வாராயோ எனை நீ சேராயோ

This entry is part 1 of 20 in the series வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ


“வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி  சமப்ரப

நிர்விக்னம் குரு மேதேவ சர்வ கார்யேஷு 

ஸர்வதா”

விநாயகர் ஸ்லோகம் சொல்லி கொண்டே ஒரு மாமி கோயிலுக்கு படியேறி கொண்டிருந்த கிரிஜாவையும் சஞ்சனாவையும் தாண்டி வேகமாக ஏறி சென்றார்.

“ஏய்! கொஞ்சம் வேகமா ஏறுடி. பாரு அந்த மாமி நம்மளை விட பாஸ்டா போறாங்க. அப்புறம் வெயில் வந்துடும். செல்லம்ல….” சஞ்சனாவிடம் கெஞ்சினாள் கிரிஜா. 

“அடியே! உனக்கு பர்த்டேனா பிரண்ட்க்கு ட்ரீட் தான் வைக்கணும், இப்படி பிரண்டையே வைச்சு செய்யக்கூடாது என்று புலம்பி கொண்டே அவளுடன் படி ஏறினாள் சஞ்சனா. 

“புலம்பாம வாடி, மத்தியானம் உனக்கு பிரியாணி வாங்கி தரேன்!”

“இப்போ சொன்னியே இது பாயிண்ட்! குட் கேர்ள்!”

காலையில் ஆறு மணிக்கெல்லாம் உச்சி பிள்ளையார் கோயிலுக்கு படி ஏறிக் கொண்டிருந்தார்கள் இருவரும். அதற்கு தான் இந்த அக்கபோர். கிரிஜாவுக்கு பக்தி அதிகம். சஞ்சனாவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் கோயிலுக்கு செல்வது, சாமி கும்பிடுவது எதுவும் தானாக செய்யமாட்டாள். வீட்டில் அவள் அம்மா சொல்லும் போது கும்பிடுவாள். கிரிஜா அழைத்தாலும் செல்வாள். இன்று அதிகாலையில் கிளம்ப வைத்து விட்டாள் என்று தான் இந்த பாடு. 

இருவரும் சிறு வயது முதலே தோழிகள். இருவர் வீடும் அருகருகில். ஒரே பள்ளி. கல்லூரி வேறு. சஞ்சனா எம்ஏ இங்கிலிஷ் முடித்து இப்போது எம் பில் பண்ண வேண்டும் அல்லது வேலைக்கு போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். டீச்சர் ஆக வேண்டும் என்பது தான் அவள் ஆசை. கிரிஜா எம்.எஸ்சி மைக்ரோபயாலஜி முடித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்கிறாள். இருவரும் படிப்பை முடித்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது.

அடிக்கடி வருவதால் குருக்களுக்கு இவர்களை நன்றாக தெரியும். “உங்க இரண்டு பேருக்கும் ஒரே ஊரில் இருந்து மாப்பிள்ளை வர பகவானை நல்லா பிரார்த்தனை பண்ணிண்டிங்களா பொண்ணுங்களா?” என்று வம்பிழுத்தார்.

கிரிஜா மாஸ்டர்ஸ் படிக்க ஆரம்பிக்கும் போதே வரன் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். எதுவும் பொருந்தி வரவில்லை அவளுக்கு. அதனால் அவள் குருக்களிடம், 

“என் மாப்பிள்ளை மாட்டு வண்டியில் வர்றாரா இல்லை பொடி நடையா நடந்து வர்றாரா தெரியலை, இன்னும் வந்து சேரலை. இவளுக்கு சீக்கிரம் முடிஞ்சா அப்புறம் அது எந்த ஊரோ அங்க போய் மாப்பிள்ளையை நானே தேடிக்கிறேன்” என்று சொல்லி சிரித்தாள். 

“ஆமா! எனக்கு பார்த்த மாப்பிள்ளை பிளைட்டில் பறந்து வர்றார் சாமி” என்று அப்போது வானத்தில் பறந்த ஏரோபிளேனை காட்டி கூறினாள் சஞ்சனா விளையாட்டாக. 

அவள் சொல்லவும் கோயிலில் யாரோ மணி அடிக்கவும் சரியாக இருந்தது. குருக்கள் உடனே “நீ சொன்ன மாதிரி உண்மையிலே உன் மாப்பிள்ளை அதில் இருக்காரோ என்னவோ! சரியா மணி அடிக்கிறது” என்றார். 

“நீங்க வேற ஏன் சாமி,  நானே இவ வீட்டுல மாதிரி எங்க அப்பா அம்மா அவசரப்படலைனு சந்தோஷப்பட்டுட்டு இருக்கேன். நான் கொஞ்ச நாள் வேலைக்கு போகணும் சொல்லி இருக்கேன்! அப்புறம் தான் கல்யாணம்.” என்றாள் நம்பிக்கையாக.

“நேரம் வந்தா வீட்டில் இருக்காவாளும் மாறிடுவா! பார்ப்போம்” என்று சிரித்தார் குருக்கள்.

மறுநாள் மாலை, 

 

புடவை கட்டி கொள்ள மாட்டேன், பூ வேண்டுமென்றால் வைத்து கொள்கிறேன் என்று சண்டை போட்டு, ஒரு சுடிதாரில் அளவாக பூ வைத்து முகத்தில் ஒப்பனை இருக்கிறதா இல்லயா என்று தெரியாத மாதிரி ரெடி ஆகி இருந்தாள் சஞ்சனா. அவ்வளவு சிம்பிளாக இருந்தும் மிக அழகாக இருந்தாள். 

அறைக்குள் உர்ரென்று அமர்ந்து இருந்த தோழியை பார்த்து பொங்கி வந்த சிரிப்பை வாய்க்குள்ளயே அடக்கினாள் கிரிஜா. 

அவள் சிரிப்பை அடக்குவது புரிந்து, “ராஸ்கல், சிரிச்சே! தொலைச்சுடுவேன் பார்த்துக்க” என்று ஒன்றும் செய்ய முடியாத இயலாமையில் எரிச்சலாக மிரட்டினாள் சஞ்சனா.

மிக அவசரமாக ஒரு பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு ஆகி இருக்க, சஞ்சனாவின் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது கிரிஜாவால். கேட்ட அவளுக்கே கொஞ்சம் அதிர்ச்சி நிறைய ஆச்சர்யம். ஏனென்றால் நேற்று சஞ்சனா சொன்னது போல் அவளை ஒரு வருடம் வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று தான் இருந்தார்கள். 

“ஆனாலும் அந்த ஐயருக்கு கருநாக்கு டி. இப்படி ஒரே நாளில் ஆன்ட்டியும் அங்கிளும் மாறி போய்ட்டாங்களே!”  என்றாள் கிரிஜா. 

“இன்னைக்கு வர்றவனை ஓட விடுறேன் பாரு! அப்புறம் இருக்கு அந்த ஐயருக்கு, அந்தாளு மண்டையையும் உடைக்கிறேன்! கோபத்தில் பொரிந்து தள்ளிக்கொண்டு இருந்தவளை பார்க்க பாவமாக தான் இருந்தது கிரிஜாவுக்கு. அவள் சற்றும் எதிர்பார்க்காத விஷயம் அல்லவா இது. அதனால் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவளால்.

திடீரென்று மதியம் மூணு அளவில் வந்து மகளிடம் “உன்னை பார்க்க நாலு மணிக்கு ஒரு பையன் வர்றார். ரெடியா இரு மா!” என்று சஞ்சனாவின் தந்தை ஜெயராமன் சொல்ல,  அதிர்ந்து போனாள் சஞ்சனா. 

“என்ன பா? என்ன? எதுவும் ஜோக் பண்றீங்களா?” மகளிடம் நல்ல ஜாலியாக பேசும் பெற்றோர் தான் அவளுக்கு. 

“அய்யோ இல்லை டா. உனக்கு மாதிரியே எனக்கும் இது கொஞ்சம் எதிர்பார்க்காத விஷயம் தான். டீடெயில் எல்லாம் அப்பறம் சொல்றேன். இப்போ நேரம் இல்லை. பூரணி சீக்கிரம் ரெடி ஆய்டுங்க. நான் கடைக்கு போயிட்டு வரேன்.”

“என்ன மா?” அழுபவள் போல் சஞ்சனா கேட்க, 

“எனக்கும் தெரியாது டா! அப்பா என்கிட்டயும் அப்புறம் சொல்றேன் தான் சொல்லி இருக்கார். கிரிஜாவுக்கு போன் பண்ணி வரச் சொல்லு.

கிரிஜா வந்து விட, கொஞ்சம் தோழியை சமாதானம் செய்து ரெடி ஆகி கொண்டிருந்தனர். சஞ்சனா பூரணியிடம், 

“இப்போவே சொல்லிடுறேன், கண்டிப்பா நான் ஒரு வருஷமாச்சும் வேலைக்கு போகணும். அப்புறம் தான் கல்யாணம். ஓக்கேயா?”

“அதெல்லாம் அப்புறம் பார்ப்போம்! இப்போ பேசாம ரெடியாகு.” மனதில் நல்ல பையனா இருந்தா ஜாதகத்தை பார்ப்போம் என்று எண்ணிக் கொண்டு மகளிடம் வாயை விடாமல் இருந்தார் பூரணி.

“மாப்பிள்ளையை உனக்கு ரொம்ப பிடிச்சு போச்சுனா என்ன டி பண்ணுவ? அவசரப்பட்டு வாயை விடாதே பாப்பா!” காதிற்குள் ரகசியம் பேசினாள் கிரிஜா. 

அவளை முறைத்தவள், மூடு இல்லை என்று பத்திரம் காட்டினாள்.

கடையில் இருந்து வந்த ஜெயராமன், “இன்னும் பத்து நிமிஷத்திலே வந்துடுவாங்க. அரை மணி நேரம் தான் இருப்பாங்க. ஜஸ்ட் சும்மா ப்ரண்ட்லியா பேசு டா போதும்” என்றார் மகளிடம். 

பத்து நிமிடத்தில் அந்த இன்ஸ்டன்ட் வரன் மற்றும் ஒரு வயசானவர் ஒருவர் வந்தார்கள். அவர் ஜெயராமனிடம், நான் சுந்தரேசன். முதல்ல வெரி வெரி ஸாரி அண்ட்  தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். இவ்ளோ ஷார்ட் நோட்டீஸ்ல நீங்க ஒத்துக்கிட்டதே பெரிசு” என்று ரொம்ப தன்மையாக பேசினார். 

“பரவாயில்லை விடுங்க. மாதவன் என்னோட ரொம்ப க்ளோஸ் பிரண்ட். அவர்  உங்களை பத்தி சொன்னதால ஒன்னும் ப்ரோப்ளேம் இல்லை எங்களுக்கு.” என்றார் ஜெயராமனும் அவரை சமாதானம் செய்வது போல்.

அருகில் இருந்தவனை அறிமுகப்படுத்தினார் சுந்தரேசன். இது என் அண்ணன் பேரன் கிருஷ்ண சரத். யுஸ்ல எம்.பி.ஏ பைனான்ஸ் படிச்சு இருக்கான். சிங்கப்பூரில் ஒரு இன்டெர்னேஷனல் பேங்கில் அனலிஸ்ட்டா  இருக்கான். உறவில் தான் எனக்கு பேரன் மற்றபடி என் பையன் மாதிரி தான். நேரம் ரொம்ப குறைவா இருக்கதால பொண்ணும் பையனும் பார்த்துக்கட்டும்,  மற்றது எல்லாம் நாம பொறுமையா பேசிக்கலாம். அவனுக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு பிளைட் என்றார். 

உள்ளிருந்து அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த இரு பெண்களும் சிங்கப்பூர், ஏர்போர்ட் என்றதும் வேகமாக பார்த்துக் கொண்டார்கள். கிரிஜா உடனே கோயில் மணி அடிப்பது போல் ஆக்க்ஷன் செய்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள். 

அருகில் இருந்த கத்தரிகோலை எடுத்து அவளை குத்துவது போல் ஆக்க்ஷன் செய்தாள் சஞ்சனா. கிரிஜா அடுத்து பேசுவதற்குள், பூரணி சஞ்சனாவை அழைக்க, 

வெளியே வந்தவள் இயல்பாக இருந்தாள். வீட்டுக்கு வந்த கெஸ்ட்டை வரவேற்பது போல் வாங்க என்று அழைத்தாள். யாரையும் கவர வேண்டும் என்று நினைக்காததால் சகஜமாக இருந்தாள். அதுவே அங்கு இருப்பவனை வெகுவாக கவர்ந்து விட்டது என்று தெரியவில்லை அவளுக்கு.

அங்கே இருந்த சேரில் அமர சொன்னார் ஜெயராமன். “இதான் என் பொண்ணு சஞ்சனா, எம் ஏ இங்கிலிஷ் முடிச்சு இருக்கா. டீச்சிங்ல ரொம்ப இன்டெர்ஸ்ட்” என்றார். 

“வெரி குட். வெரி குட்.” என்றார் சுந்தரேசன். 

வந்ததில் இருந்து அனைவரும் பேசியதை கேட்ட படி அமைதியாக இருந்தான் பையன். 

ஜெயராமனே, “தம்பியை மாடிக்கு கூட்டிட்டு போ மா” என்று அனுப்பி வைத்தார். 

அதற்கும் எதுவும் சொல்லாமல் புன் சிரிப்புடன் அமைதியாக அவளை பின் தொடர்ந்தான். 

மேலே சென்றவுடன், 

“ஹாய்!” என்றான் கொஞ்சமாக ஸ்மைல் செய்து பேச்சை தொடங்கி வைக்க,

ஹாய் சரத்!” என்றாள் வேண்டுமென்றே இவள். 

அதுவரை வெகு இயல்பாக இருந்தவன் கண்ணில் மின்னல் வந்து போனது. ஒரு புது சுவாரஸ்யத்துடன் அவளை பார்க்க ஆரம்பித்தான் சரத். 

தெரியாதவனை உடனே பேர் சொல்லி அழைத்தால் கொஞ்சம் திமிர் பிடித்தவள் போல் காட்டும் என்று நினைத்து அவள் அழைக்க, அது அவன் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அனைவரும் அவனை கிருஷ்ணா என்று தான் அழைப்பார்கள். அவன் அப்பா இருந்தவரை அவர் மட்டும் தான் சரத் என்பார். இன்று இவள் அழைத்ததும் அவன் அப்பா இவளை திருமணம் செய்ய சொல்கிறாரோ என்று குழந்தை தனமாக யோசித்தான் சரத். 

அதே சமயம் அவளின் உடல்மொழி உன்னை நான் பொருட்படுத்தவில்லை டா என்று சொல்ல அவளை சீண்டும் ஆசை வந்தது சரத்துக்கு. 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *