என் மனம் கொய்தவளே

This entry is part 22 of 27 in the series என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

29 என் மனம் கொய்தவளே 
அருண் மருத்துமனையை அடைந்ததும் காரிலிருந்து இறங்கி  பூஜாவை தூக்கும் போது பூஜா லேசாக கண்விழித்து அருணை  பார்த்து விட்டு மீண்டும் மயக்கமானாள்.. அருண் வேகமாக ரிசப்சனுக்கு  சென்று .. அங்கிருந்த நர்ஸிடம் இவங்களுக்கு அடிபட்டு மயக்க மாய்ட்டாங்க டாக்டரை பார்க்கணும் என்றான்.
நர்ஸும் டாக்டரை அழைத்து வர.. டாக்டர் பூஜாவை செக் பண்ணிவிட்டு தலையை ஸ்கேன் பண்ணிப் பார்த்துடலாம், பர்ஸ்ட் இவங்கள அட்மிட் பண்ணனும்..  ஆனா அதுக்கு முன்னாடி இது ஆக்ஸிடன்ட் கேஸ், நாளைக்கு ஏதாவது எங்களுக்கு ப்ராப்ளம் வரும், நீங்க போலீஸ் கம்ப்ளைண்ட் பண்ணீட்டிங்களா என்று கேட்டார். 
டாக்டர் அதுக்கெல்லாம் அவசியமில்ல.  ஆபத்துக்கு பொய் சொல்லுவது பாவம் இல்லை என்று சார் எனக்கு “இவ நான் கட்டிக்கபோற பொண்ணுதான் நீங்க  டீரிட்மெண்ட் பாருங்க” என்றான். 
டாக்டரும் ஓ.கே. என்று டீரிட்மெண்டை ஆரம்பித்தார்.. பரந்தாமன் வீட்டில் பூஜா இன்னும் வாராமல் இருப்பதை எண்ணி  மனைவி சாரதாவிடம் சத்தம் போட்டு கொண்டிரந்தார்.  ” ஏய் என்னடி உன் பொண்ணுகிட்ட சாய்ந்தரம் சீக்கிரம் வர சொன்னயா” என்று அவரை திட்டிக் கொண்டிருந்தார்.
சாரதா அவருக்கு பயந்து “இல்லைங்க, பூஜாவை நான் வீட்டுக்கு நேரமேதான் வர சொல்லியிருந்தேன் ஆனா இன்னும் வரவில்லையே அவளுக்கு ஏதும் ஆகியிருக்குமோ” என்று அச்சம் கொண்டு கேட்டாள்.
பரந்தாமனுக்கு மகள் இன்னும் வராததது கொஞ்சம் பயத்தை கொடுத்தது. அதற்குள் மாப்பிள்ளை வீட்டுகாரங்க வந்து விட.. பரந்தாமன் அவர்களை வரவேற்று அமரவைத்து பேசிக் கொண்டிருந்தார்.. வெகுநேரம் ஆகியும் பூஜா வராததாதல் மாப்பிள்ளை  வீட்டுக்காரர்கள் கோபமுற்று, “என்ன பரந்தாமன் நீங்க சொன்னதாலதான நாங்க பொண்ணு பார்க்க வந்தோம். இப்ப பொண்ணு இன்னும் வரல..  நாங்க இன்னொரு நாள் பார்த்து வரோம் என்று கிளம்பிவிட்டனர்.  பரந்தாமனுக்கு அவமானமாகி போய் விட்டது. பூஜாவின் மீது கடும் கோபத்திலிருந்தார்.
ராகவன் வீட்டிற்கு நுழைய சண்முகமும், ஆதவனும் ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.. 
“ஹாய் டாட்” என்று அவர் பக்கத்தில் அமர்ந்தான்.
ராகவனின் கண்கள் தாமரையை தேடின..  ராகவன் தாமரையை தேடுவதை பார்த்து விட்ட சண்முகம் “டேய் தாமரையை உங்க அம்மா ரெஸ்ட் எடுக்க அனுப்பிட்டா” என்றார் .
“டாட் நீங்க அண்ணாவ ரொம்ப டேமேஜ் பண்ணுறீங்க” என அவரை போலியாக முறைத்தான் ..  ராகவன், ஆதவன் சொல்வதை ஆமோதிப்பதுபோல “ஆமா” என தலையை ஆட்டினான்.
” டாட் நான் ப்ரஸ்ஸாகி வரேன்” என்று மேல வேகமாக படிகளில் ஏறி அறையை அடைந்து, கதவை மெதுவாக திறந்தான் .
தாமரை ஷோபாவில் சோர்வாக கண்களை மூடி தலை சாய்ந்திருந்தாள் ..  ராகவன் அவளருகில் சென்று “தாமரை” என அழைத்து அவள் பக்கத்தில் அமர்ந்தான். ராகவன் அமர்ந்ததும் அவன் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்டாள்.
“என் தங்கத்துக்கு என்னாச்சு” என மனையாளின் தலையை கொத்தி விட்டான்
“ஒரே வாமிட் வந்துட்டே இருங்குங்க என்னால முடியலை..  வயத்துக்குள்ள உங்க பையன் உங்களை மாதிரியே ரொம்ப குறும்பு பண்ணுறான்” 
“என் பையன் என்னமாதிரி தான் இருப்பான்” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான். 
“ம்ம்” என்று சிணுங்கி அவன் வயிற்றோடு தலையை சாய்த்து இறுக்கி கொண்டாள்.
 தாமரையின் நெற்றியில் முத்திட்டு அவள் வயிற்றை லேசாக தடவி “டேய் குட்டி பையா அம்மாவா ரொம்ப கஷ்டப்படுத்தாதே” என்று அவள் வயிற்றில் முத்தமிட்டான் ராகவன்.
ராகவன் தாமரையின்   வயிற்றை தொட்டது நெளிந்து எழுந்து அமர்ந்து கொண்டாள்.  “போதும்.. போதும்.. உங்க பையனை கொஞ்சினது எனக்கு பசிக்குது” என்றாள்.
தாமரையை கன்னம் பற்றி “ ரொம்ப பசிக்குதா  2 மினிட்ஸ்டா பிரஸ்ஸப்  ஆகி வரேன்” என்று குளியலறை நோக்கி சென்று குளித்து விட்டு வெளியே வந்து அவளை அழைத்துக்கொண்டு டைனிங் ஹாலுக்கு சென்றான்.
சண்முகமும், ஆதவனும் சாப்பிட அமர கமலி அவர்களுக்கு பூரியை தட்டில் போட்டு உருளைகிழங்கு மசாலை ஊற்றினாள். . 
“தாமரை  நீயும் உட்காரு  உனக்கு பிடித்த பூரியும் மசாலும் செய்திருக்கேன்” என்றதும் ராகவனும் தாமரையும் அமர்ந்து சாப்பிட்டனர்.
பரிமாறி கொண்டிருந்த பூஜாவிடம் “குட்டிமா நீயும் உட்கார்ந்து சாப்பிடுடா” என்றான் ராகவன்.
 “இல்லீங்க மாமா நீங்க சாப்பிடுங்க நான் அத்தைகூட சாப்பிட்டுக்குறேன்” என  பூஜா ஆதவனை முறைத்து கொண்டே ராகவனுக்கு பதில் கொடுத்தாள்.
 “போச்சுடா நாம இவளை சாப்பிட கூப்பிடலைன்னு நம்மள முறைச்சு பார்க்குறா  இன்னிக்கு நைட் நான் தொலைஞ்சேன்” தலையில் கைவைத்துக்கொண்டான்.
ராகவன் மொபைலுக்கு போன் வர அதில் அருணின் எண் ஒளிர ராவகன் கையை கழுவிக்கொண்டு போனை ஆன் செய்து “ஹலோ சொல்லுடா” என்றான்.
அருண் கொஞ்சம் பதட்டத்துடன் பூஜாவிற்கு ஆக்ஸிடன்ட் நடந்ததை சுருக்கமாக சொல்லி முடித்தான்..  ராகவன் அதிர்ந்து “என்னடா சொல்லுற நானும் ஆதவ்வும் இப்பவே கிளம்பி வரோம்” என்று கிளம்ப..
“என்ன ராகவ்” என்று கேட்டார் சண்முகம் 
“அப்பா பரந்தாமன் பொண்ணு பூஜாக்கு ஆக்ஸிடன்ட்” என்று  கூறினான்.
“இரு நானும் வரேன் என மூவரும் கிளம்பினர்.
பானுமதி பூஜா உயிர்க்கு எந்த வித ஆபத்து வரக்கூடாது என்று கடவுளை வேண்டினார்.
 “அத்தை பூஜா யாரு? மூணுபேரும் ஏன் இவ்ளோ பதட்டமா போறாங்க”என்று தாமரையும், கமலியும் கேட்டனர்..
பானுமதி பரந்தாமனுக்கும் தங்களுக்கும் உள்ள பிரச்சனையை பற்றி சுருக்கமாக கூறினார்.
மூவரும் மருத்துமனையை அடைந்து ரிசப்சனில் சென்று பூஜாவின் பெயரை சொல்ல அவர்கள் எமர்சன்சி வார்டில் இருப்பதாக கூறினார்..  மூவரும் அங்கு செல்ல அருண் வார்டின் வெளியே நின்று கொண்டிருந்தான்.
சண்முகம் “அருணிடம் டாக்டர் என்ன சொன்னாங்கப்பா” என்று கேட்டார்.
“இன்னும் ஏதும் சொல்லலைங்கப்பா” என்று கூறும் போது வார்டிலிருந்து மருந்துவர் வெளியே வந்து அருணிடம் “பேசண்ட்க்கு ஸ்கேன் எல்லாம் எடுத்து பார்த்ததில் எதுவும் பயப்படதேவையில்ல.. அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு விழித்து விடுவாங்க. நீங்க அவங்களை அழைத்து செல்லலாம்” என்று கூறி சென்றார்.
சண்முகம் பரந்தாமனின் போனுக்கு அழைத்தார்..  பரந்தாமன் போனை ஆன் செய்து “ஹலோ” என்று பேச மறுமுனையில் நான் சண்முகம் பேசுறேன் என்றார்.. 
 “எதுக்கு போன் பண்ணியிருக்கு உன்கிட்ட பேச எனக்கு விருப்பமில்லை” என்று போனை கட் செய்ய பார்க்க.. 
சண்முகம் “டேய் பரந்தாம சொல்ல வரதை என்னனு கேளுடா” என்று சற்று கோபமாக பேசினார்.
பரந்தாமன் கடுப்புடன் “சொல்லு” என்றார். 
 “பூஜாக்கு ஆக்ஸிடன்ட் ஆகியிருக்கு” என்று மருத்துவமனையின் பெயரரை சொல்ல அவர் சாரதாவை அழைத்துக் கொண்டு அங்கு விரைந்து வந்தார்.
பரந்தாமனும், சண்முகமும் சண்டைபோட்டுக் கொண்டிருந்தாலும் சண்முகம் பரந்தாமன் குடும்பத்தின் மீது இன்றும் பாசத்துடன் இருப்பார்..  பரந்தாமன் ஆதவனையே கொல்லும் அளவிற்கு போனாலும்கூட அதையெல்லாம் பொருட்டுபடுத்தாது சாரதாவை எங்கு பார்த்தாலும் புன்னகைமுகத்துடனே அவரிடம் நலம் விசாரிப்பார். அதுதான் பூஜாவிற்கு ஆக்ஸிடன்ட் என்று கேள்விப்பட்டதும் சண்முகம் ஓடிவந்து விட்டார்.
பூஜா லேசாக கண்விழித்து நாம இப்ப எங்கிருக்கிறோம் என்று சுற்றிப்பார்க்க அங்கிருக்கும் உபகரணங்களை கண்டு  மருத்துமனையில் தான் இருக்கிறோம் என்பதை அறிந்து  கொண்டாள்.. அங்கு வந்த நர்ஸ் பூஜா கண் விழித்ததை  பார்த்து வெளியே நின்றிருந்த அருணிடம் பூஜா கண்விழித்து விட்டதை சொன்னார்.
நால்வரும் வார்ட்டின் உள்ளே நுழைய பூஜா மெதுவாக எழுந்து அமரபார்க்க.. சண்முகம் அவளின் தோளை பற்றி தன்னுடன் அணைத்துக் கொண்டார்.. பூஜாவுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
“எதுக்குடா அழற உனக்குதான் எதுவும் ஆகலையே” என்று அவள் பக்கத்தில் போய் அமர்ந்தான்.
 “அண்ணா இன்னிக்கு என்னை பொண்ணு பார்க்க வராங்க.. நான் வீட்டுக்கு டைம்குக்கு போகாததால அப்பா என்மேல ரொம்ப கோவமா இருப்பாங்க”என்று கண்ணீர் விட்டாள்..
ஆதவனுக்கு பரந்தாமனின் மீது கோபம் ஏற்பட்டு பூஜாவை பயமுறுத்தி வைத்திருப்பதை பார்த்து அவனும் பக்கத்தில் அவள் கண்ணீரை துடைத்துவிட்டு “அப்பா கிட்ட நான் பேசுறேன்டா” என்று அவள் தலையை தடவிக் கொடுத்தான்.
அருண் பூஜா அழுவதை பார்த்து அவளுக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலையில் நின்றிருப்பதை எண்ணி வருந்தினான்.
பூஜா இவர்கள் தன்னிடம் பாசமாக பேசுவதை எண்ணி மகிழந்தாள்..  அதேநேரம் பரந்தாமன் ரிசப்சனை அடைந்து பூஜாவின் பெயரை சொல்ல அவர்கள் பூஜா இருக்கும் வார்டை சொல்ல பரந்தாமன் அங்கு சென்றார்..  வார்டிற்குள் நுழைய பூஜாவை சுற்றி தன் எதிரி சண்முகம் குடும்பமே சுற்றியிருப்பதை  பார்த்து கோபம் கொண்டு பூஜா என்று கத்தினார்.
பூஜா பரந்தாமன் கத்துவதை பார்த்து பயந்து சண்முகம் தோளில் மறைந்தாள்..  சண்முகம் பூஜாவை ஒரு கையால் அணைத்துக் கொண்டு, “என்னடா பரந்தாமா இது ஹாஸ்பிட்டல் எதுக்கு இவ்வளவு சத்தம் போடுற” என கோவப்பட்டு பேசினார் 
பரந்தாமன் அவரை மதிக்காமல் “இங்க உங்களுக்கு என்ன வேலை முதல்ல இங்கிருந்து எல்லாம் வெளியே போங்க”என்று சத்தமிட்டார்..
ராகவனுக்கும், ஆதவனும் தந்தையின் முகத்திற்காக கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.. பரந்தாமன் கோபம் கொண்டு பேசுவதை கேட்ட பூஜா தைரியமாக, அவளுக்கு ஆக்ஸிடன்ட் நடந்ததைக் கூறி, அருண் சார்தான் என்ன ஹாஸ்பிடல் சேர்ந்தாங்க என்றாள்.
 “பூஜா இவங்களோடு சேர்ந்து நடிக்கிறியா” என்று நா கூசாமல் பேசினார்.. 
 “பரந்தாமனின் பேசுவதை பார்த்து கோபம் கொண்டு வார்த்தையை அளந்து பேசுடா. பெத்த பொண்ணுகிட்ட மாதிரியா பேசுற” என்று காட்டமாக பேசினார் சண்முகம் .
“சும்மா நிறுத்துடா என் பொண்ணுகிட்ட ஏதோ சொல்லி என்கிட்டயிருந்து பிரிக்க பார்க்குறயா” என்றார்.
சண்முகம் மருத்துவமனை என்பதையும் மறந்து “வாயை மூடுடா.. நீயெல்லாம் மனுசனா என்று அவர் சட்டையை பிடித்துவிட்டார். என்றுமே கோபம் படாத மனிதர் பூஜாவிடம் பரந்தாமன் கேட்ட கேள்வி அவருக்கு கோபத்தை வரவைத்துவிட்டது.
“மாமா அவர விடுங்க அவரைப்பத்தி உங்களுக்கு தெரியும் தானே” என்று அவரிடம் கைகூப்பி நின்றார்..  அந்நேரம் வசந்த் உள்ளே நுழைய சண்முகம் பரந்தாமனிடம் கோபமாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்து சண்முகத்திடம் “எங்கப்பா மேல இருந்து கையை எடுங்க” என்றான்.
 “உன்அப்பன் பேசின பேச்சுக்கு இந்நேரம் அவன் வாயை உடைச்சிருக்கணும் இன்னும் பேசாம அமைதியா இருக்கேன் பாரு” என்று வசந்த்திடம் எகிறினார்.
 “போதுமாடி நீ பண்ணிண காரியம் அப்பாவை அவமானப்படுத்தி இருக்கு. ஆக்ஸிடன்ட் ஆகி கண்விழித்ததும் நீ அப்பாவுக்குதானே போன் பண்ணியிருக்கணும்.. அதைவிட்டு இவனுங்களுக்கு போன் பண்ணியிருக்க” என்று நடந்ததை முழுமையாக அறியாமல் பேசினான் வசந்த்”
வசந்த பேசும் போது அருணிற்கு வசந்த் மண்டையில் ஓங்கி அடிக்க வேண்டும் என்ற அளவிற்கு கோவத்துடன் நின்றிருந்தான்.
 “எப்ப இவ என்னை பார்த்து சண்முகம் தோளுக்கு பின்னால மறைச்சாலோ அப்பவே இவ என் பொண்ணு இல்ல” என்று கத்தினார். பரந்தாமன்
“என்னங்க! என்ன பேசுறீங்க” என்று அதிர்ந்து நின்றார்.. சாரதா
“பூஜாவை  முறைத்து பார்த்து விட்டு.. சாரதா இனிமே இவ நமக்கு பொண்ணு இல்ல.. இவளை நான் தலை முழுகிட்டேன்.. நீயும் அவளை மறந்துவிடு” என்று சாரதாவை இழுத்து கொண்டு வெளியே சென்றுவிட்டார்.
“இப்போ உங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குமே” என்று ராகவனை பார்த்து முறைத்த வசந்த்  தங்கை அடிபட்டுகிடக்கிறா என்ற கவலையில்லாமல் அவனும் பரந்தாமன் பின்னால் சென்றுவிட்டான். . சாரதாவிற்கு பூஜா தன் வீட்டில் இருப்பதை விட சண்முகம் வீட்டில் நிம்மதியாக இருப்பாள் என்று எண்ணி கொண்டார்
பூஜா தன் குடும்பம் தன்னை தனியே விட்டு சென்று விட்டார்கள் என்று வருத்தத்தில் சண்முகத்தின் தோளில் சாய்ந்து அழுந்தாள்.  சண்முகம் பூஜாவின் கண்ணீரை துடைத்துவிட்டு “உன் அப்பன் போனா என்னடா.. சித்தப்பா நான் இருக்கேன் ” என்று அவளை அழைத்துக் கொண்டு வார்டை விட்டு வெளியே வந்து சண்முகம் பூஜாவை காருக்கு அழைத்து சென்றார்… அருண் நர்ஸ் எழுதி கொடுத்த மருந்து மாத்திரைகளை பார்மசியில்  வாங்கிக்கொண்டு  வந்தான்.. நால்வரும் மருத்துவமனையை விட்டுச் சண்முகம் சென்றனர்.
 உங்க லைக்ஸ் கமெண்ட்ஸ்தான் எனக்கு பூஸ்ட்டப். அப்பிடியே சைலன்ட் ரீடேர்ஸ் உங்க லைக்ஸ் கமெண்ட்ஸ் போடுங்கபா

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *