அருகில் அமர்ந்தான்.. தாமரையின் மூக்கை பிடித்து லேசாக ஆட்டி “என் தாமரை குட்டிக்கு இன்னிக்கு என்னாச்சு.. மூக்குக்கு மேல கோவம் வருதே” என்று அவளிடம் சமாதானமாக பேசினான்


தாமரை தன் மேடிட்ட வயிற்றை பிடித்து கொண்டு கண்கள் கலங்க “நான் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரிவேனா.. உங்க தம்பியும், தம்பி பெண்டாட்டியும் தான் தெரிவாங்க” என்று குரல் கம்ம ஆதங்கத்துடன் பேசினாள்.


ராகவன் சிரித்துக்கொண்டே “இதுதான் கோபமா” என்று அவளை தோளோடு அணைக்க முயன்றான் .


ஆனால் அவனிடமிருந்து விலகி அமர்ந்தாள் தாமரை . அவள் விலகி அமர்வதை பார்த்து  ராகவனின் மனம் வெதும்பியது.. ராகவனுக்கு தாமரையின் செய்கையை பார்த்து ஒன்றும் புரிந்து விழித்தான்


“என்ன ஆச்சு என் தங்க பொண்ணுக்கு .. நீ மனசுல என்ன நினைக்கிற என்று சொன்னா தாண்டா தெரியும்” என்று கவலை கலந்த குரலில் கேட்டான்.


” பெண்டாட்டின்னு ஒருத்தி இருக்கானு உங்களுக்கு ஞாபகம் இருக்கா.. எப்ப பாரு பிஸ்னஸ் அப்படி இல்லாட்டி மத்தவங்க பிரச்சனைகளை பார்க்குறது இருக்கீங்க.. என்ன மறந்துட்டீங்க.. என் மேல கொஞ்சம் கூட காதலே இல்ல.. என்னை கடைசி நேரத்துலதான உங்க தலையில கட்டுனாங்க” என்று கேவலுடன் கேட்டாள்.. இதை கேட்ட ராகவனுக்கு இதயம் வெடித்துவிடும் போல ஆனது.


ராகவனின் விழியோரம் கண்ணீர் கசிந்தது. அவன் பதறிப்போய் “ஏய் என்னடி இப்படியெல்லாம் பேசற உன்னைய விட யாரும் எனக்கு முக்கியமில்லடி” அவளை அணைக்க பார்த்தான்..  தாமரை சாமாதானம் ஆகாமல் “நீங்க சொல்றது நான் எப்படி நம்பறது.. நான் ஒரு மனுசி இருக்கறதே உன் கண்ணுக்கு தெரியல.. எனக்குனு கொஞ்சம் கூட நேரம் ஒதுக்க மாட்டேன்கிறீங்க” என்று கூறி கண்ணீர் வடித்தாள்.


ராகவன் எழுந்து அவள் காலடியில் அமர்ந்து அவள் மடியில் தலையை சாய்த்து எனக்கு எப்போதும் இப்படி இருக்கதான் ஆசை தாமரை.. நீ என்கிட்ட எப்படி கேட்கலாம் என்று குரல் நடுங்க கேட்டுஎழுந்து வாட்ரோப்பில் இருந்த சில தாள்களை தாமரையிடம் நீட்டினான்.


அந்த தாள்களை வாங்கி படித்து பார்த்த தாமரையின் கைகள் லேசாக நடுக்கியது அவள் கண்கள் ஊற்றெடுத்து ஆறாக ஓடியது.. தாமரை எழுந்து ராகவனை பிடித்து தாவி அணைந்து கொண்டாள்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *