என் மனம் கொய்தவளே
என் மனம் கொய்தவளே.. 5
இருவரும் மோதிரம் மாத்திக் கொண்டதும்.. ராகினியினால் அங்கே நிற்க முடியவில்லை.. அறைக்குள் சென்று விட்டாள்.
ராஜதுரையின் ஒன்று விட்ட சித்தப்பா ராமமூர்த்தி ராஜதுரை நிச்சயம் நடத்தி முடிஞ்சிட்டோம்… நாளைக் கடத்த வேணாம் இப்பவே முகூர்த்த தேதியையும் குறிச்சிடலாம்” என்றார்.
ராஜதுரை சண்முகத்தை பார்க்க ..
“பேஷா குறிச்சிடலாம் சம்மந்தி” என சொல்ல
ராஜதுரை சந்தோஷத்துடன் “சித்தப்பா முகூர்த்த தேதி குறிச்சுடலாம்.”
“அம்மாடி பிரபா காலண்டர் எடுத்து வாம்மா” என்று ராமமூர்த்தி கூற
பிரபாவதி காலண்டரை எடுத்து வந்து ராமமூர்த்தியிடம் கொடுத்தார்.
காலண்டரை பார்த்து ராம் மூர்த்தி இந்த மாதத்திலேயே நல்ல நாள் இருக்கு 21, 23 நல்ல முகூர்த்த நாளா இருக்கு அதுல எதாவது ஒரு தேதியில வச்சுக்கலாம்” என்று சண்முகத்தையும், ராஜதுரையையும் பார்க்க.
இருவரும் ஒரே சமயத்தில் “எங்களுக்கு பூரண சம்மதம்” என்று தலையசைத்தனர்..
”அப்புறம் என்னப்பா..இனி சாப்பாடுதான்” என்று ராமமூர்த்தி கூற அனைவரும் கொள்ளென்று சிரித்தனர்.
ராகினிக்கு ஹாலில் பேசுவது அறைக்குள் நன்றாக கேட்டது… முகூர்த்த தேதியும் குறிச்சாச்சு இனி என்ன செய்ய முடியும்… ருத்ரன் மாமாகிட்ட பேசணும் என்று மனதில் எண்ணினாள்.
சம்மந்தி மாப்பிள்ளையும் பொண்ணும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடட்டும் என பானுமதி பிரபாவிடம் கூற
பிரபாவதி பக்கத்தில் நின்ற பார்வதியிடம் ராகினியை கூட்டி வரச்சொன்னார்.
பார்வதி ராகினியின் அறைக்குச் சென்று “உன்ன சாப்ட கூப்டறாங்க ராகினி வா போக கலாம்” என கூப்பிட அவள் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.
பார்வதிக்கும் ராகினியை பார்க்க பாவமாக இருந்தது .. “உன்னோட கண்ணுல கண்ணீர் வரக்கூடாது ராகினி… யாராவது வந்தா ரொம்ப தப்பா போயிடும்” என்று அவள் கண்ணீரை தன் சேலை முந்தானையால் துடைத்துவிட்டார்.
ராகவன் ராகினி, இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்… ராகவன் ராகினியிடம் இயல்பாகவே நடந்து கொண்டான்.. ராகினிக்கு தொண்டையில் சாப்பாடு இறங்கவில்லை… ஏதோ சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றுவிட்டாள்.
சண்முகத்தின் குடும்பம் மனநிறைவோடு கிளம்பினர்.. ராஜதுரையும் அவர்களை புன்னகை பூக்க வழியனுப்பி வைத்தார்..
ராகவனுக்கு அருண் போன் செய்து ஒரு பாரின் கிளைன்ட் வந்துருக்காங்க என கூற ராகவன் மற்றொரு காரில் ஆபிஸ் கிளம்பினான்.
“என்னங்க முகூர்த்தப்புடவை காஞ்சிபுரத்தில் எடுத்துக்கலாம்” என்று கூற மனைவி சொல்லே மந்திரம் என்பது போல தலையைசைத்தார் சண்முகம்.
“வீட்டுக்கு போனவுடன் சம்மந்தி வீட்டுக்கு போன் போட்டு சொல்லிருங்க..வர்ற புதன் கிழமை கிருத்திகை அன்னைக்கே முகூர்த்தப்புடவை எடுத்துடலாம்” என சண்முகத்தின் முகம் பார்க்க ..
அவர் ஏதோ யோசனையாக “ம்ம் சரிமா சொல்லிரலாம்” என்றார் .
“ஏங்க ஒருமாதிரி இருக்கீங்க …”
“நீ பொண்ணு முகத்தை பார்த்தியா பானுமதி.. பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் கேட்டுத்தானே பண்ணிருப்பாங்க… ஆனா அந்த பொண்ணு முகத்துல சந்தோஷம் இல்லாம சோகமா இருந்துச்சு..அதுதான் யோசனையாய் இருக்கேன்..”
“ஏங்க உங்க புத்தி இப்படி கோக்கு மாக்கா யோசிக்கிறது.. நான் கும்பிடுற பிள்ளையாரப்பன் நமக்கு நல்லதுதான் நடத்தி வைப்பாரு ” என கூறினார்.
“அம்மாடி ராகினி” என அறைக்குள் நுழைந்தார் ராஜதுரை..
தந்தையின் வருகையை அறிந்த ராகினி குளியலறை சென்று அழுத முகத்தை நீர் கொண்டு கழுவி ராஜதுரையின் முன் நின்று “ கூப்பிட்டிங்களாப்பா என ராஜதுரையை பார்த்து கேட்க.. தந்தை அறியாததா தன் மகள் அழுதிருக்கிறாள்” என்று அவள் முகத்தை பார்த்து கண்டுபிடித்துவிட்டார்.
“என்னடாஆஆ உனக்கு மாப்பிள்ளையை பிடித்துதானே இருக்கு..அவர் கேட்ட விதம் அப்படி..
“அப்..அப்பா … எ..எனக்கு மாப்பிள்ளையை பிடிச்சுதான் இருக்கு”என்று திக்கி திணறி சொல்லி விட்டாள்.
“நீ வேற யாரையாவது விரும்புறயா” என சற்று குரலை உயர்த்தி கோபத்துடன் கேட்டார்.
“நா.. நான் “யாரையும் விரும்பலைங்கப்பா” என்று தயங்கத்துடன் பதிலளித்தாள்.
ராஜதுரை மகளின் தலையை தடவி “அப்பா ஊருக்கு முன்னால வாக்கு கொடுத்துட்டேன்.. அந்த வாக்கை காப்பாத்துவது உன் கையில்தான் இருக்கு..”என ராகினியின் கையை பிடித்தார் ..
“அப்பா நான் உங்களுக்கு தலைகுனிவு வர விடமாட்டேன்” என ராஜதுரையை கட்டிக்கொண்டாள்.
ராஜதுரைக்கு ராகினி ருத்ரனை விரும்புவது தெரிந்துதான் தன் மகளிடம் இவ்ளோநேரம் பேசியது.. தன் மகளை மனதார நம்பினார்…ஆனால் அவள் அவர் நம்பிக்கையை தூள் தூளாக்க போகிறாள் என்று ராஜதுரை அறியவில்லை.
ருத்ரன் வீட்டில் தன் தாய் பார்வதியின் மடியில் படுத்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான்.. பார்வதி தன் மகனின் தலையை கோதி விட்டு “ருத்ரா நீ அழுது பிரயோசனம் இல்ல … நீ மனசை மாத்திக்கதான் வேணும்..”
“என்னம்மா சொல்றீங்க நானும் ராகினியும் சின்ன வயசிலிருந்து மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டோம்… இப்ப வந்து ராகினிய மறக்கச் சொல்றீங்க” என்று தன் தாயிடம் விவாதம் செய்தான்.
பார்வதியின் கணவன் சுந்தரம் ருத்ரனுக்கு மறைமுகமாக சப்போர்ட் செய்தார் .. பார்வதி எழுந்து சமையலறை சென்று விட தன் மகனின் அருகில் சென்று “ருத்ரா நீ ராகினி கிட்ட போன்ல பேசுப்பா.. அவ மனநிலை எப்படி இருக்கோ தெரியலை” என மகனின் மனநிலைய மாற்ற பார்த்தார் .
“அப்பா எனக்கு பசிக்கல.. அம்மா வந்தா நான் தூங்க போய்ட்டேன்னு சொல்லிருங்க” என்று கோபத்துடன் அறைக்குச் சென்றான்.
ருத்ரன் போன் எடுத்து ராகினியை அழைக்க… ராகினி ருத்ரனின் நம்பரை பார்த்து போனை கட் செய்து விட்டாள்.. ராஜதுரை தன் மகளை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறார் அல்லவா… ஆனால் ராகினியின் காதல் மனம் அவ்வளவு சீக்கிரம் மாற வில்லை.. கதவை சாற்றி விட்டு வந்து போனை எடுத்து ருத்ரனுக்கு அழைத்து விட்டாள்..அவளின் அழைப்பிற்கு காத்திருந்தாற் போல முதல் ரிங்கிலேயே எடுத்து விட்டான்.. “குட்டிமா ஏன்டி !! போனை கட் செய்த என குரல் கம்ம கேட்டான்.
“மாமா என்று அழுக….
“ஏன்டி அழுகுற!! என் மனசு தாங்கலடி தங்கம்” என குறைபட்டுக்கொண்டான்.
“மாமா நிச்சயமே முடிச்சுட்டாங்க..இனி நாம ஒண்னு சேரமுடியுமான்னு தெரியல” என்று கண்ணீர் சிந்தினாள் .
“ஏய் பைத்தியம் மாதிரி பேசாத..தாலி கட்டுற நேரத்துல எத்தனை கல்யாணம் நின்னுருக்கு தெரியுமா… இப்ப கூட நீ வரியா நான் உன்ன கூட்டி போய் தாலி கட்டுறேன்” என்று ஆக்ரோசத்துடன் கூற…
” மாமா அப்பாக்கு தலைகுனிவு என்னால வந்துவிடக்கூடாது..”
“என்னடி கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசைன்னு சொல்ற மாதிரி இருக்கு நீ பேசறது… “
“மாமா நீ ஒருமுறை அப்பாட்ட வந்து பேசு” என கூற அவனுக்கு கோவம் வந்து விட்டது.
” ஏய் அவருகிட்ட பேசறதுக்கு என்கிட்ட தைரியமில்லடி.”.என்று போனை கட்செய்து விட்டான்.
ராகினி அழுது தலையணை நனைந்தது தான் மிச்சம்… ருத்ரன் எது நடந்தாலும் ராகினிதான் தன் பெண்டாட்டி என்று முடிவோடு தூங்கினான்…
“அக்கா.. அக்கா…” என்று கதவை தட்ட கண்ணைத் துடைத்துக்கொண்டு கதவை திறந்தாள்.
“அக்கா எனக்கு தூக்கம் வருது நீ என்னடானா கதவை சாத்தி வைச்சிருக்க” என போலியாக கோவித்துக்கொண்டு கட்டிலின் ஒரு புறம் நிம்மதியாக படுத்துத் தூங்கினாள்.
பரந்தாமன் வசந்திடம் பானுமதி டெக்ஸ்டைல்ஸின் உற்பத்தியை குறைக்க வேண்டுமென சதித்திட்டம் தீட்டினர்.. ராகவனுக்கு இந்த மாதம் கல்யாணம் பேசி முடித்திருப்பது தெரிந்து அவன் தம்பி ஆதவ் தான் கம்பெனியை சில நாட்கள் பார்க்கப் போறான் அவனை சுலபமா ஏமாத்திடலாம் என்று தப்புக் கணக்கு போட்டனர் தந்தையும் மகனும்.. ஆதவ் எத்தனுக்கு எத்தனாய் பாய்ந்து அடிக்கப்போகிறான் என்பதை அறியாமல்.
கல்லூரியில் ஆதவிற்கு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் முடிவுக்கு வந்தன.. அவன் தன் கல்லூரிப்படிப்பை முடிக்க போறான்.. இன்டர்ன்ஷிப் தங்களது கம்பெனிலேயே கிடைத்துவிட்டது.
ஆதவின் அணைப்பிலிருந்தாள் தாமரை..
“தாமரை உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என ஆதவன் கூற
அதே நேரத்தில் தாமரையும் “நானும் உங்கிட்ட பேசணும்..” என இருவரும் கோரசாக சொல்ல..
” நீங்க சொல்லுங்க என்று சொல்ல..
என் அண்ணா ராகவனுக்கு கல்யாணம் முடிவாகியிருக்கு என்று ஆதவ் கூற..
“அட என்னங்க எங்கக்காவுக்கும் மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்கு” என தாமரை சந்தோஷப்பட்டாள்.
“அப்போ ரெண்டு பேருக்கும் ரூட் கிளியர் ஆகிடுச்சு” என்று அவள் கன்னத்தை பிடித்து கிள்ளி முத்தமிட்டான்.
“ம்..” என தாமரை சிணுங்கிக் கொண்டாள்.. ரெண்டு பேரும் நிதானமாக பேசியிருக்கலாம்.. ராகவனுக்குதான் ராகினியை பொண்ணு பார்த்திருக்கிறார்கள் என இருவரும் அறியாமல் காதல் வயப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ரெண்டு வாரம் உன்னை பார்க்க முடியாது அதுவரைக்கும் தாங்கற மாதிரி சில பல முத்தங்கள் வேணும்டி என்று ஆதவன் கேட்க
தாமரை வெட்கப்பட்டு கன்னத்தை கிள்ளி ஒரு முத்தம் வைத்தாள்.
“நான் என்ன சின்ன குழந்தையாடி.. கன்னத்த பிடிச்சு முத்தம் கொடுக்கற ” என்று அவள் முகத்தை கையேழுந்தி அவள் உதட்டை நோக்கி போக தாமரை கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
ஆதவ் புன்னகையுடன் அவள் உதட்டில் முத்தம் கொடுக்கும் முன் உதட்டில் விரலை வைத்து மறைத்தாள் .
“உதடு முத்தம் எல்லாம் கல்யாணத்துக்கு பின்னாடி தான்” என்று அவனை தள்ளிவிட்டாள்.
“ஏய் என்னடி!! ஒரு லிப் கிஸ் கூட கொடுக்க மாட்டேன்கிற..நான் எப்படி உன் கூட குடும்பம் நடத்தி பிள்ளை குட்டி பெற்று எடுக்கப்போறேனு தெரியல…” என்று சலித்துக் கொண்டான்.
சண்முகம் முகூர்த்தப்புடவை எடுப்பதற்கு ராஜதுரை வீட்டில் போன் போட்டு முன்பே சொல்லி விட ஒரு டெம்போ டிராவலரை பிடித்து தன் சொந்தங்களை அழைத்து காஞ்சிபுரம் வந்துவிட்டார். தாமரையை கூட்டிட்டு வரவில்லை… சண்முகம் பானுமதியை மட்டும் அழைத்து வந்திருக்க ராகவன் பின்பு வருவதாக கூறிவிட்டான்…ராகினி பானுமதியின் அருகில் அமர்ந்திருந்தாள்..
“கடைக்காரர் எவ்ளோ விலையில் பட்டு புடவை பார்க்கிறீங்க” என்று கேட்க
1 லட்சம் ரூபாயிலிருந்து எடுத்து காட்டுங்க பானுமதி என கூறியதும் சுற்றியிருந்த அனைவரும் வாயில் கைவைத்தனர்.
ராகினிக்கு இது ஏதும் காதிலே விழுவது போல தெரியவில்லை.. கடைக்காரர் சில புடவைகளை எடுத்துப்போட ராகினியிடம் உனக்கு எந்த புடவை பிடிச்சிருக்கு என பானுமதி கேட்க..
“நீங்களே உங்களுக்கு பிடிச்சதை எடுங்க அத்தை” என அவளின் சிந்தனை வேறு எங்கோ இருந்தது.
சுற்றி நின்ற அனைவரும் ஆளுக்கொரு புடவை எடுக்கச் சொன்னார்கள்.
அந்த நேரத்தில் ராகவன் கடைக்குள் வர..
பானுமதி புடவை எடுக்கும் பொறுப்பை மகனிடம் ஒப்படைக்க.. கடைக்காரர்கள் புட்டா டிசைன், சரிகை பெரிதாக சில பல டிசைன்கள் காண்பித்தார்கள்..அதையெல்லாம் ஒதுக்கி விட்டு கோல்டன் கலர் மெரூன் சாரியில் சில வேலைபாடுகளுடன் கூடிய சாரியை செலக்ட் பண்ணினான் ராகவன் ..அதன் விலை 2 லட்சம்.. கடையில் வேலை செய்யும் பெண்ணை அழைத்து அவளுக்கு பீளிட் வைத்துக் காண்பிக்க சொன்னார் பானுமதி.
ராகினி மனசுக்குள் மருகி போனாள்.. பிரபாவதி ராகினிக்கு மேலும் ஐந்து பட்டுப்புடவைகளை எடுத்தார்.. நலங்கு வைக்க, தாய் மனைச் சேலை என நிறைய தேவைப்படும் என்று மகளுக்கு அதிகமாகவே எடுத்து வைத்தார்..
ராஜ துரை தாமரைக்கு பச்சை நிறத்தில் பட்டுப் புடவை 1 லட்சத்தில் எடுத்திருந்தார்..
பார்வதி ருத்ரனையும் கூட்டி வந்திருந்தார்.. ருத்ரன் யாரும் அறியாது தன் வசதிக்கேற்ப 50 ஆயிரத்தில் அரக்கு வண்ண நிறத்தில் ஒரு பட்டுப்புடவையை தனியாக எடுத்து வைத்துக் கொண்டான்.
ராகவனுக்கு ரிசப்சன் கோட் சூட். முகூர்த்ததுக்கு பட்டு வேட்டி சட்டை எடுத்து கடையை விட்டு புறப்பட்டனர்.. மதியமாகிவிட்டதால் ஹோட்டல் சென்று சாப்பிட்டு நகை எடுக்க நகைக் கடைக்கு சென்றனர்
பானுமதி ராகினிக்கு 11 சவரனில் தாலிக் கொடி செய்யச் சொன்னார்… சண்முகம் பானுமதியிடம் ராகினிக்கு வைர நெக்லஸ்ஸும் வைர சிமிக்கியும் வாங்கச் சொன்னார்.. இதையெல்லாம் பார்த்த பிரபாவதி மனமெல்லாம் பூரித்துப் போனார்.
“அண்ணா அவளுக்கு ஏற்கனவே நிறைய வாங்கிக் கொடுத்திருக்கோம்.. அவ அதையெல்லாம் போடறதே இல்ல.. இப்போ எதுக்குங்கண்ணா வீண் செலவு”… என சொல்ல..
“அம்மாடி எங்களுக்கு பெண் பிள்ளை இல்ல.. அதுதான் மருமகளுக்கு போட்டு அழகு பார்க்கிறோம்”.. என்று கூறுவதை கேட்டு , ராஜதுரையும் பிரபாவதியும் தன் மகளுக்கு அமைய போகும் வாழ்க்கையை எண்ணி சந்தோஷம் கொண்டனர்.. இதையெல்லாம் காதில் கேட்டு ராகினி பொம்மைபோல் அமர்ந்திருந்தாள்.
” மாப்பிள்ளை உங்களுக்கு செயின் டிசைன் பாருங்க” என சில டிசைன்களை காண்பிக்க..
“உங்களுக்கு பிடிச்சதை எடுத்து கொடுங்க மாமா” என சொல்ல ராஜதுரையின் மனது வானில் ரக்கை கட்டி பறந்தது. 5 சவரனில் ஒரு செயினை காண்பிக்க
“நீங்களே போட்டுவிடுங்க மாமா”
ராஜதுரை மன மகிழ்ச்சியுடன் மருமகனின் கழுத்தில் போட்டு விட்டார். ராகவன் கிளம்பும்போது ராகினியை பார்க்க அவள் தலையை குனிந்திருந்தாள்..
“மாப்பிள்ளை வீட்டில் கிளம்புறாங்க கொஞ்சம் அண்ணாந்து பாருடி” என்று அவள் காதருகில் வந்து சொல்ல ..
ராகினி இதழ் மெல்ல விரித்து ராகவனை பார்த்தாள்.. ராகவனும் சின்ன தலையசைப்புடன் சென்று விட்டான்.
உங்க லைக்ஸ் கமெண்ட்ஸ்தான் எனக்கு பூஸ்ட்டப். அப்பிடியே சைலன்ட் ரீடேர்ஸ் உங்க லைக்ஸ் கமெண்ட்ஸ் போடுங்கபா
