உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

அத்தியாயம் 28

“ச்சு.. ச்சு.. ச்சு.. ச்சூ.. என்ன அவன்யா எல்லாரும் உன்னை இப்டி துரத்திட்டாங்க.?! ச்சே..‌ ரொம்ப மோசம்ல.. ஆனா அவுங்கள தூண்டி விட்டதே நாந்தான் பேபி..” என பெருமையுடன் தன்னை சுட்டிக்காட்டியபடி மெர்லின் கூறியதும் அவன்யாவின் அழுகை நின்றது.

‘அடிப்பாவி.. இவ்ளோ நாள் தனியா..‌ அநாதையா இருந்த எனக்கு ஒரு குடும்பத்த கடவுளாப் பாத்துக் கொடுத்தாருன்னா அதையும் கெடுத்துட்டியேடி..’ என மனக்குமுறல் வெளியே வர மூச்சுகளை பெரிதாக எடுத்து விட்டவாறே நின்றவளை மேலும் வெறுப்பேற்றி அழ வைக்கும் எண்ணத்துடன்,

“ம்ம்ம்.. இப்ப என்ன பண்ண போற அவன்யா? குப்பை அள்ளப் போறியா.. இல்ல.. பிச்சையெடுக்கப் போறியா.. ஏன் கேக்குறேன்னா என்னால முடிஞ்ச ஹெல்ப்ப பண்ணிட்டு போலாம்ன்னு நினைக்கிறேன். சொல்லும்மா.. என்ன ஹெல்ப் வேணும்..?” என நக்கல் நையாண்டி செய்தவாறு காரின் முன்பக்கம் ஸ்டைலாக சாய்ந்து கொண்டு நின்றவாறு கேட்டவளை,

“ஏன்டி குரங்கு.. நானும் போனாப் போகுது..‌ போனாப் போகுதுன்னு பாத்தா என்ன காரியம் பண்ணி வச்சுருக்க நீயி?! இப்ப நான் உனக்கு என்ன ஹெல்ப் பண்ணப் போறேன்னு பாக்குறியா?!” என பேசியவாறு சாலையோரத்தில் இருந்த மரக்கட்டையை கையிலெடுத்தபடி வந்தவளை அலட்சியமாகப் பார்த்தபடி,

“என்ன… என்னை அடிக்கப் போறியா? அப்புறம் உன் நிலைமை தான் இன்னும் மோசமாகும்.” என உள்ளுக்குள் பயமிருந்தாலும் வெளியே தைரியமாக பேசியவளை ஆத்திரத்துடன் பார்த்து,

“அச்சச்சோ.. உங்களத் தாக்குற அளவுக்கு எனக்கு தைரியமில்லீங்க.” என பவ்யமாகக் கூறிக்கொண்டே மெர்லினின் அருகில் வந்தவள், “ஏய்ய்ய்…” என ஓங்கி கத்தியபடி மரக்கட்டையைத் தூக்கி அடிக்க வந்ததும், “ஆ…..” என அலறிக் கொண்டு தப்பித்து விலகினாள் மெர்லின்.

அவன்யாவின் கைவண்ணத்தில் மெர்லினின் கார் கண்ணாடி சில்லு சில்லாக நொறுங்கி விழுந்ததைக் கண்டவளின் முகம் திருப்தியில்லாமல் போக, “ச்சே.. சரியா உடையலியே. இரு.. இந்தா வர்றேன்.” என மீண்டும் சுற்றிப் பார்த்தவளின் கண்கள் மின்ன,

“ஏய்.. என்னடி பண்ற?! மை காஸ்ட்லி கார். ஓகாட்.. உன்னை இதுக்காக என்னை பண்றேன்னு பாரு.” என அவன்யாவை அடிப்பதற்காக நெருங்கியபோது, கையில் வேறொரு ஆபத்தான ஆயுதத்துடன் திரும்பியவளைக் கண்டதும் சட்டென ‘பிரேக்’ போட்டவாறு நின்றாள் கண்ணில் பீதியுடன்.

“அ..அ..அவன்யா.. எதுவாயிருந்தாலும் பேச்சு பேச்சாத் தான் இருக்கணும். இப்டியெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுக்காத. அது நல்லதில்ல.” என பதறியவாறு மெர்லின் கூற, அசால்ட்டாக முன்னேறி நடந்து வந்தபடி,

“யாருக்கு நல்லதில்ல..?” என புருவங்களை உயர்த்திக் கேட்டவளை மனதினுள் வைதவாறு, “எனக்கு.. எனக்கு தான் அவன்யா. ப்ளீஸ்.. அதை கீழப் போட்ரு.” என பயந்தபடி பின்வாங்கினாள் மெர்லின்.

ஆக்ரோஷத்துடன் அடிக்க வந்தவள் பயந்து நடுங்குமளவிற்கு அப்படி என்ன ஆயுதத்தை அவன்யா எடுத்தாள்?! சுற்றிலும் தேடியவளின் கண்களில் கருவேளம் முள் நிறைந்த கிளை ஒன்று கண்ணில் பட, தன் கையைக் குத்தி குதறினாலும் பரவாயில்லையென நினைத்து அதனைக் கையிலெடுத்து திரும்பினாள் அவன்யா.

‘அச்சச்சோ.. தேவையில்லாம சீண்டிட்டோமோ?! அப்டியே போய் தொலையட்டும்ன்னு விட்ருக்கணும். இப்ப என்ன பண்றது?! இதை வச்சு அடிச்சா தோள் சதையெல்லாம் பிஞ்சுடுமே.’ என குள்ளநரி போல பதுங்கியவாறு பின்வாங்கியவளை,

ஏளனத்துடன் பார்த்து, “நான் பொறந்ததுலருந்தே இந்த மாதிரி ஏமாற்றம் எல்லாம் பாத்து பாத்து சலிச்சு தான் வளர்ந்துருக்கேன். அதுனால இப்ப நடந்த விஷயத்துனால நான் ஒடிஞ்சு போயிடுவேன்னு நெனச்ச நீ எவ்ளோ பெரிய முட்டாள் தெரியுமா?!” என மெர்லினை நோக்கி முன்வந்தவளைக் கண்டு பயந்தபடி பின்வாங்கினாள் மெர்லின்.

“உன்னை அடிக்க மனசு வரல. காருன்னு ஒன்னு இருக்குறனால தானே பொசுக்கு பொசுக்குன்னு வந்து நிக்கிற?! அதை ஒன்னுமில்லாம பண்ணிட்டா அட்லீஸ்ட் நான் நிம்மதியா கிளம்பி போற வரைக்கும் நீ இங்கயே தேவுடு காத்துக்கிட்டு நிப்பல்ல. அதனால..” என இழுத்தவாறு முட்கிளையை அடிக்க கை ஓங்கியவளிடம்,

“வேணாம் அவன்யா.. சொல்றதக் கேளு..” என தடுக்க முயன்றவாறு கத்திக் கொண்டிருந்த மெர்லினை கொஞ்சமும் சட்டை செய்யாமல், காரின் டயர்களின் மேல் ஆவேசத்துடன் அடித்தாள் அவன்யா.

அந்த வேகத்தில் காரின் டயர்களில் நிறைய ஓட்டைகள் விழுந்து நாசமாவதைக் கண்டு திருப்தியானவள், கையில் வைத்திருந்த முட்கிளையை கீழேப் போடாமல் மெர்லினிடம் திரும்பி,

“இனிமே என்னை ஃபாலோ பண்ணுனன்னு வையி.. கார்ல விழுந்த அடியெல்லாம் உன்மேலயும் விழும். மைன்ட் இட்.” என அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கூறிவிட்டு விறுவிறுவென மீண்டும் கடந்து வந்த வழியிலேயே நடந்தாள் அவன்யா.

தனது கையாலாகாத்தனத்தை எண்ணி எரிச்சலடைந்தவள் உடைந்து சேதமடைந்திருந்த காரினை ஓங்கி எத்தி ஆத்திரத்தை வெளிப்படுத்தினாள். தன் மொபைலை எடுத்து கார் மெக்கானிக்கை ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு ஓரமாக சென்று அமர்ந்து விட்டாள் மெர்லின்.

‘ச்சே.. என் காரை இப்டி பண்ணிட்டாளே. நல்லவேள இந்த முள்ளால நம்மள அடிச்சுருந்தா அவ்ளோ தான்.’ என கடுப்புடன் நினைத்தவள் மெக்கானிக்கிற்காக காத்திருக்கலானாள்.

வேகமாக நடந்து கொண்டிருந்தவளுக்கு சோர்வாக இருக்க, மனபாரமும் உடல்பாரமும் அவளை வெகுவாக களைப்படையச் செய்தது. ஓரிடத்தில் சென்று அமர்ந்தவளுக்கு தன் தோழி துர்காவின் நினைவு அதிகமாக வந்தது. தன் தோழியின் தோள் சாய மனம் ஏங்கியது.

ஆனால் தன்னுடைய உடைமைகள் மொபைல் அனைத்தும் ராகவ் வீட்டில் இருப்பதை உணர்ந்தவள், ‘அதை வேறு எடுக்க செல்ல வேண்டுமா?!’ என மேலும் சோர்ந்தபடி தலையில் கைவைத்து சிறிது நொடிகள் கண்கள் மூடி அமர்ந்திருந்தாள் அவன்யா.

‘வேற வழியில்ல அவுலு.. அங்க போய் தான் ஆகணும். எதுவாயிருந்தாலும் பாத்துக்கலாம். தப்பே பண்ணாத உன்னை துரோகின்னு சொல்லி ஒதுக்கி வச்சக் குடும்பத்துக்காக ஏன் ஏங்குற?! ஃப்ரீயா விடு..’ என தன் காயப்பட்ட மனதிற்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் தேம்பி தேம்பி தன் மனம் அழுவதை அவளால் உணர முடிந்தது.

அதன் பிரபலிப்பாக தன் கண்களிலும் கண்ணீர் நிறைந்து வழிந்தது. ‘ஏன் கடவுளே.. ஏன் என் கண்ணுல இப்டி ஒரு குடும்பத்தோட வாழுறதுக்கு வாய்ப்பு கொடுத்த?! கொடுத்த வாய்ப்பையும் இப்டி தட்டிப்பறிச்சுட்டியே.. இது நியாயமா?!’ என அழது கொண்டிருந்தவளிடம் அவளது ஆழ்மனம் ஒருக் கேள்வி கேட்டது.

‘எப்டியும் மூணு மாசத்துல நீ அவுங்க எல்லாரையும் பிரியணும்ன்னு தானே அக்ரிமென்ட் போட்ட?! இன்னியோட மூணு மாசம் முடியுது..’ என நினைவுபடுத்தியதும் விழுக்கென நிமிர்ந்து அமர்ந்தாள்.

‘ஆமால்ல.. ரொம்ப ஆசைப்பட்டது என் தப்பு தான். எனக்கு… எனக்கு துர்காவ பாக்கணும் போல இருக்கே.. அவளப் பாக்கணும்ன்னா காசு வேணும். என் திங்க்ஸ் எல்லாமே ராகவ் வீட்டுல தான் இருக்கு. போய் எடுத்துட்டு அப்டியே அவர்க்கிட்டயும் சொல்லிட்டு வந்துடலாம்.’ என நினைத்தவளுக்கு ராகவ்வை நினைத்த மாத்திரத்தில் மீண்டும் கண்ணீர் பொங்கியது.

‘பாவம்.. எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டுட்டார். இனியாவது என்னை மறந்து சந்தோஷமா இருக்கட்டும்..’ என ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்டவாறு எழுந்து ராகத்தின் வீட்டை நோக்கி நடந்து சென்றாள்.

ராகவ்வின் வீட்டிற்குள் நுழைந்தவளைக் கண்டு அதிர்ச்சியானவர்கள் சாவித்திரி மற்றும் அவரது மகள்கள் மட்டுமே. அவன்யா கண்ணீருடன் செல்வதைத் தடுக்க முயன்ற ராஜேஸ்வரி பாட்டியின் மீது வெறுப்பை உமிழும் பார்வையை வீசியவன் அவரிடமிருந்து கைகளை உறுவிக் கொண்டு தன் மொத்த பலமும் தன்னை விட்டு சென்றது போல சாப்பாட்டு மேஜையில் சென்றமர்ந்திருந்தான் ராகவ்.

நேரம் செல்ல செல்ல ராகவ்வின் முகம் இறுகிக் கொண்டே போனதே தவிர எவரையும் ஏறெடுத்துப் பார்த்தானில்லை. ராகவ்விடம் சென்று சகஜமாக பேச முயன்ற ராணி மற்றும் மாதவியை தீப்பார்வையால் சுட்டான்.

அவனது அனல் தெறிக்கும் பார்வையில் மிரண்டு போனவர்கள் தாங்கள் எதிலோ முற்றிலும் தோற்றது போன்ற உணர்வை அனுபவித்தனர். என்ன செய்வது என அறியாமல் தன் தாயைபீ பார்த்தபோது ‘இப்போ விடு.. அப்புறம் பாத்துக்கலாம்.’ என ஜாடைக் காட்டியதும் தாயின் சொல்லுக்கு உடன்பணிந்து விலகிச் சென்றனர்.

தன் பேரனின் பாராமுகம் கண்டு வருந்தியவர் என்ன ஏதென்று விசாரியாமல் அவசரத்தில் முடிவெடுத்து விட்டோமோ என்றக் குற்றவுணர்வில் தவிக்கலானார் ராஜேஸ்வரி பாட்டி. முகம் முழுவதும் புன்னகையுடன் எதைப் பற்றியும் கவலை கொள்ளாது தன் மகள்களுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்தபடி உணவருந்திக் கொண்டிருந்த தன் மகள் சாவித்திரியைக் கண்டதும் அவர்களது நோக்கம் புரிந்தது பாட்டிக்கு.

‘கடைசில நானும் அவுங்களுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிட்டேனே. பாவம் அந்தப் பொண்ணு.. இந்நேரம் எங்கப் போயி எப்டி கஷ்டப்படுறாளோ?!’ என வேதனைப்பட்டபடி ஏதோ ஒருக் கோபத்தில் அவன்யாவை வெளியே போகச் சொன்ன ராஜேஸ்வரி பாட்டிக்கு மீண்டும் அவளது வருகை நிம்மதியை தந்தது.

அவளது வருகையை உணர்ந்தும் இறுக்கம் தளராமல் அமர்ந்திருந்த ராகவ்வை ஒருப்பார்வை பார்த்துவிட்டு, ‘மறுபடியும் எதுக்கு வந்தா?!’ என யோசித்தவாறு அவசர அவசரமாக அவளிடம் சென்று, 

“நில்லுடி. எங்க வந்த?! எதுக்கு வந்த?” எனத் திமிராக கேட்ட ராணியிடம் திரும்பி, “உன் வேலைய மட்டும் பாரு. எனக்கு தெரியும் நான் எதுக்கு வந்தேன்னு.” என அலட்சியமாக பதிலளித்தவாறு நடந்து சென்று படியேறியவளைக் காயப்படுத்தி தடுக்க முயன்றவாறு,

“இவ்ளோ அசிங்கப்படுத்தியும் மறுபடியும் எங்க வீட்டுக்கு திரும்ப வந்துருக்கன்னா நீ எவ்ளோ கேவலமானவன்னு நல்லாவேத் தெரியுது.” என சாவித்திரி தன் பங்குக்கு வார்த்தைகளை கொட்ட,

வேகமாக படியேறியவள் சற்று நிதானித்து மெல்ல சாவித்திரியை நோக்கித் திரும்பி, “உங்க வீடா?! இது உங்க வீடு கிடையாது. உங்க ஹஸ்பன்ட் இன்னும் ஹைதராபாத்ல உங்களுக்காக ஏகப்பத்தினி விரதனா காத்துட்டிருக்காரு. அவர் இருக்குற வீடு தான் உங்க வீடு. இது என் மாமனாரோட வீடு. என் புருஷனோட வீடு. உங்கள விட எனக்கு தான் உரிமை அதிகம். ஆனா நான் அதுக்காக இங்க வரல.” என அனைத்தையும் இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்ற தைரியத்துடன் எதிர்த்து பேசிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள் அவன்யா.

அவன்யாவின் கணீர் குரலில் எதையோ கண்டு கொண்டவன் போல சற்று இறுக்கம் தளர்ந்தவன் மெல்ல நாற்காலியில் அதுவரையிருந்த அலைக்கழிப்பு அனைத்தும் தொலைத்தவனாய் அமைதியானான் ராகவ்.

“பாத்தீங்களாண்ணா.. எங்கிருந்தோ வந்தக் கழுத. என்னை எவ்ளோ கேவலமா பேசிட்டா. நீங்களும் பாத்துட்டு சும்மா இருக்கீங்களே..” என அழுதவாறு தன் சகோதரனைத் தூண்டிவிட முயன்றவரைப் பார்த்து,

“அவன்யா சொன்னது உண்மையா சாவித்திரி.?! உன் புருஷன் பலப் பெண்களோட கூத்தடிக்கிறாருன்னு தானே என்கிட்ட சொன்ன. ஆனா உன் புருஷன் உனக்காக இத்தனை வருஷமா காத்துட்டிருக்காருன்ற உண்மைய எதுக்கு என்கிட்டருந்து மறைச்ச?” என தன் தங்கையைக் கூர்மையுடன் பார்த்து பகலவராஜன் கேட்டதும்,

ஒருகணம் திணறி விட்டு, “எல்லாவிதத்திலயும் பொய்யா சொன்னவளோட வார்த்தைய நம்பி என்னையே சந்தேகப்படுறீங்களாண்ணா?” என மழுப்பி சமாளித்தவரிடம்,

“அப்டின்னா அவன்யா சொன்னது பொய்யின்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் பிள்ளைங்க ஆதாரத்தோட அவளக் குற்றவாளியா காண்பிச்ச மாதிரி இப்போ நீயும் நிரூபி சாவித்திரி. இல்லைன்னா நானே நேரடியா இறங்க வேண்டியிருக்கும். ஏன்னா எனக்கு என் தங்கச்சியோட வாழ்க்கை முக்கியம்.” என பிடிவாதமான திடத்துடன் கூறியபடி பகலவராஜன் நின்றதும்,

அவரது கண்மூடித்தனமான தங்கைப்பாசத்தை உணர்ந்த சாவித்திரி மற்றும் அவரது மகள்கள் இருவரும் பேந்த பேந்த விழித்தவாறு நின்றிருந்தனர். ‘போற போக்குல எம்பொழப்புல மண்ணள்ளி போட்டுட்டு போயிட்டாளே பாவி..’ என அவன்யாவை வசைபாடியவாறு கையைப் பிசைந்தபடி நின்றிருந்த சாவித்திரியைக் கண்டு பகலவராஜனுக்கு புரிந்தது தன் தங்கை தன்னிடம் பொய்யுரைத்து இத்தனைக் காலமாக ஏமாற்றியிருக்கிறாள்’ என.

தன் கணவனால் வஞ்சிக்கப்பட்டதாக தனது தங்கை வந்துக் கூறியபோது கண்மூடித்தனமான தங்கைப்பாசத்தினால் ஆவேசத்துடன் கிளம்பிச் சென்று அவதூறு வார்த்தைகளை உதிர்த்துவிட்டு வந்து விட்டார் பகலவராஜன். ஆனால் இப்போது அது தவறு என உணர்ந்து வருந்தினார்.

மேலும் அவருக்கு வேறொரு யோசனையும் வந்ததை அறியாமல் இதை எப்படி சமாளிப்பது என யோசித்து கொண்டிருந்தனர் சாவித்திரியும் அவரது மகள்களும். நேராக தன்னுடைய அறைக்கு சென்று தான் அணிந்திருந்த புடவையை அவிழ்த்தெறிந்து விட்டு தன்னுடைய சம்பளத்தில் வாங்கிய ஆடையை அணிந்து கொண்டு தனது உடைமைகளை வேக வேகமாக பேக் செய்தாள் அவன்யா.

ஆனால் மனமும் கண்களும் ‘ராகவ் தனிமையில் தன்னைக் காண அங்கு வருவானோ? தன்னை சமாதானப்படுத்தவென வந்துவிட்டால் என்ன செய்வது?’ என அலைபாய்ந்ததைத் தடுக்க முடியாமல் தத்தளித்துப் போனாள். தன்னைத் தனித்து சந்திக்க ராகவ்விற்கு விருப்பமில்லையென்ற நிதர்சனம் புரிந்ததும் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, அறையை விட்டு வெளியே வந்தாள்.

எவரிடமும் ஒருவார்த்தைப் பேசாமல் நடந்து சென்று நேராக ராகவ்விடம் வந்தவள், “இன்னியோட மூணு மாசம் முடியுது சார்..” எனக் கம்மியக் குரலில் கூறியதும் விறைத்து நிமிர்ந்தான் ராகவ்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *